தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன்

Pirabakaran V_LTTEபுதுக்குடியிருப்பில் ஏப்ரல் 5ல் இடம்பெற்ற தாக்குதலில் பல நூறு போராளிகளை இழந்து காப்பாற்றப்பட்ட புலிகளின் தலைவர் வே பிரபாகரன் தங்கள் இறுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் இதனைத் தெரிவிக்கின்ற போதிலும் புலிகள் உத்தியோகபூர்வமாக இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. புலிகளின் தலைவர் வே பிரபாகரன் தற்போது அங்கு இல்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்று உறுப்பினர் ஒருவரும் உறுதிப்படுத்தி உள்ளார்.  (Related Article : Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் )

புதுக்குடியிருப்பில் புலிகளின் அதி முக்கிய தலைவர்கள் சிக்குண்ட நிலையில் இடம்பெற்ற மிக மூர்க்கத்தனமான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட புலிகளின் மையக்கருவைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டு இருந்தனர். கொல்லப்பட்டவர்களில் புலிகளின் முழு இராணுவ நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான கொமாண்டர் தீபன் கொல்லப்பட்டு இருந்தார். இதுவரை புலிகளில் கொல்லப்பட்ட போராளிகளில் மிக மிக முக்கியமான கொமாண்டராக தீபன் இருந்துள்ளார். அவர் உட்பட புலிகளின் மையக்கருவைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டு இருந்தனர். இவர்களில் புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும், வே பிரபாகரனின் மெய்ப் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த கடாபியும் ஆட்லரிப் பிரிவுத் தலைவரான மணிவண்ணனும் அடங்கி இருந்தனர். இவர்களுடன் கிழக்கு பகுதிப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கீர்த்தி, மட்டக்களப்புத் தலைவர் நகுலன், ராதா படையணித்தலைவர் சீலாபரன், சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவுத் தலவர் அமிதாப், மோட்டார் பிரிவுத் தலைவர் கோபால் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சுச் செய்திகள் தெரிவிக்கின்றது. ஆயினும் இப்போராளிகளது இழப்புப் பற்றி புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை. புலிசார்பு ஊடகங்களும் மௌனமாகவே உள்ளன.

கிடைக்கின்ற தகவல்கள் காயத்திற்கு உள்ளான வே பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி, அவரது மனைவி ஆகியோர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளதாக தெரிவிக்கின்றன. புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மற்றும் சில முக்கிய தலைவர்கள் காட்டுப் பகுதிகளுக்குள் தப்பி உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

புலிகளின் தலைமை யுத்தப் பகுதியில் இருந்து தப்பித்ததும் அல்லது தப்பிச் செல்ல அனுமதிக்கபட்டதும் இலங்கை அரசாங்கத்தின் யுத்த நிறுத்த அறிவிப்பும் இந்திய வெளியுறவுச் செயலாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பதும் எழுந்தமான நிகழ்வுகளா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. இவையனைத்தும் இந்தியா பொதுத் தேர்தலுக்கு நெருங்குகின்ற நிலையில் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே சமாதான அணுசரணையாளர் பொறுப்பில் இருந்து நோர்வே நீக்கப்பட்டு உள்ளதாக இலங்கை அரசு அறிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் கீழ்நிலைப் போராளிகள் சில நூறுபேரே உள்ளதாகவும் யுத்த நிறுத்த முடிவில் ஏனைய பிரதேசங்களைக் கைப்பற்றியது போல் இப்பிரதேசத்தையும் இராணுவம் பாரிய யுத்தம் இன்றிக் கைப்பற்றும் என்றும் தெரியவருகிறது.

இப்பிரதேசத்தில் இருந்து புலிகளின் தலைமை பின்வாங்கியது அல்லது எஸ்கேப்பானது உறுதியானால் அங்கு ஏற்படக் கூடிய பாரிய மனித அவலம் தவிர்க்கப்படும்.

முல்லைத் தீவில் புலிகளின் தலைமை தப்பித்துக் கொண்டது அல்லது தப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது இது முதற்தடவையல்ல. இந்திய இராணுவத்துடனான மோதலின் இராணுவச் சுற்றி வளைப்பில் இருந்து புலிகளின் தலைமை அன்று தப்பித்துக் கொண்டது அல்லது தப்பித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின் முல்லைத்தீவில் சிக்குண்ட புலிகள் தங்களது தலைமையைப் பாதுகாக்க மக்களை கேடயமாக்கியதும் அதானால் இலங்கை இனவாத அரசின் இராணுவத் தாக்குதலில் மூவாயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர். பத்தாயிரம் வரையானோர் மோசமான காயங்களுக்கு உள்ளாயினர். மூன்று தசாப்த கால தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிவரை உறுதுணையாக இருந்த வன்னி மக்கள் புலிகளின் தலைமையைப் பாதுகாக்க அதி உச்ச விலையைச் செலுத்தினர். இனவாத அரசின் இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடிய மக்களை பிடித்து அடித்து முதுகுத்தோலை உரித்தனர். அல்லது தப்பியோடியவர்களை புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

எது எப்படி இருப்பினும் புலிகளின் தலைமை இன்று அப்பிரதேசங்களில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக அல்லது பின்வாங்கிவிட்டதாக தெரியவருகின்றது. இதனை கிளிநொச்சி வீழ்ந்த கையுடன் செய்திருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கலாம். ஆயினும் இப்போது தன்னும் அவர்கள் தப்பியோடியது அல்லது பின்வாங்கியது இன்னும் பல்லாயிரம் இழப்புகளை தவிர்க்க உதவியுள்ளது.

இணைத்தலைமை நாடுகள் இந்தியா உட்பட ஆதரவளித்த பீக்கன் புரஜக்ற் திட்டத்தின்படி;
01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதி குறித்த காலத்தில் கைப்பற்றப்பட்டது.

01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதியும்  குறித்த காலத்தில் கைப்பற்றப்பட்டது.

01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியின் கடைசி 15 முதல் 20 கிலோ மீற்றர் வரையான பகுதியும் கைப்பற்றப்படுவது உறுதியாகி உள்ளது.

அடுத்து  01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இது மிகவும் சிரமமானதும் அதிக காலத்தை வேண்டி நிற்பதுமான நடவடிக்கை.

இன்று பின்வாங்கிய புலிகள் மீண்டும் தங்களை சுதாகரித்துக் கொண்டு தாக்குதலை நடத்த தயங்க மாட்டார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுடைய அபிலாசைகளை திருப்திப்படுத்தும் அரசியல் தீர்வை முன்வைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் ஏற்படுத்தவில்லை. அந்த நம்பிக்கையை ஏற்படுத்தப் பொவதும் இல்லை என்ற உணர்வே பெரும்பான்மையான தமிழ் மக்களிடம் உள்ளது. அதனால் இன்று புலிகள் ஓரம் கட்டப்பட்டாலும் இலங்கை அரசினதும் அதனுடன் இணைந்து இயங்குகின்ற சக்திகளினதும் செயற்பாடுகள் மீண்டும் புலிகளின் தேவையை உச்சத்திற்கு கொண்டு வரும் என்கின்ற அச்சம் உள்ளது. இந்த வரலாற்று நச்சு சக்கரத்தை மாற்றி அமைக்கின்ற அரசியல் பலம் இன்னமும் இலங்கையில் இல்லை என்பதே வேதனையான உண்மை.

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை பலவினப்படுத்தியதில் அன்றும் சரி இன்றும் சரி புலிகளின் பங்களிப்பு மிகப்பெரியது. தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்கள் நியாயமான அரசியல் லட்சியங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் தலைமையின் நியாயமற்ற போராட்டங்களால் அடிபட்டுச் சென்றது மட்டுமல்ல எதிர்மறையாக அதுவே தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும் வழிகோலியது.

புலிகள் எதிர்காலத்தில் தங்கள் அரசியலற்ற அரசியலைக் கைவிட்டு தங்களை மீளாய்வுக்கு உட்படுத்துவது அவசியம். அப்படிச் செய்யாத வரை அவர்கள் தமிழ் மக்களுக்கு ஏகபிரதிநிதிகளாக அல்ல ஏகப்பட்ட பிதிரிநிதிகளில் ஒருவராகவும் வர இயலாது. துரதிஸ்டவசமாக இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள சமூகங்கள் மத்தியில் உள்ள அரசியல் தலைமைகள் ஒன்றும் புலிகளின் தலைமையிலும் பார்க்க குறிப்பிடத்தக்கவை என்றும் சொல்லிவிட முடியாததாலேயே இலங்கை இவ்வாறான ஒரு பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்கின்றது. குறைந்தபட்சம் யுத்தம் முடிவுக்கு வரும் போது ஒட்டுமொத்த இலங்கை மக்களும் மீளவும் பலம்பெறுவார்கள். அவர்களைப் பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்க முடியும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Comments

  • மாயா
    மாயா

    எப்படியாகிலும் சிறைப்பட்டு இருக்கும் அந்த அப்பாவி வன்னி மக்கள் உயிரோடு தப்பினால் போதும்.

    யாழ்பாணத்திலிருந்து வந்த மக்களை வன்னி மக்கள் ஓடோடி வரவேற்று உண்ண உணவு கொடுத்து காப்பாற்றினார்கள்.ஆனால் யாழ்பாணத்தில் உள்ள மக்கள் தாம் உயிர் வாழ்ந்தால் போதும் என்றே இருக்கிறார்கள்.

    புலத்தில் கூட அனைவரும் பிரபாகரனைக் காப்பாற்றவே வீதியில் இறங்கி நிற்கிறார்கள். பிரபாகரனைக் காப்பாற்றிய மக்களோ இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டும். புலிகளால் வேலிகளாக்கப்பட்டும் தவிக்கிறார்கள்.பிரபாகரனின் வெளியேற்றத்தோடு ஏனைவர்களது வெளியேற்றமும் இந்த புத்தாண்டிலாவது நடக்கட்டும்.

    ஒரு சோதிடர் சொன்னார் இந்த மே மாதத்துக்குள் தலைவருக்கு நல்லது நடந்தால்தான்? இல்லையென்றால்…………. யாருக்கும் சொல்லாதியும் என்னை வதந்தி பரப்பினாதா கொண்டு போய் அடைச்சுப் போடுவாங்கள் என்றார் சாத்திரியார்.

    வன்னிக்கு வெளியே வந்தாலும் வன்னித் தம்பிகளைப்பற்றி நடுக்கம் அவருக்கு…… நான் யாருக்கும் சொல்லயில்லை எழுதினது மட்டும்தானே

    Reply
  • Sri Ram
    Sri Ram

    At the age of 54 an … man with diabetes. Do U think he will survive the jungles of notorious North. So what time frame we are talking here? Maximum 2 years on the run.Nature will make sure she is in command and she will make sure This man with diabetes will not exist after 2 years.

    In 2011 world will be a better place without Prabhakaran. Long live the Island of Tabrobane. Sinhalese, Tamils, Moors,Indian Tamils, burghers,Vedhas, Rottiars, Dalits, Malays,monkeys, mosquitoes all live in harmony until global warming destroy the globe. Amen.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இப்படித் தலை தப்பியது உண்மையானால், அது வன்னி மக்களுக்கு நன்மை தான். இதனால் தலை வன்னிமக்களை தனது உயிருக்காக எப்ப வேண்டுமானாலும் கைவிடுவார் என்ற உண்மையும், புலிவால் பிடிப்பவர்களுக்கு புரியவரும்.

    ஆனால் சிலவேளை இப்படியொரு கதையை புலிவால் பிடிப்பவர்களும், கூத்தமைப்பினரும் சேர்ந்து கிளப்பிவிட்டு, இராணுவத்தின் கழுகுப் பார்வையை தற்போதைய பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்து திசை திருப்பி அதன் மூலம் தலையை தப்பிக்க வைக்கவும் முயற்சிக்கலாம். எல்லாவற்றிற்கும் வெகுவிரைவில் விடை தெரியத்தானே போகின்றது.

    Reply
  • Sri Ram
    Sri Ram

    “A practised escapologist and manipulator of international opinion” This is how this week’s The economist describes Velupillai Prabhakaran. ” A practised escapologist and manipulator of international opinion”

    See the link
    http://www.economist.com/world/asia/displaystory.cfm?story_id=13446894

    Reply
  • Poddu
    Poddu

    தேசம்நெறில பின்னூட்டம் விடுறவை அதோடை மட்டும் நிற்கேல்ல சர்வதெச அளவிலையும் பின்னூட்டம் விடுகினம். சர்வதேச மகசீனான எக்கனமிஸ்ற் மகசின் கட்டுரையில உள்ள சில பேர் தேசம்நெற்றில அறிந்த பெயர்களாத்தான் இருக்கு. உந்த விசயங்களை இங்க தமிழிலையும் இறக்கினால் நல்லது.

    Reply
  • பல்லி
    பல்லி

    அதுதான் தேசத்தின் வெற்றி..

    Reply
  • msri
    msri

    அதுசரி பல்லியிடம் ஓர் பகிரங்கக் கேள்வி?
    தற்போது தலைவரும் குடும்பமும் எங்கே?

    Reply
  • பல்லி
    பல்லி

    msri ஏன் இந்த வில்லதனம். இருப்பினும் msriன் மனம் நோகாமல் இருக்க தலைவர் விருட்சக ராசியில் பிறந்தவர். அந்த ராசிக்கு இந்த வருடம் (விரோதி வருடம்)மிக சிக்கலானதென பல சோதிடர் சொல்லுகிறார்கள். இருப்பிடம் மாறும் நிலை அடிக்கடி வருமாம்.காயங்கள் ஏற்படலாமாம். உறவுகள் இழக்கலாம். குடும்ப பிரிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாம். அத்துடன் காமாளை வருத்தம் கண்டிப்பாக வருமாம். இதை வைத்து பார்த்தால் தலைவர் அங்கிருந்து பொடி நடயாய் ஜெயபாலன் சொன்னதுபோல் எஸ்கேப் ஆகிவிட்டாரோ என எண்ண தோன்றுகிறது. காரனம் சோதிடத்தில் உயிர் பயம் வேண்டாம் என சொல்லபட்டிருக்கே. அப்படியாயின் எப்படி அங்கு………அதுசரி msri நீங்க எந்த தலையை கேட்டீங்க. நான் சொன்னது தறுதலையை பற்றிதான்.

    Reply
  • msri
    msri

    பல்லி! நான் கேட்டதும் அந்தத் தறுதலையைப் பற்றித்தான்! உங்கடை சோதிடக்கணிப்பு பிழைபோலை கிடக்கு அவருக்கு கொஞ்சநாளைக்கு முன் 6-லை வியாழன் (அரசனையும் ஆண்டியாக்கும்!) இப்ப 10-லை வியாழன் (பதியை விட்டு கிளப்பும் அல்லது கிளப்பிப்போட்டுதோ தெரியவில்லை) மற்ப்படி நீங்கள் சொல்லுற பலன் எல்லாம் சரி! மற்றப்படி எனக்கு மனவருத்தம் இல்லை! ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே நோகடித்து> ஓருலட்சம் வரையுல் சாகடித்து> குறுகிய வன்னிநிலப்பரப்பில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை சிறைக்கைதிகள் ஆக்கி கொத்துக் கொத்தாக சாகடிக்க(அரசிற்கு) வழிசமைத்ததும் அல்லாமல்> புலம்பெயர் மக்களையும் றோட்டிற்கு கொண்டுவந்து விட்டிருக்கு இநதத் தலை! இவரப் பாதுகாக்க அவர்களும் தெருத்தெருவாய் அலையிணம்! அதுசரி எனக்கொரு உண்மை தெரிந்தாகணும்! இப்ப ஆள் எங்கை?

    Reply
  • ramesh
    ramesh

    பாவம் தல. அவர் நினைத்தாரா இது நடக்குமென்று:

    Reply
  • thurai
    thurai

    தமிழினம் நிம்மதியாக உலகெங்கும் வாழவேண்டுமானால், தலவரின் தலை போகத்தான் வேண்டுமென்பது தலைவிதியாகிவிட்டது. காரணம்
    தலைவரே தமிழரின் இந்த அவல நிலைக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய நிலமையிலுள்ளார்.

    துரை

    Reply
  • santhanam
    santhanam

    பல்லி உங்கடை ஆட்களை கண்டால் ஏன் சர்வதேச நாட்காழியில் இருக்கும் பொறுப்பாளரின் விசுவாசிகள் இஞ்சி சாப்பிட்ட குரங்கு போல உள்ளார்கள்.

    Reply
  • அகிலன் துரைராஜா
    அகிலன் துரைராஜா

    நரபலி நரியன் பண ஆசை பிண ஆசை மிக்க தலைக்குள் ஒன்றுமில்லா ….. தலைவன். காசுக்கு ஆட்களை வாங்கவும் மண்டையில் போடவும் மட்டுமே தெரிந்த வேறு எதுவும் புரியாத தெரியாத நரபலி வெறியன் தப்ப மாட்டார் அரச படைகளின் பிடியில் இருந்து தப்ப இவருக்கு முடியாது தெரியாது -அகிலன் துரைராஜா நல்லூர் யாழ்ப்பாணம் –

    Reply
  • Abdul
    Abdul

    Always dont tow the Sri Lankan Army’s version. We know their capacity of gathering info.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    Deal may allow Tiger leader exile escape

    By Andrew Buncombe in Colombo—Thursday, 16 April 2009

    The Sri Lankan government is attempting to broker a deal with the Tamil Tiger rebels that could see their veteran leader, Velupillai Prabhakaran, allowed to lay down his arms and escape into exile in the hope of ending the island’s bitter conflict.

    In what might represent an attempt to seize on possible divisions within the Liberation Tigers of Tamil Eelam (LTTE), The Independent has learnt that the government has put out “feelers” to the LTTE to see whether such a deal would be possible.

    The arrangement could also see the remaining fighters, who are trapped along with 150,000 civilians in the north of the country, “rehabilitated”.

    Such an arrangement would be highly controversial, both in Sri Lanka and internationally, but some within the government believe it would be a price worth paying to end the conflict.

    “If there was an absolute guarantee ? that he will not dabble in terrorism or politics – that is an Idi Amin situation, then it might work,” said one informed source in Colombo, referring to the former Ugandan dictator who in 1979 went into exile until his death.

    Ironically, news of the initiative came as a two-day ceasefire ended and fighting reportedly resumed. A pro-rebel website claimed that Sri Lankan forces attacked LTTE positions with artillery and heavy machine guns although a military spokesman denied launching a new attack.

    Last night, amid continued protests by UK Tamils in London’s Parliament Square, Foreign Secretary David Miliband called on the Sri Lanka government to announce a new ceasefire, adding that both sides must “abide by their obligations under international humanitarian law”.

    For decades, Velupillai Prabhakaran has led the LTTE in an often brutal fight to secure a Tamil homeland. The war has left at least 70,000 people dead. Mr Prabhakaran once told reporters that he had instructed his fighters to kill him if he ever did anything to betray the cause. But at least some within the Sri Lankan government believe such a deal might be a way to bring an end to the conflict which is endangering many thousands of civilians trapped in the supposed “no-fire zone”.

    One possible location mentioned for the rebel leader’s exile is Thailand, where, in the south of the country, the LTTE is said to have strong support.

    It is far from clear whether Mr Prabhakaran would agree to go into exile. The man who founded the LTTE more than 30 years ago might prefer to make a stand in the no-fire zone, where the government has said it believes he and between 600 and 1,000 fighters remain.

    http://www.independent.co.uk/news/world/asia/deal-may-allow-tiger-leader-exile-escape-1669279.html

    Reply
  • பூனை
    பூனை

    மேற்கண்ட ஒப்பந்தத்தை இந்தியாதான் முடித்து வைத்து பிரபாவையும் இதர புலித்தலைமையையும் வெளியே கொண்டுவர முயற்சிக்கிறது. பட்டும் திருந்தாத இந்தியாவை என்ன சொல்வது?

    Reply
  • thevi
    thevi

    அடிப்படையில் புலியே இந்தியாவிற்கு உவப்பான இந்தியா இலகுவாக கையாளக் கூடிய அமைப்பு. புலிக்கு பொருளாதாரம், அபிவிருத்தி, வாழ்க்கைத் தரம் என்பன குறித்து சுட்டுப் போட்டாலும் அறிவு வராது. இலங்கையின் வளங்களையும் மனித உழைப்பையும் களவாட புலி இருப்பதே சிறந்தது. இந்தியா புலியை காப்பாற்ற முயற்சிப்பதில் ஆச்சரியம் இல்லை.

    Reply
  • மாயா
    மாயா

    இந்தியா எப்போதும் இலங்கையில் ஒரு போர் இருப்பதையே தொடர்ந்தும் விரும்பும். இலங்கை முன்னேறுவதில் அவ்வளவு அக்கறை? யுத்தம் ஒரு முடிவுக்கு வந்து அங்கு சமாதானம் ஏற்பட்டால் இலங்கை முன்னேறிவிடும். இப்படியான தருணத்தில் பாகிஸ்தான் – சீனா என அரசு உதவி பெறுவதே சரி.

    புலிகளும் இந்தியாவை இலங்கை அரசோடு சீண்டிவிட அனைத்து முயற்சிகளிலும் இறங்கியுள்ளார்கள். சிங்களவர் இப்ப வெகு முன்னேற்றம். இந்தியா உதவி செய்யுதென்று பாராளுமன்றத்திலயே சொல்லி மாட்டவச்சுட்டாங்கள். இலங்கை சிங்களவர் மண்டை நல்லாத்தான் வேலை செய்யுது. தமிழன் இருப்பதையும் கெடுக்கிறான்.

    இந்திய படையை வென்ற புலிகளை, சிறீலங்கா படை வெல்கிறது என்றால் சிறீலங்காவும் வல்லருசுதான்? கி கீ

    Reply
  • palli
    palli

    //பல்லி உங்கடை ஆட்களை கண்டால் ஏன் சர்வதேச நாட்காழியில் இருக்கும் பொறுப்பாளரின் விசுவாசிகள் இஞ்சி சாப்பிட்ட குரங்கு போல உள்ளார்கள்//

    சந்தானம் எதோ கெட்ட வார்த்தையில் திட்டுவது தெரிகிறது. ஆனால் என்ன என்பது பல்லிக்கு வயதாகியதாலோ என்னவோ புரியவில்லை. முடிந்தால் புரியும்படி திட்டவும்.

    Reply
  • t
    t

    தமிழ் வாழ்க

    Reply
  • nadesh
    nadesh

    பார்த்து மகிழுங்கள் தமிழீழ விரும்பிகளே; தலைவர் டாம்பீக வாழ்வும் குடும்ப சந்தோசமும் வன்னி மக்கள் வாழ்வும்
    http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F

    Reply
  • ashmitha
    ashmitha

    A section of Prabakaran’s family album
    (Lanka-e-News, 18.April.2009, 9.50 am) Security forces have taken into custody a photo album of LTTE leader Velupillai Prabakaran’s family and the state media published it yeterday (17).

    There are photos of Prabakara’s son Charles Anthony and daughter Dwaraha from tender ages and photos of Prabakaran and his wife Madiwadini. The birth certificates and educational certificates belonged to Charles Anthony and Dwaraka were also released.

    Following are the photos of them http://www.lankaenews.com/English/news.php?id=7488

    Reply