புதிய மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை திரைப்படக் கூட்டுத்தபானத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், திரைப்பட இயக்குனருமான கனகசபை தேவதாசனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவரின் மனைவி சுபத்திரா தேவதாசன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ( பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். ) அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இம்மாதம் 11 ஆம் திகதி முதல் எனது கணவன் தனது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யுத்தம் முடிவுற்று நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது. தாங்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளீர்கள். எனது இரு பிள்ளைகளுடன் எவரின் உதவிகளுமின்றி துன்பத்தை அனுபவித்து வருகின்றேன். எனது கணவனை பிணையிலாவது விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.தமிழ்மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனக் கூறும் தாங்கள் எதுவித விசாரணையுமின்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து அவர்களும் தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ இப்பதவியேற்பு காலத்தில் பொதுமன்னிப்பை வழங்கி அல்லது பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுள்ளார்.
Related News: