வடக்கில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் திட்டத்திற்கமைய யாழ். நகரில் 33 அறைகளைக் கொண்ட ‘டில்கோ ஜஃப்னா சிட்டி ஹொட்டேல்’ என்ற சுற்றுலா ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதாக முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் யாழில் ஹொட்டல் கட்ட ஒப்பந்தம்
சுமார் 80 மில்லியன் ரூபா முதலீட்டுடன் கட்டப்பட்டு வரும் இந்த ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திறக்கப்படவுள்ளதாக டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜா தெரிவித்துள்ளதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
கடற்கரையையும், கடலேரியையும் அண்டியுள்ள பகுதியில் சுமார் 340 பேர்ச்சஸ் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் டில்கோ ஜப்னா சிட்டி ஹோடேல் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர், வர்த்தக சமூகத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக அமையவிருப்பதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
இலங்கை முதலீட்டு சபையில் இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேராவும், டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜாவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
வீரசிங்கம் மண்டபத்தை அண்மித்ததாக கட்டப்பட்டு வரும் ‘டில்கோ ஜப்னா சிட்டி ஹோட்டேல்’ திறக்கப்பட்டதும் மேலும் உல்லாசப் பயணத்துறை சார்ந்த ஹோட்டல்களுக்கான முதலீடுகள் செய்யப்படவுள்ளன என்றும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
rajan S
கிழக்கு லண்டனில் அகதிகளின் பெயரில் உள்ளுராட்சி அமைப்புக்களின் பணங்களை திருடியே இந்தப் பணம் சேர்க்கப்பட்டது. தமிழ் அகதிகளுக்கு நாற்றம் எடுக்கும் வீடுகளையும் துப்ரவு செய்யாத அறைகளையம் அப்பாவி தமிழ் இளைஞர்களுக்கு வாடகைக்கு கொடுத்து அநீதியாக உழைக்கப்பட்ட பணத்தில் யாழ்ப்பாணத்தில் முதலீடு யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழன் இதையும் கவனத்தில் எடுக்கவும்.
சாந்தன்
ராஜன்.எஸ்,
அந்தத் தமிழனின் பெயர் என்ன?
பல்லி
பொட்டர் இதை வாசிப்பாரா??
HARI
ராஜன் குறிப்பிடும் நபர் லண்டனில் அடாவடித்தனம் புரிந்து பணம் சம்பாதித்தவர். இப்பொழுதும் வெளிநாட்டவரிடம் இருந்து நாகரீகமாக பணம் சம்பாதிக்கப் பார்க்கிறார் தாயகத்தில் வந்து இவரின் ஹோட்டலில் தங்கும் தமிழர்களிடம் கொள்ளை அடிக்காமல் இருந்தால் சரி. குறித்த நபரின் பெயரின் முதல் எழுத்து இரண்டும் தனது மனைவியின் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்த பெயரில் ஒரு ஹோட்டலை முன்னரே நாத்திவருகிறார். தேவையெனில் இன்னும் தகவல்கள் தரப்படும் .
thurai
தமிழர்களின் போராட்டத்தை பயன்படுத்தும், சுயநலவாதிகளே ஈழத்தமிழரின் துரோகிகள். இவர்களே தமிழரின் இன்றைய நிலைமைக்குக் காரணமென்பதை உலகிற்கு உணரவைக்க வேண்டும்.
துரை
lamba
இவ்வளவு காலமும் வெளிநாட்டுத் தமிழரை சுரண்டித்தான் உழைத்தாங்கள். இப்ப இலங்கையில் வதியும் தமிழரை சுரண்டி காசு சேர்க்கப் போகிறாங்கள்.