December

December

வடமராட்சிக் கிழக்கில் வெள்ளத்தால் பாதைகள் துண்டிப்பு. படகு மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம்.

வடமராட்சியையும், வடமராட்சிக் கிழக்கையும் இணைக்கும் மருதங்கேணிப் பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாய்வதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வடமராட்சிக் கிழக்குப் பிரதேச மக்களுக்கு படகு மூலமே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அத்துடன் அண்மையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள வடமராட்சிக்கிழக்கு மக்கள் மழையினால் எற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்துள்ளனர்.

ஆழியவளை, உடுத்துறை. வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, ஆகிய பகுதிகளில் குடியமர்ந்துள்ள பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் தங்கள் குடியிருப்புக்களிலிருந்து வெளியேறி அண்மையிலுள்ள ஆலையங்களிலும், மேட்டுப்பகுதிகளிலுள்ள நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். வடமாராட்சிக் கிழக்குப் பகுதிகளுக்கான போக்குவரத்துக்களும் வெள்ளப்பெருக்கினால் தடைப்பட்டுள்ளதோடு அப்பிரதேசத்தின் பல வீதிகளும் சேதமடைந்துள்ளன.

காணாமல்போனவர்கள் தொடர்பாக கொழும்பில் 10ஆம் திகதி போராட்டம்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 10ஆம் திகதியன்று கொழும்பில் போராட்டம் ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மனிஉரிமைகள் தினத்தையொட்டி காணாமல் போனோரைத் தேடியறியும் குழு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நண்பகல் 12 மணிக்கு இப்போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக பல போராட்டங்களை மேற்கொண்டும் இதுவரை காலமும் அரசாங்கம் எதுவித பதிலும் வழங்காத நிலையில் அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலேயே இப்போராட்டம் நடத்தப்படவுள்ளதாக காணாமல் போனோரைத் தேடியறியும் குழு தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களும், மனிநேய அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். சிங்கள மகாவித்தியாலயத்தை புதிய ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ்.வந்துள்ள சிங்கள மக்கள் கோரிக்கை.

யாழ்.சிங்கள மகாவித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ்.நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தங்கள் பிள்ளைகளை அடுத்து வரும் புதிய ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவர வேண்டியுள்ளதாகவும், அதற்கு வசதி செய்யும் வகையில் யாழ்.சிங்கள மகாவித்தியாலயத்தை புதிய ஆண்டில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தைக் கோரியுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் இதுவரை 186 சிங்களக் குடும்பங்கள் கடியேறியுள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக தாங்கள் குடியேறியுள்ள பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதாகவும், இது குறித்து தங்களுக்கு உதவிகள் வழங்குமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தங்களுக்கு மேலிட உத்தரவு கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாவற்குழியில் குடியமர்ந்துள்ள சிங்கள மக்கள் தங்கள் குடியிருப்புக்களுக்கு முன்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அகியோரை வாழ்த்தும் பதாதைகளையும் தொங்கவிட்டுள்ளனர்.

நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறி குடியமர்ந்ததும் இப்பகுதிகளில் அதேபோல் குடியமர்ந்துள்ள தமிழ் குடும்பங்களில் சுமார் 330 குடும்பங்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியேறியுள்ளன. வெள்ளம் தணிந்த பின்னர் மீண்டும் அங்கு குடியமரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளியில் நல்லிணக்க ஆணைக்குழு. 146 சாட்சியங்கள் பதிவு.

திருகோணமலை குச்சவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றுள்ளது. குச்சவெளி பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற இவ்வமர்வில் 146 பேர் சாட்சியமளித்துள்ளனர். இதில் 53 பேர் நேரடியாகவும், ஏனையோர் எழுத்து மூலமாகவும் தங்கள் சாட்சியங்களை அளித்துள்ளனர். முற்பகல் 9.30 மணி தொடக்கம், பிற்பகல் 2மணிவரை சாட்சியங்கள் இடம்பெற்றன.

இச்சாட்சியங்களில் காணாமல் போனவர்கள் குறித்தும், மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அதிகளவில் முறைப்பாடுகள் தெரிவிக்கபட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்து வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறுகின்றது.

யாழ். மாநகரசபை உறுப்பினரும், கிளிநொச்சி. யாழ்.மவாட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அலுவலகங்களின் தலைவருமான மௌலவி சுபியான் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றிற்கு தீர்வு காண்பது குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளததாக மௌலவி சுபியான் தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபருடனான சந்திப்பிற்கு முன்னதாக கிளிநொச்சி பள்ளிவாசலில் வைத்து கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறியவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் திருநகர். கிளிநொச்சி நகர்ப்பகுதி, 55ஆம் கட்டை, நாச்சிக்குடா, பள்ளிக்குடா முதலான பகுதிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைவெள்ளதால் பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரிப்பு.

தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கடும் மழை காரணமாக யாழ். குடாநாட்டில் 3640 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. 750 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தினால் சேதடைந்துள்ளன. யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். கடந்த நான்கு தினங்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடாநாட்டில் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

சங்கானை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வேலணை, கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை, பருத்தித்துறை, நல்லூர், கரவெட்டி, காரைநகர், சாவகச்சேரி ஆகிய பிரதேசச்செயலர் பிரிவுகளிலுள்ள மக்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் வரை கிடைக்கப்பெற்றத் தகவல்களின் அடிப்படையிலேயே இப்புள்ளிவிபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வரை மேலும் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கபட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக நேற்றுவரை 750 வீடுகளும் சேதமுற்றுள்ளன. இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு மூன்று நாட்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 2ஆயிரத்து 520 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை. கரைச்சி, ஆகிய பிரதேசச் செயலர் பிரிவுகளிலேயே கூடுதலான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். முல்லை மாட்டத்தில் ஆயிரத்து 120 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதால் அக்குளத்தின் ஆறு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

வங்கள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கிலும், கிழக்கிலும் தொடர்ந்து மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள 6000 குடும்பங்களும் மீள்குடியமர்த்தப்படவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக அப்பகுதிகளிலுள்ள வெடிபொருட்கள் துரிதமாக அகற்றப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் 6ஆயிரம் குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப் படவுள்ளதாகவும், முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 62ஆயிரம் பேர் இதுவரை மீள்குடியமர்த்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் முல்லை மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசச்செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 6ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரம் பேர் மாத்திரமே இன்னமும் மீள்குடியமர்த்தப் படவுள்ளனர் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக வன்னியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த படையினரால் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரிட்டன் பயணத்தின் போது புலம்பெயர்ந்த தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக லண்டனில் ஜனாதிபதி உரையாற்றவிருந்த நிகழ்வு இரத்தானதைக் கண்டித்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள மக்கள் படையினரின் நெறிப்படுத்தலில் ஆர்பாட்ட நடவடிக்கை ஒன்றை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டனர்.

மக்கள் படையினரால் அழைத்து வரப்பட்டு அவர்களின் கைகளில் ஜனாதிபதிக்கு ஆதரவான சுலோக அட்டைகள் வழங்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குறிப்பட்ட அளவு மக்கள் மட்டுமே கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு.

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடத்தில் மட்டும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் சி.சிவகரன் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையத்தளங்களின் பாவனையும், கைத்தொலைபேசிப் பாவனையும் சிறுவர்களிடத்தில் அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இடம் பெயர்ந்து ஒரே வீட்டில் அதிகம் பேர் வசித்து வருகின்ற நிலமையும் இதற்கு இன்னுமொரு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மட்டத்திலும் சிறுவர் துஸ்பிரயோகம் அதகிரித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடாநாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோத்தை கட்டுப்படுத்துவதற்கு நீண்டகாலத்திட்டம் அவசியம் எனவும், பெரிய அளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

‘ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டது’ : பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல்

Prof_Hooleஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டது என பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல் நேசன் சன்டே ஒப்சேவர் ஆகிய பத்திரிகைகளுக்கு இன்று (டிசம்பர் 5) எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன் சாரம்சம் கீழே தரப்படுகின்றது. (மொழிபெயர்ப்பு அல்ல)

._._._._._.

ஒக்ஸ்போர்ட் யூனியன்கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டது. ஒக்ஸ்போர்ட் யூனியனில் தனது உரையை வழங்குவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதை சரியான முறையில் சிந்திப்பவர்கள் எவரும் கண்டிப்பார்கள்.

பல்கலைக்கழகங்கள் என்பது அனைத்து வகையான அடக்குமுறைகளையும் மீறல்களையும் கடந்த உரிமைகளுக்கான இடம். அங்கு அறிவை வளர்ப்பதற்கான பல்வேறு கருத்துக்களும் கலந்துரையாடப்படும்.

சுயதணிக்கை செய்வது குறிப்பாக பயமுறுத்தலின் காரணமாக கருத்துச் சுதந்திரத்துக்கான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான தமிழ் சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது.

எனக்கு தெரிந்தவரை ஐரோப்பா முழுவதிலும் இருந்து பஸ்களில் அரசியல் செயற்பாட்டாளர்கள் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் உண்மையான வழியில் ஜனநாயகத்தை பின்பற்றுபவர்களாக இருந்தால் பிரித்தானிய பொது மக்களையும் ஈடுபடுத்தி இருப்பார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.

ஜனாதிபதியை இந்நிகழ்வுக்கு வரவழைத்த ஒக்ஸ்போர்ட் யூனியன் அவர் உரையாற்றுவதை அனுமதிப்பதற்கான கடமைப்பாட்டைக் கொண்டிருந்தது. இதனை ரத்து செய்ததன் மூலம் ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டதுடன் தமிழ் சிங்களத் தரப்பில் இருக்கும் தீவிரவாத சக்திகளை பலப்படுத்தி உள்ளது.

அரசாங்கமும் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை தாமதிப்பதால் பிரித்தானியாவில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் மூலம் பெற்ற நன்மை என்ன? எதிரியை  அவமானப்படுத்தி இருக்கலாம். ஆனால் இங்கேயோ அங்கேயோ நீண்ட காலத்திற்கு அல்ல. ஆனால் அவர்கள் ஜனாதிபதி தன்னுடைய கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தடுத்து இருக்கிறார்கள். அதற்கும் மேல் ஜனாதிபதி பற்றி கணதியான பிரச்சினைகளை உடையவர்கள் ஜனாதிபதியுடன் உரையாடலை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இவர்கள் ஒக்ஸ்போர்ட் யூனியனின் பலத்தையும் அதன் மதிப்பையும் தாழ்த்தி உள்ளனர்.

ஒரு பிரிவினர் தங்களுக்கு விரும்பமில்லாதவர்கள் மீது தணிக்கை செய்வதற்கான முத்திரைகளை பதிக்க முற்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு எதிராகவும் இதே முத்திரைகள் பயன்படுத்தப்டும் என்பதை உணருவதில்லை.

ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையை தடுத்த அதே சக்திகளே எனது கருத்துக்கள் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என்னைப் பணியாற்ற விடாமல் தடுத்தனர் என்பதை இங்கு ஞர்பகப்படுத்த விரும்புகிறேன்.

ருகுனு பல்கலைக்கழகத்தில் அதன் பொறியியல் பீடத்தின் முதல் பீடாதிபதி ஒரு சிங்களவராக இருக்க வேண்டும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதே போல் யாழ் பல்கலைக்ழகத்தின் உபவேந்தராக ஒரு இந்து வரவேண்டும் என அரசுடன் தொடர்புடைய ஏசியன் ரிபியூன் இணையம் ஆசிரயர் பகுதியில் தெரிவித்து உள்ளது.

பல்கலைக்கழகங்கள் – ஒக்ஸ்போர்ட் யுனியனும் கருத்துக்களையே மதிப்பீடு செய்ய வேண்டுமே அன்றி நபர்களை அல்ல என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

No_Future_Without_Forgivenessபேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் நவம்பர் 12, 2010 கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியம்:

”ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால் தென்னாபிரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற வேண்டும்” பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன்சாட்சியம். : தொகுப்பு த ஜெயபாலன்

Oxford Union ‘failed to stand up for free speech’ : By S Ratnajeevan H Hoole

I trust that all right-thinking people will condemn the security threats that led to the cancellation of President Mahinda Rajapaksa’s invited speech at the Oxford Union. Universities are sacred precincts where all sorts of ideas are discussed and dissected to permit the expansion of knowledge. As such censorship, especially under threat, is anathema and counterproductive to ideals of free thought.

The threats against the President were organised by an assortment of Tamil and Sinhalese political activists opposed to President Rajapaksa.

I am aware that activists from all over Europe were bussed to converge in London, making one doubt if it was a true exercise in democratic protest involving the British public.

The Oxford Union, after inviting the President had an obligation to allow the event to proceed.
Now through the cancellation, they have failed to stand up for free speech and energized extremist forces, both Sinhalese and Tamil.

The government too must note that by delaying a solution, liberal Tamils in the UK, considerable in numbers, were made to sit passively by during this sad episode and have been weakened.

What have these protestors really achieved? They might have humiliated their opponent but that is neither here nor there in the long term. But more substantially, they have prevented President Rajapaksa from expressing his own views. And, most saddening, they have prevented others who might have had serious issues with him from engaging in a dialog with him at the lecture.

They have also vitiated the strength and prestige of the Oxford forum in that only speakers who are “acceptable” may now speak, thereby giving currency to the idea that there are those who can judge who is acceptable and who is not. Never in a university!

There are many lessons for us in Sri Lanka.

People of all hues here have tended to use labels to impose censorship against those whom they do not like, not realizing that the same censorship can be used against them one day.
I am reminded of how I was prevented from working at University of Jaffna by the same forces that obstructed the Oxford Union speech simply because they did not like how I thought.

At Ruhuna it was once said that the first Dean of Engineering had to be a Sinhalese. The Asian Tribune, with links to the government, has editorialised that at Jaffna the vice-chancellor has to be a Hindu.

Universities, not least the Oxford Union, must assert that we judge only ideas and not personages.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்