அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

கருத்து பகிர்வும் கலந்துரையாடலும் : தேடகம், கனடா

Senthiveel_Si_Kaஇலங்கையில் ஒடுக்கப்படும்  தேசிய இனங்கள் எதிர்கொள்ளும் அரசியல்  சவால்களும், செயலுக்கான கருத்துபகிர்வும்,  கலந்துரையாடலும்.

காலம்:-

ஒக்டோபர் 30 ம் திகதி சனிக்கிழமை (30- 10- 2010 )

இடம் :-

Church of St columba
2723 , St Clair ave East ( @ o’conner )
East York , On
M4B 1M8
Canada

கூட்ட ஏற்பாட்டாளர்கள் :-  தேடகம் , கனடா

கருத்துரை வழங்குவோர் :- 

ரகுமான் ஜான் ( மே 18  இயக்கம் )
சி கா செந்தில்வேல் ( புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி இலங்கை )
பொன் பாலராஜன்   ( நாடு கடந்த தமிழீழ அரசு )

அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்
தேடகம் , தமிழர் வகை துறை வளர் நிலையம் கனடா

Related Article:

Senthiveel Interview_Book

நமக்காக நாம் திட்டம் அறிமுகம்: திருக்கோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம்

அறிமுகம்:
திட்டத்தின் பெயர்:  நமக்காக  நாம் திட்டம்.
திட்டத்தை ஒருங்கிணைக்கும் அமைப்புகள்: அகம், லிற்றில் எய்ட்
நிதி வழங்கும் நிறுவனகள்: லண்டன் கற்பக விநாயகர் ஆலயம், அகிலன் பவுண்டேசன்,

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலக்குக் குழு:
மூதூர்  பிரதேச  செயலாளர் பிரிவிலுள்ள  மூதூர்  கிழக்குப் பிரதேசத்திலுள்ள 15  கிராமங்களைச்  சேர்ந்த
• யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட  மக்கள்
• உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள்
• இடம் பெயர்ந்து மீழக் குடியேறியவர்கள்.
• உள்ளூர் CBOக்கள்                            

திட்டக் களம்:
பொருளாதார அபிவிருத்தி மையம், பாட்டாளிபுரம், மூதூர், திருக்கோணமலை, இலங்கை.

திட்டப் பிரதேச  கிராம மக்கள்  பின்னனி:
இப்பிரதேசமானது  திருக்கோணமலை  மாவட்டத்தின்  மூதூர்  பிரதேச செயலாளர்  பிரிவிற்குட்பட்ட முற்று முழுதான  தமிழ் மக்கள்  வாழும்  கிராமங்களாகும். கடந்த 2006ம் ஆண்டிற்கு  முற்பட்ட  காலத்தில்  இப்பிரதேசம் LTTE  இனரின் முழுமையான  கட்டுப்பாட்டில்  இருந்த  பிரதேசமாகும்.

இப்பிரதேசமானது  அனேகமாக   LTTE இனரின் கட்டுப்பாட்டில்  இருந்த காரணத்தினால்  அரச  வளங்கள்  முற்று முழுதாக  கிடைக்கப் பெறாத நிலையிலும், கடந்த   கால யுத்த  அனர்த்தமும்   கூடுதலாக  இம்மக்களின் குறிப்பாக  பொருளாதாரம் மற்றும்  கல்வி  போன்ற   முக்கியமான   துறைகளில் பாதிப்புக்களை   ஏற்படுத்தியிருந்தது.

இக்கால  கட்டத்தில் எமது  நிறுவனமானது  தனது  தூர நோக்கிற்கு அமைவாக  வறுமையிலும் வறுமையான மக்களை இனம் கண்டு அவர்களுக்கான  நிவாரண மற்றும் அவர்கள் சுயமாக தங்கி  வாழ்தல்  நிலையிலிருந்து விடுபட வைத்து  சுயமாக  வாழக் கூடியவர்களாக்குவதற்கான செயற்பாடுகளை 1997  ஆம் ஆண்டில்  மேற்கொள்ள எண்ணியது.

அந்த வகையில்  1997ம் ஆண்டு நாம் பணிகளை  மேற்கொள்ளுகின்ற   கால  கட்டத்தில் குறிப்பாக  மூதூர்  கிழக்குப் பிரதேச  கிராமங்களை  சேர்ந்த   சுமார்  15000  மேற்பட்ட  மக்கள் தங்களது  பெரும்பாலான தேவைகளை   முஸ்லிம் மக்கள்  செறிந்து  வாழுகின்ற சுமார்  6 km தொடக்கம் 18 km   தூரம் கொண்ட  மூதூர் மற்றும் தோப்பூர்  போன்ற  நகரங்களுக்குச் சென்றே நிறைவேற்றிக் கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அந்த வகையில் இம்மக்களின் நாளாந்த செயற்பாடுகளை அவதானிக்கையில் அரச  போக்குவரத்து   வசதிகள்  கிடைக்கப் பெறாத இம்மக்கள் கால் நடையாகவும், சிலர் துவிச்சக்கர வண்டி மூலமாகவும் சென்று வருவதனால்  நேரம்  வீண் விரையம் ஆகுதல், தொழில்  வாய்ப்புக்களை  மேற்கொள்வதற்கான  முதலீடு இல்லாத காரணத்தினால்  நகரங்களிலுள்ள  முதலாளிகளிடம் அதிக  வட்டியுடனான  கடன் அடிப்படையில்  பொருட்களைப் பெற்றுக் கொள்ளல், தொழில்  அறவீடுகள்  ஏற்படும் போது ஏலவே  கடன் பெற்ற  முதலாளிகள்  குறைந்த விலைகளில்  விளை பொருட்களை பெற்றுக் கொள்ளல், இதனால்  உரிய  மக்கள்  தொழில் இலாபங்கள் இல்லாத  நிலையில் மீண்டும் முதலாளிகளின்   வலைக்குள் சிக்கிக் கொள்ளலும் தொடர்ச்சியான வறுமை நிலைக்குள்  தள்ளப்படுவதும், அதனூடாக பிள்ளைகளின்  கல்வியில்  அக்கரை இன்மை மற்றும் தொடர்கல்வி  செயற்பாடுகளிலிருந்து  பிள்ளைகளை   பாடசாலை இடை  நிறுத்தம் செய்தல், பெற்றார் தங்களுடன்  கூலி வேலைக்கு அழைத்துச் செல்லல், என்பன  பாரியதொரு  பிரச்சினையாக  இப்பிரதேசத்தில்  இருந்து வந்தது. 

இவ்வாறு  பாதிக்கப்பட்டிருந்த  மக்களின்  கல்வி மற்றும்  பொருளாதாரத்தினை   மேம்படுத்தும்  வகையில்  அவர்களால்  உற்பத்தி  செய்யப்படுகின்ற   விளைபொருட்களை  நியாயமான  விலைக்கு  பெற்றுக் கொள்ளல்,  அவர்களை முதலாளித்துவத்திடம்  இருந்து காப்பாற்றுவதற்காக   அவர்களுக்கு  தேவையான   பொருட்களை  கடன்  அடிப்படையிலும்,  மானிய   அடிப்படையிலும்    பெற்றுக் கொடுத்தல்,  மற்றும்  பாதிக்கப்பட்டிருந்த குறிப்பாக  பெண்களை   இணைத்து  கூட்டுத் தொழில் (அரிசி ஆலை)  நடவடிக்கைகளில்   ஈடுபடுத்தல்  போன்ற செயற்  திட்டங்களை   1999  தொடக்கம் 2006ம் காலப்பகுதி  வரை கீழ்  குறிப்பிடப்படும் மூலோபாயங்கள் ஊடாக எமது மேற்கொண்டிருந்தது.

மக்கள் குழுக்களை கிராம ரீதியாக  நிறுவுதல்.
தொழில்  வாய்ப்புக்களுக்கு  மானிய அடிப்படையிலும், குறைந்த வட்டியுடனான   கடன்  வழங்கல்.
தேவையான  தொழில் உபகரணங்கள் மற்றும் பொருட்களை வழங்கல்  ( உதாரணமாக :- பசளை, கிருமி நாசினி, விதை நெல் )
விளை பொருட்களை   நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளல்
பெண்கள் இணைந்த கூட்டுமுறையிலான  தொழில்களை செய்தல் ( மிக்சர் தயாரிப்பு, நெல் அவித்து அரிசாக்குதல், சிறியளவிலான  மீன் கொள்வனவு செய்தலும், சந்தைகளுக்கு அனுப்புதலும்.
முந்திரிகை  பருப்பு பதனிடல்

போன்ற  செயற்பாடுகளை  செய்து மக்களிடத்தே  பொருளாதார  அபிவிருத்திக்கான  அடிப்படை  வேலைகளை செய்து  கொண்டு  வருகின்ற வேளைகளில்  2006ம் ஆண்டு  முதல்  முதலில்  மீண்டும் தொடங்கிய  யுத்த அனர்த்தமானது  எமது திட்டக் களக்கிராமங்களிலுள்ள  மக்களை தங்களது சொந்த  பிரதேசத்திலிருந்து  இடம் பெயர வைத்ததுடன், அவர்களின் வீடு,   பொருளாதாரம், கல்விக்  கட்டமைப்பு, சமூக கட்டமைப்பு என்பனவற்றினை முழுமையாக  அழிவிற்குட்படுத்தியருந்ததுடன், எமது  நிறுவனத்திற்குச் சொந்தமான 90  லட்சத்திற்கும் அதிகமான பெறுமதி கொண்ட  உள்ளீடுகளையும், வளங்களையும் சேதத்திற்குட்படுத்தியது.

இதனால்  இப்பிரதேச மக்கள்  தங்கள் சொந்த நிலத்திலிருந்து   வேறு மாவட்டமான மட்டக்களப்பு, வன்னி மற்றும் இந்தியா போன்ற   இடங்களில்  கிட்டத்தட்ட 4, 5 வருடங்களில்  அகதி வாழ்க்கை   வாழ்ந்தனர்.

இந்நிலையிலுள்ள  மக்களில் 80%  மக்கள் 2009 தொடக்கம் 2010 ஆண்டு  காலங்களில் தங்களது  சொந்த  நிலங்களில்  மீளக் குடியேற்றப்பட்டனர். 20% மக்கள்  இற்றைவரை   உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் (இந்தியா) அகதி  வாழ்க்கையே வாழ்கின்றனர்.

இவ்வாறு  மீளக்குடியேறிய மக்களிடத்தேயும், அகதி முகாம்களிலுமுள்ள  மக்களிடையேயும் தற்போது  முன்னைய  மாதிரியான  முதலாளித்துவச் சுரண்டல்  தலைதூக்கியுள்ள   காரணத்தினால் இம்மக்கள்  மீண்டும் வறுமைக்குட்படுகின்ற  நிலை தொடருக்கின்றது.

இதனை  ஓரளவேனும் தடுத்து  நிறுத்துவதற்கான  நிலையான  பொருளாதார மேம்பாட்டுத் திட்டச் செயற்பாடுகளை  மாவட்ட  ரீதியாக எமது  நிறுவனத்தின் சொந்த  நிதியினைக் கொண்டும், இலங்கையின்  தேசிய அபிவிருத்தி  நம்பிக்கை  நிதியம் (NDTF) எனும் நிறுவனத்தின் கடன் நிதியினை வைத்தும்  சுழற்சி முறையிலான கடன் திட்டங்களை  மேற்கொண்டு வருவதுடன், மக்களை சேமிக்கவும்  ஊக்குவித்து  வருகின்றது.

இருந்தும் இலங்கையின்  தேசிய அபிவிருத்தி  நம்பிக்கை  நிதியம் ஊடாக  மேற்கொள்ளுகின்ற கடன்  திட்டத்திற்கான வருடாந்த  வட்டி 15% ஆக  நிர்ணயிக்கப்படுவதனால்  தொழில்களுக்கு  கடன் பெறும் பயனாளிகள்  பாதிப்படையக் கூடிய  வாய்ப்புக்களும் இருக்கின்றது.

எனவே மக்கள் சேவை கொண்ட  அமைப்புக்களிலிருந்து  மக்கள்  தொழில்  நடவடிக்கைகளுக்கான   நன்கொடை  நிதிகள் வரும்  பட்சத்தில்  எம்மால்  அதிக வட்டி பெற்று  பெறப்படுகின்ற   இலங்கையின்  தேசிய அபிவிருத்தி  நம்பிக்கை  நிதியம் நிறுவனத்தின்  நிதியின் அளவினைக் குறைத்து,  மக்களுக்கும் குறைந்த  வட்டியில்  கடன்  தொகையினை  வழங்கவும்  வாய்ப்பாக இருக்கும்.

அதுமட்டுமன்றி  இலங்கையில்   தற்போது  அரச தரப்பில் காணப்படும்   அரசியல் மாற்றம்   காரணமாக  நிதி  நிறுவனங்களின்   உதவிகள்  மக்களுக்கு குறந்து வருகின்றது. இதனால்  எமது   நிறுவனத்தின்  மக்கள்  அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான  பணிகளும் குறைந்து  செல்ல வாயப்பு இருக்கின்றது.

இந்த நிலையில்  ஒரு  தன் நம்பிக்கையில் சுய  வருமானம் ஈட்டக் கூடிய  தொழில்களை  ஏற்படுத்தி  அதனூடாக மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்குரிய திட்டங்கள் தொடர்ந்தும்  எமது  அமைப்பு  அமுல்படுத்தி வருகின்றது.

இனங்காணப்பட்டுள்ள  பிரச்சினைகள்:
உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான நியாயமான  விலை தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை.
தரமான தொழில் உள்ளீடுகள்   கிடைக்காமை
அதிக செலவு ஏற்படல்
தங்களுக்கு தேவையான  சோற்றுக்கான அரிரியினை மீண்டும் முதலாளிகளிடம்  கூடிய விலை கொடுத்து  வாங்குதல்.
போக்குவரத்து  வசதி  மிகக் குறைவு
இழம் பெண்கள் கைம்பெண்களாக  இருத்தல்
மாணவர்கள்  பாடசாலைக்கு செல்வது குறைவு
கூடிய  விலை கொடுத்து பொருட்களை  கொள்வனவு செய்தல்
முதலாளிகளின்  சுரண்டல்
குறைந்த விலைக்கு விளை பொருட்களை விற்றல்.

திட்டச்சுருக்கம்:
திருக்கோணமலை  மாவட்டத்தின்   மூதூர்  பிரதேச  செயலாளர்  பிரிவிலுள்ள   மூதூர்  கிழக்கு  பிரதேசத்தைச் சார்ந்த 15  கிராம  மக்களும் முதலாளித்துவச் சுரண்டலிலிருந்து விடுபட்டு  தாங்கள் மேற்கொள்ளுகின்ற தொழில்கள் ஊடாக அதிகமான வருமானங்களைப் பெற்றுக் கொண்டு  தங்களது  குடும்பத்தினை  சுபட்சகரமாக மாற்றிக் கொள்வதற்கும்  தற்போதைய  பொருள் விலையேற்றத்திற்கு ஈடுகொடுத்து  வாழ்க்கையினை  மேம்படுத்திக் கொள்வதற்காக  நமக்காக  நாம் எனும்  திட்டத்தினை   திருக்கோணமலை  மாவட்டத்தில்  ஆங்காங்கே ஆரம்பித்து அதன் ஊடாக   பாதிக்கப்பட்ட  மக்களை மேம்படுத்தும் நோக்குடன்   இத்திட்டம் நகரும்.

இத்திட்டத்தில்  தொழில் (மக்கள் ) குழுக்களை  உருவாக்கல்,  சேமிப்புக்களை சேமிக்க தூண்டுதல், உள்ளூர் உற்பத்தியை  ஊக்கப்படுத்தல், தேவையான  தொழில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுத்தல், தொழில்களுக்கான  ஊக்குவிப்புக்களை   வழங்கல்,  பல்வகை  ஆலை  அமைத்தல் விளைபொருட்களை பெறலும், சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தலும். தொழில் இணைப்புக்களை  ஏற்படுத்தல் போன்றன   இச்செயற் திட்டத்தில்  முக்கியமாக இருக்கும்.

மேற்படி தொழில்  திட்டங்களை விரைவாகவும், திறமையாகவும், உண்மைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத்துவதற்காக  எமது நிறுவனத்தில்  தற்போது செயற்பட்டு  வருகின்ற, கட்டமைப்பு  ரீதியாக  பலமாக இருக்கின்ற  பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தோடு  இணைத்து இச்செயற்பாடு  மேற்கொள்ளப்படும்.

இத்திட்ட  அமுலாக்கத்தில் எமது  பொருளாதார அபிவிருத்திக் குழுவின்  முழுமையான  செயற்பாடுகள் இதில் அமைவதுடன், கிராமம் தோறும் எம்மால் அமைக்கப்படும்  மக்கள் தொழில்  குழுக்களின்  செயற்பாடுகளும்  அதில் அமையும். அதுமட்டுமன்றி அகத்தின் முகாமைத்துவக் குழு மற்றும்   நிறுவனத்தின் பொதுச்சபை  தொடர்ச்சியாக  ஆலோசனை  வழங்குவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடும்.

இலக்கு:
திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர்  பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மூதூர்  கிழக்கு கிராம மக்கள் சுயமாக   வாழ வழிசமைத்துக் கொடுத்தல்.

நோக்கம்:
முதலாளித்துவத்தின் சுரண்டலிலிருந்து  உரிய  திட்டக் கிராம மக்களை  விடுபட வைத்து வருமானத்தைக்  கூட்ட  முயற்சித்தல்.

தெரிவு செய்யப்பட்டுள்ள  திட்டக் களக் கிராம பயனாளிகளின் வருமானத்தினை   30% இருந்து 60% மாக  உயர்த்த முயற்சித்தல்.

தெரிவு செய்யப்பட்டுள்ள திட்ட கிராமங்களிலுள்ள 40% பெண்களும், 50% சிறுவர்களும் ஆரோக்கியமாக வாழும் நிலையினை 2012 ஆண்டின் இறுதிக்குள் ஏற்படுத்த முயற்சித்தல்.

செயற்பாடுகள்:
மக்கள் தொழில்  குழுக்களை  உருவாக்கமும் பலப்படுத்தலும்.

மூதூர் கிழக்கிலுள்ள  15  கிராமங்களிலும்  உள்ள  தொழிலில்  ஆர்வமுள்ள ஈடுபடுகின்றவர்களை   கிராம ரீதியாக   ஒன்றிணைத்து  தொழில் குழக்களை உருவாக்கல்  செயற்பாடாகவும், உருவாக்கப்பட்ட  குழக்களுக்கான  தொழில்முறை விழிப்புணர்வுகள்  வழங்கல் முறமையாகவே  இச்செயற்பாடு அமையும். இதன் மூலம் 15 தொழில் குழுக்கள் உருவாக்கம் நடைபெற்று இருக்கும்.

பாரிஸ் மாநாடு ஓர் திருப்புமுனையாக அமையட்டும்! : தி ஸ்ரீதரன் (EPRLF)

EPRLF_Conference_23Oct10தோழர்களே, எமது சர்வதேச கிளைகளின் மாநாட்டிற்காக நீங்கள் பிரான்சின் தலைநகர் பாரிசில் கூடியிருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். சமூக தார்மீக நெறிமுறைகளுக்காக போராடுபவர்களை உலகின் எந்த தீய சக்திகளாலும் அழித்துவிட முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. கடந்து வந்த கால் நூற்றாண்டுக்கு மேலான எமது பாதையில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இழப்புக்களையும் துன்பங்களையும் சந்தித்து வந்திருக்கின்றோம்.

இப்படியும் நடக்குமா என கற்பனை செய்ய முடியாதவற்றை எல்லாம் நாம் அனுபவித்திருக்கிறோம் பார்த்திருக்கிறோம். நாமும் எமது தாயகத்தின் மக்களும் இழப்புக்கள் போக எஞ்சி நிற்கிறோம்.
இக்கட்டத்தில் முக்கியமான தவிர்க்க முடியாத கேள்வி ஒன்று எழுகின்றது. நாம் எமது சமூக இலக்குகளை அடைந்திருக்கின்றோமா? எமது சமூக வாழ்வு சமூகத்தில் ஜனநாயக மயப்பட்டிருக்கின்றதா? சமூக ஏணிப்படிகளில் அடித்தட்டில் வாழும் மக்களின் சமூக வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டிருக்கிறதா? சமூக தளைகள் அறுந்திருக்கிறதா? அல்லது சிறிதளவேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?

இங்கு யதார்த்தமாகவும் உண்மையாகவும் அப்படி எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எமது போராட்டத்தின் ஆரம்ப நிலையிலேயே பாசிசத்தின் நிழல் கவிந்து அது எமது சமூகத்தினுள் ஊடறுத்து போராட்டத்தின் சகல தார்மீக நெறி முறைகளையும் அழித்தொழித்து ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்டக் காரர்களையும் தலைவர்களையும் கல்வியாளர்களையும் துவம்சம் செய்ததோடு எமது இரண்டு தலைமுறையினரில் கணிசமானோரை இராணுவ மயப்படுத்தியும், இராணுவ மனோபாவத்திற்கு உள்ளாக்கியும் சமூகக் கருவூலங்களான கலாச்சார பொருளாதார விழுமியங்கள் எல்லாவற்றையும் நிர்மூலம் செய்தது. சிந்திப்பதை நிறுத்திவிடுமாறு சமூகத்தை நிர்ப்பந்தித்தது. தனக்கு அடி பணந்து நிற்குமாறு தொழுதேற்றுமாறு அது அச்சுறுத்தியது தமக்கு எதிரானவர்கள் அல்லது அவ்வாறென தாம் சந்தேகப்படுபவர்கள் எல்லோரையும் மரணப்பொறிக்குள் வீழ்த்தியது.

திட்டவட்டமாக 1980 களின் நடுப்பகுதியில் குரூர முகம் காட்டிய பாசிசம் 2009 நடுப்பகுதியில் பலத்த ஆரவாரத்துடன் வீழ்ச்சியுற்றது.

அதற்குப்பிந்திய சூழலில் நாம் பேசுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான சூழல் உருவாகியிருக்கின்றது என்பது உண்மையே அது தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் உண்மையே.

ஆனால் தமிழ் மக்களுக்கும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தேசிய இனங்களுக்கும் உரிமைகளை அங்கீகரிப்பதில் கடுமையான நிலை உருவாகியுள்ளது. 1980 களில் இருந்ததை விட நிலைமை கடுமையாகியுள்ளது. இத்தகைய சிக்கலான இக்கட்டான நிலைக்கு தமிழ் மக்களை இட்டு வந்தது எம்மத்தியில் இருந்த பாசிசமே என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழர்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்றவாறு இலங்கையின் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளை சேர்ந்தவர்களும் சொல்ல முற்படுகின்றார்கள்.
தமிழர்களின் பிரச்சினை பயங்கரவாததத்திற்கு முற்பட்டது 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவுவது என்பதை உணர்ந்தும் உணராதவர்கள் போல் இவர்கள் நடக்க முற்படுகின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் 2009 வெற்றியின் பெருமித உணர்வுகள் பரவலாக இருந்தாலும் அவர்கள் இன்று தாம் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளும் காவுகொள்ளப்பட்டு விடுமோ என அச்சமுறுகின்றார்கள் இலங்கையில் இன சமூகங்களின் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியாக தீர்வு காணாத வரை இலங்கையின் பெரும்பான்மை இன மக்களும் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடியாதென்பதே நிஜம்.

தென்னிலங்கையில் முற்போக்கு அரசியலும் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. கெடுபிடி யுத்தத்திற்கு பின்னரான உலகம் 1990இருந்து தீவிர மாற்றமடைந்து வந்திருக்கிறது. அது தென்னாசியாவையும் பாதித்தது.

இந்தியா, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் சாரம்சத்தை அதன் அதிகாரப் பரவலாக்கத்திட்டத்தை நடைமுறையில் முழுமையாக சாத்தியமாக்குமாறு இலங்கையிடம் பல தடைவை நயந்து கேட்டிருக்கிறது. இலங்கையின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டிருக்கிறது. நட்பான அயல்நாடு என்ற வகையில் பல்வேறு தடைவைகள் இலங்கையின் தலைவர்களிடம் பல தடைவைகள் இதனை வலியுறுத்தி வந்திருக்கிறது.

ஆனால் இந்த விடயம் எதிர்நிலையிலேயே பயணப்பட்டிருக்கிறது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. முறையாக இணைப்பதற்கு மனசாரச்செயற்படுவதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளுக்கும் மனமொருப்படவில்லை.

இந்தியாவின் அனுசரணையுடனான அதிகாரப்பரவலாக்கத்திட்டம் சந்திரிக்காவின் சமஸ்டி ஒஸ்லோவின் கூட்டாச்சி மகிந்தவின் அனைத்துக்கட்சிக்கூட்டம் எல்லாமே கடந்து போய் விட்டன தற்போதும் வடக்கு கிழக்கின் இரண்டு மாகாணங்களுக்கும் பொருள் பொதிந்த அதிகாரப்பகிர்விற்காக உணர்ச்சிவேசப்படாமல் நிதானமாக செயற்படவேண்டியிருக்கிறது.

யுத்தத்தின் இறுதியில் பணயம் வைக்கப்பட்டு பின்னர் பிரலயமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் முட்கம்பி வேலிகளைத் தாண்டி வன்னியில் நிகழ்கிறது. ஆனால் அவர்களின் வாழ்க்கையினை உறுதியான அடித்தளத்தில் நிர்மாணிப்பதற்கு உள்ளகக்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

உயிரிழப்பு, ஊனமற்ற நிலை பொருளாதார இழப்பு பேதலித்த மனமென வன்னியில் மக்களின் இழப்புக்கள் பிரமாண்டமானவை. இவர்களின் தேவைகளை நிவர்த்திக்க ஊழலற்ற மனிதப்பண்புடனான அர்ப்பணிப்புத்தேவை இந்தியா மற்றும் ஐநா ஸ்தாபனங்கள் உலக நாடுகள் கணிசமான அளவில் உதவிகளை வழங்கிவருகின்றன.

அகதிகளான மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் வடக்கு கிழக்கை மீள் கட்டியெழுப்பவும் சர்வதேச சமூகம் உதவி வழங்க முன்வந்திருக்கிறது. இவற்றை வினைத்திறனுடன் கையாழ்வதற்கான தமிழர் பங்குபற்றலுடனான அரசமுறைமையொன்று இன்னும் இங்கு ஸ்தாபிக்கப்படவில்லை.

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நாங்கள் நழுவவிட்டுள்ளோம். தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் தீர்க்க தரிசனமற்ற அரசியலே இதற்கு காரணம் என்றால் மிகையல்ல. ஆனால் இந்த திரும்பத்திரும்ப நிகழ்த்தப்பட்டு வருகின்ற வரலாற்றுப்பிழைக்கு முடிவு கட்டவேண்டும் அப்போதுதான் பன்முகத்தன்மை வாய்ந்ததும் சமத்துவமானதும், ஐக்கியமானதுமான வாழ்வொன்றை இங்கு கட்டியெழுப்ப முடியும்.
 
எமது மக்கள் இழந்த இழப்புக்களுக்கும் சந்தித்தத்த பேரழிவுகளுக்கும் ஈடாக தீர்வொன்று எட்டப்படவேண்டும். எத்தனை அவமானங்கள் இழிவுகள் உதாசீனம், மரணங்கள் மத்தியில் நாம் வாழ்ந்திருக்கிறோம். இது இலங்கையில் வாழும் தோழர்களுக்கு மாத்திரமல்ல புலம்பெயர்ந்து வாழும் தோழர்களுக்கும் பொருந்தும்.

எமது மக்களின் சார்பில் எம்மை ஸ்தாபிப்பதற்கு பாரதப்போரில் அவிமன்யு சிக்கியது போல் ஒரு சக்கர வியூகத்தினுள் அல்லவா நாம் சிக்கியிருந்தோம் இறுதியாக அது எமது மக்களுக்கும் நேர்ந்தது.

இவற்றையெல்லாம் தாண்டி பேரழிவுகளுக்குப் பின்னால் எஞ்சியிருப்பவை எமது கொள்கைளும், கனவுகளும், இலட்சியங்களும்தான். சமகாலச சூழ்நிலைக்கு ஏற்ப இவற்றை வென்றெடுப்பதற்காக நாம் இயங்க வேண்டியிருக்கிறது, செயற்பட வேண்டியிருக்கிறது,

EPRLF_Conference_23Oct10இன்று எமது ஸ்தாபனம் என்பது உலகளாவியதாக அமைந்திருக்கிறது. எமது பிரச்சினைகள் எம்மை அவ்வாறு ஆக்கியிருக்கிறது தாயகத்திலுள்ள தோழர்கள் மக்களை ஊக்கப்படுத்துவத்தில், தென்பூட்டுவதில் புலம்பெயர் தளத்திலுள்ள தோழர்கள் நண்பர்கள் ஆதரவாழர்கள் வழங்கிய பங்களிப்பை உரிமையுடனும் நன்றியுடனும் நினைவுகூர கடமைப்பட்டவர்கள்.

புலம்பெயர்த்தளத்தில் இயங்கிய மாற்று ஊடகங்கள் வழங்கிய பங்களிப்பு வானொலி, இணையங்கள் இங்கு வழங்கிய பங்களிப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. புலம்பெயர்த் தளத்தில் செயற்பட்ட தோழர்களின் அர்ப்பணம், நேர்மை தாயகத்திலுள்ளவர்கள் பற்றிய அவர்களின் உள்உணர்வு என்பன இங்கு எமக்கு பல நண்பர்களை உருவாக்கி தந்திருக்கிறது.

நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் இலங்கையினை அரசியல் அரங்கை ஜனநாயகப்படுத்துவதற்கும் சமூக அபிவிருத்திப் பணிகளை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கும் எமது நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கும் பரந்த அளவிலான ஐக்கியம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

பாரிய அளவில் வெகுஜனங்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. 1980களின் முற்பகுதியில் அல்லது 70களில் வேலை செய்தமை போன்ற முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் அப்போதிருந்த அரசியல் சமூக சவால்கள் தற்போது உள்ளதுடன் ஒப்பிடுகையில் தலைகீழ் வித்தியாசமானவை. ஓரளவு எளிமையானவை எனவே புதிய நிலவரங்களுக்கு ஏற்ப புதிய வெளிச்சத்தில் நாங்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

சர்வதேச அளவில் எங்களைப் போன்று மனித குலத்தில் நல்வாழ்விற்காக போராடும் சக்திகளுடன் கரங்கோர்த்து செயற்படும் அந்த இயல்பை என்றைக்கும் நாம் கைவிட்டுவிடக்கூடாது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அடையாளமே எமது அடையாளம் நாம் அவர்களைப் பிரதிபலிப்பவர்கள் மாத்திரமல்ல அந்த மக்களின் விடிவிற்காக செயற்படுவர்கள் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.

பாரிஸ் மாநாடு நடைபெறும் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது.
பாரிஸ் மாநாட்டின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தி. ஸ்ரீதரன்

மக்களும் நாமே! அரசாங்கமும் நாமே! : யாழ் வட்டுக்கோட்டை – துணைவி (சங்கரத்தை) மாதர் சங்கத்தில் ஒரு சந்திப்பு

Sangarathai_Mathar_Sangamதுணைவி (சங்கரத்தை) மாதர் சங்கம்
கலந்துரையாடல் மினிட்ஸ் (Minutes)
இடம்:  துணைவி-சங்கரத்தை அபிவிருத்தி மையம்
திகதி: நேரம் – 10 புரட்டாசி 2010 – மாலை 3.30

நோக்கம்:

துணவி – சங்கரத்தை வளர்ச்சியையும் மக்களின் எதிர்பார்ப்பையும் ஒன்றுகூட்டல்.

பொது அடிப்படையின் விளக்கம்

நாம் செய்யும் வேலைக்கு உடல், மனம், உள்ளம் /ஆன்மா போல மூன்று வகையான விளைவுகள் உண்டு. அவை
1. பணம் பொருள் சம்பந்தமான விளைவுகள் (Money)
2. மனிதர்/மக்கள் சம்பந்தமான விளைவுகள (People)
3. சொந்தம் /ஈடுபாடு (Ownership)
இவற்றில் முதலாவது ரகம் வெளிப்படையாக தெரியும் விளைவுகள். (Objective Outcomes)
இரண்டாவது ரகம் – பதவியும் நல்லெண்ணமும்
மூன்றாவது – நாம் அதுவாகி அமைப்பை நாமே இயக்கிறோம்.

காசும் பதவியும் மற்றவர்களது கையில் இருந்து வரும். ஆனால் சொந்தம் எங்களது கட்டுப்பாட்டில் எங்களுக்குள் இருந்து எங்களை இயக்குகிறது.

ஆகவே நாம் உண்மையாக வேலை செய்தால் கண்ணுக்குத் தெரியும் பணமும் பதவியும் கிடைக்காவிட்டாலும்கூட ஈடுபாடு வளர்ந்து சொந்தமாகி, நாம் அதுவாகி முழுமையை உணர்கிறோம். சுதந்திரமாக செயற்படுகிறோம். சொந்தம் உள்ள எல்லாரும் இயற்கையாக ஒருவராகிறோம்.

அந்த அடிப்படையில், மக்களும் நாமே அரசாங்கமும் நாமே.

நடந்தது:

வருகை தந்திருந்த மாதர்கள் இரண்டாகப் பிரிந்து ஒரு குழு மக்கள் என்றும், மற்றப் பகுதி அரசாங்கம் என்றும் பதவி எடுத்தோம்.
மக்கள் பகுதி தங்கள் பிரச்சனைகளைச் சொல்ல, அரசாங்கப் பகுதி தமக்குத் தெரிந்த ஆலோசணைகளை பகிர்ந்தார்கள்
(i)வேலை பற்றாக் குறை
(ii)வேலைப் பயிற்சி பற்றாக் குறை
(iii)அரசாங்க வேலைகளிலும் தொழிற் பயிற்சியிலும் சம சந்தர்ப்பம் தெரியாத அவநம்பிக்கை. இது லஞ்சம் காரணமாகவும் இருக்கலாமோ என்ற சந்தேகம்
(iv)அடிப்படை வீட்டு வசதிகள் இல்லாமை
(v)இளம் பெண்களுக்கு வேண்டிய பாதுகாப்புகள்

வேலை பற்றாக் குறை:

Sangarathai_Mathar_Sangamஎங்கள் சுற்றாடலில் உள்ள வேலை வாய்ப்புகளை எப்படி அடையாளம் கண்டு அவற்றை பாவிக்க வேலை இல்லாதவர்கள் ஊக்கம் எடுப்பதுடன் மாதர் சங்கம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை நல்ல தராதரத்தில் தயாரிக்க ஊக்கமெடுக்கலாம் என்று ஆராய்ந்தோம்.

எங்கள் சுற்றாடலில் வேலை வாய்ப்புகள் போதிய அளவு இல்லாவிட்டால் நாம் வேலை வாய்ப்புகள் இருக்கும் இடங்களை நாடிப் போக வேண்டும் என்று ஆராய்ந்தோம்.

ஒரு பெண் தான் தோட்டவேலை செய்வதாகவும் அதற்கு தனக்கு கிடைக்கும் கூலி ஒரு நாளைக்கு ரூபா 150 மட்டுமே என்றார். கிடைக்கும் வருமானம் வீட்டுச் செலவிற்கு போதாது என்றார். எமது கேள்விக்கு அவர் சொன்னார் முன்பு அதைவிட கூடுதலாக உழைக்கவில்லை என்று. அப்படியென்றால் அவர் வேறு வேலை செய்பவர்களுடனோ அல்லது வேறு இடத்தில் அதே வேலை செய்பவர்களுடனோ தன்னை ஒப்பிட்டு பார்க்கிறார் என்று கூறியதை ஏற்றுக் கொண்டார். மனம்தான் அவரது கவலைக்கு முக்கிய காரணம் என்று ஆராய்ந்தோம்.

சிலர் கூடிய ஊதியத்திற்காக, வேலைசெய்ய தொடங்கமுன் அதற்குரிய படிப்பும் பயிற்சியும் அவர்கள் கற்று வந்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிபந்தனை இருந்தால் அவர்களுக்கு கூடிய கூலி கிடைப்பது நியாயம் என்று ஒத்துக் கொண்டார். அது கஞ்சிக்கு உப்பில்லை என அழுபவரின் கஷ்டமும் பாலுக்கு சீனி இல்லை என்று அழுபவரின் நோவும் ஒன்றே என்ற தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் நாம் எமது இயற்கையான சூழ்நிலையில் இருந்தால் இப்படியான நோ, மாயை என்பது தெரியும் என்று கதைத்தோம். இறுதியில் நாம் எமது மனத்துடன் மட்டுமே வாழ வேண்டும் என்பதால் இந்த மனப்பக்குவம் எமக்கு நிம்மதியான வாழ்க்கையை காட்டும் என்றோம்.

வேலைப் பயிற்சி பற்றாக் குறை:

தற்போதைய சூழ்நிலையில் இருக்கும் வேலைகள் கிடைக்க தேவையான பயிற்சிகளைப் பெறுவதற்கு மாதர் சங்கம் மூலம் உதவ மாதர் சங்கத்தில் ஒரு குழு அமைத்து அவர்களுக்கு வேண்டிய பயிற்சியை கொடுக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

ஒரே மாதிரியான தொழிலில் ஈடுபட்டவர்கள் ஒன்றுகூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்வதுடன் பொதுவான அமைப்பின்மூலம் பொது நம்பிக்கையை வளர்த்து பலன்பெற ஊக்குவித்தோம்.

Sangarathai_MS_Nurseஇளம்பெண் ஒருவர் தாதி பயிற்சிக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த அனுபவம் தனக்கு திருப்தியாக உள்ளது என்று சொன்னதை நல்ல வழி என்று மெச்சினோம். அந்த அனுபவம் அடுத்த முயற்சிக்கு உதவும் என்று ஊக்குவித்தோம். அதாவது, உண்மையாக எமக்கு இயலுமானதை நாம் செய்யும்போது, அந்த முயற்சி நிச்சயமாக பலனளிக்கும். இதில் அதி உயர்ந்த பலன் சொந்தம்/பங்களிப்பு. அது சுதந்திரமாக இயக்கும் சக்தி. எங்கும் எப்பவும் வேலை செய்யும்.

இந்த அடிப்படையில், நாம் செய்யும் உண்மையான ஒவ்வொரு வேலைக்கும் பலனுண்டு.

சம சந்தர்ப்பம்:

வேலை பெறுவதற்கும், வேலைப்பயிற்சிக்கு இடம் பெறுவதற்கும் லஞ்சம் ஒரு முக்கிய தடையாக உள்ளது என்ற கருத்தை ஒரு இளம் பெண் முன் வைத்தார். அதற்கு பதில் அளிக்கையில் நாம் கூறியது –
நாம் முதலில் எங்களில் என்ன திருத்தம் செய்ய முடியும் என்று பார்த்தால் அது எங்களது வைராக்கியத்தை பலப்படுத்தும். மற்றவர்களில் குறை கண்டால் அந்தக் குறையை நாம் திருத்தக்கூடியதாக இருக்க வேண்டும் அல்லது அதனால் எங்களுக்கு வந்த இழப்பிற்கு / நோவிற்கு எங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், குற்றம் காண வேண்டிய பதவி பொறுப்பும் இல்லாமல் குறை கண்டால் அது எங்கள் மனத்தில் தோல்வி மனப்பான்மையை வளர்க்கும் சாத்திய கூறுகள் அதிகம். அத்துடன் எங்களால் உணர்வுமூலம் திருத்தக்கூடியவர்கள் மட்டுமே எங்கள் சொந்தம். மற்றோர் பிறத்தியர். அவர்களுடன் நாம் பொது நியதிப்படி உண்மையாக நடந்ததை (Facts) வைத்து சரி பிழை கணிக்க வேண்டும். இந்த லஞ்சக் குற்றச்சாட்டு எவ்வகை?

இன்னுமொரு இளம்பெண் இவ்விஷயமாக சொன்னார் – லஞ்சம் வாங்குவது உண்டென்றாலும் – மக்கள் திறமை மூலம் மட்டுமே அந்த சந்தர்ப்பங்களைப் பாவித்தால் அது எங்களைத் தாக்காது என்று. லஞ்சம் வேலை விஷயத்தில் பிழை போல – நிவாரணம் எடுத்து அதற்காக நாம் எம்மால் இயலுமானதை பொது நலனுக்கு செய்யாவிட்டால், அதுவும் லஞ்சம்தான். ஏனெனில், நிவாரணம் பொது நலனில் அதிக ஈடுபாடு உள்ளவர்களின் பிரதிபலிப்பு.

நிவாரணத்தை ஏற்றுக் கொள்பவர்கள் நிவாரணம் கொடுப்பவர்களில் நம்பிக்கை வைத்திருந்தால் அவர்கள் ஒரு குடும்பத்தை / சமூகத்தைச் சார்ந்தவர்களாகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உணர்வால் பிணைக்கப்பட்டவர்கள். ஆகவே உணர்வுடன் நிவாரணம் ஏற்றுக் கொள்பவர்கள் நிவாரணம் கொடுப்பவர்களுடன் இணைகிறார்கள். அதேபோல் நிவாரணம் கொடுப்பவர்களும் நிவாரணம் கொடுக்கப்படுபவர்களும் தங்களில் ஒரு பகுதி என்ற உணர்வுடன் மட்டுமே கொடுத்தால் நிவாரணம் பெறுபவர்களது கஷ்டம் நிவாரணம் கொடுப்பவர்கள் பட்ட கஷ்டம் ஆகிறது. இருவர் ஒருவர் ஆகின்றனர்

முதலில் உணர்வு இல்லாவிட்டாலும் அறிவுமுலம் யோசித்து, பொதுக் கொள்கை அடிப்படையில் கணித்து செயல்படும்பொழுது கொடுக்கும்/கிடைக்கும் காசு/பொருள் இரண்டாம்பட்சமாகி கொடுப்பவர் முதலாம்பட்சமாகத் தொடங்க நம்பிக்கை உருவாகிறது. நம்பிக்கை உணர்வாகிறது. உணர்வு இருபக்கத்தையும் ஒருவராக்கி ஒருவர் மற்றவருக்கு கடனாளியாகாமல் பாதுகாக்கும். கொடுப்பவர் பதவி போன்ற பலனுக்காகவும் வாங்குபவர் பணம்போன்ற பலனுக்காகவும் ஏற்றுக் கொண்டால் அது ஏற்ற தாழ்வை வளர்த்து கெடுதலை உருவாக்கும். ஒருவிதமான தாக்கம் இன்னொருவிதமான தாக்கமாக உருமாறும். அது சமுக வளர்ச்சியின் எதிரி.

அடிப்படை வீட்டு வசதிகள்:

இந்த நிவாரண கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை எங்கள் துணைவி-சங்கரத்தையிலும் நடந்தபடியால் பலர் வீடு இருந்தும் இல்லாத மன நிலையில் உள்ளனர். மேலும், கொடுப்பவர்களது உணர்வு பற்றாமையால், வீடுகளில் தண்ணீர் மலசலகூட வசதிகள் முன்போடப் படவில்லை.

நிவாரணம் கொடுப்பவர்களது அடிமட்ட வீட்டின் தன்மைகளும் நிவாரணம் வாங்குபவர்களின் அடிமட்ட வீட்டின் தன்மைகளும் ஒன்றாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது. உருவங்கள் வேறாக இருக்கலாம் – ஒன்று கல் வீடு, மற்றது ஓலைக் குடுசை-. ஆனால் சுத்தம் ஒரு தராதரமாக இருக்க முடியும். அடிப்படை கலாச்சாரத்துடன் எடுக்காவிட்டால், பீத்தல் பறங்கி மாதிரி, கொச்சைத் தமிழ்போல அங்குமில்லாமல் இங்குமில்லாமல் அமையும்.

ஆகவே குடும்ப வீட்டின் நல்ல தன்மைகளை முதலில் வளம்படுத்த முடிவு செய்தோம். அதில் முன்னேற்றம் காட்டுபவர்களுக்கும் அதற்காக நிவாரணம் கொடுப்பவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

வறுமையை மாத்திரம் பார்த்துக் கணக்கிட்டால், ஏற்கனவே இன, சாதி அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் இன்னும் தங்களைத் தாழ்த்திக் கொள்ளும் சாத்தியம் அதிகம் உண்டு. அப்படியல்லாமல் உருவத்தில் சமத்துவத்தை காட்டப் பார்ப்பவர்கள் முயற்சியை பின்போடப் பார்ப்பார்கள்.

பால் குடித்துப் பழகியவர் கஞ்சி குடித்து உப்பு காணுமா? என்றும் பார்க்கலாம், கஞ்சி குடித்துப் பழகியவர் திறமையால் உழைத்து பால் வாங்கி சீனி காணுமா? என்றும் பார்க்கலாம். முதலாம் ரகத்தவர் ஒறுத்தல்/தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர். இரண்டாம் ரகத்தவர் உழைப்பை முன் போடுபவர்களாக இருப்பர்.

பாதுகாப்பு:

குடும்பத்தில் மனோ பலமும் உடல் பலமும் கொண்டவர்கள் பலம் குறைந்தவர்களை பாதுகாக்கும் பண்பு வளரவேண்டும். அது சமூக மட்டத்திலும் அப்ப நடக்க மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அதிகாரிகள் உதவ வேண்டும். சமீபத்தில் சில பெண்கள் தம்மை வேலைக்கு என்று கூப்பிட்டு விபசாரம் செய்யப் போகிறார்கள் என்று தாம் பயம் கொண்டதாக கூறினார்கள். முறைப்படி வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் இப்படியான பயங்களில் இருந்து பாதுகாக்கப்படுவர் என்று முடிவு செய்தோம்.

தீர்மானங்கள்:

மேற்கூறிய வகையில் எங்களை வழம்படுத்த ஈடுபாடுள்ளவர்களுடன் சேர்ந்து முயற்சிக்க முடிவு செய்துள்ளோம்.

மனிதநேயன் வை சி கிருபானந்தனுக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலி!

Kirubananthan_Vai_Siதேசம்நெற் இணையத்தின் நீண்ட நாளைய கருத்துப்பதிவாளர் வை சி கிருபானந்தன் காலமானார். பார்த்தீபன் என்ற புனைப்பெயரில் தனது கருத்துக்களை பதிவிட்டுவரும் வை சி கிருபானந்தன் ஒரு மனிதநேயன். நேற்று ஒக்ரோபர் 18 2010ல் மரடைப்பால் கிருபானந்தன் உயிரிழந்தார். அவருக்கு தேசம்நெற் இன் கண்ணீர் அஞ்சலிகள்.

யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் சுவிஸ்நாட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றார். காலம்சென்ற சிவஞானம் சரஸ்வதி தம்பதிகளின் புதல்வரான வை சி கிருபானந்தன் சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும் பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். வை சி கிருபானந்தனின் பிரிவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கு தேசம்நெற் இணையத்தின் சார்பிலும் அதன் வாசகர்கள் கருத்தாளர்கள் சார்பிலும் எமது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

‘கட்சி அரசியல் எதனிலும் ஈடுபாடற்ற இவர் மிகுந்த அரசியல் ஆர்வலர். சுவிஸில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டங்களில் பங்குபற்றி தனது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருபவர்’ என்கிறார் அவருடைய நண்பர் அஜீவன். ‘அவருடைய இழப்பு நல்ல நண்பனின் நல்ல மனிதனின் இழப்பு’ எனத் தன் துயரைப் பகிர்ந்து கொண்டார். அஜீவன் மேலும் குறிப்பிடுகையில், ‘மிகவும் சமூக அக்கறை கொண்ட இவர் புறூக்டோர்ப் தமிழ் பள்ளியை நடத்துவதிலும் உதவி வருவதாகத் தெரிவித்தார்.

Kirubananthan_Vai_Siடயஸ்பொரா டயலொக் ஜேர்மனியில் ஏற்பாடு செய்த சந்திப்பில் நான் (த ஜெயபாலன்) வை சி கிருபானந்தனை முதற்தடவையாகச் சந்தித்தேன். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புனைபெயரில் தான் கருத்துப் பதிவிடுவதையும் குறிப்பிட்டு தேசம்நெற் இன் பணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அதன் பின்னர் சுவிஸ் மாநாட்டுக்குச் சென்றிருந்த போதும் சந்தித்துக்கொண்டோம். முகமறியாது இணையத்தில் உரையாடிய போதும் முகமறிந்து நேரில் உரையாடிய போதும் அவருடைய மனிதநேயத்தில் மாற்றம் இருக்கவில்லை.

இந்த துயரச் செய்தியை வை சி கிருபானந்தன் (பார்த்தீபன்) யூலை 01 2009ல் பதிவிட்ட கருத்துடன் நிறைவு செய்கிறேன்.

”இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் அரசியலை இன ரீதியாக வளர்த்து பிளவுகளை ஏற்படுத்தி வந்ததே, நாட்டின் இன்றைய இவ்வளவு சீரளிவுகளுக்கும் காரணம். அதே தவறுகளை தொடர்ந்தும் செய்வதைத் தவிர்த்து, இனங்களுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி எல்லா இன மக்களும் சமத்துவமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் சேர்ந்து வாழும் நிலையை அரசும் அனைத்து மக்களும் சேர்ந்து ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பாகுபாடுகள் ஒழிந்து, எல்லோரும் இலங்கை மக்கள் என்ற பொதுவான எண்ணம் தாமாக உருவாகும்.”
பார்த்தீபன், யூலை 01 2009 தேசம்நெற்.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

Katpaga_RiceMillஇன்று (ஒக்ரோபர் 16 2010) மூதூர் பாட்டாளிபுரம் கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ‘கற்பக அரசி ஆலை’ அமைக்கும் முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் பெயரில் உருவாக்கப்பட உள்ள இந்த அரசி ஆலைக்கு ‘அகிலன் பவுண்டேசன்’ ஆதரவளிக்கின்றது. ஒக்ரோபர் 8ல் இலங்கை சென்ற அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன் பல்வேறு உதவித்திட்டங்களை அங்கு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு அங்கமாக இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 1997 முதல் சிறுவர், பெண்கள், விதவைப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சிறுதொழில், சிறு கடன் உதவிகள் வழங்கிவருகின்ற ‘அகம்’ அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Katpaga_RiceMill_Satchi_Gopal2010 ஏப்ரல் முற்பகுதியில் ‘லிற்றில் எய்ட்’ திட்ட இணைப்பாளர் த ஜெயபாலனிடம் ‘அகம்’ திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் பொ சற்சிவானந்தம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை வலியுறுத்தி விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த அரசி ஆலைக்கான திட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவுக்கு வரும் இந்த அரசி ஆலையானது கணவனை இழந்த 30 பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளது.  மேலும் இந்த அரசி ஆலை லபாத்தையீட்ட ஆரம்பிக்கும் போது அதன் லாப நிதி மீண்டும் முழுமையாக பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கே பயன்படுத்தப்படும் என கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

._._._._._.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்

Katpaga_RiceMillகடந்த  30  வருடங்களாக  இலங்கையில்  ஏற்பட்டு வந்த  யுத்த  அனர்த்தம்  காரணமாக குறிப்பாக   வடக்கு கிழக்குப்  பிரதேச  மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட  காரணத்தினால்  அவர்களின்  வாழ்வாதாரம் மற்றும் தொழில்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு யுத்த  அனர்த்தத்தினால் 30 வருடமாக பொருளாதாரத் தடை, பொருட்கள் கொண்டு செல்லத் தடை, வரையறுக்கப்பட்ட  பொருட்களக்கான அனுமதி, இறுதியாக இடம்பெயர்வு என பல வகையிலும் பாதிக்கப்பட்டு தற்கால  சமாதான  சூழ்நிலையில்   அண்மையில் மீளக் குடியேற்றப்பட்ட    இலங்கையின்  கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை  மாவட்டத்திலுள்ள   மூதூர்  கிழக்கு  பிரதேச  15  திட்டக் கிராமங்களை சேர்ந்த மக்களின்  பொருளாதாரத்தினை  மேம்படுத்தும்  ஓர்  செயற் திட்டமாகவே  இது நடைமுறைப்படுத்தப்படும்.

மேற்படி   15  கிராமங்களிலுமுள்ள  விவசாயிகள்  திட்டப் பின்னணியில்  குறிப்பிட்டதைப் போன்று தோப்ப+ர், மூதூர்  ஆகிய   நகரங்களிலுள்ள  முதலாளிகளிடம்  விவசாய  உள்ளீடுகளை  கடனுக்கு வாங்கி அறுவடை காலங்களில் முதலாளிகள்  நிர்ணயிக்கின்ற  விலைகளுக்கு பொருட்களை  வழங்கின்றனர்.

Katpaga_RiceMillஇந்த  நிலையினை  நாம்  எமது  மேற்படி திட்டத்தினால்  குறிப்பிட்ட  களக் கிராமங்களிலுள்ள   விவசாயிகளை  ஒண்றிணைத்து அதன்  ஊடாக  அவர்களுக்குத்  தேவையான   விவசாய  உள்ளீடுகளை எமது  நிறுவனத்தில்  தற்போது   நடைமுறையில்  உள்ள  பொருளாதார  மேம்பாட்டுத் திட்டத்தின்  ஊடாக  எம்மிடம்  கடன் கோரி  விண்ணப்பிக்கின்ற   பயனாளயிகளுக்கு கடன்  அடிப்படையில்  நியாயமான  விலையில்  வழங்குதலும், அவர்கள்  அறுவடை  செய்கின்ற   வேளையில்   அவர்களைப் பாதிக்காத வகையில்   நடைமுறை  விலைக்கு  ஏற்றார்  போல  நெல்லினை கொள்வனவு  செய்தலும், தேவையானவற்றை  களஞ்சியப்படுத்தி  வைத்தல்   ஒரு கட்டமான செயற்பாடக  அமையும்.

அடுத்து இதன் தொடர்  செயற்பாடாக இப்பிரதேச  விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு  செய்யப்படும் நெல்லினை  களஞ்சியப்படுத்தி  வைப்பதுடன், மேற்படி  களப் பிரதேசங்களில்  கடந்த கால யுத்த அனர்த்தத்தினால் கணவன் சுடப்பட்ட  (தமிழ் இளம்  விதவைகளையும்) , கணவன் காணாமல் போதல், கணவன் கடத்தப்பட்ட, கணவன் தடுப்பு முகாம்களில் உள்ள  தலமை தாங்கும் குடும்பப் பெண்கள் எதுவித தொழில் வாய்ப்புக்கள் இன்றி  தவிக்கின்ற நிலையில் உள்ளவர்களையும், இத்தொழில் நுட்ப அறிவு கொண்ட ஆண், பெண்  என இரு  பாலாரையும்   குழக்களாக்கி  பெறப்படும்   நெல்லினை  அவித்தும், பச்சiயாகவும்  உலர  வைத்து ஆலையில் குற்றி  அரிசியாக்கல் மற்றும்  அரிசி மாவு, மிளகாய் அரைத்தல் போன்ற செயற்பாடுகளை குறிப்பிட்டளவு  குழுவினர்களாலும்,  அரிசி பொதி செய்தல், மாவு பொதி செய்தல்,  மிளகாய்த் தூள் பொதி செய்தல் போன்ற  செயற்பாடுகள் மற்றைய  தொழில்  குழுக்களாலும் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ் ஆலையின்  ஊடாக  பெறப்படுகின்ற முடிவுப் பொருட்களாக உரிதியான அரிசி, பொதி செய்யப்பட்ட  அரிசி, பொதி செய்யப்பட்ட அரிசி மாவு, பொதி செய்யப்பட்ட  மிளகாய்த்தூள்  என்பன திருமலை  நகரத்தில் இயங்கும்  எமது  நிறுவனத்திற்குச்  சொந்தமான ஸ்ரீசக்தி வாணிபம்  மொத்த  விற்பனை  நிலையத்திற்கு விற்பனைக்காக  தேவைக்கு ஏற்ப அனுப்பப்படுவதுடன்,  இலங்கையில்  உள்ள  மாவட்டங்களுக்கும் தேவை ஏற்படின் எதிர் காலத்தில்  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

இதன்  மூலம்  குறிப்பிட்ட  ஆலையின்  ஊடாகப் பெறப்படுகின்ற  முடிவுப் பொருட்களுக்கான சந்தை  வாய்ப்பு வெளியில்  நிறையவே   இருக்கின்றது.

அதுமட்டுமன்றி இப்பிரதேச மக்கள் நெல் அறுவடை காலங்களில் முழமையாக நெல்லினை  விற்பதும் ஏனைய காலங்களில் சோற்றுக்கான அரிசியினை வெளியிடங்களில் கொள்வனவு செய்பவர்களுக்கு உரிய   பொருளாதார  பல்வகை  ஆலையின்  ஊடாக தேவையான  அரிசியினை   உள்ளூர்  மக்களுக்கும் வழங்கக் கூடியதாக இருக்கும்.   

இத்திட்டத்தின்  ஊடாக  இப்பிரதேச  மக்களுக்கும், ஏனைய   பிரதேச மக்களுக்கும் தரமான முடிவுப் பொருட்கள்  கிடைப்பதுடன், நியாயமான விலையிலும் பொருட்கள் கிடைக்கின்ற  தன்மையினை  உறுதிப்படுத்தக்  கூடியதாக  இருக்கும்.

அதுமட்டுமன்றி இத்தொழில் முயற்சிகளில்  ஈடுபடும்  பாதிக்கப்பட்ட   பெண்கள்  தலமை தாங்கும்  குடும்பப் பெண்களுக்கும்  ஓர்  நிரந்தரமான   மாத வருமானம் கிடைக்கும். இதனால் இக்குடும்பங்களுக்கான  வருமானம்  அதிகரிக்கின்ற  வேளையில்   பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள்  மகிழ்ச்சியாக  வாழ்வதுடன், பிள்ளைகளின்  எதிர் காலமும்  ஒளிமயமாக அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
 
Katpaga_RiceMillமேற்படி  பல்வகை ஆலைச் திட்டச் செயற்பாட்டிற்கான  அனைத்து நடவடிக்கைகளும்   எமது  நிறுவனத்திற்குச் சொந்தமான திருக்கோணமலை  மாவட்டத்திலுள்ள மூதூர் கிழக்கு  பிரதேசத்திலுள்ள  பாட்டாளிபுரம்  பொருளாதார மேம்பாட்டு மையம்  வளாகத்திலேயே நடைமுறைப்படுத்தப்படும். இம்மையத்தில்    அரைக்கும் ஆலையும்,  நெல் உலர வைக்கும் தளமும் திருத்தி அமைக்கப்படுவதுடன், இதற்குத் தேவையான அரிசி அரைக்கும் இயந்திரம் (கல், மண் என்பனவற்றினை வேறாக்கி தரப்படுத்தும் இயந்திரம்) மிளகாய் அரைக்கும் இயந்திரம், அரிசி மாவு அரைக்கும் இயந்திரம் போன்ற தேவையான இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு இத்தொழில் நடைமுறைப்படுத்தப்படும்.

விளைவுகள்:

மக்கள் தொழில்  குழுக்களை  உருவாக்கமும் பலப்படுத்தலும்.
15 தொழில்  குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கும். பொருளாதார அபிவிருத்தி  திட்ட  நடவடிக்கைகளில் 15 கிராமங்களிலுமள்ள தொழில் குழு ப+ரண ஒத்துழைப்பினை  வழங்குவதனை  அவதானிக்க  முடியும்.

நெல் கொள்வனவும் பல்வகை ஆலை அமைத்தலும்.
1. பாட்டாளிபுரம் கிராமத்தில் பல்வகை ஆலை இயங்கும். • 
2. பாட்டாளிபுரம்  கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும்  மொத்த  விற்பனை  நிலையம் மூலம்  200  தொழில் செய்பவர்கள் உள்ளீடுகளை பெற்றிருப்பர்.
3. குறைந்த விலையில்  பொருட்கள் விற்பனை செய்யப்படுவதனை அவதானிக்க  முடியும்.
4. மூதூர், தோப்ப+ர் ஆகிய நகரங்களுக்கு சென்று  தொழில் உள்ளீகளைப் பெற்றுக் கொள்பவர்களின்  எண்ணிக்கை  65% இருந்து 35% ஆக  குறைவடைந்து  காணப்படம்.
5. முதலாளி சுரண்டலிலிருந்து  தொழில் செய்பவர்களும் சாதாரண மக்களும்  விடுபட்டு இருப்பார்கள்.
6. கணவனை  இழந்து  தவிக்கும் பெண்கள் இணைந்து கூட்டுத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பார்கள்.
7. அரிசி ஆலையில் அரிசி, அரிசி மாவு, மிளகாய்  தூள்  என்பன பெண்கள் குழுக்களால்  பொதிகள் செய்யப்படும்.  
8. பெண்களுக்கான  நிரந்தர வருமானம்  கிடைக்கும்.

திருக்கோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம்

‘தமிழ் கட்சிகளின் புரிந்தணர்வை நோக்கிய நகர்வை வரவேற்கின்றோம்!!!’ அறிக்கை – ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு (லண்டன்)

Paul_and_Sangareeஆவணி 02 புரிந்தணர்வுக் குழு (லண்டன்) இலங்கையில் தமிழ் கட்சிகளிடையே ஏற்பட்டு வருகின்ற உடனபாட்டை வரவேற்று செய்திக் குறிப்பை வெளியிட்டு உள்ளது.

‘‘தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை வரவேற்கின்றோம். இந்த முன்னெடுப்பு தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் வகையில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுடைய பொதுப் பிரச்சினையில் இறுக்கமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பது புலம்பெயர்ந்த வாழ்கின்ற எமது எதிர்பார்ப்பு.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தவறிவிட்டது. மாறாக அவலங்களும் அழிவுகளுமே மிஞ்சியுள்ளன. இப்போது தமிழ் மக்கள் மிகவும் கீழான நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் சிதறுண்டு இருப்பது தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை தொடர்ந்தும் இழப்பதற்கே வழிகோலும். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழ் கட்சிகளிடையே ஒரு புரிந்தணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது உணர்வுபூர்வமாக ஏற்பட்டுள்ளதாகவே நாம் நம்புகின்றோம்.

கட்சிகளிடையே உள்ள அரசியல் வேற்றுமைகள் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் தங்கள் தேர்தல் முரண்பாடுகள் வேற்றுமைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் இழக்கப்படுவதைத் தடுக்கவும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் குறைந்தபட்ச புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு தமிழ் கட்சிகள் வரவேண்டும்’’ என்று அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் மக்களிடையே புரிந்துணர்வை எட்டுவதற்கு, ஆவணி 02 புரிந்தணர்வுக் குழு வினால் உருவாக்கப்பட்ட ‘குறைந்தபட்ச புரிந்தணர்விற்கான முன்மொழிவுகள்’ ஈபிடிபி தலைவர் தேவானந்தா, தவிகூ தலைவர் வி ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோருக்கு இலங்கை சென்றிருந்த நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசனால் நேரடியாக கையளிக்கப்பட்டது.

ஆவணி 02 புரிந்துணர்வுக் குழுவின் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட கட்சித் தலைவர்கள் தாம் பொதுவேலைத திட்டத்தில் உறுதியாக இருப்பதாக கவுன்சிலர் போல் சத்தியநேசனிடம் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் முயற்சியால் உருவாக்கப்பட்டு உள்ள தமிழரங்கத்திற்கு மூத்தகட்சித் தலைவரான வி ஆனந்தசங்கரி அவர்களே தலைமை தாங்கலாம் என்றும் தலைமை விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னிடம் தெரிவித்ததாக கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார். த சிர்த்தார்த்தன், வி ஆனந்தசங்கரி ஆகியோரும் தமிழரங்கம் தொடர்பாக நம்பிக்கை வெளியிட்டதாகவும் கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார்.

கனடாவில் வெயிடப்படும் ஐ. தி. சம்பந்தனின் “கறுப்பு யூலை – 83” நூல் வெளியீட்டு விழா

itsampanthan-book.jpgஉலக நாடுகளையே உலுக்கிய ஸ்ரீலங்கா அரசு அரங்கேற்றிய தமிழர் படுகொலைகள் பற்றிய தரவுகள் அடங்கிய “கறுப்பு யூலை – 83” நூல் வெளியீட்டு விழா ஸ்காபரோவில் இடம்பெற இருக்கிறது.

அப்பாவித் தமிழர்கள் உயிரோடு பெட்றோல் ஊற்றித் தீக்கிரையாக்கப்பட்டதும் கத்தி, வாள், கோடரி போன்றவற்றால் வெட்டிக் கொலை செய்ப்பட்டதும் தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டதும் ஆகிய தரவுகளுடன் “சுடரொளி” ஆசிரியர் ஐ. தி. சம்பந்தன் அவர்களால் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோகமான தரவுகளை இந்நூல் பதிவுசெய்துள்ளது.

பேரினவாத அரசின் பக்க பலத்துடன் பெரும்பான்மைச் சிங்கள இனம் தமிழர்கள்மீது காலத்திற்கு காலம் நிகழ்த்திவரும் இனப் படுகொலைகளை அம்பலப் படுத்தும் வரலாற்றுப் பதிவாக வெளிவந்திருக்கும் “கறுப்பு யூலை – 83” நூலின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் மேற்கொண்டுள்ளது.

500 பக்கங்கள் கொண்ட இந்நூல் ஆங்கிலம் – தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளது.

தேசியத்தை நேசிக்கும் உணர்வாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

இடம்: 733 Birchmount Road, Scarborough (Birchmount/Eglinton)

காலம் – ஒக்தோபர் 17 (ஞாயிறறுக்கிழமை) 2010

நேரம் – மாலை 6.00 மணி

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

Thinamurasu_01Oct10யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் 06ல்  நடைபெறுகிறது. நான்கு அமர்வுகளில் நடைபெறும் இந்த விழாவின் மூலம் 1075 பேர் பட்டம் பெறுகிறார்கள். தமிழ் பேசும் சமூகத்தின் முக்கியமான கல்வி நிறுவனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் வாழ்வில் முக்கியமான பங்கை வகிக்கிறது.

இன்று தமிழ் மக்கள் வாழ்வுக்காக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சுய அடையாளங்களுக்காகவும் உரிமைக்காகவும் வாழ் நிலத்திற்காகவும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று எங்களிடம் இருக்கும் கருவியாகவும் கருத்தாகவும் இறுதிச் சொத்தாகவும் கல்விதான் இருக்கிறது. இந்தப் பட்டத்தினைப் பெற்றுச் செல்லும் நாம் நமது சமூகத்திற்காய் உழைக்க வேண்டிய பெருங்கடமையில் இருக்கிறோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடத்திய பட்டமளிப்பு விழாவில் மூலம் மூவாயிரம் பேர் பட்டம் பெற்றிருந்தார்கள். உலகத்தில் வெறு எங்கேனும் அப்படி ஒரு பட்டமளிப்பு விழா இடம்பெற்றிருக்காது என்றே நினைக்கிறேன். 2005ஆம் ஆண்டின் பிறகு ஏற்பட்ட யுத்தம் காரணமாக வருடா வருடம் நடைபெற வேண்டிய பட்டமளிப்பு விழா நான்கு வருடங்களாக நடைபெறாமலிருந்தது. நான்கு ஆண்டுகளுக்குரிய மாணவர்களும் மூன்று நாட்களில் நடைபெற்ற 15 அமர்வுகளில் 3328 பேர் பட்டங்களைப் பெற்றார்கள்.

இந்தப் பல்கலைக்கழகம் யுத்தத்தின் விளைவுகளுக்கு அதிகம் முகம் கொடுத்து வந்திருக்கிறது. தமிழ் தேசிய இனத்தின் மீதான ஓடுக்கு முறைக்கு எதிரான ஆழமான கருத்தியலை தெளிவாக அறிவுரீதியாக உருவாக்கியதில் யாழ் பல்கலைக்கழக சூழல் பங்காற்றியிருக்கிறது. ஈழப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் விரிந்த உரையாடலை முன்னெடுத்த களமாக இந்த வளாகம் இருந்திருக்கிறது. இன்று பட்டம் பெறும் நிலையில் இந்த மாணவர்கள் கடந்த காலத்தை எப்படி கடந்து வந்தார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றைப் பொறுத்த வரையில் 2006 ன் பின்னர் ஒரு இடர்மிக்க காலத்தை கடந்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது. வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பொழுது யுத்தம் எமது இனத்தை வதைத்துக் கொண்டிருந்த பொழுது அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் எதையும் செய்ய முடியாத கையறு நிலைச் சூழலுக்குள் பல்கலைக்கழக சமூகம் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

தினமும் நிமிடத்திற்கு நிமிடம் மரணத் தொகை பற்றிய செய்திகளுக்குள் தங்கள் உறவுகளை நினைத்து இந்த வளாகத்திலும் விடுதியிலும் மாணவர்கள் துடித்தபடி இருந்திருக்கிறார்கள். கடுமையான உயிர் அச்சுறுத்தல் நெருக்கடிகளுக்குள்ளும் அப்பொழுது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தன் பணியை செய்து கொண்டிருந்தது. விரிவுரைகள் புறக்கணிப்பட்டும் தமிழ் மக்களின் நிலமை எடுத்துச் சொல்லப்பட்டது. ஈழத் தமிழ் மக்கள் மீதான கொடும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தி சமாதான வழிகளுக்கு சென்று வன்னி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பல்கலைக்கழக சமூகத்தால் தொடர்ந்தும் குரல் கொடுக்கப்பட்ட பொழுதும் யுத்தம் நீடிக்கப்பட்டு மக்கள் அழிவு நீடிக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலைகளால் கல்வி கற்கும் மாணவர்களது நிலைமை பாதிப்பிற்கு உள்ளான பொழுது இந்த மாணவர்களை உளவியல் ரிதியாக அணுகி கல்வி கற்பித்து வந்த விரிவுரையாளர்களின் பணி முக்கியமானது. பல விரிவுரையாளர்கள் மாணவர்களது எதிர்காலத்திற்காய் அந்நாட்களில் அக்கறையுடன் கவனித்து செப்பனிட்டிருக்கிறார்கள். யுத்தக் கனவு கண்டு மாணவர்கள் துடிக்கும் விடுதிகளும் உறவுகளின் நினைவுகளால் பேசித் துடிக்கும் வளாகமும் அந்நாட்களில் இந்தப் பல்கலைக்கழகம் எதிர்கொண்ட துயர்கொண்ட கதைகள் மிகத்துயரமானவை. எங்களைப் பற்றி நாங்களே பேசும் நிலை மறுக்கப்பட்டு அபாய வலை கொண்ட சூழலாக பல்கலைக்கழகம் காண்காணிக்கப்பட்டது.

Thinamurasu_01Oct10பெற்றோர்களது தொடர்பற்று துடித்த பல்கலைக்கழக மாணவர்களின் மனிதாபிமானத் தேவைகளை கவனித்து அவற்றை பூர்த்தி செய்வதில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் நிர்வாகமும் அன்று முழுமையாக இயங்க வேண்டியிருந்தது. பெற்றோர்களிடமிருந்து நிதி வந்தால்தான் படிக்கலாம் என்ற வன்னி மாணவர்களின் நிலை 2009 அக்டோபர் மாதத்திலேயே முற்றாக பாதிக்கப்பட்டது. மாணவர்களுக்கான முழு நேர உணவு, நிதி உதவிகளை பல்கலைக்கழகம் மேற்கொள்ளுவதற்கு பலரது பங்களிப்பு கிடைத்திருந்தது.

துயர்க்கால மாணவர்களின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்வதில் முழு அக்கறை கொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன் அவர்களின் பணி காலத்தால் மேன்மையானது. அகில இலங்கை இந்துமாமன்றம், போஸ்டோ, மனித உரிமைகள் இல்லம், கரிதாஸ் நிறுவனம் போன்றவை இந்தப் பணியில் பங்கெடுத்தன. சில புலம்பெயர்ந்த பழைய மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடாக தமது உதவிகளை செய்து வந்தார்கள்.

பெற்றோர்கள். உறவுகளை இழந்து பல மாணவர்கள் துடித்தார்கள். யுத்தம் முடியும் தருணத்தில் நிறைய மாணவர்களின் பெற்றோர்கள், உறவுகள் கொல்லப்பட்டதாக அறிய நேர்ந்தது. சிலர் குடும்பத்துடன்கூட உறவுகளை இழந்தார்கள். இதே காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். பல்வேறு விசாரணைகளும் தேடுதல்களும் நுழைவுகளும் நடந்தன. பல்கலைக்கழகத்தில் எல்லா வகையிலும் மேலும் மேலும் கல்விக்கு மாறான சூழலே நிர்ப்பந்திக்கப்பட்டது. கல்வியை தொடர முடியாத இடர்காலத்திலும் எப்படி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து அதன் மூலம் மாணவர்களது மனநிலைகளை பாதுகாக்க வேண்டியிருந்தது.

யுத்தம் பேரழிவுடன் முடிந்த பொழுது ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நலன்புரி நிலையம் எனப்படுகின்ற தடுப்பு முகாங்களில் இருந்தார்கள். முன்னாள் போராளிகளாகவும் தடுக்கப்பட்டார்கள். பல்கலைக்கழகத்தின் அடுத்த பிரச்சினையாக அதுவே உருவெடுத்தது. நாளும் பொழுதுமாக தடுப்பு முகாங்களில் உள்ள மாணவர்களது கடிதங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து கொண்டிருந்தன. தங்களை மீட்க வேண்டும். தாங்கள் படிக்க வேண்டும். அவர்கள் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தார்கள். யுத்தம் காரணமாக சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக கல்வியை தொடராதவர்கள் கூட முகாங்களில் இருந்தார்கள்.

முகாமில் உள்ள மாணவர்கள் பல்வேறு கட்டங்களில் பலதரப்புக்களின் ஊடாக கோரியதற்கிணங்க கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டார்கள். முதலில் ஐம்பது மாணவர்கள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய மாணவர்களும் விடுவிக்கப்பட்டார்கள். இந்த விடயத்திலும் துணைவேந்தரது அயராத முயற்சியும் உழைப்பும் இருந்தது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அதற்காக சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. அப்படி மீட்கப்பட்டு வந்த பல மாணவர்கள் நாளைய பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுகிறார்கள். யுத்தத்தின் காயங்களும் அங்க இழப்புக்களுக்கும் உள்ளான மாணவர்கள் பலர் நாளை பட்டம் பெறுகிறார்கள். இதைப்போலவே முன்னாள் போராளி மாணவர்களும் விடுவிக்கப்பட்டு இன்று பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடருகிறார்கள். அவர்களில் சிலரும் பட்டம் பெறுகிறார்கள்.

யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களும் இடர்களும் பல்கலைக்கழகத்தை இப்படியே கடுமையாக பாதித்தது. இன்று பட்டம் பெறுகிற மாணவர்கள் இத்தகைய நிலையிலேயே தங்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். மாணவர்களது கல்வி, அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான தேவைகள், உளவியல் ரீதியாக சூழலுக்கு ஏற்ப அணுகுவது என்பவற்றின் ஊடாக நமது சமூகத்திற்கு வலுவான சந்ததியை உருவாக்கும் முக்கியமான பணியாகவே இந்த பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள்.

Sigaram_Mag_Launch_02Oct10கலை ரீதியாகவும் மனிதாபிமான ரீதியுயாவும் கடந்த காலத்தில் பணி செய்த சிலர் இந்த பட்டமளிப்பு விழாவில் கௌரவ கலாநிதிப் பட்டங்களை பெறுகிறார்கள். சத்திரசிகிச்சை நிபுணராகவும் யாழ் பல்கலைக்கழக மருத்துவத் துறையின் முக்கியமானவரும் நெருக்கடி மிக்க காலத்தில் தாய்நிலத்தில் பணியாற்றியவருமான வைத்தியக்கலாநிதி கணேசரத்தினம், பாரம்பரிய கலைகளிற்கு மதிப்பளிக்கும் முகமாக நாதஸ்வர வித்துவான் பஞ்சாபிகேசன், திருமறைக் கலாமன்ற இயக்குனரும் நாடக்கலை என்ற பண்பாட்டு தொடர்பாலுக்கு பங்காற்றியவரும் கலைமுகம் இதழின் ஆசிரியருமான வணக்கத்திற்குரிய மரிய சேவியர் அடிகளாரும் பட்டம் பெறுகிறார்.

அத்துடன் விழிப்புலனற்ற பிள்ளைகளை கல்வி கற்பித்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வாழ்வில் ஒளியேற்றிய பணியை ஆற்றியவரும் ‘வாழ்வகம்’ என்ற விழிப்புலனற்ற பிள்ளைகளுக்கான இல்லத்தை உருவாக்கியவருமான அமரர் செல்வி சின்னத்தம்பி தேகாந்திர நிலையில் (அமரத்துவமடைந்த நிலையில்) பட்டமளித்து கௌரவிக்கப்படுகிறார். இம்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவர்களும் முதன் முதலில் பட்டம் பெறுகிறார்கள்.

இன்று அவலம் மிகுந்து போயிருக்கிற எங்கள் சமூகத்திற்காய் பட்டம் பெறும் மாணவர்களாகிய நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பரந்த நிலமெங்குமிருந்து வந்த நாம் ஓவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சமூக அக்கறையுடன் வினைத்திறனாக செயற்பட வேண்டும்.

சமூகப் பொறுப்புள்ள மனிதர்களாக வாழ வேண்டும். பல்வேறு நெருக்கடிகள் மிகுந்த காலத்தை கடந்து கல்வி கற்று பட்டம் பெறும் நாங்கள் சிதைந்து தவித்துக் கொண்டிருக்கிற நமது சமூகத்திற்காய் நமது தேசத்திற்காய் உழைக்க வேண்டிய இன்றைய காலத்தின் பொறுப்புடையவர்கள். இருண்டிருக்கிற நமது காலத்திற்கு ஒளி ஏற்றுவோம்.

பாலேந்திரன் பிரதீபன்.B.A (Hons) Tamil SPL
முன்னாள் செயலாளர்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

Prof_Hooleகடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் இருந்து இலங்கைத் தமிழ் மக்கள் சுமுகமான வாழ்நிலைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் கல்விச் சமூகத்தின் கல்விநிலையை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய அவசர தேவை ஏற்பட்டு உள்ளது. ஆனால் அச்சமூகத்தின் அதி உயர்ந்த கல்வி ஸ்தாபனமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மிக மோசமான சீரழிவை நோக்கிச் சென்று கொண்டு உள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்நிலையை மாற்றியமைக்கக் கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது. தமிழ் கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், விரைவில் இடம்பெறவுள்ள உபவேந்தருக்கான தேர்தலில் பல்கலைக்கழகத்தை இலங்கையின் தரமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்றக் கூடிய தகுதியும் ஆளுமையும் உடைய பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த நியமனத்தில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து செயற்பட வேண்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கூடிய சமூகப் பொறுப்பு இருப்பதால் அவரை நோக்கி இக் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கவுன்சில் உறுப்பினர்களும் இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இம்மடலின் இறுதியில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பில் பெயர்களைப் பதிவு செய்து இம்முயற்சிக்கு உங்கள் ஆதரவை வழங்கவும். இம்முயற்சிக்கு உங்கள் நண்பர்கள் உறகளின் ஆதரவையும் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
._._._._._.

மதிப்பிற்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு,

பல்கலைக்கழகங்களே தெளிவான பார்வையையும் தலைமைத்துவத்தையும் சமூகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறிப்பாக வடக்கு – கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்கள் தலைமைத்துவம் இல்லாததால் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன.

தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிய உபவேந்தருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை புதிய திசைவழி முன்னேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என நாங்கள் நினைக்கின்றோம். மேலும் தமிழ் கல்விச் சமூகத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் வழங்கவும் இது வாய்ப்பாகி உள்ளது.

இதன் கீழ் கையெழுத்திட்ட எங்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களினது நல்வாழ்விலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மிகுந்த அக்கறையுண்டு. பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தேர்வில் போட்டியிட உள்ளார். நீங்கள் அவரை அப்பதவிக்கு கொண்டுவருவதற்கு வேண்டியனவற்றை செய்ய வேண்டும் என நாங்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக வரவேண்டும் என்று கோருவதற்கான காரணங்கள் வருமாறு:

1. லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த இலங்கையில் கூடிய தேர்ச்சியுடைய கல்வியியலாளர். சர்வதேச பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகள் கற்பித்த அனுபவம் உடையவர். இவரினால் உபவேந்தர் பதவி மதிப்படையும்.

2. University Grand Commissionஇல் 15 பல்கலைக்கழகங்களை நிர்வகித்தமை அவருக்கு இந்த பல்கலைக்கழகங்கள் இயக்கப்படுகின்ற முறை அதனை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் சட்டங்கள் என்பனவற்றில் மிகுந்த அனுபவத்தை கொடுத்துள்ளது. அதனால் இவரினால் உயர்ந்த அளவு தரத்தில் நிர்வாகத்தை திறம்படச் செயற்படுத்த முடியும்.

3. இவர் இலங்கையின் தென்பகுதியிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டவராதலால், பல்கலைக்கழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத்தர முடியும்.

4. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியல் பீடத்தை அமைக்க உள்ள நிலையில் பொறியிலாளரான இவரின் தனிப்பட்ட தொடர்புகள் பொறியியல்துறையை அமைப்பதற்கு மிக அவசியமானது. மேலும் இவர் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபம்மா ராவோ உடன் பணியாற்றியவர் என்பதால் இந்தியவில் இருந்து நிதி உதவிகளையும் இவரால் பெற்றுக்கொள்ள முடியும்.

5. அமெரிக்காவில் தனக்கு இருந்த பதவியைத் துறந்து யாழ்ப்பாணம் வந்ததன் மூலம் வடக்கு – கிழக்கின் அபிவிருத்தியில் தனது பொறுப்புணர்வை வெறும் வார்த்தைகளில் அல்லாமல் செயலில் காட்டி உள்ளார்.

மேலுள்ள ஐந்து விடயங்களிலும் போராசிரியர் ரட்னஜீவன் ஹுல் க்கு சமனான தகுதியுடைய ஒருவரை காண்பது கடினமாகவே உள்ளது. இவர் முன்னர் 2006ல் உபவேந்தராக நியமிக்கப்பட்டவர். ஆனால் சில அரசியற் சக்திகளால் தனது கடமையைச் செய்யவிடாது தடுக்கப்பட்டார். அப்போது முடியாமற் போன பல்கலைக்கழகத்தை முன்னேற்றும் முயற்சிக்கு இப்போது சந்தர்ப்பம் வழங்கப்படுவதே நியாயமானது.

நீங்கள் வடக்கு – கிழக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று இதயபூர்வமாக விரும்பும் ஒருவர் என்பதாலும் அமைச்சராக இந்த விடயத்தில் உங்களுடைய வார்த்தைக்கு ஒரு இடம் இருப்பதாலும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் அவர்களுக்கு வெளிப்படையான உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் யை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆதரிப்பவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவிடுவதற்கான இணைப்பு:

http://digitechuk2.co.uk/petition/ProfessorHoole.htm

திரு ராரின் கொன்ஸ்ரன்ரைன்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்