வன்னி முகாம்களின் சாட்சியங்கள் : ரி சோதிலிங்கம் & எஸ் குமாரி

A_Barber_in_Chettikulamவன்னி முகாம்களின் நிலை தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் வெளிவருகின்றது. அம்மக்கள் சார்பாக பேசுவதாகவும் எழுதுவதாகவும் கற்பிதம் செய்கின்ற பலர் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளுடன் அவற்றை திரிபுபடுத்தி அங்குள்ள யதார்த்தத்தில் இருந்து புலம்பெயர் மக்களை அந்நியப்படுத்தி வைத்துள்ளனர். வன்னி முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தங்கள் அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற கோரிக்கைகள் அம்மக்களின் சார்பில் முன்வைக்கப்படுகின்றன. நாடுகடந்த தமிழீழம் முதல் வன்னி முகாம் மக்களுக்கும் வன்னி மக்களுக்கும் உதவுவது துரோகத்தனம் என்பது வரை புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் பரந்துவிரிந்தள்ளது.

ஆகவே அங்குள்ள மக்களின் வாழ்நிலையின் உண்மைத்தன்மையை அறிவது மிக மிக முக்கியமானது. அதனை அறிந்து கொள்வதன் மூலமே மக்களுக்கான தேவைகளையும் கோரிக்கைகளையும் அறிந்து கொள்ள முடியும். அதைவிடுத்து புலம்பெயர்ந்தவர்களின் போராட்டத்திற்காக அம்மக்களை ஆட்டிப்படைக்க முடியாது. அதனைக் கருத்திற்கொண்டு அண்மைக் காலமாக வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள பலருடனும் வவுனியாவில் வதிபவர்களுடனும் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். இவர்களில் சிலருடன் பல மணித்தியாலங்களாக பேசுவதும் வழக்கமாகிவிட்டதொன்று. அவர்களது உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொண்டுவரவே இவற்றை வெளியிடுகிறோம்.

ஓக்ரோபர் 6ல் மூன்று நாட்கள் வெளியே வந்து தங்கும் அனுமதியுடன் வந்தவருடன் தொலைபேசி மூலம் உரையாடும்போது அவர் தன்னைப் பற்றிய அறிமுகத்துடன் தொடர்ந்தார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வவுனியாவிலும் முத்தையன் கட்டிலும் வியாபாரியாக இருந்தவர். தனது இரண்டு வயது குழந்தையுடன் தான் தப்பி வந்து இடையில் ஏதும் நடந்தாலுமென்று, அங்கேயே நின்று பின்னர் புலிகளினால் ஒட்டுமொத்தமாக எடுத்துச் செல்லப்பட்ட மக்களுடன் முள்ளிவாய்க்கால்வரை சென்றார். பின்னர் மே மாதம் பத்தாம் திகதியளவில் பெருந்தொகையாக இடம்பெயர்ந்தவர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்தவர். தனது முகாம் வாழ்க்கை பற்றி இவ்வாறு சொன்னார்.

”நான் செட்டிக்குளம் ராமநாதன் காம்பில் இருக்கின்றேன். செட்டிக்குளம் டிஸ்றிக்கில் ஆனந்தகுமாரசாமி முகாம், ராமநாதன் முகாம், அருணாசலம் முகாம், Zone 4, வீரபுரம், கதிர்காமர் முகாம், Zone 5 என காம்ப்புகள் இருக்குது. ராமநாதன் காம்பில் 65 000 பேர் இருக்கிறோம். அங்கு பெரும்பாலான கட்டுப்பாடு பொலிஸ்தான். ஆமியும் வந்து போவார்கள்.

சாப்பாடு, தண்ணி, ரொய்லெட் வசதி வந்த புதிதில் மிகமோசம். இப்ப பிரச்சினை இல்லை. முந்தி நாங்கள் கொஞ்ச கொஞ்சப் பேராகச் சேர்ந்து ரேன் வைத்து மாறி மாறி எல்லாருக்குமாய் சமைப்போம். இப்ப எல்லாரும் தனித்தனிய குடும்பமாய்த்தான் சமைக்கிறோம். ஓவ்வொரு வியாழனும் World food சமையல் சாமான்கள் தருவார்கள். தண்ணீர் பைப் வசதி இருக்குது. ரியூப் வெல் அடிச்சு வைத்திருக்கிறார்கள். குடி தண்ணீர் கிடைக்கிறது. மரங்களை வெட்டி மண்றோட்டுகள் போட்டிருக்கிறாங்கள். கறண்ட் இருக்குது. பிள்ளைகள் படிக்கப் போகினம். ரென்ட்டுகளை வீடுகளாய் கட்டிவிட்டால் மாதிரிக் கிராமம்தான். ரென்ட் சரியான வெக்கையாய் இருக்கும். நாங்கள் பெரியஆட்கள் சமாளிப்பம். குழந்தைகள்பாடு சரியான கஸ்டம். மழை வந்தால் பெரிய சிக்கல் இந்த ரென்டுகள் தாங்காது. அதுதான் தொல்லை. வெய்யில் நேரங்களில் ரென்ட்டுக்குள் இருக்கேலாது அவ்வளவு வெக்கை.

மெனிக்பார்ம் பிரச்சினைகள்பற்றி கேட்டபோது ”நீங்கள் சொல்லுமாப்போல பெரிய பிரச்சனையாக நான் கேள்விப்படவில்லை. வன்னிக்குள் நடந்ததை விடபெரிசாய் என்ன நடக்கப் போகுது. காம்புக்குள்ளே சின்னச் சின்னதாய் பிரச்சினைகள நடக்கும்தானே. சாப்பிட்டுவிட்டு சும்மா இருக்கிற சனத்துக்கு வேற வேலை இல்லைத்தானே. என்ன செய்வதென்று தெரியாமல் சண்டை வரும்தானே. நீ புலி. அவன் புலி எண்டும் சண்டை வரும். சனங்கள் உங்கை சும்மா சும்மா கதைக்கினம்போல.

ஆமிக்காரன் ஆட்களை பிடிக்கிறது ஏத்திக்கொண்டு போறாங்களாமே எனக் கேட்டபோது ”எனக்குத் தெரிய நான் அப்படி எங்கட காம்பில் கேள்விப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விசயங்கள் நடந்திருக்கும்.

புலிகள் பற்றி ஒருத்தரும் கதைப்பாரில்லை. இலக்க்ஷன் பற்றி ஒருத்தருக்கும் அக்கறையில்லை. நான் நினைக்கிறேன் ரணில்தான் வருவாரெண்டு. காம்புக்கு டக்ளஸ்தான் ரெண்டு மூண்டுதரம் வந்தார். உதவிகள் கேட்டால் செய்வார். அந்த ஆள் யாழ்ப்பாணத்துக்கு நிறையச் செய்கிறார். எங்களுக்கு தேவை அபிவிருத்தி. அதை அவர் செய்கிறார் அது எங்களுக்கு நல்லது தானே.”

”எப்படி நீங்கள் வெளியே வந்தீங்கள்” என கேட்டபோது: ”அரசாங்கத்தின் லெட்டரோடை காம்புக்கு வெளியே வந்து மூன்று நாள் தங்கலாம். பிறகு திரும்ப வேணும். நான் அப்படி ரெண்டு மூண்டு தரம் வந்தனான். அடிக்கடி வந்தால் சந்தேகப்படலாம் என்பதால் ஏதும் தேவைக்காக வந்துபோவேன். அப்படி எல்லாரும் வரலாமோ இல்லையோ எனக்குத் தெரியாது. எனக்கு வந்து தங்க இடமிருக்குது சொந்தக்காரர் இருக்கினம் வாறேன். எல்லாருக்கும் அப்படி யாரையும் தெரிந்திராதுதானே. வந்தும் என்ன செய்வது. நான் வெளியே வந்து எனது குடும்பம் தங்க இடம் வேலை ஒன்று கடையில் எடுக்க அலுவல் பார்க்கிறேன். காம்பை விட்டு வெளியே போக கச்சேரியில் போர்ம் கொடுத்திருக்கிறேன். ஆமி கொமாண்டர் சைன்பண்ணி வந்ததும் போகலாம். சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருக்கினம். எனக்குத் தெரிந்த சொந்தக்காரர் போனகிழமை போய்விட்டார். நான் இரண்டு வயதுப் பிள்ளையுடன் இருக்கிறேன். இந்த மாதக் கடைசிக்குள் நானும் போய்விடுவேன். ஊரில் தங்க இடம் இருக்கு. அங்கும் விதானையார் கையெழுத்துப் போட்டால் எங்களை விடுவினம் இப்படி பலர் போய்விட்டார்கள்.

குழந்தைகளோடை இருக்கிறவை முதல் ஊனமுற்றோர் இரண்டாவது கர்ப்பிணியாட்கள் மூன்றாவது என படிப்படியாய் ஒவ்வொரு காம்பிலும் இருந்து வெளியேபோக விடுகிறார்கள். அவர்களை வேறை காம்பில கொண்டு போய் வைத்திருப்பதாக நான் அறியவில்லை. எல்லாரையும் ஒரேயடியாக வெளியே விட ஏலாதுதானே. ஆட்களை விசாரிச்சு விசாரிச்சுத்தான் விடுவாங்கள்.

வெளியில் உதவிக்கு ஆட்கள் இருக்கிறவை போவினம். இல்லாதவை வெளியே வந்து என்ன செய்வது. எப்படிச் சீவிப்பது. வெளியில வாடகைவீடு 10 000, 15 000 என்று கேட்பார்கள். சாப்பாட்டுச் செலவு வேலை என்று எல்லாத்துக்கும் எங்கை போவது. இவ்வளவு காசு கொடுக்க இயலாத, அப்படியான ஆட்கள்தான் பெரும்பாலான ஆட்கள். அவர்கள் போனால் வன்னிக்குத்தான் போவம் இல்லாவிட்டால் எங்கும் போகமாட்டம் என்று பின்னடிக்கினம்.

என்னிடம் கைத்தொலைபேசி இல்லை. வைத்திருக்க விடமாட்டாங்கள். வைத்திருப்பவையும் ஒழித்து வைத்துத்தான் கதைப்பது. நான் உங்களுக்கு மற்றைய காம்பில் உள்ளவர்களின் தொலைபேசி இலக்கங்கள் எடுத்துத்தாறன் கதையுங்கோ” என்றார்.

”ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குப் போவதில் தடையில்லை. சில பிள்ளைகள் ஒரு முகாமில் இருந்து மற்றமுகாமுக்குப் போய்ப் படிக்கிறார்கள்” என்றார்.

(இந்த தொலைபேசி அழைப்பில் எம்முடன் பேசியவர் ஒக்ரோபர் 12ம்திகதி முகாமிலிருந்து வெளியேறி தற்போது யாழ் கோவில்ப்பற்று பகுதியில் தனது பிறந்து வளர்ந்த வீட்டில் தனது உறவினர்களுடன் இணைந்துள்ளார்)

கதிர்காமர் முகாமின் உள்ளே இருக்கும் ஒருவருடன் ஓக்ரோபர் 8ல் தொடர்பு கொண்ட போது….

தனது கைத் தொலைபேசியை மற்றவர்களுக்கு கொடுத்து எம்முடன் கதைக்க உதவுபவர்களில் ஒருவர் மாவீரர் குடும்பமொன்றைச் சேர்ந்தவர் (அவரே சொன்னார்). ஜுன் மாதத்தில் எம்முடன் கதைக்கும்போது அவரின் பார்வையில் – இப்படித்தான் புலி வீழ்ந்தாலும் காலத்துக்கு காலம் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் தென்பட்டது. இவர் சரளமாக கதைக்கமாட்டார். அது அவர் தன்மை என்பதே என் அனுமானம். ஒக்ரோபரில் கதைக்கையில் அவர் எதுவுமே கதைக்கப் பிரியப்படவில்லை. ”என்னத்தை அண்ணை சொல்ல” என்று மிகவும் மனச் சோர்வுடன் சலித்துக் கொண்டார். ”எனக்குப் பக்கத்தில் இப்ப நிக்கிறவர் நல்லாய்க் கதைப்பார். அவரிடம் கொடுக்கிறேன். கதையுங்கோ” என்றார்.

அந்த புதியவர் என்னிடம் ”நீங்கள் யார்? என்ன செய்கிறியள்?” என்று விபரம் கேட்டபோது நாம் என்ன செய்கிறோம் என்று சொன்னேன். ”ஏன் அண்ணை தேசம் எண்டு சொல்லுறியள். கோதாரி எண்டு சொல்லுங்கோ. இவ்வளவு காலமும் நடந்தது கோதாரி இல்லையோ?. கண்டறியாத போராட்டம். சனம் பற்றி யார் நினைச்சது. தாங்கள் தாங்கள் தங்கட நலனுக்குப் போராட்டம் என்று சனத்தைச் சாகடிச்சுக் கொண்டு தங்கட குடும்பத்தைப் பார்த்தவை. போராட்டம் நடத்தியிருந்தால் இப்பிடியா முடிஞ்சிருக்கும். என்ன பிள்ளைகளுக்கு சாப்பாடு உடுப்பு படிப்பு இதுக்குத்தான் அண்ணை இப்ப போராட்டம். எங்களுக்கு மொழி, சாதி இது என்னண்ணை?. சிங்களமொழி, சனங்கள் என்ன பிழை எண்டு சொல்லுங்கோ. சனங்கள் – மனிசர் எண்ட நினைப்பு இல்லாமல் எல்லாம் நடத்தியவையள். நடந்ததுகள் நினைவுக்கு வந்தால், திருப்பி யோசிச்சால் அழுகை வருகிறது. இளம் குழந்தைகள் பொடியன்கள் பிள்ளைகள் எல்லாம் அநியாயம். இயற்கைக்கு ஒத்து வராமல்தான் இப்படி இந்த திருவிழாவை இயற்கை முடிச்சு வைச்சது” என்றார்.

முன்னர் ஈபிஆர்எல்எப் ஆதரவாளராக இருந்த 42 வயதான வசாவிளானைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளுடன் வன்னிக்கு இடம்பெயர்ந்தவர். இவர் தற்போது கைவசம் எதுவுமேயில்லாமல் எதிர்காலம் என்ன என்று நிச்சயம் இல்லாமல் தற்போது கதிர்காமர் முகாமில் இருக்கிறார்.

”தனிநாடு யார் அண்ணை கேட்டது. எல்லாமே புலிகளின் பம்மாத்தும் சுத்துமாத்தும் தானே. வன்னியில் இருந்த சாதாரண சனத்திடம் தனிநாடு என்ற நம்பிக்கை எண்டைக்குமே இருந்ததில்லை. புலிகளின் தொடர்ச்சியான கெடுபிடிகளே இருந்தது. புலிகள் கோவில் திருவிழா செய்வது போலவே எல்லாம் செய்தார்கள். யாரும் ஏன், எது, எப்படி என்று கேட்கமுடியாது. சொல்லும் எல்லாத்துக்கும் ஓம் சொல்ல வேணும்.

எப்பசரி மக்களின் கருத்துக்களைக் கேட்டார்களா? தாங்கள் செய்வது சரியா என்று யாரிடமும் கேட்கவில்லையே? யாருக்கும் எதுவும் தெரியாது. தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்டு இப்ப தெரியுது இவையளுக்கு என்ன தெரியும் எண்டு” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

”முகாம்களுக்கு வெளிநாட்டு ஆட்கள் வந்து பார்த்ததாக கேள்விப்பட்டேன்” என்று நான் பேச்சை வளர்த்தேன். ‘நான் சந்திக்கவில்லை. டக்ளஸ் இப்பவும் வந்து மக்களின்ரை அபிப்பிராயத்தைக் கேட்கிறார். அவர் ஓ.கே. வளைந்து கொடுத்து செயல்படுகிறார். இப்ப எங்களுக்குத் தேவை உதவிகள். அதைப்பற்றி அபிப்பிராயம் கேட்கிறார். அரசியல் கதைப்பதேயில்லை. எல்லாம் வெளியே வந்தபின் அரசியல் கதைப்போம். இப்ப என்ன அவசரம் என்றார். அவர் சொல்லுறது சரிதானே இப்ப உள்ளது எங்கட பிரச்சினைகள்.

நான் வன்னியில் இருக்கும்போது 2 சாரம் 2, 3 சேட்டு இதைவிட ஒரு துவாய்; வேற எதுவுமில்லை. பிள்ளைகளுக்கு கொஞ்ச உடுப்பு. பழைய கொட்டில்தான் எங்கட வீடு. வேலையில்லை. புலிகளுக்கு வேலை செய்தா சம்பளம். கூலி வேலை. இப்ப வேலையில்லை. காம்பில் சாப்பாடு உடுப்பு தண்ணீர் எல்லாம் கிடைக்கிறது. பிள்ளைகள் படிக்கினம். ஆனால் அகதிமுகாம் எண்டு பெயர். பிள்ளைகள் எப்ப சரி ரெயினை புது பஸ்களை கண்டவையோ?

வன்னியில் நான் புலிகளுக்கு பதிவுக்கு கொடுத்தது சொந்தப் பெயரல்ல. ஊரில் இருந்து வரும்போதே நானும் எனது மனைவியும் இப்படித்தான் எண்டு யோசிச்சு கொடுத்தம். இல்லாவிட்டால் என்னை ஈபிஆர்எல்எப் என்று சுட்டுப் போட்டிருப்பாங்கள். இப்ப ராணுவத்திடம் எல்லாம் சொல்லி உண்மையான பெயர் கொடுத்துள்ளேன். என்னுடைய அரசாங்க அடையாள அட்டையை திண்ணை மண்ணுக்குள் புதைத்து மெழுகிவைத்திருந்தேன். இப்பத்தான் அதைப் பாவிக்கிறம்.

எனக்கு வேறு இடத்திலும் ஆட்கள் இல்லை. வேறு இடங்களுக்கு போக முடியாது. போனாலும் சாப்பாடு வீடு எல்லாத்துக்கும் என்ன செய்வது. எனது யாழ்ப்பாண வீடு இருந்த இடம் இப்ப இராணுவ முகாம். வீடு எல்லை அடையாளமே இல்லாமல் உள்ளது. திரும்பிப் போக அங்கு இடமில்லை. என்ன செய்யலாம் திடீரென்று போ என்றாலும் எங்க போறது ஒண்டுமே தெரியாத நிலவரம்.

வன்னிக்கு திரும்பப் போகமாட்டேன். புலிகளிடமிருந்த மிதிவெடிகளின் அளவு எனக்கல்லோ தெரியும். அவ்வளவும் ஊர் தேசம் எல்லாம் புதைச்சாங்கள். எல்லாம் மழை வெள்ளத்துக்கு மூடுப்பட்டிருக்கும். யாரோ துப்பரவு பண்ணித்தான் தீரவேணும். இனிமேல் வன்னிக்குள் போய் காலை கையை உயிரை இழப்பது புத்திசாலித்தனம் இல்லை. என்னை வெளியே விட்டாலும் வன்னிக்குப் போகமாட்டேன். நான் என்ன மடையனோ வன்னிக்குள்ள குடும்பத்தைக் கொண்டுபோய் கால் கையை முறிக்க. வன்னிக்குத் திரும்பப் போனால் அந்த கொலை மரண சம்பபவங்கள்தான் எங்களுக்கும் எங்கட பிள்ளையளுக்கும் திரும்ப திரும்ப நினைவுவரும். நான் வவுனியா மதவாச்சி அல்லது அனுராதபுரம் போய் இருப்பனே தவிர திரும்ப வன்னிக்குப் போகமாட்டேன். எங்கட சொந்த பந்தங்கள் எங்கே எண்டு தெரியாது எப்படி கண்டுபிடிக்கிறது.

முகாம்கள் மூடவேணும். மூடுவது என்றால் எல்லோருக்கும் எப்படி வசதிகள் செய்து கொடுக்கப் போகினம். யார் பொறுப்பு. புலி இல்லை. அரசாங்கத்திடம் எப்படிக் கேட்பது. அவனை – சிங்களவனை – கொல்ல திட்டம் போட்ட இனம் எண்ட பெயர் எங்களுக்கு. எப்படிக் கேட்க முடியும். 25 வருஷம் சனத்தின்ரை வாழ்க்கை அனியாயம். 3 வருஷம் இந்த அகதிமுகாமில இருக்கலாம். பிரச்சினையில்லை. இருக்கிற வீடு ரென்ட் சரியில்லை. மழை காத்து எண்டால் பிரச்சினை. மற்றும்படி தண்ணி கக்கூசு பிரச்சினை.

முன்னர் கொழும்பில் விவேகானாந்தா மேட்டில் கொஞ்சநாள் இருந்தனான். அங்க பொதுக் கக்கூசு தான் அண்ணை பாவித்தனான். அப்பிடியும் சீவித்த எங்களுக்கு இது என்ன புதிசோ?. இப்ப கக்கூசு அது இது எல்லாம் எங்களுக்கு பழகிப்போச்சு. அதைவிட கக்கூசு எல்லாம் திருத்தியாச்சு.

காம்பிற்கு வந்த புதிசில மன அழுத்தம் – மனப்பிரச்சினை – பெரிதாக இருந்தது. இப்ப அப்படியில்லை. வெளிநாட்டில் உள்ள புலிகள் ஆட்கள் என்ன செய்கினம். புலி முடிஞ்சா போராட்டம் முடிஞ்சுதாமோ? எங்களைப்போல சனங்கள் கஸ்ரப்பட்ட நாடுகளில் எப்பவுமே போராட்டம்தான். இந்தியாவில் சேரிப்புற மக்கள் வாழ்வது என்ன வாழ்க்கையோ?. அது போராட்டம்தானே. அதோடை பார்க்கையில் நாங்கள் இருக்கிற முகாம்களில் சாப்பாடு கிடைக்கிறது.

அவரிடம் ”உங்கள் அனுபவங்கள் கண்டது கேட்டவை எல்லாத்தையும் எழுதமாட்டீங்களா” எனக்கேட்டதற்கு எனக்கு அப்படி எழுத பெரிசாய் வராது. பேசுவேன். 30 வருஷமாக உலகத்தில் என்ன நடந்ததென்றே தெரியாது. எல்லாம் ஒரு இருண்ட காட்டில் இருந்த மாதிரி ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வாழ்ந்திட்டோம்.

(இந்த நண்பர்கள் இன்றும் அகதிமுகாமில் இருக்கிறார்கள்)

இவர்களது வாக்கு மூலங்கள் மட்டுமல்ல இன்னும் பலவும் தேசம்நெற் இல் வெளிவரும். உள்ளதை உள்ளபடி அவர்களுடைய மொழியிலேயே பதிவு செய்ய முயற்சிக்கின்றோம். அவர்களுடன் உரையாடும் போது அவர்கள் பட்டதுன்பங்களையும் இயலாமையையும் வெளிப்படுத்தும் போது அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வார்த்தைகள் இன்றி திக்குமுக்காட வேண்டியுள்ளது. குற்ற உணர்வில் மனம் குமைகின்றது. அவர்களிடம் கேள்விகளைக் கேட்கின்ற மனத்துணிவு வருவதில்லை. அவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதனை அவதானமாக கேட்டுக்கொண்டோம்.

வன்னி மக்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:

புலம்பெயர் புனைகதைக்குள் புகுந்துவந்த பயணம். : வவுனியன்

மனிதக் கொடுமையினூடாகப் பயணித்த இளம் தாயின் நேரடிச் சாட்சியம். : தொகுப்பு குமாரி

வன்னி முகாம்களை மூடுவது மட்டும் தீர்வாகாது! : த ஜெயபாலன்

அரசின் முகத்திரையைக் கிழிக்கும் வன்னி முகாம்களின் முட்கம்பிவேலி : த ஜெயபாலன்

மெல்ல வெளிவரும் நிஜங்கள் – வெளியேறி வருவோரின் வாக்கு மூலங்கள் : த ஜெயபாலன்

தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன்

Show More
Leave a Reply to Jeyabalan T Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

22 Comments

  • பல்லி
    பல்லி

    இந்த கட்டுரைக்கு பின்னோட்டம் எழுத நாம் தகுதியானவர்களா என எனக்கு தெரியவில்லை, ஆனால் கட்டுரை நிழல்ல நிஜம், இந்த நிலைக்கு அவர்களை கொண்டு சென்ற பொறுப்பு புலிகளையே சாரும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது, ஆனல் அத்துடன் முடித்துவிட முடியாது, பல்லியை போல் பலரின் கையால்ஆகா தனமும் இதுக்கு காரனமே; 1983 முன் கூட்டணி எம்பி மாருக்கு மரியாதை கலந்த பயம்: 1985 வரை இயக்கங்களுக்கு தேவையில்லாத பயம், 2009வரை புலிக்கு மிருக குணத்துக்கான பயம்; இன்று அரசுக்கு பயம், எதிர்காலம் அந்த மக்களின் வாழ்வின் மீது பயம், ஆகா எமது காலம் பயத்தால் பாளாகி போனதால் அதுக்கான அறுவடையை இன்று வன்னிமக்கள் மட்டுமே அறுவடை செய்கின்றனர்,

    இதுக்குள் மறந்துவிட்டேன் இன்று புதிதாக புலம்பெயர் அறிவு ஜீவிகளுக்கும் பயம் கொள்ளவேண்டி இருக்கு, புலிபோல் இவர்களும் தம்பங்குக்கு மக்களை பயணகைதிகளாக அரசிடம் ஒப்படைத்து விடுவார்களோ என; எது எப்படியோ அந்த மக்கள் தமது ஏக்கத்தையும் தாகத்தையும் சொல்லி உள்ளனர். இதுக்கு நாம் என்ன செய்யலாம் என ரகுமான் போல் கேளாமல்; எதோ முடிந்ததை சின்னசின்ன உதவிகளை கடமையாய் செய்வோம், அந்த மக்களின் இந்த நிலைக்கு நாமும் காரணம் பயத்தால் என பயமின்றி தேசத்தில் எழுதமுடிகிறது, வேண்டிய கட்டுரை இது வேண்டபடாத அரசியல் சதிராட்ட மன்னர்களுக்கு;
    தொடரும் பல்லி,

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி,
    இந்த மக்களை அவலநிலைக்குத் தள்ளியதில் பெரும்பங்கு வகித்தது புலிகள் என்பதில் மாறறுக்கருத்து கிடையாதென்பது உண்மை. அந்த அவல நிலையிலிருந்து அந்த மக்களை மீட்டு, வாழ வைக்க நினைக்காமல் நாடு கடந்த தமிழீழமென்று பூச்சாண்டி காட்டும் குழு ஒருபுறம், மறுபுறம் வட்டுக்கொட்டைக்கு வாக்கெடுப்பு என்று இன்னொரு குழு அந்த மக்களிடமிருக்கும் கச்சைத்துணியையும் களட்டியே தீருவதென்று நிற்க. என்ன செய்யலாமென்கிறீங்க??

    Reply
  • mano
    mano

    இங்கிருந்தும் எதையும் அறியமுடியாத நிலையில் நாமிருக்கும்போது> உள்ளதை உள்ளபடி அறியத்தந்த தேசத்திற்கு நன்றி. அரசியல் பற்றி பேசுவதால் தெரிந்தவர்களிடம் கூட முகாம் பற்றி கேட்கமுடியவில்லை. எல்லாம் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கைதான்.

    Reply
  • BC
    BC

    உண்மை குரலை வெளிகொண்டு வந்த தேசத்திற்க்கு நன்றி.
    //30 வருஷமாக உலகத்தில் என்ன நடந்ததென்றே தெரியாது. எல்லாம் ஒரு இருண்ட காட்டில் இருந்த மாதிரி ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு வாழ்ந்திட்டோம்.//
    என்ன கொடுமை! அவர்களை தொடர்ந்தும் இருளில் வைத்திருக்கவே புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.

    Reply
  • P.Mahendrarajah
    P.Mahendrarajah

    தமிழா! உன் அறிவுக்கூர்மையை கழுமரமாகி உன்னையே அதில் உலகம் வீழ்த்தியிருப்பது வரலாறு. இதிலிருந்து மீளமுடியாது நீயே மயங்கி நிற்கிறாய். தொடர்ந்தும் உன்னை விழ்த்துவதற்கான சந்தர்ப்பங்களே உலகில் நிறைந்துள்ளது. ஆனாலும் தற்போது பற்றிப்பிடித்து உன்னை காப்பாறிக்கொள்ள நாடு கடந்த தமிழீழ அரசு என்ற ஒன்றை உருவாக்கிக்கொள்ள அந்த உலகமே வழிசெய்துள்ளது. இன்றைய நிலமையிலும் உலகையும், உன்னையும் நீ புரிந்துகொள்ளாவிட்டால் முட்கம்பி வேலிக்குள் அகப்பட்ட தமிழர்கள் மட்டுமல்ல அனைத்து உலகிலும் இன்று அகப்பட்டுள்ள தமிழினமும் முற்றாக அழிந்துவிடும்.

    தமிழர்களே சிந்திதுப் பாருங்கள் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது 36லட்சம் தமிழரும் 78லட்சம் சிங்களரும் இருந்ததாகவும், இன்று 30லட்சம் தமிழரும் 176லட்சம் சிங்களரும் இருப்பதாக கணிப்பீடு சொல்கிறது. எப்படி நாங்கள் அழிக்கப்பட்டோம்? இந்த அழிவுகள் அத்தனையும் புலிகளால் மட்டுமே ஏற்பட்டதா?

    Reply
  • பல்லி
    பல்லி

    தம்பி மகேந்திரா அதில் என்ன சந்தேகம்; மிகுதியையும் அழிக்கதான் நாடு கடந்த(கெட்ட) ரமில் ஈலம்;
    என்று தமிழ் ஈழம், ரமில் ஈலமாக மாறியதோ அன்றே மிகுதி தமிழருக்கும் தண்ணீரில் அல்ல கண்ணீரில்தான் கண்டம் ராஜா வன்னியில் வடைசுட நயகராவில் எண்ணை கொதிக்க வைத்த கதையெல்லாம் எமக்கு பழகி போச்சு, இதுகளை விட்டு தலையின் இறந்த நளையோ அல்லது பிறந்த நாளையோ மாவீரர் நினைவாக கொண்டாடும் முயற்ச்சியை கவனிக்கவும், அதைவிட்டு நாடு கடந்த ஈலம் கேட்டு புலம்பெயர் தமிழரையும் மகிந்தாவிடம் ஒப்படைக்க வழிவகுக்க வேண்டாம்;

    Reply
  • டி.அருள் எழிலன்.
    டி.அருள் எழிலன்.

    நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் பேசாமல் அவர்கள் முகாம்களுக்குள்ளேயே வசிக்கலாம் போல. இல்லையா?

    Reply
  • Thirumalai vasan
    Thirumalai vasan

    இங்கிருந்தும் எதையும் அறியமுடியாத நிலையில் நாமிருக்கும்போது> உள்ளதை உள்ளபடி அறியத்தந்த தேசத்திற்கு நன்றி. (மனோ)உண்மை குரலை வெளிகொண்டு வந்த தேசத்திற்க்கு நன்றி. (பீசீ)
    நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் பேசாமல் அவர்கள் முகாம்களுக்குள்ளேயே வசிக்கலாம் போல. இல்லையா? (அருள் எழிலன்)

    எங்களுக்கு ஏற்றவகையில்> நாங்கள் விரும்பியவாறு> மற்றைய ஊடகங்கள் உலகநாடுகள் பார்த்துவந்தவையெல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில் மஹிந்த அரசின் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் தேசிய ஒற்றுமையைப் பெணும் வகையில் அமைந்த கேள்விச் செவியனின் (ஊரைக்கெடுக்காத) தேர்ந்தெடுத்த கேள்வி பதில்களால்அமைந்த கட்டுரை அருமை அருமையிலும் அருமை.தொடர்க உங்கள் தொலைபேசிச் செவ்விகள் வாசித்து நம்பிக்கொண்டிரப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளதுதானே

    Reply
  • chandran.raja
    chandran.raja

    டி.அருள் எழிலன் பீரங்கிக்குழலில் புல்லாங்குழல் வாசிக்கும் வீரமறவர் பரம்பரை வழிவந்தவர். இவர் இருக்கிற தமிழ்சனத்தையும் காலியாக்காமல் அடங்கமாட்டார். முகாம் மக்களுடைய தேவை இழந்த வாழ்கையை மீட்டெடுப்பதற்கு தமது அடிப்படை வாழ்வுரிமை பேணுவதும் அதற்கான அரசியலை முன்னெடுப்பதுமே புதைசேற்றில் இருந்து எழுந்துவந்த மக்கள் மீண்டும் வாழ்வதற்கே மரிப்பதற்கல்ல.

    Reply
  • Kumary
    Kumary

    நிச்சயமாக இல்லை அருள் எழிலன். இல்லவேயில்லை. நான் லண்டனில் வசித்துக்கொண்டு அவர்களை எங்கு வாழவேணும் என்றோ எப்படி வாழவேணும் என்றோ எடைபோட நாம் அருகதையற்றவர்கள். அவர்களின் உணர்வுகளின் நேரடிப் பதிப்பு இது. இந்த உணர்வுகளின் மேல்நின்று நாம் அரசியல் செய்யவுமில்லை. தயவுசெய்து யாரும் செய்யவும் வேண்டாம்.

    அவர்களுடன் கதைக்கையில் கையாலாகாத ஆட்கள் நாங்கள் என்ற குற்ற உணர்வு எம்முள். தேசம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பக்கத்தில்(page) உள்ள எழுத்துக்கள். அவர்கள் சொல்ல கேட்கையில் அதை எழுத்தில் கொண்டுவரும்போது நாம் பட்ட வலி எமக்குத்தான் தெரியும். அப்படியிருக்க அகதிமுகாமுள் மிஞசியிருப்பவர்களின் வலி………. அவர்கள் பட்டதுன்பம்…… அதற்கு பதில் சொல்ல எவருக்குமே அருகதையில்லை என்பதே எனது கருத்து.
    வார்த்தைக்கு வார்த்தை கஷ்டமாயிருக்கு கஷ்டமாயிருக்கு, காசில்லை என்று அவர்கள் சொல்கையில், கதைக்கும் எம்மிடம் முறைப்பாடு வைக்கையில், அவர்கள் எம்மிடம் அடிப்படை வாழ்வுக்கான தேவைக்கான உதவியை எதிர்பார்க்கிறார்கள். அள்ளிக்கொடுத்து எவ்வழியிலும் உதவ மனம் இருந்தும் கிள்ளிக் கொடுக்கக்கூட முடியாத லண்டன் பிச்சைக்காரர் நாங்கள் எனினும் எம்மில் சுரண்டிக் கொடுக்கிறோம். தயவுசெய்து உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.

    Reply
  • பல்லி
    பல்லி

    குமாரி அவர்கள் அனுபவத்தில் அப்படி சொல்லுகிறார்கள் எனநினைக்கிறேன்; GTV யில் பேட்டி கொடுக்க சிலர் இருக்கிறார்கள்; அதேபோல் மற்றவர்களையும் நினைத்து பெருமை கொள்ளட்டும்; இந்த கட்டுரை யாரையும் சார்ந்ததல்ல, நீஙளும் உங்கள் உறவுடனோ அல்லது தெரிந்தவர்களுடனோ தொடர்பு கொண்டு செய்திகளை தெரிந்து கொள்ளுங்க. அதுக்காக அவர்கள் அரசை சாடவில்லை என நினைத்து அவர்கள் கரும்புலியாக வேண்டியவர்கள்தான் என தெறிக்க வேண்டாம்; முகாம்களில் அவர்கள் இருக்க வேண்டும் என்பது எமது அவாஅல்ல, காரனம் நாம் புலி பினாமிகள் அல்ல மக்களை வைத்து அரசியலோ பிழைப்போ நடத்த; எமது கருத்து அவர்களை விடுவிக்ககோரும் அதேநேரம் அவர்கள் முகாமை விட்டு வந்து உடனடியாக வாழ என்ன செய்யமுடியும், யார் உதவுவார்கள்; இப்படி பலதை நாம் யோசிப்பதால் அவர்களை விடுவிக்க பல வழியில் சர்வதேசம் நிர்பந்தம் செய்தவண்ணமே உள்ளது (புலம்பெயர் சதிராட்டத்தால் அல்ல) தொடர்ந்தும் செய்யும் என்னும் நம்பிக்கையும் இருக்கு;

    ஆக அப்படி வருபவர்களுக்கு ஏதாவது சிறுசிறு உதவிகளை செய்ய வேண்டும், அதுஎந்த அமைப்பு மூலமோ அல்லது ஒருகுழு மூலமோ செய்ய வேண்டியதில்லை, தனிநபர்களாக செய்ய முடியும்; அதுக்காகதான் அந்த உறவுகளுடன் தொடர்பு கொள்ளுங்கள், இன்மேலும் எந்த அடாவடிக்காரரையும் நம்ப வேண்டாமே என்பதுதான் எமது கருத்து, நேரம் கிடைக்கும்போது தேசத்தை கவனிக்கவும் நாம் புலியின் புத்திஜீவிகளோ அல்லது அரசின் அரிவுஜீவிகளோ இல்லை என்பது புரியும்; குமாரி சொன்னதுபோல் இந்த கட்டுரை மூலம் ஒரு நால்வர் ஆவது அந்த மக்களுக்கு சிறுஉதவிகளை செய்தால்கூட போதும்; நாம்(தேசம்) எந்தவிதமான கேலிகளுக்கு மத்தியிலும் இதைபோல் பல உன்மைகளை முடிந்த மட்டுக்கும் வெளிகொனருவோம்; நாம் இங்கே எழுதுவது அந்த முகாம்களில் இன்னல்படும் புலி சார்ந்த குடும்பங்கள்: தவறுதலாய் புலியாகிய உறவுகள் பற்றியும்தான், தமிழ் உறவுகளையே பிரிக்கும் கசாப்புகடைகாரர் அல்லநாம்;
    தொடரும் பல்லி;

    Reply
  • மாயா
    மாயா

    // டி.அருள் எழிலன். on October 26, 2009 4:50 am நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் பேசாமல் அவர்கள் முகாம்களுக்குள்ளேயே வசிக்கலாம் போல. இல்லையா?//

    வெளிச்சத்துக்கு அஞ்சி இருளிலே வாழ்வதல்ல வாழ்கை. அவர்களுக்கும் வாழ முடியும் எனும் நம்பிக்கையை நாம் கொடுக்க வேண்டும்.அதுவே வாழ்கை. புலிகள் மரணங்களை பண மரங்களாக்கியவர்கள். மாவீரர் எனும் மாயை வைத்தே மக்கள் மாய வேண்டும் என மரணக் குழிகளை தோண்டியவர்கள். பலர் அவர்களுக்காக கட்டுக் கதைகளை எழுதி ,உதவி, உலக மக்களை மாயையில் வைக்க உதவினார்கள். ஊமைகள் பேசியது போன்ற வித்தைகளை செய்துவர்கள் புலிகள். ஆனாலும் , இன்னும் பிரச்சனை தீரவில்லை. பிரச்சனைகள் ஓரளவு தீர இன்னும்…..இன்னும் சில வருடங்கள் எடுக்கும்.

    மக்கள் உள்ளே இருந்தாலும் , வெளியே வந்தாலும் அச்சம் இருந்து கொண்டேயிருக்கும். இன்னும் உயிர் பாதுகாப்பும் , நம்பிக்கையும் முழுமையாக ஏற்படவில்லை. அதை இன்னும் உணர முடிகிறது. இருந்தாலும் புலிகளது காலத்தில் , தினமும் விழுந்த பிணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    புலத்து புலிகள் , இன்னும் பிணங்கள் விழாதா என ஆவென வாய் பிளந்து நிற்கின்றன? அதற்கான போராட்டங்கள் பிரபா படங்களோடு மீண்டும் வீதி வலம் வந்து கொண்டேயிருக்கிறது. இதற்காக ஈழ நாடே தெரியாத குழந்தைகளை தெருவில் இறக்கியுள்ளார்கள்? தாம் இறங்கினால் உள்ளே போய் விடுவோம். எனவே புலத்தில் பிறந்த குழந்தைகளை தெருக்களில் இறக்குவோம் எனும் கிரிமினல்தனம் அரங்கேறுகிறது. புலி பினாமிகளது வாழ்வியலை கொண்டு செல்ல பிண வாடை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இருந்தாலும் என்ன? 10 ஆயிரம் என முன்னர் கூடிய கூட்டம், புலத்தில் இப்போது 100 – 200 ஆக குறைந்திருக்கிறது. அதுவே இன்றைய மக்கள் மனதை தெரிவிக்கிறது. அதுவும் விரைவில் 0 ஆகும். அதற்கான வழியை இலங்கை அரசுதான் செய்து காட்ட வேண்டும்.

    அண்மையில் சுவிஸில் நடந்த ஒரு நிகழ்வில் , தாயக நிகழ்வு என ஒரு அபிநய நடனம் இடம்பெற்றது. அதன் கரு> மகிழ்வாக வாழ்ந்த ஈழத்தில் குண்டுகள் வீழ்ந்து மக்கள் படு கொலையாவதாகவும் , தற்போது முட்கம்பி முகாம்களில் வதைபடுவதாகவும் காட்டப்பட்டு , அதை மீட்க மாவீரர்கள் ஆவிகளாக வந்து போராடுவதாக அரங்கேற்பட்டது. நிகழ்வைக் காண வந்திருந்த 90 சதவீதத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் புலிகளது ஆதரவாளர்கள். இருந்த போதும் “இது இப்போ தேவையா?” எனும் வெறுப்போடு கை கூட தட்டாமல் திட்டிக் கொண்டே வெளியேறினார்கள். சிலர் ” முகாமில் இருப்போரையும் சாகடிக்க , இவர்கள் சக்கை அடிக்கிறார்கள்” என என்னிடமே சொன்னார்கள். இவை புலத்தில் இன்று காண முடியும் காட்சிகள்.

    முன்னர் , முகாமில் இருந்த படையதிகாரி ஒருவர் தமிழ்ச்செல்வனின் குழந்தைகளது சாப்பாடு குறித்து சொன்ன ஒரு கருத்தை, சாப்பாடு இல்லாமல் வாழும் மக்கள் சொல்லும் கருத்தோடு ஒப்பித்து பார்க்க முயல்கிறேன்.

    “தமிழ்ச் செல்வனின் பிள்ளைகள் சோறு சாப்பிட மாட்டார்கள். அவர்கள் சாப்பிட கேட்டது. பித்ஸா போன்ற மேலத்தேச உணவுகள் . இவர்கள் எல்லாம் சொகுசாக வாழ்ந்து , அடிமட்ட மக்களை பசியோடு அல்லது கஞ்சியோடு வாழ வைத்திருக்கிறார்கள்” என்றார் அந்த இராணுவ அதிகாரி வேதனையோடு.

    அப்படி வறுமையோடு , பலி ஆடுகளாக வாழ்ந்த மக்கள், விரைவில் சுதந்திரமான காற்றை சுவாசித்து வளமாக வாழ வேண்டும். அதுவே எமது பிராத்தனையாகவும் , வழிகாட்டலாகவும் அமைய வேண்டும்.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    மக்களை இன்நிலைக்குக் கொண்டுவந்தவர்கள் புலிகள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அரசாங்கள் தமிழ் அகதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துகிறது என்பதற்காக முழுச்சாட்சியமாக இது அமையாது. புலிகள் பிரபாகரன் என்பது ஈழத்தமிழர் சரித்திரத்தில் ஒரு கறைபடிந்த பாடம். ஆனால் புலிகள் பிழைவிட்டார்கள் என்பதற்காக அரசாங்கம் சரியாத்தான் செய்கிறது என்பது பிழையானது. இக்கட்டுரை வன்னி நிலைமைகளை தந்திருக்கிறது என்பதில் சந்தேசம் இல்லை. எம்மக்களின் எதிர்காலம் என்பது கேள்விக் குறியாக இருக்கும் வேளை இன்றும் எம்மக்களை மையப்படுத்தாமல் நாடுகடந்த (மூளையறுந்த) தமிழீழமும்> வட்டுக்கோட்டைக் கோட்டையைப் பிடிக்கும் யோசனையிலும் புலம் பெயர் புண்ணாக்குகள் திரிகின்றன. தேர்தல் வைக்கிறோம் எனக்கு வோட்டுப் போடுங்கோ என்று தொடங்கி விட்டார்கள்.

    Reply
  • mano
    mano

    திருமலை வாசன்!
    கட்டுரையில் மக்கள் பேசிய வார்த்தைகளிலிருந்து அவர்கள் படும் துன்பம் உங்களுக்குத் தெரியவில்லையா? தண்ணீர் போதியளவு இல்லாமல்> மலசலகூட வசதி போதாமல்> தகிக்கும் கூரையின் கீழே அவர்கள் எந்தளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லையா? ஷெல் பட்டு குழந்தைகள் கை கால்களை இழந்தும் உயிரிழ்ந்தும் கிடக்கும் காட்சிகள் இல்லையே என்று கவலைப்படுகிறீர்களோ? அல்லது சாப்பாட்டுக்கு வழியில்லாமல் குழந்தைகள் இறப்பதும் இறந்த பிணங்கள் அகற்றப்படாமல் 3 நாட்களாய் முகாம்களில் கிடக்கிறது என்றும் சோமாலியா மனிதர்கள் போல முகாம் மக்கள் இருந்தால்தான் முகாமில் கஷ்ட நிலை என்று உங்கள் பிரசாரம் சரியாகுமா?

    புலம்பெயர் நாடுகளில் பதுங்கிக் கிடக்கும் புலிகளின் பணத்தைக் கொண்டே இந்த மக்களின் வாழ்வை மீட்டுக் கொடுத்துவிடலாமே. தன்மானம் உள்ள தமிழர்களாக இருந்தால் அதைத்தான் செய்வார்கள்.

    Reply
  • naane
    naane

    முகாமில் அடைபட்டு இருக்கும் மக்களை எப்படியாவது வெளியில் எடுப்பதற்கான முயற்சியில் தான் நாம் எல்லோரும் ஈடுபடவேண்டுமே ஒழிய, அவர்கள் சொல்லுவதை விட முகாம்களில் நிலமை நல்லா இருக்கின்றது அல்லது ………அப்படித்தான் சொல்லுவார்கள் முகாம்களில் அன்றாடம் கொலைகளும்,க‌ற்பழிப்புகளும் தொடர்கின்றது, என்பதோ அல்ல பிரச்சனை.

    முகாம்க‌ளில் உள்ள‌ ம‌க்க‌ளை வெளிவிட்ட‌ பின்ன‌ரும் பிர‌ச்ச‌னை தொட‌ர‌த்தான் போகின்ற‌து. புலிக‌ள் தோற்ற‌ பிற‌கும் அதை ஏற்றுக்கொள்ளும் ம‌னோபாவ‌த்தில் பெரும்பாலான‌ புல‌ம்பெயர் புலிக‌ளில்லை. இவ‌ர்க‌ள் தொடர்ந்தும் தங்களிடம் இருக்கும் ஊடகங்கள் மூலம் விஷத்தை கக்கிக் கொண்டுதானிருக்கப் போகின்றார்கள்.

    இவ‌ர்க‌ளுக்கு எல்லாம் ப‌தில் சொல்லிக் கொண்டிருந்தால் நேர‌ம் தான் விர‌ய‌ம். இன்றும் நேர‌ம் கிடைக்கும் போது இவர்களது வானொலி கேட்பேன். முழுக்க‌ முழுக்க படுபிற்போக்கான கருத்துக்களை அரசியலில் மட்டுமல்ல பொது வாழ்க்கையிலும் பரப்பிக்கொண்டு இருகின்றார்கள். முன்னேற்றம் அடைந்த நாட்டிற்கு புலம் பெயர்ந்தும் பிற்போக்கான வாழ்க்கைக்கு திரும்ப தள்ளும் ஒரு நிலைபாட்டிலெயே இவர்கள் இருக்கின்றார்கள். உதாரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் யாரென்றே தெரியாத, ஒரு மூன்றாம்தர அரசியல்வாதியை கூட்டிக்கொண்டு வந்து எமது பிரச்சனைக்கு தீர்வு கேட்கின்றார்கள். அவரும் மணிக்கண‌க்கில் வைத்து வாங்குகின்றார்கள்.(அவர்களை குறை சொல்லி எதுவித‌ பிர‌யோச‌ன‌மும் இல்லை. அவ‌ர்க‌ள் எதைப்ப‌ற்றி கேட்டாலும்தான் மணிகண‌க்கில் பேசுவார்கள்.) போகின்ற போக்கில் இங்கு இன்று என்ன காலநிலை என்றும் அவர்களிடம் தான் கேட்பார்கள் போலிருக்கு.

    முப்பது வருட ஆயுதப்போராட்டம் முடிந்து இன்னமும் ஈரம் காயவில்லை, பெரிய அளவில் ந‌‌‌ம்பிக்கையில்லா விட்டாலும் அரசு செய்வதை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர இப்போதைக்கு தமிழருக்கு வேறு எந்த வழியும் இல்லை. சில மாதங்கள் பொறுக்க இலங்கை அரசியலில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு மாறுதல்கள் வரும் போலுள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை புலம் பெயர் கூத்துக்களை கண்டு களிப்போம். ‌

    Reply
  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    ஈழவெறியில் வெள்ளி பார்த்து கொண்டிருந்த எங்களால் முள்ளி வாய்க்காலில் நாங்கள் எப்படியும் தன்னை காப்பாற்றுவோம் வெள்ளி பார்த்து கொண்டிருந்த வெற்று தலைவனையும் இழந்து ஈழத்தையும் இழந்து நிற்கிறோம்.
    இன வெறியில் வீதியில் நின்று கூச்சல் போட்டால் முள்ளி வாய்க்காலில் வெள்ளி பார்த்துக்கொண்டிருந்த தலைவனை வெளியில் கொண்டு வரலாம் என்று வெற்று தலையர் நாங்கள் நம்பினோம்.
    எங்களை இன்னமும் வெள்ளி பார்க்க விடுங்கோ உள்ளதுகளை உண்மைகளை ஒருக்காலும் சொல்லவேண்டாம். எங்களுக்கும் உள்ளதுகள் தெரிய வேண்டாம்

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    //நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் பேசாமல் அவர்கள் முகாம்களுக்குள்ளேயே வசிக்கலாம் போல. இல்லையா?// டி.அருள் எழிலன்.

    அருள் எழிலன் அவர்களே உங்களை வரவேற்கிறேன்.

    தேசம் ஒரு அரசியல்கட்சியையோ அல்லது எந்த அரசையோ ஆதரித்து செயற்ப்படவில்லை.

    நாம் முடிந்தவரையில் முகாம்களில் உள்ளவர்களின் மன நிலைமைகளை வெளிக்கொணரவே முயல்கின்றோம். இதில் அவர்கள் என்ன சொல்லுகிறார்களோ அதை அப்படியே வெளியிடுகிறோம். இதில் பலதரப்பட்டவர்களுடன் பேசுகிறோம். ஒருவர் கூட புலிகளை ஆதரித்து எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அப்படி சொல்லியிருந்தால் அதையும் பதிந்திருப்போம்.

    அவர்கள் யாருமே முகாமில் அடைபட்டு இருக்க விரும்பவில்லை. ஆனால் வெளியே போய் யாரிடம் போவது என்று தெரியாமல் திகைத்து நிற்போர் பலர் உள்ளனர். அவர்களில் பலர் மலையகத்திலிருந்து அடித்து துரத்தப்பட்டவர்கள். வன்னியில் நிலமற்றவர்கள் பலிகளால் பகிர்ந்து கொடுக்கப்பட்ட நிலத்தில் எந்த வித அத்தாட்சிப் பத்திரமும் இல்லாமல் வசித்தவர்கள் – அந்த நிலங்களை அந்த மக்களின் காணி என்பதை அரசு ஏற்க மறுப்பதாக பலர் கூறுகின்றனர். இவர்களின் இந்தப் பிரச்சினைகளை டக்ளஸ்டம் எடுத்துக் கூறியுள்ளதாக என்றும் சொல்லுகிறார்கள்.

    இப்படியானவர்கள் எங்கே போவது? முகாமில் இருந்தால் உணவாதல் கிடைக்கும் என்கிறார்கள்.

    மக்கள் முகாம்களில் அடைபட வேண்டிய நிர்ப்பந்தங்களை சமூகத்தில் நடந்த போர்க்காரணங்களை எல்லாம் பரிசீலிக்காமல்- நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் பேசாமல் அவர்கள் முகாம்களுக்குள்ளேயே வசிக்கலாம் போல. இல்லையா? என்று கொஞ்சம் கெட்டித்தனமாக (கீபோட் மாக்ஸ்ஸிட்டுக்களின் பாணியில்) அடித்துவிட்டுள்ளீர்கள்.

    இவர்கள் தமது காணிகளுக்குள் போனாலும் வேறு பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலைமைகள் உள்ளது. இவர்கள் அந்த காரணங்களையும் சீர்செய்து கொள்ள வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார்கள். இவர்கள் இப்போ முகாமில் உள்ளபோது இந்தப்பிரச்சினைகளை அறியாமல் போனால் இவர்கள் தமது காணிகளுக்குள் போய் கஸ்டப்படும்போது இவற்றை அவதானிக்க யாரும் இல்லாத நிலைமைகள் உருவாகிவிடும். தமிழர் தரப்பில் பல சமூக நல அமைப்புக்கள் இல்லை இவைகள் புலிகளால் அழிக்கப்பட்டு விட்டது.

    மக்கள் தமது விடயங்களை தாமே நிர்ணயம் செய்யும் வரையில் இவர்கள் அரசின் தயவில்த்தான் தங்கியிருக்க வேண்டும்.

    முகாம்களை விட்டு வெளியேறி தமது வீடுகளுக்கு போனவர்கள் ஏற்கனவே நல்ல வீடுகளும் வசதிகளும் கொண்டவர்கள் தான் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எந்த உதவிகளும் வெளியே இல்லாதவர்கள் வெளியே போக தயங்குகிறார்கள் இவர்கள் முன்பு புலிகளின் வேலையாட்களாக இருந்ததினால் சில உதவிகள் புலிகளினால் கிடைத்திருந்தது.

    எமது எழுத்துக்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் தயார்? எமது எழுத்துக்கள் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம் நாமும் பதிலுக்கு விமர்சனங்களை முன்வைப்போம்.

    முகாமில் உள்ள மக்களின் சீரழிவில் அரசியல்லாபம் தேட தேசத்தில் இடம் இல்லை.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நண்பர்களுக்கு உண்மைகளை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள் என்று சொன்னால் எது உண்மை? உண்மைக்கு சார்புநிலை உண்டு என்று தங்கள் அறிவுஜீவிதத்தை காட்டி விடுவார்கள் என்பதால் தகவல்களை விரும்பு வெறுப்பு உணர்வுகளுக்கு அப்பால் வைத்து ஆராய்வது மிகவும் முக்கியம்.

    ரி மகேந்திரராஜா :”தமிழர்களே சிந்தித்துப் பாருங்கள் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது 36லட்சம் தமிழரும் 78லட்சம் சிங்களரும் இருந்ததாகவும் இன்று 30லட்சம் தமிழரும் 176லட்சம் சிங்களரும் இருப்பதாக கணிப்பீடு சொல்கிறது.”
    மகேந்திரராஜா போன்றவர்கள் தான் புலம்பெயர்ந்த சமூகத்தில் மலிந்து போயுள்ளனர்.
    6 657 300 – 1946 ல் இலங்கையின் மொத்த சனத்தொகை
    4 620 170 – 1946 ல் இலங்கையின் சிங்கள மக்களின் தொகை – 69.4 வீதம்
    732 300 – 1946 ல் இலங்கையின் தமிழ் மக்களின் தொகை – 11.0 வீதம்

    21 324 800 – 2008 ல் இலங்கையின் மொத்த சனத்தொகை
    15 780 350 – 2008 ல் இலங்கையின் சிங்கள மக்களின் தொகை (73.8 வீதம்)
    2 687 000 – 2008 ல் இலங்கையின் தமிழ் மக்களின் தொகை (12.6 விதம்)

    1946ம் ஆண்டின் பதிவு இலங்கையின் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினை ஆதாரமாகக் கொண்டு ‘உயிர்ப்பு’ சஞ்சிகையின் இதழ் 5ல் 1995ல் வெளியிடப்பட்டிருந்தது.

    2008 சனத்தொகைக் கணக்கெடுப்பு சிஐஏ மற்றும் என்சைக்கிளோ பிடியாவில் இருந்து பெறப்பட்டது.

    வடக்கு கிழக்கில் 1981க்குப் பின் முறையான சனத்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

    1946 சனத்தொகை மதிப்பீட்டில் தமிழர்கள் எனும்போது பூர்வீகத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் ஒன்றாகவே கணிக்கப்பட்டனர். பிற்பாலங்களில் இவ்விரு சமூகங்களும் தனித் தனிக் குழுமங்களாக கணிக்கப்பட்டது. தற்போது மலையகத் தமிழர்கள் இலங்கை சனத்தொகையின் 5 விதத்தினராக உள்ளனர்.

    ரி மகேந்திரராஜாவின் விடயத்திற்கு வருவோம். மகேந்திரராஜா மட்டுமல்ல தமிழ் குறும்தேசியவாதிகளின் புள்ளிவிபரக் கணக்குகள் இப்படித்தான் உள்ளன.

    மகேந்திர ராஜாவின் புள்ளிவிபரப்படி இலங்கை சுதந்திரமடைந்த போது அண்ணளவாக அரைவாசிப்பேர் (46 வீதம்) தமிழ் மக்கள் எனக் கூறுகின்றார். அவ்வாறான ஒரு நிலை இலங்கையின் சனத்தொகை பதிவு செய்யப்பட ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் என்றுமே இருக்கவில்லை. தமிழ் பேசும் மக்கள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட 30 வீதமானவர்களே தமிழ் பேசுபவர்களாக இருந்தனர்.

    தற்போதைய கணிப்புகளின்படி 158 லட்சம் சிங்களவர்களும் 27 லட்சம் தழிழர்களும் வாழ்கின்றனர். அன்றைய விகிதாசாரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் மக்களின் விகிதாசாரம் இலங்கையில் அதிகரித்துள்ளது. அதற்காக இலங்கையரசு தமிழ் மக்களை ஒடுக்குமுறை செய்யவில்லை என்று கொள்ள முடியுமா?

    தவறான தகவல்களை வைத்துக் கொண்டு போலியான கூப்பாடுகளைப் போடுவது தமிழ் குறும்தெசியவாதத்தின் போக்காக இருந்தது. இன்னமும் இருக்கின்றது.

    இந்த லட்சணத்தில் மகேந்திரராஜா கேட்கிறார் ”எப்படி நாங்கள் அழிக்கப்பட்டோம்? இந்த அழிவுகள் அத்தனையும் புலிகளால் மட்டுமே ஏற்பட்டதா?” நீங்கள் அழிக்கப்பட வில்லை ராஜா. தமிழ் மக்களின் சனத்தொகையின் மூன்றிலொருவர் வெளிநாடுகளுக்கு வந்துவிட்டோம். இலங்கை சுதந்திரமடைந்த போது ரொறன்ரோவில் லண்டனில் பாரிஸில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் இருந்தீர்கள் ராஜா?

    சரியான தகவல்களை வைத்து விவாதியுங்கள். கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களால் தமிழ் மக்களின் விகிதாசாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வடக்கில் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வெளிநாடு சென்றதால் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் சனத்தொகை வீழ்ச்சி அடைந்துள்ளது. வடக்கு கிழக்கு தமிழர்கள் யுத்தம் காரணமாக தெற்கு நோக்கிச் சென்றதாலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் சனத்தொகை விழ்ச்சி அடைந்துள்ளது.

    ”எப்படி நாங்கள் அழிக்கப்பட்டோம்? இந்த அழிவுகள் அத்தனையும் புலிகளால் மட்டுமே ஏற்பட்டதா?”
    புலிகள் தாங்கள் நேரடியாக அழித்தது ஒரு புறம் மற்றவர்களை வைத்து அழித்தது ஒரு புறம். எதிரி அழிப்பான என்று எங்கள் எல்லோருக்கும் சுதந்திரம் அடைந்தது முதல் தெரியும். ஆனால் கூட இருந்தவன் இவ்வளவு மோசமாய் அழித்து தானும் அழிவான் என்று உண்மையில் நான் எண்ணியிருக்கவில்லை. என்னிடம் புலி பற்றி கடுமையான விமர்சனங்கள் இருந்தது. ஆனால் தங்களுக்கு வாழ்வு கொடுத்த வன்னி மக்களுக்கு இவ்வளவு அக்கிரமங்களைச் செய்வார்கள் எனறு நான் கனவிலும் எண்ணியதில்லை.

    த ஜெயபாலன்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    டி.அருள் எழிலன். ”நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் பேசாமல் அவர்கள் முகாம்களுக்குள்ளேயே வசிக்கலாம் போல. இல்லையா?”

    டி அருள் எழிலன் வன்னி மக்களை பணயம் வைத்து புலிகள் தங்கள் யுத்தத்தை நடத்திய போதும் செல் தாக்குதலுக்குப் பயந்து தப்பியோடிய மக்களை புலிகள் கலைத்துச் சுட்டபோதும் பலவந்தமாக ஆயுதங்களை வழங்கி யுத்தத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்ட சிறார்கள் தப்பியோடிய அவர்களைப் புலிகள் சுட்டபோதும் உங்களால் நம்ப முடியவில்லை என்று எழுதிய உங்களுக்கு இந்த மக்களின் கதைகளைக் கேட்டால் உங்களுக்கு ”நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் பேசாமல் அவர்கள் முகாம்களுக்குள்ளேயே வசிக்கலாம் போல” என்று தான் படும்.

    அடிப்படைத் தகவல்களையே சரி பார்க்காமல் உங்கள் ‘குறூப் பொலிடிக்ஸ்’க்கா கட்டுரை எழுதும் உங்களுக்கு அந்த மக்களின் உணர்வையோ தேவைகளையோ விளங்கிக் கொள்வது கஸ்டமாகத்தான் இருக்கும்.

    டயஸ்பொரா – தமிழ்நாடு குறுப் பொலிட்டிக்ஸ் செய்வதற்கு பின்நவினத்துவம் கலை இலக்கியம் கூட்டுக் கலவி போன்ற பல விடயங்கள் இருக்கின்றது. அவற்றுடன் அந்த குறூப் பொலிட்டிக்ஸ்சை நிறுத்திக் கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் குறுப் பொலிட்டிக்ஸ் கொசிப்பிற்கு வன்னி மக்களைப் பயன்படுத்தாதீர்கள்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    திருமலைவாசன் ”எங்களுக்கு ஏற்றவகையில்> நாங்கள் விரும்பியவாறு> மற்றைய ஊடகங்கள் உலகநாடுகள் பார்த்து வந்தவையெல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில் மஹிந்த அரசின் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் தேசிய ஒற்றுமையைப் பெணும் வகையில் அமைந்த கேள்விச் செவியனின் (ஊரைக்கெடுக்காத) தேர்ந்தெடுத்த கேள்வி பதில்களால்அமைந்த கட்டுரை ”

    ”எங்களுக்கு ஏற்றவகையில்> நாங்கள் விரும்பியவாறு> மற்றைய ஊடகங்கள் உலகநாடுகள் பார்த்து வந்தவையெல்லாம் பொய் என்று ” இதுவரைக்கும் நீங்கள் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீகள் திருமலைவாசன். ஆனால் உங்களுக்கு இருக்கும் செலக்டிவ் ‘புலி’ அம்னீசியாவால் உங்களால் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. மக்கள் மிகப் பெருமளவில் கொல்லப்படப் போகின்றார்கள் என்று 2009 ஜனவரி முதல் ஊடகங்கள் உலக நாடுகள் பார்த்து வந்து வன்னி மக்களை புலிகள் விடுவிக்க வேண்டும் புலகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று சொன்ன போது ”எங்களுக்கு ஏற்றவகையில்> நாங்கள் விரும்பியவாறு> மற்றைய ஊடகங்கள் உலகநாடுகள் பார்த்து வந்தவையெல்லாம் பொய் என்று சொல்லி ‘நாங்கள்’ அடித்த கூத்தை நீங்கள் பார்க்கவில்லையா?

    ‘வன்னி பூர்வீக மண்’ ‘மக்களை வெளியெற்ற முயற்சிக்க வேண்டாம்’ என்றெல்லாம் நாங்கள் குரல் எழுப்பினோம்.

    அன்றும் அந்த மக்களிடம் என்ன வேண்டும் என்று கேட்கவில்லை. இன்றும் அந்த மக்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கத் தயாரில்லை. அவர்கள் கேட்பதற்கு செவிசாய்க்கவும் விரும்பவில்லை.

    திருமலைவாசன் உங்கள் குடும்பத்தினருடைய தேவையை பக்கத்து வீட்டுக்காரன் சொல்லித்தான் தெரிந்தகொள்வேன் என்னுடைய பகுதிக் கவுன்சிலர் வந்த சொன்னால் தான் கேட்பேன் என்று ”மற்றைய ஊடகங்கள் உலகநாடுகள் பார்த்து வந்தவையெல்லாம்” என்று அடம்பிடிக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தை நீங்கள் விவாகரத்துச் செய்திருந்தால் அப்படித்தான் முடியும். வேறு யாராவது சொல்லித் தான் தெரிந்த கொள்ள வேண்டும்.

    புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் தாயக உறவுகளை பெரும்பாலும் விவாகரத்துச் செய்துவிட்டார்கள். அதனால் தான் அவர்களுடைய உறவுகளை நுனிநாக்கில் போட்டு பிரட்டி எடுக்கிறார்கள்.

    த ஜெயபாலன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //தமிழர்களே சிந்திதுப் பாருங்கள் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது 36லட்சம் தமிழரும் 78லட்சம் சிங்களரும் இருந்ததாகவும், இன்று 30லட்சம் தமிழரும் 176லட்சம் சிங்களரும் இருப்பதாக கணிப்பீடு சொல்கிறது. எப்படி நாங்கள் அழிக்கப்பட்டோம்? இந்த அழிவுகள் அத்தனையும் புலிகளால் மட்டுமே ஏற்பட்டதா?
    – P.Mahendrarajah //

    உங்களைப் போன்றவர்களுக்கு எமது நாட்டு வரலாற்றையே, தமிழகத்து சில கோமாளி அரசியல்வாதிகள் விடும் புலுடா அறிக்கைகளை வைத்துத் தானே புரிந்து கொள்கின்றீர்கள். சமீபத்தில் இலங்கையின் சனத்தொகை பற்றிய புழுகு மூட்டையை குமுதத்தில் தமிழக கம்யூனிஸ்ட் புரளிப்புலி மகேந்திரன் அவிழ்த்து விட, தாங்களும் அதை நம்பி இங்கு வந்து கதையளக்கின்றீர்கள். முதலில் சொந்த நாட்டின் வரலாறை சரியாகத் தெரிந்து கொள்ள முயலுங்கள்.

    Reply
  • BC
    BC

    பார்த்திபன், இந்த மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராம் . மிக மிக கேவலமாக தங்கள் அரசியல் பிழைப்புக்காக எதையும் கதைக்க கூடியவர்கள். கதைத்துள்ளார். இந்த ஈனச் செயல்களுக்கு பெயர் இலங்கையில் முள்வேலி முகாமில் அடைபட்டு கிடக்கும் அப்பாவி தமிழ்மக்கள் மீதான அக்கறையாம்.

    Reply