கே பி யின் வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு லண்டனில் அலுவலகமும் இணையத்தளமும் – சிறிபதி சிவனடியாரின் அறிக்கை

Kumaran_Pathmanathan_New_Photoயூன் நடுப்பகுதியில் இலங்கை சென்று குமரன் பத்மநாதனை சந்தித்துத் திரும்பியுள்ள புலம்பெயர் கே பி ஆதரவுக்குழு தங்கள் தங்கள் செயற்பாடுகளை வேகப்படுத்தி வருவதாகத் தெரியவருகின்றது. தங்கள் பயணத்திற்குப் பின் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பியவர்கள் தொடர்ந்தும் தங்கள் ஆதரவுத் தளத்தை உசார்ப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் இணையத்தளம் ஒன்றை உருவாக்கி அதனை அறிமுகம் செய்துள்ள இவர்கள் தங்கள் பயணத்தின் போது எடுக்கப்பட்ட விடியோப் பதிவுகளை அதில் பதிவிட்டுள்ளனர். இவ்விணையத்தளம் தொடர்பாக சிறிபதி சிவனடியார் வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விடயங்களை கே பி கவனித்துக் கொண்டிருந்த போது அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவரும் நிதிசேகரிப்பில் முன்னின்றவருமான சிறிபதி சிவனடியார் அந்நிதியுடன் தொடர்புடையவர்களை அணுகுவதாக உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கேபி க்கு ஆதரவான புலம்பெயர் குழு லண்டனில் அவர்களுக்கான அலுவலகம் ஒன்றை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர். அல்லது ஆரம்பிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர் எனத் தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை புலம்பெயர்ந்த குழுவில் பயணித்த சார்ள்ஸ் அன்ரனிதாஸ் மறுத்திருந்தார். இன்னமும் புலம்பெயர்ந்த நாடுகளில் கேபி க்கு எதிரான அணி பலமாக இருப்பதால் கேபி க்கு ஆதரவானவர்கள் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பது ஆபத்தானதாக அமையும் என அவர்களிடையே அச்சம் உள்ளது.

கேபி யைச் சந்திக்கச் சென்ற சிறிபதி சிவனடியார் தீபம் தொலைக்காட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக அங்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாகவே தீபம் தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். தீபம் தொலைக்காட்சியின் முக்கிய பங்குதாரரான துரை பத்மநாதனே இந்த முடிவை எடுத்ததாகத் தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. சிறிபதி சிவனடியார் தற்போது முழுமையாக கேபி இன் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

._._._._._.

Kumaran_Pathmanathan_New_Photo‘நெர்டோ’ இணையத்தளத்தை அறிமுகப்படுத்தி சிறிபதி சிவனடியார் வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்பான நண்பர்களே, உறவுகளே, வணக்கம், வாழ்த்துக்கள்,

புதியதொரு இணையதளம் இப்பொழுது உருவாகியிருக்கிறது. அறிவியல் கண்கொண்டு பார்த்தால் இது இணையதளம், மனித நேயத்தோடு பார்த்தால் எங்களின் இதயதளம். முகாமில் இருக்கும் எமது மக்களின் மறுவாழ்வுப் பணியை நோக்கமாகக் கொண்டு இந்த www.nerdo.lk இணையதளத்தை உங்கள் முன் அர்ப்பணிக்கின்றோம்.

இதில், நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெறும் மக்கள் நலத்திட்டங்கள், ஆதரவுக்கரம் நீட்டுவோரின் ஆலோசனைகள் இப்படி பல்வேறு விடயங்களைத் தொடர்ந்து வெளியிடவுள்ளோம்.

இனத்தின் புனர்வாழ்வுக்கு, நிதி தேடுவது மட்டும் தான் இதன் நோக்கமல்ல, எங்களின் முயற்சிகளையும் நடைபெறவுள்ள திட்டப்பணிகளையும் அவ்வப்போது உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் தான். எங்களின் செயல்பாடுகள் மீது நல்லெண்ணமும் நம்பிக்கையும் ஏற்பட்டு இந்தப் புனர்வாழ்வுப் புனிதப் பயணத்தில் நீங்களும் பங்கேற்க வந்தால் மகிழ்ச்சியோடு அரவணைத்துக் கொள்வோம், அதே சமயம் யாரையும் நிர்ப்பந்தம் செய்வதோ அல்லது விளக்கம் கொடுக்காமல் வரவழைப்பதோ நமது விருப்பமல்ல.

ஒரு நல்ல அமைப்புக்கு அது வழிமுறையுமல்ல, இதயத்திலிருந்து இயல்பாக வருகிற உணர்வுகளால் மட்டுமே இது போன்ற பொதுப்பணியில் நல்ல பயனுள்ள விளைவுகளை ஸ்திரமாக ஏற்படுத்தமுடியம்.

உதவும் உள்ளங்களுக்கு உபதேசங்கள் அவசியமில்லை. எங்களின் நோக்கம் நல்லதாக இருக்கிறது. அதைச் செயல் படுத்தும் திட்டங்களும் தெளிவாகவிருக்கிறது. இதை எல்லாம் விட மனிதநேய சிந்தனை கொண்டோரின் ஆலோசனைகளும் ஆதரவுகளும் எங்களை வழி நடத்துகிறது. எனவே திறந்த மனதோடும் பரந்து கிடக்கும் தமிழ் மக்களின் ஆதரவோடும் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.

ஓடி ஓடி ஓய்ந்து போன உடல்கள் மீது ஏறியிருந்து காரணங்கள் தேடுவது எமது நோக்கமல்ல, அதற்கான காலமும் இதுவல்ல. புனர்வாழ்வுக் காரியங்கள் செய்ய நிறைய இருக்கிறது. ஒவ்வொரு இரவையும் ஒரு யுகமாக கடந்து கொண்டிருக்கும் எமது மக்களின் துயர் துடைக்க தூய உள்ளத்தோடு தொடர்ந்து செல்கின்றோம். உலகெங்கும் பரந்து வாழும் நமது உறவுகள், குறுகிய சிந்தனைகளுக்கும், திட்டமற்ற செயல்களுக்கும் எக்காரணம் கொண்டும் செவி கொடுக்கமாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

இதயத்தில் ஈரமுள்ளவர்களை, இயல்பான கருணை கொண்டவர்களை, எவராலும் திசை மாற்றவே இயலாது, என்பது எங்களின் திடமான நம்பிக்கை. நான், நீ என்கின்ற பாகு பாடுகள் எமக்கு இல்லை. நொந்து, இடிந்து, வீரியமற்று, முகாம்களில் வீழ்ந்து கிடக்கும் உறவுகளின் விடியலுக்காக இங்கு தவம் இருக்கிறோம்.

இனி இதயம் திறந்து இணையத்தளத்திற்கு வாருங்கள். அதோ மணி ஒலிக்கும் சத்தம், இனி மனித நேயக் காதுகளில் மட்டும் இந்த மடல் திறந்து ஒலிக்கட்டும்.

உலகம் தொடங்கிய காலம் தொட்டு நல்ல காரியங்கள் எதுவுமே தடையில்லாமல் நடந்ததாக வரலாறு இல்லை. இப்போதும் கூட அதுதான் நடக்கிறது. வாழ்வா சாவா எனத் துடித்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு கரம் கொடுக்க மனமில்லாதவர்கள் விலகி இருக்கட்டும் தவறில்லை. அவர்கள் அப்படியே சாகட்டும் என்பது அவர்கள் நல்ணெணமாக இருக்கலாம். ஆனால் நாமும் அப்படி விட்டுவிட இயலாது.

 அது நமது இனம். களத்தில் இறந்தவர்களுக்காக எப்படித் துக்கப்படுகிறோமோ,  அதே சமயம் கண் முன்னே துடிக்கின்ற உறவுகளுக்கும் கரம் கொடுக்க முனைகின்றோம். உலகமெங்கும் எத்தனையோ தமிழ்மக்கள் வசதியாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக, வாழ்ந்து கொண்டு, ஊரில் உறவுகள் அநாதைகளாக செத்து மடிவதை மனச்சாட்சியுள்ள எந்த மனிதராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

எங்கள் மனித நேய தூய செயல்பாடுகளை, ஒருசிலர், அர்த்தமற்ற அறிக்கைகள், சொல்பிரயோகங்கள், இணையத்தளங்கள், மின்அஞ்சல்கள் மூலம் அழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்?

எல்லோருமே இவர்கள் போல் கைகட்டி வேடிக்கை பார்த்தால் நம் இனத்தின் அடையாளமே இந்தப் பூமியில் இல்லாது போகும். அறிவு பூர்வமான இந்த விடயங்களை எல்லாம் மனச்சாட்சி உள்ளவர்களும், நடுநிலமையடன் சிந்திக்கக்கூடியவர்களும், புரியாத அந்த ஒரு சில பேருக்கு புத்தியாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

விபத்தில் சிக்கியவருக்கு, மருத்தவர் சிகிச்சை செய்யப்போனால் மனிதநேயம் உள்ள எவரும் தடுக்கவே மாட்டார்கள். அந்த “ஒரு சில பேர்” இதை தயவு செய்து நினைவில் கொள்ள வேண்டும்.

என்றும் அன்புடன்,
ஸ்ரீபதி

மேலதிக வாசிப்பிற்கு:

கேபி உடன் virtual interview : ஈழமாறன்

‘கேபி பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்திற்கோ தீங்கு இழைத்திருக்கமாட்டார்’ சார்ள்ஸ் அந்தோனிதாஸ் உடன் நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • கந்தையா
    கந்தையா

    அப்பாடா! புலிகள் சேர்த்த பொதுசனங்களின் காசு எங்கே? கணக்குக் காட்டுங்கள் என்று இனிமேலுக்கு ஒருத்தரும் கேள்வி கேட்காத மாதிரிக்கு ஒரு வழியைக் கண்டு பிடிச்சாச்சுது. இனி இதைக் காட்டி புலத்தில காசும் சேர்க்கலாம்.

    Reply
  • thurai
    thurai

    இவர் ஜேர்மனியிலும், மலேசியாவிலும், இப்போ லண்டனிலும் வசித்து வருகின்றதாக அறிகின்றேன். இலங்கையில் ஒரு தபால் கொடுக்கும் வேலைக்கே சிபார்சுகள் கேட்பார்கள். கே.பியின் சிபார்சா இது. இதுவரை புலிகழுடன் சேர்ந்து செய்யவேண்டிய சட்டமீறலெல்லாம் செய்தவர்கள் இப்போ அபிவிருத்திப் பணிபற்றி பேசுகின்றார்கள்.

    புலிகழுடன் சேர்ந்து தமிழரின் அழிவிற்கு வழிதேடியவர்கள் இன்று தமிழர்களிற்கு வழிகாட்டிகளாக மாறிவிட்டார்கள். இவர்கள் புலிகழுடன் இருக்கும்போது இருந்த சிங்கள எதிர்ப்பு இப்போ எங்கே? இவர்களால் துரோகிகள் என கூறப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்களா?

    அல்லது இதுவரை காலமும் அரசுடன் சேர்ந்து ரகசியமாக தமிழரின் அழிப்புக்கு துணைபோனவர்களா? இவர்களை தட்டி கேட்க யாருமில்லையென்னும் துணிவா?

    அல்லது புலி அதிகாரத்துடன் உள்ளபோது புலியுடனும், அரசு அதிகாரத்தில் உள்ளபோது அரசுடனும் சேர்ந்துவாழ்வை வளமாக்கும் பச்சோந்திகளா இவர்கள்? இவர்களைப்போல வாழும் தமிழ் சந்தர்ப்பவாதிகளே தமிழரின் அழிவிற்குக் காரணம். இறுதியாக இவரிடம் ஒரு கேள்வி ஜேர்மனியை விட்டு போன காரணத்தை விளக்குவிரா?

    துரை

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    ஜெயபாலன்,உங்களுக்குத் தெரியாததா?
    ஸ்ரீபதி சிவனடியான் யார்?
    ஒரு துரும்பு!
    பெரிய புலிப் பினாமிகளெல்லாம் இந்த மனிதரை முன் தள்ளிவிட்டுத் தாம் பெரிய செல்வத்தோடு ஒதுங்கியுள்ளார்கள்?.

    இந்தக் கரம்பொன் மனிதன் எனது வீட்டின் முன்னால் சயிக்கிள் மிதித்துச் செல்லும்போதே இவரது பள்ளி வாழ்வில் இவர் விளம்பரந்தேடியென அறிவேன்!

    ஆனால்,இவ் மனிதர் வெறும் அப்பாவியாகப் பெரிதும் இருந்துகொண்டதும், பிராங்பேர்ட்டில் தமிழ் மன்றமமைத்துத் தமிழர்களிடம் மந்திர வித்தை காட்டுவதுமாக இருந்துவிட்டுப், இப்போது புலிப் பினாமிகளுக்குச் செக்கிரட்டியாக இருப்பதன் மர்மம் எனக்கு விளங்கவில்லை.

    இது எதனால்?

    புலிகள் இவரை முன் தள்ளித் தமது காரியத்தைச் செய்யவா?

    அற்ப விளம்பரப் பிரியரான எனது ஊர் ஸ்ரீபதியோ இப்போ பெருஞ் சிறுத்தை…
    நினைக்கச் சிரிப்பாக இருக்கு…

    Reply
  • siva
    siva

    இந்த அமைப்பு புலிகளின் நிதிகளை வைத்திருப்பவர்களிடம் புலிகளின் சொத்துக்களை வைத்திருப்பவர்களிடம் அவற்றை தமிழ் மக்களிடம் திரும்ப ஒப்படைக்கும்படி கேட்காது விட்டால் இவர்களும் புலிகளின் சொத்துக்களை பதுக்கும் ஆசாமிகளாகவே இருப்பார்கள்.

    உங்களின் நடவடிக்கைகளை மக்கள் மிக அவதானமாகவே பார்த்துக்கொண்டுள்ளனர்.

    Reply
  • s.santhiramoulesan
    s.santhiramoulesan

    In February 1985 President P.W. Botha offered Mandela his freedom on condition that he ‘unconditionally rejected violence as a political weapon’.[58] Coetsee and other ministers had advised Botha against this, saying that Mandela would never commit his organisation to giving up the armed struggle in exchange for personal freedom.[59] Mandela indeed spurned the offer, releasing a statement via his daughter Zindzi saying “What freedom am I being offered while the organisation of the people remains banned?

    Only free men can negotiate. A prisoner cannot enter into contracts.”[57]

    http://en.wikipedia.org/wiki/Nelson_Mandela

    Reply
  • கருணா
    கருணா

    நான் யார் தெரியுமா? நம்பிக்கைதான் வாழ்க்கை – கே.பியின் பன்ஞ் டயலாக்
    கே.பி புனர்வாழ்வு பெற்றுவரும் போராளிகளை சந்திக்கின்ற வீடியோ யு ரியூப்பில் தற்போது வலம் வருகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. நான் யாரென்று தெரியுமா எனக் கேட்க அவர்கள் தெரியும் எனச் சொல்ல அவர் சிரித்து நிற்கும் காட்சி யூ ரியுப் முழக்க தெரிகிறது.

    கடந்த வருடம் மே மாதத்திற்கு முன் கே.பி அரசாங்கத்துடன் கைகோக்க வேண்டி வரும் என யாராவது சொல்லி இருந்தால் வெளிநாட்டில் உள்ள விசர்ப்புலி ஒன்று பொங்கியெழுந்து அப்படிச் சொன்னவனை ஒரு வழிபண்ணியிருக்கும்.

    ஆனால் காலமாற்றம் நினைத்துப் பார்க்காத பலவிடயங்களை வெகுசாதாரணமாகச் செய்து முடிக்கிறது. புலிகளை யாராலும் வெல்ல முடியாது என தமிழர்கள் நினைத்து இறுமாப்புற்றிருந்த போது காலம் முள்ளிவாய்க்காலில் அதனை பொய்யாக்கியது. பிரபாகரனின் இடத்தை எவரும் இலகுவில் நெருங்கமுடியாது என புலிவால்கள் புளுகி திரிந்தபோது நந்திக்கடலில பிரபாகரனின் அஸ்தி கரைந்துபோனது. இதெல்லாம் காலம் தமிழர்களுக்கு அவர்களின் இறுமாப்புக்களுக்கு நல்லதொரு பாடத்தை கற்றுக் கொடுத்தது.

    அரசாங்கத்துடன் கதைப்பவர்களை துரொகிகள் என புலிகள் தூற்றிய காலம் போய் புலிகளின் முக்கிய பிரமுகர்கள் இன்று அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர். இதில் நான் யார் தெரியுமா கே.பி மிக முக்கியமானவர்.

    அரசு மிகவும் கவனமாக தனது காரியங்களை நடாத்தி முடிக்கிறது. கல்தோன்றா மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றி தமிழ்இனம் அசடு வழிகிறது. விழுந்தும் மீசையில் மண்படவில்லை எனச் சொன்னாலும் தோல்விகளிலிருந்து பாடங்கற்றுக் கொள்ள நினைக்கவில்லை.

    இலங்கை அரசியலில் தமிழ்மக்களின் எவ்வாறு இனி பங்கு கொள்ள வேண்டும் சிந்திக்க வேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு கஜேந்திரன், சிவாஜிலிங்கம், பத்மினி போன்ற கடும் புலிப்போக்காளர்களை கழட்டி விட்டதுபோல் தமிழ்மக்களும் இனி தீவிரவாதம், தமிழ்த்தேசிய வெறியூட்டுபவர்களை கழட்டிவிட வேண்டும்.

    தேசிய அரசியலுக்கு வருவதும் தமது உரிமைகளுக்கு சிங்கள முஸ்லீம் முற்போக்கு சக்திகளுடன் கூட்டாக சேர்ந்து போராடுவதுதான் காலம் தற்போது தமிழ்களுக்கு தந்திருக்கும் வழியாகும்.

    புலிகளுக்கு ஆயத சப்ளை செய்து இத்தனை அழிவுகளுக்கும் கே.பியும் ஒரு முக்கிய பங்காளியாகும். அவர் அபிவிருத்தி பாதைக்கு இலங்கை அரசுடன் கைகோர்த்திருப்பதை யாரும் தற்போது தவறாக பாடங் கற்பிக்க முடியாது. ஆனால் இந்தப் பாதை நேர்மையாகவும் உளசுத்தியுடனும் செய்து முடிக்கப்பட வேண்டும்.

    கே.பி அரசியலுக்கு வருவதை அனுமதிக்கு முடியாது. அவரின் வழி அபிவிருத்தியுடன் நிற்க வேண்டும். அதுபோல்தான் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கே.பியுடன் ஒத்துழைக்கப்போகும் புலிப்பிரமுகர்களுக்கும் இதுதான் நிபந்தனையாகும். அரசியலுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது. அவர்கள் கடந்தகாலங்களில் செய்த தவறுகளுக்கெல்லாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட பாவப்பட்ட தமிழர்களுக்கு அன்னை திரேசாபோல் காலம் பூராகவும் தொண்டு செய்ய வேண்டும்.

    நம்பிக்கைதான் வாழ்க்கை. கே.பி அவர்களே நம்பிக்கையோடு மக்களை அணுகுங்கள். ஆனால் அரசியல் உங்களுக்கு இனி அந்நியமானதாக இருக்க வேண்டும். கடந்தகால பாவங்கள் காலத்தால் கரைந்து போகக்கூடியவை.

    Reply