மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு இன் போது தீர்மானிக்கப்பட்டபடி அவலத்திற்கு உள்ளான வன்னி மக்களின் நலன்கள் தொடர்பான செயற்குழுவொன்றை அமைப்பதற்கான சந்திப்பு மே 17 அன்று லெய்டன் ஸ்ரோன் குவார்கஸ் ஹவுஸில் இடம்பெறவுள்ளது. மாலை 4:30 மணி முதல் 7:30 வரை இடம்பெறும் இச்சந்திப்பில் செயற்குழுவொன்று உருவாக்கப்படுவதுடன் அதற்கான பெயரும் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். மேலும் குறுகிய கால நீண்டகால வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்தரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. ( வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன் )
குறிப்பாக என்ஜிஓ மற்றும் அரச முகவர் ஸ்தாபனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவலத்திற்கு உள்ளான மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் அந்த ஸ்தாபனங்களை ஈடுபடச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது. மேலும் இதற்கு சமாந்தரமான மற்றுமொரு பிரிவு மக்களை அவர்களுடைய கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அரசின் நலன்புரி முகாம்களை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரவுமான அழுத்தக் குழுவாகச் செயற்படுவது. இவை பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டு குறுகியகால வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்கவும் மே 17 சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது. இவ்வாறான விடயங்களில் ஆக்கபூர்வமான வகையில் பங்களிக்க விரும்புபவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வதையும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதையும் தேசம்நெற் வரவேற்கின்றது.
Wanni IDPs : Their needs & Future
Meeting & Discussion
17th of May 2009, Sunday, 4:30pm
Quakers Meeting House,
Bush Road,
Wanstead,
London, E11 3AU.
Futrher Information :
அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்
மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு
vanan
அகதிமக்களுக்கு தேசம் நெற் செய்யும் பங்களிப்பு முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியதே.தவறு செய்யும்போது தட்டிக்கேட்க வேண்டும். நல்லது செய்யும்போது பாராட்ட வேண்டும். இதுவே உண்மையான விமர்சனத்திற்கு அழகாகும். யார் எப்படி தூற்றினாலும் அதையிட்டு கவலை கொள்ளாது தேசம் தன் பாதையில் தொடர்ந்தும் முன்னேறும் என்பதை அது தன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் நிருபித்து வருகின்றது.
palli.
தேசம் விமர்சனத்தில் மட்டும் தனது காலத்தை போக்காமல் ஏதோ எம்மால் முடிந்ததை எம் மக்களுக்கு செய்ய முன்வருகிறோம். எம்மால் தேனும் பாலும் ஆறாக ஓட விட முடியாது. ஆனால் குடிக்கும் தண்ணீராவது அந்த மக்களுக்கு கிடைக்க உதவுவோமே. இந்த விடயத்தில் தேசத்துக்கு பல்லியின் ஒத்துழைப்பு என்றுமே கருத்து வேறுபாடின்றி தொடரும். எம்மை சில கையால் ஆகாத ஊடகங்கள் கேலியோ அல்லது தூற்றலாம். ஆனால் அதை எண்ணிகவலை கொள்ளாது. எம் மக்கள் படும் துன்பத்துக்கு எம்மால் எது முடியுமோ எப்படி செயல் படுவோமோ அந்த வகையில் நாம் துரிதமாக செயல்பட இந்த ஒன்று கூடல் உதவும். அத்துடன் வன்னியில் செயல்பட ஒருசில சமூக அக்கறை உள்ளவர்களையும் (தனி மனிதர்கள் அமைப்போ அரசியலோ அற்றவர்கள்) இதில் எமக்கு உதவும்படி பல்லி கேட்டுள்ளேன். அவர்களும் கணடிப்பாக செயல்படுவோம் என சொல்லியுள்ளனர். மிருகங்களின் பயம் இல்லாதபடியால் இப்போது பலர் சமூகசேவை செய்ய முன் வருவார்கள். ஆகவே நண்பர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களையும் இதில் இனைப்பது இன்று எமது இனம் படும் துயரத்துக்கு உடனடி நாம் செய்யும் முதல் உதவியாக இருக்கும் என்பது பல்லியின் தாழ்மையான கருத்து.
kafoor
எங்கே. எவ்விடத்தில். என்ற விபரங்களை. போஸ்ட் கோட் அட்ரசுடன் விபரித்தால் எங்களுக்கும் கலந்து கொள்ள இலகுவாக இருக்கும்.
semi
பல்லி கூறியிருப்பது உண்மையே. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டிய தருணம் இது. பேதங்களை மறந்து அந்த அகதி மக்களின் துயர் துடைக்க ஒன்றாய் கூடுங்கள். இந்த நிலையிலும் சிலர் கேவலமாக நடந்து கொள்வார்கள். அவர்களை நோயாளிகளாக எண்ணி மன்னித்துவிடுங்கள். வரலாறு உங்களை வரவேற்கும்.
Velu
Dear Comrades, It is a very good start and I hope that others will follow you. Wish you all the best. Thanks
ashroffali
தேசம் நெற் போன்று இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலன் பேணும் விடயங்கள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி போன்றவற்றிலும் அனைத்து மக்களும் பங்களிப்பை நல்க வேண்டும். அது எமது மனிதாபிமானக் கடமையாகும். அந்த மக்களின் தேவைகள் தொடார்பான பொறுப்பை அரசாங்கத்திடம் மட்டும் விட்டு விட்டு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது பொருத்தமானதல்ல. எங்களது பங்களிப்பும் அதற்காக வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவரும் எமது மக்கள் எமது உறவுகள் என்பதாக நாம் கருதிச் செயற்பட வேண்டும்.
நண்பன்
உண்மையாக அங்குள்ள மக்களுக்கு எம்மாலானதை செய்வோம்.