வவனியா தடுப்பு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் விடுதலைப் புலிகள் எதிர்வரும் 4ம் திகதி சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது சிறைச்சாலை மறுசிரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர, பிரதி அமைச்சர் விஜிதமுனி தலைமையில் வவனியா பம்பைமடு புனர்வாழ்வ நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக புனர்வாழ்வ ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வவனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த 500பேர் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைப்பக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட 180 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ள 500 முன்னாள் போராளிகளில் 17 தாய்மார், இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், சிறுவர்கள், உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் என பிரிகேடியர் சுதந்த ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
Related News:
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 738 தமிழ் கைதிகள் இந்தவாரம் விடுதலை