மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

Prof_Hoole_at_Thesam_Meeting_27Aug10பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல்  நேற்று நாடு திரும்பினார். 2006ல் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஹூல்  தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை அச்சுறுத்தலையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி இருந்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் நியோர் Rensselaer Polytechnic Institute இல் தன் தன் கற்பித்தலை மேற்கொண்டு இருந்த பேராசிரியர் செம்ரம்பர் 2 2010ல் மீண்டும் இலங்கை சென்றடைந்துள்ளார். நியூயோர்க்கில் இருந்து இலங்கை செல்வதற்கு முன்னதாக தேசம்நெற் அழைப்பில் லண்டன் வந்திருந்த பேராசிரியர் ஹூல் லண்டனில் இடம்பெற்ற கல்வியியல் சந்திப்புக்களில் கலந்துகொண்டிருந்தார். ஓகஸ்ட் 29 2010ல் இடம்பெற்ற சந்திப்பில் ‘வடக்கு – கிழக்கு (வடகிழக்கு) இல்/க்கான கல்வி’ என்ற தலைப்பில் 45 நிமிட பேருரையை வழங்கினார்.

Prof_Hoole_at_London_Meeting_29Aug10ஓகஸ்ட் 31 முதல் அவருடைய அமெரிக்க கல்வி நிறுவனத்தின் வேலையில் இருந்து நீங்கும் இவர் தான் பிறந்த தன்னை வளர்த்த மண்ணான யாழ்ப்பாணத்திற்கு தன் சேவையை வழங்க செல்வதாக தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார். சர்வதேச பல்கலைக்கழகங்களில் 17 ஆண்டுகள் பேராசிரியராக பணியை முடித்துக்கொண்டு இலங்கைப் பேரதனைப் பல்கலைக்கழகத்தில் தன் கற்பித்தலைத் தொடர்ந்த போதும் யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைய முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். மிகவும் முடிய இறுக்கமான  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் எப்போதும் தனக்கு வெளியே இருந்து வருபவர்களை உள்வாங்க முன்வருவதில்லை. கிணற்றுள் தவளையாகவே இந்நிர்வாகம் செயற்பட்டு வந்தது. பல்கலைக்கழக கணணியில் துறையை நிறுவி செயற்பட வைத்த பேராசிரியர் ஹூல்  யாழ் பல்கலைக்கழகத்தில் கணணியியல் துறைக்கு விண்ணப்பித்த போது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அவரது விண்ணப்பத்தை கவனத்தில் எடுக்கத் தவறியது. தற்போது மேற்படி துறைக்கு அவரை நியமிக்குமாறு நீதிமன்றம் ஆணை பிற்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பேராசிரியர் ஹூல்  இன்னும் சில தினங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணமாகின்றார்.

பேராசிரியர் ஹூல்  உடன் அவரது துணைவி துஸியந்தி ஹூல்  உம் மகன் யோவான் ஹூல்  உம் யாழ் செல்கின்றனர். துஸியந்தி ஹூல்  உம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்த போதும் அவரது விண்ணப்பமும் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் முதல் யோவான் ஹூல் யாழில் தன் இடைநிலைக் கல்வியைத் தொடர உள்ளார். பேராசிரியர் ஹூல் யாழ் திரும்புவதும் தனது கற்பித்தல் கடமையை தொடர முடிந்தால் இது பலருக்கும் முன்னுதாரணமாக அமையும். புலம்பெயர்நாடுகளில் கல்வியியல் செழிப்புடன் உள்ளவர்கள் தங்கள் ஆற்றலை தம் மக்களுடன் பகிந்துகொள்வதற்கு நல்லதொரு சந்தர்ப்பமாக இது அமையும்.

Sooriyasegaram_Mஇடதுசாரி சிந்தனையாளரும் கடந்த காலங்களில் தேசம்நெற் கூட்டங்களில் அறியப்பட்டவரும் ஆன சூரியசேகரம் தற்போது இலங்கை சென்று யாழ் மாநகரசபைக்கு ஆலோசகராக கடமையாற்றுகின்றார். கம்டன் கவுன்சிலின் பெரும்தெருக்கள் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தனது அனுபவங்களை ஆற்றலை யாழ் மாநகரசபையுடன் பகிர்ந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. மிகவும் அவசியமான ஒரு காலகட்டத்தில் பேராசிரியர் ஹூல்  யாழ் வருகிறார் எனத் தெரிவித்த சூரியசேகரம் பேராசிரியர் ஹூல்  போன்ற ஆளுமைகள் யாழ் கல்விச் சமூகத்திற்கு அவசியமானது எனத் தெரிவித்தார்.

அறிவுத் தேடலுடன் தம முன்னேற்றத்திற்கான தாகத்துடன் உள்ள தாயக மக்களுக்கு பேராசிரியர் ஹூல்  போன்று பல்துறை சார்ந்தவர்களும் தங்கள் சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் முன்வருவது லண்டனில் இடம்பெற்ற சந்திப்புக்களில் மிகவும் வரவேற்கப்பட்டது. இலங்கை செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் ஒரு தயக்கம் இருந்தாலும் லண்டனுக்கு வந்ததன் பின் கிடைத்த ஆதரவும் வாழ்த்துக்களும் தன்னை உற்சாகப்படுத்தியதாக லண்டனில் இருந்து விமானம் ஏறுவதற்கு முன் பேராசிரியர் ஹூல்  தெரிவித்தார்.

Prof_Hoole_Meeting_27Aug10தன்னிடம் பலரும் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்ததாகக் கூறிய பேராசிரியர் ஹூல்  தனது எல்லைக்குட்பட்ட விடயங்களை மட்டுமே தன்னால் மேற்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார்.

யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தருக்கான பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி இரு கட்டங்களினூடாக தெரிவு செய்யப்படுகின்றது. முதற்கட்டத்தில் பல்கலைக்கழக சபையில் உள்ள உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் University Grants Commission வழங்கப்படும். அடுத்து பல்கலைக்கழக கவுன்சிலால் தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்வார்.

2006ல் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ஹூல் தெரிவு செய்யப்பட்ட போதும் அவர் தனது கடமையைச் செய்வதில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு இழைத்த பல்வேறு அநியாயங்களின் பட்டியலில் கல்விச் சமூகத்தை சீரழித்தது குறிப்பிடக்கூடிய ஒன்று.

தற்போது யாழ் திரும்பும் பேராசிரியர் ஹூல் யாழ் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தருக்கான பதவிக்கு போட்டியிட உள்ளார். அவர் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் தற்போது பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் பேராசிரியர் ஹூல் உடைய வெளிப்படையான பேச்சும் நேர்மையான நடவடிக்கைகளும் அவரது தெரிவுக்கு எதிரானதாக அமையலாம் என்ற அச்சமும் கல்வியியலாளர்கள் மத்தியில் உள்ளது.

Thavarajah_Sபேராசிரியர் ஹூல் ஓகஸ்ட்30ல் ரிபிசி வானொலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் கல்வி நிலை தொடர்பாகவும் குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விநிலை தொடர்பாகவும் உரையாடினார். இக்கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் தவராஜா பேராசிரியர் ஹூல் 2006ல் தனது துணை வேந்தர் பணியை மேற்கொள்ள முடியாது போனது துரதிஸ்டமானது என்றும் அவர் தற்போது யாழ் திரும்பிச் செல்வது பாராட்டுக்கு உரியது என்றும் தெரிவித்தார். பேராசிரியர் ஹூல் உடைய தகமையுடன் இலங்கையில் யாரும் இல்லை எனத் தெரிவித்த எஸ் தவராஜா அவருடைய சேவைக்கான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

பேராசிரியர் ஹூல் கலந்துகொண்ட ஒவ்வொரு சந்திப்பும் அவர் யாழ் செல்ல எடுத்த முடிவை மனதார வாழ்த்துவதாகவும் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்திருந்தது. பேராசிரியர் ஹூல் அங்கு அதிசயம் எதையும் நிகழ்த்த முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு இது மாற்றத்திற்கான முதற்படியாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Comments

  • proffessor
    proffessor

    கூல் நேர்மையானவர் என்றுதான் இன்னாள் வரை நானும் எண்ணியிருந்தேன். எனது அமெரிக்காவில் உள்ள நண்பர் ஒருவர் கூறிய கதையை கேட்ட போது நேர்மையானவர்களை இனங்காண்பது எளிதான காரியமில்லை என்பதை உணர்ந்தேன். இதுதான் அந்த கதை. அமெரிக்காவில் வாழ்ந்துவரும் தமிழர் ஒருவர் நீண்டகாலமாகவே அமெரிக்காவில் செயற்படும் புலிகள் சார்பான எந்த அமைப்புகளிலும் செயற்பட்டதுமில்லை. தொடர்புபட்டதும் இல்லை என்பதை நான் அறிந்திருந்தேன். ஆனால் சென்ற வருடம் புலிகள் சார்பானவர்களால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த அரசில் (எனது இந்த நண்பர் வேறு புலி ஆதரவு நண்பரால் தொடர்பு கொள்ளப்பட்டார்) இணைந்து வேலை செய்யும்படி வேண்டப்பட்டதனால் இவரும் வேலைசெய்ய தொடங்கினார். குறித்த எனது நண்பர் கூலின் நண்பராகவும் இருந்தார்.

    எனது நண்பர் நாடு கடந்த அரசில் வேலை செய்வதை அறிந்துகொண்ட கூல் ஒரே ஒரு போன் அழைப்பின் மூலம் நண்பரை அச்சத்துக்குள்ளாக்கினார். அச்சுறுத்தினார் என்று தான் எனது நண்பர் கூறினார். கூல் அச்சுறுத்திய விடயம் இதுதான் ” உம்மை பற்றி FBI என்னிடம் வினாவினர்; நீர் இந்த நாடு கடந்த அரசில் செயற்படுவதால் உமக்கு பிரச்சனை வரப்போகிறது என்பதே ” அந்த மறைமுகமான கூலின் அச்சுறுத்தலாகும்.
    இவரது உளப்பூர்வமான நேர்மையை தேவைப்பட்டால் ஜெயபாலன் கேட்டுப்பார்த்து ஒரு பதிவைக் கொண்டுவரவும். இதுக்கு கூலும் எனது நண்பரும் மட்டும் தான் சாட்சி. FBI கேட்டதா என்பதற்கு ஆதாரம் முன்வைக்க முடிந்தால் கூல் நேர்மையானவர் எனக்கொள்ளலாம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….தன்னிடம் பலரும் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்ததாகக் கூறிய பேராசிரியர் ஹூல் தனது எல்லைக்குட்பட்ட விடயங்களை மட்டுமே தன்னால் மேற்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார்….//

    ஏமாற்றம் தான் எனக்கு. முன்னர் எல்லாம் அதைச் செய்யமுடியும் இதைச்செய்யமுடியும் என அட்வைஸ் களும் இதைச்செய்திருக்கலாம் இதைச்செய்யவில்லை என கொம்பிளெய்ன்ஸ்ம் விட்டுக் கொண்டிருந்ததெல்லாம் கோவிந்தாவா? எல்லைக்குட்பட்ட விடயங்கள்தான் செய்யமுடியும் எனச் சொல்வதற்கு ஒரு ஹூல் தேவையில்லை!

    //…பேராசிரியர் ஹூல் அங்கு அதிசயம் எதையும் நிகழ்த்த முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு இது மாற்றத்திற்கான முதற்படியாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்….//
    ஆனால் முன்னைநாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் ‘அதிசயங்கள்’ நிகழ்த்தவில்லை என எப்பொதும் சொல்லும் இவர்கள் இப்போது இதனைச் சொல்வது எனக்கு ஒன்றும் ஏமாற்றமாக இல்லை!

    Reply
  • London Boy
    London Boy

    பேராசிரியர் யாழ் செல்வது அவருடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளது. அவரது பணிகள் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

    Reply
  • சுகுணகுமார்
    சுகுணகுமார்

    தேசியத் தலைவர் உயிரோடு இருந்திருந்தால் அவரைப் போட்டிருக்கலாம் அல்லது அவர் போட்டிருப்பார். சிலருக்கு ஆத்திரம் வருகிறது தெரிகிறது அனால் போட முடியாதவற்றை பற்றி பேசி என்ன பலன்!

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    பிந்திய செய்தி ஒன்றை அன்பர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்:

    தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப் பீடாதிபதியாக இருக்கும் பேராசிரியர் கனடாவிலிருந்து யாழ்பாணத்திற்கு ஓடிவந்து கல்விச் சேவை செய்பவர்.. பேராசிரியராகப் பதவி நியமனம் பெறுவதற்காக ஒரே மாதத்தில் ஆறு புத்தகங்களை (சொந்தமாக!) எழுதி வெளியிட்டவர்..(அவற்றின் தராதரம் நியமனத்திற்கு முக்கியமல்ல)… அவருடைய பட்டங்களின் தராதரமும் கூட பலமான சந்தேகத்திற்குரியவை… அவரும் தற்போது துணை வேந்தர் பதவிக்கு போட்டியிடுகிறாராம்… துணைவேந்தருக்கான தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர்களின் வீடுகளுக்கு இரகசியமாகப் போய் ஹூலுக்கு வாக்களித்தால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்று புலம்புகிறாராம்..தன்னை தெரிவு செய்தால் வெளிநாட்டு புலமைப் பரிசில்களை உடனடியாகப் பெற்றுத் தருவதாக ஒவ்வொருவருக்கும் இரகசியமாக வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறாராம்… இதே வேளை கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் பணியாற்றும் அவரது சகோதரர், முன்னாள் துனைவேந்தரும் இந்நாள் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸின் வீட்டுக்கு தினசரி நண்டுக் கறியுடன் நடக்கிறாராம். ஹூலின் தந்தையார் ஒரு தமிழரசுக் கட்சிக்காரர் என்றும் தமிழ் தேசியவாதி என்றும் ஹூல் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக வந்தால் பின் கதவால் தமிழ் ஈழம் வந்து விடும் என்றும் ஆலோசனை வழங்குகிறாராம்… என்ன விதப் பட்டாவது சகோதரனுக்கு துணை வேந்தர் பதவியைப் பெற்று விடுவது என்று கங்கணம் கட்டி வேலை செய்கிறாராம்… தமிழ் மக்களின் எதிர்காலம் உருப்பட்ட மாதிரித்தான்…

    Reply
  • Myl
    Myl

    Hoole’s admission that he can only work within a set remit is a disappointment. Who sets the remit, i.e. who draws the circle from within which he’ll have to dance, is well known to most.

    Vice Chancellor isn’t just a lecturer. In order to be effective, the VC ought to be able to assist in creating the necessary social environment for fruitful further education. Unless he is able to change the security and soci-economic challenges faced by most students, he’ll be ineffective. What’s written here, of his speech, is of no solace.

    Academia in Jaffna doesn’t need alien pity; it needs to be empowered; academics who worked through the most troubling days in Jaffna are more deserving and will do a better job of the VC post.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    Kalanidhi Maran.
    Born 1964,Tamilnadu
    India.
    Residence Chennai, Tamil Nadu, India
    Nationality Indian
    Education Loyola College (Graduate),University of Scranton (MBA)(USA)
    Occupation Chairman & MD of Sun Network.

    The Society of Jesus is a religious order of men called Jesuits, who follow the teachings of the “Catholic Church”.The Jesuits today form the largest single religious order of priests and brothers in the Catholic Church, although they are surpassed by the Franciscan family of first orders OFMs, Capuchins, and Conventuals. As of 1 January 2007, Jesuits numbered 19,216: 13,491 clerks regular (priests), 3,049 scholastics (students to become priests), 1,810 brothers (not priests) and 866 novices, serving in 112 nations on six continents with the largest number in India and USA.
    Loyola College was founded in 1925 by a French Jesuit, Rev. Fr. Francis Bertram, with the support of a group of Jesuits who had had their grounding at the Universities of Oxford and Cambridge, and the London School of Economics.
    The University of Scranton is a private, co-educational Jesuit university, located in Scranton, Pennsylvania, in the northeast region of the state. The school was founded in 1888 by Most Rev. William O’Hara, the first Bishop of Scranton, as St. Thomas College. It was elevated to a university in 1938, taking the name the University of Scranton. The institution was operated by the Diocese, and later the Christian Brothers, from 1888 to 1942. In 1942, Bishop William Joseph Hafey invited the Society of Jesus to take charge of the university. Today, the University of Scranton is one of 28 member institutions of the Association of Jesuit Colleges and Universities.
    Jegath Gaspar Raj:Born January 22, 1966
    Kanjampuram, Kanyakumari District, Tamil Nadu.
    Jegath Gaspar Raj is a Chennai based “Catholic priest”. He is the founder of the Tamil Maiyam organisation and co creator of the Chennai Sangamam festival. During 1995-2001 he served as the director of the Tamil service for Radio Veritas. He is also the organiser of the Idea-GiveLife Chennai International Marathon. He is also the founder of the Naller publications, a book publishing company. In 2009, during the final stages of Eelam War IV, he functioned as a back channel intermediary between the Liberation Tigers of Tamil Eelam and the Government of Tamil Nadu.

    Ratnajeevan Hoole:Samuel Ratnajeevan Herbert Hoole (born September 15, 1952)is a professor of Electrical Engineering. Previously he was posted at the Peradeniya University. He has spent many years in USA. Currently Professor Hoole teaches at Rensselaer Polytechnic Institute (RPI) at their satellite campus in Hartford, CT.President Mahinda Rajapakse appointed Prof. Hoole as the Vice Chancellor of the University of Jaffna in March 2006. However, the rebel group People’s Uprising Force, which is believed to have links to the Liberation Tigers of Tamil Eelam, opposed the appointment and used threats and intimidation against the professor and his family to discourage him from accepting his post.Professor Hoole is a younger sibling of Human Rights activist Rajan Hoole.Prof. Hoole is a “Protestant Christian?”.

    Martin Ennals: Martin Ennals served as the third Secretary-General of Amnesty International, between 1968 and 1980.
    He went on to help found the British human rights organisation ARTICLE 19, followed by International Alert in 1985.

    Reply
  • Robin M
    Robin M

    // Academia in Jaffna doesn’t need alien pity//
    This has been the attitude of the so-called academia in Jaffna for a long time. They only wanted the sympathy and support of the forces like the LTTE to survive in their posts so far..They needed neither any academic achievement nor any unbending personal qualities to prove their merit as academics in Jaffna. This attitude had been followed by them for more than 30 years… They only had to master the art of dancing on the heads of poisonous snakes to survive. An independent-minded person like Prof. Hoole with loads of overseas exposure ( & some fair knowledge of English to express his ideas in a reasonably acceptable way) can only reverse this ugly trend among the so called academia in Jaffna and bring back the culture of serious research and innovation to the university.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…அமைச்சருமான ஜி.எல்.பீரிஸின் வீட்டுக்கு தினசரி நண்டுக் கறியுடன் நடக்கிறாராம். ஹூலின் தந்தையார் ஒரு தமிழரசுக் கட்சிக்காரர் என்றும் தமிழ் தேசியவாதி என்றும் ஹூல் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக வந்தால் பின் கதவால் தமிழ் ஈழம் வந்து விடும் என்றும் ஆலோசனை வழங்குகிறாராம்…// தாமிரா மீனாஷி

    இதேவேலையை பல ‘புரட்சிக்காரர், மாற்றுக்கருத்து, மாற்றுக் கொள்கைக்காரர்கள்’ செய்தபோது எங்கே இருந்தீர்கள்? இப்போ புதிதாக கதை விடுகிறீர்களே? துணிச்சல் இருந்தால் அவரின் பெயரைப் போடுவதுதானே? சினிமா பாணியில் இன்னும் ஏன் கிசு,.கிசு விளையாட்டு?

    Reply
  • கருணா
    கருணா

    உவரையும் சம்பந்தரையும் போட்டிருந்தால் இண்டைக்கு சிங்களவனுக்கு எவ்வளவு நல்லாயிருந்திருக்கும் என்ன? சீ அரும்பிலை தப்பீட்டாங்கள்! தமிழ் போராட்டம் நடாத்த எங்களை தவிர ஒருத்தரும் வரக்கூடாது! சனங்கள் சாகிறது பட்டினி கிடக்கிறதைப்பற்றி நாங்கள் கவலைப்படக்கூடாது. இலட்சியம் வெல்லவேணும்! அதோடை ஆட்கள் இல்லாத ஊரெண்டாலும் பறவாயில்லை நாடு பிரியவேணும்!

    Reply
  • nantha
    nantha

    ரத்தினஜீவன் யாழ் பல்கலைக் கழகத்துக்கு வருவது காலத்தின் கட்டாயமும், தேவையும் என முன்னர் எழுதியதாக நினைக்கிறேன். கல்விக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்றே கருதுகிறேன். அவரது “மத”நம்பிக்கை பிரச்சனை யாழ்ப்பாணத்தில் ஒரு பிரச்சனையாக இருக்கப் போவதில்லை.

    புலிகளுக்கு எதிராக அவர் செயல்படுவதை “அனியாயம்” என்று கருத இடமில்லை. ஏனென்றால் புலிகளும் அவர்களோடு சேர்ந்தவர்களும் தமிழர்களின் நலன்களை குழி தோண்டிப் புதைத்தவர்கள்.

    குதிரை கஜேந்திரன் போன்றவர்கள் வருங்காலத்தில் பல்கலைக் கழகத்தின் வாசல் பக்கம் தலை காட்ட முடியாது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே!

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    தற்போது கலைப் பீடாதிபதியாக இருப்பவர் என்று நான் தெளிவாக எழுதியுள்ளேன்..அவருடைய பெயரை நீங்கள் எல்லா விதத்திலும் அறிந்து கொள்ளலாம். அவருடைய சகோதரர் யார் என்பதையும் அவர் தன்னுடைய செல்வாக்கை வைத்து மானியங்கள் ஆணைக்குழு மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தில் என்னவெல்லாம் செய்தார் என்பது கிசு கிசுவல்ல… ஊரறிந்த விஷயம்… இப்போது உங்களிடம் யாரும் தகவல் சொல்ல வருவதில்லைப் போல் தெரிகிறது..

    ரட்னஜீவன் அரசாங்கத்தின் ஆள் என்று கதை பரப்புபவர்கள் எப்படிப் பட்டவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இது…

    நீங்கள் சொல்லும் மாற்று கருத்தாளர்களும் புரட்சியாளர்களும் பணப் பெட்டிகளுடன் ஹெலிகொப்டரில் போய் காலில் விழுந்து ஈழம் காணுவதாக சவடால் விட்டார்களா? சொந்தக் கதைகளை வசதி கருதி மறந்து விட்டீர்களா சாந்தன்?

    Reply
  • Kandeepan
    Kandeepan

    //தற்போது கலைப் பீடாதிபதியாக இருப்பவர் என்று நான் தெளிவாக எழுதியுள்ளேன்..அவருடைய பெயரை நீங்கள் எல்லா விதத்திலும் அறிந்து கொள்ளலாம்.//

    Are you referring to Prof. N. Gnanakumaran? He’s a extremely corrupted person?

    Apparently, when his application for professorship was rejected – Gnanakumaran went to the VC’s house in the evening and cried his heart off (like a baby)… eventually after pulling the strings in the rightful manner he was awarded his professorship…

    Can this person be called an academic by any chances? In these regards Mr. Myl’s statement //Academia in Jaffna doesn’t need alien pity// is REJECTED!

    Reply
  • murugas
    murugas

    Those who really worry about the disaster that was thrusted on the Tamil people must think in a different way. The traditional tamil parties, FP, TC, TULF all promoted communalism and through which they protected parliamentary seats. Though jaffna Tamil academics? say they are the educated lot it is not true.They could not understand the political tricks of their leaders and became admirers of communal politics. In fact the Sinhalaese leaders transformed the caste minded jaffna society. Dear readers honestly compare the position of lower caste Tamils in Tamilnau and Jaffna. Our Jaffna brothers are in a much better position. Like this there are many exmples. My argument is necessary for Prof case. A person, acadamic different from others should take over the UOJ.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…ஊரறிந்த விஷயம்… இப்போது உங்களிடம் யாரும் தகவல் சொல்ல வருவதில்லைப் போல் தெரிகிறது…// அப்போ ஊரறிந்த விடயத்தை ஏன் கிசு..கிசு போல எழுத வேண்டும்?

    //….நீங்கள் சொல்லும் மாற்று கருத்தாளர்களும் புரட்சியாளர்களும் பணப் பெட்டிகளுடன் ஹெலிகொப்டரில் போய் காலில் விழுந்து ஈழம் காணுவதாக சவடால் விட்டார்களா? சொந்தக் கதைகளை வசதி கருதி மறந்து விட்டீர்களா சாந்தன்?…//
    நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் அதிலும் விட ஈசியான வழி, அதாவது ஹூலை துணைவேந்தராகப் போட்டால் தமிழீழம் வந்து விடும் என்கின்ற ரகசியத்தை. அதுமட்டுமா அவ் ஈழத்தை அடையவிடாமல் நண்டுக்கறி கொடுத்து தடுக்கலாம் என்கின்ர வழியைக்கூட சொன்னதாக எழுதி இருக்கிறீர்கள்.!

    Reply
  • M.Rajan
    M.Rajan

    யாழ்ப்பாண கம்பஸ் இன்னும் எவ்வளவு காலத்திற்கு குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓடும்? தமிழரசுக் கட்சி நண்டுக்கறி எண்ட கதை எல்லாத்தையும் விட்டுட்டு சர்வதேச தரத்திற்கு எங்கட கம்பஸ்ஸை கொண்டுவர கூல் வந்தேயாக வேண்டும். யாழ்ப்பாண கம்பஸ் பட்டதாரி எண்டவகையில மனந்திறந்து இந்தக்கருத்தை முன்வைக்கிறன். – எம். ராஜன்.

    Reply
  • பல்லி
    பல்லி

    எனது கருத்து பேராசிரியருக்கு அரசியல் அனுபவமோ அல்லது ஆசையோ இருக்கலாம்; ஏன் அதில் தேர்ச்சி பெற்றவராக கூட இருக்கலாம்; ஆனால் கல்வியுடன் அரசியலை கலப்பதோ அல்லது பகுதிநேர அரசியல் செய்வதோ சரியானதாக இருக்காது; அவர் கல்வியின் எதிர்காலம் அறிந்தும் எமது ஒரு தலைமுறை சதிராட்டத்தால் கல்வியை இழந்து அடுத்த சில ஆண்டுகளில் ஒரு கல்வியற்ற இடைவெளியை கொடுக்கும்; காரணம் பலர் புலத்திலும் சிலர் துயிலிலும் போய்விட்டனர், புலம்பெயர் தமிழர் கல்வி எம் சமூகத்துக்கு எவ்வளவு உபயோகபடுமோ தெரியவில்லை; ஆகவே பேராசிரியர் கல்வியின் நிர்வாகத்தில் அரசியலையோ அல்லது அமைப்புக்களையோ தலையிடவிடாமல் பார்ப்பது அவசியம்; இது கல்வியில்லா பல்லியின் சிறு கருத்து;

    Reply
  • Suppan
    Suppan

    Dear Kandeepan, Your Comment on September 4, 2010 12:30 pm

    “Apparently, when his application for professorship was rejected – Gnanakumaran went to the VC’s house in the evening”

    The so called Vice Chancellor was Balasuntharampillai. The above story was famus joke during the period of mid 90’s.

    Reply
  • Ajith
    Ajith

    Professor Hoole spent almost all his life serving in US. His academic qualification is excellant. His academic ability can be better utilised by Sri Lanka to serve all the ethnic groups by appointing him as VC of Perdeniya or Colombo or Moratuwa where his academic qualifications could be better utilised. The question is why Rajapakse is personally interested in appointing him as VC to Jaffna instead of appointing him to Colombo or Kandy where Engineering field is well established? Why thesamnet is so interested in only bringing Prof Hoole to Jaffna instead of number of more suitable academics are there. VC selection should be competitive one that should be the responsibility of the University of Jaffna, its students, its staff, and its people,not the business of outsiders.
    MrJeyapalan and Co can play a useful role by participating directly in the UOJ We don’t need to guide them from here. Why Professor is only interested in Jaffna University? Why cannot he serve to Batticaloa tamils?
    Have a look at his CV. Since 87 to 1987 – 2005, he was out of Sri Lanka. He is well known for his duplicity in politics and there are serious accusations against him for his double standards in politics.

    Experience:
    Academe: 27 years; Full Prof. from 1992;
    12 years at Harvey Mudd College, CA (1987-99);
    5 at Drexel University, Philadelphia,
    PA (1984-87; 2006-8). University of Peradeniya (1999-)

    Reply
  • பல்லி
    பல்லி

    தாமீராவின் கருத்தை கவனத்தில் எடுப்பது அவசியம்; காரணம் எனக்கும் சேரனை தெரியும்:

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    மீண்டும் உரத்துச் சொல்வேன். இந்தப் பரமார்த்த குருவிற்காக, எம்மினத்தையும், இருக்கின்ற பல்கலைக்கழகத்தையும் எள்ளிநகையாடாதீர்கள்.

    Reply
  • பேராசிரியர் பெக்கோ
    பேராசிரியர் பெக்கோ

    பரமார்த்தகுருக்களை நம்பி வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை போனநாங்கள். அப்ப நீங்கள் ஒண்டும் உரத்துச் சொல்லுறேல்லப் போல? அப்ப தமிழ் வாதம் எங்க இருந்தனீங்கள்? அப்ப உரத்துச் சொல்லி இருந்தா அந்தப் பரமார்த்தகுருவோட வன்னிச்சனம் உடன்கட்டை ஏறியதை நிப்பாட்டி இருக்கலாம். விதி ஆரத்தான் விட்டுது. நோ ஹாட் பீலிங்ஸ்.

    அதென்ன கொஞ்சம் விசயம் தெரிஞ்ச முழுக் களுசான் போட்ட ஹூல் போன்றவர்கள் வருகினம் என்றால் வெள்ளை வேட்டிக்காரருக்கு ஒரு பக்கமா இழுக்குது. உங்கட பருப்புகளை வேக வைக்க கஸ்டம் போல.

    Hoole வந்தால் தங்களை cool ஆக இருக்கவிடமாட்டார் கேஸ்சுகளை கீசுகளைப் போட்டு அலுப்புத் தருவார் என்று அரசு பார்க்குது. அதால கேபி யை யோகியை அல்லாட்டி நல்ல மன்மதக்குஞ்சுகளை போடலாமோ என்றும் அரசு யோசிக்கிறதாகக் கேள்வி. கீபோட் காரருக்கும் வாய்ப்பு இருக்காம். நண்டுக் கறி கணவாக்கறி கொண்டுவாறவைக்கு முன்னுரிமையாம்.

    நாங்கள் தமிழர்கள். அதால தமிழ் சனத்துக்கு நன்மை செய்யக் கூடிய ஆர்வந்தாலும் நாங்கள் அவரை விடக்கூடாது. தமிழ் சனத்தை சின்னா பின்னமாக்கி முள்ளிவாய்காலுக்கு கூட்டிக்கொண்டு போற தகுதியுடைய பரமாத்த குருக்களுக்கும் கூத்தாடிகளுக்கும் தான் ஆதரவு வழங்க வேண்டும்.

    Reply
  • தமிழ்வாதம்
    தமிழ்வாதம்

    இனியென்ன coolலாக அடுத்தது முழுக்களுசான், வெள்ளை வேட்டிப் பாகுபாட்டிற்கு களம் அமைக்கும் தேசத்திற்கு கோடி நன்றி.

    Reply
  • sri lankan
    sri lankan

    I am a graduate from UOJ. I was there during the hight of the problem from1983 to 92 to be precise. Atleast till mid 90’s there were no LTTE yes men who acted according to the wishes of the political forces within the university. There had been complaints about the clannish type of attitude amongst the administration and the academia, however, people who have some experience with Sri Lankan universities will know that this is very common among the other universities especially UOC. I personally am aware that Dr Hoole was interested in the VC post in UOC (he had contacted atleast 2 council members over the phone (repeatedly) before leaving for the US. He tried his best to get in to UOC. I am not surprised of his returning to SL as the VC post in UOC has been advertised recently. According to the prevailing story in Jaffna and Colombo Dr Hoole was not barred from taking the VC post in UOJ, the whole story was his making. Anybody who knows LTTE well will realize that LTTE didnot have academic or intellectual inclination to regard VC post as a highly acclaimed post. It is possible that some chronic character in UOJ may have used the name of LTTE. Dr Hoole was attached to the OUSL for some time I am sure that LTTE didnot chase him from there.

    We are sure there will be a lots of “academics” floating around in the diaspora who are waiting to come to share their experience and develop UOJ. UOJ has stood against the greatest perils in the past, its natural that it will gain its heights with or without out siders. We who lived in SL and the north and east didnot have any way to control the happening when LTTE was in control but the diaspora had the ability to control and direct LTTE. The diaspora failed in that and now they want to share there experience and expertise …. no thanks …atleast now leave the people of SL be in peace.

    Reply