இலங் கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தக் கோரி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தமிழர்களின் நடத்தி வரும் போராட்டம் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது.
(1வது இணைப்பு)
பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இலங்கையில் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை நிறத்தக் கோரி 6 ஆயிரம் தமிழர்கள மறியல்ப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நேற்று 6ம் நாள் ஏப்ரல் 2009 பகல் 12 மணி தொடக்கம் இரவு 12 மணிவரை நீடித்த இந்தப் போராட்ம் இரவு லண்டன் பொலீசார் தமிழ்மக்களை பாராளுமன்ற முன்றலிருந்து வெளியேறும்படி கேட்டும் சில வன்மைத்தனமான முயற்ச்சிகளையும் செய்துள்ளனர், தமிழ் மக்கள் எல்லாவித முயற்ச்சிகளையும் சாமாளித்து இன்று பகல் வரையில் தொடர்ந்து இந்த மறியல்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதே வேளை லண்டனில் உள்ள மற்றைய மக்ளையும் இந்த போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளனர்; நேற்று இரவு ஜரோப்பாவின் இதர பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்கள் இப் போராட்டத்திற்கு பங்கு பற்ற பஸ்கள் மூலம் வருகை தந்துள்ளனர்.
இந்த பாராளுமன்ற முன்றலில் குழந்தைகள், முதியவர்கள், பாடாசாலை மாணவர்கள் என கிட்டத்தட்ட 6ஆயிரம் பேர்கள்வரையில் பங்கு பற்றியுள்ளனர். இப்போராட்ட ஏற்ப்பாட்டாளர்கள் இந்த போராட்டம் பிரித்தானியா, இலங்கைத் தமிழர்களின் இன அழிவை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் வரையில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
(2வது இணைப்பு)
பிரித்தானிய பாராளுமன்ற முன்றல் ஆர்ப்பாட்டத்தில் மோதல்.
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதலின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடிகள் மற்றும் சில பொருட்கள் வீசப்பட்டமையால் பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் சற்று நேரம் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் 1000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே மேற்படி மோதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
(3வது இணைப்பு)
பிரித்தானியாவில் இருவர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்
இலங்கையில் இடம்பெற்று வரும் தாக்குதல்களைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
பிரித்தானியாவில் தமிழர்களால் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.
1) இலங்கையில் உடனடியாக நிரந்தர போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்
2) ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்கீ மூன் அல்லது பிரித்தானியப் பிரதமர் கோடன் பிறவுண் தங்களை நேரில் சந்தித்துத் தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்துப் பரிசீலித்து உறுதிமொழி வழங்க வேண்டும்,
3) வன்னியில் சிக்கியுள்ள மக்களுக்கு உடனடி உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்,
4) இலங்கையில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதா அல்லது தனித்து நாடு அமைப்பதா என்பதை அறிய ஐ.நாவின் ஏற்பாட்டில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்,
5) தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் –
ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி இரு இளைஞர்களும் தமது சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களது சாகும்வரையான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் இளைஞர்கள் இருவர் தொடங்கியுள்ள இந்த சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தால் பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் தமிழர்களின் எழுச்சி ஒரு கொந்தளிப்பு மிக்க நிலையை எட்டியிருப்பதாக இணையதள செய்தி ஒன்று கூறுகின்றது.
(4வது இணைப்பு)
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தினுள் இன்று மூன்றாவது நாளாகவும் தமிழர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானிய அரசாங்கம் தலையிட்டு இலங்கையில் இடம்பெறும் போரினை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான தமிழர்களின் இப்போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று 400 பேர்வரை தொடர்ந்தும் போராட்டத்தினை மேற்கொள்வதாக பிபிசி செய்திச் சேவை தெரிவிக்கின்றது.
போராட்டத்தின் போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புலம்பெயர்வாழ் தமிழர்கள் மேற்கொள்ளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமானோரைக் கைது செய்யாது பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு ஆர்ப்பாட்ட ஏற்பட்டாளர்களுடன் செவ்வாய்க்கிழமை தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக மெற்றோபொலிடன் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் இம்முயற்சி பலனளிக்காது இன்று மூன்றாவது நாளாகவும் தமிழர்களின் இப்போராட்டம் தொடர்கிறது.
அதேவேளை விடுதலை புலிகள் அமைப்பு பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகையால் ஆர்ப்பாட்டத்தின் போது அதன் கொடிகள், இலச்சினைகளைப் பயன்படுத்த வேண்டாமென பொலிஸார் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
(5வது இணைப்பு)
இலங்கையில் போர் நிறுத்தம் அமல்படுத்தக் கோரி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் தமிழர்களின் நடத்தி வரும் போராட்டம் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த இங்கிலாந்து அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டில் கடந்த 6ஆம் தேதி மதியம் துவங்கிய ஆர்ப்பாட்டம், தற்போது மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது. லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன்பாக உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் வரை போராட்டத்தைத் தொடர உள்ளதாக தமிழர்கள் கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினர் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. ஏராளமான தமிழர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இரவும், பகலும் தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் வைத்துள்ள விடுதலைப்புலிகள் இயக்கக் கொடியை கைவிட வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் விடுதலைப்புலிகள் இயக்கக் கொடியை வைத்திருந்த இருவரை தீவிரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
(6வது இணைப்பு)
இலங் கையில் உடனடியானதும்இ நிரந்தரமானதுமான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிஇ பிரித்தானியா நேரப்படி இன்று 11th April 2009 பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமாகியது.
இப்பேரணியில் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நீண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தப்பட்டது. இந்த ஊர்வலம் பிரித்தானிய தமிழ்ர்கள் தமது ஆதங்கத்தை பிரித்தானிய அரசக்கும் தமது எதிர்ப்பை இலங்கை அரசக்கும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் வன்னியில் யுத்த யுத்த்ததை நிரந்தரமாக நிறுத்தும்படி வற்புறுத்தியது.
தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்து லண்டனில் இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் – ஒரு நோக்கு : ரி சோதிலிங்கம்
வன்னி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்!!! – ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி : ரி சோதிலிங்கம்
தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதன் மூலமே தமிழர்களை அழிவினின்றும் பாதுகாக்க முடியும்
A RACIST WAR IN SRILANKA’ Arundhati Roy – வன்னி மக்களுக்காக ஒலிக்கும் சர்வதேசக் குரல்கள்
thurai
புலிகளின் வீழ்ச்சியை தாங்கமுடியாத புலத்துப் புலிகள் உலகெங்கும் தமது சுயரூபத்தை காட்டுகின்றார்கள்.
பிறந்தநாட்டையும் மதிக்கமாட்டோம், வளர்ந்தநாட்டையும் மதிக்கமாட்டோம், வாழும்நாட்டையும் மதிக்கமாட்டோம். எஙகள் தலைவர் பிரபாகரன், எங்கள் அமைப்பு புலிகள்.நாங்கள் வேண்டுவ்து தமிழீழம்.
துரை
indiani
/அதே வேளை லண்டனில் உள்ள மற்றைய மக்ளையும் இந்த போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளனர்/
இதன் அர்த்தம் என்ன? ஜபிசியில் ஒருவர் சொன்னார்! தமிழீழத்தில் துரோகம் செய்துவிட்டு இங்கு வந்து வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் பாவத்தைக் கழுவிக்கொளளுமாறு!!
இன்னொரு பெண் சொன்னா இதில் கலந்து கொள்ளாதவர்கள் துரோகம் செய்கிறார்கள் எண்டு! ஜபிசி நடத்துனர் மெளனமாக இருந்து இவற்றை ஏற்றுக் கொண்டார். எல்லோரும் போய் புலிக்கொடி தூக்கிக் கொண்டு எங்கள் தலைவர் பிரபாகரன். எமக்கு வேண்டும் தமிழீழம் எண்டு கத்தச் சொல்லுறீங்களோ??
ruban
//இதன் அர்த்தம் என்ன? ஜபிசியில் ஒருவர் சொன்னார்! தமிழீழத்தில் துரோகம் செய்துவிட்டு இங்கு வந்து வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் பாவத்தைக் கழுவிக்கொளளுமாறு!//இந்தியானி
இதை இவர்கள் மீண்டும் சொல்வார்கள் மீண்டும் உங்களின் மீது திரும்ப திரும்ப இதையே சொல்லித்ததான உங்களை அழைப்பார்கள்
kamal
இன்று காலை 800 பேர்மட்டிலே இருந்ததாயும் இன்று பொலீசார் இவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளதாயும் – ஏற்ப்பாட்டாளர்கள் லண்டன் மக்களை தங்களுடன் வந்து சேருமாறு குரல் கொடுத்துள்ளனர்.
murugan
தடுத்து வைத்துள்ள மக்களை புலியே விடுதலை செய் என்றும் உடனடியாக அரசியல் தீர்வை முன் வை எனவும் இரண்டு கோசங்கள் எழுந்தாலே போதும் வன்னி மக்கள் மட்டுமல்ல முழு இலங்கையின் நிலமையும் மாற்றமடையும்.
“தமிழீழத்தில் துரோகம் செய்துவிட்டு இங்கு வந்து வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் பாவத்தைக் கழுவிக்கொளளுமாறு!!
இவ்வளவு அறிவோடுள்ள புலன் பெயர்ந்தவர்கள் மத்தியில் எப்படி நன்மைகள் விளையும். பிணங்கள் தான் விளையும்.
ஒரு பெண்ணை கற்பிணியாக்கி தற்கொலைக் குண்டோடு அனுப்பி சாகடித்தபோது இந்த புலன் பெயர்ந்தவர்கள் மனம் இரங்காமல் கல்லாக ஏன் இருந்தார்கள். இன்றைக்கு என்ன நடக்கிறது. தாய்மாரின் வயிற்றுக்குள் இருந்து எத்தனை சிசுக்கள்….! றோடு றோடாக தமிழ் வீரர்களை கொளுத்தி எரித்தபோது இந்த புலன் பெயர்ந்தோர் தட்டிக் கேட்டார்களில்லை.
இப்படியே சொல்லிக் கொண்டே பொகலாம்.. அது என் நோக்கமில்லை. எல்லா பழிபாவங்களையும் புலிகளோடு சேர்ந்து செய்து விட்டு நன்மையை விரும்பி தொலை நோக்கோடு செயற்பட்டவர்களை பார்த்து இந்தக் கருத்தை சொல்ல இவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
பல்லி
50000 ஆயிரம் பேர்தான் போராட வேண்டும் என்பது அல்ல.எந்த ஒரு போராட்டமும் எமக்கு சாதகமாகவும் எதிரிக்கு பாதகமாகவும் அமைய
வேண்டும். ஆனால் அம்மவர் போராட்டமோ அல்லது எழுச்சிகளோ எதிரிக்கு சாதகமாயும் எமக்கு பாதகமாயும் அமைகிறது. காரனம் தடை செய்யபட்ட ஒரு அமைப்பின் கொடியை தூக்கி பிடிப்பது தடை செய்த நாடுகளை நாம் மதிக்கவில்லை என்பதேயாகும். நாம் அவர்களை எமது
மக்களுக்கு உதவ கோரி அவர்களுக்கு பிடிக்காத கொடியை தூக்கி போராடுவது முட்டாள்தனமாக இல்லையா? இன்று கூட லண்டனில் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களை தாக்கியது புலிகொடிகளை பறித்துதானாம். எதுக்காக இந்த புலி கொடி போராட்டம்.
மக்களை காப்பாற்ற எண்ணி நாம் போராடினால் எந்த நாட்டு அரசும் எம்மை துன்புறுத்தாது. புலி கொடி வைத்து போராட இன்று ஏன் அனைவரும் வரவில்லையென விம்பிலியில் இருந்து ஈசன் என்பவர் GTV வந்து கோபபட்டார். அங்கு புலிகள் அடாவடியாக அனைவரையும் போராட்டமென்னும் சதிராட்டத்தில் கண்டிப்பாக இணைக்கின்றனர். அதனால் அங்கு புலியுடன் சேர்ந்து அப்பாவி மக்களும் அழிகிறார்கள். இங்கோ புலி கொடி பறக்கவிட்டு பல்லை காட்ட அனைவரையும் வீதியில் இறங்கும்படி TV வந்து மிரட்டுகிறார்கள். தயவு செய்து புலி கொடியை குப்பையில் எறிந்து விட்டு மக்களை காப்பாற்ற மக்களாய் அனைத்து அரசிகளிடமும் மணுகொடுப்பதே எம்மால் தற்ப்போது முடிந்தது. புலிகொடி எமது கைகளில் இருக்கும்வரை நாம் எது சொன்னாலும் கத்தினாலும் சர்வதேசத்தின் காதுகளில் கேக்க போவதில்லை என்பது நிதர்சனம்.
பல்லி
//“தமிழீழத்தில் துரோகம் செய்துவிட்டு இங்கு வந்து வெளிநாட்டில் வாழ்பவர்கள் //
இதை சொல்லியவர் இங்கு ஏன் வந்துதாம்.
அப்படி வந்தவர்களின் காலை நக்கவா???
murugan
இன்று காலை 800 பேர்மட்டிலே இருந்ததாயும் இன்று பொலீசார் இவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளதாயும் – ஏற்ப்பாட்டாளர்கள் லண்டன் மக்களை தங்களுடன் வந்து சேருமாறு குரல் கொடுத்துள்ளனர்.
சிறிலங்கா பொலிசா இங்கு நிற்கிறார்கள். என்ன கடைந்தெடுத்த பொயப் பிரச்சாரம்? இதையும் நம்பிக் கொண்டு இந்த கூட்டம் சாமியாடும்.
WANNIYAN
//ஏற்ப்பாட்டாளர்கள் இந்த போராட்டம் பிரித்தானியா, இலங்கைத் தமிழர்களின் இன அழிவை நிறுத்த நடவடிக்கை எடுக்கும் வரையில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.//
அதுதான் இன்று காலை எல்லாம் முடிஞ்சு போச்சுதே. தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக் காரனாகினால் இப்படித்தான் ஆகும்.
மாயா
புலித் தலைவரை காக்க பிரேன் வொஸ் பண்ணப்பட்ட மக்களை வீதிக்கு இங்கும் இழுத்து வீதியிலேயே விடப் போகிறார்கள். இதற்கு போகாதவர்கள் துரோகிகள்தான். ஆனால் உங்களுக்காக புதுக்குடியிருப்பில் இறந்த போராளிகள் யார் என்று தெரிந்தும் இன்னும் உரிமையோ அல்லது நீங்கள் கொடுக்கும் பட்டங்களையோ ஏன் கொடுக்கவில்லை? தலைவர் வெளிநாடு போக பொது மன்னிப்பு கேட்கிறார். மந்தைகளாய் நம்பியோர் பலியாகின்றனர். இறந்தவர்கள் என்ன ஒட்டுப்படையா? இராணுவமா?theneeweb.de/html/070409-2.html
பொதுமன்னிப்பு கோரி நிற்கும் பிரபாகரன்!theneeweb.de/html/070409.html
thurai
இன்னமும் புலத்துப் புலிகள் திருந்தவுமில்லை, உணரவுமில்லை.
உள்ளத்தில் புலிகழும்,தலவரும் பிழைப்பிற்குத்தேவை.
உதட்டில் தமிழீழமும் ஈழத்தமிழரும் உருமைகழும்.
செயலில் உலக்மெங்கும் ஈழத்தமிழரிற்கு பகைமையை வளர்த்தல்.
துரை
guru
நாங்கள் 800 பேர் வரை றோட்டில் மறித்திருந்தம். 2000 பொலிஸ்காரங்கள் வந்து அடித்து கலைத்துவிட்டாங்கள். ஒரு 5000, 10000 பேர் அதிலை இருந்திருந்தால் கதை வேறை.
mini
பல்லி
நீங்கள் சொல்வது மிகச் சரி.தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகளாகவும் அத் தலைமையை ஏற்றும் செய்யும் போராட்டங்கள் நியாயமெனவும் கோருவது மக்கள் போராட்டமாகாது.உலக நாடுகளின் விடுதலைக்காகப் போராடிய போராளிகளின் படங்களைக் கையிலேந்தி இவர்களை ஒத்த போராட்டமே நமதும் என காண்பிக்கலாம் .அதை விட்டு முதலாளித்துவத் தலைவர்களின் படங்களைக் கொண்டு சென்றால் அரசாங்கமல்ல ஐராப்பிய வீதியில் நமது போராட்டத்தைப் பார்த்துக் கொண்டு வேலைக்குச் செல்லும் தொழிலாளியோ விளிம்பு நிலையினரோ கொஞ்சங் கூட இப்போராட்டங்கள் பற்றி இரக்கப்படவோ மரியாதையளிக்கவோ போவதில்லை.
sapi
பல்லி உங்களுக்கு ஒரு விடயம் தெரியவில்லை பிரித்தானியாவில் புலி கொடி பிடிப்பதற்கு தடை விதிக்கவில்லை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பிரித்தானியா சட்ட வல்லுனர்களுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள்.
தேசத்தில் ஒரு நண்பர் சொன்ன மாதிரி மக்கள் புரட்சி இங்கே தான் ஆரம்பம் ஆகிறது.
thurai
//நாங்கள் 800 பேர் வரை றோட்டில் மறித்திருந்தம். 2000 பொலிஸ்காரங்கள் வந்து அடித்து கலைத்துவிட்டாங்கள். ஒரு 5000 10000 பேர் அதிலை இருந்திருந்தால் கதை வேறை.//
தலைவரிற்கும் இப்ப உந்த நிலைதான். 50,000 இராணுவம் சுற்றிவழைத்து விட்டது. 11.04.2009 லண்டனில் கூட்விருக்கும் 2 லட்சம் பேரில் 5000 பேராவது வணங்காமண் மூலம் போய் தமிழீழம் தான் ஏலாது போனாலும் தலைவரையாவது மீட்டு வாருங்கள்.
துரை
murugan
தீபன் உட்பட ஏராளமான புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளதை அறியாமலே தெருவில் இறங்கியுள்ள இவர்கள் கடந்த முப்பது வருடங்ளாக புலிகள் என்ன செய்தார்கள் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். இவர்கள் போராடி வன்னி மக்கள் வாழ்ந்த மாதிரித்தான்.!
மாயா
LONDON, England (CNN) — Several hundred Sri Lankan Tamil protesters shouted slogans at the British Parliament for a second day Tuesday, urging it to act to end the “genocide” against their people in Sri Lanka.
Police clash with Tamil protesters outside the Houses of Parliament.
“Stop the genocide!” they shouted. “Stop the war!”
They waved the red flag of Tamil Eelam, the Tamils’ traditional homeland in northern and eastern Sri Lanka. The flag is emblazoned with a yellow roaring tiger.
Most of the protesters slept overnight on the streets around Parliament Square after beginning their unauthorized protest Monday afternoon. At one point, the protesters blocked the street leading to Westminster Bridge over the River Thames, police said.
That led to road closures around Parliament.
By Tuesday morning, a solid ring of police had hemmed the protesters in Parliament Square across the street from the Houses of Parliament and Big Ben. Roads were open again, but the protest and police presence caused traffic congestion in the area.
Hariram Shan, 24, is a Sri Lankan Tamil who said he has lived in Britain for six years. He said the protesters hope the British government will intervene to stop Sri Lanka’s crackdown on Tamil Tiger rebels, which he said harms civilians.
“They can force economic sanctions,” Shan told CNN.
Dushyanthy Sukumar, 47, said the Sri Lankan government is retaliating against innocent civilians.
“The Sri Lankan government has now cornered the rebels, the LTTE (Liberation Tigers of Tamil Eelam), and what they are doing is killing the people,” she said.
Sukumar, who said she has lived in Britain since leaving her homeland in 1987, said she is angry at the British government for supporting Sri Lanka.
“The Sri Lankan government is doing their dirty work through this government,” she said.
The Sri Lankan military said Sunday that it had captured the last rebel stronghold and killed five rebel leaders after three days of gunbattles.
It said more rebels could still be hiding in a 20-square-kilometer “safety zone,” but that it would not enter the area because it is home to some 50,000 people.
The Tamil Tigers have fought since 1983 for an independent homeland for the country’s ethnic Tamil minority. The civil war has left more than 70,000 people dead
london boy
நேற்றைய தினம் உணர்ச்சி வசப்பட்ட இளைஞர் மயூரன் என்பவர் தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.எனினும் அவர் காப்பாற்றப்பட்டு விட்டார்.
sanmugam
நேற்று இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன் அங்கு முழுவதுமே புலிகளின் கொடிகளை வைத்தும் பிரபாகரனை மட்டுமே மையப்படுத்தி செய்வது சரியானதாக எனக்கு தெரியவில்லை இதில் மக்களின் பிரச்சினைக்குமட்டுமே முன்னுரிமை கொடுத்திருந்தால் இந்த ஆர்ப்பாட்டம் அர்த்தமுள்ளதாயும் எமக்கு எதிரா திரும்பாமலும் இரக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
இதற்காக புலிகள் அல்லது பிரி எப் தமது தலைவரை தாழ்த்துவதாக அர்த்தப்படாது.
மக்களுக்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தப்பட வேண்டும்.
sangeetha
பிரித்தானியாவில் இந்த ஆர்ப்பாட்டம் மிகமுக்கியமான நேரத்தில் நடைபெறுகிறது லண்டனில் உள்ள பல தமிழர் அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிபது அந்த இடத்தில் அவதானிக்க்க கூடியதாக உள்ளது.
லண்டனில் உள்ள மற்றய தமிழ் அரசியல் அமைப்புக்கள் எபபவும் போலவே அமைதியாக எதுவுமே பேசாமல் இருந்து விடுகின்றனர்
விடுதலைப்புலிகளுக்கு எதிரான அமைப்புக்களின் கருத்து நிலைப்பாட்டை நாம் இன்று அறிய விரும்புகிறோம். புலிகளின் மீது தமது விமர்சனங்களை முன்வைத்த புலிகளை ஆதரிக்காத அரசியல் ஜனநாயக அமைப்பினர் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பார்களர?
thurai
//விமர்சனங்களை முன்வைத்த புலிகளை ஆதரிக்காத அரசியல் ஜனநாயக அமைப்பினர் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பார்களர//
தலைவரும், புலிகழும் ஈழத்தமிழர்களின் ஜனநாயக உருமைகளைப் பறித்ததும் உலகில் தடை செய்யப்படுவதற்கு ஓர் காரணம். புலிக்கொடியும் தலவரின் படமும் தாங்குபவர்கள். ஈழ்த்தமிழரிற்காகவா அல்லது புலிகளைக் காக்கவா என்பது கேள்விகுரியதே.
துரை
இஸ்கான்
என்று புலம் பெயர் தேசத்தில் வாழ்பவர்கள் ஐந்தரிவுள்ள புலிகளாக செயற்படாமல் ஆறறிவுள்ள மனிதர்களாக செயற்படுவார்கலோ அன்றுதான் தமிழ் மக்களுக்கு விடுதலை
murugan
தற்போது நடைபெறுவது பிரபாகரன் என்கிற தனிமனிதனைக் காப்பாற்றவே. பிரபாகரன் மக்களை தடுத்து வைத்துள்ளமை பற்றி சங்கீதாவின் அபிப்பிராயம் என்ன? தனிமனிதனா முக்கியம்? லடசக்கணக்கான மக்களின் உயிரா முக்கியம்? உங்களுக்கு பிரபாகரன் தான் தேவை அவரே மக்களின் தலைவன் என்றால் ஏன் அவரால் மக்களை காப்பாற்ற முடியவில்லை? மக்களா தலைவனைக் காப்பாற்ற வேண்டும்? தலைவனா மக்களை காப்பாற்ற வேண்டும்? இன்று பிரபாகரனுக்கு ஏன் இந்த நிலை?
பார்த்திபன்
//விடுதலைப்புலிகளுக்கு எதிரான அமைப்புக்களின் கருத்து நிலைப்பாட்டை நாம் இன்று அறிய விரும்புகிறோம். புலிகளின் மீது தமது விமர்சனங்களை முன்வைத்த புலிகளை ஆதரிக்காத அரசியல் ஜனநாயக அமைப்பினர் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பார்களா? – சங்கீதா
சங்கீதா நீங்கள் எதைச் சொல்லச் சொல்லி கேட்கின்றீர்கள். இன்று தங்களையே காப்பாற்ற வக்கில்லாத விடுதலைப்புலிகள், நாளை மக்களைக் காபப்பாற்ற தமிழீழத்தை மீட்டெடுப்பார்கள் என்று உங்களைப்போல் கனவு கண்டு, அந்தந்த நாடுகளில் புலிக்கொடி ஏந்தி புலிக் கோசங்களைப் போடச் சொல்கின்றீர்களா?? மக்களைக் காப்பாற்ற கோசம் வைக்காமல் புலிகளைக் காப்பாற்ற உங்களைப் போன்றவர்கள் கோசம் போட வெளிக்கிட்டதால்த் தான் இன்று உலகமே கண்டும் காணாதிருக்கின்றது என்பதை எப்போது உங்களைப் போன்றவர்கள் உணரப் போகின்றீர்களோ??
padamman
பிரபாகரனை போல் ஒரு கோழை யாரும் இல்லை அன்று பயத்தில் மேசையின் கீழ் ஒளிந்து இருந்தவர் இன்று அந்த பாவபட்ட மக்களின் பின் ஒளிந்திருக்கின்றர் அந்த மக்களை மேலும் இம்சை படுத்துவர் என்றல் அந்த மக்களே அவரை அழிப்பர்கள்
guna
we are not antry tiger or antry tamils so now we want to the pece ok now we wont the pece
மாயா
Six people have been arrested during clashes between the police and Tamils who are staging an ongoing protest outside the Houses of Parliament.
Scores of police officers boxed in hundreds of demonstrators to move them off the roads and into Parliament Square, sparking minor scuffles.
Some needed medical attention for minor injuries and a man is in hospital after jumping into the Thames on Monday.
Protesters want the UK government to act to end war in Sri Lanka.
more: http://news.bbc.co.uk/1/hi/uk/7986838.stm
மாயா
அங்கேயும் ஒரு கோழையை காப்பாத்த சனம் சாகுது
புலத்திலயும் அதே கோழையை காப்பாத்த சனம் சாகப் பொகுது
உசுப்பேத்தி உசுப்பேத்தியே தமிழரை அழிச்சிட்டுத்தான்
அந்த பேய் சாந்தியடையும்………..
நரபலி கொண்ட டிரகுயுலா இது.
லேசில சும்மா போகாது.
ஈழத்தமிழர்களே
இதுவரை இந்திய கடவுளைத்தானே கும்பிட்டீங்க?
இம்முறை நமக்கொரு கடவுள் கிடைச்சிட்டார்.
இந்திய காளிக்கெல்லோ பலி கொடுத்தீங்க
இனி தமிழ் கடவுளான பிரபாவுக்கு நரபலி கொடுங்க.
தமிழீழம் கிடைக்கயில்லதான் – ஆனால்
தமிழருகென்று ஒரு நரபலிக் கடவுள் கிடைச்சிருக்கார்.
புலி வாலுகள் கட்டிய கோயில்களில வையுங்கோ
நரபலி பிரபாவின் படத்தை
நல்லா வருமானம் வரும்
murugan
வன்னியில் இடம்பெறும் மோதல்களை நிறுத்தி அரசியல் தீர்வை காணுமாறு தோல்வியை சந்தித்துவரும் புலிகளுக்காக புலம்பெயர் நாடுகளின் புலி பினாமிகளின் போராட்டம். மக்களின் நலனுக்காக போராடும் இவ் புலிகள் இன்று அதே மக்களை மனித கேடயங்களாக தடுத்து வைத்துக்கொண்டு அவர்களது உயிர் அழிவில் தாங்கள் ஆதயம் தேடும் செயலையே மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாணம் இழக்கப்பட்டபோதும், முஸ்லீம்கள் விரட்டப்பட்டபோதும், மாற்று இயக்க தமிழ் தலைவர்களும், போராளிகளும் புலிகளால் கொல்லப்பட்டபோதும், வன்னியில் சிக்குண்டுள்ள மக்கள் வெளியேறும்போது அவர்கள் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தபோதும், போராட முன்வராத புலம்யெர்ந்த தமிழர்கள் இன்று புலி தலைவரையும் அவரது ஒரிரு சகபாடிகளையும் காப்பாற்றவே இன்று உலகநாடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சர்வதேச ஆதரவோடு இலங்கை அரசு செய்துகொண்ட சமாதான ஒப்பந்த காலத்தை துஷ்பிரயோகம் செய்து சொந்த மக்களையும், மதகுருமார்களையும், மாற்று கட்சி உறுப்பினர்கள் உட்பட வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் போன்றோரை கொலை செய்வதற்கே சமாதான காலத்தை புலிகள் துஷ்பிரயோகம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. BBC-தமிழ்-8 April 2009
மாயா
//நேற்றைய தினம் உணர்ச்சி வசப்பட்ட இளைஞர் மயூரன் என்பவர் தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.எனினும் அவர் காப்பாற்றப்பட்டு விட்டார்.//
தலைவர் கண்டிருந்தால் சாகவிடு என்றிருப்பார். திலீபனுக்கு அதைத்தானே செய்தார்? வெள்ளையன் என்றதால் காப்பாத்தீட்டான். அவனுக்கு மனித உயிரின் மதிப்பு தெரியும். தலைவர் கட்டிப்பிடிச்சு போட்டோ எடுத்து எத்தனை பேரை சாக்காட்டினார். இன்றைக்கு பொது மன்னிப்புக் கேட்கிறார். இன்றைக்கு இராணுவம் போட்டுத் தள்ள கெடு கொடுத்திருக்கு. சரணடைய கடைசி சந்தர்ப்பம் பிரபாகரனுக்கு என்று
பல்லி
ஒரு நாட்டில் தொடர் போராட்டம் என அறிவித்துவிட்டு 7.4.09 இரவு தொடக்கம் கவலையின போராட்டத்தை தொடங்கினர். அது தொடர்கிறது. பல்லியும் வழமைபோல் விடுப்பு பார்க்க 8.4.09 அன்று இரவு பி.ப 7மணியில் இருந்து அந்த கூட்டத்தினர் நிலைப்பாட்டை பார்த்தேன் .500பேர் மட்டும் வந்திருந்த கூட்டத்தில் பலர் மாற்று அமைப்பை சேர்ந்தவர்களும்.. இதுவரை அரசியல் நிகழ்வுகளில் பார்க்க முடியாத பலருமே காணபட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போது பணம் சேர்த்து கொண்டு இருப்பவர்களோ அல்லது பளய பணம் சேகரித்த முன்னோரோ அல்லது புலி புராணம் பேசும் புலம் பெயர் புலிகளோ ஏன் ஏரியா பொறுப்பாளர்களோ யாரும் அங்கு இல்லை. இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இழயோரை தூண்டி விட்டு இதமான தூக்கத்தில் நாளை யாரிடம் பணம் கேக்கலாம் என எண்ணி வரவில்லையென நினைக்கிறேன். தயவு செய்து பணம் சேகரிக்க வருபவர்களிடம் இந்தபணம் யாருக்கு அனுப்புவதாக கேளுஙள். தமிழேந்தி போனதுடன் பலர் புலிக்கே கணக்கு விட்டுவிட்டதாக பல குட்டி புலிகள் புலம்புகிறார்கள். இந்த விடயத்தில் மக்கள் கவனமாக இருப்பது நல்லது. சரி இருட்டின் கூட்டத்துக்கு வருவோம். அங்கே எழுப்பபட்ட கோஸம் சில.
என்ன வேண்டும் என்ன வேண்டும்??
தமிழ்ழிழம் தான் வேண்டும் தமிழ்ழிழம் தான் வேண்டும்.
எப்போ வேண்டும் எப்போ வேண்டும்??
இப்போ வேண்டும் உடனே வேண்டும்.
இந்த படை போதுமா?? இல்லை என்னும் சேர்த்து காட்டவா??
தலைவா நீ ஆணையிடு. தலை பல உருட்ட நாம்.
முல்லதீவில் ஆமியா?? திரும்பி அது போகுமா??
மகிந்தாவே மண்டியிடு. தலைவரிடம் பணிந்து விடு.
வெற்றியை நாளை உலகமே சொல்லும்.
புலி கொடி பறக்க சர்வதேசம் அழைக்கும்.
தமிழ்ழீழம் செல்ல சர்வதேசம் துடிக்கும்.
அன்போடு அனைக்க தலைவன் கை நீளும்.
ஒன்றுபடு வென்று விடு
இறுதி போர் இறுதி போர்.
தலைவன் தலமையில் இறுதி போர்.
முப்படையும் தலைவன் பின் முடிய போகும் இறுதி போர்.
ஈழத்தில் மலரட்டும் தமிழ்ழீழம்.
அதுக்காக பறக்கட்டும் உலகெல்லாம் புலி கொடி.
இத்தனையையும் யாராவது ஒரு சர்வதேச அரசியல்வாதியோ அல்லது பொது மகனோ கேட்டால் எமக்கு உதவ முன்வருவார்களா?
இதில் எம்மக்கள் பற்றி எங்கே கோஸம்?? இது அங்கே மக்களை முன்னிறுத்தி புலி போராடுவது போல் (அப்படிதானே சொல்லுகினம்) இங்கே இழயோரை வீதியில் விட்டு விட்டு புத்திசாலி புலிகள் வீடுவீடாய் இழயோர் செய்யும் வீர விளையாட்டுகளை காட்டி பணம் சேகரிக்கிறார்கள். ஆக எமக்கு புதுவிதமான சம்பல் செய்ய புலம் பெயர் புலிகள் ரெடியப்பா.
பல்லி
//பல்லி உங்களுக்கு ஒரு விடயம் தெரியவில்லை பிரித்தானியாவில் புலி கொடி பிடிப்பதற்கு தடை விதிக்கவில்லை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பிரித்தானியா சட்ட வல்லுனர்களுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள். சபி//
சபி எனக்கு சட்ட வல்லுனர்களை தெரியாது. அதனால் தேசம் வாசகர் ஒருவரிடம் இதுபற்றி கேட்டேன். அதுக்கு அவர் பல்லியின் பின்னோட்டத்தை அவருக்கு சுட்டி காட்டும்படி சொன்னார். ஆகவே அதை தங்களுக்காக இங்கே.
://எந்த ஒரு போராட்டமும் எமக்கு சாதகமாகவும் எதிரிக்கு பாதகமாகவும் அமைய வேண்டும். ஆனால் அம்மவர் போராட்டமோ அல்லது எழுச்சிகளோ எதிரிக்கு சாதகமாயும் எமக்கு பாதகமாயும் அமைகிறது. காரனம் தடை செய்யபட்ட ஒரு அமைப்பின் கொடியை தூக்கி பிடிப்பது தடை செய்த நாடுகளை நாம் மதிக்கவில்லை என்பதேயாகும்///பல்லி
murugan
தற்போது பணம் சேர்த்து கொண்டு இருப்பவர்களோ அல்லது பளய பணம் சேகரித்த முன்னோரோ அல்லது புலி புராணம் பேசும் புலம் பெயர் புலிகளோ ஏன் ஏரியா பொறுப்பாளர்களோ மட்டுமல்ல ஜிரிவி ஆட்களோ தீபம் நிருபர்களோ கூட அங்கில்லை. அவர்கள் வீட்டில் நித்திரை கொண்டு விட்டு ஆறுதலாகத்தான் அங்கு போவினம்.
london boy
உண்ணாவிரதமிருப்போரின் பெயர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் நோக்கமென்ன??
பார்த்திபன்
//உண்ணாவிரதமிருப்போரின் பெயர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் நோக்கமென்ன?? – london boy//
என்ன லண்டன் போய் உங்க இடத்தில் கம்பூக்கரை கடித்தபடி இருப்பதையா உண்ணாவிரதமென்று சொல்வார்கள்.
பார்த்திபன்
//பல்லி உங்களுக்கு ஒரு விடயம் தெரியவில்லை பிரித்தானியாவில் புலி கொடி பிடிப்பதற்கு தடை விதிக்கவில்லை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பிரித்தானியா சட்ட வல்லுனர்களுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள். சபி//
சபி நீங்கள் புலியாதரவுத் தொலைக்காட்சிகளைக் கூட பார்ப்பதில்லையா?? அண்மையில் GTV தொலைக்காட்சியில் புலிக்கொடியையும், புலிச்சின்னங்களையும் தொடர்ந்து காட்டும்படி ஒரு நேயர் வற்புறுத்திய போது, அறிவிப்பாளர் சொன்ன பதில்; தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடியையோ அல்லது சின்னங்களையோ நாங்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டினால், நாம் சட்டச் சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும். இதன் அர்த்தம் தங்களுக்குப் புரியவில்லையா??
மாயா
//அண்மையில் GTV தொலைக்காட்சியில் புலிக்கொடியையும், புலிச்சின்னங்களையும் தொடர்ந்து காட்டும்படி ஒரு நேயர் வற்புறுத்திய போது, அறிவிப்பாளர் சொன்ன பதில்; தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடியையோ அல்லது சின்னங்களையோ நாங்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டினால், நாம் சட்டச் சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும்.//
//பல்லி உங்களுக்கு ஒரு விடயம் தெரியவில்லை பிரித்தானியாவில் புலி கொடி பிடிப்பதற்கு தடை விதிக்கவில்லை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பிரித்தானியா சட்ட வல்லுனர்களுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள். சபி//
GTV க்குத்தானே பிரச்சனை, பிரித்தானியாவுக்கு இல்லை என்று யாராவது வாதாட முன் வந்தாலும் வருவார்கள் பார்த்திபன்?
என்ன இருந்தாலும் தளத்தில் குழந்தைகள் கையில் ஆயுதத்தை கொடுத்துவிட்டது போல புலத்திலும் குழந்தைகள் கையில் தடியை எடுக்க வைத்துவிட்டார்கள்?
padamman
இரண்டு பேரை பிடித்து டிப்போட் பன்னிவிட்டல் தான் சரி அங்கு மக்கள் அழிகின்றர்கள் இங்கு எங்கள் தலைவர் பிரபாகரன் என்ற கோசம் “தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும்” ஓரு பயங்கரவாத அமைப்பின் தடையை எப்படி நீக்குவார்கள் முதலில் சிந்தியுங்கள்.
பல்லி
///பல்லி உங்களுக்கு ஒரு விடயம் தெரியவில்லை பிரித்தானியாவில் புலி கொடி பிடிப்பதற்கு தடை விதிக்கவில்லை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பிரித்தானியா சட்ட வல்லுனர்களுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள். சபி.//
சபி உங்களுடன் திரும்பவும் முரன்பட வேண்டிய நிலை பல்லிக்கு மன்னிக்கவும்.
தாங்கள் சொல்லியபடி லண்டனில் இருந்து ஒரு தேசம் வாசகர் பல்லிக்கு மெய்ல் செய்துள்ளார். அதில் இன்று பி ப 6மணிக்கு பின்பு ஊர்வலத்திலோ அல்லது கும்மாழத்திலோ புலி கொடி வைத்திருந்தால் கொடி பறிக்கபடலாம் எனவும் அவர்களை கைது செய்யலாமெனவும் லண்டன் அரசு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்து விட்டதாக எழுதியுள்ளார். இது உன்மையா அல்லது சாத்தியமா என தாங்கள் சொன்ன கறுப்பு கோட்டுக்கு சொந்தகாரரிடம் கேட்டு பல்லிக்கு சொல்லவும். அது உன்மையெனில் இது தொற்று நோயாக அனைத்து நாட்டுக்கும் பரவும் அபாயம் உண்டு. இது கூட தமிழ் மக்களுக்கு நல்லதாகவே பல்லி னினைக்கிறது.
அறிவானவன்
UN DAILY NEWS from the UNITED NATIONS NEWS SERVICE 8 April, 2009
‘CLOCK TICKING’ FOR SRI LANKA’S CIVILIANS, WARNS UN HUMANITARIAN CHIEF
Time is running out for the thousands of civilians trapped in northern Sri Lanka amid the ongoing conflict between Government forces and Tamil rebels, the United Nations humanitarian chief warned today, appealing once again for a temporary halt in fighting to assist the innocents.
“As a full-scale, long-term ceasefire is unlikely to be agreed now, the only way to get the civilians out of harm’s way is a temporary humanitarian lull, during which aid workers and relief supplies must be allowed into the conflict zone, and those who want to leave must be given the chance to do so,” John Holmes writes in an opinion piece published today in The Guardian.
Mr. Holmes, the Under-Secretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, urges immediate action to help those trapped in the Vanni region, warning that “a bloodbath on the beaches of northern Sri Lanka seems an increasingly real possibility.”
The Sri Lankan military has pushed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) into an area so small that any shooting or shelling inevitably causes casualties among the 150,000 to 190,000 civilians trapped in the same zone, he says.
There have been many hundreds of civilian deaths caused by firing from both sides, he adds, although exact numbers and who fired what and when are impossible to verify.
“It is clear that the LTTE is refusing to let people flee, though many are managing to escape somehow, and I fear the combatants may be gearing up for a final confrontation,” Mr. Holmes states.
Civilians trapped by the fighting must be allowed a free choice of whether to leave or stay, he stresses. “If the LTTE truly has the best interests of the Tamil people at heart, they should contribute to ending this unnecessary suffering of the civilian population.”
The Sri Lankan Government, for its part, must stick to its promise of not using heavy weapons while the fighting lasts, and hold off from any final attack in the conflict zone while the pause is negotiated, he adds.
“With so many people packed into such a small area, further military action not only risks more civilian deaths and injuries but also threatens to undermine the Government’s credibility with the international community and the national groups with whom it must soon seek reconciliation.”
Independent aid workers must be allowed to bring in more aid, assess the situation and help civilians to decide their own fate, he states, adding that unless better access for supplies and aid workers is urgently secured, “the ravages of disease, untreated wounds and hunger will kill many more people, regardless of the conflict.
“With thousands of lives in the balance and the clock ticking, the time for decisive action by the government, the LTTE and the international community is now, before it is too late,” he stresses.
sapi
பல்லி நேற்று பின்னேரம் காவல் துறை கொடி பிடிப்பதற்கு முற்று முழுதாக அனுமதி கொடுத்து உள்ளார்கள்.நான் நேற்று அங்கே தான் இருந்தேன்.உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அங்கு போனவர்களிடம் விசாரித்துப் பார்க்கவும்.
thurai
//பல்லி நேற்று பின்னேரம் காவல் துறை கொடி பிடிப்பதற்கு முற்று முழுதாக அனுமதி கொடுத்து உள்ளார்கள்//
புலிக்கொடிதான் எங்கள் தேசியக்கொடி என்று கூறியுள்ளார்கள். கொடியைப் பிடித்தால்தான் பயங்கரவாதிகளால் ஜிரிவி யின் மூலம் பயித்தியங்களாக்கப்பட்டவர்கள் என்பதை உலகம் அறியும்.
துரை
பல்லி
சபி 8.4.09 இரவு 10.35க்கு GTVயில்லும் எனது செய்தியை உறுதி செய்தார்கள். ஆக தாங்கள் அங்கு போகவில்லையா? அல்லது GTV பொய் சொல்லுகிறதா என பல்லிக்கு தெரியாது. ஆனால் எனது நண்பர் என்னை பொய்சொல்லி சபியிடம் மாட்டிவிட மாட்டார் என்னும் நம்பிக்கை பல்லிக்கு உண்டு.
s.s.ganendran
சங்கீதா போண்றவர்களுக்கு மழை பெய்தால் என்ன வெயில் எறித்தால் என்ன, பனிகொட்டினால் என்ன ஏன் வன்னியில் தமிழினம் பூண்டோடு அழிக்கப்பட்டால் என்ன, புலியின் பெயரை சொல்லி நாலுபேர் தெருவுக்கு இறங்கினால் அந்த நேரமெல்லம் சரியான நேரமாகத்தான் தோண்றும். லண்டணில் என்ன வன்னி மக்களுக்காகவா ஆர்ப்பாட்டம் நடைபெறுகிண்றது?
இதுதான் வன்னி மக்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள முழக்கங்கள்.
பனை மரத்தில வெளவாளா, புலிகளுக்கே சவாலா?
முல்லைத்தீவில் ஆமியா, புலிகள் என்ன கோழையா?
எங்கள் தலைவன், பிரபாகரன்
ராஜபக்ஸ, செத்துப்போ
கோடன் பிரவுண் நேரே வா
கொடுத்த அடி போதுமா, இன்னும் கொன்சம் வேண்டுமா?
இதுதான் வன்னி மக்களுக்காக லண்டன் வாழ் தமிழர்களால் முன்வைக்கப்பட்டுள்ள வாசகங்கள்.
83 காலப்பகுதியில் இளையவர்களுகு கொடுக்கப்பட்ட உரு இப்போ லண்டணில் குழந்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டு பேயாட்டம் ஆடுது ஆனால் உரு கொடுக்கப் பயன்படுத்தியுள்ள வசனங்கள் தடம் புரண்டு விட்டன,
முல்லைத்தீவில் மட்டுமல்ல ஆமி இப்போ இலங்கை பூராவும் ஆமிதான்
சிங்களவர்கள் எம்மைப்பார்த்து தந்த அடி போதுமா அல்லது இன்னும் கொன்சம் வேண்டுமா என்பதை லண்டனில் நிண்றுகொண்டு தமிழர்கள் கத்துகிண்றார்கள்.
மாற்று இயக்கங்களையும் மாற்றுத் தலைமைகளையும் அழித்தொழிக்கும் முன்னர் பிரபாகரனும் அவருக்கு அரோகரா போடும் புலம் பெயர் தமிழரும் சிந்த்தித்திருந்த்தால் இண்று தமிழனின் கதையே வேறு
Gajan
Suspected Tamil protesters behead Nehru statue in LondonProtesting Sri Lankan Tamils are being blamed for beheading the statue of Jawaharlal Nehru outside India House in London .