மஹிந்த சிந்தனையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Suresh_Piremachandranமஹிந்த சிந்தனையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவை ஏற்று, அதற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற கூட்டமைப்பு நண்பர்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கடுமையாக உழைத்த இளைஞர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நன்றியை அறிவித்துக் கொள்கின்றது.

யுத்தத்தில் வென்றதற்குப் பரிசாக சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கலாம். அல்லது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போலத் தேர்தல் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட ஆட்சியில் தலைவிரித்தாடிய தமிழின விரோத நடவடிக்கைகளையும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தமது வாக்குகளின் மூலம் தெட்டத் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களையும் இந்நாட்டுக் குடிமக்களாகக் கருதி அவர்களையும் அணைத்துச் செல்ல விரும்பினால் அவரது சிந்தனையில் மாற்றம் வேண்டும் என்பதைத் தமது வாக்குகளால் உணர்த்தியுள்ளார்கள். அது மாத்திரமல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்பதையும் வடகிழக்கு என்பது தமிழ் மக்களின் பிரிக்கப்பட முடியாத தாயகம் என்பதையும் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்திருந்தால் இலங்கைத் தீவில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் மாற்றம் என்பதை விடவும் யுத்த வெற்றி குறித்த பிரமையே சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. இதையிட்டு தமிழ் மக்கள் சோர்வடைய வேண்டியதில்லை. சரத் பொன்சேகா தோல்வியடைந்து விட்டார் என்ற காரணத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு தவறானது எனக் கருத வேண்டியதுமில்லை. அப்படிச் சிலர் தெரிவிப்பதானது, அவர்களது அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவிற்கு மாறாக, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளரையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயலும் சுயநல சக்திகளுக்குத் தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். வாக்களிப்புக் கடமையைச் சரிவர நிறைவேற்றிய தமிழ் மக்களுக்கு நெஞ்சார நன்றி கூறும் அதேசமயம் தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உழைக்கும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 Comments

  • thurai
    thurai

    தம்பியின் சிந்தனையுமில்லை, தம்பியுமில்லை.
    மகிந்தாவின் சிந்தனையை தமிழ் மக்கள் ஏற்கவில்லை.
    இனி உங்களின் சிந்தனையை முன்வையுங்கள்.

    தமிழர்களிற்குத் தேவை சரியான தலைமை. இதுவரையும் புலிகளோடு சேர்ந்திருந்து நீங்கள் செய்ததென்ன? சரத்தின் குதிரையும் சறுக்கி விழுத்தி விட்டது. மகிந்தவின் சிந்தனையும் தமிழ் மக்களிற்குத்தான் பிடிக்கவில்லை என்றால் உங்களிற்கு எதிர்காலத்தில் நிச்சயம் பிடிக்கத்தான் போகின்றது.

    துரை

    Reply
  • palli
    palli

    //மஹிந்த சிந்தனையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.//
    மகிந்தாவுக்கு மட்டுமல்ல கூட்டமைப்புக்கும்தான் என்பதை மனதில் கொள்ளவும்;

    வெற்றி ஒரு பக்கம்
    தோல்வி இரு பக்கம்
    வெறுப்பான கருத்தல்ல
    தேர்தல் முடிவிதுதான்:

    சம்பந்தர் சரியில்லை
    சரியான தலமையில்லை
    சாடுவோர் பலருண்டு
    சாட்ச்சியமும் அதற்க்குண்டு;

    பெரும்பாண்மை சொல்லுவதை
    போதும் போதும் என்பதனால்
    சிறுபாண்மை சீரழிய
    சிலபேர்க்கு சிம்மாஜனம்;

    முற்போக்கு சிந்தனையாய்
    மூவினமும் சேந்து ஒரு
    தீர்வொன்றை பேசிவிட்டால்
    தீராதோ பிரச்சனைகள்;

    தமிழர் என சொன்னாலே
    தம் கட்டி ஏசுவோரும்;
    தமிழருக்காய் இடம்கேட்டு
    தலைநகரில் தவம் இருக்க;

    இருக்க இடம் இல்லை
    ஈழ தமிழருக்கு
    புலத்திலே ஈழமாம்
    புண்ணாக்கு தமிழருக்கு;

    பல்லியின் பின்னோட்டம்
    பாவபட்ட மக்களுக்காய்
    சிந்தனைகள் இடம்மாறும்
    சிலரது சீற்றத்தால்;

    பல்லி;

    Reply
  • sampanthan
    sampanthan

    சம்பந்தன் எடுத்த `முடிவு`க்கு எதிராக கஜேந்திரன் அறிக்கை
    Friday, January 29th, 2010 at 8:35

    நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை கூட்டமைப்பு எடுக்க முக்கிய காரணமான சம்பந்தனின் அரசியல் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சே. கஜேந்திரன் வன்மையாக சாடியுள்ளார்.

    சம்பந்தன் எடுத்த ‘முடிவு’ குறித்து சே. கஜேந்திரன் தன்னிலை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர், இதன் மூலம் நடைபெற்று முடிந்த தேர்தல் சிங்கள தேசத்திற்கான தேர்தல் அதில் தமிழ் தேச மக்களாகிய தாம் பங்கெடுக்கத் தேவை இல்லை என்பதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனரென தனது அறிக்கையில் குறிப்பிடும் கஜேந்திரன், 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புலிகளின் தலைமை பகிஸ்கரிக்கக் கோரியதை சம்பந்தன் அண்மையில் விமர்சனத்துக்குள்ளாக்கியதையும் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

    75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரித்ததன் மூலம் கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்று தேசியத் தலைமை எடுத்த முடிவை தாம் விரும்பியே நடை முறைப்படுத்தினார்கள் என்பதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளையே தமது ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதனையும் `சம்பந்`தப்பட்ட தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனரென மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    இங்கு `சம்பந்`தப்பட்ட தரப்பு என கஜேந்திரன் மறைமுகமாக சுட்டிக்காட்டுவது திருமலை தந்த இராயவரோதயம் சம்பந்தன் அற்றி வேறு யாரும் அல்ல.

    `தனித்துவமான இறைமை` என்ற தேசியக் கொள்கைகளை முன்வைத்து உறுதியாக ஐனநாயக வழியில் போராடப்போவதாக செல்வராசா கஜேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிடும் `தனி நாடு` சாத்தியமில்லை என்பதை இரா. சம்பந்தன் அண்மையில் பல பேட்டிகளில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம்.

    Reply
  • Lal Jeyalath
    Lal Jeyalath

    Tamils and Muslims in North & East vote en mass to an unknown general who in record reiterated that this country belongs to Sinhalese and the damn minorities are living at the mercy of them. Who has again and again demonstrated that he is an ultra racist and whose solution for the ethnic problem was to increase the military in to 500,000 and colonize the entire North & East with large military cantonments. This is the general who refused to stop using heavy artillery to prevent Tamil civilian casualties.

    Good old Tamil politicians in the TNA endorsed him and reiterated that he famously questioned that why a Tamil or a Muslim can’t become the president of Sri Lanka. Did they want us to believe that a shrewd politician like Sampandan did swallow the hook, line and sinker of Fonseka’s bait? Did they believe that Fonseka would have shed all his life long beliefs overnight and embrace all minorities with loving kindness? Absolutely not. They wanted to punish the guy who defeated the LTTE which was the trophy for the Sri Lankan Tamils.This was at the cost of their very own existence in the 21st century holocaust in the hands of Hitler like Fonseka .

    It made at least one thing clear. Irrespective of all empty rhetoric by Fonseka of winning the war all by himself, the Tamils know that it was Mahinda and Mahinda alone who did that. That is why they were behind his blood.
    Anyway there is one clear massage for them in this election results. If the people in North & East are thinking of a peaceful coexistence within a reasonable political solution to their true grievances in this country, they have to work with a politician who demands trust and respect of the south. They will never see the light at the end of the tunnel by making underhand deals with political opportunists like Fonseka or Wickramasinhe for that matter because they will be rejected outright by the South. This has been proven beyond doubt time and time again.

    Reply
  • Kumaran
    Kumaran

    ஆனந்தசங்கரி தேவையான நேரத்தில் அரசையும் புலிகளையும் கண்டிக்கத் தவறியது இல்லை.

    TNA வன்னி மக்கள் கொல்லப்படும் பொழுது அமைதியாக ஐரோப்பாவில் இருந்து விட்டு, முன் நின்று கொலை செய்த SF தேர்தலில் ஆதரித்தார்கள். புலிகள் இருந்து குழப்பியதை, இப்ப இவர்கள் செய்கிறார்கள்.

    தமிழ் தேசியம் கதைத்தே தமிழர்களை அளிக்கப்போகிரர்கள்.

    Reply
  • NANTHA
    NANTHA

    “தன் தலைவனைக்” கொன்றவனின் கால் கழுவி முத்தியடைய எண்ணிக் கொண்டிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் “தமிழ்: பற்றி கதைப்பது வேடிக்கையான விஷயம்.

    சரத் பொன்சேகாவுக்கு வாக்கு வேட்டையில் இறங்கிய சம்பந்தன் கோஷ்டி “சரத்” சிந்தனை பற்றி மூச்சு விட்டது கிடையாது. “புலிகள்தான் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள்” என்று முழங்கிய சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் “புலிகளின்” கொள்கைக்கும் “சரத்” கொள்கைக்கும் என்ன ஒற்றுமை கண்டு தமிழர்கள் வாக்களிக்கும்படி கேட்டார்கள்? யாருக்காவது தெரியுமா?

    இலங்கை மண்ணில் “ஈழம்”, அதாவது மண்ணில் “பங்கு” கேட்ட சம்பந்தன், புலி கோஷ்டி, “தமிழர்களும், முஸ்லிம்களும் விருந்தாளிகள் அல்லது வந்தேறு குடிகள்” என்று கூறி, இதுவரை அந்த கூற்றுக்கு “மன்னிப்போ” மறுப்போ கேட்காத/சொல்லாத சரத் பொன்சேகாவுக்கு வாக்கு கேட்ட “தமிழ்” பண்பாடு என்னவோ? புலி, சம்பந்தன் ஆதரவாளர்களே தயவு செய்து “தமிழ்” வாசகர்களுக்கு அந்த “சரத்” புராண ரகசியத்தை சொல்லுவீர்களா?

    பாம்பு விஷத்தை தவிர எதையும் கக்காது என்று தெரிந்தும் அதற்கு “பால்” ஊற்றச் சொன்னவர்கள் “அந்த பாம்பு “ரத்தினம்” கக்கும் என்று நம்பச் சொல்லியுள்ளனர். பால் ஊற்றியவர்கள் “புண்ணியவான்கள்” என்று கூறி இப்போது மீண்டும் அவர்களை “முட்டாள்கள்” என்று உலகுக்கு முரசம் கொட்டி “தட்சனை” கேட்டு புறப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு வேட்டையாட இந்த பிரேமச்சந்திரன் இது மாத்திரமல்ல, இன்னமும் பல “மட்டை” கிரீடங்களை தமிழ் மக்களுக்கு சூட்ட வருவார். பட்டுக்கு ஆசைப்பட்டு கோவணத்துடன் நிற்கும் தமிழர்கள் பாராளுமன்றத் தேர்தலோடு கோவணத்தையும் தொலைத்து விட்டு அம்மணமாக போக இருக்கிறார்கள்.

    சம்பந்தன் கோஷ்டி போன்ற “இடைநிலை” ப்ரோக்கர்கள் தமிழர்களுக்கு தேவைதானா என்று சிந்தியுங்கள்!

    Reply
  • Ajith
    Ajith

    The messages from this election are clear from both sides (Majority and Minority. Sinhalese are not ready to accept that tmails are part of the nation and they have their rights. Tamils are not ready to accept Sinhala rulers as their rulers. Rajpakse used both tactics Mahintha Chinthana – Vadakin Vasantham and violence (using Douglas and Karuna. Rajapakse may celebrate the victory but the nation lost its credibility. So far only Indian prime minister and president sent congratulatory messages to Rajapakse. No one else prepared to accept a war criminal as a president other than Extremists sinhala and … Rajapakse.

    Reply
  • Rohan
    Rohan

    நாங்கள் முக்கியமான ஒரு அவதானத்தைப் பற்றிப் பேசத் தவறியிருக்கிறோம் என்று நினைக்கிறேன் – யாராவது எங்காவது பேசியுள்ளாரா என்று நான் அறியேன்.

    வடக்கு – கிழக்கு என்று பிரதேச வாதம் பேசியோருக்கெல்லாம் மட்டக்களப்பு – திருமலை மக்கள் (தமிழரும் முஸ்லிமுமாக) சாட்டை அடி தந்திருக்கிறார்கள். குறிப்பாக, கிழக்குத் தமிழர்கள் தம்மை ‘பாசிசப் புலிகள்’ பிடியிலிருந்து விடுவித்த மகிந்தவை விலக்கி, வடக்குத் தமிழர்களுக்குக் கொடுமை செய்த மகிந்தவுக்கு எதிராகத் தான் வாக்களித்திருக்கிறார்கள். கிழக்கு மக்களின் விடிவெள்ளிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கிழக்குத் தமிழர்கள் செருப்படி கொடுத்துள்ளனர் என்றே சொல்லலாம்.

    கல்குடா:
    சரத்: 60.5%
    மகிந்த: 34.0%

    மட்டக்களப்பு:
    சரத்: 68.7%
    மகிந்த: 27.6%

    பட்டிருப்பு:
    சரத்: 80.1%
    மகிந்த: 13.0%

    திருமலை:
    சரத்: 69.4%
    மகிந்த: 27.0%

    மூதூர்:
    சரத்: 59.1%
    மகிந்த: 38.0%

    யாழ் தமிழனுக்கு முட்டாள் பட்டம் கொடுத்தோம். அவர்களைக் கூட்டமைப்பின் பின் செல்லும் செம்மறிகள் என்று வரித்தோம். கிழக்குத் தமிழன் யார் சொல்லைக் கேட்டான்?

    கடைசியில், கிழக்குத் தமிழனின் நாடியைப் பிடித்துப் பார்த்திருந்தது கருணாவுமல்ல – பிள்ளையானுமல்ல – சிவகீதா என்று வெளிப்பட்டிருக்கிறது. அந்தக் கோபத்தில் கிழக்கின் ஆதிக்கம் செலுத்துவோர் சிவகீதா வீட்டுக்குக் குண்டு எறிந்துள்ளார்கள்.

    கருணாவும் பிள்ளையானும் சில்லறைச் சலுகைகளுடன் வாழ்ந்து விட்டுப் போவார்கள். ஒரு முறையான நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் சிவகீதா வெல்லக் கூடும் என்று நான் நினைக்கிறேன்.

    Reply
  • Appu hammy
    Appu hammy

    The Special Task Force (STF) is currently raiding the office of General Sarath Fonseka located near Royal College in Colombo. An official at the General’s office said that over 200 STF personnel are searching the premises.

    The time has come for taking revenge on the loosers On Poya day also! in the middle of preaching Dhamma and taking revenge. The government claims that they have the majority people behind President. Then why are they so worried about a candidate that has lost” badly” as stated by the government ?
    SF is a traiter.Now all lankans know MR is nice,soft president is the “DEMOCRACY or DEMO-CRAZY”

    Like Libya…… ‘Srimbabwe’! The democracy is dead and the devil is alive.

    Please read all the headlines, in today’s ‘Daily Mirror.’ Take them to your heart, without bias. Question: Was this how previous Presidents and Governments behaved after being reelected?

    God help our motherland, please! The Myanmar system? how, people are even scared to talk and comment on the President or the government. Why? Are we living in Iran or Zimbabwe? We have our rights! Please leave SF alone …

    Soon, Sri Lankans will realize this evil . We all the know the truth. This will only make you stronger and stronger, SF! what happened to sarathfonseka.com ? ? ? Anyone accessed it ? ? ? Democracy at work ? ? ?

    Reply
  • senthil
    senthil

    இங்கு ஜனாதிபதி தேர்தலில் யார் வெல்லுவார்கள் என்பதற்கு அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை தோல்வியடையும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த தேர்தல் புலியின் ஆதரவு இன்னமும் விட்டு செல்லவில்லை என சித்தார்த்தன் தேர்தலுக்கு முன்னர் சொன்னதை நினைவூட்டுகிறேன். குறிப்பாக யாழில் தேவானந்த சந்துபொந்து என்று எல்லா இடமும் செய்த தேர்தல் கால சலுகைகள் எல்லாம் விளலுக்கு இறைத்ததாக வீணாக போய்விட்டது.

    Reply
  • london boy
    london boy

    செந்தில் யாழ்ப்பாணத்தில் சந்து பொந்துக்குள் இருக்கும் கஷ்டப்பட்ட சனங்கள் இதோட எண்டாலும் சில சலுகைகளைப் பெற்றார்களே என்ற பக்கத்தைப் பார்க்க மாட்டீங்களே. மக்கள் நலன் பார்க்க மாட்டியள். பதவியையே பாருங்கோ.

    Reply
  • lio
    lio

    http://thesamnet.co.uk/?p=18596
    ஜனநாயகத்தை நிலைநாட்ட மட்டு மேயர் சிவகீதா சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு Jan 8 2010

    எமது பிரதேசத்தில் உள்ள மக்களின் வேண்டுதலுக்கு இணங்க அரசியலில் நுழைந்து கொண்ட நான், அரசியலில் நுழைந்ததில் இருந்து எனது பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகளின் ஆலோசனையை பெற்றே அரசியல் செய்துவருகின்றேன். இன்றைய நிலையில் எனது பிரதேசத்தில் உள்ள மக்களும், புத்தி ஜீவிகளும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, இலங்கையின் பொருளாதாரத்தை உயத்துவார் என நம்பப்படுகின்ற ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டியதை அடுத்து இம்முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    http://thesamnet.co.uk/?p=12711
    சிவகீதா பிரபாகரன் த.ம.வி.பு. கட்சியிலிருந்து ராஜினாமா June 9 2009

    தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியும்,தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைய எடுத்த முடிவு தொடர்பாகவும் விளக்கிய பின்பு ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்.
    தனது சுய விருப்பத்தின் பேரிலேயே இந்த முடிவை தாம் எடுத்ததாகவும், யாருடைய அழுத்தமும் இம்முடிவுக்குக் காரணமல்ல என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்த சிவகீதா பிரபாகரன், ஜனாதிபதியைச் சந்தித்து அடுத்த சில தினங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    http://thesamnet.co.uk/?p=12390
    மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார். June 2 2009

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் இது ஒரே நாடு ஒரே இனம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தவே நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்வதற்கு விரும்புகின்றேன்.

    கடந்தகால யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும் சிதைவடைந்து போயுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்து நமது மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்த வேண்டியுள்ளது.

    இதற்கு இன்று பொருத்தமாகவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதுதான் சிறந்ததாகும். தமிழ் மக்களுக்கு தேசிய, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்க விரும்பும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றவே விரும்புகின்றேன்.

    கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் இது தொடர்பாக பேசி அவரையும் இணைத்துக்கொண்டு சேரவிரும்புகின்றேன். இது தொடர்பாக நான் விரைவில் அறிவிப்பேன் என மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.

    Reply
  • palli
    palli

    //தமிழர்களும், முஸ்லிம்களும் விருந்தாளிகள் அல்லது வந்தேறு குடிகள்” என்று கூறி, இதுவரை அந்த கூற்றுக்கு “மன்னிப்போ” மறுப்போ கேட்காத/சொல்லாத சரத் பொன்சேகாவுக்கு வாக்கு கேட்ட “தமிழ்” பண்பாடு என்னவோ?//
    சரியான கேள்வி இதுக்கான பதிலை கூட்டமைப்பு தரவேண்டும், ஆனால் சரத்தை விட கேவலமாய் நந்தா தமிழரை விமர்சித்ததுக்கு என்ன செய்ய போறியள்; நேரம் கிடைக்கும்போது சமீபகாலமாக(தேர்தல் ) தாங்கள் எழுதிய பின்னோட்டங்களை பார்வையிடவும்; தமிழரைதான் யார் வேண்டுமானாலும் தூக்கலாம் இறக்கலாம் என ஆச்சே;

    //சனங்கள் இதோட எண்டாலும் சில சலுகைகளைப் பெற்றார்களே என்ற பக்கத்தைப் பார்க்க மாட்டீங்களே.//
    பார்க்கலாம் பராட்டலாம்; ஆனால் மாதம் ஒருமுறை தேர்தல் வரும் என தெரிந்தால்; மக்களுக்கு உங்கள் பிச்சை தேவையில்லை; அவர்களை உழைக்க போகவோ சுகந்திரமாய் நடமாட விடுங்கள்;(அப்படிதான் வாழுகிறார்கள் என சொல்லுவியள்) ஆனால் எமது குடும்பங்களும் அங்குதான் இருக்கிறார்கள்

    //ஆனந்தசங்கரி தேவையான நேரத்தில் அரசையும் புலிகளையும் கண்டிக்கத் தவறியது இல்லை.//
    உன்மைதான் தனக்கு தேவையான போது தோழரை கூட கண்டித்தாரே(மகிந்தாவுக்கு மடல் எழுதி)

    Reply
  • மாயா
    மாயா

    தமிழர்கள் வாக்களித்திருப்பது மகிந்தவுக்கு அல்லாமல் இருக்கலாம். ஆனால் புலிகளை அழிக்க தலைமை தாங்கிய சரத் பொண்சேகாவுக்கு என்பதே அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கிடைத்த வாக்குகள் கூட்டணிக்கோ அல்லது புலிகளுக்கோ அல்ல. முடிந்தால், பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு வெல்லட்டும். பார்க்கலாம். அனைத்து கேடு கெட்ட தமிழ் கட்சிகளும் மக்களால் துடைத்தெறியப்படும் காலம் தொலைவில் இல்லை. சித்தார்த்தர் கூட தந்தை வழி அரசியல்வாதிதானே தவிர , வேறு எதையும் சிந்திப்பதாக தெரியவில்லை என அவரது நடைமுறை இருக்கிறது. அதை சுவிஸில் கதைத்த போது நிரூபித்தார். அதாவது ” தம்பியின் (பிரபாகரன்) கொள்கை சரி. ஆனால் தம்பி, அதை முன்னெடுத்த முறை தவறு” என்றார். என்னை சிரிக்க வைத்த சித்தரின் பேச்சு இது. இரு தோணியில் கால் வைத்தால் புளொட்டும் புள்ளடியே இல்லாமல் தாண்டு அமிழும் காலம் தொலைவில் இல்லை.

    Reply
  • palli
    palli

    // அனைத்து கேடு கெட்ட தமிழ் கட்சிகளும் மக்களால் துடைத்தெறியப்படும் காலம் தொலைவில் இல்லை. //

    இதுவே பல்லியில் பகல் இரவு கனவு ;

    Reply
  • BC
    BC

    யாழில் தேவானந்த சந்துபொந்து என்று எல்லா இடமும் சென்று செய்த உதவிகளால் சனங்கள் கொஞ்சம் நிமிர்ந்து உருப்படியாக யோசிக்க தொடங்கி விடுமோ என்று சரியாக தான் பயந்தவை. அது நடக்கவில்லை. தமிழர்கள் நலன் என்று பார்த்தால் தமிழீழம் என்னாவது.

    மாயா, சித்தார் பற்றி பலருக்கும் அறிய தந்தது நல்லது.

    Reply
  • Rohan
    Rohan

    “முடிந்தால், பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு வெல்லட்டும். பார்க்கலாம். அனைத்து கேடுகெட்ட தமிழ்கட்சிகளும் மக்களால் துடைத்தெறியப்படும் காலம் தொலைவில் இல்லை.” , /மாயா.

    கூட்டமைப்பு வென்றால் இருக்கவே இருக்கிறது மக்கள் முட்டாள்கள் என்ற லேபல்!

    Reply
  • Ra.ruban.
    Ra.ruban.

    றோகன்
    உங்கட அவதானத்தை தாண்டியும் நாங்கள் அவதானிக்கிறம்.
    இந்த தேர்தல்முடிவுகளையும் விகிதாசாரங்களையும் கடந்த பொதுத்தேர்தல் முடிவகளோடு ஒப்பிட்டுப்பாருங்கள்!. கூட்டமைப்பு கூட்டணியா மகிந்தா கூட்டணியா வடகிழக்கில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.
    கூடவே சுரேஸ் பிரேமச்சந்திரன் கஜேந்திரன் ஆகியோரது நேற்றய அறிக்கைகளையம் படிக்கவும். தேர்தல் முடிந்தவுடன் கட்சிதாவமுயற்சிக்கும் சிறுபான்மைக்கட்சிகளின் கூட்டின் அங்கம் முஸலிம் காங்கிரசின் அறிக்கையையும் படிக்கவும். நேரங்கிடைத்தால் ஜரிவி பக்கமும் இடைக்கிடை காதை எறியவும்.

    Reply
  • Appu hammy
    Appu hammy

    GOOD THINKING Palli

    Reply
  • palli
    palli

    அப்புகாமி கட்ச்சியோ அல்லது இயக்கமோ எமது மக்களுக்கு வேண்டாம், சமூக காவலர்கள் போதும்; அது அப்புகாமியோ அல்லது அல்பிரேட்டோ ஏன் ஜயாதுரையாக இருக்கட்டும், எம்சமூகம் வாழ ஏதாவது செய்வோம்; அதுக்காக மாற்று சமூகத்தை புறக்கணிப்பதாய் அர்த்தம் இல்லை, காச்சலுக்கு முன்பு கான்ஸருக்குதான் மருத்துவம் தேவை,நாம் யார் எனபதை அப்புகாமியும் அறியுமே;

    Reply
  • NANTHA
    NANTHA

    பல்லி: //ஆனால் சரத்தை விட கேவலமாய் நந்தா தமிழரை விமர்சித்ததுக்கு என்ன செய்ய போறியள்; //

    புரியலையே!

    Reply
  • accu
    accu

    இங்கு எல்லோருமே இந்தத் தேர்தலின் முடிவுகளை குறித்து தாம் நினைக்கும் காரணங்களை எழுதுகிறீர்கள். அதே போல் நானும் எனக்குப்பட்டதை எழுதுகிறேன். இது பிழையாகவும் இருக்கலாம் வெறும் கணிப்ப்புத்தான். எனக்குத் தெரிந்த பலர் யாழ்ப்பாணத்தில் தமது உறவினரின் தகவல்களின்படி எனக்குக் கூறிய ஒரு பொதுவான விடயம் [இது புலிகளின் அழிவுக்கு முன்] யாழில் நடக்கும் கடத்தல்,கொலைகள்,கப்பம், இன்னும் பல அநியாயங்களுக்கு தோழரின் ஆட்கள்தான் காரணமெனவும் இதை இராணுவமும் இணந்து செய்வதால் எதுவுமே செய்யமுடியாதெனவும். இதை நான் தோழரின் மிக நெருங்கிய சகா ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறிய விளக்கம் இவை அனைத்தும் உண்மையில்லை ஆனால் யாழில் ஊடுருவிய புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம். மற்றும் இராணுவத்துடன் புளொட் மோகன் குறூப்,மற்றும் புலிகளில் இருந்து பிரிந்து இராணுவத்தில் இணந்து செயல்ப்படும் பழய புலிகளும் அங்கு பல அடாவடித்தனங்கள் செய்கிறார்கள் ஆனால் எல்லாப் பழிகளும் ஈபிடிபி மேல் விழுவதாக மேலும் தோழர் எத்தனையோ ஆயிரம் பேருக்கு வேலை எடுத்துக்கொடுத்துள்ளார் அவர்களிடம் சிறிய தொகையாக பத்தாயிரம் ரூபா வாங்கியிருந்தாலே அவருக்கு தேவைக்கதிகமாய் பணம் கிடத்திருக்கும் ஆனால் அவர் அப்படிப்பட்டவரில்லை என்றார். இதில் உள்ள உண்மை பொய் எனக்குத்தெரியாது. ஆனால் இங்கு கனடாவில் டக்லஸ் தேவானந்தா என்றால் யார்,எந்தக்கட்சி,எந்த இயக்கத்தில் இருந்தவர்,அவரின் செயல்பாடுகள் என்ன என்று தெரியாதவர்களே அவரின் பெயர் சொன்னவுடன் அவரை துரோகி,ஒட்டுக்குழு, என்று பலர் தம் மனதில் பதித்து வைத்துள்ளனர். இதற்க்கு புலிகளின் நீண்டகாலப் பிரச்சாரமே காரணம். இது தோழருக்கு மட்டுமில்லை கருணா,பிள்ளையான்,சித்தர் எல்லோருக்குமே பொருந்தும். இது இலங்கையில் உள்ள பல தமிழ் மக்களின் மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளது.எனவே இந்தரக மக்கள் சரத்தான் இவர்களை ஒடுக்குவார் என்பதற்காகவே சரத்துக்கு வாக்களித்திருக்கலாம். இதேபோல் புலிகளின் ஆயுத அடக்குமுறையை வெறுப்பவர்களும் இன்னும் ஆயுதக்குழுவைப்போலவே செயல்ப்படும் இவர்களுக்கு எதிராகவே வாக்களித்திருக்கலாம்.[மகிந்தவை ஓரளவு ஏற்றிருந்தால்கூட] இதைவிட கூட்டமைப்பை ஆதரிப்பவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரிப்பவர்கள் இவர்களின் வாக்கும் சரத்துக்கே கிடைத்திருக்கும். இவைதான் என் ஊகம்.

    Reply
  • NANTHA
    NANTHA

    ACCU:
    உங்கள் அவதானிப்பு உண்மையே. கனடாவில் “முழக்கம்” என்று ஒரு பத்திரிகை புலி என்று மாத்திரமல்ல பிரபாகரன் ஆண்டு என்று கூட பிரசுரம் செய்தது . அந்த பத்திதிரிகை ஆசிரியரின் ரிஷி மூலம் நதிமூலம்கள் ஆராய்ந்த போது பல திடுக்கிடும் தகவல்கள்.

    இந்த முழக்கம் ஆசிரியர் இயக்கங்கள் தமிழர் வீடுகளில் “கொள்ளையடித்துக்” கொண்டு ஓடிய காலங்களில், நாலு தமிழர்களின் வீடுகளில் கொள்ளையடித்துக்கொண்டு கனடா ஓடிய ஆசாமி என்பதும் தெரிய வந்துள்ளது. கனடாவில் புலி என்று கோஷம் கிளப்பிய பத்திரிகைகள் அனைத்தும் இப்படியான “மோசடி” கில்லாடிகளால் நடத்தப்பட்டவை. இப்போது விலாசம் இல்லாது உள்ள பத்திரிகைகள்!

    டக்லஸ் போன்ற “நின்று” போராடுபவர்களுக்கு விலாசம் தேவை இல்லை.

    Reply
  • santhanam
    santhanam

    இதில் தமிழ் தேசிய கட்சி தனது அரசியல்சானக்கியத்தை நன்றாக பயன்படுத்தியுள்ளது டக்களஷ் கருணா பிள்ளையான் கட்சிகளின் அறுவடையை அம்பலபடுத்தியுள்ளனர் மக்களின் நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு காட்டியுள்னர்.

    Reply
  • palli
    palli

    சந்தானம் இது உன்மைதான்; அதுக்கு காரனம் கூடமைப்பு இல்லை; மக்களாகவே தமது வலியை காட்டியதாக சொல்லலாம்; கூட்டமைப்பு கூட கூட்டம் போட்டு பேசமுடியாத நிலை வந்துவிட்டதே;

    Reply