அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

குறைந்தபட்ச புரிந்துணர்வு செயலாக்க குழுவின் முன்மொழிவுகளும் பொதுக்கூட்டத்தின் உடன்பாடுகளும்

யூன் 21 2009ல் ‘அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்‘ என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றை தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. இச்சந்திப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய உரையாடலில் குறைந்தபட்ச எல்லை வரையறை செய்யப்பட்டு அது புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஓகஸ்ட் 2 2009ல் மற்றுமொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஓகஸ்ட் 2 2009ல் ‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’என்ற தலைப்பிலான ஐந்து மணி நேரம் வரை நீடித்த இக்கலந்தரையாடலில் பின்வரும் எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்தணர்வு ஏற்பட வேண்டும் என உடன்பாடு காணப்பட்டது.

1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு

இவ்விடயங்கள் தொடர்பான வரையறைகளை வகுப்பதற்கு செயற்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் தனித் தனியாக 15 சந்திப்புக்களில் ஆராய்ந்து அதன் தொகுப்பாக இவ்வறிக்கையைத் தயாரித்து உள்ளனர். இதனை  8 2010 இல் இடம்பெற்ற பொதுச் சந்திப்பில் – MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim – அங்கு கூடியோர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அவர்களின் கையொப்பங்கள் பிடிஎப் அறிக்கையில் இணைக்கப்பட்டு உள்ளது. அறிக்கையின் முழுமை இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.

இதன் பிரதிகள் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலே குறிப்பிட்ட எட்டு விடயங்கள் தொடர்பான விரிவான கட்டுரைகள் ஒரு நூலாக வெளியிடப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
._._._._._.

புரிந்துணர்வு என்பது ஜனநாயகம் பற்றியது. ஆனால் அது குறைந்த பட்சமாக அமைய வேண்டி இருப்பது அதனுள் ஈடுபடுபவர்களிடையே அடிப்படைக் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. சகல மக்களது முன்னேற்றத்தை வேண்டி, கூடியளவு மக்களை ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைத்துக் கொள்வதே குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த முனைவதின் பிரதான நோக்கமாகும். அவ்வாறான பொது வேலைத் திட்டத்தினை அமைப்பதாயின், அதன் முதற் கட்டமாக குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைக் கொள்கைகள், விளக்கங்கள் என்பவற்றை ஐயங்கள் இல்லாது உருவாக்க வேண்டும்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்ற பார்வையில் இலங்கையின் அரசியலில் அதற்கென ஒரு சரித்திரம் உள்ளது. தேசியவாதிகளிடையே இன ரீதியான உடன்பாடு உருவாகி உள்ளதையும், அது சிங்கள மக்களிடையே மொழி – மத உணர்வுகளில் எழும் பேரினவாதமாகவும், தமிழ் மக்களிடையே அதன் எதிர்ப் – பிரதிவாதமான தமிழ்த் தேசியவாதமாக உருவாகி உள்ளது.
  
இந்த நிலைப்பாடுகளையும் கடந்து, இலங்கைத் தேசியத்திலும், வர்க்க நிலைப்பாடுகளிலும் தளம் கொண்டு இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் உட்படுத்தும் குறைந்தபட்ச வேலைத் திட்டங்களுக்கான தேடல்கள் எப்போதும் இருந்து வந்துள்ளன. இவை பொதுவாக இடதுசாரி அரசியல் அமைப்புகளால் சமத்துவம் – சமதர்மம் என்ற சித்தாந்த வழிமுறைகளுடன் முன்வைக்கப்பட்டன. ஆனால் இம் முயற்சிகளும் அமைப்புகளும், காலப் போக்கில் சிங்களப் பேரினவாதத்தால் பலவீனப்படுத்தப்பட்டது. இன ரீதியில் எஞ்சியோர் தமிழ் தேசியவாதத்தின் முதன்மைப்படுத்தலை ஏற்றுக்கொள்ள நேரிட்டது.  

இதன் பின்னர் எழுபதுகளின் நடுப்பகுதிகளில் இருந்து இதுவரைகாலமும் தமிழீழக் கோரிக்கையும் தமிழீழப் போரும் ஒருமுகப்பட்டது. அதன் ஏகப் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை பலவந்தமாக நியமித்துக் கொண்டனர். அதற்கான உக்கிரமான நான்கு ஈழப் போர்களையும் அவற்றின் விளைவுகளையும் இலங்கையின் சரித்திரம் குறித்துக் கொண்டுள்ளது.

வைகாசி 2009ல் உலகநாடுகளின் உதவிகளுடன் இப்போரினை இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. அதனால் ஏற்பட்ட பலத்த அழிவுகளுக்கும் பாதிப்புக்கும் உள்ளாகிய தமிழ் மக்கள் தம்சார்பில் எடுக்கப்பட்ட இன, சமுதாய, அரசியல் நிலைப்பாடுகளை – பொருளாதார உறவுகளை அனுபவரீதியில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச புரிந்துணர்வு என்ற பெயரிலான எந்த முயற்சியும் அரசியல் – சரித்திர ரீதியிலும் ஆய்வு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகமுள்ள இலங்கையில் அரசியற் கட்சிகளே பெரும்பாலும் மக்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவம் செய்கின்றன. அதனால் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கு அக்கட்சிகளிடையே இணக்கங்களை ஏற்படுத்துவது அடிப்படையானது. இவ்வாறான முயற்சிகள் தமிழ் கட்சிகளிடையே இடம்பெறுவது வரவேற்கப்பட வேண்டியது அத்துடன் மக்களையும் அவர்களது சமுதாய அமைப்புகளையும் இந்த குறைந்த பட்ச புரிந்துணர்விற்குள் உள்ளடக்க வேண்டியதும் அவசியமானது.

அக்குறைந்தபட்ச புரிந்துணர்வு அரசியல் – பொருளாதாரம் மக்கள் – இனங்கள் என்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைப்பாடுகளில் இருந்து பெறப்பட வேண்டும். அதற்கு இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சாசன அடிப்படையில் காலனித்துவ சுதந்திரம் பெற்றதில் இருந்துள்ள சரித்திரத்தை ஆராய வேண்டும். இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னான மூன்றில் இரண்டு பகுதி காலம் 1) தமிழ் மக்கள் இன ரீதியிலும், 2) சிங்கள மக்கள் வர்க்க ரீதியிலும், அரசியல் -பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய ஆயுதக் கிளர்ச்சிகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறான அடிப்படையில் எட்டப்படும் புரிந்துணர்வு பூரணமான மக்கள் வளர்ச்சியைத் தருவதற்கும் நடைமுறைச் சாத்தியமானதாய் அமைவதற்கும் 1) இலங்கை, 2) பிராந்தியம், 3) சர்வதேசம் என்ற நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கடந்த முப்பது வருட ஒடுக்கு முறைகள், அவஸ்தைகளுள் இருந்து வெளிவர எத்தனிக்கும் தமிழ் மக்கள் தனித்து நின்று பூரண அபிவிருத்தியை, வளர்ச்சியை கண்டுவிடமுடியாது, ஆகவே அயற் சமூகங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

எனவே புரிந்துணர்வு முயற்சிகளுக்கு அரசியல் – பொருளாதார வடிவங்கள் தந்து, அவற்றிடையேயான தொடர்புகளை ஏற்படுத்த முயல வேண்டும். அவை இன, மத, பிரதேச பிரதிபலிப்புகளாக இல்லாது அனைவரினதும் அபிலாசைகளாக உருவாகிட ஒத்தாசையாக இருக்க வேண்டியது குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்த முன்வருவோர்களது பணிகளாகும்.  

அதேவேளை இலங்கையின் இன, சமூக – பொருளாதார, சமுதாயப் பிரச்சனைகளை தனித்தனியாகவோ அல்லது ஒரே தடவையிலாகவோ அணுகுவது? இவ் அணுகுமுறையில் எவை தீர்வுக்காக முதன்மைப்படுத்தப்பட வேண்டும்? எவ்வாறான நிலைப்பாடுகள் இவற்றிடையே பொதுத் தளத்தை உருவாக்க உதவும்? என்பவை பற்றிய முடிவுகளும் இங்கே அவசியம்.

இவ்வாறான பின்னணியில் தேசம் ஆசிரியர்கள் த. ஜெயபாலன், த. சோதிலிங்கம் மற்றும் சு.வசந்தி, ரவி சுந்தரலிங்கம் ஆகியோரது ஆனி 03, 2009 சந்திப்பின்போது குறைந்தபட்ச புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான அவசியத்தை ஊர்ஜிதம் செய்வதற்கான பொதுக்கூட்டம் ஒன்று தேவை என்ற முடிவு ஏற்பட்டது. அதன்படி லண்டன், லேய்ற்றன்ஸ்ரோனில் ஆனி 21, 2009 தேசம் இணையத்தளத்தின் முக்கிய பங்குடன் ஒரு பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆவணி 02, 2009 அதே இடத்தில் இம்முயற்சியை முன்னெடுப்பதற்கான மற்றுமொரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது.

அதன் முடிவுகளாக
(1) இலங்கையில் இடம்பெறும் சர்ச்சைகளின் முக்கிய விடயங்களின் தேர்வும்
(2) அவைபற்றிய விளக்கங்களை ஆய்வு வடிவத்தில் தருவதற்கான தனிநபர்களின் பட்டியலும்
(3) அந்த தனிமனிதர்களே ஆவணி 02 புரிந்துணர்வு குழுவின் செயற்குழுவாக இயங்கவும்
(4) ஆவணி 02 புரிந்துணர்வு குழுவின் இணைப்பாளர்கள் த ஜெயபாலன், த சோதிலிங்கம், எஸ் பேரின்பநாதன் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கடந்த ஒருவருடகாலமாக தனது பல இருப்புகளின் போது ஆவணி 02, 2009 புரிந்துணர்வுக் கூட்டத்தால் தேர்வு செய்யப்பட்ட தலைப்புகளிலான ஆய்வுக் கட்டுரைகளை தம்மிடையே விவாதங்களினாலும் கலந்துரையாடல்களினாலும் பரிசீலனை செய்த அமைப்பின் செயற்குழு ஆவணி 08, 2010 லண்டன், வோல்தம்ஸ்ரோவில் தனது தேடலின் முடிவுகளாக அரசியல், பொருளாதாரம், மக்கள் வளம் என்ற வகையில் சில கருத்துக்களை மக்களது பரிசீலனைக்கும் பொது முடிவுக்கும் சமர்ப்பித்தது. அவர்களின் முடிவுகளை ஆவணி 02 குறைந்தபட்ச புரிந்துணர்வு குழுவின் மொழிவுகளாக அடிப்படை நிலைப்பாடுகள் (Principles) பிரகடனங்கள் (Proclamations), கோரிக்கைகளாக (Propositions) என வகைப்படுத்தி தரப்பட்டுள்ளது.

இவை ஆவணி 02, 2010ல் இடம்பெற்ற புரிந்துணர்வுக் குழுவின் பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறைந்தபட்ச புரிந்துணர்விற்கான முன்மொழிவுகள்

(1) அடிப்படை நிலைப்பாடுகள்
 
1. இலங்கையின் இனபபிரச்சனையால் உருவான உள்நாட்டுப் போர் இலங்கை அரசின் இராணுவத்தால் அடக்கப்பட்டுவிட்டாலும் அதற்கான இறுதித் தீர்வு அரசியல் வழியால் அமைவதாகும்.
 
2. இலங்கையின் சமூக – பொருளாதாரப் பிரச்சனைகளும் இனப்பிரச்சனைகளும் ஒரே தளத்தை கொண்டிருந்தாலும் அவையிரண்டும் வேறானவை. (ஒருதளமும், அதேவேளை இருமுகங்களும் கொண்டவை)
 
3. சர்வதேச சந்தைப்படுத்தலில் இலங்கை மக்களுக்கு சார்பான எதிரான சாராம்சங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளது மறைவும் இவ்விரு பிரச்சனைகளையும் பொதுமைப்படுத்திப் பார்க்கக் கூடிய, இனவரைவுகளைத் தாண்டிய குறைந்தபட்ச புரிந்துணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்களைத் தந்துள்ளன.
 
4. இச்சந்தர்ப்பம் பூரணமான ஜனநாயகம் ஏற்படுத்தும் பொது இணக்கங்களுடாக மேலெடுத்துச் செல்லக் கூடியவை.
 
5. பூரண ஜனநாயகம் (full democracy) என்பது மக்களது சமூக – சமுதாய உடமைகளையும் அவற்றின் பூரணமான வளர்ச்சியையும் நுகர்வுகளையும் எய்துவதற்கான பாரம்பரிய சொத்துகளையும் அவை சார்ந்த உரிமைகளையும் தருவது.
 
6. இவை அனைத்தையும் ஊர்ஜிதம் செய்யும் பன்முகத் தன்மைநாடாக இலங்கையை சகல மக்களும் ஏற்றுக் கொள்ளும் நிலமை அவசியம்.
 
(2) பிரகடனங்கள்
 
1. இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு ஐக்கிய இலங்கைக்கு உள்ளேயே சாத்தியமாகும்.
 
2. இலங்கைவாழ் சகல தேசியச் சிறுபான்மை இனங்களின் உடமைப் பிரச்சனைகளின் தீர்வுக்கு அரசியல் அமைப்பினை மாற்றி அமைப்பது அவசியமானது.
 
3. மக்களின் பன்முக தேசியத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தரும் அலகுகள் கொண்டவையாக புதிய அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். 

4. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இஸ்லாமிய, சிங்கள சமுதாயங்களின் உடமைகளும், உரிமைகளும் அரசியல் ரீதியில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.
 
5. இலங்கைவாழ் மக்களது சமூக, சமுதாயப் பிரச்சனைகள் இன, மத, சாதிய பாகுபாடுகள் இன்றி, அம் மக்களையொட்டிய அபிவிருத்தியின் போதே அற்றுப் போகும்.
 
6. மனிதவள வளர்ச்சிக்கு, அபிவிருத்தித் திட்டங்களுடன் கூடிய இனங்களிடையே புரிந்துணர்வை வளர்த்தெடுக்க கூடிய கல்வி சார்ந்த திட்டங்களும் இடம்பெற வேண்டும்.
 
(3) கோரிக்கைகள்
 
1. இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்ற வரையறுப்பு சகல இராணுவ வகைகளிலும் விஸ்தரிப்பு காண்பதைத் தவிர்த்து, மக்களின் நேரடி நிர்வாகத்தை (civil adminstration) மிகவிரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
2. இலங்கையின் பாதுகாப்பு படைகள், நிர்வாகம், மக்கள் சேவை என்ற சகல மத்திய, மாகாண அரச கருமங்களிலும் மக்களது விகிதாசாரம் பிரதிபலிக்கப்பட வேண்டும்.
 
3. சகல திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவை தவிர்ந்த அபிவிருத்தி சார்ந்த குடியயேற்றத் திட்டங்கள் மக்களது மாகாண விகிதாசாரங்களை பிரதிபலிப்பவையாக அமைய வேண்டும்.
 
4. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களது ஜனநாயக உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். அவர்களது புனர்வாழ்வு துரிதமாக இடம்பெற வேண்டும்.
 
5. உள்நாட்டுப் போரினால் பாதிப்புற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும், நிவாரணம் வழங்கப்படல் வேண்டும், தேவைக்கேற்ற அபிவிருத்திக்கான வளங்களும் வழங்கப்படல் வேண்டும். இவ்வகையில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய மக்களது மீள்குடியேற்றம், நிவாரணம் என்பவையும் இடம்பெற வேண்டும்.
 
இவையே குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்கான அடிப்படை நிலைப்பாடுகள், பிரகடனங்கள், கோரிக்கைகள் என ஆவணி 08, 2010ல் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு (லண்டன்). 

அறிக்கையும் அதில் கையெழுத்திட்டவர்களும்:

MoU_Report_By_MoUGroupLondon

குறைந்தபட்ச புரிந்துணர்வு தொடர்பான சந்திப்புக்களின் முன்னைய பதிவுகளுக்கு:

தமிழ் மக்களிடையே குறைந்தபட்ச புரிந்துணர்வின் அடிப்படைகள். : வி சிவலிங்கம்

MEMOMORANDUM OF UNDERSTANDING AMONG TAMIL DIASPORA IN LONDON : Victor Cherubim

குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்

‘தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’

அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

”இரத்தினசபாபதி அவர்கள் சிறந்த ஒரு திசை வழி காட்டி!” டக்ளஸ் தேவானந்தா

Ratnasababathy_EROSதோழர் இரத்தினசபாபதி அவர்களின் அனுதாப பிரேரணையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (24) ஆற்றிய உரை.

._._._._._.

துப்பாக்கி வேட்டுக்களை விடவும் சொற்கள் ஒவ்வொன்றும் வலிமையானவை. வெடி குண்டுகளை விடவும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் வீரியம் நிறைந்தவைகள்.

அந்த வலிமையான சொற்களுக்கும் வீரியம் நிறைந்த கருத்துக்களுக்கும் சொந்தக்காரரான தோழர் இரத்தினசபாபதி அவர்களுக்கு இந்த நாடாளுமன்றம் மரியாதை செலுத்துவது குறித்து இந்த நாடாளுமன்றத்திற்கு நான் முதலில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

எம்மைப் பொறுத்தவரையில் எமக்கு காலத்திற்கு காலம் வழி காட்டிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் கௌரவ இரட்ணசபாபதி அவர்களின் வழி காட்டல் என்பது தவிர்க்க முடியாத ஒரு காலச்சூழலில் மிகவும் காத்திரமான வழி காட்டலை எமக்கு வழங்கியிருக்கின்றார்.

தமிழ் மக்களின் அரசியலுரிமை போராட்டமானது புதிய உத்வேகத்தை பெற வேண்டிய ஒரு காலச்சூழலில் அதன் கட்டாயத்தை உணர்ந்து கௌரவ இரட்ணசபாபதி அவர்கள் ஆற்றியிருந்த ஆற்றல் மிகு பங்களிப்பு என்பது எமது வரலாற்றில் அழியாத பதிவாக எழுதப்பட்டிருக்கின்றது

அது போலவே மாறி வந்திருந்த எமது மக்களின் மன நிலைகளைப் புரிந்து கொண்டவராக உலகத்தின் போக்கையும் அதற்கான நடைமுறை யதார்த்தங்களையும் புரிந்து கொண்டவராக தோழர் இரட்ணா அவர்கள் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறை ரீதியாகவே தீர்வு காண வேண்டும் என்று எண்ணியிருந்ததும் எமக்கு அவர் மீதான பற்றுதலை மேலும் உருவாக்கியிருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்ததை அடுத்து எம்மை போல் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்த தோழர் இரட்ணா அவர்கள் 40000 மக்களின் விருப்பு வாக்குகளை பெற்று இந்த நாடாளுமன்றத்திற்கான பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

கௌரவ இரட்ணசபாபதி அவர்கள் அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக உரிமைப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவராக இருந்த போதிலும் அவர் ஆயுதங்கள் மீது மோகம் கொண்டவராக ஒரு போதும் இருந்தவரல்ல.

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் என்புது அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக இருக்க வேண்டுமே என்று நினைத்தவரே ஒழிய அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று கருதியவர் அல்ல�

இலங்கைத்தீவிலும் சரி அதற்கு அப்பால் இருக்கும் அயலுலக அரசியல் சூழலிலும் சரி அதையும் கடந்து சர்வதேச அரங்கிலும் சரி எதிரிகள் யார்?… நண்பர்கள் யார்?… என்ற தெளிவான பார்வையை அவர் கொண்டிருந்தவர்.

அதன் காரணமாகவே அன்றைய ஆளும் அரசுகளால் ஒடுக்கப்படுகின்ற அனைத்து இன சமூக மக்களின் பக்கமும் அவர் தனது பார்வையை செலுத்தியிருந்தவர்.

மதத்தால் இந்து ஆனாலும், மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும், தீரச்சைவன் ஆனாலும் ஈழத்தழிழர் ஈழவரே. அவர் எங்கிருந்தாலும் எம்மவரே.

இதுவே தோழர் இரட்ணா அவர்களின் கருத்தாகும். இதுவே பரந்து பட்ட மக்கள் நலன் சார்ந்து அவர் சிந்தித்திருந்த அவரது உண்மையுள்ள தத்துவமாகும்.

தமிழ் முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் என்று அனைத்து மக்கள் சமூகத்தையும் நேசித்திருந்த கௌரவ இரத்தினசபாபதி அவர்கள் அதற்கான தெளிவான கொள்கையினையும் வகுத்து அதை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தவர்.

எமது உரிமைப்போராட்டம் என்பது தனிநபர் பயங்கரவாதமாக அன்றி ஒரு அரசியல் மயப்படுத்தப்பட்டதான ஸ்தாபன வடிவமாக உருவாக வேண்டும் என

கிளிநொச்சியில் நடைபெற இருக்கும் முத்தமிழ் விழாவை ரத்து செய்யுமாறு தவிகூ வி ஆனந்தசங்கரி கோரிக்கை

TULF Leader V Anandasangareeஅரசாங்க அதிபர் அவர்கட்கு            
கிளிநெச்சி

கிளிநெச்சி முத்தமிழ் விழா

அன்புடையீர்

தங்களின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்று நாட்களுக்கு கிளிநெச்சியில் முத்தமிழ் விழா நடைபெறவுள்ள செய்தி கிடைத்து திகைப்படைந்தேன். இந்நிகழ்ச்சியை உங்களுடன் தொடர்பு கொண்டு இரத்து செய்யுமாறு என்னிடம் பல மக்கள் கேட்டுள்ளனர். கிளிநெச்சி பொதுமக்களில் கணிசமானவர்கள், இது மகிழ்ச்சி கொண்டாட்டங்களுக்கு உகந்த நேரம் அல்ல எனக் கூறி இவ்விழாவை இரத்துச் செய்யுமாறு கோருகின்றனர். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது விசாரணைகளை கிளிநெச்சியிலும் முல்லைத்தீவிலும் நடத்திய போது அவர்கள் முன் கூடி நின்ற பெரும் தொகை மக்கள் எனது கூற்றுக்கு சான்று பகர்வார்கள்.

மக்கள் தமது தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளைப்பற்றியும், காணாமல் போய் உள்ள உறவினர்களைப் பற்றியும் சொல்லண்ணாத் துயரில் இருக்கும் போது அவர்கள் எதுவித கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளும் மன நிலையில் இல்லை. மேலும் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும் இவர்கள் சொல்லெணா கஸ்டங்களை அனுபவித்துக் கொண்டு இன்றும் இருக்கின்றனர். அவர்களின் அனேகமான வீடுகள் கூரை அற்ற நிலையிலும், மனித சஞ்சாரத்துக்கு தகுதியற்றவைகளாகவே இன்றும் இருக்கின்றன். பிள்ளைகள் உள்ள குடும்பங்கள்  அதிகளவான  கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். தொடர்ந்து முகாம்களில் உள்ள அவர்களுக்களுடைய உறவுகள் படும் கஸ்டமோ மிக மோசம்.

தயவு செய்து இந்நிகழ்ச்சியை நடத்துவதில் உங்களுக்குள்ள கஸ்டங்களை அதிகரிகளுக்கு எடுத்துக் கூறி  இந் நிகழ்ச்சியை இரத்துச் செய்யவும். யாழ் மத்திய கல்லூரி அதிகரிகளுக்கும், திருமறை கலாமன்றத்தினருக்கும் எனது வேண்டுகோளை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி!
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
வீ.ஆனந்தசங்கரி
தலைவர் – தமிழர் விடுதலைக் கூட்டணி 

தமிழகத்தில் தொடரும் கட்டப் பஞ்சாயத்துக்கள் – ஈழத் தமிழரை இழிவு படுத்தி பணம் பண்ணும் நக்கீரன்! : ENDLF

Nakeeran_ENDLF_Coverநக்கீரன் என்ற அருமையான தமிழ்ப்புலவரின் பெயரைப் பயன்படுத்தி வம்புச் செய்திகளும், ஒட்டுச்செய்திகளும், பட்டுப்பட்ங்களும், கட்டுக்கதைகளும் வெளியிட்டு பிழைப்பு நடத்தும் கேவலமான கூட்டம் இன்று சமூகத்தில் அந்தஸ்துடன் உலவுகிறது.

நாங்கள் ஈழத்தமிழர்கள். இந்த நக்கீரன் என்ற விசமப்பத்திரிகை பற்றிக் கருத்துச் சொல்லவேண்டிய தேவை எமக்கில்லை. ஏனெனில் தமிழகத் தமிழர்கள் சினிமா பார்ப்பது, கதை கேட்பது என்று இத்துறையில் தங்கள் வாழ்வை இணைத்துள்ளனர். எனவே நக்கீரன் என்ற பத்திரிகை கதை சொல்லப் புறப்பட்டு தமிழர்களுக்கு வாராவாரம் இரண்டு முறை கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரே கதையை பலவாரங்களுக்கு பல வடிவங்களில் சொல்வார்கள். வாரம் இருமுரை புதுக்கதைகளும் சொல்லவேண்டும். அப்போதுதான் வியாபாரம்நன்கு நடக்கும். இப்படிக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஈழத்தமிழர்கதை. ஈழத்தமிழரும் விடுதலைப்புலிகளும் பற்றிய கதை சொல்ல இந்தப் பத்திரிகை ஆரம்பித்து கொழுத்த பணம் ஈட்டியது.

Pirabaharan_Still_Alive_Nakeeranஆட்டோசங்கர் கதை, வீரப்பன் கதை, டாக்டர் பிரசாத் கதை பின்னர் விடுதலைப்புலிகள் கதை இவைகள் மூலம் பணம் பார்த்த ஒரே வார வெளியீடு இந்த நக்கீரன்தான். இவர்களது கதைகளைப் படித்த விடுதலைப் புலிகள் இவர்கள் அல்லவா (நக்கீரன் நபர்களை) எங்களை விடச் சிறப்பான போராளிகள் என்று நினைத்தனர். நாங்கள் நினைக்காததை, செய்யாததை எல்லாம் திடடமிட்டோம், செயல் படுத்தினோம் என்று எங்களுக்குப் புகழ் சேர்க்கிறார்கள் என்று வியந்து இவர்களிடம் செய்தி சொல்லப் புறப்பட்டனர் புலிகள். நக்கீரனுக்கு வருவாய் கழுத்தைத் தாண்டியது. தாங்கள் எதை எழுதினாலும் மடமக்கள் நம்புகின்றனர் என்று கண்டு கட்டுக்கதைகளில் கரைகண்டனர் இந்த நபர்கள்.

வழக்கம் போன்றே ஓர் அதிர்ச்சித் தகவலையும் கட்டுக்கதைகளையும் வெளியிட்டனர், செப்டம்பர் 11-14, 2010 தேதியிட்ட அவர்களது அவதூற்றுப் பத்திரிகையான நக்கீரனில். எங்கள் இயக்கப் பெயரைக் கெடுக்கும் வகையில் கதைவசனம் எழுதியுள்ளனர் இந்த வம்படி நபர்கள். எனவேதான் இவர்கள் பற்றி நாம் எழுதவேண்டி ஏற்பட்டது. அதற்காக வருந்துகிறோம். ஏனெனில் இவர்கள் ஒன்றும் தியாகிகளோ, போராளிகளோ அல்ல. வெறும் வேசதாரிகள். ஒருவரின் நற்பெயரைக் கெடுத்து அதில் பிழைப்பு நடத்துபவர்கள். ஆயினும் தொடர்ந்து இந்த நபர்கள் எங்கள் விடயத்தில் தலையிடாமல் இருக்கவே இதனை எழுதுகிறோம்.

இவர்கள் வடித்த தலைப்பு ‘கடத்தல், சித்திரவதை, கொள்ளை, தமிழகத்தில்
ராஜபக்சேயின் வெள்ளைவேன், அலறும் ஈழத்தமிழர்கள்’ இவைதான் அந்த வாரத்தின் வெடிச்செய்தி! இவர்கள் பின்னிய இந்த வெடிக்கதையின் முக்கியமானவற்றை கீழே தருகிறோம்!

ஈழத் தமிழரை இழிவுபடுத்தி பணம் பண்ணும் நக்கீரன் கடந்த வாரம் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார் ஈழத்தமிழ் இளைஞர் சிவபாலன். வெள்ளைவேன் வந்தது. விடுதலைப் புலியா என்று கேட்டனர். அவர் மறுக்கிறார். அப்படியானால் குவாலிஸ் வேனில் இருக்கும் இந்திய அதிகாரியிடம் விளக்கிச் சொல்லிவிட்டுப் போங்கள் என்று கட்டாயப் படுத்துகின்றனர். அவரும் சம்மதித்து வர, அவரைத் தூக்கிக் கொண்டு இரண்டு வேன்களும் கிழக்குக் கடற்கரைசாலை சவுக்குத்தோப்புக்கு பறந்தன. அடி, உதை என்று அவர் சித்திரவதைப் படுகிறார். இறுதியில் பணம் நான்கு லட்சத்தைக் கண்டதும் அடிப்பதை நிறுத்திவிட்டு சிவபாலனை சவுக்குத்தோப்பில் தள்ளிவிட்டுப் பறந்து விட்டனர். சிவபாலனுக்கு மரணபயம் அவரது கண்களை விட்டு அகலாமல் நடனமாடுகிறது என்று நக்கீரன் கோவாலு எழுதியுள்ளார்.

பிறகு மடிப்பாக்கத்தில் இலங்கைத் தமிழ் குடும்பமாம், உறவினர் சிங்கள ராணுவமுகாமிலாம், அவர்களை வெளியில் எடுத்துவிடுவது என்று கூறி 25 இலட்சம் ரூபாயை அடித்து உதைத்து பறித்துச் சென்றனர். அதிலும் தாம்பரம் பேருந்து நிலையத்துக்கு வரச்சொல்லி பறித்துச் சென்றனர்.

பிறகு கியூபிராஞ்ச் ஈழத்தமிழர் ஒருவரை பிடித்துச் சென்று விட்டது. அவரை விடுவிக்க அந்த அப்பாவியிடமிருந்து பத்து லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இவை எல்லாவற்றையும் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதை ஆதரித்த அமைப்பான ராஜன் தலைமையிலான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னனி என்ற அமைப்பைச் சேர்ந்த மோகனும் ரஜனியும் செய்கின்றனர் என்று ரஜனியின் புகைப்படத்தை வெளியிட்டு எங்களது இயக்கத்தின் பெயரை கெடுக்க நக்கீரன் கோபாலும் பிரகாஷ் என்ற நபரும் சேர்ந்து கதைவிட்டு வசனம் எழுதி பெற்றுக்கொண்ட பணத்துக்கு விசுவாசமாக செயல்பட்டுள்ளனர். அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் என்ற கட்சியைச் சேர்ந்த வன்னிஅரசு என்பவர்தான்  இந்தக் கதையைச் சொன்னதாகவும் அவர்கள் எழுதியுள்ளனர். இவர்களது கட்டுக்கதையில் பணம், பேருந்து நிலையம் இவைபற்றி அடிக்கடி வருகிறது. கோபாலும் அருப்புக் கோட்டையிலிருந்து பஸ் ஏறி வயிற்றுப்பிழைப்பிற்காக சென்னை வந்ததை இன்றுவரை மறக்கவில்லை என்பது நல்ல விடயம்தான்.

”ஈழத்தமிழன் ஒருவன் நான்கு இலட்சம் பணத்துடன் திருவான்மியூர் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார்”

இலங்கைத்தமிழர் ஒருவர் இலட்சக்கணக்கான பணத்துடன் திருவான்மியூர் லோக்கல் பஸ் நிலையத்தில் அடையாறு போவதற்காக காத்துக் கொண்டு நிற்கமாட்டார். ஐம்பது ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்று விடுவார். இந்தப் பேருந்துக் கதை எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் சொல்ல வேண்டும்.

அடுத்து, இந்திய அதிகாரிகள் என்று சொன்னதும் அவர் மதிப்பு கொடுத்து போலீஸ் வேனுக்கு சென்றதாக கூறுகிறார்கள். இந்த நபர்கள். அடி, உதை, சித்திரவதை செய்தபின்னர் பணம் நான்கு இலட்சத்தை கண்ட பின்னர்தான் அடிப்பதை நிறுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளனர். தம்பி கோபாலு, பணத்தைக் கண்டால் வாயைப்பிளப்பது உங்களைப் போல பிழைப்புத்தேடி சென்னைக்கு வந்தவர்கள்தான். ஈழத்தமிழர்கள் பணத்தைத் தேடி சென்னைக்கு வந்தவர்கள் அல்ல!!

நீங்கள் வீரப்பன் தூதராகி எவ்வளவு பணம் சுருட்டினீர்கள் என்பது அனைத்துப் பத்திரிகைகளுக்கும் தெரியும். போலீஸ் மற்றும் உளவுத் துறையினருக்கும் தெரியும். நாங்கள் பிழைப்புக்காக விடுதலைப் போராட்டத்துக்கு வரவில்லை. எங்கள் விடுதலை இயக்கங்கள் பற்றி விமர்சிக்கவோ, விளக்கவுரை கொடுக்கவோ உங்கள் யாருக்கும் தகுதி கிடையாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

”அமைதிப்படையை வரவேற்ற ராஜன்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.”

இப்போதும் சொல்கிறோம், இந்திய அமைதிப்படை மீண்டும் ஈழத்திற்கு வந்தால் நாங்கள் முன்னின்று ஆதரவு வழங்குவோம். வரவேற்ப்புக் கொடுப்போம். இதற்கான காரணங்கள் என்ன என்று மீசையை மட்டும் வளர்த்த கோவாலுக்குத் தெரியாது, தெரியவும் வாய்ப்பில்லை. ஏனெனில் ஒப்பந்தமும் அமைதிப்படையும் நிகழ்ந்த காலங்களில் நீங்கள் தராசு பத்திரிகையில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட். படங்கள் வரைந்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தீர்கள். இப்போது கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து நீங்கள் எங்களுக்கும் பட்டம் சூட்டப் புறப்பட்டு விட்டீர்கள்.

அமைதிப்படையை வைத்துக்கெர்ண்டு எங்கள் உரிமைப் பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படியான ஓர் வாய்ப்பினைக் கெடுத்து குட்டிச்சுவராக்கிய பெருமை தமிழகத்துப் புலி ஆதரவாளர்களையே சாரும். இன்றைய நிலையில் ஓர் படை ஈழத்துக்குச் செல்லாமல் எந்தவித உரிமைகளையும் நாங்கள் சிங்கள அரசிடமிருந்து பெற முடியாது. ஈழத்தமிழர்கள் எந்த நிலையை அடைந்தாலும் உங்களுக்கு இழப்பு ஏதுமில்லை. தொடர்ந்து பணவரவுதான். சில சமயங்களில் குறையலாம். இப்போதும் வீரவசனம் பேசி பணம் பறிக்கும் முயற்சியால்தான் தங்களைப்போன்ற பணவிரும்பிகள் ஈழத்தமிழருக்கு கதைகள் சொல்கின்றனர். அவர்களும் அவற்றை நம்பி இப்போதும் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். அதற்கு விசுவாசமாக நீங்களும் ஈழத்தமிழ் இயக்கங்களுக்கு பட்டம் சூட்டி, விளம்பரம் செய்து மகிழ்ந்து வாழ்ந்து வருகிறீர்கள்.

ராஜபக்சேயுடன் இணைந்து வெள்ளைவேனில் கொள்ளை அடிக்கின்றனர், அதனைப் பார்த்து வன்னிய அரசு என்று பெயர் சூட்டிக் கொண்ட ஜெயராஜ் என்பவர் வேதனைப்படுகிறாராம். இந்த ஜெயராஜ் – வன்னியஅரசு பற்றி பின்னர் நாம் சொல்கிறோம். கவலைப்பட இவரென்ன ராஜபக்சயால் விரட்டப்பட்டு அகதியாக தமிழகம்வந்தவரா? இலங்கைத் தமிழரது பணத்திலல்லவா இவர் வாழ்வை நடத்தி வருகிறார்!

நான்கு லட்சத்தை பறிகொடுத்த சிவபாலன் என்பவர் ‘இந்திய அதிகாரிகளிடம் வந்து கூறிவிட்டுச் செல்லவும்” என்று சொன்னதைக் கேட்டு மதிப்பு கொடுத்து வேன் நின்ற இடத்துக்கு வந்தவர் அடி, உதைபட்டுப் பணத்தைப் பறி கொடுத்ததும் நேராக போலீஸ் நிலையத்துக்குச் சென்று முறையீடு கொடுத்திருந்தால் உடனே அந்தத்திருடர்களை பிடித்திருக்கலாமே!

அவரது முகத்திலிருந்த மரணபயத்தை நக்கீரன் கோவாலுதான் கண்டுபிடித்து கதை எழுத முற்பட்டாரா? பணத்தைப் பறிகொடுத்த சிவபாலன் கோவாலுவையா சந்திக்கச் சென்றார்? அல்லது ஜெயராஜ் என்ற வன்னிய அரசிடமா சென்றார்? ஏன் தமிழ்நாட்டில் போலீஸ், சட்டம், ஒழுங்கு என்று எதுவுமே கிடையாதா? கோவாலுவும் வன்னியஅரசுமா தமிழ்நாட்டை நிர்வகிப்பவர்கள்?

அடுத்து இலங்கையில் இருக்கும் கைதி ஒருவரை மீட்க பணம் ரூ25 லட்சம் கேட்டு, பின் பஸ்’ நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து பறித்துச் சென்றனர் என்று வர்ணனை செய்து வருத்தப்படுகிறார். இந்தியப் பணத்தில் 25 லட்சம் என்றால் இலங்கைப் பணத்தில் 75 லட்சம். இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வெளியே வர ஒரு நபர் முயற்சிக்கிறார் என்றால் அவர் என்ன பொட்டு அம்மானின் ஸ்தானத்திலா இருந்தார் வன்னியில்?

அட மடப்பயல்களா! நாங்கள் இந்தத் தரகர் வேலை எதுவும் செய்வது கிடையாது. இப்போதும் புலிகளின் நபர்கள்தான் இந்தத் தரகுவழி பணப்பறிப்பைச் செய்கின்றனர். இன்றைய நிலையில் புலிகளின் முப்பது சதவீத நபர்கள் இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுகின்றனர். கொழும்பு விமானநிலையத்தில் உளவு வேலை பார்ப்பவர்கள் புலிகளின் அங்கத்தினர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்பது உண்மைதான். வன்னிப்பகுதியில் புதைக்கப்பட்ட பணம், நகைகளை, சிங்களஇராணுவத்துடன் இணைந்து காட்டிக் கொடுத்துப் பங்குபோடுகின்றனர் விடுதலைப் புலிகளின் ஒரு பகுதியினர்.

புலிகள் புனிதமானவர்கள், ஏனைய அனைவரும் அயோக்கியர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்தால் உங்களுக்குப் பணம் குவியும், புலிகள் வாரி வழங்குவார்கள் என்பதைக்கண்ட உங்களைப் போன்ற பலரும் இதுபோன்ற விசமப் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். நாங்கள் துரோகிகள் என்றால் பிரபாகரன் பிரேமதாசாவுடன் இணைந்தது போன்று நாங்களும் ராஜபக்சேயுடன் இணைந்திருப்போம். டக்கிளஸ், கருணா, பத்மநாதன் போன்று நாமும் வாழலாமே இலங்கையில்!

அடுத்து இன்னுமோர் புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டுள்ளீர்கள். கியூ பிராஞ்ச் பிடித்துச் சென்ற ஒருவரை விடுவிக்க 10 லட்சம் பேசி பறித்துக் சென்றனர். பத்து லட்சம் கொடுத்து தப்பிச்செல்லும் அளவுக்கு அந்த நபர் கொடூரப்புலிப் பயங்கரவாதியா? புலிப் பயங்கரவாதியாக இருந்தால் தான் இப்படி பத்து லட்சம் கொடுக்க வேண்டும். அப்பாவி ஈழத்தமிழருக்கு பத்து லட்சம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அத்துடன் புலிப் பயங்கரவாதி என்றால் ENDLF அங்கத்தினரை ஏன் அணுகவேண்டும்? புலி ஆதரவாளர்களை அல்லவா அணுகி இருப்பார்கள்? நக்கீரன் கோவாலு, கதை எழுதினால் அதை எழுதிய உங்களுக்கு என்றாலும் புரியவேண்டும்.

நோர்வேயிலிருந்து நெடியவன் எதையாவது சொல்ல நீங்கள் பெற்றுக் கொண்ட பணத்துக்காக ஏனைய இயக்கத்தவர்கள் மீது உங்களது பாணியில் சேற்றை வாரி வீசக்கூடாது.

ராஜீவ்காந்தி அவர்களைப் படுகொலை செய்தது போன்ற இன்னுமோர் நிகழ்வைச் செய்ய ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனுமதிக்கக்கூடாது. ராஜபக்சேயுடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமான புலிகள் இன்று கைகோர்த்து செயல்படுகின்றனர். ராஜீவ் அவர்களைப் போன்ற இன்னொரு சம்பவம் நிகழ்த்தப்பட்டால் ஈழத்தமிழர்கள் இலங்கையை விட்டு முற்றாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி ஓர் நிகழ்வை ராஜபக்சே எதிர்பார்த்து இருக்கிறார். அதிலும் புலிகளை வைத்தே இந்தச் செயலை மீண்டும் செய்விக்க அவர்கள் முயற்சித்து வருகிறார்கள். புலிகளில் பலபேர்களைக் கூலிகளாக்கி நாச வேலை செய்ய சிங்களஅரசுடன் இணைந்துள்ளனர்.

அப்படி ஓர் சம்பவம் நடந்தால் அதற்கும் விளக்கக்கூட்டம் போட புலிகளின் ஆதரவாளர்கள் தயாராக இருக்கின்றனர். இழப்பு தமிழகப் புலி ஆதரவாளருக்கோ, தலைவர்களுக்கோ தீவிர வாய்வீச்சாளர்களுக்கோ அல்ல! வீழ்வதும் பாதிக்கப்படுவதும் ஈழத்தமிழர்கள்தான்!

நோர்வே நெடியவன் தூண்டுதலால் அப்படியோர் நிகழ்வு ஏற்பட இருந்ததை நாம் தடுத்து நிறுத்தியுள்ளோம். அது பற்றியெல்லாம் கோவாலுவுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய தேவையில்லை. அதற்குப் பழிவாங்கவே நெடியவனின் தூண்டுதலில் ஜெயராஜூம் (வன்னியரசு) நக்கீரன் கோவாலுவும்.

எங்களைக் கேவலப்படுத்தி கதை விட்டுள்ளீர்கள். ‘பிடிபட்ட ரஜனி’ என்று ஓர் படத்தினை போட்டுள்ளீர்கள். யார் பிடித்தது? போலீஸ்சார் பிடித்தனரா? வலுக்கட்டாயமாக அவரது கடையிலிருந்தவரை வடபழனியிலிருக்கும் மயூரியா ஹோட்டலுக்கு இழுத்துச் சென்று புகைப் படம் எடுத்து அனுப்பிவிட்டு, ‘பிடிபட்ட ரஜனிகாந்த்” என்று மக்களை ஏமாற்றியுள்ளீர்கள். பிடிபட்டவர் என்றால் போலீசில் பிடிபட்டவர் என்ற அர்த்தம் தோன்றும் வகையில் கதை பின்னியுள்ளீர்கள்.  ஈழத்தமிழர் மத்தியில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பிழைப்பு நடத்தும் வன்னியஅரசு உமக்கு தமிழகப் போலீஸாகத் தெரிகிறார். ஏனெனில் நீங்கள் அனைவரும் குறுக்கு வழியில் சென்று பணத்தை நாடும் பண்பாளர்கள் தானே! தமிழ் நாட்டில் உள்ள புலி ஆதரவுப் பத்திரிகைகள் சில எங்களைக் கேவலமாக விமர்சித்து செய்தி வெளியிடுவதன் மூலம் புலிகளிடத்து நற்பெயரும் பணமும் பெற்றுள்ளார்கள். இப்படி இலாபம் சம்பாதிக்கும் சிறந்த குறுக்கு வழிதான் இந்தக் கட்டுக் கதையிலும் அடங்கியிருக்கிறது.

விடுதலை என்ற சொல்லைக் கேள்விப்பட்டும், புலிகளின் பணத்தைப் பார்த்த பின்னரும்தான் நீங்கள் ஈழவிவகாரத்தில் புகுந்தீர்கள். நாங்கள் வாழ்க்கையை விடுதலைக்காக இழந்து அகதிகளாகவும் அடக்கப்பட்டவர்களாகவும் நாடற்றவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் எங்களுக்குப் பட்டம் சூட்டும் பணியைச் செய்யாதீர்கள். அகதிகளாகவும் அடிமைகளாகவும் வாழும் வாழ்க்கையின் வலி என்னவென்பதே தெரியாத நீங்கள் வியாபாரத்துக்காகவும் லாபத்திற்காகவும் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்து, கெடுதல் செய்து பணம் பண்ணுகிறீர்கள். நக்கீரன் என்ற பெயரைப் பயன்படுத்தி அவதூறும் பொய்யும் கட்டுக்கதையும் எழுதி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் செயல் கேவலத்திலும் கேவலமான பிழைப்பு.

தெருவோரத்தில் நின்று கூச்சல் போடுவோராலும் காதுகள் கிழிய மேடையில் முழங்குவோராலும் கற்பனையில் கதை எழுதி பிழைப்பு நடத்தும் தங்களைப் போன்றோராலும் ஈழத்தமிழரின் ஒருபகுதியினர் ஏமாந்தது மட்டுமல்ல, அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். அப்படியிருந்தும் இன்னமும் விடுவதாகயில்லை. உங்களது வருவாய்க்காக எங்கள் மக்களை கூறுபோட்டு பணம் பண்ணப் பார்க்கிறீர்கள். பேராசைக்கு அளவு ஏது? ஆயினும் எங்களது இனப்பிரச்சினையில் இனியாவது பணம் சேர்ப்பதை நிறுத்தி ஒருவருக்கொருவர் சிண்டுமுடியும் வேலையைத் தவிர்த்தாலே நீங்கள் தமிழினத்திற்குச் செய்யும் பெரும்சேiவாக அது அமையும். வீரப்பனுக்காக கண்ணீர் விட்ட கோபாலு ஈழத்தமிழருக்காக நொந்து கண்ணீர் விடவேண்டாம். அவர்களிடமிருக்கும் பணத்தைப் பறிக்க வீரப்பன் வழியைப் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Pirabaharan_Still_Aliveகடந்த ஆண்டு மே மாதம் 18ந் தேதியுடன் தமிழர்களின் ஒட்டுமொத்தப் பகுதியையும் கைப்பற்றி விடுதலைப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக சிங்கள அரசு அறிவித்தது. அதன் பின்னர் 23-5-2009 அன்று பிரபாகரன் தனது படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற இந்தப் படத்தினை நக்கீரன் வெளியிட்டு பெருமை பெற்றது. இது ஒரு ஒட்டுப்படமோசடி என்பது அப்பாவித் தமிழர்களுக்குத் தெரியாது.

Pirbaharan_Still_Alive_Notஇந்த ஒட்டுப்படத்தின் உண்மையான படம் இதுதான். இது பாலசிங்கத்திடம் உரையாடிக் கொண்டிருக்கும் பிரபாகரனின் பழைய படத்தை இவ்விதம் ஒட்டு வேலை செய்து மொத்தத் தமிழினத்தையும் துணிந்து ஏமாற்றியது இந்த நக்கீரன். இப்படி ஓர் அழிவைச் சந்தித்த இனத்தின் முக்கியமான ஒருவர் புன்னகைக்ககூடிய காலகட்டமா அது! நக்கீரனின் ஒட்டுவேலை அவரை இழிவுபடுத்தியது என்பதுதான் உண்மை.

நக்கீரன் இதழின் வழக்கமான மோசடிதான் இது என்று தெரியாமல் இந்த மோசடிக்காரருக்கு வாழ்த்து சொன்ன அப்பாவி இளிச்சவாய்த் தமிழர்கள்.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(E.N.D.L.F) வெளியீடு !!!

”மூவின தலைமைகளுமே தீர்வுத் திட்டம் ஒன்று ஏற்படாமல் போனதற்கு காரணம்.” கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி

TULF Leader V Anandasangareeதமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஓகஸ்ட் 13, 2010 படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் தெரிவித்த கருத்துக்களின் முழுமையான வடிவம்.

கேள்வி நேரம்

டாக்டர் ரொஹான் பெரேரா: திரு ஆனந்தசங்கரி அவர்களே! உங்களிடம் கேட்பதற்கு இரண்டு கேள்விகள் உள்ளன. முதலாவது கேள்வி போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு அசாதாரணமான அரசியல் சூழல் நிலவியது. ஜனாதிபதியாகவும், முப்படைகளின் பிரதம கட்டளையிடும் அதிகாரியாகவும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவர் இருந்தார். அவரிடம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. அநேநேரத்தில் நாட்டின் பிரதம மந்திரியாக இன்னொரு கட்சியைச் சார்ந்த ஒருவர் இருந்தார். பாரம்பரியமாகவும், காலங்காலமாகவும் எமது நாட்டில் நிலவிவந்த அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் சமாதான பேச்சவார்த்தைக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற கருத்து அல்லது சிந்தனை உண்டு. அதேநேரத்தில் இத்தகைய ஒரு அரசியில் சூழல் நாட்டின் அதி முக்கிய தேசிய பிரச்சினையொன்றில் தெற்கிலுள்ள இரண்டு பிரதான அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து ஒரு தீர்வினை எடுக்க கிடைத்த ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்று ஒரு சிந்தனை அல்லது கருத்து உண்டு. ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி என்ற முறையில் இதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன்.

எனது அடுத்த கேள்வி வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பற்றியது. இவர்கள் எவ்வாறு யுத்தத்தின் பின்னரான சமாதான முயற்சிகளுக்கு உதவ முடியுமென நினைக்கின்றீர்களா?

இந்த இரு விடயங்களிலும் உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

திரு. வீ. ஆனந்தசங்கரி: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். ஜனாதிபதியாக ஒரு கட்சியை சார்ந்தவரும் பிரதம மந்திரியாக இன்னொரு கட்சியைச் சார்ந்தவரும் இருந்தது ஒரு முக்கிய பிரச்சினையே. போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கு இதுவே முக்கிய காரணம் என நான் நம்புகிறேன். நட்டின் தலைவருக்கும் பாராளுமன்ற தலைமைக்குமிடையே புரிந்துணர்வு இருக்கவில்லை. இது அழிவுக்கு இட்டுச் செல்லும் என நாம் உணர்ந்திருந்தோம். பாராளுமன்றத்தில் கண்காணிப்பாளர்களை விமர்சிக்க தொடங்கினார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்விக்கு இவையும் காரணிகளாக அமைந்தது.

எனினும் ஒப்பந்தத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் விடுதலைப் புலிகளின் ஆணவப் போக்கே. அவர்களது ஆணவத்திற்கு நான் ஒரு உதாரணத்தைக் கூறினால் நீங்கள் சிரிப்பீர்கள். எனது பாராளுமன்ற சகாவான திரு. சம்பந்தன் அவர்களிடம் ஒருமுறை கூறினேன். அதிபர் என்னை தனது அலுவலகத்தில் சந்திக்கும்படி அழைப்பு விடுத்தால் நான் அவரைச் சந்தித்து அவர் கேட்பதற்கெல்லாம் ஆம் ஐயா என்று கூறிவிடுவேன். அதுபோல் வகுப்பாசிரியர் என்னை சந்திக்க அழைத்து சிலவற்றை செய்யும்படி கூறினால் என்னால் செய்ய முடியுமா?  இதைக் கேட்டு திரு. சம்பந்தன் பல நிமிடங்கள் வாய்விட்டு சிரித்தார். நான் கூறுவது என்னவென்றால் பிரபாகரன் கூப்பிட்ட போதெல்லாம் நாங்கள் போய் அவர் கூறியபடியே கேட்டு நடந்தோம். அது பரவாயில்லை. தமிழ்ச்செல்வன் கூப்பிட்டனுப்பிய போதும் விருப்பமின்றியேனும் ஒரு தடவை சென்று பார்த்தேன்.

இப்போது என்னவென்றால் மக்களின் உரிமைகளை பறித்தவர்களும், சிறுவர்களை கைதுசெய்து புலிகள் இயக்கத்தில் சேர்க்கும் சாதாரண பேர்வழிகள் தம்மை வந்து சந்திக்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் புலிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் இப்போது இராணுவ உளவுப் பிரிவில் ஒரு பெரிய ஆளாக இருக்கின்றார்.

முன்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக ஒரு கட்சியும் செனட் சபையில் பெரும்பான்மையாக இன்னொரு கட்சியும் இருந்தபோதும் இதே பிரச்சினை இருந்தது. இதனால் செனட் சபை இல்லாதொழிக்கப்பட்டது. இங்கும் நாட்டின் தலைவரும் பாராளுமன்ற தலைவரும் ஒரே கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நிலைமை சீராக இருந்திருக்கும். போர் நிறுத்த ஒப்பந்தமும் சிறப்பாக அடுல்படுத்தப்பட்டிருந்திருக்கும்.

மற்ற விடயம் வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் பற்றியது. இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவ தயாராக உள்ளனர். நீங்கள் ஏன் கே.பி என்னும் மனிதனின் பின்னால் செல்ல விரும்புகின்றீர்கள்? கே.பி யிடம் 09 பேரே உள்ளனர். நீங்கள் ஒரு சாதாரண புலி ஆதரவாளரை கேட்டால்  அவர் கடையிலோ அல்லது பாரிஸ் நகரத்திலோ  நூறு பேரை திரட்டித் தருவார். அபிவிருத்தி வேலைகளுக்கு வேறு எவரையும் கூட்டி வருவதாக கே.பி கூறியதாகத் தெரியவில்லை.

அதேசமயம் நாடுகடந்த அரசு ஒன்றினை நிறுவுவதற்கு பல்வேறு நாடுகளில் ஒரு குழு தேர்தலை நடத்துகின்றது. அவரையும் இங்கு கூட்டிவந்து “ நீ இங்கு வந்து ஏதாவது செய், ஆனால் அரசியலில் இறங்காதே திரும்பிவந்து உனது நாட்டில் அமைதியாக வாழப் பழகிக்கொள் “ எனக் கூறினால் அதில் அர்த்தமுண்டு. அத்தகையவர்களே நமக்குத்தேவை. அதைவிடுத்து இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக சகல அராஜகங்களுக்கும்  காரணமானவர்கள் நமக்குத் தேவையில்லை. இவர்களின் பணமும் பாவப்பட்ட பணம். போதைப்பொருள், கடத்தல், சித்திரவதை ஆகியவை மூலம் பெறப்பட்ட பணம். இப் பணம் எமக்கு தேவையில்லை.

மக்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குங்கள். ஆறு மாதங்களில் அவர்கள் தமது வாழக்கையை மீளமைத்துக் கொள்வார்கள். உறுதியளிக்கப்பட்ட நட்ட ஈடுகளை அவர்களுக்கு வழங்குங்கள். இழந்த உயிர்களைத் தவிர மற்ற அனைத்தையும் தான் பெற்றுக் கொடுப்பேன் என ஒருமுறை ஜனாதிபதி கூறினார். நட்ட ஈடு இழந்த உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் வழங்கலாம்.

கிளிநொச்சியில் ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் வாழ்ந்து உயர்ரக மோட்டார் வாகனங்களையும், லாரிகளையும் வைத்திருந்தவர்களும் பெரியளவில் வர்த்தகம் செய்தவர்களும் 100 ஏக்கர் காணிக்கு மேல் விவசாயம் செய்து கோடீஸ்வரராக இருந்தவர்களும் பின்னர் ஒருவேளை உணவுக்காக மணித்தியாலக் கணக்கில் வரிசையிலே காத்திருக்க நேரிட்டது. 2,  3 வாரங்களுக்கு முன்னர் பரந்தனிலிருந்து தர்மபுரம் வரையிலான இடங்களுக்கு சென்றிருந்தேன். சாதாரணமாக என் கண்களிலிருந்து கண்ணீர் வராது. அத்தகைய கல்நெஞ்சன் நான். அதற்காக என் தந்தை என்னோடு கோபித்துக் கொண்டதும் உண்டு.

நான் சென்ற இடங்களில் கண்டது யாதெனில் அங்குள்ள நிலைமை இடம்பெயர்ந்து முகாம்களில் அவர்கள் இருந்தபோது இழந்ததைவிட மோசமானதாகும். அதற்கு இரண்டு நாட்களின் பின்னர் ஒரு நள்ளிரவில் பாரிய மழை பெய்ய தொடங்கியது. திடீரென்று விழித்தெழுந்த நான் இந்த மக்கள் இப்போது என் செய்வார்கள் என எண்ணி அழுதேன். இவற்றை ஒருவரும் உணர்வதில்லை. நுளம்புச் சுருள் இன்றி அங்கு என்னால் ஒரு இரவைக்கூட கழிக்க முடியாது. ஆனால் இந்த மக்கள் வெட்ட வெளிகளில் எவ்வாறு எவ்வளவு காலம் வாழ்ந்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களில் பலர் உதவத் தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இலகுவாக இவற்றை செய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுங்கள். இங்கு மூலதனம் செய்ய விரும்புவோருக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படுமென விளம்பரப்படுத்துங்கள். உங்களுக்கு எதற்காக கே.பி?. அவருக்கு ஏன் இத்தனை வசதிகள்? அவருக்கு தண்டனை கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. அவரை தன்பாட்டில் விட்டுவிடுங்கள். அவரை மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.

திருமதி மனோகரி இராமநாதன்: திரு. ஆனந்தசங்கரி அவர்களே! யுத்தம் தற்போது வெல்லப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான தமிழ் மக்களின் மனம் இன்னும் வெல்லப்படவில்லை. இதற்கு உங்கள் கருத்து என்ன?

திரு. ஆனந்தசங்கரி: அவர்களை சுதந்திரமாக வாழ விடுங்கள். யாழ்ப்பாணத்தில் இன்று யாரிடமேனும் இந்த அரசாங்கம் நல்லதா? அல்லது ஐ.தே.க அரசாங்கம் நல்லதா என்று கேட்டால் ஒருவரும் வாய்திறக்க மாட்டார்கள். ஏன்? யாழ் பல்கலைகழத்தை திறந்து வைக்க சிறிமாவோ அம்மையார் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது வீரமகாகாளி அம்மன் கோவிலடியில் நாங்கள் ஒரு சத்தியாக்கிரகத்தை ஏற்பாடு செய்தோம். மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் இருக்கும்படி கூறினோம். அம்மையாரும் வந்தார். சத்தியாக்கிரகமும் நடந்தது. இன்று அவ்வாறு செய்ய முடியுமா?

இன்று கிளிநொச்சியில் 750 குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் தமது சொந்த இடங்களில் குடிமயர்த்தப்படுவதாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் தற்போதைய நிலைமையை கண்கொண்டு பார்க்க முடியாது. அவர்களின் காணி இராணுவ முகாமுக்கு மிக அண்மித்ததாக இருக்கின்றது. காடுகளை அழித்தே அவர்கள் இந்த விவசாய காணிகளை உருவாக்கினர். இவர்களில் பலர் அகதிகளாக பல்வேறு தோட்டப்பகுதிகளிலிருந்து வந்த இந்திய வம்வாவளி மக்கள். இந்த 750 குடும்பங்களில் 250 குடும்பங்கள் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மிகுதி 500 குடும்பங்கள் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் காணிகளுக்கு இவர்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தம்மை சுட்டு கொல்லுங்கள், தம்மை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என இந்த மக்கள் கதறுகின்றனர். அவர்களின் காணி அரச தேவைக்கு வேண்டுமாம். அரச தேவைக்கு வேறு இடங்களில் காணிகள் இல்லையா? அவர்கள் எமது மக்களின காணிகளை அபகரிக்க வேண்டும்?

அரசாங்கம் செய்யக்கூடியது இதுதான். இராணுவத்தை உடனடியாக அகற்றி சிவல் நிர்வாகத்தை அங்கு ஏற்படுத்த வேண்டும். சில சிறந்த அரசாங்க அதிபர்கள் இருக்கின்றார்கள். கிளிநொச்சியில் ஒரு நல்ல அரசாங்க அதிபர் இருந்தார். ஏதோ காரணங்களை காட்டி அவரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தர். அவரை விடுவித்து கிளிநொச்சிக்கு திரும்ப அனுப்புமாறு அரசாங்கத்திடம் கோரினேன்.  ஆனால் அவரை பல மாதங்களள் தடுப்புக்காவலில் வைத்திருந்து பின்னர் அண்மையில் அவருக்கு பரிச்சயமற்ற முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக அனுப்பியுள்ளனர். அவரை கிளிநொச்சிக்கே அனுப்பியிருந்தால் இந்தக் காலகட்டத்தில் அவரால் சிறப்பாக பணியாற்றியிருக்க முடியும்.

மக்கள் இப்போது சுதந்திரமாக இல்லை. அவர்களின் முதல் தேவை தாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே. அவிருத்தி அல்ல. எங்கள் நிலதத்pல் எங்களை சுதந்திரமாக  வாழ விடுங்கள். அல்லது எம்மை சுட்டுத்தள்ளுங்கள் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை. நான் தேசபக்தியுடையவன். இந்த மண்ணை நேசிப்பவன். இந்த உணர்வு சிறுவயது முதலே எனது இரத்தத்தில் கலந்துள்ளது. இது ஈழமும் அல்ல கொழும்பும் அல்ல. இது எனது சொந்த பூமி. நான் இங்கு வாழ விருமபுகின்றேன். அதுதான் உண்மைநிலை. வெளித்தோற்றத்தில் ஏமாந்து விடாதீர்கள். விசேடமாக யாழ் மாவட்டத்தில் யுத்தத்தால் மிகக் குறைந்த வீடுகள் மாத்திரம் சேதமடைந்தன. அங்கு இசை, நடன நாடக விழாக்கள் அரங்கேறுகின்றன. வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லுங்கள். அவைதான் யுத்தத்தால் முற்று முழுதாக அழிந்த இடங்கள். அங்குதான் அபிவிருத்தி தேவை. ஆனால் அவர்கள் தமக்கு அபிவிருதி தேவையில்லை எனக் கூறுகின்றார்கள். அவர்களை தமது சொந்த இடத்தில் விவசாயம் செய்ய விடுங்கள். அவர்கள் ஆறு மாதங்களில் தமது சொந்தக்காலில் நிற்பார்கள்.

திரு எச். எம்.ஜி.எஸ். பனிக்கார்: விடுதலைப் புலிகளுக்கு விரோதமாக இருப்பது அநாகரிகமாக கருதப்பட்ட அந்த நாட்களில் நீங்கள் உங்கள் உயிரையும் பணயம் வைத்து அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தீர்கள். எனவேதான் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் சுதந்திரமாக உள்ளார். ஆனால் 10,500 பேர் போராளிகள் இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற உங்கள் உணர்வினை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. தற்போது உங்களைப் போன்ற அரசியல் வாதிகளுக்கும் மற்றும் தேர்ந்தெடுக்ப்பட்ட அரசியல் வாதிகளுக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை இந்த காலக்கட்டத்தில தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த 10,500 பேரையும் நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

அவர்கள் கட்டாயத்தின் பேரிலாவது விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்கள் தற்போதும் தடுப்புக் காவலில் உள்ளனர். அரசாங்கம் அவர்களுக்கு சில தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

எனது அடுத்தக் கேள்வி யுத்தம் இராணுவ ரீதயிhக முடிவுக்கு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில் வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எவ்வாறு தமிழ் கட்சிகள் ஒருமித்த குரலில் உதவ முடியும்?

திரு. ஆனந்தசங்கரி: அன்று தமிழ் காங்கிரஸ், தமிரசுக் கட்சி என இரண்டு அரசியல் கட்சிகள் இருந்தன. அபேட்சகர்கள் தகுதி அடிப்படையில் தமது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால் சயனைட் குப்பிகளை முன்னர் அணிந்திருந்தவர்கள் இன்று பாராளுமன்றத்தில் உள்ளனர். இது எமது முக்கிய பின்னடைவு. இது பற்றி நான் மேலும் கூறினால் அது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுததலாம் என கருதுகின்றேன்.

தமிழ் கட்சிகளிடையே ஒத்த கருத்தினை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்ற முடிவில் இருக்கின்றது. இக் கட்சிகள் கடந்த காலங்களில் எனக்கு இழைத்த தீங்குகளையும் அவமானங்களையும் மற்று மக்களின நலனுக்காக நான் ஒன்றுபடத் தயராக இருக்கின்றேன். தற்போது உயர்ந்த கோட்பாடுகளை பேசுவோர் கடந்த ஆறு வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு தற்போது தமிழ்சமூகத்தை பாதுகாக்கப் போவதாக கூறுகின்றனர். தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. எனினும் மக்களுக்காக முன்னிலையில் நிற்பவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொது வேலைத் திட்டத்தை முன் வைத்தால் தமிழ் மக்கள் அந்த வேலைத்திட்டத்தினை ஏற்றுக் கொள்வார்கள் என்பதே எனது நம்பிக்கை.

இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது என்று எனக்குத் தெரியாது. நாடு கஷ்டத்தை எதிர்நோக்கினால் மக்களும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிவரும். நான் சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களுடன் வாழந்திருக்கின்றேன். மூவின மக்களுக்கு கற்பித்திருக்கின்றேன். சிங்கள மக்கள் மிகவும் இணக்கப்படானவர்கள். தவறு அவர்களின் தலைமையில். முஸ்லீம் மக்களும் இணக்கப்பாடானவர்கள். தவறுகள் அவர்கள் தலைமையில். தமிழ் மக்களும் அவ்வாறே இணக்கப்பாடானவர்கள். தவறு அவர்களின் தலைவர்களே. மூவின தலைமைகளுமே தீர்வுத் திட்டம் ஒன்று ஏற்படாமல் போனதற்கு காரணம். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் காலங்காலமாக ஒன்றாக வாழந்து வந்துள்ளனர். எனது நண்பர்கள் சிங்களவர்களே. அதேபோன்று முஸ்லீம் சமூகத்தினரேடையும் நல்ல நண்பர்கள் எனக்கு உண்டு. எனவே தவறு சமூகங்களின் தலைமைகளிலே அன்றி மக்களில் இல்லை. நான் இதை கூறுவதற்கு தலைவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனினும் அவர்களுக்கும் எனது கருத்தில உடன்பாடு இருக்குமென நம்புகின்றேன்.

தடுப்புக் காவலில் உள்ளவர்களை பற்றி ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்கையில் அவர்கள் யாவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றே கூறினார். பின்னர் ஓரிரு நாட்களேயாயினும் பயிற்சி பெற்றோம் என ஒப்புக் கொண்டோர் அனைவரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உண்மையில் இவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களை விடுவிப்பதால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அவர்களால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என உறுதி மொழி பெற்றுவிட்டு அவர்களை பெற்றோரிடம் ஒப்படையுங்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் துணிந்து செயலாற்ற வேண்டும்.

பிரபாகரனுக்கு அடுத்த ஆளாக இருந்த 200,000 பேர் கொலை செய்யப்பட்டதற்கும் எண்ணற்றோர் கண்பார்வையை இழந்தும் அங்கவீனமுற்றும் பல பெண்கள் தமது இரு கால்களை இழந்து தவழ்ந்து செல்ல வேண்டிய நிலைமையை ஏற்படுத்திய கே.பி போன்ற குற்றவாளிகளை பொறுத்தவரை நாம் துணிந்து முடிவுகளை எடுக்க முடியுமானால் ஏன் இந்த அப்பாவி இளைஞர்களையிட்டு நாம் ஓர் முடிவு எடுக்க கூடாது. நடந்தவை யாவற்றிற்கும் பொறுப்பாளி ஒருவர் இருப்பாரெனில் அவர் கே.பி யே. கே.பியை நீங்கள் நம்புவதால் இந்த இளைஞர்களை ஒன்றில் நீங்கள் விடுதலை செய்யுங்கள் அல்லது நீதிமன்றத்தின் முன் நிறுத்தி அவர்களின் பெற்றோரின் உத்தரவாதத்துடன் அவர்களை பிணையில் செல்ல விடுங்கள்.

இன்னும் விடுவிக்கப்படாத பல்கலைகழக மாணவர்கள் உள்ளனர். ஜே.வி.பி கிளர்ச்சியின் பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் குழுக்கள் மூலம் விசாரிக்கப்பட்டு விடுவிக்கக்கூடியோரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விடுதலைப் புலிகளுக்கு தேனீர் கொடுதோரும் உணவு வழங்கியவர்களும் இன்று தடுப்பு முகாம்களில் உள்ளனர். அவர்களின் உணவை சாப்பிட்ட மனிதன் இன்று சுதந்திரமாக இருக்கின்றார்.

தலைவர்: நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்றால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலைப் புலிகளுடன் எத்தகைய தொடர்புகள் வைத்திருந்தார்கள் என்பதனை விசாரித்தறிவதற்கு குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் இயக்கத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்டிருந்தாலோ அல்லது அவர்களின் பங்கு மிகச் சிறிய அளவில் இருந்தாலோ அவர்களை விடுவித்து அவர்களை சமூகத்ததுடன் இணைக்க வேண்டும். நீங்கள் அப்படித்தானே கூறுகின்றீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: ஆம் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு பல குழுக்கள் நியமிக்கப்படலாம்.

தலைவர்: ஆம் பல குழுக்கள்

திரு. எ. பி பரணகம: மொழிப்பிரச்சனை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்.

திரு. ஆனந்தசங்கரி: மொழிப்பரச்சினை ஏற்பட அதிக அளவு தவறு செய்தோர் அரசியல்  தலைமைத்துவங்களே. 1956 வரைக்கும் எல்லா பாடசாலைகளிலும் சிங்களம் ஒரு கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டது. திரு. சண்முகம் அவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். எனது தம்பி சிங்களம் கற்றார். சோமஸ்கந்தா கல்லூரியில் எனது தந்தையார் அதிபராக இருந்தபோது பட்டதாரியான ஒரு பிக்குவிடம் நான் சிங்களம் கற்றேன். காலஞ்சென்ற கே.பி இரத்காலக அவர்கள் கல்வி கற்ற ஹாட்லி கல்லூரியில் திரு. சோமரத்ன என்பவர் சிங்களம் கற்பித்தார். யாழ் இந்துக் கல்லூரி கீதத்தை கேட்டால் அதில் “சிங்களமும் தமிழும்” என்ற வரிகள் வருகின்றன.

பின்னர் என்ன நடந்தது? சிங்கள மாத்திரம் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அனைத்துப் பாடசாலைகளிலும் சிங்களம் கற்பித்தல் நிறுத்தப்பட்டது. அநேகமான பாடசாலைகள் தனியார் பாடசாலைகளானபடியினால் இது சாத்தியமாயிற்று. பரீட்சார்த்தமாக வேறு பாடங்கள் கற்பிக்க ஈடுபடுத்தப்பட்ட இந்த சிங்கள ஆசிரியர்களின் சேவை ஒரு வருடத்தின் பின்னர் நிறுத்தப்பட்டது. சிங்களம் மாத்திரம் சட்டம் கொ:டுவரப்பட்டிருக்காவிட்டால் ஒருவேளை எனது இந்த சமர்ப்பித்தலை நான் சிங்கள் மொழியில் செய்திகருக்க கூடும்.

தலைவர்: சிங்களமும் தமிழும் பாடவிதானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமென்று நீங்கள் கூறுகின்றீர்களா?

திரு. ஆனந்தசங்கரி: மொழி பிரச்சினைக்கும் இனப்பிரச்சினைக்கும ஏற்றதோர் தீர்வு கண்ட பின்னரே அத்தகைய ஏற்பாடு சாத்தியமாகும். சிங்கள, தமிழ் மொழி கல்வி தீர்வுத திட்டத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். மொழிப் பிரச்சினையையோ இனப்பிரச்சினையையோ தீர்க்காமல் சிங்கள, தமிழ் கல்வியை நீங்கள் கட்டாயமாக்கினால் அது செயலற்றதாகி விடும். நான் எப்போதும் கூறுவது என்னவெனில் “சமாதானம் எமது கதவை தட்டுகிறது.’ கதவைத் திறந்து அனைத உள்ளே அனுமதிப்பதோ அல்லது கதவை சாத்துவதோ எமது கைககளிலதான் உள்ளது.

தலைவர்: பல்கலைகழகங்களில் சேர்வதற்கு சிங்களம், தமிழ் அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். என நீங்கள் கருதுகிறீர்களா?

திரு. ஆனந்தசங்கரி:ஆம் நிர்வாக சேவையில் சேர்வதற்கு மொழித்தேர்ச்சி கட்டாயமாக இருந்தது என்று எனக்கு ஞாபகம்.

திரு. எம். பி பரணகம: கட்டியெழுப்ப கலாச்சார தொடர்புகளை எவ்வகையில் பிரயோசனப்படுத்தலாம்

திரு. ஆனந்தசங்கரி:அவ்வாறு கருதுவது தவறானது. முன்னர் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்த 100 யுவதிகளுக்கு நடனப் பயிற்சியளித்து அவர்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். இது அந்த யுவதிகளின் மனோநிலைநிலையை பற்றி அறியாமல் செய்யப்படும் காரியங்கள். அவர்கள் வாழ்வில் பெரும் துன்பங்களை சந்தித்தவர்கள். அதில் அநேகமானோருக்கு தமது தாய், தந்தையர் எங்கேயெனத் தெரியாது. தமது குடும்பங்களில் பல இழப்புக்களைச் சந்தித்தவர்கள். வீடு பற்றி எரியும் போது அல்லது பக்கத்து வீட்டில் ஒரு மரணச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நாம் இசைமழையில் திளைப்போமா? நான் ஒரு இசை விரும்பி. சிங்களம் தமிழ் அல்லது வேறு எந்த மொழியானாலும் இசையை ரசிப்பேன். ஆனால் அதற்கு கால நேரம் உண்டு. அண்மையில் யாழ் நாடக மன்றம் இரு வாரங்களுக்கு நாடகவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். எமது அயலவர்கள் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது நாம் இத்தகைய விழாக்கள் நடத்துவது முட்டாள்தனமாகது என அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அவர்களும் எனது நியாயங்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் திட்டத்தை கைவிட்டனர்.

நான் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்தபோது கிராமங்களுக்குச் சென்று விடிய விடிய நாடகங்கள் பார்த்திருக்கின்றேன். ஆனால் அதற்குரிய நேரதம் இதுவல்ல. மக்கள் வீடின்றியும், உணவின்றியும் எதுவித வசதிகளுமின்றி வாழும் போது அவர்களின் குழந்தைகள் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வேண்டுமென நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்கலாம்.

தலைவர்: தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.

தலைவர்: தற்போது வடக்கிலும் கிழக்கிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. தொலைகாட்சி போன்ற மின் ஊடகங்களை பயன்படுத்தி ஆங்கிலக்கல்வியை மேற்கொள்வது பற்றி உங்கள் கருத்தென்ன?

திரு. ஆனந்தசங்கரி: அதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் கல்வி கற்ற நாட்களில் இந்தியாவிலிருந்து பல பட்டதாரி ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த சிறப்புடன் சேவையாற்றினர். எனவே நாம் ஆங்கிலக் கல்வியை ஆரம்பிக்கும் போது அந்த வகையிலும் முயற்சிக்கலாம்.

திரு. எச்.எம்.ஜி.எஸ். பணிகக்கார்: வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக்குடிமயர்த்தி அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது பற்றிய உங்கள் கருத்தென்ன?

திரு. ஆனந்தசங்கரி: போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இந்த விடயம் ஒரு நிபந்தனையாக உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இது அன்றைய அரசு விட்ட தவறு. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது முஸ்லீம் மக்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்க வேண்டுமென புலிகளுக்கு அறிவித்திருக்க வேண்டும். புலிகளை பிரதிநிதித்துவம் செய்வதாக பாராளுமன்றத்தில் இருந்த குழுவினரும் இந்த வேண்டுகோளை புலிகளுக்கு விடுத்திருக்க வேண்டும். முஸ்லீம் மக்கள் வெளியேறும் போது ரூபா 500 மாத்திரம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முஸ்லீம்களில் பல கல்விமான்கள் இருந்தனர். எனது நண்பரான திரு மக்பூல் ஒரு சிறந்த தமிழ் – சைவ அறிஞர். தேவார திருவாசகங்கள் யாவும் நன்கறிந்தவர். அவர் மன்னார் அரச அதிபராக இருந்தபோது புலிகளால் கொல்லப்பட்டார்.

பேராசிரியர் கரு. ரங்காவத்த:  நீங்கள் எப்போதும் சுதந்திரமாகவே இயங்கி வந்துள்ளீர்கள். அதனை நான் பாராட்டுகின்றேன். ஆனால் ஏன் தமிழ் சமூக ஆர்வலர்கள், நான் அரசியல் தலைமைத்துவங்களை கூறவில்லை. செயலற்று இருக்கின்றார்கள் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. இவர்கள் நினைத்திருந்தால் சமூகத்துக்கு எவ்வளவோ செய்திருக்கலாம். இவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஏதும் தடைகள் உண்டா? ஏன் எல்லாவற்றுக்கு அரசாங்கத்தை வேண்டிநிற்கிறார்கள்.

திரு. ஆனந்தசங்கரி: அவர்கள் சுயமாகச் செயல்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லையென்றே கூறுவேன். வடக்கில் எண்ணற்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. அவர்கள் அரச அனுமதியின்றி ஒன்றும் செய்ய முடியாத நிலை. கிளிநொச்சி மாவட்டம் எனக்கு பரிச்சயமான மாவட்டமாகையால் எதுவித ஊதியமும் இன்றி அந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய நான் தயாராக இருக்கின்றேன் என அரசிடம் தெரிவித்தேன்.

தமிழ்த் தலைவர்களின் தனிப்பட்ட அபிலாசைகள் தமிழ்ச் சமூகத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என நான் அன்று ஒத்துக்கொண்டிருந்தால் இன்னும் பாராளுமன்ற உறுப்பினராக, அதுவும் இந்த 15 பராளுமன்ற உறுப்பினர்களின் தலைவனாக இருந்திருப்பேன். நானும் விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதியாக ஏற்கவில்லை. ஆனாலும் அதை நான் வெளிப்படையாக கூறுவதில்லையென சகபாடி ஒருவர் ஒருமறை என்னிடம் கூறினார். நான் எனது மக்களையும் ஏமாற்ற விரும்பவில்லை. நான் பெரிதாக எதையும் இழக்கவில்லை. கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் கிளாலியிலிருந்து மல்லாவி வரை கிராமம் கிராமமாக வீடுவீடாக நடந்தே சென்றுள்ளேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து நான் வழக்காடுவதை நிறுத்தினேன். எனது பாராளுமன்ற வாழ்க்கையை சமூகப்பணிகளுக்காக அர்ப்பணித்தேன். வேறு எதற்காகவும் அல்ல.

திரு. எச்.எம்.ஜி..எஸ். பணிகக்கார்: நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு  பாதிக்ப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல் எவ்வாறு உதவும் என நீங்கள் நம்புகிறீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: முதலில் நாங்கள் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். இப்போது அவர்களிடம் போய் நாங்கள் இதனை தருவோம் அல்லது ஒரு பாதை போட்டு தருவோம் என்று கூறினால் அதில் அவர்களுக்கு அக்கறையிருக்காது. அவர்கள் முதலில் தமது சுதந்திரத்தையும் தமது மூன்றுவேளை உணவைப் பற்றியுமே சிந்தித்த வண்ணம் உள்ளனர். தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என மக்கள் நம்ப வேண்டும். நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி வரை சென்று பார்ப்பிர்களாயின் அங்கு வசந்தம் இல்லை. உத்துர வசந்தமும் இல்லை. அது பெயரளவில் மாத்திரமே உள்ளது எந்த அபிவிருத்தியும் அங்கு இல்லை.

தலைவர்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பற்றி குறிப்பிட்டுள்ளிர்கள். இந்த நட்டஈடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவீர்களா?

திரு. ஆனந்தசங்கரி: கிளிநொச்சி மக்கள் குடியேற்றப்பட்ட ஒரு விவசாய பூமியாகும். காலப்போக்கில் இந்த குடியேற்றவாசிகள் செல்வந்த விவசாயிகளாக மாறினார்கள். கிளிநொச்சி ஒரு வளமிக்க மாவட்டமாக மாறியது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இந்த மாற்றத்தை கண்டேன். குடிசைகள் யாவும் அழகிய வீடுகளாக மாறின. இப்போது அவர்கள் சகலவற்றையும் இழந்து விட்டனர். நீங்கள் இதனை நேரில் சென்று பார்க்கலாம். இதற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு. அவர்கள் மந்தைகள் போல் மக்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு விரட்டியடித்தனர். அவர்களை தப்ப விட்டிருந்தால் அவர்கள் தமக்குத் தேவையானவற்றை எடுத்து சென்றிருப்பர்.

இறுதியில் அவர்கள் மாத்தளனை அடைந்தபோது  அவர்கள் உடுத்தியிருந்த உடைமையைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. பலர் தமது நகைகளை விட்டுட்டு வந்தனர். ஏனெனில் அவர்கள் ஐந்து சவரன் நகைகளுக்கு மேல் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை. அபோபோன்று ரூபா 5000 இற்கு மேல் எடுத்துவரவும் அனுமதிக்கப்படவில்லை. மக்கள் இடம்பெயர்ந்து சென்றபின் அங்கு அதிகளவில் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சான்றுகள் உண்டு.

தலைவர்: எனவே நட்டஈடு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

திரு. ஆனந்தசங்கரி: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற நட்டஈடு வழங்குவது அரசின் கடமையாகும். முதல் தடவையாக ரூபா 5000 வும் 2ம் தவணையாக ரூபா 20,000 கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சிலர் மூன்றாம் தடவையாக ரூபா 50,000 வை பெறுவதாக கேள்விப்படுகின்றேன். சகலவற்றையும் இழந்த மக்களுக்கு இது எவ்வாறு உதவும்? மக்களுக்கு வழங்கப்படும் உலர் உணவுகூட அரச பணததிலிருந்து வழங்கப்படவில்லை. அது உலக உணவுத் திட்டத்திலிருந்து வழங்கப்படுகின்றது. உழவு இயந்திரத்தை இழந்த ஒருவருக்கு அதற்கு மாற்றீடாக விவசாய உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் தமது வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஏதுவாக அவர்களுடைய நட்டஈடு அமைய வேண்டும். வீட்டின் மேல் கூரையும் உணவும், உடையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

முறிகண்டி கோவிலிலிருந்து கிளிநொச்சிவரை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட யன்னல்களும் கதவுகளும் மிகப் பெரியளவில் வைக்கப்பட்டுள்ளன. இராணுவத்துக்கு வீடுகள் கட்ட இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிகின்றேன். தமக்கென வீடுகட்டியோர் வீதிகளில் இருக்கும் போதும், அகதி முகாம்களில் அல்லல்படும்போதும் இராணுவத்திற்கென தயார் நிலையில் வீடுகள் கட்டப்படுகின்றன. காணிக்கு உரிமையாளர்கள் இருக்கும் போது அக்காணிகள் இராணுவத் தேவைக்கு எடுக்கப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது நீங்கள் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகின்றீர்கள்.

இந்த நாடு ஒரு சுதந்திரமான பாதையில் செலலப் போகின்றதா? சுகல மக்களும் சம அந்தஸ்துடன் வாழப் போகின்றார்களா? அல்லது இந்த நாட்டின் ஒருபகுதி மக்கள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் போன்ற ஒரு இராணுவ அமைப்பின் கீழ் அல்லல்பட போகின்றார்களா? என்பதை நாங்கள் தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டதென்றே கருதுகின்றேன்.

தலைவர்: திரு. ஆனந்தசங்கரி அவர்களே! நீங்கள் இங்கு வந்து எமக்குத் தெரிவித்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி உங்கள் தனித்தன்மையையும் சுதந்திர போக்கையும் வெளிப்படையான கருத்துக்களையும் நாம் மிகவும் பாராட்டுகின்றோம். நீங்கள் தெரிவித்த கருத்துக்களால் நாம் நிச்சயம் பயனை அடைந்துள்ளோம். நாங்கள் எமது சிபாரிசுகளை தயாரிக்கும் போது நீங்கள் தெரிவித்த கருத்துக்களை கவனத்திற்கெடுத்து கொள்வோம்.

திரு. ஆனந்தசங்கரி: இந்த சந்தர்ப்பத்தை எனக்குத் தந்தமைக்கு நன்றி கூறும் அதேநேரத்தில் எனது கருத்துக்களால் உங்களுக்கு ஏதும் அசௌகரியம் ஏற்படுத்தியிருப்பின் அதற்காக மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர்: அவ்வாறு ஏதும் இல்லை

திரு. ஆனந்தசங்கரி: உங்களுக்கு எனது நன்றிகள்.

கற்றுக்கொண்ட அனுபவங்கள் புதிய வரலாற்றை பெற்றுத்தரும்! : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Minister_with_Peopleதமிழ் மக்கள் நடைமுறைச் சாத்தியமான தீர்வினையே எதிர்பார்த்து நிற்கின்றனர். அவர்கள் சந்திரனையோ சூரியனையோ கேட்கவில்லை என அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார். நேற்று நடைபெற்ற படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நீண்ட நேரம் சாட்சியமளித்த அவர் இலங்கையர் என்பதற்காக தமிழர் என்பதையோ, தமிழர் என்பதற்காக இலங்கையர் என்பதையோ விட்டுக்கொடுக்க தாம் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் இன்று இரு வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஒன்று அரசியல் உரிமைப்பிரச்சனை. இதுவரை காலமும் இது முழுமையாக தீர்க்கப்படாமல் உள்ளது. ஆனால், அதற்கான முன்நகர்வு நடந்து வருகின்றமை குறித்து நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.

அடுத்தது, இந்நாட்டில் யுத்தம் ஆரம்பித்து அது அழிவு யுத்தமாக மாறியதால் அதனை வெற்றிகொள்ள வேண்டிய கட்டாயத்தின் போது எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் பிரச்சினைகள் எனபனவும் இதுவரை அழியாத அவலங்களாகவுள்ளன. ஆகவே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகலருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியது உடனடிக் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

._._._._._.

ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் முன்பாக 03.09.2010 வழங்கிய சாட்சியம்.

இதுவரை கால மனித குல வரலாறு என்பது அதிசயிக்கத்தக்க மாற்றங்களைக் கண்டு வந்திருக்கின்றது. மாற்றம் ஒன்றைத் தவிர இங்கு மாறாதிருப்பது எதுவுமேயில்லை. மாறி வரும் உலகில் மாற்றங்கள் நிகழும் என்று நாமும் நம்பிக்கை கொண்டு எமது மக்களின் மனச்சாட்சிக் குரலாக இங்கு நான் பேச விரும்புகின்றேன்.

தமிழ் மக்களின் கடந்த கால வரலாறுகள் யாவும் கொடியதும், நெடியதுமான துயரங்களைச் சுமந்து வந்த வரலாறுகளே! எரிந்து போன தேசமும், அழிந்து போன வாழ்வுமாக யுத்தத்தின் வடுக்களையே எமது மக்கள் இதுவரை சுமந்து வந்திருக்கின்றார்கள்.

எங்கள் பாதங்கள் இன்னமும் சுடுகின்றன. எரிந்து போன எங்கள் தேசத்தின் தெருக்களில் எம் மக்களோடு மக்களாகச் சேர்ந்து நாமும் நடந்து வந்திருக்கின்றோம்.

எமது மக்கள் இதுவரை பட்ட துயரங்களும், விட்ட கண்ணீரும், இழந்த இழப்புக்களும், அடைந்த அவலங்களும் தொடர்ந்தும் எம் உணர்வுகளில் எரிந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும், இன்று எமது தேசம் மாற்றம் ஒன்றைக் கண்டிருக்கின்றது. புயலடித்த எங்கள் தேசம் அமைதிப்பூங்காவாக மாறியிருக்கின்றது. போர் முழக்கங்கள் இப்பொழுது இல்லை. துப்பாக்கி சத்தங்கள் எங்கும் ஓய்ந்து விட்டன. எந்த நேரத்தில்?… என்ன நடக்குமோ?… என்ற அச்சங்களும், ஏக்கங்களும் எமது மக்கள் மனங்களை விட்டு அகன்று சென்று விட்டன.

இழப்புக்களும் அவலங்களும் நிகழ்ந்திருந்தாலும், இதுவே இறுதி இழப்பாகும் என்ற நம்பிக்கையோடு, இதுவே எமது மக்கள் சந்திக்கும் இறுதியான அவலமாக இருக்கட்டும் என்ற உறுதியோடு, இனி, துன்பங்களோ, துயரங்களோ இங்கில்லை என்ற எதிர்பார்ப்போடு இந்த மாற்றத்தை உருவாக்கித் தந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.

இந்த மாற்றத்தைக் கண்டு நாம் எமது மக்களோடு இணைந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனாலும், இத்தகைய மாற்றம் ஒன்று நிகழ்ந்து விட்டதற்காக மட்டும் நாம் எமது இலட்சிய சுமையை இடைவழியில் இறக்கி வைத்து விட முடியாது.

எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் எமது மக்கள் அரசியலுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாகவும், ஐக்கிய இலங்கைக்குள் மற்றைய இனக்குழும மக்களோடு சரிநிகர் சமானமானவர்களாகவும், இனங்களுக்கிடையில் சமத்துவ ஐக்கியமுள்ளவர்களாகவும் வாழ அனுமதிக்கின்ற அரசியல் மாற்றமொன்று உருவாகும் வரை நாம் எமது பயணத்தில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது.

இத்தகைய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக முதலிலே நாம் சில கேள்விகளுக்கு விடை காணவேண்டும்.

எமது அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வினை நாம் கடந்த காலங்களில் பெற்றுக் கொள்ள முடியாது போனமைக்கான காரணங்கள் யாவை?..

எமது மக்கள் அழிவுகளையும், அவலங்களையும் மட்டுமே இது வரை காலமும் தொடர் துயரங்களாக சுமந்து வந்திருப்பதற்கான காரணம் என்ன?….

இவைகளுக்கு நாம் முதலில் விடை தேட வேண்டும்!… நாம் கடந்து வந்த பாதையில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் எவை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்!

அனுபவங்களின் கருப்பையில் இருந்துதான் புதிய புதிய வழிமுறைகளும், சிந்தனைகளும் பிறப்பெடுக்கின்றன. தோற்றுப்போன வழிமுறைகளில் இருந்து கற்றுக் கொண்டு, அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொண்டு நடைமுறைச்சாத்தியமான வழிமுறை நோக்கி செல்வதால் மட்டுமே நாம் தேடிக்கொண்டிருக்கும் இலட்சியக் கனவுகளை எட்டி விட முடியும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இதையே வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

நாம் எதைச் சொல்லி வந்துள்ளோமோ அதுவே இங்கு நடந்து முடிந்திருக்கின்றது.

எது நடக்கும் என்று தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தோமோ அதுவே இங்கு நடந்து கொண்டுமிருக்கிறது.

எந்த கனவுகள் ஈடேறும் என்று நாம் எண்ணியிருந்தோமோ அவையே எமது அனுபவங்கள் கற்றுத்தந்த புதிய வழிமுறைகளில் தொடர்ந்து நடக்கவும் போகின்றன….

ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தை வழி நடத்திச் சென்ற ஆரம்பகால தலைவர்களில் நானும் ஒருவன். அன்றைய தவிர்க்க முடியாத காலச்சூழலே நாம் ஆயதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாய கட்டளைகளை எம்மீது பிறப்பித்திருந்தது.

எமது சமகால இருப்பை நியாயப்படுத்துவதற்காக எமது கடந்தகால வரலாற்றை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை.

ஆனாலும், ஆயுதப்போராட்டம் என்பது நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தப்பட்டு, நிதானிக்கச் செய்ய வேண்டிய இடத்தில் நிதானித்து நடத்தப்பட வேண்டிய ஒன்று.

மாறிவரும் சூழலை கருத்திற் கொண்டு, எமது மக்களின் கருத்துக்களை சரிவர நாடி பிடித்து அறிந்து,… எமது பலம், பலவீனங்களை கருத்தில் கொண்டு,…

எம்மிடம் உள்ள பலத்தோடு, எடுக்க முடிந்த உரிமைகளை எடுப்பதற்காக எமது போராட்ட வழிமுறையினையும் நாம் மாற்றியமைத்திருக்க வேண்டும்.

நாம் தனிநபர் பயங்கரவாதிகளாகவோ, அன்றி ஆயுதத்தின் மீது மோகம் கொண்டு எழுந்த வெறும் வன்முறையாளர்களாகவோ ஆயுதம் ஏந்தி களத்தில் நின்றிருக்கவில்லை.

தமிழ் மக்களை நாம் எவ்வாறு நேசித்திருந்தோமோ அது போலவே இஸ்லாமிய சகோதர மக்களையும், சிங்கள சகோதர மக்களையும் நேசித்திருந்தோம்.

இதன் காரணமாகவே நாம் இஸ்லாமிய சகோதர மக்களுக்கு எதிராகவோ அன்றி, அப்பாவி சிங்கள சகோதர மக்களுக்கு எதிராகவோ எமது துப்பாக்கிகளை ஒரு போதும் நீட்டியிருந்ததில்லை. நீட்ட நினைத்திருந்ததும் இல்லை.

அப்பாவி சிங்கள சகோதர மக்கள் அநியாயமாக புலிகளின் தலைமையால் அழித்தொழிக்கப்பட்ட போது எமது எதிரிகள் அப்பாவி மக்கள் அல்ல என்றும், அன்றைய அரசாங்கமே என்றும் சரியான திசை வழியை நாம் சொல்லி வந்திருக்கின்றோம். இத்தகைய படுகொலை சம்பவங்களை வன்மையாக கண்டித்தும் வந்திருக்கின்றோம்.

இஸ்லாமிய சகோதர மக்கள் வணக்க ஸ்தலங்களில் வைத்து வஞ்சகத்தனமாகக் கொன்றொழிக்கப்பட்ட போதும் சரி, வரலாற்று காலந்தொட்டு இரத்தமும் தசையுமாக தமிழ் மக்களோடு ஒன்று கலந்து வாழ்ந்த இஸ்லாமிய சகோதர மக்கள் வடக்கில் இருந்து பலாத்காரமாக புலிகளின் தலைமையினால் வெளியேற்றப்பட்ட போதும் சரி….

இந்த கொடிய நிகழ்வுகளானவை தமிழ் பேசும் மக்களில் ஒரு சாராராக இருக்கும் இன்னொரு சிறுபான்மை சமூக மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயலாகும் என்று அவைகளை நாம் கண்டித்தே வந்திருக்கின்றோம்.

இவ்வாறு சகல இன மத சமூக மக்களுக்கும் எதிரான வன்முறைகளை நாம் அவ்வப்போது கண்டித்தே வந்திருக்கின்றோம்.

மொத்தத்தில் தமிழ், முஸ்லிம், மற்றும் மலையக மக்களுக்காக மட்டுமன்றி பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படுகின்ற சிங்கள மக்களின் உரிமைகளுக்காகவும் தென்னிலங்கை சிங்கள முற்போக்கு சக்திகளோடு கை கோர்த்து அனைத்து மக்களின் நலன்களுக்காகவுமே அன்று நாம் போராட எழுந்திருந்தோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய காலச்சூழலில் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த இலங்கை அரசின் அன்றைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண மறுத்திருந்ததை நான் முதலில் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

இலங்கைத் தீவு என்பது பல்வேறு இன மத சமூக மக்களுக்கு சொந்தமான நாடு. தமிழ் என்றும் சிங்களம் என்றும் இரு வேறு மொழிகளை பேசுகின்ற மக்கள் சமூகங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும், இந்த நாட்டின் ஒரு பகுதியினராகிய தமிழ் மக்களுக்கு மொழியுரிமை மற்றும் பல்வேறு விடயங்கள் மறுக்கப்பட்டிருந்தன.

1956 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அன்றைய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டமும் மற்றும் பிரஜாவுரிமை தொடர்பான பிரச்சினையும் திட்டமிட்ட வகையிலான பூகோள ரீதியில் குடிப்பரம்பல்களை மாற்றக்கூடியதான குடியேற்றங்களும் அரசு கவனிப்புப் பெறாமல் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடன் அரச உத்தியோகங்களிலும் ஏனைய நிர்வாக செயற்பாடுகளிலும் தமிழ் மக்கள் நடத்தப்பட்ட முறைமைகள் உயர்கல்வி பெறும் விடயங்களில் தரப்படுத்தலை மேற்கொண்டமை அடிக்கடி தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இனக்கலவரங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்ளைச் செயற்படுத்த விடாமல் அன்றைய சிங்கள அரசியல் தலைமைகளே தடுத்தமை போன்ற பல்வேறு காரணங்கள் தமிழ் மக்களை இந்த நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகளாக ஒதுக்கி வைத்திருந்தன.

இலங்கையின் புகழ் ப+த்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்கள் தான் சிங்கள சகோதர மக்கள் சமூகத்தை சார்ந்தவராக இருந்துகொண்டும் அன்று தனிச் சிங்கள சட்டத்திற்கு எதிராக அன்று குரல் கொடுத்திருந்தார்.

இரு மொழிக் கொள்கை என்பது இலங்கையை ஒரு தேசமாக வைத்திருக்கும் என்றும், ஒரு மொழிக் கொள்கை என்பது இலங்கையை இரண்டு தேசங்களாகக் கூறு போட்டுவிடும் என்றும் தனிச் சிங்கள சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவர் குரல் எழுப்பியிருந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அப்போது பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரான பொன் கந்தையா அவர்கள், இந்த நாட்டில் வாழும் ஒரு தமிழ் குடிமகன் ஒருவன்; தன் மனைவியுடன், அல்லது தன் பிள்ளைகளுடன் எந்த மொழியில் பேசவேண்டும் என்பதை தீர்மானிக்குமாறு நான் கோரவில்லை என்றும் மாறாக இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் இந்த நாட்டின் அரசாங்கத்தோடு எந்த மொழியில் பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று கோருவதாகவும் தமிழர்கள் எல்லோரும் சிங்கள மொழியை படிப்பதற்கும், சிங்களவர்கள் எல்லோரும் தமிழ் மொழியைப்; படிப்பதற்கும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டால் நாம் ஆதரிப்போம் எனக் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்டு ஏனைய பாரம்பரிய தமிழ்த்; தலைமைகளும் இதை ஒரு மாற்று யோசனையாக முன்வைத்திருந்தால் அன்றைய ஆட்சியாளர்களும் அதை நடைமுறைப்படுத்தியிருந்தால் மொழியுரிமை பிரச்சினைக்கு அன்றே தீர்வு காண முடிந்திருக்கும்.

இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது?. எமது இளம் சந்ததியினர் உலக நாடுகள் எங்கும் புலம் பெயர்ந்து சென்று உலக நாடுகளின் பல்வேறு மொழிகளையும் பேச வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மொழியை அவர்கள் மறந்துதான் போய்விடுவார்களோ என்ற ஏங்கங்களும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் உருவாகி வருகின்றன.

இந்த நிலைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, இரு மொழிகளையும் ஈரின மக்களும் கற்க வேண்டும் என்ற தோழர் பொன் கந்தையா அவர்களின் கோரிக்கையினை நிராகரித்திருந்த தமிழ்த் தலைமைகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இன்று கூட தமிழும் அரச கரும மொழிகளில் ஒன்று என்பது சட்டத்தில் இருந்தாலும், அதை நடைமுறையில் அனுபவிப்பதற்கான நிர்வாகச் சிக்கல்கள் பெரும் தடையாக இருந்து வருகின்றன என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழர் மாநாட்டு அனர்த்தங்களும், தெற்காசியாவின் சிறந்த பொது நூலகமாக கருதப்பட்ட யாழ் நூலகம் 1981ல் அன்றைய ஆட்சியாளர்களால் எரித்தழிக்கப்பட்ட சம்பவமும் அன்றைய ஆட்சியாளர்கள் மீது தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு தீராத கசப்புணர்வுகளை உருவாக்கியிருந்தது.

இதே வேளை, கடந்த பொதுத்தேர்தலின்போது யாழ் வந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்கூட யாழ் நூலகம் எரித்தொழிக்கப்பட்ட துயரம் தோய்ந்த சம்பவம் குறித்து யாழ் மக்கள் மத்தியில் மிகவும் மனம் வருந்தி தமிழில் உரையாற்றியிருந்ததையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அதேபோன்று, அண்மையில் யாழ்ப்பணத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் அன்றைய ஆட்சியாளர்களால் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சம்பவத்தையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

காலத்திற்குக் காலம் அவ்வப்போது மாறி மாறி வந்த இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக, தமக்கு எதிராக சிங்கள மக்களே கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் சிங்கள சகோதர மக்களின் கவனத்தை தமிழ் பேசும் மக்களுக்கெதிராகத் திசை திருப்பி விட்டடிருந்தனர்.

இதன் காரணமாகவே 1956, 1958, 1977 மற்றும் 1981 முதல் 1983 வரை என்று இலங்கைத் தீவில் இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டிருந்தன. இதன்போது பெரும்பாலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள், உடமைகளை இழந்த நிலையில் தென்னிலங்கையில் இருந்து வடக்கு கிழக்கு நோக்கி அகதிகளாக துரத்தப்பட்டார்கள்.

இந்த இடத்தில் எம் தேசத்து கவிஞன் ஒருவன் எழுதியிருந்த ஒரு கவிதை வரியினை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

பொடி மெனிக்கே தடியெடுக்க
குல துங்க துவக்கெடுக்க
கூரையேறி நாங்கள் குதித்தது
அப்புகாமி முற்றத்தில்…
கொலைப்பயத்தில்
குங்குமத்தை அழித்திருந்த
எங்கள் குல மாதர்
நெற்றிகளில் முத்தமிட்டு
சிரித்து வரவேற்றாள் சிங்கள மாது!
என்று அந்த கவிஞன் எழுதியது போல் தமிழ் மக்கள் அன்றைய ஆட்சியாளர்களால் தூண்டிவிடப்பட்டவர்களால் தாக்கப்பட்ட போது அவர்களைக் காப்பாற்றி வடக்கு கிழக்கு நோக்கி அனுப்பியவர்களும் சிங்கள சகோதரர்களே என்பதையும் நான் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

இதே வேளை, இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பிந்திய காலம் தொட்டு இன்று வரை இலங்கையில் எந்தவொரு இனக்கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை.

அவ்வாறானதொரு நிகழ்வைத் தூண்டிவிடுவதற்கு இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டிருக்கவும் இல்லை.

இந்த நிகழ்வானது இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான இலங்கை அரசின் ஆட்சியாளர்களின் குணாம்ச ரீதியான மாற்றத்தை எம் முன்பாக ஒப்புவித்து நிற்கிறது என்பதையும் நான் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

நாம் சிங்கள சகோதர மக்களை வெறுத்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கவில்லை. எமது உரிமைகளைத் தர மறுத்த அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்கள மக்களையும் இணைத்து ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்காகவே போராட நாம் எண்ணியிருந்தோம்.

ஆனாலும், சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் அரசியலுரிமை குறித்த தெளிவான சிந்தனைகளை கொண்டிருந்தவர்கள் இருந்த போதிலும், அதற்கான ஒரு ஒன்றுபட்ட ஆயுதப்போராட்டத்தை இணைந்து நடத்துவதற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து போதிய அளவில் எவரும் முன்வந்திருக்கவில்லை.

இதன் காரணமாகவே அன்றைய சூழலில் நாம் சிங்கள முற்போக்கு சக்திகளோடு உறவுகளை வைத்துக்கொண்டிருந்தாலும் தனியான ஆயுதப்போராட்டத்தையே நடத்த தொடங்கியிருந்தோம்.

ஆனாலும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாக ஒன்றுபட்டு நிற்பதை மறுத்து போராட்டக்களத்தில் அர்ப்பண உணர்வுகளோடு நின்றிருந்த ஆயிரக் கணக்கான சக இயக்க போராளிகளையும், சக இயக்கத் தலைவர்களையும் புலிகளின் தலைமை தெருத்தெருவாக கொன்றொழித்தபோதுதான் எமது போராட்டம் செல்ல வேண்டிய பாதையை விட்டு விலகி திசை மாறி செல்லச் தொடங்கியது.

தமக்கு எதிராக போராடுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்திருந்ததை போலவே புலிகளின் தலைமையும் அன்றைய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சக விடுதலை அமைப்புகள் மீதான தடையினை விதித்திருந்தது.

புலிகளின் தலைமை ஏற்படுத்தியிருந்த இந்தத் தடையானது அன்றைய அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மிக மோசமாகவே தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஏனெனில், எமது தமிழ்த் தலைவர்கள் எவரையும் அரச படைகள் கொன்றொழித் திருக்கவில்லை. மாறாக சக இயக்கங்கள் மீதான தடைகளை உருவாக்கிய புலிகளின் தலைமையே தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் அழித்தொழித்தது.

இலங்கை அரசுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் போராடுவதற்கான சுதந்திரம் என்பது இலங்ககை அரசினால் கூட அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயக வழியில் குரல் கொடுத்து வந்த தமிழ்த் தலைமைகள் கூட புலிகளின் தலைமையால் அழித்தொழிக்கப்பட்டன.

இந்தச் சூழலில் எமது போராட்டம் எதை நோக்கிச் செல்கிறது என்பது பற்றி அப்பொழுது சிந்தித்தோம். தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் பிரதான எதிரிகள் உண்மையாகவே இலங்கையின் ஆட்சியாளர்களா? அல்லது புலிகளின் தலைமையா என்று எங்களைச் சிந்திக்கவைத்தது.

ஏனைய விடுதலை இயக்கங்களை புலிகளின் தலைமை தடை செய்து, அதன் உறுப்பினர்களை தெருத்தெருவாக கொன்றொழித்து, தனித்தலைமை அதிகாரத்தை கையிலெடுத்திருந்தபோது புலிகளின் தலைமையை நோக்கி ஏன் என்று கேள்வி கேட்டு தவறுகளை சுட்டிக்காட்ட யாருக்கும் அந்த ஜனநாயக உரிமை இருந்திருக்கவில்லை.

ஒத்துப்போக மறுத்த சொந்த இனமக்களையே புலிகளின் தலைமை கொன்றொழித்த போது ஏன் என்று கேட்கும் பலத்தோடு யாரும் இருந்திருக்கவில்லை.

அப்பாவிச் சிங்கள முஸ்லிம் மக்களை புலிகளின் தலைமை கொன்றொழித்த போது அதையும் ஏன் என்று கேட்கும் பலத்தோடு யாருமிருந்திருக்கவில்லை.

அழிவு யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வு நோக்கி செல்லுங்கள் என்று புலிகளின் தலைமையிடம் கேட்பதற்குக் கூட யாரும் அப்போது பலமாக இருந்திருக்கவில்லை.

தவறுகளை சுட்டிக்காட்டி சரியான திசை வழி நோக்கி அழைத்து செல்ல முடிந்த உண்மையான விடுதலை அமைப்புகள் சகலவற்றையும் அடித்து நொருக்கி, சிதைத்து மனித குலத்திற்கு சவாலாகவே புலிகளின் தலைமை செயற்பட்டுக்கொண்டிருந்தது.

இழந்து போன உரிமைகளை பெறுவதற்கு மாறாக இருக்கின்ற உரிமைகளும் இழந்து போகும் ஆபத்தையும், அழிவையும் நோக்கி எமது போராட்டம் செல்ல தொடங்கியிருந்த போதுதான் நான் முன்னெச்சரிக்கையாக சில விடயங்களை சொல்லியிருந்தேன்.

விடுதலைக்கான போராட்டத்தை அழிவு யுத்தமாக மாற்றி, எடுத்த முயற்சிகள் யாவற்றையும் எங்கோ ஓரிடத்தில் கொண்டு சென்று சரித்து கொட்டிவிடப்போகின்றார்கள் என்று அன்றே நான் தொலை தூர நோக்கோடு சகல தரப்பினர் மத்தியிலும் எடுத்து விளக்கியிருந்தேன்.

ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சமத்துவ உரிமையும் கூடிய அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்த்திருந்த எம் கனவுகளை மெய்ப்படுத்த… தமிழ் மக்கள் அழிவுகளை மட்டும் சந்திக்க தொடங்கியிருந்த ஒரு காலச்சூழலில்…. விடுதலைக்கான போராட்டம் என்பது இருந்த உரிமைகளையும் இழந்து போவதற்கான அழிவுப்பாதையை நோக்கி செல்லச் தொடங்கிருந்த வேiளையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது உருவாக்கப்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ஒரு பொன்னான வாய்ப்பு, அரியதொரு சந்தர்ப்பம்.

எமது ஜனநாயக சுதந்திரத்தை மறுத்து எம் மீது கொலைக்கரங்களை நீட்டிக்கொண்டிருந்த புலிகளின் தiலைமையின் மீதான விரோதங்களைக் கூட நாம் கருத்தில் எடுத்திருக்கவில்லை.

ஆனாலும்,….. யார் குற்றியும் அரிசியானல் சரி என்ற வகையில் புலிகளின் தலைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு எமது மக்களின் அரசியலுரிமையை நோக்கி செல்லாமல் அந்த சந்தர்ப்பத்தை தட்டிக்கழித்து விட்டார்களே என்ற தீராத கவலையே எமக்கு உண்டு.

இலங்கை இந்திய ஒப்பந்த நடை முறைகளில் ஈ.பி.டி.பியினராகிய எமக்கு பங்கெடுப் பதற்கான ஜனநாயக உரிமை என்பது மறுக்கப்பட்டிருந்தமை குறித்த ஆட்சேபனையை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனாலும்,….. எங்களது உரிமையை மறுத்து, அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பத்தை கையில் எடுத்துக்கொண்டவர்கள் அதை சரிவரப்பன்படுத்தியிருக்காமல் து~;பிரயோகம் செய்து விட்டார்களே என்ற மனத்துயரங்களே எமக்கு இப்போதும் உண்டு!

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது முழுமையான அரசியல் ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனங்கள் குறித்து நாம் சிந்தித்திருந்தாலும் அது குறித்து நாம் கவலை கொண்டிருக்கவில்லை.

ஆனாலும்,….. கிடைத்த உரிமைகளை எடுத்துக்கொண்டு இன்னமும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக அதை ஒரு ஆரம்ப முயற்சியாக எடுத்துக்கொண்டு முன்னோக்கி சென்றிருக்கவில்லையே என்ற ஆதங்கமே நமக்கிருக்கிறது.

தமது விருப்பங்களுக்கு மாறாக அவசர அவசரமாக இலங்கையும், இந்தியாவும் தங்களது நலன்களுக்காக செய்து கொண்ட ஒப்பந்தமே இதுவாகும் என்று புலிகளின் தலைமை கிளப்பியிருந்த சுய கௌரவப் பிரச்சினை குறித்து நாம் அக்கறை செலுத்தவில்லை.

அரசியல் தீர்வின்றி அழிவுகள் மட்டும் சூழ்ந்த துயரச்சமுத்திரத்தில் மூழ்கி திசை தெரியாது திக்குமுக்காடிக்கொண்டிருந்த தமிழ் மக்களை கரை நோக்கி அழைத்துச் செல்ல முடிந்த தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதே இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற உறுதியான கருத்தே இன்னமும் எம்மிடம் உண்டு!

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது மயிலே! மயிலே! இறகு போடு என்று நாங்கள் இரந்து கேட்டு பெற்றுக்கொண்ட யாசகம் அல்ல.

அது அன்றைய எமது அனைத்து விடுதலை இயக்கங்களினதும் நீதியான போராட்டமும், அர்ப்பணங்களும் பெற்றுத்தந்த மாபெரும் வரப்பிரசாதம் ஆகும்!

அந்த வகையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய நீதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கும் இலங்கை இந்திய ஒப்பந்த உருவாக்கத்தில் நியாயமான பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானதில் கணிசமான பங்களிப்பு இருந்திருக் கின்றது என்பதை நான் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஏற்றுக் கொள்கின்றேன்.

ஆனாலும், அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, தமிழ் மக்களை தொடர்ந்தும் அழிவு யுத்தப்பாதைக்கு இழுத்துச் சென்று எமது மக்களையும், அழியவைத்து, தனது இயக்க உறுப்பினர்களையும், அழிவுயுத்தத்திற்கு பலி கொடுத்தது….

இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தவிர, எதையுமே தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காமல், பெற்றுக்கொள்வதற்கு மாறாக, இருந்தவைகளையும் துடைத்து அழித்து தொலைத்து, அழிவுகளை மட்டும் தமிழ் மக்கள் மீது அவலங்களாக சுமத்தி விட்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் தானும் அழிந்து போன நிகழ்வானது தனக்குத் தானே அவர் தோண்டிய படுகுழி என்பதே உண்மையாகும்.

உனது கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. அவைகள் ஒவ்வொன்றும் உனக்கு நீயே என்றோ ஒரு நாள் தூவி விட்டவைகள். இதைத்தான் இந்த இடத்தில் என்னால் கூற முடியும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்த தவறியிருந்த புலிகளின் தலைமை அதன் பின்னரும் கனிந்து வந்திருந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருந்தது.

பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை…

சந்திரிகா குமாரணதுங்க அரசுடனான பேச்சுவார்த்தை….

ரணில் விக்கிரமசிங்க அரசுடனான பேச்சுவார்த்தை….

இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசுடனான பேச்சுவார்த்தை….

இவ்வாறு தொடர்ச்சியாக சர்வதேச மத்தியஸ்தளங்களோடு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின் போது அர்த்தமற்ற நிபந்தனைகளை விதிப்பதைத் தவிர்த்து, சாத்தியமான வழிமுறையில் புலிகளின் தலைமை அரசியல் தீர்வொன்றிற்கு உடன் பட்டிருந்தால் தமிழ் மக்கள் அழிவுகளைச் சந்தித்திருக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்திருக்காது.

பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம், என்பன உருவாக்கப்பட்ட போது அந்த ஒப்பந்தங்களை கிழித்தெறிந்து அதை தடுத்து நிறுத்தியிருந்தவர்கள் இலங்கையின் பெரும்பான்மையினம் சார்ந்த அன்றைய அரசியல் தலைமைகளே என்பதில் எந்தவித மறு பேச்சுக்கும் இங்கு இடமில்லை.

ஆனாலும், இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல், அதற்கு பின்னரான அனைத்து முயற்சிகளும் தவறவிடப்பட்டமைக்கான தவறுகளை தமிழ்த்; தலைமைகளே ஏற்க வேண்டும்.

கிடைத்ததை எடுத்துக்கொண்டு மேலும் எடுக்க வேண்டிய உரிமைகளுக்காக கட்டம் கட்டமாக முயன்று பெற்றுக்கொள்ளாமல் கிடைத்தவைகள் அனைத்தையும் அரை குறை தீர்வு என்று தட்டிக்கழித்து வந்த அனைத்து தலைமைகளுமே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஆகவே தமிழ் மக்கள் இன்றுவரை தாங்கி வந்துள்ள துயரங்களுக்கும், அவலங்களுக்குமான பொறுப்பை வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது மட்டும் சுமத்தி விட்டு சம்பந்தப்பட்ட ஏனைய தமிழ் தலைமைகள் அதற்கான பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது.

சம்பந்தப்பட்ட அனைத்து தமிழ்த் தலைமைகளும் அதற்றான தார்மீகப்பொறுப்பை ஏற்கவேண்டும். ஆயுதப்போராட்டத்தை ஆரம்பங்களில் வழி நடத்திச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் தமிழ் மக்கள் சுமந்து வந்த அவலங்களுக்கான தார்மீகப்பொறுப்பை நானும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்கின்றேன்.

எதையுமே பெற்றுத்தராமல் வெறும் அவலங்களை மட்டுமே எம் மக்கள் மீது சுமத்தி வந்த அழிவு யுத்தத்தை நிறுத்துமாறு நாம் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் பல தடவைகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

புலிகளின் தலைமையை அரசியல் தீர்வு நோக்கி கொண்டுவருமாறு நாம் சர்வதேச சமூகத்திடமும் பல தடவைகள் வலியுறுத்தியும், எடுத்து விளக்கியும் கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றோம்.

இது போலவே புலிகளின் தலைமையை ஆதரித்து, உறவு கொண்டிருந்த சக தமிழ் கட்சிகளின் தலைமைகளிடமும் புலிகள் தலைமையை அரசியல் தீர்வு நோக்கி அழைத்து வாருங்கள் என்று பல தடவைகள் கூறி வந்திருக்கின்றோம்.

ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும் சம உரிமையும் கிடைக்க முடிந்த ஒரு அரசியல் தீர்விற்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வருவாரேயானால் நான் போட்டி அரசியல் நடத்திக்கொண்டிருக்க மாட்டேன், அரசியலில் இருந்து விலகி நின்று நல்லவைகள் நடக்கின்றனவா என்று வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பேன் என்று பல தடவைகள் நான் பகிரங்கமாக சொல்லியிருக்கின்றேன். ஆனாலும் இறுதி வரை இந்த வழி முறை நோக்கி பிரபாகரன் வந்திருக்கவில்லை.

சர்வதேச சமூகம் புலிகளின் தலைமையை சரியான வழிமுறை நோக்கிக் கொண்டு வர தவறிவிட்டது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புலிகளின் தலைமையை ஆதரித்து உறவு கொண்டிருந்த தமிழ் கட்சிகளும் அதை செய்திருக்கவில்லை என்பதை நான் நேசமுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்தததும் தான் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு நேரடியாகவே பேசி தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்புவதாக பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.

இதையிட்டு நாம் மகிந்த ராஜபக்ச அவர்களின் திறந்த மனதை வெளிப்படையாகவே பாராட்டி விரும்பி வரவேற்றிருந்ததோடு, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட சகலர் மத்தியிலும் எடுத்து விளக்கியிருந்தோம்.

யுத்த நிறுத்தம் குறித்து யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளின் தலைமையோடும், அரசியல் தீர்வு குறித்து அனைத்துத் தமிழ், முஸ்லிம் தலைமைகளோடும் அரசாங்கம் பேச வேண்டும் என்பதே ஈ.பி.டி.பி யினராகிய எமது நிலைப்பாடாக இருந்து வந்தது.

இதை மகிந்த ராஜபக்ச அவர்கள் நடத்தி முடிப்பேன் என்று பகிரங்கமாக கூறி புலிகளின் தலைமையை நோக்கி அழைப்பு விடுத்திருந்த போது தமிழ் மக்கள் மட்டுமன்றி இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன சமூக மக்களும் மனம் மகிழ்ந்து வரவேற்றார்கள்.

ஆனாலும் புலிகளின் தலைமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சமாதானத்திற்கான அழைப்பை ஏற்க மறுத்து தொடர்ந்தும் யுத்த முனைப்புகளில் ஈடுபட்டு வந்ததை யாரும் இங்கு மறுக்க மாட்டார்கள்.

மாற்று ஜனநாயக கட்சிகளின் உறுப்பினர்கள், அதன் ஆதரவாளர்கள், கல்விமான்கள், புத்திஐPவிகள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் தம்மோடு ஒத்துப்போக மறுத்த பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரையும் தமது சொந்த இனம் என்றும் பாராமல் புலித்தலைமை தொடர்ந்து அச்சுறுத்தியும், துன்புறுத்தியும், நாட்டை விட்டுத் துரத்தியும் கொன்றொழித்தும் வந்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் சமாதான நோக்கில் எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் கை கட்டி காவல் கடமைகளில் மட்டும் நின்றிருந்த பாதுகாப்புப் படையினரின் சோதனைச் சாவடிகளை தீ மூட்டி எரித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக பல்வேறு தாக்குதல்களை படையினர் மீது புலிகள் தொடர்ந்தும் நடத்திக்கொண்டிருந்தனர்.

இறுதியாக, மாவிலாறு அணைக்கட்டை புலிகளின் தலைமை மூடிவிட்டதோடு சமாதானத்திற்கான கதவுகளை முழுமையாக இறுக மூடிவிட்டு எமது வரலாற்று வாழ்விடங்களை மறுபடியும் ஒரு யுத்த சூழலுக்குள் வலிந்து கட்டி இழுத்திருந்தார்கள்.

அழிவு யுத்தம் எமது மக்கள் மீது பேரவலங்களை சுமத்தும் என்று நாம் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளோம். அழிவு யுத்தத்தை தொடர்ந்து நடத்தி வந்த புலிகளின் தலைமை தம்மையும் அழித்து எமது மக்களையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப்போகின்றார்கள் என்றே நாம் எச்சரிக்கையோடு தெரிவித்து வந்திருக்கின்றோம்.

அழிவு யுத்தத்தின் ஊடாக எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்றும், அது எமது மக்களின் தசைத்துண்டங்களையும், எலும்புக்கூடுகளையும், எரியுண்டு போன சாம்பல் மேடுகளையுமே மிச்சமாகத் தரும் என்று இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு புலிகள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இறுதி வரை நாம் எச்சரித்து வந்துள்ளோம்.

இங்கு இறுதியாக என்ன நடந்து முடிந்திருக்கின்றது? எமது மக்களின உயிர்களை யுத்த களத்தில் தொலைத்து, உடமைகளை சிதைத்து, வனப்பும் வளமும் மிக்க அழகிய எங்கள் தேசத்தை சுடுகாடாக மாற்றுவதற்கான சூழலை உருவாக்கிய புலிகளின் தலைமை இன்று நாம் அன்றே சொன்னது போல் தம்மையும் அழித்துக் கொண்டுள்ளது.

யுத்தம் நடக்காத பிரதேசங்களை நோக்கி எமது மக்களை வருவதற்கு அனுமதியுங்கள் என்றும், எமது மக்களை யுத்த கேடயங்களாக பயன்படுத்தாதீர்கள் என்றும் நாம் இறுதி மோதலின் போது கூட மனிதாபிமான வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனாலும் புலிகளின் தலைமை அதைக்கூட கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

போர்ப் புயலடித்து ஓய்ந்து இப்பொழுது எங்கும் அமைதி பிறந்திருக்கிறது. இந்த வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் எமது மக்களின் சார்பாக கோரிக்கைகளையும் நாம் முன்வைத்துள்ளோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு, புலிhத்தலைமையின் பிரச்சினைகள் வேறு என்று நாம் ஆரம்பந்தொட்டு தொடர்ந்தும் ஐனாதிபதி அவர்களிடம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

தமிழ் மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வின் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும், சமத்துவ உரிமையும் பெற்று யுத்தமில்லாத பூமியில் வாழவே விரும்புகின்றார்கள் என்பதையும், புலிகளின் தலைமை அரசியல் தீர்விற்கு விருப்பமின்றி தொடர்ந்தும் முடிவற்ற யுத்தத்தையே நடத்த விரும்புகின்றார்கள் என்பதையும்; பல தடவைகள் தெரிவித்து வந்திருக்கின்றோம். அதையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

யுத்தத்தை விரும்பிய புலிகளின் தலைமையை ஐனாதிபதி அவர்கள் யுத்தத்தால் வெற்றியடைந்திருக்கின்றார். புலித்தலைமையின் பயங்கரவாத பிரச்சினைக்கு அவர் முடிவு கட்டியிருக்கிறார். அதற்காக நான் அவரை பாராட்டுகின்றேன்.

ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது பயங்கரவாத பிரச்சினை அல்ல என்பதையும் ஐனாதிபதி அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றார் என்றே நாம் உறுதியாக நம்புகின்றோம்.

கடந்த 2009 மே 18 இல் எமது தேசத்தை சிறைப்படுத்தி வைத்திருந்த யுத்தத்தை ஐனாதிபதி அவர்கள் வெற்றி கண்ட போது இந்த வெற்றியானது தமிழ் மக்களை வெற்றிகண்ட வரலாறு அல்ல என்றும், மாறாக இந்த நாட்டின் பயங்கரவாதிகளை தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் வெற்றி கண்ட வரலாறே என்றும் தெரிவித்திருந்தார். இதை நாம் வரவேற்றோம். வரவேற்கின்றோம்.

இதே வேளையில், எல்லாள மன்னனை வெற்றிகண்ட துட்டகைமுனு மன்னன் தன்னால் தோற்கடிக்கப்பட்ட எல்லாள மன்னனுக்கு செலுத்தியிருந்த மரியாதையை இந்த நாட்டின் சகல மக்களினதும் ஆட்சித்தலைவர் என்ற வகையில் தமிழ் மக்கள் மீதும் ஜனாதிபதி அவர்கள் செலுத்தி வருகின்றார் என்றே நாம் நம்புகின்றோம்.

கலிங்கத்துப்போரில் வெற்றி கண்ட அசோகச்சக்கரவர்த்தி யுத்த சக்கரவர்த்தி என்ற நிலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புத்த தர்மத்தினனாக மாறியதைப்போல், யுத்த தர்மராக இருந்த ஜனாதிபதி அவர்கள் புத்த தர்மத்தவராக தொடர்ந்தும் செயலாற்றுவார் என்று நாம் நம்புகின்றோம்.

மதத்தால் மாறுபட்டாலும், பேசும் மொழியால் வேறுபட்டாலும், அன்றாட அடிப்படை வாழ்க்கை முறையில் பெரிதும் வேறுபடாதுள்ள நாம் அனைத்து மக்களும் மனிதநேயம் என்ற பொது வாழ்வில் தத்தமது இன, மொழி அடையாளங்களோடு ஒன்று பட்ட இலங்கையர்களாகவும், சமத்துவ உரிமை பெற்றவர்களாகவும் வாழ்வதற்கான மானிட தர்மத்தை இந்த மண்ணில் புதிய வரலாறாக ஜனாதிபதி அவர்களே தொடருவார் என நாம் நம்புகின்றோம்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இன்று இரு வேறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

ஒன்று,…. அரசியலுரிமை பிரச்சினை! இது இதுவரை காலமும் முழுமையாகத் தீர்க்கப்படாமல் இருப்பினும் அதற்கான முன் நகர்வுகள் நடந்து வருவது குறித்து நாம் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.

இன்னொன்று,…. இந்த நாட்டில் யுத்தம் தொடங்கியதாலும், அது அழிவு யுத்தமாக மாறி, அந்த அழிவு யுத்தத்தை வெற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தின் போது ஏற்பட்ட பிரச்சினைகளும் எமது மக்களின் இதுவரை அழியாத அவலங்களாக எம் முன்னால் விரிந்து கிடக்கின்றன.

அழிவு யுத்தம் காரணமாக எமது மக்கள் தங்களது சொந்த நிலங்களையும் வீடுகளையும் உறவுகளையும் உடமைகளையும் இழந்த நிலையில் மிகுந்த பாதிப்புகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மன வேதனைகளுக்கும் ஆட்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

புலிகளின் தலைமையால் பலாத்காரமாக பிடித்துச்செல்லப்பட்டும், மூளைச்சலவை செய்யப்பட்டும், விரும்பியும் விரும்பாலும் புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் பலர் அழிவு தரும் துப்பாக்கிகள் ஓய்ந்த பின்னரும் புனர்வாழ்வு முகாம் என்றும் தடுப்பு முகாம் என்றும் வாழுகின்ற நிலைமைகளைக் காண்கிறோம்.

ஆகவே… யுத்தத்தின் காரணமாக சகல மக்களும் அனுபவித்து வரும் அவலங்களுக்குத் தீர்வு கண்டு சகலருக்கும் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அளிக்க வேண்டியது இங்கு உடனடிக் கடமையாகும்.

இவை தொடர்பாக பல காரியங்களையும் அரசாங்கம் ஆற்றிவருவதையும், அதில் நானும் முன்னின்று உழைத்து வருவதையும் நான் இந்த இடத்தில் கூறி வைக்க விரும்புகின்ற அதே வேளையில் எஞ்சியுள்ள காரியங்களையும் துரிதப்படுத்த வேண்டும் என்று நான் தமிழ் மக்களின் சார்பாக மனிதாபிமான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்.

இதை இன்னமும் சிறப்பாகவும் அர்த்த பூர்வமாகவும் செய்து முடிப்பதற்கு சர்வதேச சமூகமும் மேலும் முன்வர வேண்டும்.

இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான உரிமை என்பது சர்வதேச சமூகத்திற்கு உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனாலும் புலிகளின் தலைமையின் மீதான அழுத்தங்களை மேலும் அதிகப்படுத்தி அவர்களை அரசியல் தீர்விற்கு உடன்பட வைக்கும் முயற்சியில் சர்வதேச சமூகத்தால் முடியாமல் போய் விட்டது என்பதே எமது கவலையாகும்.

அவ்வாறு முடிந்திருந்தால் இன்று நடந்து முடிந்திருக்கும் இறுதிக்கால அழிவுகளையாவது சர்வதேச சமூகத்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடிந்திருக்கும்.

ஆகவே, அவலப்பட்டு துயரங்களை சுமக்கும் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அரசாங்கம் முன்னெடுத்து வரும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கும், மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகவும் சர்வதேச சமூகம் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களை நோக்கி தமது கரங்களை நீட்டுவதே காலப்பொருத்தமான கடமையாகும் என்று சர்வதேச சமூகத்திடம் நாம் மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த இடத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களிடம் நான் இன்னொரு விடயத்தையும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

உலகம் முழுவதையும் தானே ஆள வேண்டும் என்ற அடங்காத அருவருப்பான ஆசையினால் ஜேர்மனிய மக்கள் மீதும், ஜேர்மனிய தேசத்தின் மீதும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாம் உலக யுத்தத்தை நடத்தியதன் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்தியிருந்ததை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

உலக மகா சர்வாதிகாரியான கிட்லர் தனக்கு பக்கத்தில் தனக்குரிய புதை குழியை தானே தோண்டி வைத்துக்கோண்டே இரண்டாம் உலக யுத்தத்தை தொடங்கியிருந்ததையும், இறுதியில் அந்த புதை குழியில் தானே வீழ்ந்து அழிந்த பின்னர் ஜேர்மனிய மக்கள் தம்மை வலிந்து கட்டிய ஒரு உலக யுத்தத்திற்குள் தள்ளி விட்டிருந்த கிட்லரின் தவறுகளையே எண்ணிப்பார்த்தார்கள் என்பதையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அது போலவே தமிழ் மக்களும் தங்களை இவ்வாறானதொரு அதளபாதாளத்திற்குள் தள்ளியிருக்கும் புலிகளின் தலைமையின் தவறுகளை உணர்ந்து வருகின்றனர். எமக்கான அரசியலுரிமைகளை நாம் கோருவது எமது ஜனநாயக உரிமையாகும். எமது அரசியலுரிமைப் பிரச்சினை தீர்க்கப்படாத வரைக்கும் அதற்காக நாம் நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் உழைத்துக்கொண்டே இருப்போம்.

ஆனாலும் அரசியலுரிமைக்காக, சமாதானப் பேச்சுக்காக நடமுறைச்சாத்தியமான வழிமுறையில் உடன்பட்டு வரமறுத்து இறுதிவரை அழிவு யுத்தத்தில் மட்டும் மோகம் கொண்டிருந்த புலிகளின் தலைமையின் தவறுகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

அரசியல் தீர்விற்கு வர மறுத்து அழிவு யுத்தத்திற்குள் எமது மக்களையும் தேசத்தையும் புலிகளின் தலைமை தள்ளி விட்டிருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் தமது சுயலாபங்களுக்காக அதை ஆதரித்து அதற்கு தூண்டு கோலாக இருந்து வந்த சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தவறான தமிழ்த் தலைமைகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்காக தமிழ் மக்கள் ஜனாதிபதி அவர்களால் வஞ்சிக்கப்படமாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம். அழிந்து போன எங்கள் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் புதிய அழகோடு புதுப்பித்து எமது மக்களிடம் ஒப்படைத்து, சிதைந்து போன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை மறுபடியும் தூக்கி நிறுத்தி எமது மக்களுக்கு புதிய வாழ்வை வழங்க அரசாங்கம் தொடர்ந்தும் விரைவாகச் செயற்படும் என்று நாம் நம்புகின்றோம்.

இதுவரை யுத்தம் துப்பிய கந்தகக் காற்றை மட்டும் சுவாசித்து வந்த எங்கள் மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் தோறும் சுகந்தமான புதிய தென்றல் வீச வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை குறித்து நாங்கள் ஜதார்த்தமாகவே இதுவரை சிந்தித்து வந்துள்ளோம். ஆகாயத்து சூரியனையும், சந்திரனையும் பூமிக்கு கொண்டு வந்து எமது கைகளில் தாருங்கள் என்று சாத்தியமற்ற விடயங்களை நாம் கேட்கவில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அந்த சட்டத்தின் பிரகாரம் அதற்கு இருக்க வேண்டிய சகல அதிகாரங்களையும் வழங்கி, அந்த அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வையும், சமத்துவ உரிமையையும் நோக்கிய எமது இலட்சிய கனவுகளை நடைமுறை நனவாக்குவதற்கு வழி சமைக்க வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.

ஆளும் கட்சி உட்பட எதிர்க்கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டு அதில் பங்கெடுத்தும் வருகின்ற மாகாணசபை திட்டத்தை தமிழ் மக்களுக்காகவும் நடை முறைப்படுத்த வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.

தென்னிலங்iகை மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை என்பது தங்கமாகவும், தமிழ் மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கை என்பது தகரமாகவும் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் உள்ள இலங்கைத் தீவில் விரைவான மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வேண்டும் என்றே நாம் கேட்கின்றோம்.

நிலையானதும், உறுதியானதுமான ஆட்சியதிகாரம் எங்கு இருக்கின்றதோ அங்குதான் அதிகாரங்களை உரிய முறையில் அனைத்து இன மக்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியும்!

ஆகவே இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்றிருக்கும் ஆட்சியதிகாரம் என்பது நீடித்த நிலைத்து இன்னமும் உறுதி பெற வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். அதற்காக இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மத சமூக மக்களும், அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது அரசாங்கத்தை தொடர்ந்தும் பலமுள்ளதாக பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் நான் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன்.

மத்தியில் உள்ள அதிகாரங்கள் எந்தளவிற்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றனவோ அதே அளவிற்கு நாட்டில் ஐக்கியமும் சமாதானமும், நாட்டின் இறைமையும் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்.

தமிழ் மக்களை நான் பிரதிநிதித்துவப்படுத்துபவனாக இருந்த போதிலும், தமிழ் மக்களின் வாக்குகளால் நான் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும், எமது தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்களின் வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளும் உயர்ந்து செழிக்க வேண்டும் என்பதையுமே நான் விரும்புகின்றேன்.

பல்லின சமூக மக்கள் வாழும் இலங்கைத் தீவில் ஒரு இனம் உயர்ந்தும், இன்னொரு இனம் தாழ்ந்தும் ஏற்றத்தாழ்வுகளோடு வாழும் அரசியல் சூழ்நிலை இருக்குமாயின் அது இனங்களுக்கிடையிலான கசப்புணர்வையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கவே வழி சமைக்கும்.

ஆகவே, இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களுக்கும் சம உரிமை வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்.

மாறி வரும் உலகத்தின் போக்கை புரிந்து கொண்டு. உலக ஒழுங்கை உணர்ந்து கொண்டு. உலகமயமாக்கலை அனுசரிக்க வேண்டிய இடத்தில் அனுசரித்து, எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் எதிர்கொண்டு எமது தேசிய மற்றும் சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வேண்டுமேயானால் அதற்குத் தேவையானது இனங்களுக்கிடையிலான சமத்துவ உரிமைகளை நிலை நிறுத்துவதேயாகும்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வெறும் சுயலாபங்களுக்காக மட்டும் அறிக்கை விட்டு, சாக்கடையில் ஓடுகின்ற சேற்று நீரோடு நாமும் சேர்ந்து ஓடியிருக்கலாம். ஆனாலும் அதற்கு மாறாக சமாதான நதிகள் சங்கமிக்கும் சமுத்திரத்தின் திசை நோக்கி ஆற்று நீராக ஓடி வந்தவர்கள்.

பெருத்த சூறாவளியையும், பலத்த சுனாமியையும் எதிர்கொண்டு உரிமைக்குக் குரல் கொடுத்து உறவுக்கு கரம் கொடுத்து, எதிர்ப்பு அரியலை தவிர்த்து நாம் இணக்க அரசியலின் வாசலை திறந்து விட்டவர்கள்.

எத்தனை இராணுவ தாக்குதல்களை யார்தான் நடத்தினாலும், அரச எதிர்ப்பு அறிக்கைகளை யார்தான் அடிக்கடி வெளியிட்டாலும், அரசாங்கத்துடன் பேசித்தான் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற தீர்க்கதரிசனமான தீர்மானத்தை எடுத்தவர்கள்.

நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் மட்டும்தான் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும், எங்கிருந்து தொடங்குவது சாத்தியமோ, அங்கிருந்து தொடங்கியே எமது கனவுகளை நனவாக்க முடியும் என்றும் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வு காண துணிச்சலோடு எழுந்து வந்தவர்கள் நாங்கள்.

இது போன்று நாம் எடுத்து கொண்ட துணிச்சலான அரசியல் நிலைப்பாட்டிற்காக… என்னோடு கூட இருந்தவர்களையும், எனது சிறகுகளாக இருந்தவர்களையும், எனது கால்களாக இருந்தவர்களையும் சுயலாப அரசியலுக்காக அறுத்துப்போட்டார்கள். துரோகிகள் என்று துற் பிரச்சாரம் செய்து, தூற்றுதல் நடத்தி பலரையும் அழித்தொழித்தார்கள். அச்சுறுத்தினார்கள்.

எமது நடைமுறைச்சாத்தியமான கொள்ளைகளை ஆதரித்தவர்களை இந்த மண்ணை விட்டு துரத்தினார்கள்.

என் மீது மனித வெடி குண்டுகளை ஏவி விட்டு ஏகப்பட்ட தடவைகள் என்னை கொன்றொழிக்க முயன்றார்கள். ஆனாலும் விழ விழ எழுந்து குருதி துடைத்து இன்னமும் பல மடங்கு உரத்த சிந்தனைகளோடு நான் எழுந்து வந்திருக்கின்றேன்.

மரணத்தைக் கண்டு, மனித வெடி குண்டுகளைக் கண்டு நான் அச்சத்தில் அடங்கி ஒடுங்கி நாட்டை விட்டே ஓடியிருக்கலாம். ஆனாலும் எமது மக்கள் மீதான தீராத நேசமும், அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அடங்காத இலட்சிய வேட்கையும் தொடர்ந்தும் எமது மக்கள் மத்தியில் நான் இருந்தே தீர வேண்டும் என்ற கட்டாய கட்டளையை எனக்கு பிறப்பித்திருக்கின்றன.

எந்த வழி முறையை துரோகம் என்று கூறி எம் மீதான தூற்றுதல்களை எமது மக்களின் எதிரிகள் நடத்தினார்களோ, எந்த வழிமுறையில் எம்மோடு கூட இருந்து எமது மக்களுக்காக அர்ப்பண உணர்வுகளோடு உழைத்தவர்களை கொன்றொழித்தார்களோ அன்று முதல் நாம் தேர்ந்தெடுத்து செயற்பட்டு வருகின்ற அந்த வழிமுறையே சரியானது என்று வரலாறு இன்று தேர்ந்தெடுத்திருக்கின்றது.

எம்மையும் எமது கொள்கைகளையும் நேசித்த எமது மக்களையும் அவர்கள் சுமத்திய அபாண்டமான பழிகளில் இருந்து வரலாறு இன்று விடுதலை செய்து வருகின்றது.

இது போலவே நாம் முன்னெடுத்துவரும் எமது நடைமுறைச் சாத்தியமான வழி முறையினாலும், எமது அர்ப்பண உணர்வுகளாலும் எமது மக்களையும் எதிர்கால வரலாறு விடுதலை செய்யும் என்று நாம் திடமாக நம்புகின்றோம்.

சமாதானத்தையும், சமவுரிமை சுதந்திரத்தையும் விரும்பும் எமது மக்களோடு அனைத்து அரசியல், ஜனநாயக சக்திகளும் இணைந்து ஒன்று பட்டு உழைக்க வேண்டும் என்று நான் அனைவரையும் அழைக்கின்றேன்!

அரசியல் மக்களை பிரித்து வைக்கிறது! பொருளாதாரம் மக்களை ஒன்றிணைக்கிறது!!

புகழ் பூத்த இந்த வாசகத்தை இலங்கை தீவில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் என்று அனைவருக்கும் பொதுவான ஒரு போதனையாக நான் முன்வைக்கின்றேன்! ஆரம்பகால ஆட்சியாளர்களாலும், சில சுயலாப தமிழ் தலைமைகளாலும் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இனமத முரண்பாடு என்ற சூழ்ச்சிகளுக்குள் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் சிக்குண்டு கிடந்த பழைய வரலாறுகளை நாம் மறப்போம்.

இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களான தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயம் என்பது சிங்கள சகோதர மக்களுக்கோ அன்றி முஸ்லிம் சகோதர மக்களுக்கோ விரோதமான விடயம் அல்ல என்ற உண்மை சகல தரப்பாலும் உணரப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.

கடந்த காலங்களில் புலிகளின் தலைமையால் அப்பாவி சிங்கள சகோதர மக்களும், இஸ்லாமிய சகோதர மக்களும் கொன்றொழிக்கப்பட்ட அனைத்து கொடிய வன்முறைகளுக்கும் நாம் மனத்துயரங்களோடு பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்கின்றோம்.
அப்பாவி மக்களான உங்களை கொன்றொழித்த புலிகளின் தலைமையை உங்கள் மனங்களில் வைத்து நீங்கள் தமிழ் மக்களை பார்க்காதீர்கள். தமிழ் மக்களைப்போல் உங்களையும் நேசிக்கும் எங்களைப் போன்றவர்களின் முகங்களுக்கு ஊடாக மட்டும் தமிழ் மக்களைப் பாருங்கள். இந்த நாட்டின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் உங்களது உறுதியான கரங்களை நீட்டி, அதன் ஊடாக அழகிய எங்கள் இலங்கைத் தீவில் அனைத்து மக்களுக்கும் பொதுவான சமூக பொருளாதாரத்தை வளர்த்தெடுத்து வாழ்வியல் உரிமைகள் சிறந்து செழிக்க வாழ்வோம் வாருங்கள் என்று சிங்கள சகோதர மக்களை நோக்கியும் இஸ்லாமிய சகோதர மக்களை நோக்கியும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இந்த உரை உங்களுக்கு ஆச்சரியத்தை தந்திருக்கலாம். உங்களது ஆச்சரியத்திற்குக் காரணம் இந்த குரலின் அசாதாரணத் தன்மையே. கடந்த ஐம்பது வருடகால இலங்கை வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது ஒரு முக்கியமான உண்மை பளிச்சிட்டுத் தெரிகிறது. அதாவது சாதாரண தமிழ் மக்களின் நியாயப் பூர்வமான கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களிடத்தில் சரிவர எடுத்துக் கூறப்படவில்லை. அதே போலவே சாதாரண சிங்கள மக்களின் நட்புணர்வும் இயைபுணர்வும் இணைந்து செல்லும் பாங்கும் தமிழ் மக்களிடத்தே எடுத்துக் கூறப்படவே இல்லை. இந்த மௌன இடைவெளியை இல்லாமற் செய்வதன் மூலமாகவே நாம் ஒன்றுப்பட்ட பிரிக்கப்பட முடியாத இலங்கையை ஏற்ப்படுத்தலாம். அந்த மனநிலையில் நின்றுகொண்டே இந்த உரையை நிகழ்த்தியிருக்கின்றேன்.

நாங்கள் முதலில் இலங்கையர்களாகவும் அடுத்து எமது இனக்குழும அடையாளத்தையும் இணைத்து போற்றிக் கொள்வோம். தமிழரைப் பெறுத்தவரையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவும் வாழ விரும்புகின்றோம். அதையே எமது இலட்சியமாகக் கருதுகின்றோம். இலங்கையர்களாக இருப்பதற்காக தமிழையோ தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையையோ என்றுமே விட்டு விட இலங்கைத் தமிழர்களான நாம் ஒப்புக்கொள்ளவே மாட்டோம். இது உறுதி. தமிழில் ஓர் அற்புதமான கவிதை வரிகள் உண்டு.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே.

இதுவே சகலருக்கும் உரியதான பொது விதியாக இருக்கட்டும் என்று கூறி வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள் என்று கூறி எனது சாட்சியத்தை இத்துடன் முடிகின்றேன்.

பலாத்காரம் புரிய முற்பட்டவருக்கு நல்ல பாடம் படிப்பித்த இளம் தாய்

மதுபோதையில் இளவயதுத் தாயொருவரை பாலியல் பலாத்காரம் புரிய முற்பட்டவரது பிறப்புறுப்பை பிளேட் ஒன்றினால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவமொன்று அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லலித் புஷ்பகுமார ராஜமந்திரி தெரிவித்தார்.

இருபத்து நான்கு வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இந்தப்பெண் தனியாக வீட்டில் இருந்த வேளையிலேயே மதுபோதையில் சென்றவர் இவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்டுள்ளார்.

தனது நகங்களை பிளேட் ஒன்றினால் வெட்டிக்கொண்டிருந்த போதே மதுபோதையில் வந்தவர் அவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டுள்ளார். பல தடவைகள் தன்னை விட்டுவிடுமாறு கேட்டும் அதனைப் பொருட்படுத்தாது அவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டதால் அவரிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கையிலிருந்த பிளேட்டினால் பலாத்காரம் செய்ய முற்பட்டவரது பிறப்புறுப்பை வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

இரத்தம் பீறிட்டு ஓட அலறல் சத்தத்துடன் நிலத்தில் வீழ்ந்தவர் பற்றி உடன் அரலகங்வில பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவரைக் கைது செய்து சிகிச்சைக்காக அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

Prof_Hooleயாழ் பல்கலைக் கழகம் தொடர்பாக தேசம்நெற்றில் இடம்பெற்று வரும் விவாதம் பல்வேறு வகையிலும் எமது சமூகத்தின் கல்விநிலை பற்றியதாகவும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

அவ்வகையில் தனது அமெரிக்க பல்கலைக்கழகத்துடனான கற்பித்தலை நிறைவுசெய்து கொண்டு இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கற்பித்தலை முன்னெடுக்கச் செல்லும் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் அவர்களை தேசம்நெற் லண்டன் வரவழைத்து ஒரு சந்திப்பினை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:

நோக்கம்: வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் பற்றி விவாதிப்பதும் கலந்துரையாடுவதும். இக்கலந்துரையாடல் பேராசிரியரின் சிறப்புரையைத் தொடர்ந்து இடம்பெறும்.

சிறப்புரையிலும் கலந்துரையாடலிலும் பின்வரும் அம்சங்களை உள்ளடக்க முயற்சிக்கப்படும்.

1. இதுவரையான கல்விமுறையும் அதன் குறைபாடுகளும் அது எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்.

2. எதிர்காலத்தில் தமிழ் பேசும் சமூகங்களிடையே கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள்.

3. கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு தமிழ் பேசும் சமூகங்களிடையே உள்ள பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் எவ்வாறான மாற்றங்களை தம்முள் ஏற்படுத்த வேண்டும்.

4. சமூக மாற்றத்திற்கு கல்வியை எவ்வாறு பயன்படுத்த முடியும்.

5. தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் பொருளாதார உரிமைகளை உறுதி செய்ய, வாழ்நிலையை மேம்படுத்த கல்வி மேம்பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம்.

காலம்: 29 ஓகஸ்ட் 2010, ஞாயிறு மாலை 15:30

இடம்:
Lord Brooke Hall
Shernhall Street
Walthamstow,
London E17 3EY

தொடர்பு :த ஜெயபாலன் : 07800 596 786 or 02082790354
த சோதிலிங்கம் : 07846322369  ரி கொன்ஸ்ரன்ரைன் : 0208 905 0452

இக்கலந்துரையாடல் விவாதம் தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்புபவர்கள் அல்லது பேராசிரியர் ஹூலிடம் கேள்விகளை முன்வைக்க விரும்புபவர்கள் இங்கு அவற்றினைப் பதிவிடவும். முடிந்தவரை விவாதத்தை தொகுத்தும் கேள்விகளுக்கான பதிலைப் பெற்றுத்தரவும் முயற்சிப்போம்.

லண்டனில் ஆர்ப்பாட்டம் : புதிய திசைகள்

Puthiya_Thisaigal_Protest_Leafletஈழப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியிருப்பதன் மூலம் இலங்கை தீவு முழுவதும் தனது சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது ராஜபக்ச அரசு. சிங்கள பேரினவாதத்தின் வரலாற்றில் இக்காலகட்டத்தை மிக உயர்நிலை சகாப்தமாக பிரகடனப்படுத்தி தனது அடக்கு முறைகளை அனைத்துக் களங்களிலும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பேரினவாத அரசு.
 
இன்று இலங்கையில் நடப்பது இனச்சுத்திகரிப்பின் உச்சக்கட்டம் என்பது புரிந்து கொள்ளத்தக்கது. இலங்கைத்தமிழர் என்னும் இனத்தின் ஆணிவேரையே அறுத்தெறியும் நடவடிக்கை.எமது அரசியல் உரிமையை பறித்து, எமது  பிரதேசங்களில் எம்மை சிறுபான்மையினராக்கி, ஆதிக்க மொழிமூலமே எமது வாழ்க்கையில் முன்னேற்றம் அடையமுடியும் என்ற சூழலை உருவாக்கி, எமது சமூகத்தை சீரழியவிட்டு எம்மை ஒரு அடிமை மனநிலைக்கு கொண்டு செல்வது என்பதுதான் இந்த இனவெறியின் இன்றைய இலக்கு.
 
இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைப் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தமிழ் நாட்டின் ஜனநாயக மனிதாபிமான சக்திகளிடமிருந்தும் தனிமைப்படுத்தும் இலங்கை அரச பாசிசத்தின் நிகழ்ச்சி நிரல் இங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Puthiya_Thisaigal_Protest_Leafletஐம்பதாயிரம் மக்களைக் கொன்று போட்ட அரசிற்கு எதிராகப் போராட முன்வரும் ஒவ்வொரு மனிதர்களின் மீதும் இலங்கை அரசின் உளவியல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. அப்பாவி மக்களை நாளாந்தம் அழிப்பவர்களை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நிராகரிக்கக் கோருகிறார்கள்.

பலவகை ஒடுக்குமுறைகளையும் இன்று சந்தித்துவரும் முஸ்லிம் சமூகமும்  மலையக சமூகமும் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனையும் இதுதான். ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகங்களாகிய நாம் ஓரணியில் நின்று சிங்கள பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் அவசியத்தை இன்றைய காலம் வேண்டி நிற்கிறது.
 
தமிழீழ விடுதலை புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் உலகின் யுத்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி காட்டுமிராண்டித்தனமாக அழித்ததில் இருந்து, இலங்கை அரசானது ஒடுக்குமுறையின் முன்னுதாரணமாக, உலகத்திற்கு ஆலோசனை வழங்கும் அனுபவசாலியாகத் தன்னை பிரகடனப்படுத்தி கொள்கிறது. சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கி வாழும் பெருந்தேசிய இனம் சுதந்திரமாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. இருக்கப்போவதும்  இல்லை. சிங்கள மக்களின் உரிமைகள் தமிழ் மக்களின் உயிர் பறிப்புடன் எப்படிக் கரைந்து போயின என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
 
இது யுத்த வெறிபிடித்து அலையும் ஓர் சர்வாதிகார அரசிற்கெதிரான போராட்ட கால கட்டம். இலங்கைத் தீவிலும் புலம்பெயர் சூழலில் வாழும் அனைத்து மக்களும் தமது நிலை சார்ந்து போராடவேண்டிய தருணம் இது. சமூகத்தில் அடிப்படை ஜனநாயகம் இன்றி எந்தப்போராட்டமும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது சாத்தியமற்றது.
 
அனைத்து மக்களே, ராஜபக்ச அரசிற்கெதிரான போரில் ஒன்றிணைவோம் போராட்ட சக்திகள் அனைவரும் பொது எதிரிக்கெதிராக ஒன்றிணைவோம். எம்மைப்போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உரிமைக்காக போராடும் சக்திகளுடன் கைகோர்ப்போம். எமது போராட்டம் உலக அரங்கில் நடைபெறும் உரிமைப்போரின் ஓர் அங்கமாக மாறட்டும்.

லண்டனில் புதிய திசைகள் அமைப்பு இலங்கை அரசிற்கு எதிரான கீழ்க்காணும் முழக்கங்களோடும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. அதே நாளில் தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம், இதே நோக்கங்களுக்காக தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றது.

இலங்கை இனவெறி அரசே,
இன அழிப்பை நிறுத்து!
தமிழர் பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து!
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை விடுதலை செய்!
அரசியல் கைதிகளை சித்திரவதை செய்யாதே!
கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?

காலம்: 21/08/2010
நேரம்: 2 – 5 பி.ப.
இடம்: Richmond Terrace, Westminster
அருகாமை ரயில் நிலையம்: Westminster

கே எஸ் ராஜா – ப்ரகீத் நினைவுகளுடன்

K_S_Rajaஊடக வியலாளர் ப்ரகீத் கடத்திச் செல்லப்பட்டு இன்று 200 நாட்களைக் குறிக்கும் வகையில் சர்வதேச ஊடகங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்துள்ளன. அதன் அறிக்கை கீழே உள்ளது. இச்சம்பவத்திற்கு 20 வருடங்களிற்கு முன் 1989ல் கொழும்பில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட கே எஸ் ராஜாவின் நினைவுகளை தேசம்நெற் வாசகர் ஒருவர் அனுப்பி வைத்திருத்துள்ளார் அதனை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

‘மதுரக் குரல் மன்னர்’ கே.எஸ்.ராஜா அவர்களின் குரலைக் கேட்டு சிலிர்க்க…
http://www.youtube.com/watch?v=xTLwfbDzvRQ&feature=related

ஊடகங்கள் – ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

ஊடகவியளாளர், தொடர்பு ஊடகங்கள் மற்றும் அவர்களின் அரசியல்: மீராபாரதி

சிவராம் – 5வது ஆண்டு நினைவு: இலங்கையின் ஊடகத்துறையின் தற்போதைய நிலை : த ஜெயபாலன்

தொடர்கதையாகும் ஊடக வன்முறை – யாழ் பத்திரிகைளுக்கு தீ!!! : த ஜெயபாலன்

இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் – லசந்தா நினைவாக இன்று லண்டனில் மாநாடு

ஜே எஸ் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடுழியச் சிறை : இலங்கை அரசுக்கு எதிராக உள்ளேயும் வெளியேயும் போர்க் கொடி : த ஜெயபாலன்

உனது உரிமை எனது மூக்கு நுனி மட்டும்… :ஜனநாயகத்தின் பாதுகாவலனாக திகழும் ஊடகங்கள் – புன்னியாமீன் –

Where is Prageeth Ekneligoda? – International Day of Solidarity for Prageeth Ekneligoda

Two hundred days have passed since Sri Lankan journalist Prageeth Ekneligoda disappeared. Prageeth, who regularly contributed to LankaeNews web site, went missing 24th January 2010. Prageeth is a political analyst and a cartoonist known for his outspoken views critical of the government of Sri Lanka.

Since Prageeth’s disappearance his wife, along with media rights and human rights groups, has continuously urged the Government of Sri Lanka to reveal his whereabouts. The Cartoonists Rights Network International acknowledged her relentless  campaign by bestowing a Special Recognition award for her spirited challenge to the Sri Lankan government to account  for her disappeared husband.

Solidarity_for_PrageethWhile the police and other authorities have failed in providing any information that leads to finding Prageeth, they haven’t taken  any steps to counter or investigate freely circulated disinformation that he is in hiding. Whatever took place on the  night of 24th January 2010, it is the duty of Sri Lanka’s government, led by President Mahinda Rajapaksa, to find where  Prageeth is and inform his wife Sandya and the world. The inability to do so inevitably affirms Sandya’s repeated assertion  that she holds the government of Sri Lanka responsible for the disappearance of her husband.

Therefore, on the 12th of August 2010, the International Day of Solidarity for Prageeth, standing beside Sandya, we, the undersigned organizations and individuals,  call upon the government of Sri Lanka to fulfil our reasonable demand.

Find journalist Prageeth Ekneligoda and give him back to us!

Cartoonists Rights Network International (CRNI)
Committee to Protect Journalists (CPJ)
International Media Support (IMS)
Journalists for Democracy in Sri Lanka (JDS)
Media Legal Defence Initiative (MLDI)
Reporters Without Borders (RSF)
The International Federation of Journalists (IFJ)