யாழ் பல்கலையின் உப வேந்தராவதற்கு ரட்னஜீவன் ஹூல், வசந்தி அரசரட்ணம், என் சண்முகலிங்கம் தெரிவு.

இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தெரிவில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் வசந்தி அரசரட்ணம் என் சண்முகலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 14 வாக்குகளையும் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் 9 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பேராசிரியர் என் சண்முகலிங்கனும் 9 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஏனைய வேட்பாளர்களான பேராசிரியர் சத்தியசீலன் 8 வாக்குகளையும் பேராசிரியர் ஞானகுமாரன் 5 வாக்குகளையும் பெற்றுள்ளனர். விரிவுரையாளர் அல்வாப்பிள்ளை தனேந்திரன் ராஜரட்னம் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உபவேந்தருக்கான முதல் கட்டம் முடிவடைந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார். இவ்விடயத்தில் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசணையைப் பெறுவார். தெரிவு செய்யப்பட்ட மூவரில் யார் உபவேந்தர் என்பது ஒரு வாரத்தில் தெரியவரும்.

அண்மைக் காலமாக தேசம்நெற் இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள்:

‘இலங்கையின் தமிழ் கல்விச் சமூகம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை’ நூலின் மின்னியல் வடிவம்: UoJ_A_View_By_Jeyabalan_T

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்

‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்

யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்

தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்

பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்

‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்

யாழ் பல்கலையின் உபவேந்தர் தெரிவுக்கு பேராசிரியர் ஹூலுக்கு ஆதரவாக மேற்கொண்ட கையொப்ப ஆவணம் அமைச்சர் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டது : த ஜெயபாலன்

”யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான தேசம்நெற் கட்டுரைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை.” பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்

ஈபிடிபி தோழர்களே! நல்லதொரு இதயவீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்திட வேண்டாம். : ரி சோதிலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பார்வை நூலுக்கான முன்னுரை : த ஜெயபாலன்

தமிழ் கல்விச் சமூகத்தின் மகுடம் யாழ். பல்கலைக்கழகம் – அதன் துணைவேந்தர் தெரிவிற்கான தேர்தல் ஒரு அலசல்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 Comments

  • கந்தையா
    கந்தையா

    உபவேந்தருக்கான முதல் கட்டம் முடிவடைந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார். இவ்விடயத்தில் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசணையைப் பெறுவார்.//
    கடைசியாய் டக்கிளசின் கையில்தான் தெரிவு நிக்கிறது. இதையே தேசம் எழுத தோழர்மார் ஜனநாயக முறைப்படிதான் இலங்கையில் எல்லாம் நடக்கும், உங்களுக்குத் தெரியாதோ எண்டு துடிச்சாங்கள். பாப்பம் டக்ளஸ் என்ன ஆலோசனை சொல்லப் பொறாரெண்டு. பொம்பிளைப் பிள்ளைகளை பயப்பிடாமல் யாழ்ப்பாண கம்பசுக்கு விடலாமோ இல்லையோ எண்டது ஒரு கிழமையில் தெரியவரும்

    Reply
  • Arun
    Arun

    ஏன் இப்ப பொம்பிளைப் பிள்ளையள் அங்கை படிக்க இல்லையோ?

    Reply
  • Ajith
    Ajith

    யாழ் பல்கலைகழக உபவேந்தருக்கான ஜனநாயக ரீதியான தேர்தல் முடிந்துவிட்டது. பல்கலைகழக நலன் விரும்பும் யாழ் பிரதிநிதிகள் சரியான தெரிவை மேற்கொண்டு உள்ளார்கள். இப்போது உபவேந்தருக்கான தெரிவு சிங்கள நாட்டின் இனவாத தலைமையிடம் உள்ளது. இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் தேசம்நெட் ஜெயபாலன் மிக தெளிவாக அடித்து கூறுகிறார் டக்லஸ் தேவானந்த தான் இங்கு முடிவை தீர்மானிப்பர். தமிழ் மக்களின் கல்வி இன்று ஒரு சிலரின் கைகளில் போய் நிற்கிறது.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….இவ்விடயத்தில் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசணையைப் பெறுவார்…..//

    ஆலோசனையும் இல்லை ஒரு கத்தரிகாயும் இல்லை. எல்லாம் “ஆப்பு” எப்படி இறுக்கலாம் என்பதில் தான் இருக்கும். சில நிர்ப்பந்தங்களினால் ஹூலுக்கு கிடைக்கலாம், அவ்வாறு கிடைத்தால் நல்லது! மஹிந்தா “ஆப்பு” கொஞ்சம் லேற் ஆகும்!

    Reply
  • thurai
    thurai

    //தமிழ் மக்களின் கல்வி இன்று ஒரு சிலரின் கைகளில் போய் நிற்கிறது.//அஜீத்

    பரவாயில்லையே !!! இவ்வளவு காலமும் படித்தோர் படியாதோர், ஏழைகள், பணக்காரர்கள் என்று எல்லாத்தமிழருடைய தலையெழுத்துக்கழுமே ஒரு தலைவனிடம் இருந்தது. இறுதியில் அழிவினைக்காட்டிவிட்டு ஆளையே காணோம். விட்டீர்களோ அதுவும் இல்லை. தமிழீழம் இல்லாவிடினும் புலம்பெயர் தமிழரை இன்னமும் சுரண்டும் கூட்டம் உங்கள் கண்களிற்குத் தெரிவதில்லையா? டக்ளசும், மகிந்தாவுமா தெரிகின்றது. முதலில் பக்கத்தில் நிற்கும் கள்வர்களை அறியாமல் ஏன் அயல் வீட்டை காவல் செய்ய முயல்கின்றீர்கள்.– துரை

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    இங்க வந்து பிரச்சினை டக்ளஸோ ஜெயபாலனோ மகிந்தாவோ அல்ல கல்வி அறிவில் கொடிகட்டிப்பறந்த யாழ் சமூகம் யாழ் பல்கலைக்கழக் சீர்கேடுகளால் பின்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது இதை மாற்றி எமது மாணவ சமுதாயம் பல சாதைகளைப் படைக்க வேண்டும் என்பதே!

    வசந்தி ஒன்றுவிட்ட அக்காவும் இல்லை கூல் மாமாவும் இல்லை சண்முகலிங்கம் சித்தப்பாவும் இல்லை இது நடக்காது ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்துள்ளது இந்த மூவரில் ஜனாதிபதி தெரிவின் மூலம் துணைவேந்தர் தெரிவு செய்யப்படுவார் பல பக்கங்களிலிருந்தும் ஜனாதிபதிக்கு கருத்துக்கள் எடுத்துரைக்கப்படலாம். இதற்குப் போய் அமெரிக்காவிலும் லண்டனிலும் இருந்து எல்லாமே ஆப்பு என்றால் பாவப்பட்ட அந்த மக்கள் என்னதான் செய்வார்கள் கொஞ்சமாவது நன்மை கருதி சிந்திக்க மாட்டீர்களா?– ஜெயா பிரான்ஸ்

    Reply
  • நந்தா
    நந்தா

    ஜெயராஜாவின் கருத்துடன் எனக்கு உடன்பாடுதான். எனக்கு இரத்தினஜீவனை அறிமுகம் உண்டு. அவர் அந்தப் பகுதிக்குத் தகுதியானவர் என்று நம்புகிறேன்.

    சண்முகலிங்கத்தின் கதை தேசம்நெற்றிலேயே நாத்தம் எடுத்து விட்டது.

    இந்தப் “பெண்கள்” பிரச்சனைகள் பல்கலைக் கழகத்துக்குள் மோசாமாகியபோது இந்த வசந்தி எங்கே இருந்தார் என்பது தெரியவில்லை. இனி என்ன செய்யப் போகிறார் என்பதும் தெரியவில்லை. கூலுக்குக் கண்டிப்பாக இந்த ஒழுக்க விஷயத்தில் ஒரு “பொலிசி” உண்டு.

    மகிந்தவுக்கும், டக்ளசுக்கும் பிரச்சனை என்றும் பலர் தேசம்நெற்றில் எழுதுகிறார்கள். அப்படியிருக்க மகிந்த யாரை தெரிந்தெடுக்கப் போகிறார்?

    இன்று படிப்பைவிட ஒழுக்க பிரச்சனைகள் முன்னெழுந்துள்ள நிலையில் இரத்தினஜீவன் வரவேண்டும் என்பது எனது விருப்பம். மகிந்த யாரை விரும்புகிராரோ?

    Reply
  • kajen
    kajen

    Mr.Ratnajeevan Hoole is not only well educated but he comes from a respected family also. No one who contested for V C post is as educated as Mr.Hoole. Most of the academics who contested, studied in Srilanka. But Mr.Hoole is the only one who has lots of Western degrees. Besides these, his brother Mr.Rajan Hoole has very good rapport with Amnesty International. Mr.Hoole’s cousin Ahilan Kathirgamar works very closely with Human Rights watch. Mr.Hoole’s relative Mr.Nesiah works for CPA and has Western connection also. If Mr.Hoole becomes the VC he will be able to get lot of funding from the Western governments and agencies by using his western connection.
    I dont know much about Vasanthy Arasaratnam, but she is not as educated as Dr.Hoole. Also I don’t think she will be able to do much to the Jaffna university since she doesnt have have any western connection like Mr.Hoole has.
    I understand that Mr.Nadesan is now in Srilanka and working hard for Mr.Hoole. We must appreciate Mr.Nadesan’s effort. But will Mr.Hoole like this? Definitely no,because he is a person who always stood by his policy. He is not power greedy. He never bowed to the Tigers. Mr.Hoole got only 8 votes while Vasanthy got fifteen. People like Mr.Hoole will never want to become the VC in the mercy of neither Douglas nor the president. -Kajen

    Reply
  • shan.s
    shan.s

    யார் வந்தாவலும் யாழ் பல்கழைக்கழக தலையெழுத்தை மாற்ற முடியாது. வால்பிடிப்பவர்கள் அவார்களை மாற்றிவிடுவார்கள்

    Reply
  • அப்பாவி
    அப்பாவி

    சண்முகலிங்கனுக்கு மூன்றாம் இடம் கிடைக்க காரணம் வவுனியா வளாககத்தில் உள்ள மூன்று வாக்குகள்தான். ஆக மொத்தத்தில் இவர்களது நோக்கம் என்னவென்றால் தமது பேராசிரியர் நியமங்கள் தொடர்பான கனவு மாத்திரமே. சண்முகலிங்கன் இருக்கும் வரைதான் இப்படிப் பட்டவர்கள் பேராசிரியராக வரமுடியும். பல்கலை கழகம் எக்கேடு கெட்டால் என்ன? இதுதான் இவர்களது எண்ணம்.

    குறிப்பாக நந்தகுமாரன் தற்போதைய முதல்வர் (எது வித ஆய்வு பின்னணியையும் கொண்டிராதவர்; இதில் முக்கிய விடையம் என்னவென்றால் நந்தகுமாரனிற்க்கு ஒரு ஆய்வு அறிக்கையின் Abstract என்ன என்பது தெரியாது) பேராசிரியராக வர வேண்டுமாயின் சண்முகலிங்கன் பதவி தொடர வேண்டும். சண்முகலிங்கனிற்கான வாக்குகள் இந்த அடிப்படையில்தான் கிடைத்தன.

    Reply
  • jeyam.s
    jeyam.s

    பேராசிரியர் நியமங்கள் சண்முகலிங்கன் இருக்கும் வரைதான் இப்படிப் பட்டவர்கள் பேராசிரியராக வரமுடியும். பல்கலை கழகம் எக்கேடு கெட்டால் என்ன? இதுதான் இவர்களது எண்ணம். பேராசிரியராக வர வேண்டுமாயின் சண்முகலிங்கன் பதவி தொடர வேண்டும்.பேராசிரியர் நியமனத்திற்கு வழக்குத் தொடுத்தாலும் சண்முகலிங்கன் இருக்கும் வரை அவருக்கு பேராசிரியர் நியமனம் கிடைக்கும்.

    Reply
  • ajs
    ajs

    Many lecturers attached to the University of Jaffna resort to plagiarism in their research papers. Please check their abstracts and papers. They are more concerned about increasing the quantity of their research papers than their quality. It is a shame. Many Tamils say that Jaffna is centre of learning. In reality, it is a centre of forged intellctuality.

    Reply
  • maran.s
    maran.s

    ஜெயம் நீங்கள் குறிப்பது புத்தூர் புனிதரை தானே. இவருக்கு வழக்கு புறவிசர்தானே பெயர்.சண்முகலிங்கன் வந்தால் அவருக்கு பேராசிரியர் நியமனம் கிடைக்கும்.

    Reply
  • BC
    BC

    //கொஞ்சமாவது நன்மை கருதி சிந்திக்க மாட்டீர்களா?– ஜெயா பிரான்ஸ்//
    ஊருக்கு சென்று வருபவர்களிடம் அங்கே கண்ட நல்ல விடயங்களை மற்றவர்களுக்கு சொல்லிவிடாதீர்கள் என்று கேட்கிறார்களாம். பின்பு எப்படி இது மாதிரி எதிர்பார்க்க முடியும்!

    Reply
  • தேவராசா
    தேவராசா

    யாழ் பல்கலையின் கல்விமான்களென்று சொல்லிக் கொள்கின்ற பெரிய மனுசர்களுக்கு தெருவோரத்தில் நிற்கும் பாமரக் குடிமகன் தேவராசா பணிவுடன் எழுதிக் கொள்கின்ற மடலிது.

    “அரசரோடெம்மைச் சரியாசனம் வைத்த தாய்”… என்று தமிழில் கல்வி புகழ்ந்து பாடப்பட்டு வந்திருக்கின்றது. அதுதான் நாம் (நமது சமுதாயம்) கடந்து வந்த வழி!

    பொற்காசுகளை தங்கத் தட்டில் வைத்து ஏழைப் புலவனொருவனுக்கு அவன் பாடிய கவிதைக்குச் சன்மானமாக கொடுத்த சங்க கால அரசனிடம், கிழிந்து நூலாகிப் போன தன் துண்டினை உதறியபடி கேட்டானாம் அந்தப் புலவன், “அரசே தட்டு உனக்கா? எனக்கா?” என்று. [ஏனெனில் அந்த அரசன் மரியாதைக்குறைவாக தட்டினைத் திருப்பி வாங்கிக் கொண்டான் என்பதனால்].

    இங்கு “தட்டு” என்பதனை “பணத் தட்டுப்பாடு” என்பதன் பொருள்பட பாவித்திருக்கின்றான் அந்தப் புலவன்).

    கல்வியறிவினால் உயர்ந்து தெளிந்து சொல்வன்மையும் சக்தியும் பெற்று, எவனுக்கும் தலைபணியாத புலவன் வாயால் சாபம்பெற்று தனது நாட்டுக்கு பணத் தட்டுப்பாடு வந்து விடக்கூடாது என்று உணர்ந்த அரசன் அந்தப் புலவனிடம் மன்னிப்புப் பெறுவதற்கு பல பகீரதப் பிரயத்தன்னங்கள் செய்ய வேண்டியிருந்தது.

    கல்விமான்களும், அறிவாளிகளும், சிந்தனாவாதிகளும் எவருக்கும் தலைபணிவதில்லை… தலைநிமிர்ந்து சுதந்திரப் பறவைகளாக சிறகடித்து ஆர்ப்பரிப்பார்கள்.

    இப்படியான கனவுகளின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த அடையாளமாக விளங்க வேண்டிய யாழ் பல்கலையில் – இன்று வயிரவப்புளியங்குளம் (வவுனியாவில்) டியூசன் சென்றர் வைத்து உழைக்கும் எஸ். குகனேசனும், என்.ஜி.ஓக்களுக்கு டொயோட்டா ஹை.ஏஸ் வான்களை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் இடைத்தரகனான ஆர். நந்தகுமாரனும், எவருக்கும் ஆமாம் போட்டுப் சிரித்து களவாடும் டி. மங்களேஸ்வரனும் வாக்களிப்பதனால்தான் – எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போகின்றது என்றால், நமது சமூகம் எந்தவொரு இழிநிலைக்கு சென்றுவிட்டிருக்கின்றது என்பது தெட்டத் தெளிவாக அனைவருக்கும் விளங்குமே!

    துணைவேந்தர் தேர்தல் இன்று வேடிக்கைக் கண்காட்சியாகப் போய்விட்டது. இன்னமும் சண்முகலிங்கன் பயமில்லாமல் உலாவி வருகின்றாரே(!)…

    பேராசிரியர் ஹூல் என்கின்ற அறிவாளியின் தியாகத்துக்கும் சண்முகலிங்கன் என்கின்ற தரக்குறைவானவரின் களவாணித்தனத்துக்கும் சமமான பெறுமதியைக் கொடுத்திருக்கின்ற (இருவருக்குமே 9 வாக்குகள்) யாழ் பல்கலையின் ‘கல்விமான்களென்று சொல்லிக் கொள்கின்ற’ அந்த சென்மங்களுக்கு மாபெரும் நன்றி! எமது சமூகத்தின் இறுதி அஸ்தமனத்துக்கான கடைசிச் சங்கை ஊதிவிட்டதற்காக! மிக்க நன்றிகள். வளரட்டும் உங்கள் சேவை!

    அரசியலே வேணாமென்று இருக்க வேண்டிய கல்விக்கூடத்தில் இன்று அரசியல்தான் எல்லாமே என்றாகி விட்ட பின்னால் எவர்தான் இங்கு வருவார் அறிவைத் தேட? புவனேஸ்வரி லோகனாதனின் கட்டடத்தொழிலுக்கான கொத்தடிமைகளை மட்டும் தான் இனி யாழ் பல்கலைக்கழகம் உற்பத்தி பண்ணப் போகிறது. இதிலும் புவனேஸ்வரிக்குத் தான் வெற்றி!

    எதிர்காலம் பற்றிய பயங்களுடன்,
    தேவராசா

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    வசந்தி அரசரத்தினம் தனக்கென எவ்விதமான சொந்தக் கொள்கையோ அல்லது நிர்வாக அனுபவமோ சிறிதளவும் இல்லாதவர். அதிக வாக்குகளைப் பெற்ற ஒரே காரணத்திற்காக அவரை நியமிப்பது என்பது, பல்கலைக் கழக நிர்வாகத்தை ஏற்கனவே மறைமுகமாக தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பாலசுந்தரம்பிள்ளையின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதாகவே அமையும். பல்கலைக் கழகத்தின் எந்தப் பிரச்சனை பற்றியும் சிறிதும் அலட்டிக் கொள்ளாத வசந்தி அந்தப் பிரச்சனைகளைக் களைவதற்கான எவ்விதமான தற்துணிவோ அல்லது அதற்காக போராடக்கூடிய வல்லமையோ அற்றவர். வெறுமனே ஆபீஸில் உட்கார்ந்து கையொப்பமிடும் நிலையில் இன்று அந்தப் பதவி இல்லை. பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் பல்கலைக் கழகத்தை மீட்டெடுத்து வர வேண்டிய பெரும் பணியொன்று புதிதாக வரும் துணை வேந்தருக்கு இருக்கிறது`இப்பாரிய பணியைச் செய்துமுடிக்கும் செயல்திறன் கொண்டவரே துணை வேந்தராக நியமிக்கப் பட வேண்டும். வசந்தி அரசரத்தினத்தால் பாலசுந்தரம்பிள்ளை அண்ட் கோ. வின் பினாமியாகத்தான் செயல்பட முடியும். அவர் துணைவேந்தராக நியமிக்கப் பட்டால் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தை நாம் எல்லோரும் மறந்துவிட வேண்டியதுதான்..

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    தாமிரா மீனாஷி, வசந்தி அரசரத்தினம் அதிக வாக்குகளைப் பெற்றதுக்குக் காரணம், தேசம்நெற் செய்த அசுரத்தனமான செய்திகளாலும், பின்னூட்டங்களினாலும் பல்கலைக்கழகத்தில் குழப்பமான நிலை தோன்றி ஹூலா, சத்தியசீலனா, சண்முகலிங்கமா என்ற நிலை வந்தபோது நடுநிலை என்ற ஒன்றை எடுப்பார்களே நம்மவர்கள்… அதுதான்.

    இத்தனை கல்விமான்களும், சமூக சிந்தனையாளர்களும் ஒன்பதுக்கு ஒன்பது என்று வாக்குகளைப் போட்டு ஊரோடு ஒத்து ஓடு நமக்கேன் வம்பு என்றும் துதிபாடி காரியம் சாதிக்க முயன்றால் பல்கலைக்கழகம் என்ன பள்ளிக்கூடமே உருப்படாது. யாழ் சமூகத்தில் பழகிப் போன விடயம், சரிபிழை பார்க்காமல் கூடக்கூட்டம் இருக்கிற இடத்திற்கு ஆமாப்போடுவது. உதாரணத்திற்கு புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கூத்து.

    Reply
  • jeyan
    jeyan

    “யார் வந்தாவலும் யாழ் பல்கழைக்கழக தலையெழுத்தை மாற்ற முடியாது. வால்பிடிப்பவர்கள் அவார்களை மாற்றிவிடுவார்கள்” சண் சொன்னது 100 வீதம் உன்மை. புத்தூர் புனிதரும் முன் கதவால் சண்முகலிங்கனுக்கு ஆதரவு தெரிவித்து பின்கதவால் ஹூல்லுடன் Dinner சாப்பிட்வார் தான். ஆனால் இப்போது வசந்தி அரசரத்தினம் தனது உறவினர் என்கிறாராம். இவரை புத்தூர் புறபிசர் என்பதைவிட புழுடா புறபிசர் என்று சொல்லலாம்.

    Reply
  • Rajan
    Rajan

    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்பதை (சகல விடயங்களிலும்) தாரக மந்திரமாக கொண்டு இயங்கும் பே(h)ராசிரியர். என்.சண்முகலிங்க…(ம்/ன் – சரியாக தெரிந்தவர்கள் நிரப்பவும்) துணைவேந்தராக வருவதையே நானும் விரும்புகின்றேன். ஏனெனில் தெரியாத இடங்களிலும் அறியாத இடங்களிலும் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்ததாகவும் வெளியிடாத புத்தகங்களை (யாரும் வெளியிட்ட புத்தகங்களிற்கு வெளி மட்டை மாத்தி) வெளியிட்டதாகவும் நான் கூற> அதை நம்பி(??) நான் கூறும் ஆசாமிகளையே எனக்கு பரீட்சகர்காளக போடவும் இத்துடன் கண் தெரியாதவர்களையும் வசதியானவர்களையும் பரீட்சகர்காளக போடவும இந்த துணைவேந்தரை விட்டா வேறு யாருண்டு? சொல்லுங்கோ??

    Reply
  • arunjeya
    arunjeya

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு தொடர்பாக இடம்பெறும் வாதப்பிரதிவாதங்கள் தொடர்பாக..
    வெளிநாட்டில படிக்கிற படிப்புத் தான் பெரிய படிப்பென்றோ அங்க செய்யிற ஆய்வு தான் ஆய்வென்றோ முடிவு செய்யக் கூடாது. அப்பிடி முடிவு செய்யப் போறீங்கள் எண்டால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான, மருத்துவ பேராசிரியர்கள் எல்லாருமே சீமையிலை ஆய்வு செய்தவைதான். இதுவரை இந்த மண்ணுக்கு அவை தந்த கண்டுபிடிப்புகளை கொஞ்சம் பட்டியல் போட்டு; காட்டுங்கோ. ஒரு சமூகத்தின் அதியுயர் கல்வி நிறுவனம் என்ற வகையில் இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வரப் போறவர் தொடர்hக கரிசனம் மிக அவசியமானது தான். ஆனால் இந்த்க் கரிசனம் இந்த மண்ணின் வாழ்நிலையுடன் ஒத்துப் போறதாகவும் கலாசாரத்தை பேணுவதாகவும் தமிழ்ச் சமூகத்துக்கென்றே தனித்துவமான ஆய்வுகளை சீமை முலாம் பூசாது முன்னெடுப்பதாகவும் இருக்கவேண்டுமாயின் இந்தச் சமூகத்துடன் தன்னை பிணைத்துக் கொண்ட புத்திஜீவியை தேடிப் பிடிக்கிறதைவிட்டுப் போட்டு உங்களுக்கு விரும்பியவர்களுக்கு ஆதரிப்பதை கைவிடுங்கோ.

    Reply
  • தாமிரா மீனாஷி
    தாமிரா மீனாஷி

    நாங்கள் பின்பற்றக் கோருவது சீமையின் ஆய்வுப் பொருளையல்ல… சீமையின் ஆய்வு முறையைத் தான் என்பதை தயவு செய்து உங்கள் சிந்தனையில் கொள்ளுங்கள்..உடை உணவு எல்லாம் சீமை ஸ்டைலில் விரும்பும் நீங்கள் அறிவையும், ஆய்வையும் மட்டும் ஏன் சுதேசமானதாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அவ்வாறாயின் நாட்டார் பாடல்களை காப்பியடித்து கலாநிதி பட்டம் பெற்றவர்களும் நாலு புத்தகங்களை cut & paste செய்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர்களும் தான் உங்கள் கருத்துப்படி தமிழ் அறிவாளிகளாக இருக்க முடியும்..

    Reply
  • arunjeya
    arunjeya

    மீனாஷி, நான் சொல்ல வந்தது என்னவென்றால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்பொருகாலம் கலைப்பீடம் முழுவதும் இப்ப ஏனைய பீடங்களின் அனைவரும் சீமையின் ஆய்வுமுறையை கரைச்சுக் குடிச்சவைதான். என்ன பலன்? உங்கட பாசையிலை இப்பவும் அது பள்ளிக்கூடமாகத் தான் இருக்கு. ஒத்துக் கொள்கிறன். காப்பியடித்து தமிழ்ச் சமூகத்தை இழிவுபடுத்தும் ஒரு சிலரைத்தான் உங்கள் கண்ணுக்குத் தெரியுது. பெறுமதியானவையும் பெருமைக்குரியவையும் எங்கள் இனத்தில் கனக்க இருக்கினம். கோட்டும் சூட்டும் போடலாம். எங்கள் குணநடை தான் மாறக்கூடாது.
    தேசத்தின் விமர்சனங்களில் வெளிநாட்டுப் படிப்பு படிச்சவைதான் துணைவேந்தராகத் தகுதியுள்ளவை என்று ஒரு கணிப்பீடு இருந்தமாதிரித் தெரிந்தது. வெளிநாட்டுப் படிப்புப் படிச்சுப்போட்டு இங்கை வந்து செற்றிலானதைத் தவிர வேறையொன்றையும் செய்யாத பேராசிரியர்மார் பற்றின கணிப்பில் இருந்த எனக்கு திரும்பவும் இந்தப் பல்கலைக்கழகத்தை நிமிர்த்த வெளிநாட்டுப் படிப்புப் படிச்சவைதான் வேணுமெண்டு கணிப்பீடுபவர்களுக்குத்தான் என்ரை இந்த மறுமொழி.

    Reply
  • Saleem
    Saleem

    யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு ஏஎல் பாடங்களில் சித்தி பெற்றவர் உப வேந்தராக போட்டியிடலாம் என்றால் இவர் உபவேந்தராக வந்தால் பனங்கழியில் எப்படி உடுப்பு தோய்க்கலாம் என்று ஆய்வு செய்வாங்க,

    வெளிநாட்டில யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கட யாழ் பல்கலைக்ழக சேட்டிபிக்கற் எல்லாத்தையும் கிளிச்சுப்போட்டாங்க இப்ப தலைக்கு துண்டு போட்டுக்கொண்டுதான் வெளியில வாராங்க.

    Reply
  • Yarlavan
    Yarlavan

    யாழ் பல்கலைக்கழகத்தினை சண்முகலிங்கம் சீரழித்தது போதும். இதனை அடிமட்டத்திலிருந்து திருத்தி எடுக்கக் கூடிய வல்லமை படைத்தவரே துணைவேந்தராக வரவேண்டும்.

    சண்முகலிங்கத்தின் வரலாற்றை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். து.மு மற்றும் து.பி அதாவது துணைவேந்தராக வருவதற்கு முன்னர் துணைவேந்தராக வருவதற்குப் பின்னர்.

    து.மு இவர் செய்த பாலியல் லீலைகள் ஏராளம். கலைப்பீடத்தின் தற்போதைய புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் நடைபெற்ற நேரம் சண்முகலிங்கம் உதவிவிரிவுரையாளருடன் பல்கலைக்கழகத்தில் இருந்த தனது தனிப்பட்ட அறையில் பாலியல் உறவில் ஈடுபட்டமை அங்கு நிர்மாணப் பணியில் இருந்த தொழிலாளர்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

    இது பாரறிந்த உண்மை. இது ஒரு உதாரணம். இன்னும் ஏராளம் உள்ளன. மேற்படி விரிவுரையாளரை பின்னர் விரிவுரையாளராக்கியதும். பின்னர் தனது ஆசைக்கு இணங்க மறுத்தமையால் அவருக்கு பதவி வறிதாக்கல் செய்தமையும் வேறு கதை…

    மேற்படி கறை படிந்த வாழ்க்கையினால் தற்போத இவரால் எவரையும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றார். எங்கே எனது வண்ட வாளங்களை வெளிப்படுத்தி விடுவானோ என்று தினம் தினம் பயந்து சாகின்றார். யாராவது எதனையாவது உறுக்கிக் கேட்டால் கட்டாயமாக குடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார். இவர் தொடர்ந்தும் துணைவேந்தராக வருவது பல்கலைக்கழகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல

    Reply
  • M. சபா
    M. சபா

    //மேற்படி கறை படிந்த வாழ்க்கையினால் தற்போத இவரால் (சண்முகலிங்கம்) எவரையும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றார். எங்கே எனது வண்ட வாளங்களை வெளிப்படுத்தி விடுவானோ என்று தினம் தினம் பயந்து சாகின்றார். யாராவது எதனையாவது உறுக்கிக் கேட்டால் கட்டாயமாக குடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார். இவர் தொடர்ந்தும் துணைவேந்தராக வருவது பல்கலைக்கழகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.//Yarlavan on December 2, 2010 3:40 am

    ஆரோக்கியமற்ற சூழல்தான் தமக்கு லாபம் காண உகந்தது என்று எண்ணித் தானா சண்முகலிங்கத்துக்கு 9 வாக்குக்களை போட்டு, அவரையும் பதவிப் போட்டிக்குள் மறுபடியும் லாவகமாகத் தள்ளியிருக்கின்றனர் சில படித்த மனிதர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற முகமூடிக் கொள்ளைக்காரர்கள். சண்முகலிங்கன் மறுபடியும் அரியாசனத்தில் அமர்ந்தால் என்ன நடக்கும்? கற்பனைக் குதிரையைத் தட்டி விட்ட போது, பின்வரும் விடயங்கள் நடக்கலாம் என்று யோசிக்கத் தோன்றுகின்றது:
    1. வவுனியா வளாகம், மற்றும் யாழ் பல்கலையில் உள்ள அனைவருக்கும் (காக்காய், குருவி, பல்லி, பெருச்சாளி அடங்கலாக) “இலவச பேராசிரியர் பட்டம்”.
    2. யாழ் பல்கலைக்கு வடபிராந்தியத்தின் ‘சிவக்கு விளக்குப் பகுதி’ என்னும் கெளரவப் பட்டம். இதற்கு நிரந்தர போசகராக சண்முகலிங்கன் இடம்பெறுவார்.
    3. பாலசுந்தரம்பிள்ளைக்கு யாழ் வளாகத்தினுள் தங்கத்தால் சிலை.
    4. எஸ். குகனேசனுக்கு வவுனியா வளாகத்தினுள்ளேயே டியூசன் வகுப்புக்கள் எடுப்பதற்கு வசதியாக பனையோலைக் கொட்டில்.
    5. புவனேஸ்வரி லோகனாதனின் கொந்துறாத்துக் கம்பனிக்கு சீமெந்து குழைப்பதற்கு தினமும் தவறாது சமூகமளித்தால்தான் பட்டம் கிடைக்கும் என்று மாணவர்களுக்கு நிபந்தனை.
    6. மாணவர்களுக்கு தரக்குறைவான கல்வி, பெற்றார்களுக்கு மன உழைச்சல்.
    7. நிரந்தரமான சமூகச் சீர்கேடு.

    இதன் இறுதி விளைவாக ஜெயபாலன் சொன்னது மாதிரி, “சமூகத்தை பிரதிபலிக்காத யாழ் பல்கலைக்கழகம் ஒரு மாபெரும் சமூக விழுமியங்களின் கொலைக்கழகமே” என்னும் கருத்து ஆணித்தரமாக நிறுவப்படும்.

    இதற்காகத்தானே நாமெல்லாரும் இத்தனைநாள் இந்த இணையத்தளத்தில் எழுத்தினால் சமர்புரிகின்றோம்? கடைசியில் எல்லாதுக்குமே, “சம்போ… சிவ சம்போ”தான்!

    Reply
  • sundar
    sundar

    பேராசிரியர் பட்டம் இது யாழ் பல்கலைக்கழகத்தினை ஆட்டிப்படைக்கும் ஒரு வித நோய். இதற்கு அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யத்தயார். இதற்காக யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்ன என்ன செய்யபோகிறார்கள் என்பதை ஓர் புத்தகமாக வெளியிடலாம். அவ்வளவும் அசிங்கம். அதை எல்லாரும் அறியவேண்டும். இந்த அசிங்கத்தில் அரை அசிங்கம் (அரை புறபிசர்)முழு அசிங்கம்(முழு புறபிசர்)பட்டம் வேறு.

    Reply
  • ramesh.G
    ramesh.G

    யாழ் பல்கழைக்கழக பட்ட பட்டபடிபிற்கு மதிப்பில்லை! MA படிக்கவேண்டும் என்ற ஆசையில் MA முடித்தோம். கடைசியில் தான் தெரிந்தது MA தகுதி இல்லை என்பது.இவற்றை எல்லாம் நாம் எங்கு முறையிட?….. காலத்தையும் காசையும் வீணத்தது ஏமாற்றம் தான் மிச்சம். இதற்கு தகுந்த பாடவிதானம் இல்லை தகுதி வாய்தவர்களாலும் அது திட்டமிடப்படவில்லை. மேல்மட்டமும் சேர்ந்து ஏதோ சொல்லிவிட்டு மணித்திளாளத்திற்கு காசு பெறுகின்றனர். சில விரிவுரையாளர் இது தொடர்பாக பிரச்சனையெழுப்பினால் அவர்களுக்கும் சில மணிநேர பாடங்களை கொடுத்து விடுகின்றனர் இதனால் அவர்கள வாய் திறப்பதில்லையாம். Faculty of Graduate Studies காசு உழைப்பதற்கென்றே உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக பல முறைப்பாடுகள் UGC க்கு கிடைத்துள்ளன. இதை நிறுத்த இப்போது முயற்சி நடக்கப்போகிறதாம். Dean, Faculty of Graduate Studies தனது மனைவி சொற்படிதான் செய்வாராம். மனைவி செல்வாக்கோடு பலருக்கு சித்தியும் அனுமதி கிடைத்தம் அத்துடன் சிலரின் ஆய்வுத் தலைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாம். அதனால் பலர் மனைவியை முதலில் பார்க்கின்றார்களாம். இதற்கு உதாரணம் புவியியல் துறை விரிவுரையாளர் சுதாகர் மனைவிக்கும் தமிழ் துறை விரிவுரையாளர் குமரனின் மனைவிக்கும் வலம்புரி ஆசிரியர் ஒருவருக்கும் அனுமதி கிடைத்ததை குறிப்பிடலாம். இப்போது உள் இருப்பவர்கள் கூட ஆய்வுப் பட்டங்களுக்காக வேறு இடங்களுக்கு செல்கிறார்களாம். இதற்கு பல காரணங்கள் உண்டு.
    •தகுதியுள்ள வழிகாட்டிகள்(Supervisors) இங்கு இல்லை
    •அடிப்படை ஆய்வு முறையியல் அவர்களுக்கு தெரியாது
    •பல வழிகாட்டிகள்/பேராசிரியர்கள் MPHIL, PHD போன்ற ஆய்வுப்பட்டம் இல்லாதவர்கள்
    •எந்த விரிவுரையாhளர்/ பேராசிரியர்கள் எத்துறையியலும்/எந்தப்பாடத்திற்கும்; வழிகாட்டலாம்; கற்பிக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது.
    •யாழ் பல்கழைக்கழக MA, MPHIL வேறு பல்கழைக்கழகங்கள் PHD தகுதியானதாக கருதவில்லை.
    •குறிபிட்ட பாடங்களில் அடிப்படைத் தகுதியற்ற விரிவுரையாளர்/ பேராசிரியர்கள் சில குறிப்பிட்ட பாடங்களை கற்பிக்கின்றனர். இவர்கள் மருத்துவத்துறையில் கற்பித்தாலும் ஆச்சாpயப்படுவதற்கில்லை.
    •மாணர்கள் தமக்கு கீழ்தான் ஆய்வினை செய்யவேணடும் என்று வழிகாட்டிகள்/ பேராசிரியர்கள் மாணவர்களை வற்புறுத்துகின்றார்களாம். இதற்கு பட்டப்படிப்புகளின் பீடாதிபதியும் உடந்தை என்பது வெட்கக்கேடு.
    •நியமனங்களின் போது அதிகம் கதைக்காதவர்களையும் தமக்கு ஒத்துப் போகும் விரிவுரையாளர்/ பேராசிரியர்களுக்குத் தான் Dean நியமன panel க்கு கடிதம் அனுப்புகிறாராம்
    •யாழ் பல்கழைக்கழக குளறுபடிகலால் பல புத்தியீவிகள் வெளி நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றார்களாம்.

    இதற்கெல்லாம் தலைமையின் தயவுடன் தான் நடக்கிறது. அதனால் இதற்கு முழுப் பொறுப்பையும் துணைவேந்தரே ஏற்கவேண்டும. உள்வாரியிலும் கூட துணைவேந்தர் தனது துறை விரிவுரையாளர்களுக்கு தான் எல்லா Special lecturers களையும் கொடுத்து மிகுதிதான் ஏனையவர்களுக்கு கொடுக்கப்படுவதாக கேள்வி. இவை எல்லாம் ஆதாரபூர்வமானவை. இணையதளங்களிலும் இது தொடர்பான பிரச்சனைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசூரிக்கப்படுகிறதாம்.உங்களுக்கு தெரிந்த பல்கழைக்கழக குளறுபடிகளை UGC க்கு அனுப்புங்கள். விரைவில் Faculty of Graduate Studies க்கு மூடு விழா நடக்கப்போகிது எதிர்பாருங்கள்.

    Reply
  • Ragu
    Ragu

    An action has to be taken to change the present University administrations?

    Reply
  • renuka
    renuka

    தற்போது நடந்துமுடிந்த Anunal conference இல் lectures கூட தங்களது துறைகளின் கேவலங்களையும் senior lecturefs, Supervisors, Professors இன் தகுதிகளை கொழும்பில், வெளிநாட்டில் இருந்வந்தவர்களிடம்; வண்டவாளங்களை விமர்சித்து தமக்கு அவர்கள் இடங்களில் மேற்படிப்புக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டார்களாம். அத்துடன் Airport வரை சென்றும் வழியனுப்பி வைத்தார்களாம். இந்த நிலை ஏன்?

    Reply
  • theva.s
    theva.s

    Jeyam
    பேராசிரியர் நியமனத்திற்கு வழக்குத் தொடுத்தாலும் சண்முகலிங்கன் இருக்கும் வரை அவருக்கு பேராசிரியர் நியமனம் கிடைக்கும் என நீங்கள் கூறியது தவறு.குமார வடிவேல் து.வேந்தராக இருந்த காலத்தில் பேராசியர்களுடனனும் கவுன்சில் உறுப்பினாகளுடனும் சேர்ந்து மெய்யியல் துறையைசார்ந்த இவரின் பேராசிரியர் நியமனத்தில் பக்கச்சார்பாக இருந்து அவரது பேராசியர் நியமனத்தை தடுத்தனர். இதனால் அவர் வழக்காடி தனது பேராசிரியர் நியமனத்தை பெற்றார்.அதால் அவருக்கு ஏற்பட்ட நேரவிரயத்திற்கும் பெருந் தொகை காசு செலவிற்கும் பல்கழைக்கழகம் என்ன செய்தது. அதை பல்கழைக்கழகம் தான் பெறுப்பேற்க வேண்டும்

    Reply