உண்ணாவிரதி பரமேஸ்வரனின் 7.1 மில்லியன் பவுண் மக்டோனால் பேகர் : த ஜெயபாலன்

Parameswaran_Subramaniyammcdonalds_burgerscotland_yardவன்னியில் மிகப்பெரும் அவலம் நடந்து கொண்டிருக்கையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். அவர்கள் தங்கள் சக உறவுகளுக்காகத் துடித்தனர். ஆனால் ஒட்டுமொத்த போராட்டத்தையும் புலம்பெயர் புலி ஆதரவு சக்திகள் புலிக்கொடி, பிரபாவின் படம் என புலிமயப்படுத்தி போராட்டத்தை பலவீனப்படுத்தினர். தற்போது ஸ்கொட்லன்ட் யாட் மற்றுமொரு விடயத்தை அம்பலப்படுத்தி உள்ளது. லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்.

பரமேஸ்வரன் சுப்பிரமணியம் உண்ட மக்டோனால்ட்டின் விலை 7.1 மில்லியன் பவுண் என பொலிஸ் உள்வட்டாரங்களில் பேசப்பட்டு உள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற 72 நாட்களில் 30 000 பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டு இருந்தனர். அதற்கு அவர்கள் செலுத்திய மேலதிக சம்பளம் 7.1 மில்லியன். பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மக்டோனாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை ஸ்கொட்லண்ட் யாட் உத்தியோகத்தர்கள் நம்ப முடியாது லைவ்வாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போராட்டம் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் ஸ்கொட்லண்ட் யாட் அப்போது இச்சம்பவம் பற்றி கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து இருந்தது. மேலும் அச்சமயத்தில் கருத்து வெளியிடும் பட்சத்தில் அது வன்முறைக்கு வித்திடலாம் என்ற அச்சமும் காரணமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (தகவல்: டெய்லி மெயில் லண்டன்)

ஒக்ரோபர் 8 (நேற்று) இத்தகவல் ஸ்கொட்லண்யாட்டினால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களால் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு மிக மோசமான இழுக்கு ஏற்பட்டு உள்ளது. வன்னியில் நிகழ்ந்த பேரவலத்தில் புலிகளுக்கும் மிகுந்த பங்கு இருந்தது. புலிகள் யுத்தப் பகுதியில் மக்களை பணயம் வைத்தே தாக்குதலை நடத்தினர். அப்படி இருந்தும் வெளிநாடுகளில் புலி ஆதரவுத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுவிக்க வேண்டுமென எவ்விதமான கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே புலி ஆதரவாளர்களால் தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. வன்னியில் உள்ள மக்களை யுத்த முனைக்குள் தள்ளி மிகப்பெரும் அவலத்தை ஏற்படுத்தியதில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் சமபொறுப்பு உண்டு. புலம்பெயர்ந்த புலி ஆதரவு சக்திகளின் பொறுப்பற்ற போராட்டங்கள் வன்னி மக்களை மிகப்பெரும் அவலத்திற்குள் தள்ளியுள்ளது.

வடமராட்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சுப்பிரமணியம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமானவர். லண்டனில் போராட்டங்களில் புலிகொகொடி பிரபாவின் படம் போன்ற விடயங்களில் இவரே தீவிரமாக இருந்ததாகத் தெரியவருகிறது. பிரித்தானிய அரசு வழங்கிய இரகசிய உறுதிமொழியை அடுத்தே தனது போராட்டத்தை கைவிட்டதாகத் தெரிவித்து இருந்தார். செப்ரம்பர் 29ல் அவரை கொன்வே ஹோலில் சந்தித்து அந்த உறுதிமொழி என்ன வென்று கேட்ட போது அது இன்னமும் இரகசியமாகவே இருப்பதாகத் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

ஆனால் பிரித்தானிய இளையோர் அமைப்பினர் சில உள்வீட்டு விடயங்களை வெளியிடுகையில் அவ்வாறான உறுதிமொழி எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் உண்ணாவிரத்தை முடிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட காரணமே அதுவென்றும் தெரிவிக்கின்றார்.

பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் போராட்டங்கள் நியாயத்தன்மையைக் கொண்டிருக்காதபடியால் அவை பயனற்ற முயற்சிகள் என்பதனை தேசம்நெற்றில் பல தடவை சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உண்ணாவிரத விருந்து தமிழ் மக்களது எதிர்காலப் போராட்டங்களுக்கும் ஒரு கறையாக அமையவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பரமேஸ்வரன் சுப்பிரமணியத்துடன் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

ஆனால் பிபிசி தமிழோசைக்கு இச்செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்ட பரமேஸ்வரன் சுப்பிரமணியம் இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

85 Comments

 • பார்த்திபன்
  பார்த்திபன்

  உது ஏற்கனவே தெரிஞ்ச விடயம் தான். ஆனால் என்ன சாப்பிட்டவர் என்பது மட்டும் தெரியாமலிருந்தது. இப்ப தெரிஞ்சிட்டுது. கடைசிவரை ரீவிக்களில் அந்த மாதிரிப் பேட்டி கொடுததவர். அதுசரி உவரை அப்ப பரிசோதித்து அறிக்கை கொடுத்த எங்கடை தமிழ் டாகுத்தர்மார் என்ன கூழுக்கு மாரடிச்சவையோ. எனி உவையிற்றை போற நோயாளிகளும் கவனமாயிருக்க வேண்டும். காசு கற்க்க இல்லாத வருத்தத்தையும் சொல்லி,அடிக்கடி செக்கப்பிற்கு வரச் சொல்லுவினம்.

  Reply
 • senthil
  senthil

  வெட்கம். பரமேஸ்வரனில் குளிர்காயந்த சில இளசுகளுக்கும் உசுப்பேற்றிய வல்வை கமலுக்கும் பிரித்தானிய தமிழ் போரத்துக்கும் ஜபிசியின் சீன தத்துவஞானி இதயசந்திரனுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக இன்னமும் லூசுத்தனமாக துரோகிபட்டம் சூட்டும் அதிர்வுக்கும் கம்பேர்கர் கொடுத்து திறப்பு போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவரவும். பரமேஸ்வரனின் சட்டவிரோத வேறு செயற்பாடுகளும் ஸ்கொட்லண்ட்யாட்டுக்கு தெரியும். இதனை துருப்புசீட்டாக வைத்து ஸ்கொட்லண்ட்யாட் ஆடிய ஆட்டத்தில் பரமேஸ்வரன் அவர்களின் ஏஜென்டாக மாறிசெயற்பட்டதாகவும் அரசல்புரசலாக ஒரு கதை.

  Reply
 • நாதன்
  நாதன்

  இப்படித்தான் ஊரில கூட்டணிக் காலத்தில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தபோது ஒருத்தர் சொன்னார் மத்தியானம்போல சாப்பிட போறவை ஒருத்தர் ஒருத்தராய் வித்தியாசமான நேரத்தல போயிட்டு வந்திடுங்கோ எண்டு.

  எனக்கு இதை வாசிக்க அதுதான் ஞாபகம் வந்தது. என்ன “போராட்ட வடிவம் ” என்பது மாறவில்லை போராட்ட இடமும் சாப்பாடும்தான் மாறியிருக்குது. நாட்டுக்குள்ளை தமிழீழம் நாடுகடந்த தமிழீழமான மாதிரி. உண்ணாவிரதத்தை முடிக்கிறதுக்கு வழங்கபட்ட உறுதிமொழி என்று சொன்னது இதுவாய்த்தான் இருக்கும் ” தம்பி எழும்புகிறீரோ வீடியோவை வெளியில விடவோ?”

  Reply
 • john
  john

  Why did he have Mcdonalds? Well Mcdonalds food takes longer to digest in your stomach than other regular foods and contains lots of fats so that is why he was able to survive ‘without food’.

  Reply
 • Thirumalai vasan
  Thirumalai vasan

  தூய்மையான உள்ளத்துடன் அரசியலே அறியாத அப்பாவி மக்கள்கூட உண்ணாவிரதப் போராட்டத்தில் பரமேஸ்வரன் மற்றுமொரு திலீபனாக்கப்பட்டு விடுவாரோ என்ற கவலையில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த மக்களை அணிதிரட்டிய பீரீஎப் மற்றும் ரீவைஓ உறுப்பினர்கள் இந்தச் செயலுக்கு பதில்சொல்லாமல் மேலும் மேலும் போராட்டங்களை முன்னெடுக்க முடியாது. மக்கள் சக்தியிடம் தங்கள் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தாத வரை எதிர்காலத்தில் மக்கள் மயப்படுத்தப்படும் போராட்டங்கள் எதுவும் ஜொலிக்கப் போவதில்லை. மே 17க்குப் பின்னர் எத்தனையோ போராட்டங்களை கஷ்டப்பட்டு சனத்தைக் கூட்டி நடத்திவரும் இவர்களுக்கு இன்றுமுதல் அது சிக்கலாக இருக்கப் போகின்றது. மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி விட்டீர்களே. இனி எப்படி அவர்களிடம் போய் நிற்பீர்கள்? டெய்லி மெயில் இணையத்தில் இச்செய்திக்கான பின்னூட்டங்களைப் பார்த்தபோது வெள்ளையினத்தவர்களின் ஆத்திரமும் தமிழர்மேல் அவர்கள் கொண்ட அவநம்பிக்கையும் என்னை நிலைகுலைய வைத்தது. முற்சந்தியில் அம்மணமாக நிற்பது போன்ற உணர்வு. அடச் சீ ஒரு பிக் மக் பேர்கருக்காக ஒரு சாத்வீகப் போராட்டத்தையே கொச்சைப்படுத்திவிட்ட பரமேஸ்வரா நீர் எப்படி பொது வாழ்க்கைக்குத் திரும்பப் போகிறீர்? நீரும் உம் பம்மாத்து டிராமாவும்.

  Reply
 • kamal
  kamal

  இதனை துருப்புசீட்டாக வைத்து ஸ்கொட்லண்ட்யாட் ஆடிய ஆட்டத்தில் பரமேஸ்வரன் அவர்களின் ஏஜென்டாக மாறிசெயற்பட்டதாகவும் அரசல்புரசலாக ஒரு கதை./செந்தில்
  இப்படித்தான் எந்தப் பிழையையும் யாராவது ஒருவர் தலையில் கட்டிவிட்டு பிறகு வழக்கம்போல உங்கட களங்கமில்லாத ஈழப் போராட்டத்தைத்-(கலக்க்ஷன்தான்)-தொடருவீங்கள் என்பது எல்லார்க்கும் தெரியும். அதில தலைவற்றை தலை கூடத் தப்பவில்லை. இவ்வாறான கட்டுக்கதைகளை பரப்புபதற்கென்றே செந்தில் போன்ற சிலரையும் வைத்திருக்கிறார்கள்.

  Reply
 • Sendoor
  Sendoor

  எழுவத்தைந்து நாட்கள் நடந்த ஊர்வலத்தில் உண்டியல் குழுக்கியவர்களையும் கொடி வித்தவர்களையும் கூட ஸ்கொட்லன்ட் யாட் படம் பிடித்திருக்கும் இதை விட BTF இக்கு எல்லாரையும் நன்றாகத் தெரியும். இவர்களை அடையாளமும் கண்டு சேத்த எல்லா பணமும் எங்கே என்பதை கடன் பட்டு பணம் கொடுத்து ஏமார்ந்த மக்களுக்கு BTF அறிவிப்பதை விட்டு விட்டு அடுத்த ஊர்வலத்துக்கு தயார் ஆகி விட்டார்கள். ஏமாறும் மக்கள் இருக்கும் வரையும் ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பார்கள்.

  Reply
 • prsha
  prsha

  சீன தத்துவ ஞானிக்கும் , அகிம்சைப் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? இந்த குளறுபடி பற்றி காந்திய தத்துவவாதிகள் அல்லவா கவலைப்படவேண்டும். பாவம் செந்தில் ,அவலை நினைத்து உரலை இடிக்கிறார்.

  Reply
 • BC
  BC

  தமிழ் தேசியத்துக்கு எதிரான திட்டமிட்ட சதி இது என்று கூறிவிட்டு சுருட்டல் தொடரும். போராட்டத்தை வைத்து தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்பது அவர்களுக்கு தெரியும்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  விளம்பரத்திற்கு செலவிடும் முண்ணனி ஸ்தாபங்களில் மக்டோனால்சும் ஒன்று.
  இதுவரை செலவழித்த பணங்களைவிட பெறுமதியான விளம்பரத்தை பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் மூலம் பெற்றுவிட்டது இந்த ஸ்தாபனம்.

  Reply
 • மரியதாஸ்
  மரியதாஸ்

  தமிழனுக்கு கெட்டித்தனமாக செய்ய தெரிந்தது எதுவென்றால் தன்னை நம்புகிற தமிழனுக்கு பிலிம் காட்டி பீலா விட்டு ஏமாற்றி தமது மடியை கனமாக்குவது மட்டுமே.இனப்பற்று மொழிப்பற்று நாட்டுப்பற்று இப்படி எதுவும் கிடையாது. தமிழ் தமிழ் என்கிறார்கள் ஆங்கில அகர வரிசை தெரிந்த தமிழர் எல்லாம் கையொப்பம் போடுவதே ஆங்கிலத்தில் தான். சும்மா தமிழின் பேரால் பணமும் பதவியும் பெற துடிக்கிறார்களே தவிர வேறொன்றுமில்லை பரமேஸ்வரனும் கூட திண்டால் மச்டோனல்ட்ஸ்; போட்டால் த்ரீ பீஸ் சூட்; எழுதினால் இங்கிலீஷ்; சுத்தினால் மட்டும்தான் சுத்த தமிழனை சுத்துவது
  சிங்கள் எதிர்ப்பை விட்டால் இவர்களுக்கு வேறு அரசியல் கோஷமே கிடையாது. இவர்கள் இலங்கையில் பெரும்பான்மையாக இருந்தால் சிறுபான்மை இலங்கையர் என்று வேறு யாரும் உயிருடன் இருந்திருக்க முடியாது.-மரியதாஸ் மன்னார்

  Reply
 • senthil
  senthil

  பரமேஸ்வரன் பிரித்தானிய பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போகிறாராம்! பிரித்தானிய பத்திரிகைகள் என்னமோ ஈழநாதம், உதயன், ஈழநாடு, வலம்புரி என்று நினைத்துவிட்டார். பிரித்தானிய பத்திரிகைகள் காலம் கடந்து பரபரப்பு செய்திக்காக இதை வெளியிடவில்லை என்பதும் கூடவே ஸ்கொட்லாண்ட்யாட்டையும் சாட்சிக்கு அழைத்திருக்கு என்பதை பரமேஸ்வரன்கள் மறக்க வேண்டாம். இனி பரமேஸ்வரனின் வழக்குக்கு எனவும் உண்டியல் குலுக்குவார்கள் ஏமாந்திட வேண்டாம். சனல்4 உம் அல்ஜசீராவும் தமிழருக்கு சாதகமாக செய்தி போட்டால் எஸ்.எம்.எஸ், பக்ஸ், ஈமெயில் கம்பைன் செய்தவர்கள் இனி பிரித்தானிய ஊடகங்கள் சதி, கூட்டுசதி, துரோகம் என பதாகைகளுடன் ….

  Reply
 • gunarajah
  gunarajah

  ok lest go to mr parameswaran they way not propllem now our work very importin our peples this our solition not lost the times for bad mouving thanks
  -gunarajah

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  தமிழீழப் போராட்டம் புலிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டது இறுதியாக சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்துள்ளனர்.அந்த காட்டிக் கொடுப்பை சர்வதேச அரங்கில் புலிகள் நடத்தியுள்ளனர்.தமிழ்மொழிபேசும் மக்களுக்கு ஒரு வெட்கம் கெட்ட செயலாகியுள்ளது இந்த வெட்கக் கேடான செயலுக்கு இந்த செயலை ஊக்குவித்த வானொலிகள் ரிவிக்கள் இதை கண்டிப்பார்களா?

  சர்வதேசத்தில் தமிழர்களை கேவலப்படுத்தியதையும் சர்வதேச சமூகம் மதித்த ஒரு அமைதி வழிப்போராட்ட்ததை கேவலப்படுத்தியது இனிமேல் பல்வேறு போராட்டங்களையும் இதே போன்ற சந்தேகக் கண்ணுடன் பார்க்கவே இந்த மக்டோனால் பேகர் போராட்டம் உதவி செய்துள்ளது.

  சர்வதேசரீயாக தமிழர் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் கேவலப்படுத்தினர் இந்த விடயங்களை தனியாக ஒரு பரமேஸ்வரன் என்று பார்க்கத் தேவையில்லை இது ஒரு புலிகளினால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டவடிவம் புலிகளின் கடந்தகால சத்தியாக்கிரகப் போராட்டங்கள் எப்படி நடாத்தப்பட்டுள்ளது அல்லது நடாத்தப்பட்டிருக்கும் என்பதற்கு இது ஒரு சரியான உதாரணமாகும்.

  தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் உளப் பூர்வமாக புலிகளும் புலிகளின் ஆதவாளர்களும் செயற்ப்படவில்லை என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இது.

  இந்தப் போராட்டகாலங்களில் பங்களிப்பு செய்வோருக்கு உணவு வழங்கும் கடைகள் வந்து சாப்பாடுவழங்கல் செய்யும் போதே இந்த போராட்டத்தின் உண்மைத்தன்மை கெட்டுவிட்டது.

  சர்வதேசங்களையம் எமது கையில் எடுத்துள்ளோம் இன்று எமது மக்கள் சர்வதேசம் எங்கும் தெருக்களில் என்ற உணர்வுபூர்வமான பேச்சுக்களுக்கு இன்றய மக்டோனால் பேகர் சாப்பிட்டு உண்ணாவிரதப் போராட்டம் என்ன அர்த்தத்தை கொடுத்துள்ளது.

  ஒட்டுமொத்தமாக தமிழர் போராட்டம் ஒவ்வொரு நிலையிலும் சமூகமட்டத்திலும் சமூகத்தின் சமூக சேவைகள் மட்டத்திலும் காட்டிக் கொடுக்கப்பட்டடுள்ளது அதிலும் அகிம்சைப்போராட்டத்திலும் காட்டிக்கொடுக்கப்பட்டது கேவலம்.

  Reply
 • gopalan
  gopalan

  இரண்டு வருடங்களுக்கு முன்பு புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடைக்காடரால் நடாத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டதிற்கு வருகை தந்த ஆதரவாளர்களுக்கு லண்டன் இல்போட்டில் 500 வடைகள் ஓடர் கொடுக்கப்பட்டதும் இது போல தேவைக்குத்தானாக்கும்

  Reply
 • பல்லி
  பல்லி

  கவனிக்கவும் அந்த காலகட்டத்தில் பல்லியின் பின்னோட்டங்களை, யார் நம்பினார்கள் இன்று காலம் கடந்த நாட்டாண்மை தீர்ப்பா??

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //பரமேஸ்வரன் பிரித்தானிய பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போகிறாராம்!- senthil //

  பரமேஸ்வரனுக்கு வக்கீலாக வேண்டுமானால் வாதாட நான் வரலாமோ என்று சிந்திக்கிறேன். ஆனால் என்ரை fees ஆக கம்பேக்கரைத் தந்து விட்டால் என்ன செய்வதெண்டுதான் யோசிக்கிறன் ??

  அப்படியே Daily Mail ஐயும் பாருங்கோ.
  http://www.dailymail.co.uk/news/article-1219112/Hunger-strikers-7m-Big-Mac-Tamil-cost-London-fortune-policing-sneaking-fast-food.html

  Reply
 • மரியதாஸ்
  மரியதாஸ்

  தமிழனின் தலை விதி
  நம்பிய தமிழனால் கழுத்தறுப்பு,
  போலி சாமிமாரால் ஏமாத்து
  போலி தலைவர்களால் பலி எடுப்பு
  என்றாகி விட்டது

  பிணக் கணக்கு காட்டி
  பணம் சேர்த்த பணப் பேய்கள்
  போரின் பெயரால் பிள்ளைகளையும்
  அழித்து தள்ளிய பாதகர்கள்
  இவர்களுக்கும் பூவரசு மரத்தடியில்
  கோவணத்துடன் கோடாலிக் கொத்து விழாதோ

  மற்ற தமிழனுக்கு ஏமாத்து வித்தை காட்டி
  வயிறு வளர்ப்பதே பல தமிழருக்கு தெரிந்த
  ஒரே பிழைப்பாக போச்சுது

  தமிழன் என்று சொல்லடா
  தலை குனிந்து தப்பி ஓடடா

  –மரியதாஸ் மன்னார்

  Reply
 • சதி
  சதி

  இலங்கையில் யுத்தம் உச்சகட்டத்தை எட்டியிருந்த சமயத்தில், உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரி லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய தமிழ் இளைஞர், மெக்டோனால்ட்ஸ் பர்கர்களை சாப்பிட்டதாக பிரிட்டிஷ் ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்திகளை சம்மந்தப்பட்ட இளைஞர் மறுத்துள்ளார்.

  இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் உண்ணாவிரத சர்ச்சையில் சிக்கியுள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

  BBC தமிழோசை

  Reply
 • Kandaswamy
  Kandaswamy

  சோதிலிங்கம்,
  என்னத்தை பெரிசாக “காட்டி கொடுத்தார்கள்” என்கிறிர்கள்? பரமேஷ்வரனை விடுங்கோ….பாவம். பசியில சாப்பிட்டார்.

  அரசாங்கத்துக்கு எதிராக போராட வெளிக்கிட்டம். இப்ப அரசாங்கத்தோட சேர்ந்திருந்து தான் போராட வேனும் என்று சரியாக 21 பேர் வெளிக்கிட்ட்ருக்கினம். அவர்களும் காட்டி கொடுக்கினமோ?

  Reply
 • சதி
  சதி

  வெல்டன் பரமேஸ்

  தமிழன் மானம் காக்க கட்டாயம் வழக்குத் தொடருங்கள்
  முதலில் செய்தி வெளியிட்ட இரண்டு ஆங்கிலப் பத்திரிகைகளுக்கும் வழக்குத் தொடருங்கள்.

  அப்பத்திரிகைகளின் இணையத்தளங்களில் பின்னூட்டம் இட்டுள்ள ஆங்கிலயருக்கும் வழக்குத் தொடருங்கள்.

  இச் செய்தியை மிகைப்படுத்தி வெளியிட்ட தேசம் நெட்டுக்கும் வழக்குத் தொடருங்கள்.

  இதில் பின்னூட்டம் இடுபவருக்கும் தமிழன் மானம் காக்க வழக்குத் தொடருங்கள்.

  மறந்து விட்டேன்,

  ஏழு மில்லியன் கணக்குக் காட்டியுள்ள ‘ஸ்கொட்லன்ட் யாட்”; பொலிஸ{க்கு எதிராகவும் ஏழு பில்லியன் கேட்டு வழக்குத் தொடருங்கள்.

  பிரித்தானிய நீதி மன்றத்தில் மாத்திரம் அன்றி சர்வதேச நீதி மன்றத்திலும் வழக்குத் தொடருங்கள்.

  தமிழன் மானம் காத்த வீரர்கள் வரிசையில்; நிச்சயம் தங்களுக்கு இடம் உண்டு.

  – சதி –

  Reply
 • Kosumbo
  Kosumbo

  துரோகிகள் என்று இன்கரிசனையுள்ளவர்களை கூறித்திரிந்த புலிகளும் புலி ஆதரவுகளும்தான் உண்மையில் இனத்துரோகிகள் என்பதை உலகம் உணரத்தொடங்கி விட்டது. பரமேஸ்வரன் போன்ற …………………….. தெரியவில்லை. அடிமனதில் மனிதம் பற்றிய சிறு ஊறல் இருந்தால் மானம் ரோசம் இதில் ஏதாவது இருந்தால் ……………………….. உண்ணாவிரத்தை முடித்ததற்குக் காரணம் சொல்லமுடியாதாம். மக்டொனால்சில் திண்டதை எப்படிச் சொல்வது. லண்டனில் உயிரோட்டமுள்ள மனிதர்கள் இருந்தால் என்ன செய்கிறீர்கள் என்று நாம் வெளிநாடுகளில் இருந்து பார்ப்போம். உங்களுக்கும் இனநேயம் மானம் வெட்கம் மனிதம் ஏதாவது இருந்தால் பரமேஸ்வரன் செயலுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? இருந்து தான் பார்ப்போமே

  Reply
 • Kosumbo
  Kosumbo

  எமது போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போனதற்குக் காரணங்கள் இப்ப புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மனதில் தூய்மை இல்லை நேர்மையில்லை எம்மக்கள்பால் அன்பில்லை நேசமில்லை இதில் ஒன்றாவது இருந்திருந்தால் புலிகளும் சரி பரமேஸ்வரனும் சரி இப்படி நடந்திருப்பார்களா? கடவுளின் பெயரை களங்கப்படத்தி விட்டானே இவன். வழக்கா? யாரை நாறடிக்க. தமிழனினத்தின் மானம் மரியாதையை தெருவில் போட்டு ஏலம் போட்டு நாத்தியது பத்தாதா? ஒருவன் ஒரு போராட்ட வடிவத்தைத் தெரிவு செய்யும் போது அந்தப்போராட்டத்தில் முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் குதிக்கக் கூடாது. திலீபனோ அன்றி பரமேஸ்வரனோ காந்தியவாதிகளும் காத்தீயத்தை நம்பியவர்களும் இல்லை. இவர்கள் மனித இன விரோதிகளே.

  Reply
 • tamils
  tamils

  பரமேஸ்வரன் பற்றி…………….
  https://tamilseithi.wordpress.com

  Reply
 • MBBS
  MBBS

  தயா இடைக்காடர் 100 மணித்தியாலம் இருந்தவர் அவர் பாவித்தது ஊசி. இவர் பாவித்தது சீஸ்.

  Reply
 • jalpani
  jalpani

  ஏன் எல்லோரும் இப்படி அதிர்ச்சி அடைகிகறீர்கள்.

  Reply
 • palan
  palan

  இந்த செய்தியின் மூலம் பரமேசுவரனை மட்டுமல்ல மாவீரர் என்றும்; மாமனிதர் என்றும்; கறுப்பு யுதர் என்றும் தமிழ் மக்களை உசுப்பேத்தி தமது வயிற்றுப்பிழைப்புக்காக வக்காலத்து வாங்குகின்ற ஐபிசி ஜிரிவி தீபம் போன்ற ஊடகங்களினதும்; ஜெகன் போன்ற அறிவிப்பாளர்களினதும் அம்மணமான தோற்றத்தை இன்று நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது.

  தேசியம் ஏதோ கடையில் வாங்கும் புசணிக்காய்; புடலங்காய் போன்றதென்று ஜெகனின் நினைப்பு.

  Reply
 • jude
  jude

  மகாத்மா காந்தி அகிம்சையை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து இறக்கும்வரை அகிம்சைவாதியாகவே வாழ்ந்து மறைந்தார். திலீபன் அப்படியல்ல உண்ணாநோன்பை ஆரம்பிக்கும்வரை ஆயுததாரியாக இருந்து ரெலோ உறுப்பினர்களையும் மற்றைய போராளிகளையும் கொன்ற இரத்த வாடை அவர் கையைவிட்டு அகலமுன் அகிம்சை வாதியானார். அதனால்தான் டிக்சித் திலீபன் என்ன காந்தியா என்று சூட்சுமமாக கேட்டார்.
  இந்த வழியில் வந்தவர்தானே பரமேஸ்வரன்.

  Reply
 • GK
  GK

  Dear Thesam Reporter Please let me know the following:
  Where did you find out actual the source for the information regarding parameswaran. As far as the information I gathered it is not from the the scotlandyard. As a journalist with years of experiance you should know scotlandyard will only reveal information when there is a need.

  On the other hand the actual process mainly the protest and unauthorised gathering cost the the met £7.1 m.The hunger strike at leasat 4 people involved) was a minor part of the process which incurred the cost to met police.For example one man Show(white guy) at the Parliment squre cost nothing to met police .So how the hell Mr.Ps Big Mac Cost £7.1m.It is extreamly shame to read some of the comments on Thesam.

  GK

  Reply
 • yaro
  yaro

  sun,daily mail நம்புகிற ஆசாமிகளும் மகிந்தாவை மதித்துப் போகிறவகளுமாக நீங்களும் உங்கள் கருத்துகளும். ஒரே மந்தைத்தனமான சிந்தனைதான். பேஷ்..பேஷ்..

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  நண்பர் ஜிகே அவர்களுக்கு
  1. தகவல் : டெய்லி மெயில் என்பது செய்தியிலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது.

  2. ஸ்கொட்லன்ட் யாட் உத்தியோகபூர்வமாக இவ்விடயமாக கருத்துத் தெரிவித்தாக டெய்லி மெயிலோ தேசம்நெற்றோ செய்தி வெளியிடவில்லை.

  3. என்னுடைய ஊடகவியல் அனுபவத்தை குறிப்பிட்டதற்கு நன்றிகள். ஸ்கொட்லண்ட் யாட் மட்டுமல்ல எந்த அதிகார அமைப்பாக இருந்தாலும் இது இலங்கையாக இருந்தாலென்ன பிரித்தானியாவாக இருந்தாலென்ன அவை தங்களுக்குத் தேவையான தகவல்களையே வெளியிடும். இன்னும் சில சமயங்களில் தேவையைப் பொறுத்து சில தகவல்களைக் கசியவிடும்.

  உள்துறை அமைச்சு அண்மையில் கன்வவேடிவ் எம் பி டேமியன் கிறீன் பற்றிய விடயத்தை கசியவிட்டதை அறிந்திருப்பீர்கள்.

  வெப்பன்ஸ் ஒப் மாஸ் டிஸ்ரக்ஸன் – செக்ஸ்ட் அப் ரிப்போர்ட் டேவிட் கெலி அன்ரு கிலிகன் ஊடகவியலாளருக்கு கசிய விட்ட தகவல்களை அறிந்து இருப்பீர்கள். அதுவே டேவிட் கெலியின் தற்கொலைக்கும் காரணமானது. (கொலை என்றும் தந்தேகிக்கப்படுகின்றது)

  4. ஆகவே உத்தியோகபூர்வமான செய்திகள் தான் உண்மையானவை என்றால் நாங்கள் வாழும் சூழலில் தேனும் பாலும் தான் ஓடும்.

  5. 7.1 மில்லியன் தமிழர்களின் போராட்டத்தை ஒட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கெ பயன்படுத்தப்பட்டது. 30 0000 பொலிசார் அதற்காகவே பணியில் அமர்த்தப்பட்டனர். அதன் அர்த்தம் அங்கு வரும் ஒவ்வொரு தமிழனும் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவார்கள் என்பதல்ல. அதில் ஒருவர் பயங்கர நடவடிக்கையில் ஈடுபட்டாலே அது பாரதூரமாக அமையும். மேலும் போராட்டத்திற்கு வரும் மக்களையும் பாதுகாக்கின்ற கடமை பொலிஸாருக்கு இருக்கின்றதல்லவா?

  6. பரமேஸ்வரன் வீட்டில் இருந்து பேகர் சாப்பிட்டு இருந்தால் அது வன்மான் சோதான். டபிள் சீஸ் பேர்கர் 1.49 அல்லது பிக்மக் 3.99 முடிந்திருக்கும். பரமேஸ்வரன் சாப்பிட்ட இடம்தான் தவறான இடம். பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன் உண்ணாவிரதம் என்ற பனருக்குக் கீழிருந்து சாப்பிட்டதே பிரச்சினை. உண்ணும் விரதம் என்று பனரில் எழுதி விட்டு சாப்பிட்டு இருந்தால் யாரும் கேட்டிருக்க மாட்டார்கள்.

  7. பரமேஸ்வரன் இப்பொது அடித்த ஸ்ரண்டில் கருணாநிதியை மிஞ்சிவிட்டார்.

  8. உண்மையிலேயே பரமேஸ்வரனின் நிலையையிட்டு எனக்கு மனவருத்தமே. அவர் தமிழ் மக்கள் மீது பற்றுக்கொண்டே இப்போராட்டத்தை நடத்தினார். தனது சுயநலனுக்காக அவர் போராடவில்லை. ஆனால் அவருக்கு முரண்பட்ட விருப்பங்கள் இருந்தது. புலிகளா தமிழ் மக்களா என்று வரும்போது அவர் புலிகளை காப்பதையே முதல் விருப்பமாகக் கொண்டிருந்தார்.

  9. அதனால் அவர் போராட இறங்கினார் தப்பில்லை. ஆனால் தன்னால் இயலாது என்ற நிலை வரும்போது அவர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டிருக்க வேண்டும். சூழற்சி முறையில் உண்ணாவிரத்ததை தொடர்ந்திருக்கலாம். ஆனால் தன்னை நம்பிய மக்களுக்கு பொய் சொன்னதே அவருடைய குற்றம். அது இப்போது பாரதுரமான எதிர்விளைவை ஏற்படுத்தி உள்ளது.

  10. எப்போதும் எதனையும் உண்மைகளுடன் எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். மிகைப்படுத்தல்களும் சிறுமைப்படுத்தல்களும் பிற்காலத்தில் எதிர்விளைவையே ஏற்படுத்தும்.

  Reply
 • ravana
  ravana

  தகவல் மூலம் டெய்லி மெயில் என்பது சரி. ஆனால் அது ஸ்கொட்லண்ட்யார்ட்டின் உத்தியோகபூர்வ தகவலல்ல. அதேபோல் உத்தியோகபூர்வமான செய்திகள் தான் உண்மை என்றில்லை என்றாலும் கூட நீங்கள் குறிப்பிட்டபடி அவர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களையே வெளியிடும் அந்தத் தேவைக்குப் பின்னால் அவர்களுடைய நலன்கள் தான் ஒளிந்திருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை. அந்த நலன்களுக்கும் உண்மைக்கும் கட்டாயமாகச் சம்பந்தம் இருக்க வேண்டியதுமில்லை. ஊடகவியலில் இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.

  மற்றையது சாதாரண ஊடக தர்மத்தின்படி இது குறித்து டெய்லி மெயிலோ அல்லது சண்ணோ சம்பந்தப்பட்டவரைத் தொடர்பு கொண்டு அவரது அபிப்பிராயத்தை வெளியிட முயலவில்லை.

  இதற்கும் மேலாக அந்தப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் அதனை நிறுத்துவதற்குப் பலதடவை பல்லேறு வழிகளில் பொலிஸார் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தனர். அதனால் கைகலப்பும்கூட நடந்தது. அதற்குப் பதிலாக அதனை அன்றே வெளியிட்டிருந்தால் இலகுவாக போராட்டத்தை நிறுத்தி இருக்கலாம். அதனைச் செய்யாமல் இப்போது சொல்லும் காரணம் திருப்தியாக இல்லை. தேவையானால் இன்றும் ஆயிரம் பொலிஸாரை நிறுத்தி ஒரு வாரத்திலோ அல்லது இரண்டு வாரத்திலோ இதனை நிறுத்தி இருந்தால் இவ்வளவு செலவீனம் ஆகியிருக்காதல்லவா? 7.1 மில்லியனுக்குப் பதிலாக அது 1.1 மில்லியனாக அல்லது 2.1 மில்லியனாக மட்டுமே இருந்திருக்கும்.

  ஆக பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டார் என்று கொண்டாலும் கூட அதனை அப்போது வெளியிடாது இப்போது வெளியிடுவதற்கும் மக்களின் நலன்களுக்கும் உள்ள தொடர்பை விட அதிகாரத்திற்கும் அதன் நலன்களுக்குமான தொடர்பு வலுவானது. எனவே அதிகாரத்தையும் அதிகாரத்தின் தேவைகளையும் புரிந்து கொள்ளாமல் அவற்றை எழுதுவது ஊடக தர்மமாகாது.

  பரமேஸ்வரனையும் அந்தப் போராட்டத்தையும் கேள்வியெழுப்பியது சரியானது. ஆனால் அதேயளவுக்கு அந்தப் பத்திரிகைகளையும் ஸ்கொட்லண்யார்ட்டையும் தேசம் கேள்வியெழுப்பவில்லை. இதனால் தான் தேசம் முற்சாய்வுடன் செயல்படுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

  தேசம் வெறுமனே அந்த ஆங்கிலப் பத்திரிகையின் மொழிபெயர்ப்பைத் தந்திருந்தால் அது வேறு. ஆனால் அவ்வாறன்றி தனது அபிப்பிராயத்தையும் சேர்த்து எழுதியிருப்பது தான் தேசத்தின் வழுகலை உறுதிப்படுத்துகிறது.

  Reply
 • பல்லி
  பல்லி

  பல்லிக்கு பரமேஸ்வரனை அறுவை சிகிச்சை செய்வதில் உடன்பாடு இல்லை; காரணம் அன்று ஒரு மனிதனை(பரமேஸை) திலீபனாக்க
  னினைத்தை லட்ச்சகணக்கான தமிழர் வெட்கபட வேட்டிய விடயமே இது, ஆனால் பரமேஸ்வரனை பொறுத்த மட்டில் ஒரு உனர்வாளர் என்பதில் பல்லிக்கு ஒரு துளிகூட சந்தேகம் இல்லை; ஆனால் இது பற்றி பரமேஸை இந்த பட்டிணி போராட்டம் அர்த்தம் அற்றது என அன்றே எனது பின்னோட்டம் இதே தேசத்தில் எழுதினேன்; (தேசத்தில் மட்டுமே பல்லியின் எழுத்து)ஆனால் அவரே ஏதோ தடங்கலுக்கு வருந்துகிறோம் என்பது போல் ஒதுங்கி இருக்கும்போது அவரை நாம் மல்லுக்கு அழைப்பது நாகரிகமா?
  ஆனாலும் இதுபோல இனியும் தவறுகள் இருக்காமல் இருக்க இது ஒரு நல்ல பாடம், பரமேஸ் சாப்பிட்டாரா? இல்லையா? என்பது பல்லிக்கு தெரியாது, ஆனால் அவர் சாப்பிட்டால் அனைத்தையும் கடந்து மகிழ்ச்சி அடையும் முதல் மனிதர் பல்லியே, காரணம் பல்லியும் ஒரு மனிதந்தானே,

  Reply
 • jalpani
  jalpani

  அந்தப் பத்திரிகைகளையும் ஸ்கொட்லண்யார்ட்டையும் தேசம் கேள்வியெழுப்பவில்லை”

  சனல் 4 ,ரைம்ஸ்………..???

  Reply
 • kamal
  kamal

  பிரிட்டிஸ்பொலிஸ் கஞ்ஞா விற்பவனுடன் சேர்ந்து வித்து களவெடுக்கிறவனுடன் சேர்ந்து திரிந்து குடிகாரங்களுடன் சேர்ந்திருந்து குடித்து நல்ல நீளக் கயித்திலை விட்டு பிரச்சினையை ஆணிவேரோடை பிடுங்குவான். நிண்டவாக்குக்கு நம்மட ஆட்கள் மாதிரி முடிவெடுக்காங்கள். அதேமாதிரி தமக்கு தேவையானபோது தேவையானதை வெளிவிடுவாங்கள். நீங்கள்ளாம் ஏன் குத்தி முறிவான்.

  தமிழரை கொலை செய்ய ஆயுதங்கள் மகிந்தாவுக்குக் கொடுத்துக் கொண்டு லண்டனில ஊர்வலம் ,கூட்டம் ,உண்ணாவிரதம், றோட்டு மறியல் போராட்டம், தேம்ஸ் நதிப் போராட்டம் எல்லாத்துக்கும் விட்டாங்களே…

  இதுபோல கூத்துக்கள் எதிர்வரும் காலத்தில் எந்த இனமும் செய்ய முடியாமல் நாட்டைப் பாதுகாக்க 7 என்ன, 70 மில்லியனையும் செலவு செய்வாங்கள். 1 மில்லியன் 2மில்லியன் செலவோட செய்திருக்கலாம்தானே என்று கணக்குப் பார்ப்பது தமிழரின் சாகும்வரை காசு சேர்க்கும் புத்தியும் மனமும்தான்.

  Reply
 • sangu
  sangu

  இந்த உண்ணாவிரதப் போராராட்டத்தில் ஏதே தில்லு முள்ளு நடப்பதாக முன்னாள் பிரிஎப் உறுப்பினர்களிடையே சச்சரவு ஏற்பட்டதை நாம் கேள்விப்பட்டதுண்டு.

  அதைவிட மிக முக்கியமான விடயம் இப்படி பேகர் சாப்பிட்டு இருந்தவரை பரிசோதித்த பிரிஎப் டாக்டர்கள் வெளியிட்ட அறிக்கைகள். எவ்வளவு பொய்யர்களாக இந்த டாக்டர்கள் நடந்துள்ளார்கள் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். இலங்கை வட கிழக்கு டாக்டர்கள் மருத்துவக் குழு இந்த டாக்டர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க முன்வருமா? காரணம் இப்படியான டாக்டர்கள் சமூகத்தில் மருத்துவம் செய்வதும் ஆபத்தானது.

  உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட புலிஆதரவளார்களால் வீடியோ படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.

  Reply
 • Nick
  Nick

  Most of these people came to the developed world as bogus refugees. politicians seeking their block vote is dictating and making unreasonable demands from a democratically elected government of Sri Lanka.
  Shame on every one.

  Reply
 • thambi
  thambi

  By STAFF REPORTER Published: 09 Oct 2009

  A MAN whose hunger strike was at the centre of a demonstration which cost police £7MILLION was secretly snacking on McDonald’s burgers, it was revealed today.
  Activist Parameswaran Subramaniyan protested for weeks outside the Houses of Parliament with hundreds of other Tamils about unrest in Sri Lanka.

  The protest ended in June after severely disrupting London traffic and costing surveillance cops a whopping £7.1million in overtime.

  Now it has been reported that cheeky Subramaniyan was being smuggled cheeseburgers THROUGHOUT his time on “hunger strike”.

  Big Mac

  Police surveillance teams were shocked when they apparently caught the protestor tucking into his snacks on specialist monitoring equipment.

  But cops decided against confronting the bogus striker because they were worried it could cause a riot, it was claimed.

  A police insider revealed: “In view of the overtime bill, this has got to be the most expensive Big Mac ever.”

  One source added: ‘This was such a sensitive operation that it was felt officers could inflame the situation if we brought the hunger strike and demonstration to a premature end. This is a further example of the complexities of policing London today.’

  The cost of policing the Tamil demonstrations was more than the total amount of overtime claimed during the G20 summit in London in April.

  And it cost nearly as much as the operation to stop Britain’s biggest terrorist plot to blow up several trans-Atlantic flights in 2006 which cost £7.3million.

  Police kept a 24-hour presence in Parliament Square from April 6 to June 17.

  There were hundreds of protestors at the demonstration every day during the Sri Lankan government’s push to end its 25-year civil war.

  The protestors wanted the British government to stop Sri Lanka bombing a Tamil Tiger stronghold where thousands of civilians were trapped.

  Full details of the overtime claimed were revealed to the Metropolitan Police Authority.

  Tim Hollis, a vice president of the Association of Chief Police Officers, said in the MPA paper: “Overtime figures reflect the realities of modern policing, including its unpredictability.

  “It must be remembered that overtime generally reflects a cost effective and flexible way of meeting additional demands.

  “It must, however, be always carefully monitored, calculated and authorised.”

  The Metropolitan Police said in a statement: “The policing operation for the demonstration within Parliament Square also catered for a number of associated events and protest sites.

  “This included an increase in resources for Prime Minister’s Questions, the London Marathon, a march in support of the Tamil community totalling 110,000 people-and protests at the Indian and Sri Lankan High Commissions.

  “A total of 29,838 officers worked during this 72-day period.

  “Levels of officers deployed varied based on what police were dealing with.

  “The peak for the static protest in Parliament Square reached 5,000. A march on April 11 was attended by in the region of 100,000 people.”

  Read more: http://www.thesun.co.uk/sol/homepage/news/2675398/Hunger-striker-was-lovin-it.html#ixzz0TWiIWWUF

  Read more: http://www.thesun.co.uk/sol/homepage/news/2675398/Hunger-striker-was-lovin-it.html#ixzz0TWiA0x72

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  நண்பர் ராவணா சுட்டிக்காட்ட முற்படும் விடயத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நாம் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு செய்தியிலும் அந்த சமன்பாட்டைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இருப்பதாக எண்ணவில்லை.

  சண் டெய்லி மெயில் ரைம்ஸ் ரெலிகிராப் போன்ற பத்திரிகைகள் வலதுசாரிப் பத்திரிகைகளே. இதே பத்திரிகைகள் குறிப்பாக சண் ரைம்ஸ் தமிழ் மக்கள் வன்னியில் அனுபவித்த அவலங்களையும் எழுதி உள்ளன. பிரித்தானிய பா உ க்களின் தவறான நிதிக் கையாள்கையை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தியது டெய்லி ரெலிகிராப்.

  அதற்காக இப்பத்திரிகைகள் ஏன் இச்செய்தியை வெளியிடுகின்றன என்று ஆராய்ந்து அந்தச் சமன்பாட்டைப் பொருத்திப் பார்த்து மதிப்பிட வேண்டிய தேவையில்லை என்றே கருதுகிறேன்.

  ஆனால் பத்திரிகைகளின் போக்குகள் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதும் போது நீங்கள் குறிப்பிடும் விடயத்தை நிச்சயமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  மேற்குறிப்பிட்ட செய்தியில் முக்கிய அம்சம் பரமேஸ்வரன் தன்மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு உண்மையாக இருக்கவில்லை என்பதே.

  தமிழ் மக்களுடைய போராட்டத்தை தடுத்து நிறுத் பிரித்தானிய பொலிஸார் பல தடவை முயற்சித்தனர் என்பது உண்மையற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் லண்டனின் இதயப்பகுதியான வெஸ்ற் மினிஸ்ரரின் போக்குவரத்தை தடைசெய்த போதே அவர்கள் மீளவும் வீதியோரத்திற்க தள்ளப்பட்டனர்.

  வெறுமனே பொலிஸ் அதிகார வர்க்கத்தின் குறியீடு அவர்கள் மக்களின் பொராட்டங்களை ஒடுக்குகின்றனர் எனப் பார்க்க முடியாது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கவலையும் ஆதங்கமும் இந்த ஆர்பாட்டக்காரர்கள் ஏன் இந்தியா சீனா ரஸ்ய து}தரகங்களிற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்யாமல் தங்கள் பாராளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதே. ஆகையால் ஒரே சமன்பாட்டை அனைத்திற்கும் பயன்படுத்துவது பொருத்தமாக இராது. இந்தியா சீனா ரஸ்யா ஆகிய து}தரலயங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தால் பிரித்தானிய அரசும் பொலிசாருமே இரட்டிப்பு மகிழ்சி அடைந்திருப்பார்கள்.

  தேசம் இன்றல்ல ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஒரே அரசியல் நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. ஆனால் அதனை அளப்பவர்களும் அளவுகோல்களும் தான் காலத்திற்குக் காலம் மாறி உள்ளது.

  நண்பர் யாழ்பாணியின் கேள்வி எழுப்புகின்ற விடயம் ஒப்புக்கு ஒப்பாரி வைக்கின்ற விடயம் இவற்றைக் கடந்து நாம் செல்ல வேண்டி உள்ளது. சமன்பாடுகளை மீளவும் வடிவமைக்க வேண்டும். சமன்பாடுகளை கேள்வி எழுப்ப வேண்டும்.

  தொடர்ந்தும் கருத்துக்களைப் பரிமாறுவோம். அதன் மூலம் புதிய அம்சங்களுக்கு முகம் கொடுக்க முடியும்.

  த ஜெயபாலன்.

  Reply
 • Nick
  Nick

  முள்ளிவாய்க்காலில் அம்மணமானதாலேய்தான் இன்று எல்லா உண்மைகளும் ஊத்தைகளும் அழுகல்களும் வெளிவரத் தொடங்கி விட்டன.
  இப்பவே நாற்றம் தாங்க முடியவில்லை இன்னும் எத்தனை வெளிவர இருக்கோ?

  சீள்பிடித்த கொலைவெறி மிக்க பணத்தாசையும் நிலத்தாசையும் பொன்னாசையும் பிடித்த கோழையர் கூட்டம் நாங்கள் என்று இன்று எல்லாருக்கும் அம்பலமாகி விட்டது

  Reply
 • sumi
  sumi

  உலகத்திலுள்ள வெள்ளைக்காரர்கள் சில விடயங்களை புரிந்து கொள்வதில்லை. உண்ணாவிரத போரட்டம் செய்பவர்கள் எப்படியாவது, மறைவிலாவது, இரவிலாவது, தினம் ஒரு முறையாவது சாப்பிட்டா விட்டால் எப்படி உண்ணாவிரதத்தை தொடரமுடியும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஏதேதோ உளறுகின்றார்கள். இதை உண்ர்ச்சியுள்ள தமிழர்களாகிய நாம் பெரிது படுத்துவது பெரும் தவறு.இது என்ன சிவராத்திரி அல்லது நவராத்திரி விரதமா உண்ணாமலிருக்க….”தமிழனென்று சொல்லடா- வயிறு முட்ட தின்னடா”.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  //ஆனால் அவர் சாப்பிட்டால் அனைத்தையும் கடந்து மகிழ்ச்சி அடையும் முதல் மனிதர் பல்லியே, காரணம் பல்லியும் ஒரு மனிதந்தானே//
  பல்லின் இந்தவார்த்தையில் குசும்புவுக்கு உடன்பாடில்லை. பரமேஸ்வரன் போல் பல்லி சத்தியாக்கிரகம் இருந்திருந்தால் இப்படி செய்திருக்குமா என்பது சந்தேகமே. நான் பல்லியின் பின்நோட்டங்களைப் படித்து வருபவன் மட்டுமல்ல ஒரோ பாசறையில்…..? நேர்மையினதும் தூய்மையினதும் எதிரி பொய்> ஏமாற்றுதல் இவை இரண்டையும் கூசாமல் பரமேஸ்வரன் செய்துள்ளார். நான் நினைக்கிறேன் பல்லியாய் இருந்தாலும் சரி குசும்பாக இருந்தாலும் சரி என்னால் தொடர்ந்து இருக்க முடியவில்லை என்று உண்ணாவிரதத்தைக் கலைத்திருப்பேன். அதில் வீரவசனங்கள் ” தான் மயங்கும் நிலைக்கு வந்து வைத்தியத்துக்காக எடுத்துச் சென்றால் மீண்டும் வந்து இருப்பேன். ஏன் மீண்டும் இருக்கவில்லை அப்பனே? தண்ணீர் குடித்தபடி உண்ணாவிரதம் இருந்தாலும் சக்தி அற்றுப்போவதால் கொழுப்பில் இருந்தே சக்தி எடுக்கப்படும். பரமேஸ்வரனின் படங்களை பேட்டியைப் பாருங்கள் 21 நாள் சாப்பிடாதவர்கள் மாதிரியா இருக்கிறது? கண்ணில் தூக்கமில்லை முகத்தில் முழுமையான சோர்வில்லை பேச்சில் உறுதிஉண்டு கடசிநாள் பேட்டி இது. அறிவுள்ளவர்களே ஆறாவது அறிவால் அறிந்து கொள்ளுங்கள். பிரித்தானிய மருந்துவர்கள் நாம் சொல்லும் கொடுக்கும் தரவுகளை வைத்துத்தான் வைத்தியம் செய்வார்களே தவிர சந்தேகக் கண்ணுடன் பார்த்திருக்க மாட்டார்கள்

  http://www.youtube.com/watch?v=FoZGDlg1Lzw

  Reply
 • Kusumbo
  Kusumbo

  பரமேஸ்வரன் அதிர்வுக்குக் கொடுத்த பேட்டியில் தன்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் பிரித்தானிய பத்திரிகைகளுக்கு எதிராக தான் எந்த நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்றும் கூறிய யூரியும் தொடர்வை கீழே தருகிறேன். இதை இலங்கை அரசே திட்டமிட்டுச் செய்துள்ளது என்றும் கூறுகிறான். இவ்வளவு சர்ச்சையும் ஏற்பட்டும் மெளனமாக இருப்பதற்குக் காரணம் என்ன? சிங்கள அரசிசை சுலபமாகச் சாட்டி விட்டு இருந்து விடலாம். உண்மை நேர்மை இருந்தால் உடனடியாக இதைப்பற்ற எழுதிய பத்திரிகை> ஸ்கொட்லண் யாட்டுடன் தொடர்புகொண்டு தகவலை வெளியிட வேண்டியது தானே. தொடர்ந்து தமிழர்களை முட்டாளாக்காது எமது மக்களின் அபிலாசைகளை மழுங்கடிக்காது வெளியில் வரவேண்டியது தானே
  http://www.youtube.com/results?search_query=Parameshwarn&search_type=&aq=f

  Reply
 • பல்லி
  பல்லி

  //பல்லி சத்தியாக்கிரகம் இருந்திருந்தால் இப்படி செய்திருக்குமா என்பது சந்தேகமே. //
  குசும்பு இதில் தங்களுக்கு சந்தேகம் வேண்டாம், அப்படி தறுதலைதனத்தை பல்லி விரும்ப மாட்டேன்; அப்படி ஒருவேளை குசும்பு போன்றோர் என்னை சத்தியாகிரகம் இருக்க வைத்தால் கண்டிப்பாக கமராவின் கண்களுக்கல்ல, சபையோரின் கண்எதிரேயே சாப்பிடுவேன், சத்தியா கிரகம் குசும்புவுக்காக(மக்களுக்காக) சாப்பாடு பல்லிக்காக(என் உடலுக்காக) சரி விடயத்துக்கு வருவோம், குசும்பு இதை கவனிக்கவும்;

  //அனைத்தையும் கடந்து மகிழ்ச்சி அடையும் முதல் மனிதர் பல்லியே, காரணம் பல்லியும் ஒரு மனிதந்தானே//
  உங்களுக்கு சாதகமானதை எடுத்து கொண்டு எனக்கு சாதகமானதை விட்டு விட்டீர்களே;
  குசும்பு காந்தி கூட அவரது இல்லத்தில் அவரது பெற்றோரின் இறுதி சடங்கின்போது பொறுமை இழந்து ரகசியமாக தனது பாலுனர்வு பசியை இருட்டில் போய் முடித்ததாக அவரது வாக்குமூலமான சத்திய சோதனை சொல்கிறது, ஆனால் பரமேஸ்வரன் செய்த காரியம் சரியானது என்பது எனது வாதமல்ல, ஆனால் குற்றமற்றது என்பதே; ஒரு மனிதனை பட்டினி போட்டு சாகடிக்க ஒருலட்ச்சம் பேர் கூடி கும்மாளம் போட்டதை
  விட்டுவிட்டு தனது ஏலாமையால் செய்த தவறை காலம் கடந்து காட்டி கொடுப்பதால் என்ன பிரயோசனம் என்பதே என் கேள்வி பரமேஸ்வரனை மட்டுமல்ல அன்று உண்ணாவிரதம் இருந்த பலரை பட்டிணி போர் என கேலியுடன் விமர்சனம் பல்லிதான் செய்தேன்; ஆனால் பரமேஸ்வரன் உண்ணா நோன்பை முடிவுக்கு வந்தபோது ஒரு பேட்டியில் சொல்வார், சில விடயங்களை நான் வெளியில் சொல்ல முடியாதவனாய் இருக்கிறேன் என? அதுவே இந்த கம்பேக்கர் விடயமாககூட இருக்கலாம்; பரமேஸ்வரனை காப்பாத்துவது என் நோக்கமல்ல, தனது தவறை உனர்ந்து ஒதுங்கிய அவரை அவரது வாழ்வை நாம் ஏன் கெடுக்க வேண்டும்,

  சங்கரியருக்கு கொடுக்கபட்ட விருது எதுக்கு, அதன்படி அவரது செயல்கள் உள்ளனவா? இருப்பினும் நாம் அவரை விமர்சிக்கிறோமா? அவரது அனுபவம் வயதுக்கே இப்படியான கடபுடாக்களை செய்யும்போது இந்த வட்டன் ஏதோ வயதுகோளாறில் செய்த தவறை மன்னிக்கலாம் என்பதே எனது வாதம், 21 அறிவு ஜீவிகள் செய்த கோல்மாலகளையே சரியெனவும்; தப்பில்லை எனவும் விவாதம் செய்யும் நாம் (பல்லியல்ல) பரமேஸை கூண்டில் நிறுத்தி கேள்வி கேப்பது பல்லிக்கு நியாயமாக படவில்லை, அரசியல் சாணகியன்; ஊடக பெருமைமிக்கவர், ஈழனாடு வாத்தியார் என பல பட்டங்களை இலவசமாக வேண்டிய ;;;;;;;;;; க்கு இதுவரை விமர்சிக்க முற்பட்டவர்கள் சிலரே; ஆனால் பரமேஸ்வரன் சாப்பிட்டு விட்டானாம் என்பதை படம்பிடித்து காட்ட பலபேர், ஆக மக்களின் சாப்பாட்டில் மண்ணை போடுபவனை விட பசியில் சாப்பிட்டவனே குற்றவாளி என வாதாட பல்லிக்கு தெரியாது தெரியாது; இருப்பினும் இந்த கட்டுரையின் மூலம் பலருடன் மல்லுகட்டவே பல்லி விரும்புகிறேன்;

  Reply
 • jalpani
  jalpani

  அந்தப் பத்திரிகைகளையும் ஸ்கொட்லண்யார்ட்டையும் தேசம் கேள்வியெழுப்பவில்லை”

  சனல் 4 இரைம்ஸ்………..???
  நண்பர் யாழ்பாணியின் கேள்வி எழுப்புகின்ற விடயம் ஒப்புக்கு ஒப்பாரி வைக்கின்ற விடயம் இவற்றைக் கடந்து நாம் செல்ல வேண்டி உள்ளது”

  தவறாக புரிந்து கொண்டீர்கள். பரமேஸ்வரனின் செய்தியைப் போட்ட பத்திரிகைகளை சந்தேகிப்பவர்கள் சனல் 4 லும் ரைம்ஸிலும் வந்தவற்றையிட்டு சந்தேகப்படவில்லையே. தங்களுக்கு சாதகமானவை தாங்கள் விரும்புபவை வந்தால் சரி. தங்களுக்கு பிடிக்காதது வரக் கூடாது என்றால் எப்படி?

  Reply
 • BC
  BC

  //பசியில் சாப்பிட்டவனே குற்றவாளி என வாதாட பல்லிக்கு தெரியாது //

  தானே உண்ணாவிரதம் அறிவித்து வீர வசனம் பேசி எல்லோரையும் ஏமாற்றிய மோசடி நாடகத்தை தான் எல்லோரும் விமர்சிக்கிறார்கள்.சோறு கறி மட்டும் உண்ணாவிரதம் என்று அவர் அறிவித்து இருக்கலாம்.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  பல்லி! பிழைகள் சரிகள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன: ஆனால் பரமேஸ்வரன் உண்ணா விரதம் இருந்த காலம் மக்களை ஏமாற்ற முயற்சித்த விதம் தான் விமர்சனத்துக்குரியது. மேலும் அன்றும் மக்கள் எமக்கு என்ன வந்தது என்று இருந்த படியால்தான் சகோதரப் படுகொலைகள் கண்மூடித்தனமாய் நடந்தேறின. சுத்தரத்தைச் சுட்டபோது மற்ற இயக்கங்கள் மக்கள் தம் எதிர்ப்புகளை பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் எதிராக காட்டியிருந்தால் இன்று பிரபா நந்திக்கடலில் செத்திருக்க மாட்டான். மக்களின் எதிர்ப்பு விமர்சனங்கள் என்பன சிந்திப்பதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. மக்கள் சிலவிடயங்களை கவனிக்கவில்லை விமர்சிக்கவில்லை என்பதற்காக எல்லாவற்றையும் அப்படியே விட இயலாது.

  பரமேஸ்வரனை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. கட்டாயப் படுத்தியிருந்தாலும் அவரால் மறுத்திருந்திருக்க முடியும். இவருக்கு இந்தச் சத்தியாக் கிரகத்தால் ஒருகல்லில் இருமாங்காய் அல்ல 3 மாங்காய்கள். அவருக்கு வதிவிட உரிமை கிடையாது. நாட்டில் போர் முடிந்தாலும் அவர் நாட்டுக்குப் போ என்று அழுத்தம் கொடுக்க இயலாது. காரணம் புலிகளுக்குச்சார்பாக அரசுக்கு எதிராக உண்ணா விரதம் இருந்தவர். விலாசம் தியாகி என்ற பெயர். இப்படி பல சுயநலங்கள் பின்னின்றன. தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னிக்கலாம் தெரிந்து செய்யும் பிழைகளை எப்படி மன்னிப்பது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஏமாற்று வேலைகள். இப்படியான தவறுகளை எந்தச் சட்டமும் மன்னிப்பதில்லை. 1000 குற்றவாளிகள் வெளியில் இருந்தாலும் ஒரு குற்றவாளி தண்டிக்கப்படக் கூடாது என்பதில் சட்டம் கூட உறுதியாக இருக்கிறது. மன்னிப்போம் திட்டமிட்டு ஏமாற்றாதவர்களை. இது பரமேஸ்வரனுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  //எனது வாதம், 21 அறிவு ஜீவிகள் செய்த கோல்மாலகளையே சரியெனவும்; தப்பில்லை எனவும் விவாதம் செய்யும் நாம் (பல்லியல்ல) பரமேஸை கூண்டில் நிறுத்தி கேள்வி கேப்பது பல்லிக்கு நியாயமாக படவில்லை, அரசியல் சாணகியன்; ஊடக பெருமைமிக்கவர், ஈழனாடு வாத்தியார் என பல பட்டங்களை இலவசமாக வேண்டிய ;;;;;;;;;; க்கு இதுவரை விமர்சிக்க முற்பட்டவர்கள் சிலரே; ஆனால் பரமேஸ்வரன் சாப்பிட்டு விட்டானாம் என்பதை படம்பிடித்து காட்ட பலபேர், ஆக மக்களின் சாப்பாட்டில் மண்ணை போடுபவனை விட பசியில் சாப்பிட்டவனே குற்றவாளி என வாதாட பல்லிக்கு தெரியாது தெரியாது// பல்லி

  1. ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி விவாதிக்கும் போது மற்றுமொரு விடயத்தை சுட்டிக்காட்டி அதன் அடிப்படையில் இதனை மதிப்பிடுவது தவறு. //21 அறிவு ஜீவிகள் செய்த கோல்மாலகளையே சரியெனவும்; தப்பில்லை எனவும் விவாதம் செய்யும் நாம் (பல்லியல்ல) பரமேஸை கூண்டில் நிறுத்தி கேள்வி கேப்பது பல்லிக்கு நியாயமாக படவில்லை.// பல்லி – ஒரு தவறை மற்றுமொரு தவறால் நியாயப்படுத்த முடியாது.

  2. //பரமேஸ்வரன் சாப்பிட்டு விட்டானாம் என்பதை படம்பிடித்து காட்ட பலபேர் ஆக மக்களின் சாப்பாட்டில் மண்ணை போடுபவனை விட பசியில் சாப்பிட்டவனே குற்றவாளி.// பல்லி
  பசிக்கொடுமையில் ஒரு இளைஞன் சாப்பாட்டைத் திருடிச் சாப்பிட்டு இருந்தால் நீங்கள் முன்வைக்கும் வாதம் நியாயமானது. இங்கு பரமேஸ்வரன் பற்றிய விடயம் அவர் பசியால் சாப்பிட்டதல்ல. போராட்டத்திற்கு அழைக்கப்படடவர்களுக்கும் இவ்வாறான போராட்டங்களில் நம்பிக்கை வைத்தவர்களுக்கும் உண்மையாக நடக்காததே.

  தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்த போது அன்றைய இளைஞர்கள் உணவு தீத்தினார்களே அவ்வாறு பரமேஸ்வரனுக்கும் உணவைத் தீத்தியிருந்தால் எவ்வித பிரச்சினையும் இல்லை.

  இச்சம்பவத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இயன்றவரை உண்மையாகவும் நம்பகமாகவும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும். ஸ்ரண்டுக்காகவும் புகழாரங்களுக்காகவும் செயற்பட வேண்டியதில்லை. நாங்கள் சாதாரண மனிதர்கள் எங்களைச் சுற்றி விம்பங்களைக் கட்டிவிட்டு அந்த விம்பங்களைக் காப்பாற்ற கோமாளித்தனங்கள் செய்வது தவறு.

  3. பரமேஸ்வரனுக்கு நடந்த சம்பவத்தில் பாவம் பழியும் பரமேஸ்வரனை மட்டுமே சுற்றியுள்ளது. ஆனால் உண்மையில் பரமேஸ்வரனை இந்த வழியில் வழிநடத்திய ரிவைஓ பிரிஎப் மற்றும் அவரைச் சுற்றி இருந்தவர்களே இதற்கு முக்கிய காரணம்.

  4. தவறுகளை தவறு என ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய் சொல்லப் பொகின்றோம். ஏற்கனவே பிரித்தானிய அரசு உறுதி மொழி தந்தது உறுதி மொழி இரகசியமானது என்றெல்லாம் சொல்லிக் கொண்டுள்ளோம் மக்கள் போராட்டத்தில் மக்கள் முன்னிலையில் உண்ணாவிரதம் இருந்தவருக்கு என்ன இரகசிய உறுதிமொழி?

  Reply
 • ravana
  ravana

  தன்மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு பரமேஸ்வரன் உண்மையாக நடந்து கொள்ளவில்லை எனும் போதும் இந்தப் போராட்டத்தின் பால் நம்பிக்கை கொண்டிருந்த மக்களை அவர் ஏமாற்றி விட்டார் எனும் போதும் அதன்காரணமாக முழுத் தமிழ் மக்களுமே தலைகுனிந்து நிற்க நேரிடுகிறது எனும் போதும் கோபம் எழுவது இயல்பு. அதுவே உண்மையாயின் அது மன்னிக்கக்கூடியதுமல்ல.

  ஜெயபாலனே குறிப்பிடுவது போல இவை வலதுசாரிப் பத்திரிகைகள். ஏன்றாலும்கூட சிலவிடயங்களை அவை வெளிக் கொணர்ந்திருக்கின்றன. அவற்றுள் இதுவும் ஒன்று. நியாயம் தான். இவ்வளவையும் செய்த பத்திரிகைகள். ஸ்கொட்லண்யார்ட் விசேட சக்தி வாய்ந்த கமெராவால் ஒளிப்பதிவு செய்ததிலிருந்து ஒரு சில புகைப்படங்களை அல்லது ஒரு சிறிய வீடியோ கிளிப்பை ஏன் வெளிக் கொண்டுவரவில்லை என்கிற பாமரத்தனமான கேள்வியில் நமது அரசியல் சறுக்கி விழுந்து விடுகிறது அல்லவா?

  இரண்டாவது இதனை அந்நேரமே வெளியிட்டிருந்தால் தாங்கள் பரமேஸ்வரன் மற்றும் புலிகளால் ஏமாற்றுப்பட்டிருக்க மாட்டோம், குறைந்த பட்சம் அவர்களை அன்றே புறக்கணித்துவிட்டு தமது உறவுகளைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தை தாமே கையிலெடுத்திருப்போம் என்றும் தமது உறவுகளை இழந்து வலியோடும் துயர் மனதோடும் உள்ள மக்கள் ஸ்கொட்லண்ட்யார்ட் ஏன் அன்றே இதனை வெளியிடவில்லை என்று எழுப்புகிற கேள்வியின் பாரத்தில் நியாயத் தராசு அவர்கள் பக்கம் சாய்ந்து விடுகிறது அல்லவா? தேசம் உட்பட மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் அனைவரும் விடுதலைப் புலிகளின் எகபோக தலைமையிலிருந்து மக்கள் கரங்களில் விடுதலைப் போராட்டம் வந்து விட வேண்டும் என்று தானே இத்தனை விமர்சனைங்களையும் எழுத்துக்ளையும் முன்வைத்து வருகிறோம். இல்லையென்று சொல்லிவிட முடியுமா?

  ஆக, மக்கள் நலன்களை முதன்மைப்படுத்துகிற அவர்கள் வெற்றிபெறுகிற எல்லா வாய்ப்பக்களையும் அடைத்துவிட்டு இப்போது கசிந்ததும் கண்டு பிடித்ததும் என்று எழுதுவதில் யாருக்கு இலாபம்? எல்லோரும் சேர்ந்து பரமேஸ்வரனையும் புலிகளையும் இன்னுமொருமுறை திட்டிவிட்டுப் போகலாம் அவ்வளவு தானே. அதற்கு தேசம் நெற்றும் பலியாக வேண்டுமா என்பதனால் தான் நான் முன்னர் அக்குறிப்பை எழுதியிருந்தேன்.
  தேசம்நெற்றை ஆரம்பத்திருந்து முழுமையாக நான் வாசித்தவனல்ல. ஆனால் நான் வாசித்தவற்றுள் தேசம் நெற்கொண்டுள்ள ஒற்றைப்பரிமாண நிலைப்பாடு தான் – அவர்களே குறிப்பிடுகிற மாறா நிலைப்பாடு தான் -அதன் தவறான அம்சம் என்று கருதுகிறேன். ஊடகவியலின் ஆய்வின் அடிப்படை அம்சம் உண்மைகளிலிருந்தும் ஆய்விலிருந்தும் முடிவுக்கு வருவது. அது தான் ஊடகவியலுக்கு உள்ள ஒரேயொரு சமன்பாடு. உண்மை என நாம் ‘நம்புபவற்றிலிருந்து’ ஆய்வு நடத்துவதல்ல. தேசம்நெற்றின் பல கட்டுரைகளை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும்.

  சணல் 4 தொடர்பாக: இலங்கை அரசாங்கம் போர்க்குற்றம் செய்திருக்கிறது என்று கூறி அதற்கான ஆதாரமாக ஜேடிஸ் என்ற அமைப்பினர் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். அது தான் சணல் 4இல் வெளியானது. இப்போதுள்ள பிரச்சினை அந்த வீடியோ உண்மையா பொய்யா என்பது பற்றியது தான்.
  பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டது அதிவிசேட கமெராவால் பதிவாக்கப்பட்டிருக்கிறது என்று இந்தப் பத்திரிகைகள் எழுதியுள்ளன. ஆனால் அந்த வீடியோவையோ அல்லது அதிலிருந்து சில புகைப்படங்களையோ அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. அவற்றை வெளியிட்டிருந்தால் இந்தச் சர்ச்சையில் பாதி தீர்ந்திருக்கும் நண்பர்களே. வீதியை மறித்து இவர்கள் லண்டன் போக்குவரத்திற்கும் இயல்பு வாழ்விற்கும் இடைய+று செய்த போதெல்லாம்வன்முறையைக் கையிலெடுத்த பொலிஸார் பதிலாக இந்த வீடியோவை வெளியிட்டிருந்தால் போராட்டம் தானாகவே கலைந்து போயிருக்கும் என்றால் ஏன் பொலிஸார் அதனைச் செய்யவில்லை என்பதும் பாமரத்தனமான கேள்வி தானே?

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  மேலே ஜெயபாலன் சொன்ன உண்ணாவிரதம், போராட்டமுறைகள் பற்றிய கருத்துகள் மிகச்சரியானவை. என்னையும் ஒரு இடத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அழைத்தனர். நான் போகவில்லை காரணம் எனக்கு அகிம்சைபோராட்டத்தில் எள்ளளவும் நம்பிக்கை கிடையாது என்பதனை நான் பலமுறை கூறியிருக்கிறேன். அவ்வாறு நம்பிக்கையற்ற ஒரு போராட்ட வழிமுறைக்கு சாட்சியாக நின்று என்னையும் உண்ணாவிரதப் போராட்டக்காரர்களையும் கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை.

  ஆனால் “…….உண்மையில் பரமேஸ்வரனை இந்த வழியில் வழிநடத்திய ரிவைஓ பிரிஎப் மற்றும் அவரைச் சுற்றி இருந்தவர்களே இதற்கு முக்கிய காரணம். ”.. எனச் சொல்வது எந்தவகையில் நியாயம் என்று எனக்குப் புரியவில்லை.

  Reply
 • முன்னாள் பொரளி
  முன்னாள் பொரளி

  தவறாக புரிந்து கொண்டீர்கள். பரமேஸ்வரனின் செய்தியைப் போட்ட பத்திரிகைகளை சந்தேகிப்பவர்கள் சனல் 4 லும் ரைம்ஸிலும் வந்தவற்றையிட்டு சந்தேகப்படவில்லையே. தங்களுக்கு சாதகமானவை தாங்கள் விரும்புபவை வந்தால் சரி. தங்களுக்கு பிடிக்காதது வரக் கூடாது என்றால் எப்படி?ஜல்பனி சனல் 4சர்சை நானும் எதிர்பர்தாதுதான் தேசம் மேகன்டுகெலஏன்தாநொ பரமேஸ்வரனின இந்தவங்குவங்கினாம் ஏன்தாநொதெரியேலா .

  Reply
 • பல்லி
  பல்லி

  :// பரமேஸ்வரனுக்கு நடந்த சம்பவத்தில் பாவம் பழியும் பரமேஸ்வரனை மட்டுமே சுற்றியுள்ளது. ஆனால் உண்மையில் பரமேஸ்வரனை இந்த வழியில் வழிநடத்திய ரிவைஓ பிரிஎப் மற்றும் அவரைச் சுற்றி இருந்தவர்களே இதற்கு முக்கிய காரணம். //
  ஜெயபாலன் எனது கருத்தும் இதை சுற்றிதான் போகிறது, அத்துடன் தவறுக்கு தவறு பரிகாரமாகாது, ஆனால் தவறில் தண்டிக்க படவேண்டியவை மன்னிக்க வேண்டியவை என இருக்கும் என பல்லி நினைக்கிறேன், உதாரனத்துக்கு ஒரு ஊடகம் சம்பந்தமான விடயத்தில் தாங்கள் தவறுவிட்டால் அது தண்டனைக்கு உரியது, காரணம் அதன் விதிமுறைகள் சட்டதிட்டங்கள் அனுபவம் இத்தனைக்கும் மேலாக தாங்கள் ஒரு ஊடகவியாளர், ஆனால் அதே தவறை பல்லி விடும்போது மன்னிக்கலாம்; காரனம் பல்லிக்கு ஊடகம் பற்றி தெரியாது;அதன் விதிமுறை தெரியாது சட்டதிட்டங்கள் தெரியாது; ஆக இதுக்கும் பரமேஸ்வரனுக்கும் என்ன முடிச்சு என ஜெயபாலன் கேக்கமாடார் என நினைக்கிறேன்,அத்குக்காக எனது வாதம்
  சரியானதல்ல; ஆனால் காலம் கடந்து செய்யும் விமர்சனமும் ஒரு வன்முறைதானே;

  // பிரித்தானிய அரசு உறுதி மொழி தந்தது உறுதி மொழி இரகசியமானது என்றெல்லாம் சொல்லிக் கொண்டுள்ளோம் மக்கள் போராட்டத்தில் மக்கள் முன்னிலையில் உண்ணாவிரதம் இருந்தவருக்கு என்ன இரகசிய உறுதிமொழி?//
  இது பற்றி நாம் அன்றே பேசியிருந்தால் கம்பேக்கர் பிரச்சனைக்கு சர்வதேச உதவி தேவைபட்டிருக்காதே;

  //தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்த போது அன்றைய இளைஞர்கள் உணவு தீத்தினார்களே//
  பல்லிக்கு பாடபுகட்டி விட்டு தாங்களே சம்பவத்துடன் சம்பவத்தை கோர்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? இருப்பினும் இந்த உண்ணாவிரதத்தை விட பரமேஸ்வரன் விரதம் எவ்வளவோ மேல், சிலர் உன்னாநோன்பு இருக்க பலரது அடுப்புகள் அனைந்த கதைகள் ஜெயபாலனுக்கு தெரியாதா என்ன? திரும்பவும் சொல்லுகிறேன் பரமேஸ்வரனை நான் நியாயபடுத்தவில்லை, அந்த நிலைக்கு அவர்மட்டும் காரனம் இல்லை ஆகவே அவரை மட்டும் விமர்சிப்பது தேவைதானா? என்பதே என் வாதம்;

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  1. //ஸ்கொட்லண்யார்ட் விசேட சக்தி வாய்ந்த கமெராவால் ஒளிப்பதிவு செய்ததிலிருந்து ஒரு சில புகைப்படங்களை அல்லது ஒரு சிறிய வீடியோ கிளிப்பை ஏன் வெளிக் கொண்டுவரவில்லை என்கிற பாமரத்தனமான கேள்வியில் நமது அரசியல் சறுக்கி விழுந்து விடுகிறது அல்லவா?//றாவனா
  இந்தக் கேள்விக்கு சனல் 4 வீடியோப் பதிவு பற்றி நான் எழுதிய கட்டுரையிலிருந்தே ஒரு பகுதியைத் தருகின்றேன்.”மேற்படி வீடியோப் பதிவின் நம்பகத் தன்மை பற்றிய கேள்விகள் எழுப்பப்படலாம். ஆனால் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் இரு தரப்பினராலும் மிக மோசமாக மீறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் சர்வதேச நாடுகளிடம் உண்டு. அதற்கான சற்லைட் புகைப்பட ஆதாரப் பதிவுகள் இரகசியமாக்கப்பட்டு உள்ளது. அவற்றை வெளியிட்டு குற்றவாளிகளைத் தண்டனைக்கு உட்படுத்த வேண்டிய தேவையிலையென சர்வதேசம் எனக் கருதும் நாடுகள் நினைக்கின்றன என்பதே யதார்த்தம்.” அரசபடைகளின் Extra Judicial Killings – சட்டத்திற்குப் பிறம்பான கொலைகள் : த ஜெயபாலன் – http://thesamnet.co.uk/?p=15441

  ஸ்கொட்லண்ட் யாட் இச்செய்தியை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. அதனாலேயே மேற்படி விடியோ கிளிப் வெளிவரவில்லை. அவர்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடாததற்கு அரசியல் காரணங்கள் நிச்சயம் உண்டு.
  அ. இலங்கை யுத்தத்தில் லண்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் வாக்குகளிலும் கணிசமான அளவில் தங்கி உள்ளனர்.
  ஆ. இலங்கை யுத்தத்தில் இலங்கை அரசு பிரித்தானியா உட்பட மேற்கு நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
  இ. மேற்கு நாடுகளில் இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தத்தை இறுக்கி வந்தது பிரித்தானிய பிரதமரும் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சருமே.
  இக்காரணங்களின் பின்னணியில் பார்க்கும் போது மேற்படி விடியோ பதிவை அன்று வெளியிட்டு இருந்தால் அது ஒட்டுமொத்தமாக இலங்கை அரசுக்கு சாதகமாக அமைந்திருப்பதுடன் ஆட்சியில் உள்ள தொழிற்கட்சி தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில் அவர்களுக்கு எதிர்மறையான விளைவையெ ஏற்படுத்தி இருக்கும். இன்றும் ஸ்கொட்லன்ட் யாட் இந்த விடியோப்பதிவை உத்தியோகபூர்வமாக வெளியிடாததற்கு அதுவே காரணமாக இருக்கும் என்பது எனது கருத்து.

  மேலும் மிகப்பெரும் அவலம் நிகழ்கின்ற போது மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் உள்ள போது ஒட்டுமொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாகவும் அப்போது பார்க்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் ஸ்கொட்லண்ட்யாட் என்ன காரணத்திற்காக வெளியிடாமல் இருந்தாலும் அது தமிழ் மக்களைப் பொறுத்தவரை சாதகமான முடிவே. போராட்டம் புலிகளால் தங்கள் அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது உண்மை. ஆனால் போராட்டத்திற்கு வந்த மக்கள் தங்கள் உணர்வு மேலீட்டாலேயே இப்போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த வீடயம் அன்று வெளிவந்திருந்தால் வருகின்ற நன்மையிலும் பார்க்கத் தீமையே அதிகம்.

  2. நீங்கள் எழுப்புகின்ற செய்தியின் நம்பகத் தன்மை விடயத்தை எடுத்துக் கொண்டால் – ஊடகங்களின் நம்பகத் தன்மை என்பது நம்பகமான மூலங்களில் இருந்து எடுக்கப்படும் தகவல் என்ற அடிப்படையிலேயே நோக்கப்படுகின்றது. ஸ்கொட்லண்ட் யாட் அதிகாரிகளின் தகவல் என்பது நம்பகமான ஒரு மூலமே. ஸ்கொட்லண் யாட் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் இரு தேசியப் பத்திரிகைகளில் வெளியான செய்தியை ஸ்கொட்லண்ட் யாட் மறுக்கவில்லை. அது பற்றி கருத்துத் தெரிவிக்கவே மறுத்துள்ளது.

  மேலும் பிரித்தானிய ஊடகங்கள் அவை வலதுசாரியானாலென்ன இடதுசாரியானாலென்ன ஒப்பீட்டளவில் நம்பகத்தன்மை உடையவை. அவை தகவலை தங்கள் அரசியல் சார்ந்து மெருகூட்டுமே அல்லாமல் இட்டுக்கட்டி செய்தி வெளியிடுவதில்லை.

  மேலும் பரமேஸ்வரனின் உண்ணாவிரத நாட்களிலேயே இவ்வாறான குற்றச்சாட்டு வெளிவந்தது. ஆனால் அப்போது இருந்த உணர்வுநிலையில் அதில் கவனம் செலுத்தப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக பிரிஎப் உறுப்பினர்களுடன் நான் தொடர்பு கொண்ட போதும் அவர்கள் இக்குற்றச்சாடு அப்போது இருந்ததாகத் தெரிவித்தனர். அதனாலேயே தாங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டதாகத் தெரிவித்தனர். அவர்கள் தங்கள் பெயர்களைக் குறிப்பிட விரும்பாததால் அதனைச் செய்தியாக்கவில்லை.

  இச்செய்தி முற்றிலும் தவறானதாக இருந்தால் பிரஸ் கொம்பிளெயின்ற் கொமிசனுக்கு அதனைத் தெரியப்படுத்தி சண் டெய்லிமெயில் பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தொடரமுடியும். மேலும் இதனால் ஏற்பட்ட அவமானத்திற்காக நஸ்ட ஈடும் பெறமுடியும். இன்று லண்டனில் தமிழ் தேசியத்தை து}க்கிப் பிடிக்கின்ற 200 வரையான தமிழ் சட்டநிறுவனங்கள் இயங்குகின்றன. ஏன் அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்க முடியாது. அவ்வாறு எடுத்து இச்செய்தி தவறானது என நிரூபிக்கப்படாதவரை அச்செய்தி உண்மையானது எனவே கொள்ளப்படும்.

  3. நாங்கள் குறிப்பிடுகிற மாறா நிலைப்பாடு என்பது மக்கள் நலனை முன்நிலைப்படுத்துகின்ற நிலைப்பாடு. நீங்கள் குறிப்பிடும் ”ஊடகவியலின் ஆய்வின் அடிப்படை அம்சம் உண்மைகளிலிருந்தும் ஆய்விலிருந்தும் முடிவுக்கு வருவது. அது தான் ஊடகவியலுக்கு உள்ள ஒரேயொரு சமன்பாடு. உண்மை என நாம் ‘நம்புபவற்றிலிருந்து’ ஆய்வு நடத்துவதல்ல.” இக்கருத்துடன் நான் முற்றுமுழுதாக உடன்படுகின்றேன். அந்த அடிப்படையிலேயே தேசம்நெற்றில் எனது ஆக்கங்கள் அமைந்துள்ளது.

  4. இலங்கை அரச படைகளின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் பற்றிய விடியொ பரமேஸ்வரனின் பேகர் விடியோ: இவ்வரு அம்சங்களும் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் வரவில்லை என்பதற்காக அதில் சந்தேகம் எழுப்புவது அடிப்படையற்றது. சனல் 4 விடியோ இலங்கை அரச படைகளின் அட்டடூழியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட விடியோவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இலங்கை அரசு ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. மேலும் அதுபற்றிய விசாரணைகள் மேற்படி விடியோவைப் பதிவு செய்தவர்களையும் ஆபத்திற்கு உள்ளாக்கும். அதனால் கடந்த கால செயற்பாடுகளின் அடிப்படையில் இலங்கை அரசபடைகள் இக்கொடுரத்தை நிகழ்த்தக் கூடியவர்கள் என்ற முடிவுக்கு வருவதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  பரமேஸ்வரனைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட செய்தி தவறானது என்றால் அதற்கு சவால் விட்டு தனது நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காhன வாய்ப்பு அவருக்கு உள்ளது. அவர் அச்செய்தி உண்மையிலேயே திட்டமிட்ட செய்தி எனக் கருதினால் அவரை சட்டரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தவும் அதற்கான பொருளாதாரச் செலவை ஏற்றுக்கொள்பவர்களையும் அவருக்கு என்னால் அறிமுகப்படுத்த முடியும். இச்செய்தியின் பின்னூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஜிகே எனும் நண்பர் இது தொடர்பான உறுதிமொழியை தந்துள்ளார்.

  த ஜெயபாலன்.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  நண்பர் பல்லிக்கு
  //காலம் கடந்து செய்யும் விமர்சனமும் ஒரு வன்முறைதானே//
  காலம் கடந்த விமர்சனமல்ல. ஏற்கனவே விமர்சிக்கப்பட்டது. காலம் கடந்த விமர்சனத்தையும் வன்முறையாகப் பார்க்க முடியாது. விமர்சனத்தின் நோக்கமே பிரதானம் என நினைக்கிறேன்.

  //இது பற்றி நாம் அன்றே பேசியிருந்தால் கம்பேக்கர் பிரச்சனைக்கு சர்வதேச உதவி தேவைபட்டிருக்காதே//
  75 நாட்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!!! : த ஜெயபாலன் – http://thesamnet.co.uk/?p=12999 யூன் 17 2009

  இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன் http://thesamnet.co.uk/?p=10361 April 21 2009

  முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன் – http://thesamnet.co.uk/?p=8230 March 03 2009

  மாத்தையா மகிந்தவும் தம்பி பிரபாவும் ஆடும் சிங்கம் புலி ஆட்டத்தின் மரணப் பொறியில் வன்னி மக்கள் !!! : த ஜெயபாலன் – http://thesamnet.co.uk/?p=7708 Feburary 19 2009

  ‘கொப்பிக்கற்’ (copycat) தீக்குளிப்புகள் இன்றைய பிரச்சினைக்குத் தீர்வாகாது! : த ஜெயபாலன் – http://thesamnet.co.uk/?p=7553 Feburary 15 2009
  இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன் – http://thesamnet.co.uk/?p=6937 January 29 2009

  யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன் – http://thesamnet.co.uk/?p=4040 November 02 2008

  //பல்லிக்கு பாடபுகட்டி விட்டு தாங்களே சம்பவத்துடன் சம்பவத்தை கோர்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? //
  நான் எழுதியதன் எண்ணம் வேறு. உங்கள் கேள்வி நியாயமானது. ஏற்றுக்கொள்கிறேன்.

  த ஜெயபாலன்.

  Reply
 • முன்னாள் பொரளி
  முன்னாள் பொரளி

  தன்மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு பரமேஸ்வரன் உண்மையாக நடந்து கொள்ளவில்லை எனும் போதும் இந்தப் போராட்டத்தின் பால் நம்பிக்கை கொண்டிருந்த மக்களை அவர் ஏமாற்றி விட்டார் எனும் போதும் அதன்காரணமாக முழுத் தமிழ் மக்களுமே தலைகுனிந்து நிற்க நேரிடுகிறது எனும் போதும் கோபம் எழுவது இயல்பு ஜெயபாலன் நீங்காள் நினைக்குமாப்போள் நாங்காள் யாரூம் பரமேஸ்வரனய் நாம்பி அர்படாத்தில் இடுபடவில்லை எம் உறவீனரய்கக்கா எமாக்கு வேறுவழிஅப்போதுஇல்லை ஏனெனின் இங்கெ எழுதுவோர் சிலாரின் குற்ருபோள் அங்கே களியாடமோ கொண்டட்டாத்துக்கோ நாம் செள்ளாவில்லை என்னபோள் நிங்காலும் குடும்பத்தையொ உறவினரயொ இளந்திருந்தால் என்நைபோன்றவடர்காலிண் வேதனைபுரிந்திருக்கூம் ஒரு சிலரின் தகாதசெலுக்காக ஒட்டுமொத்தமக்கழின் உநர்வினய் கொச்சய்படுத்திர்காள் நிங்கள் விவதிப்பாதுபோள் புலியா காக்கதன் என்றால் உங்கள் இனதில் பிறந்ததய் நினய்துவருந்திறென்.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  //நீங்காள் நினைக்குமாப்போள் நாங்காள் யாரூம் பரமேஸ்வரனய் நாம்பி அர்படாத்தில் இடுபடவில்லை.//
  மக்கள் பரமேஸ்வரனை நம்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நான் எப்போதும் குறிப்பிடவில்லை. அது நீங்கள் குறிப்பிடுவது போல் உண்மையுமல்ல. தம் உறவுகளின் மீதான உணர்வு மேலீட்டாலேயே கலந்துகொண்டனர். ஆனால் பரமேஸ்வரன் மக்களுக்கு உண்மையாக நடக்கவில்லை என்றே நான் குறிப்பிட்டு இருந்தேன். மக்கள் பரமேஸ்வரனுக்கா போராடச்செல்லவில்லை.

  //என்னபோள் நிங்காலும் குடும்பத்தையொ உறவினரயொ இளந்திருந்தால் என்நைபோன்றவடர்காலிண் வேதனைபுரிந்திருக்கூம்//
  எனக்கு அவ்வாறான இழப்பு ஏற்படவில்லையென்றோ அல்லது எனது உறவுகள் வன்னி முகாம்களில் இல்லையென்றோ நீங்கள் முடிவுக்கு வருவது மிகத்தவறு. இது ஒரு பொதுப்பிரச்சினை என்பதால் தனிப்பட எழுதுவதை இங்கு தவிர்க்கவே விரும்புகிறேன். உங்கள் துயரைப் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.

  எமது ஒட்டு மொத்த தமிழ் சமூகமுமே அவர்கள் புலிகள் என்றால் என்ன அதற்கு எதிரானவர்கள் என்றால் என்ன மரணதின் ரணங்களையும் வலிகளையும் இன்னமும் கொண்டுள்ளனர். இந்தக் காயங்களை காலம் தான் ஆற்றுப்படுத்தும். இவை அவ்வப்பொது சிலரின் எழுத்தக்களிலும் வெளிப்படுகிறது. துரதிஸ்ட வசமாக எங்கள் சமூகத்தில் பெரும்பாலும் அரசியல் புரிந்தவர்கள் மனிதத்தையே முதலில் அழித்தனர். பொது எதிரியிலும் பார்க்க எமது சமூகம் எம்மத்தியில் உள்ளவர்களுக்கே அதிகம் அஞ்சி ஒடுங்கியது.

  த ஜெயபாலன்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பரமேஸ்வரன் மாத்திரமல்ல முன்பு தயா இடைக்காடரும் தான் இப்படி ஏமாற்று நாடகமாடினார். அப்போது இதுபற்றி தேசியம் பேசும் இணையதளமொன்றில் கேள்வி எழுப்பிய போது அந்த இணையத்தளம் எனது கேள்வியையே எடுத்த விட்டது. நான் கேட்ட கேள்வி இதுதான் தயா இடைக்காடர் ஒரு நீரிழிவு நோயாளி. சாதாரணமாகவே ஒருவர் ஒரு நாளைக்கு 3 தரம் சாப்பிடும் போது ஒரு நீரிழிவு நோயாளி 5-6 முறைகள் சாப்பிட வேண்டும். அப்படியிருக்கையில் அவரால் எப்படி உண்ணாவிரதம் இருக்க முடியும்?? அது அவரின் உயிருக்கே ஆபத்தை விழைவித்திருக்கும். ஆனால் தயா இடைக்காடார் கிட்டத்தட்ட 4 நாட்கள் உண்ணாவிரதமிருந்து சாதனை நிலைநாட்டினார். இது எப்படிச் சாத்தியமாகும்??

  Reply
 • senthil
  senthil

  இச்செய்தி முற்றிலும் தவறானதாக இருந்தால் பிரஸ் கொம்பிளெயின்ற் கொமிசனுக்கு அதனைத் தெரியப்படுத்தி சண் டெய்லிமெயில் பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தொடரமுடியும். மேலும் இதனால் ஏற்பட்ட அவமானத்திற்காக நஸ்ட ஈடும் பெறமுடியும். இன்று லண்டனில் தமிழ் தேசியத்தை து}க்கிப் பிடிக்கின்ற 200 வரையான தமிழ் சட்டநிறுவனங்கள் இயங்குகின்றன. ஏன் அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்க முடியாது. அவ்வாறு எடுத்து இச்செய்தி தவறானது என நிரூபிக்கப்படாதவரை அச்செய்தி உண்மையானது எனவே கொள்ளப்படும்.

  பரமேஸ்வரனைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட செய்தி தவறானது என்றால் அதற்கு சவால் விட்டு தனது நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக்ன வாய்ப்பு அவருக்கு உள்ளது. அவர் அச்செய்தி உண்மையிலேயே திட்டமிட்ட செய்தி எனக் கருதினால் அவரை சட்டரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தவும் அதற்கான பொருளாதாரச் செலவை ஏற்றுக்கொள்பவர்களையும் அவருக்கு என்னால் அறிமுகப்படுத்த முடியும். இச்செய்தியின் பின்னூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஜிகே எனும் நண்பர் இது தொடர்பான உறுதிமொழியை தந்துள்ளார்.

  த ஜெயபாலன்…….இந்த செய்தியை பிரசுரித்த எல்லா பத்திரிகைகளிடம்,நட்ட ஈடாக தலா(ஒவொரு பத்திரிகையிடமும்) 7.1 மில்லியன் பவுண்ஸ் கோரி அதனை வன்னியில் நிர்க்கதியாகவுள்ள மக்களுக்கு வழங்க பரமேஸ் தயாரா? முடிந்தால் பரமேஸ்வரனுக்கு இதனை தெரியப்படுத்தி தமிழரின் ஒட்டுமொத்த கெளரவத்தையும் காப்பாற்றிய பெருமையை இதன் மூலம் பரமேஸ் பெறலாம். என்ன முடியுமா?

  Reply
 • ravana
  ravana

  ஸ்கொட்லண்யார்ட் அன்றே இதனை வெளியிடாததற்கு நீங்கள் சொன்ன காரணங்களுக்கும் தமிழ் மக்களின் அரசியல் நலன்களுக்கும் எதுவித தெடர்புமில்லை என்று புரிகிறதல்லவா? அது முழுக்க முழுக்க அவர்களது அரசியல் நலன்பாற்பட்டது. தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான வழிமுறையின் ஒரு பகுதி அது.
  இந்தப்பார்வை உங்கள் கட்டுரையில் புலப்பட்டிருக்கவில்லை பதிலாக அவர்களுடைய மொழியிலேயே உங்கள் கட்டுரை பேசியது. புpரித்தானிய அதிகாரத்தினது மொழி ‘தேசத்’தின் மொழியாக இருப்பது சாத்தியமில்லை என்பதனால் தான் நான் எழுத நேர்ந்தது.

  இரண்டாவது, “ஸ்கொட்லண்ட்யார்ட் என்ன காரணத்திற்காக வெளியிடாமல் இருந்தாலும் அது தமிழ் மக்களுக்குச் சாதகமானது” என்பதனை என்னால் உடன்பட முடியவில்லை. திரும்பவும் நீங்கள் குறிப்பிட்டது போல அவர்கள் அன்று வெளியிடாதததற்கும் அவர்களது அரசியல் நலன்கள் தான் காரணம். இன்று வெளியிட்டதற்கும் அவர்களது அரசியல் நலன்கள் தான் காரணம் என்றே நினைக்கிறேன்.

  புதிலாக அன்று வெளியிடப்பட்டு இருந்தால் அந்த உண்மை எங்கள் எல்லோருக்கும் கசத்திருக்கும் தான். ஆனால் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். அன்றே அவர்கள் வெளியிடாததால் எங்களுக்கு என்ன நன்மை கிடைத்தது. ஏறத்தாழ இருபதாயிரம் முப்பதாயிரம் மக்களை காப்பாற்ற முடியாமல் தானே போனது.

  மாறாக வெளியிட்டிருந்தால் உண்ணாவிரதப் போராட்டம் மக்கள் ஆதரவின்றி நின்றிருக்கும். புலித் தலைமைகளால் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போயிருக்கும். ஆனால் அங்கு தம் உறவினர்களைக் கொண்டுள்ள இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த உணர்வு மேலிட்ட மக்களால் போராடாதிருத்தல் சாத்தியமில்லை. அவர்கள் வேறுவழிமுறைகளையும் வேறு தலைமையையும் உருவாக்கிப் போராடியிருப்பர். அது பிரித்தானிய அதிகாரத்தின் நலன்களுக்கு மாற்றானதாகவும் இருந்திருக்ககூடும் அல்லவா?

  இந்தக்குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள் பரமேஸ்வரனும் அதனை தலைமையேற்ற நபர்களுமேயன்றி வேறுயாருமல்ல. வேறுயாராலும் அது சாத்தியமுமல்ல என்றே நான் நினைக்கிறேன்.

  ஆனால், நாங்கள் புலிகள் மற்றும் அவர்களது தலைமை மீதுள்ள கோபத்தில் மொத்தமாக தமிழ் மக்களுக்கெதிராக அதிகாரத்தின் மொழியில் பேசுவது சாத்தியமில்லை என்பதனை வலியுறுத்தத் தான் நான் இதனை எழுதினேன்.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  தொடர்ந்து பொய் சொன்னால் அதுவே உண்மையாகும் என புலிகள் நினைத்தனர். அது புலிகளின் கோட்பாடாக இருந்தது. இதுவே புலிகளை படு பாதாளத்தில் தள்ள வழி செய்தது. அதில் இந்த உண்ணும் விரதமும் ஒன்று. இன்னும் வெளிவர எத்தனையோ உள்ளன. புலிகளோடு நின்றவர்கள் வெட்கப்படாமல் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை விட, அவர்களே தமது வண்டவாளங்களை அம்பலப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

  பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டதை புலிகளோடு இருந்த ஒருவரே ஒளிப்பதிவு செய்து லண்டன் போலீஸாருக்கு கொடுத்து தகவல் வழங்கியுள்ளார். அவர் அதற்காக தான் ஒளிப்பதிவு செய்த ஒளிக் காட்சியையும் ஆதாரமாகக் கொடுத்துள்ளார். அதன் பின்னரே பரமேஸ்வரனை நோக்கியிருந்த ஒளிப்பதிவுக் கருவியில் ஒளிப்பதிவானதை போலீஸார் மீண்டும் எடுத்து பார்த்து உறுதி செய்து கொண்டுள்ளனர். இதனால் செய்தி தாமதமாக வெளிவந்தது.

  இது குறித்த தகவல்களை தற்போது ஐரோப்பிய போலீஸ் துறைக்கு, பிரித்தானிய போலீஸ் துறை வழங்கியுள்ளது. காரணம் இதுவரை இவர்களது போராட்டங்களின் போது, பாதுகாப்புக்காக அநியாயமாக செலவழிக்கப்பட்ட பணம் மற்றும் ஐரோப்பிய மக்களது அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்ட விடயம் குறித்தும் கவனத்தில் எடுக்க வேண்டும் என ஐரோப்பிய போலீஸார் கருதுகின்றனர். எனவே பார்வை வேறு கோணத்தில் வடிவம் பெற்றுள்ளது.

  புலிகளின் உள் குத்து வெட்டுகளால் அவர்களிடமிருந்து பல தகவல்கள் இப்போது கசிந்து வருகின்றன.

  உதாரணத்துக்கு இது போன்றவை பகிரங்கமானவை.
  http://www.tamilolli.com/2009/10/04/8887/

  பல ரகசியயமானவை. அவை கசியும் காலம் கூட தொலைவில் இல்லை.

  Reply
 • பல்லி
  பல்லி

  ஜெயபாலன் நீங்கள் எழுதிய ஏழு கட்டுரையும் வாசிக்காமலா அதுக்கான பின்னோட்டத்தை பல்லி விட்டிருக்கும்; பல்லியையும் அக்கரைக்கு இக்கரை பாட்டியில் சேர்த்தமைக்கு நன்றி; இருப்பினும் தாங்கள் எழுதிய கட்டுரைகழுக்கு பல்லி விட்ட பின்னோட்டங்களை கவனிக்கவும், ஜெயபாலன் பல்லியால் இந்த விடயத்தில் சரி போனால் போகட்டும் என ஒதுங்கமுடியவில்ல, ஆனாலும் உங்களளவுக்கு எனக்கு எழுத்தாற்றல் இல்லாதபடியால் யதார்த்த உவமைகளை உதவிக்கு அழைப்பது அவசியமாகிறது; அது தவறாயின் காலபோக்கில் மாற்ற முயற்ச்சிக்கிறேன், ஆனாலும் திரும்பவும் ஒரு உவமை எனக்கு தேவைபடுகிறது அதுக்காக மன்னிக்கவும் ஜெயபாலன்; ஒரு பெண் கற்பழிக்கபட்டால் அந்த நிகழ்வு ஒருதரம்தான் அந்த பெண் மானபங்கபடுகிறாள்; ஆனால் கற்பழித்தவனை நாம் அடையாளம் காட்டுகிறோம் என அடிக்கடி ஆதங்கபட்டால் அவனுடன் சேர்ந்து அந்த பெண்ணும் அடிக்கடி மானபங்கபடுவாள், இது யதார்த்தம், அதுக்காக குற்றவாழியை விடுவிக்க வேண்டும் என நான் சொல்லவில்லை, சட்டம் அதன் கடமையை செய்யட்டும்: அதுக்காக அதுக்காக அதுக்காக;;; நான் பெண்ணாக குறிப்பிட்டது தமிழ் மக்களை;

  Reply
 • பல்லி
  பல்லி

  //பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டதை புலிகளோடு இருந்த ஒருவரே ஒளிப்பதிவு செய்து லண்டன் போலீஸாருக்கு கொடுத்து தகவல் வழங்கியுள்ளார்.// நண்பன்;
  //பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்.//ஜெயபாலன்;
  இதில் சரியான விடையை தெரிவு செய்க;

  Reply
 • muthu
  muthu

  //பரமேஸ்வரன் பேகர் சாப்பிட்டதை புலிகளோடு இருந்த ஒருவரே ஒளிப்பதிவு செய்து லண்டன் போலீஸாருக்கு கொடுத்து தகவல் வழங்கியுள்ளார்.// நண்பன்;

  //அதன் பின்னரே பரமேஸ்வரனை நோக்கியிருந்த ஒளிப்பதிவுக் கருவியில் ஒளிப்பதிவானதை போலீஸார் மீண்டும் எடுத்து பார்த்து உறுதி செய்து கொண்டுள்ளனர்.//நண்பன்
  பல்லி முழுமையாக வாசிக்கவும். பிழைபிடியுங்கோ தப்பில்லை. பிழை பிடிக்கவேணுமெண்டதுக்காகப் பிடிக்கக் கூடாது.

  இன்னொரு முக்கியமான விடயம் இங்கே புலிகள் தவறுக்காக மாற்றுக் கருத்துக்காரர் நியாயப்படுத்துமளவிற்கு புலியாட்களைக் காணவேயில்லை

  Reply
 • kamal
  kamal

  செந்தில் நஷ்டஈடு எண்டு திரும்பவும் எங்கு காசு கறக்கலாம் என திரியாமல் பில்லியன் கணக்கில சேர்த்து வைச்சிருக்கிறத்தில மில்லியன் கணக்காய் எடுத்து வன்னிச் சனத்துக்குக் கொடுத்தாலே போதும். உங்கட நோக்கம் காசுதான் என்று முதலேயே சொல்லிப் போட்டேன்.

  வழக்குப் போட்டு வென்று அந்தக்காசு கைக்கு வரும்போது அந்தநேரத் தேவையைப்பற்றி யோசிக்கலாம் உதவலாம்

  Reply
 • Kusumbo
  Kusumbo

  //காலம் கடந்து செய்யும் விமர்சனமும் ஒரு வன்முறைதானே//
  இது என்ன புதிய தத்துவம். இன்றும் மகாத்மா காந்தியும் திருவள்ளுவரும் கம்பரும் ஏன் தலையில் தூக்கிக் கும்பிடும் கடவுள்கள் கூட விமர்சிக்கப்படுகிறார்கள். விமர்சனம் என்றும் உள்ளது என்றும் செய்யவேண்டியதே.
  பல்லி! செய்யப்படும் தவறுகள் எல்லாம் மன்னிக்கலாம் என்றால் தண்டனை என்ற ஒன்று இருக்க இயலாது. எல்லாமே மன்னிக்கப்படுவதால் மன்னிக்கப்படும் என்பதற்காகவே தவறுகளும் சட்டவிரோதமும் அதிகரிக்கும். தவறு எனப்படும்போது முளையிலேயே கிள்ளி விடுவது அவசியம்

  Reply
 • chandran.raja
  chandran.raja

  அறுபத்தைந்து பின்னோட்டங்கள் கம்போக்கருக்கு பதிவாகியிருக்கிறது. மக்டோனால் கம்போக்கர் யாராவது வாழ்வில் ஒருமுறையாவது ருசி பார்க்காமல் விட்டிருக்காமல் மாட்டார்கள். மலிவானது உடனடி பசியாறக்கூடியது. இதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. இந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஒருமணத்தியாலம் கூட பார்வைக்ககு இருபதில்லை. இருந்தால் அதன் தராதரத்தை இழந்துவிடுமென்று கழிவுதொட்டிக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கூட வீட்டிற்கு எடுத்துப்போக அனுமதிக்கப்படுவதில்லை. பகட்டாலும் பார்வையாலும் மலிவு விலையாலும் உடனடிபசி தீர்ப்பதில் உலக நகரசந்தையை தன்கைபிடியில் வைத்திருக்கிறது. ஆரோக்கியமாகதா? ஆரோக்கியமற்றதா? இரண்டாம் பட்சக் கேள்விகளே!
  மலிவுவிலைப் பண்டம் சீனச்சுவரையும் தகர்த்துவிடுவது போன்றே புலம்பெயர்மக்கள் மத்தியிலும் புலிகள் தமது ஆதரவைப் பெற்றிருந்தார்கள். பொய்யான பகட்டான சுயநலமிக்க விளம்பரங்கங்கள் மூலம் ஆதரவையும் பொருள்வளங்களையும் பெற்று பிரபாகரனுக்கு அனுப்பி தங்கள் தேவைகளையும் பூர்த்திசெய்து கொண்டிருந்தார்கள். இது ஈழத்தில்வாழும் மக்களுக்கு சொல்லெண்னாத் துன்பத்தை கொடுத்தது மல்லாமல் அவர்களை அடக்கிஒடுக்கி அவர்கள் வாழ்வாதரங்களையும் அழித்து பிச்சைக்காரர்களாக்கி இன்று முட்கம்பி வேலிகளுக்குள் தமது வாழ்நாளை கழிக்கிற துர்பாக்கிய நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது.

  கம்போக்கர் ஒருவரின் உடல்நிலைக்கு எப்படியோ அப்படியே புலிகளின் போராட்டமும் புலம்பெயர் பெருமக்களுக்கும். ஆடம்பரமாக அதிசியமாக கற்பனையாக தம்மை பாதுகாத்துக் கொள்ள ஈழவாழ்மக்களையும் பலிகொடுக்க தயராகியிருந்தார்கள். பரமேஸ்வரன் கம்போக்கர் சாப்பிட்டாரா? இல்லையா? என்பதைவிட புலிப்போராட்டத்தையும் மக்டொனால்ஸ் கம்போக்கருக்கு ஒப்பிடுவதே சாலச்சிறந்தது. அதுவே ஈழமக்களுக்கு நலவாழ்வைத் தேடுவதற்கு வழிவகுக்கும்.

  Reply
 • babu
  babu

  palli
  //பரமேஸ்வரன் சுப்பிரமணியம் (28) உண்ணாவிரதம் இருந்த காலத்தில் மக்டோனால்ட் சாப்பிட்டுள்ளதை ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸார் தங்கள் நுணுக்கமான கமராக்கள் மூலம் பதிவாக்கி உள்ளனர்.//ஜெயபாலன்;

  It’s not jayapalan, said Daily Mail
  /Scotland Yard surveillance teams using specialist monitoring equipment had watched in disbelief as he tucked into the clandestine deliveries./

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  //நாங்கள் புலிகள் மற்றும் அவர்களது தலைமை மீதுள்ள கோபத்தில் மொத்தமாக தமிழ் மக்களுக்கெதிராக அதிகாரத்தின் மொழியில் பேசுவது சாத்தியமில்லை என்பதனை வலியுறுத்தத் தான் நான் இதனை எழுதினேன்.// ravana
  உங்கள் கருத்துப் பரிமாற்றம் ஆரோக்கியமானது. மதிக்கின்றேன்.

  Reply
 • பல்லி
  பல்லி

  முத்து உங்கள் அறிவை பாராட்டுகிறேன், பல்லி படிப்பறிவு அற்றதுதான், ஆனால் வெள்ளைகாரனுக்கே எம்மினத்தை எம்மினமே காட்டி கொடுக்கும் அளவுக்கு தொழில் நுட்ப்பம் வளர்ந்து விட்டது சந்தோஸம்தான், ஆனால் அது பல்லிக்கு அல்ல; இந்த ஆராட்ச்சியை சாப்பிடுவவன் மீது காட்டுவதை விட்டு அங்கு அனாதையாய் அலங்கோலப்படும் பெண்களின் நிலையை காட்ட முற்பட்டால் பல்லியுடன் தமிழினமே மகிழ்ச்சியடையும், முத்து அவசரம் வேண்டாம் பொறுமை காருங்கள் முடிவு உங்களுக்கு (தமிழருக்கு) சாதகமாய் அமையும்:

  Reply
 • பல்லி
  பல்லி

  //இது என்ன புதிய தத்துவம். //
  குசும்பு இது தத்துவமல்ல (பல்லிக்கு தத்துவம் தெரியாது) யதார்த்தம்; இது சராசரி வாழ்வில் இருந்து அரசியல் வரை பொருந்தும் என்பது எனது அனுபவம், காந்தி மீது நாம் விமர்சனம் வைக்கமுடியாது, ஆனால் அவரது மறுபக்கமான மறைக்கபட்ட உன்மைகளை எமக்கு தெரிந்தவைகளை எழுதுகிறோம்; ஆனால் அது உன்மையா? அல்லது பொய்யா? என பல நண்பர்களின் கருத்துக்கள் மூலம் அறிய வாய்ப்புள்ளதே;

  //பல்லி! செய்யப்படும் தவறுகள் எல்லாம் மன்னிக்கலாம் என்றால் தண்டனை என்ற ஒன்று இருக்க இயலாது. எல்லாமே மன்னிக்கப்படுவதால் மன்னிக்கப்படும் என்பதற்காகவே தவறுகளும் சட்டவிரோதமும் அதிகரிக்கும். தவறு எனப்படும்போது முளையிலேயே கிள்ளி விடுவது அவசியம்//
  இது காலம் கடந்த உபதேசம்; கிள்ள வேண்டிய நேரத்த்தில்(1983) நாம் கோளைகள்: கிள்ள கூடிய நேரத்தில்(2009) அவர்கள் பாவிகள்; ஆகவே இரண்டுமே எமக்கு பின்லாடன் புஸ் உறவாக இருப்பதால்; அதையும் மீறீ நாம் என்ன செய்யலாம் என்பதை அறிவு கொழுந்துகள் சொல்வார்கள் என பார்த்தால்; அவர்களோ காலி துறைமுகத்தில் மகிந்தா பட்டம் விட இவர்கள் வால் கட்டுகிறார்கள்; ஆகவேதான் பல்லியோ அல்லது குருவியோ தமது ஆதங்கத்தை தேசத்தில் எழுத வேண்டி உள்ளது; முடியும் வரை தொடரும் பல்லி;

  Reply
 • என் ஜெயரூபலிங்கம்
  என் ஜெயரூபலிங்கம்

  எங்கள் மத்தியில் அரசியல் செய்ய வந்தவர் எல்லாம் முதலில் மனிதத்தையே குழிதோண்டி புதைத்து விட்டுதான் தம்அரசியலையே ஆரம்பித்தார்கள்.

  பிறகு தம்மை சுற்றி சூப்பர்மான் மாதிரி பிம்பங்களை உருவாக்கி விட்டு அந்த பிம்பங்களை காப்பாற்ற பிலிமும் பீலாவும் விட்டு ஏமாற்றினார்கள்

  இந்த பீலா பிலிம் எல்லாத்தையும் முடிவுக்க் கொண்டுவரத்தான் முள்ளிவாய்காலில் பிடரியில் கோடாலிக்கொத்து வாங்கி இந்த பிலிம் பீலா எல்லாம் நிர்வாணமாகி நாறிவிட்டது.

  எமது இளைய தலை முறையில் இருந்து தான் இனி உண்மையான அரசியல் வாதிகள் உருவாக வேண்டும் உருவாகும்.

  Reply
 • jalpani
  jalpani

  பல்லியின் வாதங்கள் குதர்க்கமானது. பரமேஸ்வரன் மக்களை அவர்களது உணர்வுகளை அசிங்கப்படுத்திவிட்டார் என்பதில் மறுபேச்சிற்கு இடமில்லை. புலி என்றால் இப்படித்தான் என்பதை புரிந்து கொண்டால் இதில் அங்கலாய்ப்பதற்கு ஒன்றும் இல்லை.

  Reply
 • பல்லி
  பல்லி

  நன்றி யால்பானி உங்கள் பாராட்டுக்கு; இப்படி பல பாராட்டுகள் பல்லிக்கு கிடத்தன; பல்லியின் வாதங்கள் குதர்க்கமானதா? அல்லது தங்களுக்கு சாதகமற்றதா?? சரி //பரமேஸ்வரன் மக்களை அவர்களது உணர்வுகளை அசிங்கப்படுத்திவிட்டார் என்பதில் மறுபேச்சிற்கு இடமில்லை.//
  இது என்ன சண்டிதனம் பல்லி என்ன உங்களிடம் கடனா கேட்டேன்; என் கருத்து அப்படிதான் அது தவறாக கூட இருக்கலாம்; அதுக்காக உங்களை போல் பல்லியும் கல்எறிய வேண்டும் என்பது நியாயமில்லைதானே?
  //அங்கலாய்ப்பதற்கு ஒன்றும் இல்லை.//
  அது யால்பானிக்கு; பல்லிக்கு அப்படியல்ல நிறைய அஙலாய்ப்புகள் உள்ளன; மக்கள் பற்றி;

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பல்லி,
  பரமேஸ்வரன் உண்ணாவிரதமிருப்பதாக நாடகமாடி எம்மக்களை மட்டுமல்ல, பிரித்தானியா வாழ் மக்கள் அனைவரையுமே ஏமாற்றியுள்ளார். இன்று பரமேஸ்வரனின் இச்செயலிற்கு பிரித்தானிய மக்கள் பலர், இச்செய்தி வெளிவந்த ஆங்கில ஊடகங்களில் எழுதிய பின்னூட்டங்களை பல்லி பார்க்கவில்லையா?? மொத்த தமிழினத்தையும் கேவலமாக சித்தரித்து பயங்கரவாதிகளென்றும், ஏமாற்றுப் பேர்வழிகளென்றும் தூற்றியுள்ளார்கள். இது பல்லிக்கு மகிழ்ச்சியையா கொடுக்கின்றது??

  Reply
 • Kusumbo
  Kusumbo

  பல்லி!
  //குசும்பு இது தத்துவமல்ல (பல்லிக்கு தத்துவம் தெரியாது) யதார்த்தம்; இது சராசரி வாழ்வில் இருந்து அரசியல் வரை பொருந்தும் என்பது எனது அனுபவம், காந்தி மீது நாம் விமர்சனம் வைக்கமுடியாதுஇ ஆனால் அவரது மறுபக்கமான மறைக்கபட்ட உன்மைகளை எமக்கு தெரிந்தவைகளை எழுதுகிறோம்; // என்ன பல்லி விதண்டாவாதம் செய்கிறீர்கள். உயிருடன் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி விமர்சனம் என்பது என்றும் விமர்சனமே.
  எதிரியை மன்னிக்கலாம் அவன் என்றும் எம் எதிரிலேயே இருப்பான்: எதிர்பான்: ஆனால் இவர்கள் என்றும் அருகிலேயே இருப்பார்கள் தருணம் பார்த்து அறுப்பார்கள். நம்பிக்கையை நாசமறுப்பவனை எப்படிப்பல்லி மன்னிப்பது. பரமேஸ்வரன் செய்தது ஒரு தனி மனிதனுக்கு எதிரானது மட்டுமல்ல ஒரு இனத்துக்கு எதிரானது. சிலரது விவாதம் பரமேஸ்வரன் செய்தது பிழையா? பரமேஸ்வரனைக் காட்டிக்கொடுத்தவன் செய்தது பிழையாஎன? நம்பிக்கை துரோகத்தைக் காட்டிக் கொடுத்தது தப்பல்ல. பல்லி மன்னிப்பது மன்னிக்காமல் விடுவதற்கு அப்பால் பரமேஸ்வரன் ஒரு தியாகி என்று நம்பி இவருக்காக உண்ணாவிரதம் இருந்த வயதானவர்கள்: பாடசாலைகளை விட்டு விட்டு வந்த குழந்தைகள் (இன்றும் அவர்களுக்குப் பாடசாலையில் பிரச்சனை இருந்து கொண்டுடிருக்கிறது காரணம் பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்துக்கு பாடசாலையை வெட்டி விட்டுச் சென்றதால்): படு குளிருக்குள் நின்று கத்திக் கூக்குரல் போட்டபோது பரமேஸ்வரன் கம்பேகரைத்திண்டு விட்டு போர்வைக்குள் கிடந்தாரே இதை மன்னிக்கச் சொல்கிறீர்களா? ஒருவரா? இருவரா? பல்லாயிரக்கான மக்களை ஏமாற்றியது மட்டுமல்ல உலகமக்களையே ஏமாற்றினான். பிரபாகரனையே மக்கள் மன்னிக்கிறார்கள் அவர் எதைச் சொன்னாரோ அதற்காகவே நின்று தன் குடும்பத்துடன் அழிந்தார். பல்லி உங்கள் பெருந்தன்மை புரிகிறது. உண்ணா விரதத்தின் அடிப்படையே நேர்மையும் உண்மையும்தான். பல்லி தொடர்ந்து நாம் எம்மவர்களாலேயே ஏமாற்றப்பட்டுக் கொண்டு போவதை ஏதோ ஒரு இடத்தில் முழுமையாக எதிர்த்துத்தான் நிற்க வேண்டியிருக்கிறது. புதிதாக ஏமாற்ற முயல்பவர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையலாம் அல்லவா. புதிதாக வெளிக்கிடுகிறார்கள் நாடு கடந்த தமிழ் ஈழம் நட்டுக்களண்ட தமிழர்கள் என்று. இவர்கள் எல்லாம் ருசி கண்ட பூனைகள் மட்டுமல்ல இரத்தம் நக்கிய புலிகள் மட்டுமல்ல பணவாடை பிடித்த பயங்கரவாதிகள். பரமேஸ்வரனையும் சேர்த்துத்தான்.

  Reply
 • jalpani
  jalpani

  //அங்கலாய்ப்பதற்கு ஒன்றும் இல்லை.//
  அது யால்பானிக்கு; பல்லிக்கு அப்படியல்ல நிறைய அஙலாய்ப்புகள் உள்ளன் மக்கள் பற்றி;

  பல்லி மக்கள் நலனில் இருந்து சிந்தித்து பாருங்கள். அக்கம் பக்கம் இருக்கின்ற வெள்ளையின மக்களின் முகத்தில் முழிக்க முடியவில்லை. பரமேஸ்வரனை காப்பாற்ற ஏன் இந்தபாடுகிறீர்கள்? புரியவில்லை. பரமேஸ்வரனும் சுற்றியிருந்தவர்களும் செய்த இந்த படுபாதகச் செயல் குறித்து அங்கலாய்க்கத் தேவையில்லை என ஏன் கூறினேன் எனில் சிறுகுழந்தைகளைக் கூட குண்டுகளைக் கட்டி அனுப்பிய பாவிகள் வேறு பழிகளுக்கு தயங்குவார்களா? ஏன் தற்கொலைக் குண்டுதாரியாக செல்வதற்கு ஒரு பெண்ணை கற்பம் தரிக்க வைக்க கூட தயங்காத மனிததன்மையையே தூக்கிப் போட்டவர்கள் குறித்து ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? மக்களைப் பற்றி யாருக்குத்தான் கவலையில்லை. பரமேஸ்வரனைக் காப்பாற்றுவதை விட்டு மக்களைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் கவலைப்படுங்கள்.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  நான் முன்னர் ஒருமுறை ,சுவிஸின் ஜெனீவா ஐநாவுக்கு முன் நடந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் என் கண்ணால் கண்டதை எழுதியிருந்தேன். அன்று கவனயீர்ப்பு போராட்டத்துக்கு விடுப்பு பார்க்கவே சென்றிருந்தேன். எனவே இளம் ஊதுகுழல் புலிகளின் ( இளையோர் பேரவை) ஆட்டம் , பாட்டம் , துள்ளல் என பனை மரத்தில வவ்வாலா , எங்களுக்கே சவாலா….. என்ற கோஸத்தில் உணர்ச்சி வசப்பட்ட சிலர் பாதையை தாண்டி ஐநா வளவுக்குள் செல்ல எத்தனித்தனர். காரணம் ஐநா அதிகாரிகள் எவரும் வந்து மனுவை வாங்கவில்லை என்ற ஆவேசம். பாவம் ஐநாவில் காவலுக்கு நின்ற போலீஸாரைத் தவிர யாருமே தெரியவில்லை. அல்லது இருக்கவில்லை. இரவு 7 மணி.

  நிலமை கட்டு மீற முனைந்த போது, தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்களுடன் நின்ற சுவிஸ் போலீஸாரும் , ஏனைய ஆயுதம் தரித்த போலீஸாரும் களம் இறங்க தயாராகுவது தெரிந்தது. இளசுகளுக்குள் பயம் தொட்டுக் கொண்டது. மேடைக்கு பின்னால் உடனடியாக இளம் புலிகள் கூடி எடுத்த முடிவு என்ன தெரியுமா? ஐநா அதிகாரியொருவர் வந்து மனுவை பெற்றுச் சென்றார். அமெரிக்காவிலுள்ள ஐநா தலைமையகத்துக்கு அனுப்புவதாக உறுதியளித்தார் என்று பச்சை பொய்யொன்றை சொல்லலாம் என்பதாகும். அதையே பகிரங்கமாகவும் அறிவித்தார்கள். வீதியில் நின்றவர்கள் மட்டுமல்ல அங்கு வந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேலான ஐரோப்பா வாழ் தமிழ் மக்குகளின் ஆரவாரம் வானைப் பிளந்தது. வீதியிணூடாக ஐநா சுவருக்குள் பாய நினைத்தோர் திரும்பினர். நான் கூட சமயோசிதமான செயலாக அப்போது கருதினேன். ஆனால் சற்று மனதை வருடியது இந்த வசனங்கள்தான். ” அடுத்த முறை நாங்கள் இங்கு வரும் போது ஐநா எமக்கு பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் எம்மிடம் ஐநா மன்னிப்பு கேட்க வேண்டும் ” என்று விட்ட பகிடிதான். இந்த வசனத்தை அன்று மேடையில் சொன்னவர், இன்று புலிகளால் துரோகியாக தட்டிக் கழிக்கப்பட்டுள்ளது புதிதான கொசுறு தகவல்.

  இது போல எத்தனை புரூடாக்களால், முட்டாள் தமிழர்கள், நடு ரோட்டில் வந்து நிற்கிறார்கள் என்பதை எண்ணினால் வேதனைதான் அதிகமாகும். மோட்டுச் சிங்களவன் என்று சொன்ன தமிழன், அதைவிட மேலே போய், மொக்குத் தமிழானாக அல்லவா போய் விட்டான்.

  பரவேஸ்வரன், திருவிளையாடல் கூட இப்படி ஒரு அங்கம்தான். பரமேஸ்வரானால் மெக்டொனால் பேர்கருக்கு நல்ல விளம்பரம். பரமேஸ்வரனை, கண்காணித்த டாக்குத்தர்கள் மாலைக்கண் நோய்க்காரர்களோ?

  Reply
 • பல்லி
  பல்லி

  //. உயிருடன் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி விமர்சனம் என்பது என்றும் விமர்சனமே.//
  அப்படியா? நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும்; ஆனால் அது பல்லியின் நிலையில் மாறுபடுகிறது, பல்லி குசும்புவின் பின்னோட்டத்துக்கு எதிராக விடும் பின்னோட்டம் விமர்சனம், ஆனால் காந்தியின் கட்டுரைக்கு எனது பின்னோட்டம் அவரது மறைக்கபட்ட பக்கம், இது தர்க்கமல்ல பல்லியின் சிற்றறிவு;
  தவறை சொல்லணும்;
  தவறை சொல்ல வேண்டும்:
  தவறை சொல்லியே ஆக வேண்டும்;
  இதில் பல்லி முதலாவதை பின்பற்றுகிறேன், சிலர் மூன்றாவை பின்பற்றுகிறார்கள், எனது வாதம் திரும்பதிரும்ப சொல்லுகிறேன் பரமேஸ்வரனை காப்பதல்ல, எம்மினத்தின் தரகுறைவை ஏலம் போட வேண்டாம் என்பதே, என்னால் உறுதியாக சொல்ல முடியும் நாம் இப்படி பேசினால் மீண்டும் மக்கள் என்னொரு புலியையோ எலியையொதான் தெரிவு செய்வார்கள், இது காலபோக்கில் இதே தேசத்தில் பல்லி நடைமுறையை சுட்டிகாட்டி எழுதுகிறேன்; இங்கே பலரது பின்னோட்டம் பரமேஸ்வரனை விட புலி செய்த தவறு ஒன்று அம்பலத்துக்கு வந்துவிட்டது; இதை நாம் விட்டுவிட கூடாது என்பதே, பல்லியை பொறுத்த மட்டில் எம்மினத்துக்கு ஒரு அவமானம் வருமாயின் அதுக்காக எந்த விட்டு கொடுப்புக்கும் தயார் தான்,

  //பரமேஸ்வரன் உண்ணாவிரதமிருப்பதாக நாடகமாடி எம்மக்களை மட்டுமல்ல,//பார்த்திபன்;
  ஏன் பரமேஸ்வரனை எப்படியும் திலீபனாக்கி விடவேண்டும் என குடும்பத்துடன் இரவுபகலாக அவருக்கு காவல் இருந்தவர்கள் உங்களுக்கு மக்களாக தெரியவில்லையா; அவர்கள் மீது உங்கள் கண்டிப்பு என்ன?ஆக நாம் மக்கள்(தமிழ்) இருந்து ஒதுங்கி எம்மிடம் மாட்டியவர்களை (புலிகளை) நிர்வான படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறோம் (பல்லி உட்பட)
  //பல்லி மக்கள் நலனில் இருந்து சிந்தித்து பாருங்கள். அக்கம் பக்கம் இருக்கின்ற வெள்ளையின மக்களின் முகத்தில் முழிக்க முடியவில்லை// இது குசும்புவின் வலி; ஆனால் குசும்பு இதே காலகட்டத்தில் ஒரு வெள்ளையும் பட்டினி போர் இதே லண்டனில் நடத்தியதே? அவர் எங்கே அவர் ஏன் பட்டினிபோரை நிறுத்தினார் கவலைப்படுங்கள்பற்றி நாலு வாக்கியம் எழுதுங்கோ;

  //மக்களைப் பற்றி யாருக்குத்தான் கவலையில்லை. பரமேஸ்வரனைக் காப்பாற்றுவதை விட்டு மக்களைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் கவலைப்படுங்கள்//யால்பானி???
  இதை கவனிக்கவும் யால்பானி,// அக்கம் பக்கம் இருக்கின்ற வெள்ளையின மக்களின் முகத்தில் முழிக்க முடியவில்லை. இந்த கவலைதான் பல்லிக்கு இது இப்படியே ஏலத்தில் போனால் பரமேஸ்வரனுக்கு எந்த கெடுதலும் இல்லை, காரனம் பட்டினி போரில் சாப்பிடகூடாது என சட்டம் இல்லை, அவர் தனது இருப்பிடத்தை மாற்றிவிட்டால் பரமேஸ் பாலு என்னும் பெயரில் ஏதோ ஒரு நாட்டின் இருப்பிட உரிமையுடன் தனது வாழ்வை மிக நிதானமாக வாழ்வார்;(சுவிஸ் முரளி போல்) ஆனால் இந்த வடு காலகாலத்துக்கும் இம்மினத்தை கேலிசெய்யும்; அதுக்கு நாம் காரணமாக இருக்கிறோம் என்பதுதான் பல்லியின் அங்கலாய்ப்பு, இருப்பினும் பல்லி பரமேஸ்வரனை காப்பதுக்காய் களம் இறங்கவில்லை என்பதுக்காக இதோ, பல்லியின் முதல் பின்னோட்டம்;//கவனிக்கவும் அந்த காலகட்டத்தில் பல்லியின் பின்னோட்டங்களை, யார் நம்பினார்கள் இன்று காலம் கடந்த நாட்டாண்மை தீர்ப்பா??//
  ஆகவே பல்லி தன்னை மாற்றி கொள்ளவில்லை; மக்களுக்காய் பல்லியை கூட பல்லி விமர்சிப்பேன்;
  தொடருகிறேன் பல்லி:

  Reply
 • jalpani
  jalpani

  போராட்டத்தின் ஒரு சிலவருடங்களை தவிர மிகுதிக்காலம் முழுவதையும் தன்பிடியில் வைத்திருந்து அதை சிதைத்து விட்டுப் போனவர்கள் புலிகள். இதில் அந்த உண்ணாவிரத மோசடியை கண்டு கொள்ளாமல் விடுங்கள் என சொல்லுவதால் புலிகள் செய்த சீரழிப்புக்கள் ஏதேனும் சரிப்பட்டு விடுமா? ஆயிரக்கணக்கான மாபெரும் துரோகங்களில் இதுவும் ஒன்று. நாம் பேசாது விட்டாலும் உலகம் பேசிக் கொண்டுதான் இருக்கும். நடந்த துரோகங்களை மனத்துணிவோடு ஒப்புக் கொள்ள பழகுங்கள். தலை நிமிர்ந்து வாழலாம்.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  நான் சொன்னால் சரி என்று விட்டு விடவேண்டாம். விமர்சனம் என்பது காலங்கடப்பதில்லை. கலைப்படைப்புக்களைப் பற்றியோ: ஏன் ஒரு தனிமனிதனைப் பற்றியோ மற்றவர்கள் தம்கருத்துக்களை எப்பவும் கூறலாம். அது விமர்சனமே. விமர்சிப்பது விமர்சனம். விமர்சிக்கப்படுவது எதுவாகவும் இருக்கலாம் யாராகவும் இருக்கலாம் எப்போதாகவும் இருக்கலாம்: விமர்சனத்துக்குக் காலம் கிடையாது. //
  //பல்லி மக்கள் நலனில் இருந்து சிந்தித்து பாருங்கள். அக்கம் பக்கம் இருக்கின்ற வெள்ளையின மக்களின் முகத்தில் முழிக்க முடியவில்லை// இது குசும்புவின் வலி; ஆனால் குசும்பு இதே காலகட்டத்தில் ஒரு வெள்ளையும் பட்டினி போர் இதே லண்டனில் // இதைக் குசும்பி எழுதவில்லை என்னை விட்டுவிடுங்கள்.

  //எம்மினத்தின் தரகுறைவை ஏலம் போட வேண்டாம் என்பதே, என்னால் உறுதியாக சொல்ல முடியும் நாம் // எம்மினம் எம்மினம் என்று தான் தம்பியையும் கடசிகாலத்தில் புலியெதிர்ப்பு வாதிகளும் சரி மாற்றுக் கருத்தாளர்களும் சரி ஏற்று மூடிமறைத்து நந்திக்கடலில் கொட்டினோம். ஒன்று விசவிதை எனும் போது அடியோடு அறுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அன்ரன் பாலசிங்கத்தின் மொழியில் அதாவது புலிகளில் மொழியில் சொன்னால் தான் சிலருக்குப் புரியும். அதாவது எமது நாட்டுப் புருமயிர் சிலந்தி என்பதற்காக மடிக்குள் வைக்க இயலாது. அது யாருடைய மடிக்குள் மறைத்தாலும் அது கடிக்கும். ஒவ்வொரு அமாவாசை பறுவத்துக்கும் மறைத்து வைத்தவர்தான் நடுங்கவேண்டும் (புலுமயிர் சிலந்தி கடித்தால் அமாவாசை பறுவத்துக்கு நடுங்கும்.)

  Reply
 • Kusumbo
  Kusumbo

  //அது பல்லியின் நிலையில் மாறுபடுகிறது, பல்லி குசும்புவின் பின்னோட்டத்துக்கு எதிராக விடும் பின்னோட்டம் விமர்சனம், ஆனால் காந்தியின் கட்டுரைக்கு எனது பின்னோட்டம் அவரது மறைக்கபட்ட பக்கம்//
  நிச்சயமாக இது விமர்சனம் மட்டுமல்ல கண்டனமும் கூட. உங்கள் ஆதங்கம் புரிகிறது. வேறுவடிவமான போராட்ட வடிவங்களைத் தெரிவு செய்ததற்காக அவர்கள் இந்தியர்கள் இல்லை என்று மாதிரி நடத்துவதும் மதிப்பழிக்காமல் இருப்தும் கண்டனத்துக்கு மட்டுமல்ல தண்டனைக்கும் உரியதே. எமது நாட்டிலும் மக்கள் போராட்டத்தை வரிந்து கொண்டவர்கள் புலிகளால் பலியிடப்பட்டார்கள். புலிகளின் செயல்களைக் கண்டிப்பவர்கள் கண்டித்தவர்கள் இன்று இந்தியாவில் காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு சுபாஸ்சின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை தண்டிப்பது கண்டிப்பதற்குரியதே.

  Reply
 • பல்லி
  பல்லி

  // ஒன்று. நாம் பேசாது விட்டாலும் உலகம் பேசிக் கொண்டுதான் இருக்கும்.//
  யால்பானி அன்று நடந்த சதிராட்டத்தையோ(பட்டினி) அல்லது இன்று சாப்பிட்ட கம்பேக்கரையோ எந்த உலகம் பேசுகிறது என்பதை சொல்ல முடியுமா? கேக்க ஆசையாய் இருக்கு; பல்லியும் புலம்பெயர் தேசத்தில்தான் வசிக்கிறேன் என்பது தெரியாதா,,??

  Reply
 • பல்லி
  பல்லி

  //நிச்சயமாக இது விமர்சனம் மட்டுமல்ல கண்டனமும் கூட//
  குசும்பு மறுப்பில்லாமல் ஏற்று கொள்கிறேன், பரமேஸ்வரனின் செயல் விமர்சனத்துக்கு உரியதல்ல கண்டனத்துக்குறியது, நன்றி சரியான தகவலை எழுதியதுக்கு;

  Reply
 • பல்லி
  பல்லி

  எது எப்படியோ இந்த கம்பேக்கர் இத்துடன் செமிபாடமையட்டும்; பல்லி இந்தவிவாதத்தை விட்டு ஒதுங்கவில்லை; விலகி செல்கிறேன்; தொடருவோம் வேறு விவாதத்தில்;

  Reply
 • accu
  accu

  பரமேஸ்வரன் மட்டுமல்ல ஈழப்பிரச்சனை என்று சொல்லி உலகின் எல்லா நாடுகளிலும் உண்ணாவிரதம் இருந்தவர்களெல்லாம் நடிப்பும் சுத்துமாத்தும்தான். இது எல்லோருக்கும் தெரிந்த விடயமே! என்ன பரமேஸ்வரன் மாட்டிக்கொண்டார். பரமேஸ்வரனை நாலு பேச்சுப் பேசிப்போட்டுப் போக வந்த குசும்பு, யாழ்பானி, நண்பன், பார்த்திபன் மற்றும் சில பின்னூட்டக்காரர்களை கொண்டு பரமேஸ்வரனை கிழி கிழியெனக் கிழிப்பித்து விட்டார் பல்லி. சாமத்துப் பல்லி ரொம்பவும் சமத்து.

  Reply