‘ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டது’ : பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல்

Prof_Hooleஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டது என பேராசிரியர் ரட்ன ஜீவன் ஹூல் நேசன் சன்டே ஒப்சேவர் ஆகிய பத்திரிகைகளுக்கு இன்று (டிசம்பர் 5) எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதன் சாரம்சம் கீழே தரப்படுகின்றது. (மொழிபெயர்ப்பு அல்ல)

._._._._._.

ஒக்ஸ்போர்ட் யூனியன்கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டது. ஒக்ஸ்போர்ட் யூனியனில் தனது உரையை வழங்குவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதை சரியான முறையில் சிந்திப்பவர்கள் எவரும் கண்டிப்பார்கள்.

பல்கலைக்கழகங்கள் என்பது அனைத்து வகையான அடக்குமுறைகளையும் மீறல்களையும் கடந்த உரிமைகளுக்கான இடம். அங்கு அறிவை வளர்ப்பதற்கான பல்வேறு கருத்துக்களும் கலந்துரையாடப்படும்.

சுயதணிக்கை செய்வது குறிப்பாக பயமுறுத்தலின் காரணமாக கருத்துச் சுதந்திரத்துக்கான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான தமிழ் சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது.

எனக்கு தெரிந்தவரை ஐரோப்பா முழுவதிலும் இருந்து பஸ்களில் அரசியல் செயற்பாட்டாளர்கள் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் உண்மையான வழியில் ஜனநாயகத்தை பின்பற்றுபவர்களாக இருந்தால் பிரித்தானிய பொது மக்களையும் ஈடுபடுத்தி இருப்பார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.

ஜனாதிபதியை இந்நிகழ்வுக்கு வரவழைத்த ஒக்ஸ்போர்ட் யூனியன் அவர் உரையாற்றுவதை அனுமதிப்பதற்கான கடமைப்பாட்டைக் கொண்டிருந்தது. இதனை ரத்து செய்ததன் மூலம் ஒக்ஸ்போர்ட் யூனியன் கருத்துச் சுதந்திரத்துக்காக நிற்கத் தவறிவிட்டதுடன் தமிழ் சிங்களத் தரப்பில் இருக்கும் தீவிரவாத சக்திகளை பலப்படுத்தி உள்ளது.

அரசாங்கமும் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை தாமதிப்பதால் பிரித்தானியாவில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் மூலம் பெற்ற நன்மை என்ன? எதிரியை  அவமானப்படுத்தி இருக்கலாம். ஆனால் இங்கேயோ அங்கேயோ நீண்ட காலத்திற்கு அல்ல. ஆனால் அவர்கள் ஜனாதிபதி தன்னுடைய கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தடுத்து இருக்கிறார்கள். அதற்கும் மேல் ஜனாதிபதி பற்றி கணதியான பிரச்சினைகளை உடையவர்கள் ஜனாதிபதியுடன் உரையாடலை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இவர்கள் ஒக்ஸ்போர்ட் யூனியனின் பலத்தையும் அதன் மதிப்பையும் தாழ்த்தி உள்ளனர்.

ஒரு பிரிவினர் தங்களுக்கு விரும்பமில்லாதவர்கள் மீது தணிக்கை செய்வதற்கான முத்திரைகளை பதிக்க முற்படுகின்றனர். அவர்கள் தங்களுக்கு எதிராகவும் இதே முத்திரைகள் பயன்படுத்தப்டும் என்பதை உணருவதில்லை.

ஜனாதிபதியின் ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையை தடுத்த அதே சக்திகளே எனது கருத்துக்கள் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் என்னைப் பணியாற்ற விடாமல் தடுத்தனர் என்பதை இங்கு ஞர்பகப்படுத்த விரும்புகிறேன்.

ருகுனு பல்கலைக்கழகத்தில் அதன் பொறியியல் பீடத்தின் முதல் பீடாதிபதி ஒரு சிங்களவராக இருக்க வேண்டும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதே போல் யாழ் பல்கலைக்ழகத்தின் உபவேந்தராக ஒரு இந்து வரவேண்டும் என அரசுடன் தொடர்புடைய ஏசியன் ரிபியூன் இணையம் ஆசிரயர் பகுதியில் தெரிவித்து உள்ளது.

பல்கலைக்கழகங்கள் – ஒக்ஸ்போர்ட் யுனியனும் கருத்துக்களையே மதிப்பீடு செய்ய வேண்டுமே அன்றி நபர்களை அல்ல என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

No_Future_Without_Forgivenessபேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் நவம்பர் 12, 2010 கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் அளித்த சாட்சியம்:

”ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டுமானால் தென்னாபிரிக்காவின் உதாரணத்தை பின்பற்ற வேண்டும்” பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன்சாட்சியம். : தொகுப்பு த ஜெயபாலன்

Oxford Union ‘failed to stand up for free speech’ : By S Ratnajeevan H Hoole

I trust that all right-thinking people will condemn the security threats that led to the cancellation of President Mahinda Rajapaksa’s invited speech at the Oxford Union. Universities are sacred precincts where all sorts of ideas are discussed and dissected to permit the expansion of knowledge. As such censorship, especially under threat, is anathema and counterproductive to ideals of free thought.

The threats against the President were organised by an assortment of Tamil and Sinhalese political activists opposed to President Rajapaksa.

I am aware that activists from all over Europe were bussed to converge in London, making one doubt if it was a true exercise in democratic protest involving the British public.

The Oxford Union, after inviting the President had an obligation to allow the event to proceed.
Now through the cancellation, they have failed to stand up for free speech and energized extremist forces, both Sinhalese and Tamil.

The government too must note that by delaying a solution, liberal Tamils in the UK, considerable in numbers, were made to sit passively by during this sad episode and have been weakened.

What have these protestors really achieved? They might have humiliated their opponent but that is neither here nor there in the long term. But more substantially, they have prevented President Rajapaksa from expressing his own views. And, most saddening, they have prevented others who might have had serious issues with him from engaging in a dialog with him at the lecture.

They have also vitiated the strength and prestige of the Oxford forum in that only speakers who are “acceptable” may now speak, thereby giving currency to the idea that there are those who can judge who is acceptable and who is not. Never in a university!

There are many lessons for us in Sri Lanka.

People of all hues here have tended to use labels to impose censorship against those whom they do not like, not realizing that the same censorship can be used against them one day.
I am reminded of how I was prevented from working at University of Jaffna by the same forces that obstructed the Oxford Union speech simply because they did not like how I thought.

At Ruhuna it was once said that the first Dean of Engineering had to be a Sinhalese. The Asian Tribune, with links to the government, has editorialised that at Jaffna the vice-chancellor has to be a Hindu.

Universities, not least the Oxford Union, must assert that we judge only ideas and not personages.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

யாழ் பல்கலைக்கழகத்தின் இலக்கையும் தொலைநோக்கு பார்வையையும் முன்னெடுத்துச் செல்லும் கல்வியியல் ஆளுமையும் முகாமைத்துவத் திறமையும் உடையவரை உபவேந்தராகத் தெரிவு செய்யுங்கள்! : த ஜெயபாலன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

36 Comments

  • ram
    ram

    பேராசிரியரின் இவ்வறிக்கை, அவரை யாழ் பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தர் பதவிக்காக விடப்பட்டது! இதனை விட இன்னும் கொஞ்சம் கூட புலம்பெயர் தமிழர்களை பேராசிரியர் விமர்ச்சித்திருந்தால், பதவிநிச்சயம்?? இது காணாது என்பதே என் கணக்கு!!

    //அதே போல் யாழ் பல்கலைக்ழகத்தின் உபவேந்தராக ஒரு இந்து வரவேண்டும் என அரசுடன் தொடர்புடைய ஏசியன் ரிபியூன் இணையம் ஆசிரயர் பகுதியில் தெரிவித்து உள்ளது.//

    அப்போ இந்த ஏசியன் ரியுபுனின் கருத்து, சிறிலங்கா அரசின் கருத்தா?? …நல்லவேளை இவரை விமர்சிக்கும் தமிழர்கள், இதனை வெளியிடவில்லை!!

    Reply
  • hari
    hari

    தமிழின அழிப்பு குற்றவாளியும் மோசமான மனிதவுரிமை மீறல் குற்றவாளியும் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றி இருந்தால் கறைபடிந்த வரலாறு ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு ஏற்பட்டிருக்கும். இறுதி நேரத்திலாவது தடுக்கப்பட்டுவிட்டது. இது சாதரணமனிதனுக்கே விளங்கும் போது பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலிற்கு விளங்காத விடயமல்ல.
    யாழ்பல்கலைக்கழகத்திற்கு இடம்பெறும் துணைவேந்தருக்கான தெரிவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் பெயரும் முன்மொழிய பட்டு ஜனாதிபதியின் முடிவிற்கு விடப்பட்டுள்ள நிலையில் ஹூலின் கருத்து ஜனாதிபதிக்கான வக்காலத்தாகவே பார்க்கப்படும். இதுவும் ஒரு வகை லஞ்சம்தான். இவரா யாழ்பல்கலைக்கழகத்திற்கு நேர்மையான நிர்வாகத்தை தரப்போகிறார்!

    Reply
  • person
    person

    I have no qualms about Ratnajeevan’s statement. He is very clear in his position. He only talks about voicing multiple opinions, and does not support Rajapakshe’s position. Yes, even places like Oxford could be comparable to a ruthless terrorist organization like the LTTE.

    About ‘Luncham’…
    In today’s world, even talented and qualified individuals have been forced to bribe higher officials to secure positions which they richly deserve. If those individuals could bring on a positive change in their own domains we don’t need to bother much about bribing. I feel Ratnajeevan should get this position by hook or by crook. What we all urgently need is the development of the university. It is not a question about morality but action towards progress. A talented and qualified person getting the position by bribing is better than an inefficient person getting it by or without bribing.

    Reply
  • BC
    BC

    மோசமான ரத்தகறைபடிந்த புலிகள் எல்லாம் இங்கே குப்பை கொட்ட தொடங்கியுள்ளார்கள். கவனம்! அவதானம்! attention!

    Reply
  • karu
    karu

    ஜனாதிபதி பற்றி கனதியான பிரச்சினைகளை உடையவர்கள் ஜனாதிபதியுடன் உரையாடலை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு உள்ளது தொடர்ந்தும் எதிர்ப்பு அரசியலால் வெற்றிகொள்ள முடியாது பேச்சுக்களுக்கு முகம்கொடுத்து பேசும் அரசியலை வளர்க்காது போனால் ஆபத்துக்களே அதிகம்.–karu jaffna

    Reply
  • Varathan
    Varathan

    Ratnajeevan is talking about the right of free speech and opinion not about the politics. Both Govt and LTTE are responsible for the war crimes. All know SL govt, LTTE and other millitants have long history of human rights violations. LTTE put the life of innocent people in danger in the last ditch of water. Death and sufferings of innocent people were marketed to western world by LTTE to stand their position. People were used as human shield and newly recruited people were used as cannon fodders. Die heart diaspora community who pretending them as human rights activitists accepeted and justified all the crimes commited by the LTTE. LTTE totally denied the right of free speech and claimed the lifes of thousands of Tamil, Sinhala and Muslim in the name of liberation throughout the cause of liberation struggle. People who voiced against them were simply branded as traitors by them and their mouth pieces. Now,people who supported the war crimes of LTTE talking about the morality, human rights and war crimes of govt. People who against the LTTE trying to justify or cover up the violations and war crimes of Govt and SLA. My personal opinion is who ever acted against humanity should be punished. Emotional activities (leisure time activity) of diaspora community may have negative impact on the life of affeacted people in the Notheast. All have the responsibility to restore the normal life in Sri Lanka. Nobody (except some politicians and opportunitists)in Sri Lanka will not accepting hostile environment.

    Reply
  • Raphael
    Raphael

    Professor’s statement is ill-timed and imbalanced. Creates a hunch about his future performance, in the event he is appointed to the VC chair of UofJ. But, my feeling does not disqualify him as the most suitable person for that position.

    Reply
  • danu
    danu

    பாதுகாப்புக் காரணங்களுக்காக ராஜபக்ச பேச்சு இடைநிறுத்தப்பட்டது.
    யாரிடமிருந்து பாதுகாக்க??
    புலி கொடியுடன் ஆவேசமாக நின்றவர்களிடமிருந்து பாதுகாக்க.

    அதாவது பிரித்தானியா இவர்களை சாதாரண பொதுமக்களாக பார்க்கவில்லை. பயங்கரவாதிகளாகவே பார்த்துள்ளது. பிரித்தானியா தன் மண்ணில் ராஜீவ் கொலைபோல் ஒன்று நடைபெற்றுவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்துள்ளது. எதிர்ப்பு போராட்டத்திற்குப் போனவர்கள் எதையும் செய்யக்கூடிய பயங்கரவாதிகளாகவே பார்க்கப்பட்டிருக்கிறார்கள். இதன் விளைவு உடனே தெரியவராது.

    Reply
  • hari
    hari

    “அதாவது பிரித்தானியா இவர்களை சாதாரண பொதுமக்களாக பார்க்கவில்லை.”-danu
    ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஆர்பாட்டம் செய்யும் அனுமதியை லண்டன் பொலிசே உங்களால் பயங்கரவாதிகளாக பார்கப்பட்டவர்களிற்கு வழங்கியதென்ற செய்தியை வசதியாய் மறந்திட்டிங்க. எனி லண்டன் பொலிசும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று சொல்லுங்கோ.
    1980 களில் இந்திய ஈழத்தமிழரின் பெயரில் செய்த அதே அரசியலை பிரித்தானியவும் 2010ல் செய்யவிழைகிறது என்ற உண்மை ஏன் புரிய மறுக்குது.

    Reply
  • ராசன்
    ராசன்

    பேச்சுச்சுதந்திரத்தை பறித்தது ஒக்ஸ்போட் என குற்ரம் சாட்டும் இவர் தனது நாடான ஸ்ரீலங்காவின் அதி உயர் சபையான பாராளுமன்றத்தில் ஒக்ஸ்போட் சிக்கல் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலத் ஜயவர்த்தனாவை பேச விடாமல் (தனது தரப்பு நியாயங்களை) தடுத்த எம்.பி , அமைச்சர்களைப்பற்ரி ஏன் சொல்லவில்லை? இது முந்தநாள் நடந்தது அல்லவா?

    Reply
  • நந்தா
    நந்தா

    ஹூல் என்ற மனிதனின் அறிக்கை “பதவிக்காக” விடப்பட்டதாம். குதிரை கஜேந்திரன் போன்றவர்களைப் பல்கலைக் கழகத்தினுள் வைத்துத் தாலாட்டிய கும்பல்களுக்கும், புலி வால்களுக்கும் ஹூல் என்ற படித்த மனிதன் தொல்லைதான்.

    ஆயினும் ஒக்ஸ்போர்ட்டில் போய்த்தான் இலங்கை அடையாளங்களையும், சாதனைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற நினைப்பை இலங்கை பற்றிச் சிந்திப்பவர்கள் விட்டுவிடப் பழகிக் கொள்ளுதல் வருங்காலத்துக்கு நல்லது.

    Reply
  • ram
    ram

    டனு, ஒரு சாதாரன தமிழனே புலிக்கொடியுடன் லண்டனில் நின்றான்!! அவனுக்கே தன் இனத்தை அழித்தவனை கொல்ல வேண்டும் என்ற உணர்விருக்கிறது!! … என்பதை சொல்ல வருகிறீர்களா?

    Reply
  • நந்தா
    நந்தா

    தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஊர்வலம் போக பிரிடிஷ் பொலிஸ் அனுமதியளித்துள்ளது. ஆகா! இதெ பிரிடிஷார் எப்படி “பயங்கர” வாதிகளுக்கு எதிர் என்று கூற முடியும்?

    இலங்கை அரசை பிரிட்டன் இப்படிக் கூலிப்படைகளை வைத்து மிரட்ட முடியாது என்பதையும், இலங்கை அரசு பிரிட்டனின் கைப்பவையானால் இந்த “தமிழ்” என்னவாகும் என்பதையும் தெரிந்து கொண்டால்நல்லது.

    கூலிகளுக்கும், அடிமைகளுக்கும் எங்கும் அங்கீகாரம் கிடைக்கது என்பதை தெரிந்து கொண்டால் சரிதான்!

    Reply
  • சி.சந்திர மெளலீசன்
    சி.சந்திர மெளலீசன்

    தனது ஆட்சியில் பத்திரிக்கை முதல் பாலகன் வரை கருத்து சுதந்திரம் மறுத்த ராஜபக்சே அரசு பற்றி இந்த அறிஞ்ஞர் எப்பவாது எழுதி உள்ளாரா??-
    சி.சந்திர மெளலீசன்

    Reply
  • Pandiyan
    Pandiyan

    பேராசிரியர் கூல் அவர்களே!
    கருத்திற்காக ஓங்கி குரல் கொடுக்கும் உங்கள் உணர்வு என்னைப் புல்லரிக்க வைத்தது. இப்பாங்குடன் நான் உடன்படுகின்றேன். அதேவேளை மதிப்பிற்குரிய ராஜபக்சேயின் அரவு அல்ஜசீரா தொலைக்காட்சியை இலங்கையில் தடைசெய்த போது அதையும் எதிர்த்து குரல்கொடுத்திருந்தால் (அல்ஜசீரா ஏகாதிபத்தியங்களின் கைக்கூலியல்ல) உங்கள் கருத்து சுதந்திரத்திற்கான உணர்வு மிகுந்த போர்க் குணாம்சத்தை வரறே;றிருப்பேன் . ஆனால் நீங்கள் தேர்வு செய்தல்லவா கருத்திற்காக குரல் கொடுக்கிறீர்கள். புலிகளின் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக நீங்களும் உங்கள் படித்த வெள்ளாள தென்னிந்திய திருச்சபையினரும் குரல் கொடுத்த போது புல்லரித்த என்க்கு தோழர் மகிந்தவின் ராணுவம் ஆடிய கொலைவெறியாட்டம் தொடர்பான ஆதாரங்கள்; படங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அதுபற்றி கம்மென்று மூச்சு விடாமல் இருப்பது நல்லதல்ல பேராசிரியரே!!
    பேராசிரியரே! நீங்கள் ஒரு விஞ்ஞானி. எங்களைப் போல் பாடமாக்கி படித்தவர் அல்ல என நம்பியவன். அதில் இப்போது சந்தேகம் வருகிறது. பிரபாகரனும் அவரது நாற்பது திருடர்களும் அழிந்து போனதில் கவலையில்லை. என்னைப் போல் உணர்வு மிகுதியால் இயக்கத்தில் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் பெண்களையும் இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது உங்களுக்கு கிஞ்சித்தும் கோபம் தரவில்லையா?
    அமெரிக்காவில் சிறு கல்லூரியில் பேராசிரியராக இருந்து கொண்டு என்ன கருத்தைக் கூறியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் யாழ் பல்கலைக்கழத்திற்கு துணைவேந்தராவதற்கு இப்படியெல்லாம் கூறுவது வருந்தத் தக்கது. உங்களுக்கு அதிக வாக்கு கிடையாததற்காக கோபம் அடைந்திருந்த எனக்கு வாக்கு போடதவர்கள் மிக அனுபவசாலிகள் என தோன்றுகிறது. புலிகளின் கொடூரமும் கொடுமைதான். இலங்கை இராணுவத்தின் கொடூரமும் கொடுமைதான். புலிகளின் கொடுமைகளுக்கு எவ்வாறு பிரபாகரன் பதில் சொல்ல வேண்டியது கட்டாயமோ அவ்வாறே இலங்கை இராணுவத்தின் கொடுமைகளுக்கும் தோழர் மகிந்த பொறுப்புச் சொல்ல வேண்டியவர்.
    பேராசானே! தயவு செய்து தெரிந்தெடுத்து கருத்து கூறாதீர்கள். இதை சொன்னதால் நான் ஒரு நாள் இலங்கை வரும்போது இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தால் எனது இந்தக் கருத்திற்காக நீங்கள் போராடுவீர்களோ??

    பாண்டியன் தம்பிராஜா

    Reply
  • Ragu
    Ragu

    Dear Pandiyan, whatever it is,Professor. Hool appears to be much much better than so-called ”double face of shanmugalingam/n”

    Ragu.

    Reply
  • kumaran
    kumaran

    super question panddi anna? well done! Mr.COOL! Cool sir!

    Reply
  • S.Ganesharajah
    S.Ganesharajah

    பாண்டியன் தம்பிராஜா நீங்கள் நிலவரங்களைப் புரியாமல் கதைக்கிறீர்கள். பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டதாம் கருடா சவுக்கியமா பாடலைத்தான் உங்களது வாதத்திற்கு உரிய நிலமையாகச் சொல்லலாம்.
    டி.பி.எஸ். ஜெயராஜ் ம் ஆக்ஸ்போட்டில் மகிந்தவை பேசவிடாததை கடுமையாகக் கண்டித்து எழுதியுள்ளார். அதற்காக ஜெயராஜ் உம் துணைவேந்தருக்கு போட்டியிட்டுள்ளாரா?
    இப்போது இப்படி எழுதுகிறீர் தம்பிராஜா. 2006 இல் புலிகள் ரட்ணஜீவனை பல்கலைக்கழகத்துக்கு வராது தடுத்தபோது நீர் கண்டித்து எழுதினீரா?
    நீர் தெரிந்தெடுத்துத்தானே கருத்துக்கூறுகிறீர்.

    மேலும் ஒன்று தம்பிராஜா. தரவுகளை மிகச்சரியாக தெரிந்துகொண்டு கதைக்கவாருங்கள். பேராசிரியர் ரட்ண ஜீவன் கூலும் ராஜன் கூலும் ஒருவர் அல்லர். இவ்விருவரையும் குழம்பிக்கொண்டுள்ளீர் நீர்.– கணேசராஜா.

    Reply
  • நந்தா
    நந்தா

    புலி அல்லது ஈழம் என்பவர்கள் பேச்சு சுதந்திரம் பற்றிப் பேசுவது படு தமாஷ். புலிப் பயங்கரவாதிகளைப் பூண்டோடு ஒழித்ததை மானம் கெட்டு “தமிழரை” கொன்றது என்று கீழ்த்தரமாக கயிறுதிரிக்கும் தமிழர்கள் “மீடியா” சுதந்திரம் அல்லது பேச்சு சுதந்திரம் என்று கேள்வி எழுப்புவது தமிழகள் முட்டாள்கள் என்ற நினைப்பிலா?

    புலிகள் பிரிட்டனின் கூலிகள் என்பது இப்பொழுது நிரூபணம் ஆகும் உண்மை. தமிழ் மக்களின் உரிமை என்பதை விட பிரிட்டனின் காலைப் பிடித்தால் கிடைக்கும் சலுகைகள் மேலானது என்று எண்ணும் ஒரு கூட்டம் தமிழ் என்று எதற்காக கூறுகிறது?

    கூலின் கிறிஸ்த சபைக்கும் மகாராணிதான் தலைவர் என்பது சில வேளைகளில் புலி வால்களுக்குத் தெரியாமல் இருக்கும்! கூல் துணை வேந்தராக வந்து ஒக்ஸ்போர்டுக்கு வந்து லெக்சர் குடுக்கிற காலம் தொலைவில் இல்லை!

    Reply
  • sen
    sen

    பேராசிரியரும் அவரது ஆதரவாளர்களும் துணை வேந்தர் பதவியினை பெறுவதற்காக எடுத்த முயற்சிகளில் இது சில வேளைகளில் வெற்றி பெறுவதற்கான சந்தர்பத்தினை தரலாம்.
    உலகம் முழுக்க ஜனநாயகதிட்கு, பேச்சு சுதந்திரதிட்கு எதிராக அனைத்து பேராசிரியர்களும் சதி செய்கையில், மௌனம் காக்கையில் இந்த தனித்து ஒலிக்கும் குரலானது உலகினை சர்வாதிகாரத்தில் இருந்து மீட்கும் கர்ச்சனையாக ஒலிக்கின்றது.
    பேராசிரியர் இந்த வழியினை பதவிப்போட்டிக்கான ஆரம்பத்திலேயே மேற்கொண்டிருந்தால் வெற்றி நிட்சயம் ஆக இருந்திருக்கும். ஆனாலும் இன்னும் ஒன்றும் காலம் தாளவில்லை. கணேசலிங்கத்தின் காமலீலைகளை அம்பலப்படுத்துவதால் மகிந்தவின் வேட்டியினை வெள்ளையாகக முடியாது என்பதனை காலம் தர்ழ்ந்து உணர்ந்த்திருந்தாலும் இறுதி வெற்றி பேராசிரியருக்கே

    Reply
  • hari
    hari

    “இலங்கை அரசை பிரிட்டன் இப்படிக் கூலிப்படைகளை வைத்து மிரட்ட முடியாது”-நந்தா
    “ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெற்ற வேளை தூதரகம் உள்ள வீதியின் இரு அந்தங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருந்தன. பெரும்பாலும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றது.” என்று நேரில் பார்த்த ஜெயபாலன் சொல்லிய பின்னும் “கூலிப்படைகளை வைத்து மிரட்ட முடியாது” என்ற வரிகள் லங்காபுவத்தை ஞாபகபடுத்துகின்றது.

    “இலங்கை அரசு பிரிட்டனின் கைப்பவையானால் இந்த “தமிழ்” என்னவாகும் என்பதையும் தெரிந்து கொண்டால்நல்லது.”என்னவாகும்?
    ஈழத்தமிழனுக்கு இன்றுள்ள அவலநிலை தொடரும். ஈழத்தமிழனுக்கு எனியும் இழப்பதற்கு என்னவிருக்கிறது. இலங்கை அரசு பிரிட்டனின் கைப்பவையானால் மகிந்தாவின் பரம்பரை சிங்காசன கனவு என்னாவது. மகிந்தா எப்படிதான் அமெரிக்காவின் பிரித்தானிவின் காலில் விழுந்தாலும் ரணில்தானே அமெரிக்காவின் பிரித்தானிவின் செல்லப்பிள்ளை. இது மகிந்தாவிற்கு நன்றாக தெரியும்.
    ஏறுமுகத்தில் பொருளாதார வளர்சியிலுள்ள சீனா என்ற உற்ற நண்பன். கூப்பிட்ட குரலுக்கு சேவகம் செய்ய இந்தியா இருக்கும் போது இறங்கு முகத்தில் பொருளாதாரமும் என்றும் தன் காலை வாரிவிடக்கூடிய அமெரிக்கா பிரித்தானிய காலில் விழ மகிந்தா முட்டாள் இல்லை.
    “கூலிகளுக்கும் அடிமைகளுக்கும் எங்கும் அங்கீகாரம் கிடைக்கது என்பதை தெரிந்து கொண்டால் சரிதான்!”
    புலிகளால் சொல்லபட்ட வரிகளை ஞாபகபடுத்துகிறீர்களா! கொல்வின் ஆர் டி சில்வாவையும் ரோகண விஜவீரக்களையும் நம்பியவர்கள்தான் முதன்முதலில் பிரித்தானிய கனடானோக்கி அகதியாய் போனவை. இந்தியபடையுடன் கூலிபடையாய் வந்தவைதான் ஓரிசா தொடக்கம் ஓட்டவா வரை எந்த அங்கீகாரமுமின்றி அலைகிறார்கள்.

    Reply
  • london boy
    london boy

    hari on December 5, 2010 6:55 pm
    /1980 களில் இந்திய ஈழத்தமிழரின் பெயரில் செய்த அதே அரசியலை பிரித்தானியவும் 2010ல் செய்யவிழைகிறது என்ற உண்மை ஏன் புரிய மறுக்குது./

    hari நான் இதை ஏற்கனவே சொல்லிப்போட்டேன்

    london boy on December 1, 2010 10:43 pm
    //இங்கே தமிழர்கள் பாவிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மையானது. விளங்காமுடி உங்களின் எதிர்பார்ப்புடன் உடன்படுவேன். எப்போதும் முதலாளித்துவ அரசுகள் இப்படி சிறுபான்மையினரை பகடைக்காய்களாக பாவிப்பவர்கள். நாம் சிறுபான்மையினர் யாருடன் எந்த முகாமுடன் என்றெல்லாம் யோசிக்காமல் பாவிக்கப்படுபவர்களே தான். இலங்கையில் யுஎன்பியும் ஜேவிபியும் கூட எமது தமிழர்களின் பிரச்சினைகளை பாவித்து தாம் பதவிக்கு வரவே முயற்சிக்கிறார்கள் என்பது உண்மை.

    இந்தியாவும் கூட எம்மை ஒருமுறை பாவித்துவிட்டது மேலும் ஒருதடவை எம்மை பாவிக்கவே பார்க்கிறது. கிருஸ்ணா இலங்கை வரும்போது தமிழர் பிரச்சினகள் பற்றி எதுவும் பேசாமல் ஏதோ எல்லாம் பேசிவிட்டு…

    ஆனால் அரசியல் நிலைப்பாடுகள் எதுவும் பாதிக்காத கூட்டம் புலிகள். புலிகளின் ஆதரவாளர்களுக்கு கிடைத்த அதிஸ்டம் இது. உலகில் 3வது படையான இந்தியாவை அடித்து கலைத்தோம் என்று சொன்னமாதிரி தாங்களே மகிந்தாவையும் தடுத்தோம் பிரிட்டன் பயந்துவிட்டது என்று சொல்லி மீண்டும் உண்டியல்கள் தமிழர்கள் வீடு தேடி வரவுள்ளது.//

    Reply
  • நந்தா
    நந்தா

    புலிகள் “கூலிப்படைகள்” என்பதில் சந்தேகமே கிடையாது. அதனால்த்தான் முள்ளிவாய்க்காலில் அமெரிக்க கப்பல் வரும் என்று அண்ணாந்துநின்று கோவணத்துடன் பரலோகம் போயினர்.

    லண்டனில்த்தான் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி இருக்கிறா. அவ புலிகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்திய கொலைகளும், சித்திரவதைகளும் கிட்லர் காலத்தை விட மோசம். அவதான் இந்த லண்டன் புலிக் கூலிகளின் தலைவர் என்பது தெரிந்த விஷயம். அவருக்கும் இலங்கைத் தமிழருக்கும் என்ன சம்பந்தம்?

    அடுத்தது வரலாறு தெரியாத சோணகிரிகள் தமிழ் என்று புலம்பி எதனை சாதித்தார்கள்? அமெரிக்க/பிரிட்ஷ் ஆதரவு யுஎன்பி அரசு காலத்தில்த்தான் 1983 கலவரம் நடந்தேறியது.

    மகிந்தவை வழிக்குக் கொண்டு வர பிரிட்டன் முடியாது என்பது தெட்டத் தெளிவான விஷயம். அப்படி மகிந்த மாறினால் புலிக்கொடி தூக்கியவர்கள் கதி அதோ கதிதான். ரனில் விக்கிரமசிங்க எந்தக் காலத்திலும் பதவிக்கு வரமுடியாது என்பது ஊர்ஜிதமாகிவிட்ட விஷயம்.

    இலங்கைத் தமிழர்களிடம் இருந்த குண்டுமணி பொன்னையும் பறித்தெடுத்து வெள்ளை ஆயுத வியாபாரிகளிடம் கொடுத்து இரும்பு வாங்கியது புலிக் கேடிகளே என்பதும் இன்று அந்த கோடிக் கணக்கான ஆயுதங்கள் அரச படைகளுக்கு இலவசமாக கிடைத்துள்ளது என்பதும் மானம் கெட்ட வரலாறு.

    தமிழனை ஓட்டாண்டியாக்கிய புலிக் கும்பல்கள் இன்று இலங்கயில் காணாமல் போனோர் கூட்டத்தில் உள்ளனர். இராஜபக்ஷவிடம் பிச்சை எடுக்கின்றனர். வெளினாடுகளில் புலி என்று கும்பல் சேர்பவர்களின் பிரச்சனை இலங்கயில் தமிழன் எவனும் சாகாமல் இருக்கிறான் என்பதே ஆகும். தமிழர்களின் சடலங்களில் வெளினாடுகளில் உல்லாச வாழ்வு வாழும் கேடிகள் கொடிதான் காட்ட முடியும். இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு சதமும் இந்தக் கேடிகள் கொடுத்ததாக வரலாறு கிடையாது.

    பிரிட்டன் இனி வருங்காலங்களில் இலங்கை பற்றி வாய் திறந்தால் வாங்கிக் கட்டும். அவர்களின் கூலிப்படைக்கு சமாதி வைத்த ராஜபக்ஷவை அவமானப்படுத்த வேண்டும் என்பதும் அப்படி செய்வதனால் ராஜபக்ஷ தங்கள் காலடியில் விழலாம் என்றும் இன்னமும் எதிர்பார்ப்பு உள்ளது.

    //“கூலிகளுக்கும் அடிமைகளுக்கும் எங்கும் அங்கீகாரம் கிடைக்கது என்பதை தெரிந்து கொண்டால் சரிதான்!” புலிகளால் சொல்லபட்ட வரிகளை ஞாபகபடுத்துகிறீர்களா! //hari
    புலிகளே ஒரு கூலிப்படை. அது சொல்லிச்சா? தமஷாக இருக்குதே!

    இந்தியா தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தாய்னாடு. அதில் பறங்கிகளுக்கு அல்லது அவர்களின் கூலிகளுக்கு என்ன வேலை?

    Reply
  • Danu
    Danu

    டனு ஒரு சாதாரன தமிழனே புலிக்கொடியுடன் லண்டனில் நின்றான்!! அவனுக்கே தன் இனத்தை அழித்தவனை கொல்ல வேண்டும் என்ற உணர்விருக்கிறது!! … என்பதை சொல்ல வருகிறீர்களா?/

    /ராம் சாதாரண தமிழன் கதையை வேறு யாருக்கும் விடுங்’கோ. மாறிமாறி பறந்த துவேச மெயில்கள் எங்கையிருந்து வந்தனவென்றதும் எல்லாரக்கும் தெரியும். தன் இனத்தை அழித்தது பிரபாகரன்தான் என்பது எல்லாருக்கும் தெரியும்.

    Reply
  • மாயா
    மாயா

    கடந்த காலங்களில் சுவிசில் புலிகளுக்குப் பின்னால் பல ஆயிரம் பேர் திரண்டார்கள். ஐநா முற்றத் திடலில் 6 முதல் 10 ஆயிரம் வரை சனம். இப்போது பாருங்கள் நிலமையை? 20 -30 பேர்கள்தான். இந்த இளையோரது திடசங்கற்பத்தை கேளுங்கள். இனி வெளிநாடுகளுக்கு வரும் சிங்களவர்களை அடித்து விரட்ட வேண்டுமாம். நீங்கள் வாழும் நாட்டில் ; நீங்கள் பிச்சைக்காரர்கள். நீங்களே வாழ்வது ஓசி வாழ்கை. அடுத்தவன் வீட்டில் இருந்து கொண்டு ; அவன் வீட்டுக்கு வருவோரை துரத்துவேன் என்பதெல்லாம் டுமச்சாக தெரியவில்லை?

    நீங்கள் பேசுவது சுவிஸ்காரர்களுக்கு விழங்கினால் தொலைந்தது. நல்ல காலம் தமிழில் பேசுகிறீர்கள். இப்படியான முட்டாள்கள்தான் தமிழீழத்தின் நாயகர்களா?-http://www.youtube.com/watch?v=oBVApbPvDqo&feature=player_embedded

    Reply
  • hari
    hari

    “லண்டனில்த்தான் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி இருக்கிறா. அவ புலிகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்திய கொலைகளும் சித்திரவதைகளும் கிட்லர் காலத்தை விட மோசம்”/இதை இங்கே சொல்லி நடக்கபோவது எதுவுமில்லை ஆதாரத்துடன் பிரித்தானிய நீதிமன்றை அணுகவும்.
    “அவருக்கும் இலங்கைத் தமிழருக்கும் என்ன சம்பந்தம்?”/ சோனியாவிற்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம்தான் திருமதி அடேல் பாலசிங்கத்திற்கும் ஈழத்தமிழருக்கும்
    “அமெரிக்க/பிரிட்ஷ் ஆதரவு யுஎன்பி அரசு காலத்தில்த்தான் 1983 கலவரம் நடந்தேறியது.” / அதற்கு முதலே இந்தியா என்னும் சகுனிதேசம் தமிழ் இளைஞர்களிற்கு ஆயுதம் கொடுத்து இலங்கை தீவின் அமைதிக்கு கொள்ளி செருகிவிட்டது.
    “இராஜபக்ஷவிடம் பிச்சை எடுக்கின்றனர்”/ இராஜபக்சாவே தமிழரை சாட்டி உலகமெங்கும் திருவோடு ஏந்துகிறார். இதில் அவர் தமிழருக்கு பிச்சை போடுகிறரா!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //..கடந்த காலங்களில் சுவிசில் புலிகளுக்குப் பின்னால் பல ஆயிரம் பேர் திரண்டார்கள். ஐநா முற்றத் திடலில் 6 முதல் 10 ஆயிரம் வரை சனம்.?….//
    அட, ஒத்துக்கொள்கிறீர்களா? இதைத்தானே கொத்து ரொட்டி/வடைக்கூட்டம் எனச் சொன்னீர்கள். இப்போ புலிகளின் பின்னால் திரண்டார்கள் என்கிறீர்கள்?

    Reply
  • மாயா
    மாயா

    Who is the black sheep?
    United National Party parliamentarian Dr Jayalath Jayawardene has become the scapegoat for the reckless behaviour of the President Mahinda Percy Rajapakse to visit London against the advice of the Sri Lanka High Commission and the intelligence sources. Disrespecting their advice not to risk a trip to London, the foolhardy President embarked on a mission even the Emperor Napoleon would have thought inappropriate……………-
    -http://www.srilankaguardian.org/2010/12/who-is-black-sheep.html

    Reply
  • thurai
    thurai

    //இதைத்தானே கொத்து ரொட்டி/வடைக்கூட்டம் எனச் சொன்னீர்கள். இப்போ புலிகளின் பின்னால் திரண்டார்கள் என்கிறீர்கள்?//சாந்தன்

    எம்.ஜி.ஆர்,சிவாஜி படங்கள் வந்தால் தியேட்டர்கள் நிரம்பி வழியும். போனவ்ர்கள் எல்லாம் சிவாஜியோ அல்லது எம்.ஜி.ஆரின் ரசிகர்களா? நல்லூர் தேரிற்குப் போறவர்களெல்லாம் இந்துக்களா? மடுவிற்குப் போறவ்ர்களெல்லாம் கத்தோலிக்கரா?

    முன்பு யாழ்ப்பாண்த்தில் இருந்து புலிகள் துரத்த வன்னிக்கு நடந்து போனவர்கள், பின்னர் இராணுவம் அழைக்க தங்கள் வீடுகளிற்குத் திரும்பி ஓடிசென்றன்ர். இப்ப சொல்லுங்கோ தமிழர் யார் பக்கமென்று.-துரை

    Reply
  • நந்தா
    நந்தா

    சோனியா இந்தியாவில் இந்திய மக்களுக்கு முன்னால் சென்று இந்தியாவை இருப்பிடம் ஆக்கியவர். இந்த அடேல் தைரியமிருந்தால் இலங்கையில் குடியேறட்டும் பார்க்கலாம்!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….எம்.ஜி.ஆர்,சிவாஜி படங்கள் வந்தால் தியேட்டர்கள் நிரம்பி வழியும். போனவ்ர்கள் எல்லாம் சிவாஜியோ அல்லது எம்.ஜி.ஆரின் ரசிகர்களா? நல்லூர் தேரிற்குப் போறவர்களெல்லாம் இந்துக்களா? மடுவிற்குப் போறவ்ர்களெல்லாம் கத்தோலிக்கரா?…..//துரை,

    எனது கேள்வி மாயா சொன்ன கருத்தை நோக்கியே? அவரது கருத்தை ஒன்றுக்கு இரண்டு முறை படியுங்கள். பின்னர் எனது பதிலைப்படியுங்கள்!

    “…கடந்த காலங்களில் சுவிசில் புலிகளுக்குப் பின்னால் பல ஆயிரம் பேர் திரண்டார்கள். ஐநா முற்றத் திடலில் 6 முதல் 10 ஆயிரம் வரை சனம். இப்போது பாருங்கள் நிலமையை? 20 -30 பேர்கள்தான்…”

    விவாதிக்க முதல் கருத்துகளை அவதானமாகப் படிக்க வேண்டும்!

    Reply
  • மாயா
    மாயா

    //இதைத்தானே கொத்து ரொட்டி/வடைக்கூட்டம் எனச் சொன்னீர்கள். இப்போ புலிகளின் பின்னால் திரண்டார்கள் என்கிறீர்கள்?//சாந்தன்

    இலங்கைத் தமிழரைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது? நான் பார்த்த அனுபவம். யார் பலமாக இருக்கிறார்களோ; அவர்கள் பக்கம் சாய்வார்கள். முன்னர் பல அமைப்புகள் இருந்தன. யார் தாக்குதல் செய்கிறார்களொ; அவர்களை மெச்சிப் பேசுவார்கள். யார் ஒன்றுமே செய்யாமல் இருப்பார்களோ ; அவர்களை ஏளனப்படுத்துவார்கள். இது அனுபவப்பட்டோருக்குத் தெரியும்?

    மேலே சொன்ன கருத்தை சாந்தன் தவறாக கொத்து ரொட்டிக் கடையில் தள்ளி விட்டார்.

    சாதாரணமாக ; புலிகளது நிகழ்வுகளுக்கு போனவர்களில் அதிகமானவர்கள் அச்சத்தில் போனார்கள். சிலர் ஒரு முசுபாத்தியா போனார்கள் சிலர் நண்பர்களை சந்திக்க ; அரட்டை அடிக்க போனார்கள். அதிகமானவர்கள் ; போகாது போனால் பிரச்சனை வரும். பக்கத்து வீட்டுக்காரன் போறான். என்னோட வேலை செய்யிறவன் போறான் . நான் போகாட்டா போட்டுக் குடுத்து துரோகி என்பார்கள் என்று போனவர்கள்தான். உண்மை உணர்வோடு போனவர்கள் மிகக் குறைவு. மனதால் காசு கொடுத்தவர்களை விட ; பயத்தில் காசு கொடுத்தவர்கள் அதிகம். எதிர்த்து பேசுகிறவர்களுக்கு ; நாட்டில பார்த்துக் கொள்ளுவம் என்றுதான் ஒரு வெருட்டல் விடுவார்கள். புலிகளின் ; இந்த வெருட்டலை பெறாதவர்கள் புலத்தில் மிகக் குறைவு.

    இன்று நிலமை தலை கீழாகி விட்டது. அங்க எல்லாம் முடிஞ்சுது. இனி போராட்டமாவது ; புண்ணாக்காவது என திட்டும் நிலையில் மக்கள் தெம்பு பெற்று விட்டார்கள். வீட்டு அழைப்பு மணிக்கு அருகில் பெயரில்லாமல் இருந்தால் அது தமிழர் வீடாகத்தான் இருக்கும். ஒன்று அல்லேலூயா ; யேகோவா காரருக்கு ; புலிகளுக்கு பயந்து ; யாரும் தன் பெயரையே எழுதுவதில்லை. இப்ப பயமில்லாம எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். முன்ன காசு வாங்க வந்தாங்கள். வங்கிக் காசு கட்ட ; சுருட்டிய காசுக்காக ஆட்கள் தேடித் திரிகிறார்கள். இப்ப அவங்களை காணவில்லை.

    இப்ப தெரியிற முகங்கள் புதுசு. பழைசெல்லாம் இப்ப வசதி வாய்போடு வீட்டுக்குள்ளயே முடக்கம்.

    அன்டைக்கு இருந்த கும்பல் இன்று இல்லை. இனி மெது மெதுவாகக் குறையும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    சாந்தன்:
    முன்பு வந்த சனக்கூட்டம் இப்பொழுது வராத காரணத்தை நீங்களாவது சொல்ல வேண்டியதுதானே!

    Reply
  • thurai
    thurai

    //கடந்த காலங்களில் சுவிசில் புலிகளுக்குப் பின்னால் பல ஆயிரம் பேர் திரண்டார்கள். ஐநா முற்றத் திடலில் 6 முதல் 10 ஆயிரம் வரை சனம். இப்போது பாருங்கள் நிலமையை? 20 -30 பேர்கள்தான்…”
    விவாதிக்க முதல் கருத்துகளை அவதானமாகப் படிக்க வேண்டும்!//சாந்தன்
    புலிக்குப் பின்னால் பல கருத்துத் தெளிவற்ர சனங்களே கூட்டமாக சென்றவர்கள் என்பதே எனது கருத்து. அறிவுளள 5 பேரிற்கு அறிவற்ர 5000 பேரையும் சமனாக்கி விட முடியாது.- துரை

    Reply
  • BC
    BC

    இலங்கைக்கு வா பார்த்துக் கொள்ளுவம் என்ற புலிகளின் பயமுறுத்தல் தான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பணம் கொள்ளையடிப்பதற்க்கு வசதியாக இருந்தது என்று நினைக்கிறேன். முன்னாள் புலிஆதரவாளர்கள் உட்பட புலத்தில் உள்ள மக்கள் மகிந்தாவை மனதுக்குள் மனதார வாழ்த்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    உண்மையில் ஒக்ஸ்போட் யூனியன் ஜனாதிபதியை அழைக்கவில்லை. சிங்கள மாணவர் ஒன்றியமே அழைத்தது. யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கும் கிளிநாச்சி மாணவர் ஒன்றியம் முல்லைத்தீவு மாணவர் ஒன்றியம் போன்றவையே இதுவும். இவற்றிற்கும் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்திற்கும் எதுவித தொடாபும் இல்லை என்பது யாவரும் அறிந்ததே. அதே போன்றதுதான் இதுவும். ஏதோ ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் அழைத்தது போன்றும் பின்னர் அதனைத் தடுத்ததன்மூலம் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது என்றும் கூறுவது தவறானது.
    எல்லாவற்றையும் யாழ் பல்கலைக்கழகத்தில் தனக்கு நடந்ததோடு ஒப்பிடுவது பேராசிரியாரின் தகுதிக்கு உகந்ததல்ல. தனது பதவிக்காகவே இக் கருத்தைக் கூறுகின்றார் என்ற உணர்வை அது ஏற்படுத்தியள்ளது.

    Reply