தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய முடிவை இறுதிக் கட்டத்திலேயே அறிவிக்க உள்ளது. 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை. இறுதிக் கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதன் மூலம் ஆசனங்கள் வழங்கப்படாதவர்கள் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியில் இறங்கிவிடாமல் தடுக்கவே அக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இரகசியமாக வைத்திருப்பதாக தேசம்நெற்றுக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனங்கள் வழங்கப்பட மாட்டாது என அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்து இருந்தார். இச்செய்தி முதன்முறையாக பெப்ரவரி 10ல் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன் இதே தகவலை எம் கெ சிவாஜலிங்கமும் பெப்ரவரி 17ல் தி ஐலண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்து இருந்தார். http://www.island.lk/2010/02/17/news30.html
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் போட்டியிடுவது என்பது இறுதி நேரத்திலேயே வெளியிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேசி ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது கடினமாக்கப்படும் மேலும் சுயேட்சையாக நிற்பது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் கால அவகாசம் இருக்காது. இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்கால்’ கட்ட ஆர் சம்பந்தன் குழு தயாராகி வருவது தெரியவருகின்றது.
ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலகட்டத்தில் அவரினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானவர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக மாறிய போதும் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம்வகித்தார். ஜனாதிபதித் தேர்தலில் கூட ஆர் சம்பந்தனுக்காக எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வாக்களித்தவர்.
தற்போது ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’இல் முதல் களப்பலியாகி உள்ளார் தங்கேஸ்வரி கதிர்காமநாதன். அவரைத் தொடர்ந்து கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல) மற்றும் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, விநோதரலிங்கம் சுப்பிரமணியம் ஆகியோர் ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்கால்’ இல் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும் வெல்லப்படக் கூடிய ஆசனங்கள் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
தங்கேஸ்வரி கதிர்காமநாதன் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்படவுள்ள மற்றுமொருவர் பத்மினி சிதம்பரநாதன். பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் மறுக்கப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பெண் வேட்பாளர்கள் யாரும் இருக்கின்றார்களா என்பது சந்தேகமே.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் வெல்லப்படக் கூடிய தொகுதிகளில் நிறுத்தப்படுவார்கள் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்து உள்ளார். எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விக்கிரமபாகு கருணாரட்னவின் என்எஸ்எஸ்பி கட்சியில் போட்டியிடுவது பற்றி பேசிவருகின்றனர்.
இவை ஒருபுறமிருக்க முன்னால் ஈபிடிபி உறுப்பினரும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனின் ஆலோசகருமான கலாநிதி விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளதாகத் தெரியவருகின்றது. கலாநிதி விக்கினேஸ்வரன் ஆர் சம்பந்தனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய மற்றுமொருவர் ஓய்வுபெற்ற நீதிபதி விக்கினேஸ்வரன் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஆதரித்தவர். இவரது கருத்துக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலம் சேர்த்து இருந்தது.
கடந்த தேர்தல் போலல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை பலவீனமான நிலையில் எதிர்கொள்ள உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கின்ற சக்திகள் இல்லாத காரணத்தினால் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக அரசியல் இப்பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
Sampanthan
TNA shouldn’t fail representing hearts of Tamils: Fr. Emmanuel
[TamilNet, Thursday, 18 February 2010, 13:26 GMT]
At a time when Colombo and its collaborators try their best to erase out the national aspirations of Tamils, the Tamil National Alliance has the noble responsibility to maintain its unity in being the true voice and champions of Tamil aspirations, says Rev. Prof. Dr. S.J. Emmanuel, the former Vicar General of the Catholic diocese of Jaffna in an open letter addressed to TNA leaders Sampanthan, Mavai Senathirajah, Suresh Premachandran, Selvam Adaikalanathan and Gajendrakumar Ponnampalam. Eezham Tamils have been consistent in expressing their genuine desire for independence ever since 1976 and even now it remains the underlying goal despite constitutional sanction on speaking it out openly in the island of Sri Lanka. But, their kith and kin in the free diaspora have voiced on their behalf, overwhelmingly re-confirming that desire as the standing-aspiration, he said in the appeal.
Full text of the open letter follows:
An open appeal to the leaders of the Tamil National Alliance
Mr. R.Sambanthan
Mr. Mavai Senathirajah
Mr. Suresh Premachandran
Mr. Selvam Adaikalanathan
Mr. Gajendrakumar Ponnambalam
Rev. Fr. S. J. EmmanuelAs a Tamil catholic priest, journeying with the Tamil people on their long journey of liberation, I feel it necessary to make a humble appeal to you at this hour to preserve the unity and strength of your political leadership vis a vis the ethnic majoritarian state and its government.
We are all aware of the efforts made some ten years ago by politicians and journalists from the Eastern Province, to form the TNA in order to keep the Tamil votes solidly behind one Tamil political party. You formed the TNA and won two Parliamentary Elections, the latter a more successful victory with the help of the LTTE.
In spite of many difficulties and even rejections by the Sinhala governments, you all kept your unity with the Tamil people and their LTTE leadership.
After the tragic events of 2009 to wipe out people and leaders from Vanni, you faced the Presidential Election asking the people to vote for a change of government. Though the Tamils were not much interested in the choice between two war criminals, those who voted did only for a change of government. Unfortunately that did not happen.
At present the Sinhala majority and their leaders are fighting among themselves as to who should be the saviour of good governance, human rights, democracy and so on.
We know out of our own long experience, that the Sinhala Buddhist Majoritarian Democracy (SBMD), is unwilling and incapable to understand the genuine grievances and basic human rights of the Tamil people. On the other hand with the 6th Amendment, neither you nor the Tamil people in Sri Lanka can speak openly the genuine desire of the Tamil people for a separate state of Tamil Eelam. This genuine desire as expressed in the Vaddukkoddai Resolution of 1976, affirmed by the Tamils at the Parliamentary Elections of 1977, strengthened by the heroic sacrifices of the people and the militants under the leadership of the LTTE still remain the underlying goal of all the Tamils, even though those within the island are unable to stand up for it.
Hence the Diaspora Tamils, the kith and kin of those in Sri Lanka, having the freedom to speak up, have overwhelmingly re-confirmed that desire as the standing-aspiration of the Tamils.
At this critical moment when you are reorganising your Alliance in preparation for the general election and selecting naming candidates on behalf of the TNA, my humble appeal to you all is not to weaken in any way the standing aspiration of all the Tamils.
At a time when strong attempts are made by the government and their Tamil-collaborators under cover of ‘development’ to divide the Tamils and make them give up their long standing desire to be liberated and free as a dignified people on their homeland, you have the noble responsibility to be the true voice and champions of their aspirations.
I am confident that virtue and wisdom will prevail over profitable strategies to win elections.
indiani
சம்பந்தரின் அராஜகத்தில் மீண்டும் தமிழரசு அரசியல்:
கூட்டணியிலும் சரி தமிழரசுக் கட்சியிலும் சரி சம்பந்தர் எப்போதும் தனது ஆதிக்கத்தில் எல்லாவற்றையும் வைத்திருக்க வேண்டும் என்ற அராஜக போக்கு கொண்டே செயற்பட்டுள்ளார்.
சம்பந்தர் கூட்டணியில் தலைமைப்பதவி நீலன் திருச்செல்வத்திற்கு பதவி கொடுக்கப்படும் போதும் அதை தனக்கு தர வேண்டும் என மதுபோதையில் சண்டைபிடித்தவர் பின்னர் மரியாதை கொண்டவர்கள் சம்பந்தருக்கு இதை விட்டுக்கொடுத்தனர்.
1994ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும்போது தங்கத்துரைக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஆனாலும் தங்கத்துரை தனக்கு அந்தப் பதவியை விட்டுத்தர வேண்டும் என்று பதவிப்பேராசை பிடித்து தங்கக்துரை மீது பாய்ந்த விழுந்தவர் எனவும் பேசப்பட்டது. பின்னர் தனது புலி ஆதரவு அல்லது புலி உறுப்பினர்களின் உதவியுடன் தங்கத்துரை மீது தேவையில்லாத பழிசுமத்தல்களை எல்லாம் முன்னெடுத்தவர் என்றும் அன்று பேசப்பட்டது. பின்னர் புலிகளின் கரும்புலிகள் தினத்தன்று ஏதோ விழா எடுத்துவிட்டார் என்பதற்காக புலிகள் தங்கத்துரையை கொலை செய்தனர். அன்று பல பாடசாலைக் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இந்தக்காலத்தில் புலிகளின் முக்கிய தலைவராக இருந்த சொர்ணம் சம்பந்தரின் உறவினர் என்பதும் சம்பந்தருடன் நெருங்கிய உறவுடன் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீலன் திருச்செல்வத்தின் கொலைகள் சம்பந்தமாகவுவம் பல ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது.
சம்பந்தரின் பதவி வெறியும் ஆதிக்க வெறியையும் சந்திரிகா காலத்தில் கூட்டணி வாசு தேவ நாணயக்காரவிற்கு ஆதரவு அளிக்க முற்பட்டபோதும் பெரிய குழப்படிகளை செய்து தனக்கு வேண்டியதை செயற்ப்படுத்தினார்.
இதே போன்று சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு அளிப்பது பற்றிய உடன்பாடு எட்டாத போதும் தான் ரிஎன்ஏ யை விட்டு வெளியேறி விடுவதாக கூறியே மிரட்டினார். இவர் போன்ற பதவி வெறியும் பேராசையும் கொண்டவர் கூட்டணி வரலாற்றில் யாருமாக இருந்ததில்லை என கூட்டணி ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
அது மட்டுமல்ல தமிழரசு காங்கிரஸ் இணைந்தே இந்த தமிழர் விடுதலைக் கூட்டணி உருவானது. இன்று சம்பந்தர் மீண்டும் தமிழரசுக்கட்சிக்கு உயிர்ப்பூட்டுகிறார். சம்பந்தருக்கு பித்தம் தலைக்கேறி விட்டதாகவே பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
புலிகளினால் உருவாக்கப்பட்ட ரிஎன்ஏயில் புலிகளினால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை தூக்கியெறிந்து என்னத்தை நிலைநாட்ட முயல்கிறார் சம்பந்தர். புலிகளின் உறுப்பினர்களின் அரசியலை மக்கள் தான் தூக்கி எறிய வேண்டுமே தவிர சம்பந்தர் ஆதிக்க வெறியினால் அல்ல இவர்களின் உறுப்புரிமையை தூக்கி எறியும் சம்பந்தருக்கு அரசியல் பாடம் புகட்ட வேண்டும் என பல அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்த சம்பந்தரும் மாவை சேனாதிராசாவும் தமிழரசுக்கட்சியில் இருந்தே கூட்டணிக்கு வந்தவர்கள் இன்று மீண்டும் இந்த தமிழரசு என்ற செத்துப்போன கட்சிக்கு உருக்கொடுப்பதன் உள்ளார்த்தம் என்ன? ஏன் ரிஎன் ஏ என்ற அமைப்பை பலம்பொருந்திய அமைப்பாக வளர்த்தெடுக்க முயற்ச்சிக்கவில்லை. சம்பந்தரின் முட்டாள்த்தனமான சாணக்கியம் தமிழருக்கு உதவாது என்பது தெளிவாகிறது.
சங்கரியின் கடிதத்தில் குறிப்பிடப்படும் உள்ளார்த்தமான விடயமே இந்த சம்பந்தரின் பதவி வெறிதான் என்பதை பலரும் புரிந்திருப்பார்கள். எல்லாம் சம்பந்தரின் சுயநல பதவி வெறியே தான் காரணம் மக்கள் பதில் அளிப்பார்கள்
rohan
“இவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும் வெல்லப்படக் கூடிய ஆசனங்கள் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.”// ஜெயபாலன்.
வெல்ல முடியாத ஆசனம் என்று ஜெயபாலன் எதைச் சொல்கிறார்? பட்டியலில் பின்னால் போட்டாலும், அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களை நாடாளுமன்றம் அனுப்புவது தான் வழமை, இல்லையா?
திருமலையில் தன்னையோ துரைரெட்னசிங்கத்தையோ பின் தள்ளி சிறிகாந்தா வென்றுவிடுவாரோ என்ற பயத்தில் சம்பந்தர் செய்த manipulation தில்லுமுல்லுகளை திருமலையில் இருந்தோர் அறிவர்.
Jeyabalan T
//வெல்ல முடியாத ஆசனம் என்று ஜெயபாலன் எதைச் சொல்கிறார்?// றோகான்
ஆங்கலத்தில் சேவ் சீற் என்று குறிப்பிடுவார்கள். அப்படியான தொகுதியில் குறிப்பிட்ட கட்சி நிச்சயம் வெற்றி பெறும். அத்தொகுதி அக்கட்சியின் செல்வாக்குள்ள தொகுதியாக இருக்கும். அதனையே வெல்லக் கூடிய ஆசனம் என்றும் ஏனையவற்றை வெல்லமுடியாத ஆசனம் என்றும் குறிப்பிட்டு இருந்தேன். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் ரிஎன்ஏ இன் செல்வாக்கு அதிகம் உள்ளது. ஆனால் மட்டக்களப்பில் அம்பாறையில் அவ்வாறில்லை.
shaminie
Sri Kantha has no wider voters base as sampanthan. Sampanthan has been serving for people for a long time where as Sri Kantha is a just a TELO man and lawyer. Moreover Sri Kantha is originally from Karainagar Jaffna.
LTTE nominated people are just commisars. Therefore Sampanthar’s decision of sidelining them is a correct decision. If the LTTE nominated people want to prove their electability they can contest under the name of “LTTE leftovers” party and prove the world that they can be elected. These parasites have been rejected by people already.
gobi
புலிகளின் ஆதரவாளர்கள் இந்த தேர்தலில் தமது புலிகள் இயக்கத்தின் கடந்த வன்னி யுத்தத்தின் அனுபவங்களை மறந்தே தேர்தலில் நிற்க முன்னிற்கிறார்கள் அதைவிட எல்லா அமைப்புக்களும் கட்சிகளும் மற்றய இயக்கங்களும் இந்தக்காலத்திலும் புலிகளை ஓரம்கட்டுவதே சரியானது புலிகள் போன்ற ஒரு பாசிச அமைப்பையும் பாசிச மனம் கொண்டவர்களையம் சமூகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும்.
எது எப்படியோ அங்குள்ள ஜனநாயகம் தேர்தல் மூலம் மக்களை தெரிவு செய்வதே இந்தப் புலிகள் தமது கடந்தகால தவறுகளுக்கு விமர்சனம் மன்னிப்பு தமிழ் முஸ்லீம் மக்களிடம் கேட்காமல் புலிகளின் போராட்டம் ஏதோ தோற்றுப் போய்விட்டது நாம் மீண்டும் வருகிறோம் மக்களுக்கு சேவை செய்ய என்ற நிலைமைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
rohan
“அத்தொகுதி அக்கட்சியின் செல்வாக்குள்ள தொகுதியாக இருக்கும். அதனையே வெல்லக் கூடிய ஆசனம் என்றும் ஏனையவற்றை வெல்லமுடியாத ஆசனம் என்றும் குறிப்பிட்டு இருந்தேன். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் ரிஎனே இன் செல்வாக்கு அதிகம் உள்ளது.” // ஜெயபாலன்.
ஆனால், இந்தத் தேர்தல் தனித் தனித் தொகுதி வாரியானது அல்லவே?
Ajith
LTTE is the only organisation that stood firmly with the tamils aspirations. It was accepted by tamils as their sole representatives. Still no change in that verdict. Unlike other opportunistic organisations they sacrificed their lives for the liberation of the nation. TNF should understand that and if they make a decision against tamils wish, people will decide their fate very soon. TNF should understand what message people sent during the Municipal and Presidential elections. Majority of tamils rejected both elections. They did not accept that these elections are not that want and rejected Sri Lanka as their nation. On the presidential election they sent a message
1. to those alligned to Rajapkase: Rajpakse was responsible for the genocide of tamils and concentration camps.
2.to TNF: we don’t like Fonseka as well but we are ready to corprate with you to get did of Rajapakse.
TNF should understand that either Rajapakse or Ranil will give tamils rights of self determination. India might use tamils as a mean to control Sri Lanka but never allow Sri Lanka to solve the issue even if Sri Lanka wishes becuase only neighbour that can still under their control is Sri Lanka.
It is true that TNF should take some tactical move depending on the ground reality but that should not at the expense of the fundamental issues and principles. Tamils need unity. Rajapakse is very tactful in creating divisions and he is successful. His trump guard is money and power. If he feels to take anyone’s life, he will not hesitate to do that. It is true that it is difficult to do politics under this regime but unity and solidarity is important and we should not give up.
பார்த்திபன்
இந்தத் தெரிவின் மூலம் சம்மந்தன் மகிந்த அரசிற்கும் உலகிற்கும் இன்ன இன்னார் தான் நேரடி புலி விசுவாசிகள் என்பதைச் சொல்லி, தம்மை ஏதோ நடுநிலையாளர்கள் போல் காட்ட முயல்கின்றார். ஆனால் மக்கள் என்ற எசமானர்கள் தான், இவர்களுக்கு தாம் என்ன நினைத்துள்ளோம் என்ற உண்மையை, இந்தப் பொதுத் தேர்தலில் சரியான முடிவெடுத்துத் தெளிவாக்க வேண்டும்……….
rasaththi
இந்த விகிதாசார தேர்தலில் மட்டக்களப்பில் அமிர்தலிங்கம் யாழ்ப்பாணத்தில் சிவசிதம்பரம் எல்லாரும் தோற்றவர்களே! அவர்களுடைய கட்சி அதுவும் உதயசூரியன் சின்னத்தில் கேட்டபோதும். ஜெயபாலனின் வெல்லக்கூடிய வெல்லமுடியாத ஆசனம் என்பது விளங்கவில்லைதான்.
Jeyarajah
சம்பந்தர் தேவை கருதி நன்றாக டயலக்கை மாற்றக்கூடியவர். இவர் இப்போ கண்டுபிடித்தது இரண்டு தந்திரங்கள் அதில் ஒன்று ஆரம்பித்த கொள்கைகளில் இருந்து விலகமாட்டோம். இரண்டாவது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு.
ஆரம்பித்த கொள்கைகளிலிருந்து விலகமாட்டோம் என்றவுடன் சம்பந்தரை கேலி செய்த இணையத்தளங்களும் அவரை தூக்கி தலையில் வைக்க தொடங்கி விட்டார்கள் இவர்கள் எப்பவும் திருந்தப் போவதில்லை.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று எல்லோரும் தெரிந்த விடயத்தை இந்த மா மனிதர் இன்று வந்து சொல்லுவது நல்ல வேடிக்கை.
என்னதான் சொன்னாலும் இம்முறையும் டக்ளஸ் வெத்திலையில் தான் நிற்பார் பிள்ளையானும் சில தொகுதிகளில் தனியாகவும் பல தொகுதிகளில் வெத்திலையில்தான் நிற்பார்கள் இந்த நிலைமைகளை வைத்து கூட்டமைப்பு தனது வாக்கு வேட்டையை ஆரம்பித்துள்ளது.
மகிந்தாவும் இதில் வென்று வருபவர்களுடன் தான் நட்புறவை தொடருவார். இன்றய நிலையில் தமிழ் மக்களுக்கு சரியான தலைமையில்லை என்பதை வெட்கப்படாமல் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதே நேரம் தமிழ் பேசும் மக்களும் சிங்கள கட்சிகள் என்று சொல்லி அவர்களுக்கு வாக்கு போடமாட்டார்கள் இதில் லாபம் அடையப்போவது கூட்டமைப்புத்தான்.