‘முல்லைத்தீவின் யுத்த பிராந்தியத்தினுள் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா உதவக் கூடாது’ என People for Equality and Relief in Lanka (PEARL) என்ற அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. ‘மாறாக பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்தவும்’ என்று அவ்வமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்துள்ள பகுதிகளிலேயே தாக்குதலை மேற்கொண்டு பல நூற்றுக் கணக்கான வன்னி மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ள நிலையில் PEARL நேற்று இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது.
‘U.S. Pacific Command (PACOM) முல்லைத் தீவில் சிக்குண்டுள்ள மக்களை வெளிறேற்றும் திட்டத்தில் தலைமைப் பாத்திரம் ஏற்று உள்ளதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள PEARL இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடும்படி கோரி உள்ளது. ‘இவ்வாறு வெளியெற்றப்படும் மக்கள் இலங்கை அரசின் திடமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாவர்கள்’ என்று கூறியுள்ள PEARL ‘எங்களின் கையில் அந்த மக்களின் குருதி வேண்டாம்’ என்று தெரிவித்து உள்ளனர். PEARL அமெரிக்கத் தமிழர்களால் 2005ல் உருவாக்கப்பட்ட அமைப்பு. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கவனத்திற்கொள்ளும் 1800 பெரும்பாலும் அமெரிக்கத் தமிழர்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
தங்களுக்குக் கிடைத்தள்ள தகவல்களின் படி ‘U.S. Pacific Command (PACOM) முல்லைத்தீவில் சிக்குண்டு உள்ள மக்களை வெளியேற்றி இலங்கை அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளது PEARL. இந்த இலங்கை அரசு ஒப்படைக்கப்பட்ட மக்களை நாசி முகாம்கள் போன்ற முகாம்களில் (concentration-style internment camps) அடைக்க திட்டமிடுவதாகவும் PEARL குற்றம்சாட்டி உள்ளது.
இந்த மக்களை முல்லைத் தீவு பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவதை கைவிட்டுவிட்டு பாதுகாப்பு வலயத்தை மேலும் விரிவாக்கி சர்வதேச உதவிப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை சுதந்திரமாக அங்கு அனுமதிப்பதன் மூலம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என PEARL கேட்டுக்கொண்டு உள்ளது.
எல்ரிரிஈ தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் 14 சதுர கி.மீ பரப்பளவை தனது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர். அப்பிரதேசம் அங்குள்ள 200 000 மக்களினால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவர்களில் கணிசமான எல்ரிரிஈ உறுப்பினர்களது குடும்பங்களும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் மற்றும் ஏனைய ஆயுத அமைப்புகளின் களையெடுப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கபடுவார்கள் என்ற நியாயமான அச்சம் அந்த மக்களிடையே உள்ளது. அவர்கள் அப்பிரதேசங்களை விட்டு வெளியேற முடியாமலிருப்பதற்கு இவை முக்கிய காரணியாக உள்ளது. ஏனையவர்கள் பெரும்பாலும் விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது பெரும்பாலான மனித உரிமைகள் அமைப்புகளாலும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
எல்ரிரிஈ தனது கடைசித் துண்டு நிலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 200 000 மக்கள் சிக்குண்டுள்ள நிலம் மிக அவசியம் என்பது பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதனாலேயே அனைத்து பகுதிகளிலும் பின்வாங்கிய எல்ரிரிஈ மக்கள் மிக மிகச் செறிவான பகுதியில் தங்கள் கடுமையான யுத்தத்தை நிகழ்த்துகின்றனர். இப்பகுதியை இழப்பது எல்ரிரிஈ தனது பிரதேசக் கட்டுப்பாட்டை முற்று முழுதாக இழப்பதற்கு ஒப்பானது. கிட்டத்தட்ட இரு தசாப்தங்களின் பின் எல்ரிரிஈ பிரதேசக் கட்டுப்பாட்டை கொண்டிராத ஒரு கொரில்லா அமைப்பாக மீண்டும் மாறுவதையெ இது குறிக்கும்.
அதனால் தனது பிரதேசக் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்வதற்கு யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை பாதுகாப்பு வலயம் என்பன எல்ரிரிஈ க்கு மிக அவசியமானது. பயங்கரவாதத்தை அழிப்பதன் பெயரில் இலங்கை அரசு ஒட்டமொத்த தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடத்தி இன அழிப்பொன்றை மேற்கொள்வதாக பெரும்பாலான தமிழ் மக்கள் நியாயமாகவே நம்புகின்றனர். அதனால் இந்த இன அழிப்பை நிறுத்த யுத்த நிறுத்தம் அவசியமானது என்பதை சரியாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கை அரசு சர்வதேச உதவியுடன் முல்லையில் சிக்குண்ட மக்களை வெளியேற்றி சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் மேற்பார்வையில் அம்மக்கள் விடப்பட்டால் இன்று யுத்தம் நடைபெறும் பிரதேசத்தின் முக்கியத்துவம் இழந்து போவதுடன் எல்ரிரிஈ தனது கடைசித்துண்டு நிலத்தையும் விட்டு கொரில்லாப் போர் முறைக்குச் சென்றுவிடும். இது எல்ரிரிஈ இன் வரலாற்றில் மிக மோசமான பின்னடைவாக அமைவது தவிர்க்க முடியாதது.
2002ல் ஒஸ்லோவில் இலங்கை அரசுக்கு சமமாக ஒரு பிரதேசக் கட்டுப்பாட்டை கொண்டு புரிந்தணர்வு ஒப்பந்த்தில் கையெழுத்திட்ட எல்ரிரிஈ ஏழு வருடங்களில் அவற்றையெல்லாம் இழந்து மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்துவிடும்.
அந்த நிலைக்குச் செல்வதை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எல்ரிரிஈ மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். அதில் மக்கள் பகடைக்காய்களாக கேடயங்களாக ஆக்கப்படுவதிலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முல்லையில் உள்ள வன்னி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இரண்டு இராணுவங்களின் பிடியில் சிக்குண்டு உள்ளனர். இரு இராணுவங்களுமே அந்த மக்கள் மீது தமது அதிகாரத்தை நிலைநாட்டும் தங்கள் இறுதி முயற்சியில் மிக ஆக்கிரோசமாக ஈடுபட்டு உள்ளனர்.
இந்த யதார்த்தத்தின் பின்னணியில் தான் யுத்தம் நடைபெறும் முல்லையில் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் அமெரிக்காவில் உள்ள PEARL அமைப்பு அங்குள்ள மக்களை வெளியேற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. ஹொலிவூட் படங்களில் மட்டுமே செல் அடிகளைப் பார்த்துக் கொள்பவர்கள் கடந்த பல மாதங்களாக செல் அடிக்குள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் மக்களை யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியெற்ற வேண்டாம் எனக் கேட்கின்றனர்.
PEARL அமைப்பின் கோரிக்கை முல்லையில் உள்ள வன்னி மக்களின் பாதுகாப்பு சார்ந்ததாக இருந்தால் PEARL பின்வரும் கோரிக்கைகளையே முன் வைத்திருக்க வேண்டும்.
வெளியெற்றப்படும் மக்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவும் சர்வதேசமும் பொறுப்பேற்க வேண்டும்.
வெளியேற்றப்படும் மக்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
தற்காலிகமான முகாம்களுக்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
மிக விரைவில் சில மாதங்களுக்குள் அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த யுத்தத்தில் உயிரிழப்புகள், அங்கங்களை இழந்தவர்கள் உடமைகளை இழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறான கோரிக்கைகளே யுத்தம் நிறுத்தப்படாத பட்சத்தில் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை அதிலிருந்து பாதுகாக்க ஒரே வழி. அதனைவிடுத்து எல்ரிரிஈ அரசியல் பேரம் பேசுவதற்கும் எல்ரிரிஈ இனதும் புலம்பெயர் தமிழர்களதும் அரசியல் அபிலாசைகளுக்காகவும் இந்த மக்களை பணயம் வைக்க முடியாது. இலங்கை அரசு இனவாத அரசு என்ற முடிவுக்கு நாம் வந்தால் வன்னி மக்களை அந்த யுத்தப் பிராந்தியத்தில் இருக்க நிர்ப்பந்திக்க முடியாது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வாய்ப்பு அழிப்பது அவசியம்.
வடக்கு – கிழக்கு தமிழர்களில் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மூன்றில் ஒரு பகுதியான ஒரு மில்லியன் வரையானோர் வெளிநாடுகளுக்கு வந்துவிட்டனர். மீதமுள்ளவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தெற்கில் வாழுகின்றனர். வெளிநாடுகளுக்கு வரவும் கொழும்புக்கு வரவும் வசதியற்றவர்களே பெரும்பாலும் இன்று வன்னியில் சிக்குண்டுள்ளனர். அந்த மக்களின் வறுமையைக் காரணம் காட்டி அவர்களின் தலையில் தமிழீழச் சுமையை இறக்கி வைத்துவிட்டு ‘உந்த மோட்டுச் சிங்களவன்களுக்கு பாடம் புகட்ட’ ஒற்றைக் காலில் நிற்கும் கோட் ரை கட்டும் கனவான்களும் கனவாட்டிகளும் யதார்த்தத்தை புரிந்த கொள்ள வேண்டும்.
._._._._._.
People for Equality and Relief in Lanka (PEARL)
Action Alert Archive
Take Action Now! (USA)
U.S. Troops Plan Evacuation in Sri Lanka: Sign Death Warrants for Hundreds of Thousands, Support Ethnic Cleansing
March 2, 2009
Credible reports from Colombo, Sri Lanka reveal the U.S. Pacific Command (PACOM) is planning to lead an evacuation of nearly 200,000 Tamil civilians trapped in the war-torn northern region of Sri Lanka. We urge you to stop these plans immediately, which would only serve to exacerbate the crisis for these civilians and support ethnic cleansing in this region. Instead of an evacuation, the “safe zones” these civilians are currently in should be strengthened, with full access for aid workers, journalists and human rights monitors.
These civilians have been besieged by the Sri Lankan government’s military offensive, which has raged on since September, costing the lives of over 2,000 Tamil civilians and wounding another 7,000 Tamil civilians. Reports reveal that PACOM is planning to evacuate these civilians and deliver them to the Sri Lankan government – who would then imprison them in concentration-style internment camps. Human Rights Watch and other humanitarian agencies have criticized the Sri Lankan government for its treatment of refugees: forcibly keeping them in internment camps, separated from family and secluded from international aid agencies, as they are harshly interrogated and abused.
PACOM evacuating these civilians and delivering them to the Sri Lankan government signs the death warrants of thousands of civilians, who would “disappear” upon entry into government-run camps. The Sri Lankan government has the ignoble title of having the highest rate of state-sponsored abductions in the world, according to the United Nations Working Group on Enforced and Involuntary Disappearances. The government frequently “disappears” civilians, journalists and even aid workers who they believe to be critical of their regime.
The Sri Lankan government currently estimates only 70,000 civilians inhabit the conflict area; most aid organizations including the ICRC, UN and HRW estimate 200,000 civilians. This discrepancy reflects a calculated attempt by the Sri Lankan government to underestimate the size of the population they would come to control, granting them adequate room to “disappear” thousands. These 200,000 civilians chose to live in area controlled by the Liberation Tigers of Tamil Eelam, and will therefore be treated with suspicion and brutality by the Sri Lankan government.
PACOM launching an evacuation of Tamil civilians supports the Sri Lankan government’s campaign of ethnic cleansing of this region. Tamils have been under attack by the Sri Lankan government since last September; evacuating them from Vanni and delivering them to the Sri Lankan government is equivalent to being an accomplice to genocide. As American citizens, we implore you to put an immediate stop to PACOM plans to evacuate these civilians. We do not want their blood on our hands. Instead of an evacuation, we urge the U.S. government to expand the “safe zone” these civilians are in, and strengthen their security by allowing aid workers, journalists and human rights monitors full access to the region. We also ask the U.S. government to pressure the Sri Lankan government to accept a ceasefire to provide respite to these besieged civilians.
SUDA
சிக்கன் பர்கரையும் பெப்சியையும் சுவைத்துக் கொண்டு முல்லைத்தீவில் மக்கள் படும் அவலத்தை ஒரு செய்தியாக மாத்திரமே பார்த்துக் கொண்டிருக்கின்ற அமெரிக்க வாழ் மகான்களே! அங்கு மக்கள் தங்கள் உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் அவலத்தையும் அவர்களின் மரண பீதியையும் நீங்கள் அறிந்து கொண்டிருக்க நியாயமில்லை. ஏனெனில் நீங்களெல்லாம் அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் பெட்டியைக் கட்டி ரொம்ப நாட்களாகி விட்டன. அங்கு முல்லையில் கஷ்டப்படுபவர்கள் பசிக்க வேண்டுமென்பதற்காக வகையறா பாணங்களை அருந்திக் கொண்டும் தங்களைப்போல் பருத்த உடலின் எடையைக் குறைக்க பொடிநடை நடந்தும் உல்லாச வாழ்வு வாழும் தரத்திலுள்ளவர்கள் அல்ல. வன்னிப் பெரு நிலப்பரப்பில் அன்றாடக் கஞ்சிக்கே அல்லல் பட்டுக்கொண்டிருந்த மக்கள் இன்று தமது சொந்த வீடுவாசல்களை இழந்து முல்லைத்தீவின் குறுநிலப்பரப்பிற்குள் பலாத்காரமாக முடக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்றைய நிலையில் அவர்களது முதன்மையானதும் அத்தியாவசியமானதுமான தேவை உயிராபத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவது மாத்திரமே. அவர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு யார் உதவி செய்தாலும் அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். நாதியற்ற அல்லல் படும் அம்மக்களுக்கு நல்லது நடக்கட்டுமென்றால் உங்களுக்கு என்ன கெட்டுப்போய் விடப்போகிறது? அம்மக்களின் குருதியைப் பெற்றோலோக்கி அதில் சொகுசு வாகனம் ஓட்டுவது தடைப்பட்டுப் போகுமென்றா?
அம்மக்களின் பாதுகாப்பான வெளியேற்றமென்பது முல்லைத்தீவில் சிக்குண்டிருக்கும் அனைத்து மக்களும் தாங்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வெளியேற்றப்படப்போகின்றார்கள் என்ற தோரனையில் உங்கள் அறிக்கை அமைந்துள்ளது. உண்மையில் கிளிநொச்சி, பூநகரி போன்ற இன்னும் பல பிரதேசங்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்களே இன்று தங்கள் வாழிடங்களிலிருந்து தம் விருப்புக்கு மாறாக முல்லைக் குறுநிலப்பரப்புக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த மக்களை அவர்களின் மரணப்பொறியிலிருந்து வெளியேற்றி அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த குடியிருப்புக்களில் குடியமர்த்துவதற்கான முயற்சியில் என்ன தவறு இருக்க முடியம் என்பதை இத்தகைய கோரிக்கைகளை முன்வைக்கும் கனவான்கள் தங்களது மனச்சாட்சியைத் தொட்டுக்கேட்டு தெளிவு பெற வேண்டும்.
மேலும், அம்மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டால் அவர்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்படுவார்களென்றும் இக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இன்றைய நாளில் கொழும்பு முதல் வடகிழக்கின் விடுவிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற தமிழர்களால் மட்டும் எப்படி இவர்கள் குறிப்பிடும் இனப்படுகொலை அபாயத்திலிருந்து தப்பி வாழ முடிகின்றது என்பதையும் இவர்கள் தெளிவுபெற வேண்டும்.
ஆக, இவை அனைத்தும் பிழைத்துப்போன அனுகுமுறைகளால் ஆபத்துக்குள்ளாகியிருக்கும் கும்பலையும், யுத்தத்தின் மூலம் புலம்பெயர் தளத்தில் குபேரர்களான, ஆகிக்கொண்டிருக்கும் ஒரு சமூகப்பிரிவினரையும் காப்பாற்றுவதற்கான ஒரு பிரயத்தனமாகவே இவ் அமெரிக்க மகான்களின் கோரிக்கை அமைந்திருக்கின்றது.
இறுதியாக, இராணுவத்தால் கொல்லப்படும் நிகழ்வுகளை இனப்படுகொலையாக வர்ணித்திருக்கும் இம்மகான்கள் தங்களின் உயிர்வாழும் உரிமைக்காக தப்பியோடும் அப்பாவி மக்களை புலிகள் கொலை செய்யும் நிகழ்வுகளை எவ்வாறு வகைப்படுத்தப்போகின்றார்கள்?
பார்த்திபன்
//1)வெளியெற்றப்படும் மக்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவும் சர்வதேசமும் பொறுப்பேற்க வேண்டும்.
2)வெளியேற்றப்படும் மக்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
3)எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
4)தற்காலிகமான முகாம்களுக்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
5)மிக விரைவில் சில மாதங்களுக்குள் அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
6)இந்த யுத்தத்தில் உயிரிழப்புகள், அங்கங்களை இழந்தவர்கள் உடமைகளை இழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.// – ஜெயபாலன்
இன்று புலிகளின் பல அமைப்புகளே வெறுமனே புலிகளைக் காப்பாற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றன என்பது கண்கூடு. இவற்றில் பல அமைப்புகள் வெறும் Letter-head அமைப்புகள் மாத்திரமே. அப்பப்ப ஏதாவது அறிக்கைகளை மட்டும் ஏதாவதொரு பெயரில் வெளியிடுவார்கள்.
மேலே ஜெயபாலன் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் பெருண்பான்மையானவற்றை நானும் தேசம் நெற்றில் பலமுறை சுட்டிக் காட்டியுமுள்ளேன். ஆனால் இதற்கு புலிகளும் அரசும் ஒத்துழைத்து ஒரு செயற்பாட்டிற்கு வரவேண்டியதே முக்கியம். அந்தவகையில் மேற்சொல்லப்பட்டவை பற்றிய எனது தெளிவான கருத்தையும் நான் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
1)வெளியேற்றப்படும் மக்களின் பாதுகாப்பை சர்வதேச அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டும். அப்படி வரும் மக்களில் சந்தேகத்தின் பேரில் புலிகளும் உள்ளதாக அரசு கருதினால், அவர்கள் பற்றிய விசாரணைகளையும் சர்வதேச அமைப்பின் முன்னால் நடத்துவதே சாலச் சிறந்தது.
2)வெளியேற்றப்படும் மக்களை சர்வதேச அமைப்புகளின் மேற்பார்வையில் அரசு பராமரித்தால் சந்தேகத்திற்கிடமான கேள்விகள் வர வாய்ப்பில்லை.
3)இந்த விடயத்தில் ஏற்கனவே அரசு சாதாரண புலிப்போராளிகளை மன்னிக்கத் தயாரென்றும் ஆனால் புலித்தலைமைகளை மன்னிக்கத் தயாரில்லையென்றும் அறிவித்துள்ளது. எனவே புலித்தலைமைகளை அரசிடம் ஒப்படைக்காமல் சர்வதேச அமைப்புகளினூடாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைகளுக்குள் உட்படுத்தலாம்.
4)தற்காலிக முகாம்களில் சகல வசதிகளும் என்று குறிப்பிடுவதை விட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட வேண்டும். அதனை உடனடியாக செய்ய முடியாவிட்டாலும் கூடிய விரைவில் செய்து கொடுக்க அரசு முன்வர வேண்டும். இங்கே 1995 ஆம் ஆண்டிலிருந்து வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு புலிகள் கூட எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்பதை நாமும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடிப்படை வதிகள் செய்த கொடுக்கவென்று புலிகள் வெளிநாடுகளில் சேர்த்த பல பில்லியன் டாலர்களை தமது ஆடம்பர வாழ்க்கைக்கே புலிகள் பயன்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால் இதனைக் கண்டிக்கவோ, சுட்டிக்காட்டவோ தயங்கும் பலர் தான் இன்று அரசு மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்யவில்லையென்று குரல் கொடுக்கின்றார்கள்.
5)கிட்டத்தட்ட 34 வருடங்கள் நடைபெற்ற ஆயுதப்போராட்டத்தின் பின் உடனடியாக நிலைமைகளைச் சரிசெய்ய 3நாட்களிலோ அல்லது 30 நாட்களிலோ முடியாது. அதற்கு போதிய அவகாசத்தை அரசிற்கு நாம் கொடுத்தே ஆக வேண்டும். நிலைமைகள் பழைய நிலைக்குத் திரும்ப ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் எடுக்கலாம். அந்தக் கால அவகாசத்தில் அரசு மக்களுக்கு போதிய புனர்வாழ்வும் சுயதொழில் வாய்ப்புப் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக அம்மக்களை அவர்களின் சொந்த இடங்கில் குடியமர்த்தலாமோ அவ்வளவு விரைவாக செயற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கு நெளிநாடுகள் வாழ் தமிழர்களும் போதிய நிதிப் பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும். அதுபோல் இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் அரசுடன் இணைந்து இந்தச் செயற்பாடுகளுக்கு போதிய தார்மீக உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்.
6)பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதியளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டியது முக்கியம். இதற்கு இன்றுவரை புலிகள் வெளிநாடுகளில் வங்கியில் வைத்திருக்கும் பல பில்லியன் டாலர்களை அரசு கையகப்படுத்தலாம். ஏனெனில் அந்த மக்களின் அவலங்களைக் தொலைக்காட்சியிலும், வானொலிகளிலும் சொல்லியே இந்த நிதிகளை அவர்கள் சேர்ந்திருந்தார்கள். அவை உண்மையில் அந்தப் பாதிக்கப்பட்ட மக்களிடமே போய்ச் சேருவதே நியாயமானது. அந்த நிதி மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும் தொழில் வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்கலாம். நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால் வெளிநாடு வாழ் தமிழர்களும் உதவ முன் வர வேண்டும்.
palli
இந்த பேசினால் தீர்க்க முடியும் என்பதுக்கு கட்டுரையாளனது கட்டுரையும் பார்த்திபனின் பின்னோட்டமும் ஒரு எடுத்து காட்டு. இரு தரப்பும் சிறிதளவு விட்டுகொடுத்து போனால் மக்கள் சிரமமின்றி வாழ முடியுமே. இருவருக்கும் உள்ள பிரச்சனையே இதுவரை மனதோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் சர்வதேசத்தை ஏமாற்ற பேசியதுதான்.
சிங்களத் தமிழன்
புலம் பெயர்ந்த நாடுகளில் தற்போது, தமிழருக்கு சிங்களவர் மீது “பிரேமதாசா காலம் போல்” பாசம் பொங்கி வழிவது காணமுடிகிறது. சிங்களவனை ரோட்டில் பார்த்தால் கட்டி முத்தம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள், “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா” அதேபோல், “புலிக்கு மீசை முளைத்தால் சிங்கம்”, இதில் என்ன வித்தியாசம் என்கிறார்கள். ஞானோதையத்துக்கு தகுந்த “ஆற்றுப்படுத்தல்கள்” இருந்தால் சரி!!.
பகீ
”…சிக்கன் பர்கரையும் பெப்சியையும் சுவைத்துக் கொண்டு முல்லைத்தீவில் மக்கள் படும் அவலத்தை ஒரு செய்தியாக மாத்திரமே பார்த்துக் கொண்டிருக்கின்ற அமெரிக்க வாழ் மகான்களே! …”
சுதா, உங்களின் ஆரம்ப ‘பூசை’யே உங்கள் கருத்துளை வாசிக்க முடியாமல் செய்து விட்டது.
இவ்வமைப்பினர் பலரை எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும். சுனாமி காலத்தில் தமது கல்வி/கேளிக்கைகளை தூக்கி எறிந்து விட்டு ஓரிரு நாட்களில் முல்லைத்தீவு சென்றவர்கள் இவர்கள். சென்றது மட்டுமல்லாது தமது கல்வியை பின்போட்டு விட்டு அங்கே 3 – 6 மாதங்கள் தொடர்ச்சியாக நின்று புனர்வாழ்வு, மீழ்கட்டுமாணம் போன்ற செயற்பாடுகளில் பங்காற்றியவர்கள். இவ்வமைப்பினர் ஒருவரை அண்மையில் வெளிவிவகார குழுவின் தலைவர் ஜோன் கெரி அழைத்துப் பேசியுள்ளார். வெளிவிவகார உப-குழு விசாரணைகளின் போது பத்திரிகையாளர்ளின் பாதுகாப்புக்கான அமைப்பின் (CPJ)பிரதிநிதியின் வாக்குமூலமே உதயன் ஆசிரியர் வித்தியின் உயிரைப் பாதுகாத்தது எனச் சொன்னால் மிகையல்ல.
எழுதவேண்டும் என்பதற்காக நீங்கள் நினைப்பதை எல்லாம் எழுதக்கூடாது. உங்கள் சரியான கருத்துகளே கவனத்திலெடுகப்படாமல் போகும் அபாயம் உள்ளது!
murugan
இவ்வமைப்பினர் ஒருவரை அண்மையில் வெளிவிவகார குழுவின் தலைவர் ஜோன் கெரி அழைத்துப் பேசியுள்ளார். வெளிவிவகார உப-குழு விசாரணைகளின் போது பத்திரிகையாளர்ளின் பாதுகாப்புக்கான அமைப்பின் (CPJ)பிரதிநிதியின் வாக்குமூலமே உதயன் ஆசிரியர் வித்தியின் உயிரைப் பாதுகாத்தது எனச் சொன்னால் மிகையல்ல”
சிக்கலான உறவுகளாய் இருக்கிறதே!
பகீ
முருகன்,
தமிழர் தாயகப் பிரச்சினையில் உறவுகள் ‘சிக்கலாக’ இருப்பது 1987 இல் ஐ.பி.கே.எஃப் வரவின் பின்னர் வெளிப்படையாக ஆரம்பித்து விட்டது எனலாம். அதன்பின்னர் நிகழ்ந்தவை நீங்கள் அறியாததல்ல. எம்மை மாலைதீவு, ராஜீவ் கொலை, அமெரிக்க அரசின் தடை, அதை நீக்க லஞ்சம் கொடுக்க முயன்று கைது, ஆயுதம் வாங்க ஒப்பந்தம் என அழைத்து கைது என்ற பெயரில் ”மாட்டல்” கொழும்பில் வைத்து பாகிஸ்தான் தூதுவர் (பழைய ராணுவ அதிகாரி இவர்) மீது குண்டுத்தாக்குதல் என பல தூரம் போய் விட்டது. இதில் இன்னொரு நாடகம் இந்த அமெரிக்க வெளிவிவகார துணைக்குழுவின் விசாரணை என நீங்கள் நினைப்பது உங்கள் குற்றமல்ல. உங்கள் ஐயப்பாட்டில் உண்மை இருக்கலாம்.
ஆனால் வித்தியாதரனின் உயிர் இன்று பிழைத்திருக்கிறதென்றால் அன்றைய விசாரணையின் போது ஸ்ரீலங்கா அரசின்மீதும் ஜனாதிபதியின் மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களே காரணம் என்பது எனது கருத்து மட்டுமல்ல அன்றைய விசாரணையின் போது சமுகமளித்திருந்த பலரது கருத்துமாகும்!
முக்கியமாக முன்னைநாள் அமெரிக்கதூதர் ஜெஃப்ரி லண்ட்ஸ்ரெட் தனது ‘பூசிமெழுகல்கள்’ கைகொடுக்காத பட்சத்தில் ‘ஜனாதிபதி நினைத்தால் ஒரு இரவிலேயே நடைபெறும் (கொழும்பில்) இவ்வாறான செயல்களை நிறுத்த முடியும்’ என திருவாய் மலரவேண்டியதாக இருந்தது!
பகீர்
/தமிழர் தாயகப் பிரச்சினையில் உறவுகள் ‘சிக்கலாக’ இருப்பது 1987 இல் ஐ.பி.கே.எஃப் வரவின் பின்னர் வெளிப்படையாக ஆரம்பித்து விட்டது எனலாம். அதன்பின்னர் நிகழ்ந்தவை நீங்கள் அறியாததல்ல. எம்மை மாலைதீவு, ராஜீவ் கொலை, அமெரிக்க அரசின் தடை,….வித்தியாதரனின் உயிர் இன்று பிழைத்திருக்கிறதென்றால் அன்றைய விசாரணையின் போது ஸ்ரீலங்கா அரசின்மீதும் ஜனாதிபதியின் மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களே…/–அப்படியென்றால், அமெரிக்காவும், இந்தியாவும் மடையர்கள் என்கிறீர்களா?. வித்தியாதரன் கைது, விசரணையில் நடந்த மிக நுணுக்கமான விஷயங்கள்தான் “பரந்த உலகத்தின் போக்கை” தீர்மானிக்கிறது என்கிறீர்களா?, அது சரி, மணலுக்குள் புதைத்திருக்கும் தலையை முதலில் வெளியே எடுங்கள். இதற்குள் நுழைந்து எனக்கும் இந்த வியாதி தொற்றிக் கொண்டது.
murugan
“ஸ்ரீலங்கா அரசின்மீதும் ஜனாதிபதியின் மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையான விமர்சனங்கள் வைக்குமளவிற்கு அப்படி என்ன இலங்கையின் மீது அவர்களுக்கு அவ்வளவு அன்பு!!
SUDA
//முல்லைத்தீவின் யுத்த பிராந்தியத்தினுள் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா உதவக் கூடாது’// அமெரிக்க தமிழ் அமைப்பு.
திரு பகீ! மேற்படி அமைப்பின் கோரிக்கையின் தலைப்பை வாசியுங்கள். சுனாமி அனர்த்தத்தின் போது தன்நலம் பாராது உழைத்தவர்கள் இவ்வமைப்பினர் என்று கூறியிருக்கின்றனர். பாராட்டப்படவேண்டிய விடயம். சுனாமி அனர்த்தத்தினை விட எவ்விதத்திலும் குறைவிலாத உடனடி நிவாரணத் தேவையில் தற்போது முல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் உள்ளனர். இதில் முதன்மையானது அவர்களின் உயிர்ப்பாதுகாப்பு. இதில் நீங்கள் உடன்படுவீர்களென நம்புகின்றேன். அவ்வாறிருக்கும்போது அப்பிராந்தியத்தினுள் முடக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அமெரிக்கா உதவக்கூடாது என மேற்படி அமைப்பினர் கோரிக்கை விடுப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது?
ஆகவேதான் இக்கோரிக்கையில் அரசியல் நோக்கத்தை தவிர மனிதாபிமான நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வமைப்பில் உங்களுக்குத் தெரிந்த நல்ல உள்ளங்கள் இருக்கலாம். அதற்காக அவ்வமைப்பு எதைச் செய்தாலும் அதை சரிகாண வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.
முல்லைக் குறுநிலப்பரப்புக்குள் முடங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டுமானால் யுத்தத்தில சம்பந்தப்படாத அம்மக்கள் யுத்த பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு, புலி ஆகிய இரு தரப்பும் இணங்க வேண்டும். இதற்கான அழுத்தத்தினை இரு தரப்புகளுக்கும் சர்வதேச நாடுகளும் ஏனைய அமைப்புக்களும் கொடுக்க வேண்டும்.இதுவே இன்றைய தேவையாக இருக்கின்றது.
பகீயின் ஆலோசனைக்கு நன்றி.
palli
வன்னியில் வாழும் மக்களை வெளியேற்ற உதவ வேண்டாம் என்பது ஒரு மொட்டையான வேண்டுகோள். உடனடியாக அங்கு வாழும் மக்கள் இரு மிருகத்திடமும் இருந்து காப்பாற்றி சர்வதேசத்திடமோ அல்லது சர்வதேச உதவி அமைப்புகளிடமோ ஒப்படைக்க வேண்டும். இதை அமெரிக்கா செய்தாலும் சரி இந்தியா செய்தாலும் சரி அனைத்து தமிழரும் ஆதரவு வழங்க வேண்டியது இன்றய கட்டாயம். மேல் கட்டுரையில் பல்லிக்கு உடன்பாடு இல்லை. காரனம் மறைமுக செயல் ஒன்று இந்த அமைப்பிடம் உள்ளது புரிகிறது. யாராய் இருந்தாலும் அந்த மக்களை காப்பற்றட்டும். அதனுடன் அவர்களுக்குரிய பாதுகாப்பையும் சர்வதேசமே வழங்கட்டும். ஆக ஊடககடமை இரு மிருகத்தையும் அம்பலபடுத்துவதே.
இதில் சில பின்னோட்டம் அரசுக்கு ஆதரவாக இருப்பது புரிகிறது. அதேபோல் புலிக்கும் இருப்பது தெரிகிறது. பெரும்பாண்மை மக்கள் கூடி செய்த ஆர்பாட்டங்களையே புலிகொடி ஏற்றி புலி ஆர்பாட்டமாக மாற்றிய தமிழர் நாம் அல்லவா?? ஆகவே இன்று முதல் உதவி மக்களுக்கே வேண்டும். அதை வல்லரசு செய்தாலும் சரி. நம்அரசு சீராக செய்தாலும் சரி (அது சாத்தியம் இல்லை) ஆகவே வருபவர்களை வர வேண்டாம் என்பதை விட அவர்கள் செய்யநினைக்கும் செயலில் உள்ள விபரீதத்தை சுட்டிகாட்டி எம் மக்களை காப்பாற்ற அனைவரும் செயல்படுவோம்.
santhanam
பல்லி இவர்களது நோக்கம் புலி முடிந்தால் புலம் பெயர்ந்த நாட்டில் சிலம்பாட்டம் ஆடமுடியாது அதுக்குதான்.
murugan
பல்லி!
இந்த மக்களைக் காப்பாற்ற புலி தவிர்ந்த ஏனையவர்களின் முயற்சிக்கு தீபம் தொலைக்காட்சி ஜிரிவி என்பன ஆதரவு தருமா? பிரிஎவ் சுரேந்திரன் உட்பட இந்த எஞ்சினியர்கள் டாக்குத்தர்மார் எல்லாம் வருவினமோ?
அதை விடுவோம். ஐந்து வயது நிரம்பாத ஒரு குழந்தையின் தாயே தமிழீழப் போராட்டம் என்றால் இப்படி அழிந்து அல்லல்பட்டுத்தானாம் ஆகவேணும் .போராட்டம் என்றால் இழப்பு இருக்கும்தானே எனவும் சொல்லுது. புலி மக்களை தடுத்து வைத்திருக்கிறதே. புலியாவது இரக்கம் காட்டலாமே என கேட்டால் இந்த யுஎன்ஓ ஆக்களுக்கு அரசாங்கம் காசை கொடுத்து இப்படி சொல்லுமாறு செய்விக்கிறதாம்.
இப்படி மகாஜனங்கள் இருக்க எப்ப இவர்களுக்கு உண்மைகளை புரிய வைப்பது? எப்ப வன்னிக்கு விடிவு வாறது?
பகீர்
சிக்கன் பர்கர், பெப்சி போன்ற உணவுகள் மேல்தட்டு வர்கத்தினுடையது அல்ல.. ஆனால் அதை புலம் பெயர்ந்த நாடுகளில் சாப்பிட்டுக்கொண்டு மேல்தட்டு வர்கமாக “குண்டுசட்டி நடுத்தரவர்க சிந்தனையைதான்” நக்கல் அடிக்கிறார் சுதா என்று நினைக்கிறேன்!. தமிழ்த் தலைமைகளை வாகனத்தில் “டிரைவரக” அமரவைத்து, மக்கள் ஏறி அமர்ந்தால், அவர்கலை காடு மேடுகளிலெல்லாம் ஓட்டி, திரும்பும் பாதையும் தெரியாமல், பசி, தாகத்தால் தவிக்கும் மக்களை இறங்கி ஓடவும் விடாமல், இதோ கொஞசம் தூரம், என்று இவர்கள் தீர்மானித்த பாதையில் சென்றால், முடிவில்லாத பாலைவனம் துவங்கலாம். மேலும் அமெரிக்க “தமிழ் கெளபாய்கள்” செய்ததைவிட, நிறைய வெள்ளைக்காரர்கள் என்.ஜி.ஓ. மூலமாக இலங்கையில், வாழ்க்கையை பணயம் வைத்து, பல ஆண்டுகளாக திரும்பி வராமல் பணியாற்றுகிறார்கள், அவர்களுக்கு எந்த நன்றியும் தெரிவிக்கப் படவில்லை.. ஆனால் “வெள்ளைக்காரர்களின்” தயவு மட்டும் பர்கர், பெப்சி சாப்பிட தேவை, அதை “வன்னி மக்களுக்கும்தான்” சிறிது கொடுங்களேன்..பிளீஸ்..
பார்த்திபன்
//அதை விடுவோம். ஐந்து வயது நிரம்பாத ஒரு குழந்தையின் தாயே தமிழீழப் போராட்டம் என்றால் இப்படி அழிந்து அல்லல்பட்டுத்தானாம் ஆகவேணும் .போராட்டம் என்றால் இழப்பு இருக்கும்தானே எனவும் சொல்லுது. புலி மக்களை தடுத்து வைத்திருக்கிறதே. புலியாவது இரக்கம் காட்டலாமே என கேட்டால் இந்த யுஎன்ஓ ஆக்களுக்கு அரசாங்கம் காசை கொடுத்து இப்படி சொல்லுமாறு செய்விக்கிறதாம்.
இப்படி மகாஜனங்கள் இருக்க எப்ப இவர்களுக்கு உண்மைகளை புரிய வைப்பது? எப்ப வன்னிக்கு விடிவு வாறது?//- பல்லி
இப்படி புலிகளுக்கு ஆதரவான பேட்டிகளை மட்டும் தானே தீபம் தொலைக்காட்சி ஜிரிவி என்பன ஒளிபரப்புகின்றன. இவர்களையும் மீறி சிலர் உண்மைகளைச் சொன்ன போது உடன் ஒளிபரப்பை துண்டிக்கின்றார்கள். சென்ற கிழமை இப்படி ஒரு சம்பவர் தீபம் தொலைக்காட்சியில் நடந்ததை தேசத்தில் குறிப்பிட்டுமிருந்தேன். பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்களில் வெளிப்படையாகவே பல மக்கள் சொல்லுகின்றார்களே. அதை வைத்தே புரிந்து கொள்ளலாமே எங்கே உண்மை உள்ளதென்று.
ganaraj
யாரும் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை எல்லோருடைய கவலையும் தலையும் கொடியுமேதான் மக்களின் பிரச்சினைகள் வெளிப்படுத்தி போராட்டம் நடப்பதில்லையே?