கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் யாழில் ஹொட்டல் கட்ட ஒப்பந்தம்

Tilko_Property_Servicesகிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலக் என்று அறியப்பட்ட திலகராஜா தவராஜா யாழ் நகரின் மையப்பகுதியில் 340 பேர்ச் நிலத்தில் ஹொட்டல் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார். Board of Investment – BOI of Sri lanka  திலகராஜா தவராஜா முகாமைத்துவ இயக்குனராக உள்ள Tilko Jaffna City Hotels (Private) Limitedக்கு அந்த அனுமதியை வழங்கி உள்ளது.BOI யின் சார்பில் அதன் தலைவர் தமிக்க பெரேரா கையொப்பமிட்டு அதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கி உள்ளார். திலகராஜா தவராஜா கிழக்கு லண்டனில் உள்ள ரில்கோ புரப்பட்டி சேர்வீஸ், பிரியா உணவகம் ஆகியவற்றின் உரைமையாளர். 

திலகராஜா தவராஜா கிழக்கு லண்டனில் எஸ்டேட் ஏஜென்ட்களை நிறுவி தனது வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் வட மாகாணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வேளையிலேயே முதலீடுகளை ஆரம்பித்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு குறிப்பிடத்தக்க நிதிப் பங்களிப்பை வழங்குபவர்கள் அவர்களுடைய நிதிப் பங்களிப்பிற்கு ஏற்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்து அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் திலகராஜா தவராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புகைப்படமும் எடுத்துக் கொண்டவர். ‘அப்படத்தை தனது பொக்கற்றினுள் வைத்து சுற்றத்தவர்களுக்குக் காட்டுவதில் பெருமைப்பட்டுக் கொண்டவர்’ என அப்படத்தை பார்த்த அவருடைய நண்பர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

யாழ் நகரத்தின் மையத்தில் அமையவிருக்கும் இந்த உல்லாசவிடுதி 33 அறைகளையும் இரு கொட்டேஜ்களையும் கொண்டிருக்கும் என்றும் உல்லாசப் பயணிகளுக்கு சொகுசான தங்குமிடத்தை வழங்கும் என்றும் திலகராஜா தவராஜா தெரிவித்துள்ளார். இந்த உல்லாச விடுதியில் உணவகம், உடற்பயிற்சிக்கான இடம், மாநாடுகளை மேற்கொள்வதற்கான இடம் என்பனவும் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சொகுசான தங்குமிடங்களுக்கு பற்றாக்குறையுள்ள நிலையில் இந்த உல்லாச விடுதி பெரும்பாலும் வர்த்தக சமூகத்தையும் உல்லாசப் பயணிகளையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் கருத்தில் வைத்து அமைக்கப்படுவதாக திலகராஜா தவராஜா தெரிவித்துள்ளார்.

Tilko_Property_Servicesதமிழீழ விடுதலைப் புலிகளுடனான முதலீட்டில் ஆணிவேர் படத்திற்கான முதலிட்டையும் திலகராஜா தவராஜா செய்திருந்ததாகவும் ஆனால் அதில் அவரது நிறுவனப் பெயரைப் போட தமிழீழ விடுதலைப் புவிகள் விரும்பியிருக்கவில்லை என்றும் தெரியவருகிறது. அதேசமயம் மற்றுமொரு படத்தில் தயாரிப்பாளராக இவரது நிறுவனத்தை போடுவதற்கு சம்மதித்ததாகவும் அப்படம் பூர்த்தியாக முன்னரேயே தமிழீழ விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலைச் சந்தித்ததாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உல்லாச விடுதியின் நிர்மாண வேலைகள் 2010 பெப்ரவரியில் திறந்த வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு கிழக்கில் முதலீடுகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திலகராஜா தவராஜா முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • Murukan
    Murukan

    வியாபாரிகளுக்கு செக்கென்ன சிவனென்ன. இவர் புலிகளிடம் துப்பாக்கி சுட்டு பழகி எடுத்த போட்டோவும் இருக்கிறது.

    Reply
  • Eastham
    Eastham

    தம்பி இன்னமும் மற்றவர்களுக்க துரோகி சொல்லி முடியவில்லை. அண்ணர் திலக் 6 மாதத்துக்குள் மகிந்தாவின் சால்வையில் தொங்கிறார். யாழ்ப்பாணத்து பொருட்களை பகிஸ்கரிக்க தம்பி கூட்டங்களில் சத்தம்போடுகிறார் சண்டித்தனம் காட்டுகிறார் இவர் அண்ணர் திலகரை துரோகி என்று சொல்லிப்போட்டு தம்பி இப்படி சொல்வதானால் சரி.

    Reply
  • பல்லி
    பல்லி

    நல்லெண்னத்துடன் இதை அவர் செய்தால் வரவேற்க்கலாம்; ஆனால் இதை ஒரு வியாபார உத்தியாக செய்ய வேண்டாமே, இருப்பினும் பலருக்கு சிறிது காலமாவது வேலை வாய்ப்பு கிடைக்குமல்லவா, அதுவே பல்லிக்கு தெரிகிறது;

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    பல்லியின் கருத்தைப் பர்க்கும் போது நான் கருத்து சொல்லுவதையே விட்டுவிடுகிறேன்!.இது இராணுவ வாகனங்களுக்கும் கண்ணிவெடி வைத்துக் கொண்டு,இராணுவ(இலங்கை)ஹெலிகாப்டரிலும் பயணம் செய்த அதிபுத்திசாலிகளின் ஐடியா!.இத்தகைய வித்தியாசமான வேலைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று “உலகப் பொது நோக்கம்” உருவானதை நியாயப் படுத்த முடிகிறது!.இந்தியா சுத்ந்திரம் அடைந்தவுடன்,காலனித்துவ ஆட்சியில் கொள்ளை அடித்தவர்கள் தொடர்ந்தும் சுதந்திர இந்தியாவில் கொள்ளை(போலைபிடித்து)அடிக்கக் கூடாது என்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் எண்ணியே,பிஅச்சனையை சாதாரண் மக்களிடம் எடுத்துச் செல்ல,”திராவிட இயக்கங்களில்” குதித்தார்கள்,திராவிட நாட்டு கோரிக்கையில் உயிரையும் விட்டார்கள்.அண்ணா கோரிக்கையை கைவிட்ட பிறகு,கலைஞர் கருணாநிதி போன்றவர்கள்,அந்த தியாகிகளின் ஆதரவைப் பெறமுடிந்தது,ஆனால் இந்த நீண்ட நெடுங்காலத்தில்,”அவருடைய யதார்த்தத்தில்” பல தொழிலதிபர்களை வளர்த்துவிட்டு தன்னுடைய குடும்பத்தையும் பெரிய தொழிலதிபர்களாக்கி விட்டார்.ஆனால் திராவிட நாட்டுக்கான காரணப் பிரச்சனையை எள்ளலவேனும் தொடவில்லை!.இலங்கைத் தமிழருடன் ஒப்பிடும் போது டாக்டர் கலைஞர் அவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.இவ்வளவு அடிக்கும் பிறகும்,அடிப்படை அரசியல் பிரச்சனையை தொட ஒருவருக்கும் மனமில்லை!.இந்தியாவில் பொருளாதார ஆறு ஓடுகிறது அள்ளிக் குடிக்கலாம்.ஆனால் இலங்கைத் தமிழ்ப் பகுதியில் அடிப்படைக் கட்டுமானங்கள் சிதைவுற்ற நிலையில்,மகிந்த ராஜபக்சே அரசுக்கு பல முதலீடுகள் தேவைப் படுகிறது.அதை அளிப்பதைக் கண்டு மகிழ்ச்சிதான்,ஆனால்,ஹோட்டல் அடிப்படைக் கட்டுமான வசதி அல்ல.இவர்களின் நோக்கங்களை பாசிட்டிவாக கணிப்பதற்கு எனக்கு சிறிது காலம் பிடிக்கும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /The Palestinian issue seems to have disappeared from television screens around the world and receded from the consciousness of the international community, lending substance to the view that the only way to ensure attention to a cause is to cause mayhem and violence. Afghanistan hogs all the publicity and concentrated focus of governments, and for very good reason. But it ought to be kept in mind that a key argument of terrorists is the denial of justice to the Palestinian people. If the world is serious about peace, about tackling terrorism,/–http://beta.thehindu.com/opinion/lead/article62791.ece?homepage=true—-நான் சொல்ல வருவது இதுதான்!,வருங்காலத்தில்,”பாலஸ்தீனியர்கள் நிலையில்” ஒட்டு மொத்த தமிழர்களையும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது வல்லரசுகள்!.இதை உலக ஒழுங்கு, ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப் படப்போகிறது!.”ஆப்பாகிஸ்த்தான்தான் வருங்கால விளையாட்டுத் தளம்”,அதனுடன் தொடர்புபட்டே தமிழர் பிரச்சனை இருக்கிறது!.”இந்தப் போக்கை ஆதரிப்பதே” “சொகுசு போர்க் கப்பலில்” பயணம் செய்பவர்கள்!(தமிழர்கள்).

    Reply
  • sivam
    sivam

    இந்த மூலதன விடயம் ஒரு ஆரம்பம் மட்டுமே. இதன் பிரயோசனம், பிரயோசனம் இன்மை தொடர்பாக நிறைய மாறுபட்ட கருத்து சொல்லலாம். எனினும் இந்த மூலதனத்தை அரசு அனுமதித்தது முதலாளித்துவ அரசியலின் ஒரு முக்கியமான நடை முறையினை சுட்டி காட்டுகின்றது. அது அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை, நிரந்தரமான பகைவர்களும் இல்லை என்பதாகும். புலியின் அதரவாளர்கள் தனிய மூலதனத்துடன் நின்று விடப்போவதில்லை. அரசியல் அதிகாரத்தையும் நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். அதுவும் மகிந்த சகோதரர்களின் அனுசரணையுடன்.

    தற்போது மகிந்தவின் சால்வையில் தொங்கிக்கொண்டு புலியின் வாலை தேடும் பிரமுகர்கள் புதிய புலிகளுடனும் சில வேளைகளில் ஒரு புதிய ஜனாதிபதியுடனும் அரசியல் செய்தால் ஆச்சரியபட முடியாது

    Reply
  • london boy
    london boy

    இந்த தில்கோ புறப்பட்டி எப்படி லண்டனில் காசு உழைத்தவர்கள் என்பதை இங்கே சுருக்கமாக:

    ஆரம்பகாலங்களில் (TRAG) என்ற வரதகுமார் மற்றும் சிலரால் நடாத்தப்பட்ட வீட்டு உதவித்திட்டத்தினால் அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்க்கு வீடுகள் எடுத்து கொடுக்கும் அமைப்பு இருந்தது. இந்த அமைப்பு இப்படி வீடுகளை எடுத்து கொடுத்துவிட்டு இந்த அகதிகளின் பெயரில் அந்த அகதிகளின் கையெப்பத்துடன் தான் housing benefitவை எடுக்கும்.
    இந்த அமைப்புக்கு திலகர் தான் பட்டப்படிப்பு படித்துவிட்டு (no hond degree) பின்னர் வேலையில்லாமல் இருந்தபோது இந்த அமைப்பின் வீடுகளை திருத்தும் வேலைகளை பார்த்துவந்த திலகர் தானும் இப்படி வீடகளை எடுத்து கொடுத்து (அகதிகளுக்கு உதவி)TRAG எடுப்பது போல் தானும் housing benefitஜ எடுக்கலாம் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் தில்கோ புறப்பட்டி நிறுவனம். எடுத்ததிற்கு எல்லாம் அகதிகளுக்கு உதவுகிறோம் என்ற வசனம் இவர்களது வாயில் பறக்கும் இந்த நிறுவனம் பலகாலமாக தமிழ் அகதிகளுக்கு இந்த பாரிய உதவி என்ற பெயரில் அந்த அகதிகளின் பெயரால் அரசாங்கத்திடம் உதவித்தொகையை பெற்றுத்தான் வளர்ந்தது (எப்படி இந்த சட்டத்தரணிகள் வளர்ந்தார்களோ அகதிகளின் பெயரால்)

    இந்த தில்கோ புறப்பட்டி நிறுவனம்பற்றி நியூகாம் வால்த்தம்போறஸ்ட் கவுன்சில்களில் பரபரபான செய்திகள் ஒருகாலத்தில் பறக்கும் காரணம் வாடைகைக்க கொடுத்த வீட்டில் யாரும் இல்லாமலே அவர்கள் வேறு நாட்டிக்கு போய்விட்டாலும் அந்த வீடுகள் அறைகளுக்கான வாடகைகளை அந்த பிரதேச கவுன்சிலிடம் களவு எடுத்தே வந்துள்ளனர். இதனால் பல கவுன்சில்களில் கவுன்சில் கூட்டங்களில் இந்த தில்கோ நிறுவனம் பற்றிய பேச்சு பதியப்பட்டுள்ளதை அந்த கவுன்சில்களிடம் பெறலாம்.

    அகதிகளாக வந்த தமிழரின் பெயரால் செய்யப்படட சுத்துமாத்துக்களும் அந்த அகதிகளுக்கு இவர்களால் கொடுக்கப்பட்ட வேதனைகளும் விரைவில் ஒரு அகதியினால் வெளியிடபடவுள்ளது கனிக்கத்தக்கது. இவர்களால் வேதனையுற்ற குடும்பங்கள் இஙைர்கள் புலிகளின் வேதனைக்குட்ப்பட்ட சாதாரணமானவர்களடன் இதையும் ஒப்பிடக்கூடியது.

    இவர்களால் வழங்கப்பட்ட வீடுகிள் பல தண்ணீர்வசதிகள் இல்லாமலும் மின்சாரம் இல்லாமலும், ஒழுங்கான நில அமைப்புக்கள் இல்லாமலும் இருந்த அல்லோலகல்லோப்பட்ட தமிழ் அகதிகள் பலர். ஆனால் இந்த தில்கோ நிறுவனம் இவர்களின் பெயரில் தான் பணத்தை கறந்து கொண்டிருக்கும் தில்கோவின் இரண்டாவது அலவலகம் வொல்தம்ஸ்ரோ போறஸ்ட் ரோட்டிலிருந்து வால்த்தம்ஸ்ரோ மத்திக்கு மாற்றம்பெறும் போது இன்னுமொரு கிளை நியூகாமில் திறக்கப்படும்போது தான் இந்த தம்பி ரகு தில்கோவினுள் கால் அடி எடுத்துவைக்கிறார் இதன் பின்னர் ஆற்றில் ஓடுது அண்ணை குடி தம்பி குடி என்ற கணக்கில் எல்லா சுத்தமாத்துக்களும் நடந்தேறியது. தில்கோ நிறுவனத்தில் இந்த காலத்தின் பின்னர் தில்கோ ஆள்வைத்து அடித்த நிகழ்வுகள் பலவும் நடந்தேறியுள்ளது கவனிக்கத்தக்கது.

    இந்த காலத்தில் திலகர் தனது 14 சொந்த வீடுகளின் அதிபதியிலிருந்து 40 வீடுகளின் அதிபதியானார். இததான் தில்கோவின் கதையும் அவர்கள் தமிழ் அகதிகளை மையமாக கொண்டு அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் களவாடிய பிர்தானிய உழைக்கும் மக்களின் பணம்.

    இவர்களால் வழக்கு தொடரப்பட்டு அகதிகளுக்கு கொடுத்த தொந்தரவுகளும் இதன் காரணமாக ஏற்ப்பட்ட திருமண உறவுகள் முறிவும் மனவியாதி கொண்ட பலரும் இன்றும் கிழக்கு லண்டனில் நடைப்பிணமாக உலாவிவருகின்றனர்.

    இதே காலப்பகுதியில் புலிகளின் ஆதவாளர்கள் என கூறிக்கொண்ட இன்னுமொரு சபேசன் யோகா போன்றோர்களாலும் ஒரு சமூக நலத்திட்டம் என்ற சுத்தமாத்து அமைப்பு ஆரம்பித்து பொதுப்பணத்தை சுருட்டிக் கொண்டவர்களையும் இங்கு நினைவு கூரத்தக்கது. இவர்களும் அகதிகளின் பெயரால் அகதிகளுக்கம் தமிழர் போராட்டத்திற்கும் உதவுகிறோம் எனறே அகதிகளின் பணத்தைணும் நிம்மதியையும் கெடுத்தனர் இவர்களும் அகதிகளாக இருந்தவ்ரகளுகளுடன் பலதடவைகள் கைகலப்பு நடத்தியவர்கள் என்பதம் குறிப்பிடத்தக்கது.

    மேற்கூறியவர்கள் தில்கோ புலிகளின் வாலை பிடித்து தொங்குவதை அவதானித்ததும் தாமம் தொங்க ஆரம்பித்தனர். இதன் ஒரு படியே தில்கோ வன்னிபோய் ஆயுதங்களை கையில் எடுத்து படம் பிடித்து வந்து காட்டித் திரிந்தனர் இந்தக்காலம் எத்தனை பெர் இப்படி படங்களை காட்டினர்.

    பின்னர் தம்பி ரகுவும் வணங்காமண் வரை புலிகளுக்கு பின்னால் தமது வியாபாரங்களை நடாத்திவிட்டு இன்றும் மற்றவர்களுக்கு துரோகிப்பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

    இவர்களின் மிக நெருங்கிய உறவினரே ஒபரேய் தேவன் என்ற போராளி இவர் புலிகளால் ஈவு இரக்கமின்றி கொலை செய்ப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவர்கள் தான் இன்று இந்த பணங்களையும் கொண்டு தமிழர்களுக்கு உதவி செய்ய(?) வடக்கு கிழக்கு வருகிறார்கள் என்பதை மிக அவதானமாக குறித்துக்கொள்ள விரும்புகிறோம்.

    இவர்களின் நோக்கம் மக்கள் அல்ல!! தமது பணம்!! பண உழைப்பு!! தம்பி எஸ்சைல்! தமிழீழம் அண்ணர் மகிந்தாவுடன் கூட்டிணைவு! இருவரும் சொல்கிறார்கள் தமிழ் மக்களுக்கே உதவி செய்கிறோம் என்று.

    Reply
  • பல்லி
    பல்லி

    //பல்லியின் கருத்தைப் பர்க்கும் போது நான் கருத்து சொல்லுவதையே விட்டுவிடுகிறேன்!.//DEMOCRACY
    அந்தளவுக்கு மோசமாகவா உள்ளது;

    //ஹோட்டல் அடிப்படைக் கட்டுமான வசதி அல்ல//
    நானும் அப்படி சொல்லவில்லை; ஆனால் அந்த தங்குவிடுதி கட்டபடும் போது லண்டனில் இருந்தோ அல்லது கொளும்பில் இருந்தோ கூலி ஆத்கள் போக போவதில்லை, அதனால் சில காலத்துக்காவது சிலருக்காவது வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு; மகிந்தாவுக்கு கோவிலோ அல்லது சேகராவுக்கு சிலை கட்டினால் எனது கருத்து வேறாக இருக்கும்; கட்டுமானத்தை பற்றி உங்கள் சிந்தனை கேக்க நல்லாய் இருக்கு, ஆனால் கட்டிக்க மாற்று துணீல்லாதவர்களுக்கு இந்த கட்டுமானங்கள் உடன் உதவ முடியாது; வர்த்தகர் பலரது பணம் பல தவறான வழியில்தான் வருகிறது; அது இங்கு பிரச்சனை இல்லை; அதேபோல் தம்பியின் பணம் அண்ணன் மூலமாக போகுதானால் அதை காலபோக்கில் பொதுவுடமை ஆக்க வேண்டியதுதான்.

    //இவர்களின் நோக்கங்களை பாசிட்டிவாக கணிப்பதற்கு எனக்கு சிறிது காலம் பிடிக்கும்.//
    பல்லி எங்கும் ஓடமாட்டேன் இங்கேதான் ஊர்வேன்; நீங்க ஆறுதலாய் வாங்கோ; ஆனால் சம்பந்தபட்ட அரசோ வர்த்தகரோ என்ன நிலைபாட்டில் இருப்பார்கள் என்பது பல்லிக்கு தெரியாது;

    Reply