அமெரிக்க அரசு இலங்கை அரசின் நடந்து முடிந்த யுத்தம் பற்றிய அறிக்கையை இன்று (ஒக்ரோபர் 22) வெளியிட்டுள்ள அதே நேரம் வன்னி முகாம்களில் உள்ள மக்களில் 40 000 பேரை மீள்குடியேற்றுவதற்கான அறிவிப்பை இலங்கை அரசு இன்று (ஒக்ரோபர் 22)ல் வெளியிட்டுள்ளது. நடந்த முடிந்த யுத்தத்தில் பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு அந்த பாதுகாப்பு வலயங்களை நோக்கி இலங்கைப் படைகள் செல் தாக்குதல்களை நடத்தி உள்ளனர், தற்காலிக யுத்த நிறுத்தங்களை அறிவித்துவிட்டு யுத்த நிறுத்தம் முடிவடைவதற்கு முன்னரே அரச படைகள் தாக்குதலை நடத்தி உள்ளனர், சரணடைந்த விடுதலைப் புலிகளை இலங்கை அரசு சட்டவிரோதமாகக் கொலை செய்துள்ளது, வன்னி மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றது போன்ற குற்றச்சாட்டுக்களை அமெரிக்க ராஜாங்க அமைச்சின் அறிக்கை கொண்டுள்ளது. இந்த அறிக்கையை சர்வதேச அரங்கில் பலவீனப்படுத்தி அதனை பெரிது பண்ண விடாமல் செய்யும் வகையில் இலங்கை அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி வன்னி முகாம்களில் இருந்து ஒரே தடவையில் 40 000 பேரை விடுவிக்கும் அறிவிப்பை வெளியிட்டதுடன் இன்று 5700 பேரை விடுவித்தும் உள்ளது.
இவ்வாண்டு முடிவிற்குள் இலங்கை அரசு வன்னி முகாம்களில் உள்ள 80 வீதமான அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதில் உறுதியாக இருப்பதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச அபிவிருத்திச் செயலகத்தின் செயலாளர் மைக்கல் போஸ்ர் நேற்று (ஒக்ரோபர் 21)ல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது தெரிவித்தார். வன்னி முகாம்களில் சுகாதாரம், மனிதத்துவ உதவிகளுக்கான அனுமதி இன்னமும் மட்டுமப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு இருப்பதாகவும் அதீத இராணுவ கட்டுப்பாடு பற்றி தாங்கள் கரிசனை கொண்டிருப்பதாகவும் மைக்கல் போஸ்ரர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். தான் ஏப்ரலில் விஜயம் செய்த போது இருந்த நிலைமைகளிலும் தற்போதுள்ள நிலை முன்னேற்றகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அடிப்படைத் தேவைகளான உணவும் உறைவிடமும் அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு முடிவிற்குள் 80 வீதமானவர்களை மீளக் குடியேற்றுவதற்கான கண்ணி வெடிகளை அகற்றுவது போன்ற பணிகளுக்கு 500 000 பவுண்களை வழங்க உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
இலங்கைகயின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரி நீக்கச் சலுகையை – ஜிஎஸ்பி பிளஸ் யை நீக்குவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைக்கல் போஸ்ரர்அது தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகின்ற விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சினோபிம் மக்டோனா ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நீக்க வேண்டும் என்று குறிப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி கிளிப்ரன்-பிறவுன் ’80 வீதமான மக்களை கிறிஸ்மஸ்ஸிற்கு முன்னதாக மீளக்குடியமர்த்தவும் மீளவும் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தை சம்மதிக்க வைப்பதற்கு ஜீஎஸ்பி பிளசை நீக்குவதா ஆரோக்கியமான நடவடிக்கை? இதனையா வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களும் தீவிரமாக எதிர்பார்க்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.
அங்கு மைக்கல் போஸ்ரர் மேலும் தெரிவிக்கையில் செப்ரம்பரில் 32 000 பேர் வன்னி முகாம்களில் இருந்து வெளியேறி உள்ளனர் என்றும் மேலும் 41 000 பேரை மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சியில் மீள்குடியேற்ற ஐஓஎம் இன் உதவியை நாடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரித்தானிய பாராளுமன்ற விவாதமும் இலங்கை அரசின் 40 000 பேரை விடுவிக்கின்ற அறிவிப்பும் இலங்கை அரசு தான் இழந்த சர்வதேச அங்கிகாரத்தை மீளவும் தக்க வைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி இருப்பதை வெளிப்படுத்துகின்றது. தமிழகத்தில் இருந்து சட்டசபை உறுப்பினர்களை வரவழைத்து அவர்களது வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வது போன்ற ஒரு நடவடிக்கையையும் எடுத்து வன்னி முகாம்களில் உள்ளவர்கள் தற்போது ஆயிரக்கணக்கில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். முகாம் மக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிப்பது என்ற திட்டம் இலங்கை அரசிடம் ஏற்கனவே இருந்தது என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பதும் பற்றி தேசம்நெற்றில் பரவலாக செய்திகள் வெளிவந்திருந்தது. மேலும் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள படையினர் பலரும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நடவடிக்கைகள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச சமூசத்தை மீண்டும் வென்றெடுத்து தங்கள் மீதுள்ள அவப்பெயரை நீக்குவதற்கான முயற்சியாகவே இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் புலித் தமிழ் தேசியவாதிகளும் புலி மார்க்ஸிஸ்ட்டுக்களும் பிரச்சாரம் செய்வது போன்ற ஒரு முரட்டுத்தனமான முட்டாள்தனமான இன ஒடுக்குமுறையை இலங்கை அரசு மே 18ன் பின் மேற்கொள்ளவில்லை. தற்போது தமிழ் அரசியல் அடையாளத்தை நீண்ட காலப்போக்கில் இல்லாதொழிக்கின்ற நாசுக்கான மௌனமான அடையாள அரசியல் அழிப்பையே இலங்கை அரசு மேற்கொள்கிறது. அதில் தமிழ் அரசியல் தலைமைகளால் பணயம் வைக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசினால் மட்டுமே தலைமை கொடுக்கும் ஆளுமை உள்ளது என்பதை இலங்கை அரசு தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலமும் உறுதிப்படுத்தி வருகின்றது.
தமிழக சட்டசபைக் குழுவையும் பிபிசி ஊடகவியலாளர்களையும் வன்னி முகாம்களுக்குச் செல்ல அனுமதித்த அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் பினாமிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பை வன்னி முகாம்களுக்கு அனுமதிக்கவே இல்லை. அரசு அனுமதிக்காவிட்டாலும் அந்த மக்களைப் பார்க்க தங்களை அனுமதிக்கும்படி இவர்கள் போராடவும் இல்லை. ஏதாவது வகையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு தங்கள் உதவிகளை நல்கவும் இல்லை. அதே போன்று சமாதான காலத்தில் பொங்கு தமிழ் கொண்டாடி போர் முழக்கம் செய்த புலம்பெயர் தமிழர்கள் மிக முட்டாள்தனமாக புலிகளின் முல்லைத்தீவு கடற்கரைக்கு வணங்கா மண் அனுப்ப பல மில்லியன் பவுண்களைச் செலவழித்தனர். இன்று அவ்வளவு மில்லியன் பவுண்களும் அவத்தில் அழிந்தது. ‘300 000 மக்களுக்கு நாங்கள் எதற்காக உதவ வேண்டும்’ ‘அது அரசின் கடமை’ என்று சொல்லி தங்கள் குறைந்தபட்ச பொறுப்புகளையும் தட்டிக் கழித்தது புலம்பெயர் சமூகம். (தனிப்பட்ட முறையில் சில உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை.) அம்முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவுவது தவறு, அம்மக்கள் வலியுடன் இருந்தால் தான் போராடுவார்கள் என்று இலங்கை அரசின் கைகளிலேயே அம்மக்களைத் தள்ளிவிட்டுள்ளனர். இவர்கள் தலைவரை விட்டுவிட்ட வெளியேறியதற்காக அம்மக்களை துரோகிகள் என்றும் பட்டம் கொடுத்தனர். இன்று அம்மக்களுக்குள்ள ஒரே நம்பிக்கை இலங்கை அரசு மட்டுமே என்ற நிலையை ஏற்படுத்தியதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் வங்குரோத்து அரசியல் மட்டுமல்ல புலத்தில் உள்ள புலி ஆதரவு அறிவுகளின் புலி மார்க்ஸிஸ்டுக்களின் சிந்தனையும் தான் காரணம். ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டால் தான் போராட்டம் உக்கிரமடையும் சர்வதேசம் தலையிடும் என்ற ஆலோசனை ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் உள்ள கோட்சூட் அணிந்த புலிக் கனவான்களின் ஆலாசணை.
சமையற் குறிப்பெடுத்து சமையல் செய்பவர்கள் போல் சிவப்புப் புத்தகம் வாசித்து புரட்சி செய்ய புறப்பட்ட பேப்பர் மார்க்ஸிட்டுக்கள் இப்பொது இணையம் வசதியாக உள்ளதால் கூகிள் மார்க்ஸிட்டுக்கள். உண்மையில் இவர்கள் குணாம்சத்தில் மார்க்ஸிசத் தோல் போர்த்தியிருக்கும் புலிகள். தலைவர் வே பிரபாகரன் நத்திக் கடலில் விட்ட ‘போராட்ட’ குத்தகையை தாங்கள் பொறுப்பெடுத்த விட்ட கனவில் நிதர்சனம் நடத்துகின்றனர். மார்க்ஸிய கருத்துக்களை முன்னெடுப்பதாகக் கூறுபவர்கள் நடைமுறையில் மக்களையே கோட்டைவிட்டு விடுகின்றனர். அது மார்க்ஸிய தத்துவத்தின் தவறு அல்ல. அதனை முன்னெடுப்பவர்களின் பலவீனமும் அர்ப்பணிப்பின்மையும். இது புலம்பெயர் தமிழ் சூழலுக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இங்கு சொகுசு மார்க்ஸிட்டுக்கள் மலிந்துவிட்டனர்.
அதற்காக அனைவரையும் ஒருங்குசேர ‘சொகுசு மார்க்ஸிஸ்ட்டுகள்’ என்ற வரையறைக்குள் அடைக்க முடியாது. நம்பிக்கையான சில போராட்டங்களும் முயற்சிகளும் இடம்பெறவே செய்கின்றன. இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சார்பாகவும் குரலெழுப்பப்ட வேண்டியதன் அவசியத்தை குயின்ஸ்மேரி பல்கலைக் கழக கண்டனக் கூட்டத்தில் இளம்தலைமுறை மாணவர்கள் முன்வைத்தனர். வரலாற்றை சரியாகக் கற்றுக்கொள்ளத் தவறினால் அது மீளவும் நடைபெறுவதைத் தடுக்க முடியாது என்றும் ஐ நா போன்ற அமைப்புகளிடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பதும் அவர்களிடம் எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றது என்றும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். அண்மைக்காலத்தில் இடம்பெற்ற ஒரு இடதுசாரி அமைப்பின் கூட்டத்தில் மாணவர்கள் கலந்துகொண்டு முன்னின்று செயற்பட்டதை முதற்தடவையாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஒக்ரோபர் 17ல் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் நூறுபேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அவர்களில் பல்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்டவர்கள் இருந்த போதும் விவாதத்திற்கும் மீளாய்விற்கும் தாங்கள் தயார் என்பதை தங்கள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டனர். ‘தமிழர் ஒருங்கமைப்பு’ கடந்த சில மாதங்களாக உலகின் பல்வேறு பாகங்களிலும் சிறிய அளவிலாயினும் தனது போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால் இப்போராட்டங்களில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்களும் யுவதிகளும் என்பது குறிப்பிடத்தக்கது. அலையென அடித்துச் செல்லும் குறும் தமிழ்த் தேசிய அலையை எதிர்த்து தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்களது குரல்களும் ‘கீபோட்டுக்கு’ அப்பால் அங்கு மட்டுமே தற்போது ஒலித்து வருகின்றது.
இன்று இலங்கை அரசு மிக நாசுக்காக தனது மௌனமான தமிழ் அரசியல் அடையாள அழிப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றது. இலங்கை அரசு இனவாத அரசாக இருந்த போதும் அதனிடமுள்ள விவேகத்தையும் திட்டமிடல்களையும் அதனை நடைமுறைப்படுத்துகின்ற வேகத்தையும் எதிர்கொள்கின்ற ஆற்றல் இலங்கையிலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் சரி தமிழ் அரசியல் சக்திகளிடையே மிகக் குறைந்த அளவிலும் இல்லை என்பதே வேதனையான உண்மை. கட்சி அரசியல், குழுவாத அரசியல், புலி அரசியல் எனத் தங்கள் அடையாள அரசியலை நிறுவுவதிலேயே அவர்கள் வலு அவதானமாக இருக்கின்றனர். குறிப்பாக புலம்பெயர் தேசத்தின் குழுவாத அரசியலுக்கும் இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகளின் அரசியலுக்கும் பாரிய வேற்றுமைகள் கிடையாது. தங்கள் இருப்பை அடையாளப்படுத்துவதற்கு இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவார்கள். கடிதம் எழுதுவார்கள். புலத்து குழுவாதிகள் தங்கள் இணையங்களில் அல்லது சார்பு இணையங்களில் கட்டுரை எழுதுவார்கள். தேவைப்பட்டால் கடிதமும் எழுதுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசின் முடிவுகளுக்காக காத்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை.
இலங்கை அரசின் மிக நிதானமான திட்டமிடல் காலவரையறை வைத்து புலிகளை அழித்தொழிக்க வழிகோலியது. இன்று அதே நிதானத்துடன் தமிழ் மக்களது அரசியலைப் பலவீனப்படுத்துவதை நோக்கி அரசு நகர்கின்றது. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டு வருகின்றது. ஜனாதிபதி மகிஹிந்த ராஜபக்ச ஒரு ஸ்ரண்ட் மாஸ்ரர். புலிகளை தான் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிங்கள மக்களிடம் பெயரெடுத்தவர். தான் குறிப்பிட்ட 180 நாள் காலக்கெடுவினுள் வன்னி முகாம்களையும் மூடிவிடுவேன் என்று மீண்டும் மீண்டும் கூறி வந்தவர். அதனை தற்போது ஒரு ஸ்ரண்ட் ஆகவே அறிவித்தும் உள்ளார். இலங்கை அரசு இவ்வாறான ஒரு ஸ்ரண்டைச் செய்யும் என்பதனை பலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நம்பகமற்ற செய்திகளைப் பரப்பி, செய்திகளை தங்கள் அரசியலுக்கேற்ப திரிபுபடுத்தி உண்மையான விடயங்களும் மூடிமறைக்கப்படுவதற்கு வழிசெய்யப்பட்டது. இலங்கை அரசு நாசுக்காக செய்து வருகின்ற மௌனமான அடையாள அழிப்பை (தமிழ் மக்களை சுட்டுக் கொல்லாமல் இளம்பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தாமல்) அம்பலப்படுத்த இவர்களுக்கு முடியவில்லை.
ஸ்ரண்ட் மாஸ்ரர் வன்னி முகாம்களை அடுத்த ஆண்டு முற்பகுதிக்குள் மூடிவிட்டால் இங்குள்ள பலருக்கு போராடவும், குரலெழுப்பவும் விடயமே இருக்காது. ஏனெனில் இவர்களிடம் இருப்பது வெறும் உணர்ச்சியும் வேகமும் மட்டுமே. புலம்பெயர்ந்து வாழும் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களுக்கு வன்னி முகாம்கள் மூடுப்படுவதில் உள்ளுக்குள் மிகுந்த புழுக்கம். ஏனென்றால் முகாம்களை மூடினால் போராட முடியாது என்ற கவலை. இதே கவலை மே 18க்குப் பின் சரணடைந்த போரளிகள் வகைதொகையின்றிக் கொல்லப்படவில்லை என்பதிலும் பெண்கள் வகைதொகையின்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படவில்லை என்பதிலும் இருந்தது. தங்களது எதிர்மறை அரசியலை முன்னெடுக்வே இவர்கள் களம் தேடுகின்றனர். அந்த அரசியலை மட்டுமே இவர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனால் இலங்கை அரசு மேற்கொள்கின்ற மெனனமான அடையாள அழிப்பிற்கு முகம்கொடுக்க இவர்களால் முடியவில்லை.
தற்போது அரசு மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தான் இழந்த கௌரவத்தை மீள்விப்பதை நோக்கிப் படிப்படியாக நகர்கின்றது. இந்திய அரசை தனக்கு ஆதரவாகக் கொண்டிருந்த நிலையில் இருந்து தற்போது புலிகளின் முக்கிய ஆதரவுத்தளமான தமிழகத்தை அரசு தன்பக்கம் வளைத்துப் போட்டுள்ளது. தனது 180 நாள் உறுதிப்படி வன்னி மக்களை மீள்குடியேற்றுகிறேன் என்றும் அரசு அறிவிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த ஆரம்பத்திலேயே தனக்கு எதிராக வரவிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அறிக்கையை காலாவதியான அறிக்கையாக்கும் வகையில் தனது காயை இலங்கை அரசு நகர்த்தி உள்ளது.
அதுமட்டுமல்ல அடுத்த ஆறு மாத காலத்திற்குள் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை தொடர்பான முடிவெடுக்கப்படும் போது இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் தனக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் அரசின் மௌனமான தமிழ் அரசியல் அடையாள அழிப்புத் தொடரும். அதனை எதிர்கொள்ளுமா எமது அரசியல் சக்திகள்?
ஒக்ரோபர் 21ல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம்:
House of Commons : Wednesday 21 October 2009 : Oral Answers to Questions
International Development : Sri Lanka
Mr. Jim Cunningham (Coventry, South) (Lab): What his most recent assessment is of the humanitarian situation of refugees in Sri Lanka; and if he will make a statement.
The Parliamentary Under-Secretary of State for International Development (Mr. Michael Foster): Two weeks ago, I visited Sri Lanka to see for myself the situation of the 250,000 internally displaced people detained in camps. Conditions have improved there compared with my previous visit in April, with basic needs such as food and shelter being met. However, health care and humanitarian access remain inadequate and we are concerned about military oversight of the camps and family separations. We also believe that conditions will deteriorate during the monsoon season, which is about to start. While I was in Sri Lanka, I repeated the United Kingdom’s call for freedom of movement for all the IDPs so that they can go back to host families, relatives or their places of origin.
Mr. Cunningham: May I ask my hon. Friend whether he has been able to get a time scale for the Tamils to go back to their homes in Sri Lanka? Also, how has the aid been distributed?
Mr. Foster: The Government of Sri Lanka were committed to having 80 per cent. of those detained in camps going back to their places of origin by the end of the year. To facilitate that process, I am pleased to announce today an allocation of £500,000 to the HALO Trust for mine surveillance and de-mining in the Mullaitivu area. That work has started and will make the area safe for homes and for land use for the people who were put in the camps.
Mr. Lee Scott (Ilford, North) (Con): Will the Minister look into whether further pressure can be put on Sri Lanka by the Commonwealth? If Sri Lanka continues not to let people return or go home from the camps, perhaps it should be suspended from the Commonwealth.
Mr. Foster: It is important that the international community makes clear its position with regard to the number of people still in the camps and the importance of freedom of movement. We believe that that is happening, but, as far as the Commonwealth’s position is concerned, I know that the Government of Sri Lanka are keen to host the Commonwealth Heads of Government meeting in a couple of years’ time. That might have some bearing on their response to the developments for people who are in the camps.
Siobhain McDonagh (Mitcham and Morden) (Lab): May I thank the Minister for his statements and for his visit to Sri Lanka on behalf of my Tamil constituents? May I also ask his Department to support the EU Trade Commissioner’s GSP—or generalised system of preferences—plus report, which was issued on Monday, to ensure that preferred status will be withdrawn from Sri Lanka should things continue as they are?
Mr. Foster: My hon. Friend has long been an advocate for her Tamil constituents and I applaud her for her commitment. As regards the GSP plus and the announcement made this week by the European Commission, there is a process that should be followed to maintain the integrity of the GSP plus system. We believe that in the meantime the Government of Sri Lanka should look at the findings and act on them swiftly.
Malcolm Bruce (Gordon) (LD): As someone who visited the camps earlier this year, along with you,
Mr. Speaker, I welcome the Minister’s report on the basic conditions in the camps. Does he agree with me, however, that the Sri Lankan Government would better serve their interests if they gave full unrestricted access to the camp to the media and all the agencies and fulfilled their promise to allow people to return home before Christmas? What are the chances of that happening?
Mr. Foster: The right hon. Gentleman knows the situation well from his own experience and from his experience as Chairman of the Select Committee. I agree entirely with his assessment that it is in the Government of Sri Lanka’s interest to allow open access to the media. During the visit that I undertook two weeks ago, I had people from the BBC with me. It had full access to camps and individuals within those camps to do whatever reporting it felt necessary. Let me give the right hon. Gentleman an indication of the scale of the transfer that is needed. We have had a request from the International Organisation for Migration for transport assistance to help 41,000 people from the camps go back to Mannar, Mullaitivu and Kilinochchi, in addition to the 32,000 whom we know left the camps in September.
Mr. Eddie McGrady (South Down) (SDLP): I had the very distressing experience with the all-party group of visiting the camps at Menik farms zones 2 and 3 at Vavuniya. In spite of that distressing aspect, there was an uplifting side to the visit because of the attitude of the people and their hope for the future. Will the Minister ensure that any aid that is forthcoming from the Government is directed primarily at the welfare of the people in the camps and their displacement back to their own homes, which have been out of reach, to be joined with their families? Secondly—
Mr. Speaker: Order. I do not wish to be discourteous to the hon. Gentleman, but I think that one question will do.
Mr. Foster: When I was in Sri Lanka, I made it clear to the Government that from the end of this year, when the monsoon season was brought to a conclusion, we would no longer be funding aid for closed camps and that our aid would be directed towards facilitating movement from the camps. That includes the de-mining to which I have referred and means that I can announce £250,000 for predictable, safe and dignified transport for people from the camps back to host communities, as well as a further £220,000 to the Food and Agriculture Organisation to provide bushels of rice seeds to enable people to have a decent livelihood when they get back to their homes.
Mr. Geoffrey Clifton-Brown (Cotswold) (Con): The Minister has confirmed this morning that a package of rehabilitation measures is being put in place by the Department. That is welcome, but he has also confirmed that emergency aid will be redirected away from the camps. The Government also voted against the $2.5 billion International Monetary Fund package in July and are now considering ending the EU’s special trade privileges that the hon. Member for Mitcham and Morden (Siobhain McDonagh) mentioned. Is that really the most constructive way to persuade the Sri Lankan Government to promote a long-term reconciliation process, and to meet their stated pledge that 80 per cent. of displaced people should be returned by Christmas? That is what members of the Sri Lankan diaspora, and all Sri Lankan people in the UK, desperately want.
Mr. Foster: We were speaking up for all the people I saw in the camps two weeks ago. It was clear that they wanted to be returned to their homes as quickly as possible, but the nature of the closed camps, with their restrictions and military oversight, is wholly wrong. That is why our assistance will be geared to the de-mining, transport and livelihood programmes, as they will enable people to move safely and securely from the camps back to their homes, where they will be able to get on with their lives. I think that that is what the diaspora community here in the UK wants to hear.
ஒக்ரோபர் 22ல் அமெரிக்க இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய சாரம்:
III. Executive Summary
This report is submitted pursuant to the Joint Explanatory Statement accompanying the Supplemental Appropriations Act, 2009 (P.L. 111-32), which directed the Secretary of State to submit a report ―detailing incidents during the recent conflict in Sri Lanka that may constitute violations of international humanitarian law or crimes against humanity, and, to the extent practicable, identifying the parties responsible.‖ The alleged incidents set forth herein occurred in the context of the final months of an armed conflict between the Government of Sri Lanka (GSL) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE), which has been listed as a terrorist organization by the United States since 1997. While the conflict lasted intermittently for 25 years, this report focuses on incidents that occurred from January 2009, when fighting intensified, through the end of May 2009, when Sri Lankan government forces defeated the LTTE. It does not provide, nor is it intended to be, a comprehensive portrayal of the conflict.
The United States recognizes a state’s inherent right to defend itself from armed attacks, including those by non-state actors such as terrorist groups. The United States also expects states and non-state actors to comply with their international legal obligations. This report compiles alleged incidents that transpired in the final stages of the war, which may constitute violations of international humanitarian law (IHL) or crimes against humanity and related harms. The report does not reach legal conclusions as to whether the incidents described herein actually constitute violations of IHL, crimes against humanity or other violations of international law. Nor does it reach conclusions concerning whether the alleged incidents detailed herein actually occurred.
The report addresses the following categories of incidents:
Children in armed conflict—According to reports, on numerous occasions during the January to May 2009 reporting period the LTTE took both male and female children, some as young as 12, to join LTTE cadres.
Harm to civilians and civilian objects—The State Department has not received casualty estimates covering the entire reporting period; sources alleged that a significant number of deaths and injuries incurred at the time of attack were likely never recorded. Senior Sri Lankan officials made repeated public statements denying that the GSL was shelling the NFZ or targeting hospitals and was not responsible for any civilian casualties. However, sources alleged that the majority of shelling in the NFZ was from GSL forces. The GSL announced that it would observe a 48-hour ceasefire on two occasions. The stated aim of these was to allow civilians to move into areas in which they would not be subject to shelling. Incident reports suggest, however, that the GSL may have begun shelling before the end of the second 48-hour ceasefire. Reports also indicated that the LTTE forcibly prevented the escape of IDPs and used them as ―human shields‖.
Killing of captives or combatants seeking to surrender—A number of sources alleged that the GSL committed unlawful killings. Multiple reports alleged that in the final few days of fighting, senior LTTE leaders contacted international representatives in an effort to broker a surrender but were killed after they allegedly reached a surrender agreement with the GSL.
Disappearances—According to reports, GSL forces or GSL-supported paramilitaries abducted and in some instances then killed Tamil civilians, particularly children and young men. Sources reported that these individuals were taken to undisclosed locations without any further information being provided to relatives. IDP checkpoints and camps were alleged to be particularly vulnerable areas, with a heavy military presence hindering the ability of international organizations to conduct protection monitoring and confidential IDP interviews.
Humanitarian conditions—Reports include instances of severe food shortages; malnutrition, particularly among the very young and old; as well as surgeries being performed with little or no anesthetic. The GSL pledged to provide sufficient food and medical supplies to people in IDP camps and to those trapped in the NFZ. However, most reports point to significant gaps between food, medicine, and clean water needs and the available supplies in the NFZ and IDP camps.
அறிக்கையை முழுமையாக வாசிக்க:
jalpani
“மௌனமான தமிழ் அரசியல் அடையாள அழிப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றது.”//
இன்னும் சற்று விளக்கம் தரவும். என்னவிதமான முயற்சிகளை அரசு மேற்கொள்ளுகிறது?
முல்லைத் தீவு கடற்கரை பிரதேசங்களின் மீள் குடியேற்றம் பற்றி என்ன தகவல்கள் வருகின்றன? அங்கு மக்கள் மீள் குடியேற அரசு விரும்புகிறதா?
sajeer
இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 41,655 பேர் நேற்று தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட ங்களிலுள்ள 12,095 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவர்களாவர். இவர்கள் நேற்றுக் காலை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான பிரதான வைபவம் நேற்று மாந்தையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ, அமைச்ச ர்கள் ரிசாட் பதியுதீன், ஆறுமுகன் தொண்டான், எம். எஸ். எஸ். அமீரலி, மில்றோய் பெர்னாண்டோ, எம். எஸ். சந்திரசேன, தயாசிறி த திசேரா, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக நேற்று ஆறு வைபவங்கள் இடம்பெற்றன.
துணுக்காயில் இடம்பெற்ற வைபவத்தில் அமைச்சர் அமீரலியும் வவு னியாவில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் எஸ். எம். சந்ரசேனவும் மன்னாரில் இடம்பெற்ற வைபவத்தில் அமைச்சர் மில்றோய் பெர் னாண்டோவும் கலந்துகொண்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேற்றைய தினமே முதல் தடவையாக மீளக் குடியமர்த்தப்பட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரச்சி பிரதேச செயலாளர் பிரிவுகள், முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரவுகள், வவுனியா மாவட்ட வெங்கல செட்டிக்குளம், வவுனியா பிரதேச செயலகப் பிரிவு, வவுனியா தெற்கு செயலகப் பிரிவு, மன்னார் மாவட்டத்தின் மாந்தை, மன்னார் நகரப் பிரதேச செயலகப் பிரிவு மக்களே நேற்று மீள் குடியேற்றத்துக்காக அனுப்பப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில் 2583 குடும்பங்களைச் சேர்ந்த 8643 பேர், மன்னார் மாவட்டத்தில் 2644 குடும்பங்களைச் சேர்ந்த 6631 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16,394 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 2453 குடும்பங்களைச் சேர்ந்த 10017 பேரும் நேற்றைய தினம் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மீள்குடியேறும் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடி தேவைக்கான பொருட்களைப் பெற்றுக் கொள்ள 5,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு தற்காலிக குடியிருப்புகளை அமைத்துக் கொள்ளவென ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருபதினாயிரம் ரூபா படி அவரவர் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளன.
இவர்கள் தமக்கான பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள வசதியாக கூட்டுறவுக் கடைகள், லக் ச. தொ. ச. நிலையங்களும் திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் இடம்பெற்ற மீள் குடியேற்றத்தையொட்டி கருங்கண்டல் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து மாணவர்களுக்கான சீருடைகள், கல்வி உபகரணங்களையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.
sajeer
இடம்பெயர்ந்துள்ள மக்களைத் துரிதகதியில் மீளக்குடியேற்றும் பணியை இலங்கையைப் போன்று உலகில் வேறெந்த நாடுமே முன்னெடுக்கவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வட மாகாண அபிவிருத்தி க்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று மன்னார்-மாந்தையில் தெரிவித்தார்.
அவ்வாறு உலகில் எங்காவது இடம்பெற்றிருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறும் பசில் ராஜபக்ஷ எம்.பி. சவால் விடுத்தார்.
வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 12095 குடும்பங்களைச் சேர்ந்த 41685 பேரை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் பிரதான வைபவம் மன்னார், மாந்தையில் நேற்று நடைபெற்றது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ எம்.பி. வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவர்கள் இழந்துள்ள உயிர்களைத் தவிர ஏனைய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதற்கு ஏற்ப நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் சொந்த இடங்களது உட்கட்டமைப்பு வசதிகள் யாவும் துரிதமாக மீளமைக்கப்படுகின்றன. பயங்கரவாத நடவடிக்கை காரணமாக அழிவுற்றுள்ள சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. வீதிகள், பாலங்கள் ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள், மின்சாரம், குளங்கள், வாவிகள் என சகல வசதிகளும் புனரமைக் கப்படுகின்றன. இவற்றை மீளக்குடியமரும் மக்கள் நேரில் பார்க்க முடியும்.
மீளக்குடியேற்றப்படுகின்ற விவசாயிகளுக்கு விதை நெல், பசளை, விவசாய உபகரணங்கள் என்பவற்றை விநியோகிக்கப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேநேரம் மீளக்குடியமர்த்தப்படும் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணைங்கள் என்பவற்றைப் பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புனரமைக்கப் பட்டுள்ளது. இக்குளத்திலிருந்து எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி 13411 ஏக்கர் நிலத்திற்கு விவசாயம் செய்யவென தண்ணீர் வழங்கப்படவிருக்கின்றது.
அதேநேரம் கடந்த 20 வருடங்களாகச் செய்கை பண்ணப்படாத 11026 ஏக்கர்விவசாய நிலத்திற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி தண்ணீர் வழங்கப்படும். இதன் பயனாக சொந்த இடங்களில் மீளக் குடியமரும் மக்கள் முன்பு போன்று வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
இடம்பெயர்ந்துள்ள மக்களை கடந்த ஏப்ரல் மாதம் முதல் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தி வருகின்றோம். அதன்படி கடந்த ஏப்பரல் முதல் இற்றைவரையும் 48976 மக்களை மீளக்குடியமர்த்தியுள்ளோம். (நேற்று) இன்று 41685 பேரை மீளக் குடியமர்த்துகின்றோம்.
இதன்படி இடம் பெயர்ந்துள்ளவர்களில் சுமார் ஒரு இலட்சம் பேரை சொந்த வாழிடங்களில் மீளக் குடியமர்த்தியுள்ளோம். ஏனையவர்களும் துரிதமாக மீளக் குடியமர்த்தப்படுவர்.
இலங்கையில் போன்று உலகில் வேறெங்குமே இடம்பெயர்ந்த மக்கள் துரித கதியில் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. அமெரிக்காவில்கூட சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏழு வருடங்களாகியும் முகாம்களில் தான் வாழுகின்றனர் என்றார்.
ப்பிரசன்னா
நேற்றைய குடியேற்ற நடடிக்கைகள் உங்களுக்கு மனசுக்குள் கம்பளப் பூச்சியை ஊர வைக்கிறதா?
மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் . இதன் கடைசி எல்லை வன்னி வரையும் வந்திருந்தது. கட்டுக்கரை குளம் புனரமைக்கப் பட்டுள்ளது. இக்குளத்துக்கு தண்ணி எங்கிருந்து வருகிறது? கொஞ்சம் பின்னோக்கி சிந்தித்துப் பாருங்கள். நினைவில் வருகிறதா? இக்குளத்திலிருந்து …..
“அதேநேரம் கடந்த 20 வருடங்களாகச் செய்கை பண்ணப்படாத 11026 ஏக்கர்விவசாய நிலத்திற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி தண்ணீர் வழங்கப்படும். இதன் பயனாக சொந்த இடங்களில் மீளக் குடியமரும் மக்கள் முன்பு போன்று வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ”
இவர்கள் என்ன தண்ணீரை பொலித்தீன் பக்கெட்டிலா அடைத்து வைத்துள்ளார்கள். ஏன் கடந்த 20 வருடங்களாகச் செய்கை பண்ணப்படாத 11026 ஏக்கர்விவசாய நிலங்கள் இருந்தன. பின்னூட்டமிட்ட இவர் சொல்வாரா?
” மீளக்குடியேற்றப்படுகின்ற விவசாயிகளுக்கு விதை நெல், பசளை, விவசாய உபகரணங்கள் என்பவற்றை விநியோகிக்கப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்”
இந்த விதை நெல் தொடர்பாக ஏதாவது கூற முடியுமா? இதை யார் கொடுத்தது? ஏன் விவசாயிகளிடம் விதை நெல் இல்லாமற் போனது ? விவசாயிகள் பாரம் பரியமாக விதைநெல்லை தாமே சேமித்துத்தானே வைத்தார்கள். இந்த 1 வருடத்தில் எப்படி இது தலைகீழானது? வன்னியில் பெருமளவு ஆயுதத்தை தோண்டி எடுத்த ராணுவத்துக்கு, ஏதாவது வீட்டுக் கொல்லைப் புறத்தில் விதைதானியங்கள் எதுவும் எத்துப்படவில்லையா?
சாந்தன்
தோழர் ஜெயபாலன், இதில் திடீரெனெ உங்களுக்கு ஞானோதயம் வந்து விட்டது ஆச்சரியமாக இருக்கிறது.
ஐ.நா, வணங்க்காமண், இந்திய உதவிகள் போகாமல் லிற்றில் எய்ட் உதவிகள் ‘போய்ச் சேர்ந்ததற்கு’ என்ன நியாயமான காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
மனித உரிமை ஆர்வலர்கள் அனுமதிக்கப்படாமல் ‘21 பேர் குழு’ அனுமதிக்கப்பட்டதற்கும் , த.தே.கூ, எதிர்க்கட்சியான யூ.என்.பி அனுமதிக்கப்படாமல் தமிழ்நாட்டு திமுக/காங்கிரஸ் எம்பிக்கள் அனுமதிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?
அமெரிக்கா அராஜக ஆக்கிரமிப்பு வல்லாதிக்க நாடு என இங்கு பலர் வந்து ஒப்பாரி வைக்கபோகிறார்கள், உங்களுக்கு ஏன் வம்பு?
Jeyabalan T
நண்பர் யாழ்பாணிக்கு
“மௌனமான தமிழ் அரசியல் அடையாள அழிப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றது.” விபரம்
முக்கிய அம்சம் தமிழ் மக்களது (சிறுபான்மை மக்களது) அரசியல் அடையாளத்தைப் பலவீனப்படுத்தி அவர்களை பலமற்ற சக்திகளாக மாற்றுவது. பலமற்ற சக்திகள் ஆக்குவது என்பது தமிழ் மக்களைப் படுகொலை செய்து திட்டமிட்ட பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டு கொடூரத்துடன் செய்வதல்ல.
மாறாக திட்டமிட்ட முறையில் தமிழ் அரசியல் கட்சிகளை ஓரம்கட்டுவது. குறிப்பிட்ட இனம்சார்ந்து கட்சிப் பெயர்கள் அமைப்புகள் செயற்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சி அவ்வகையினதே.
சிறுபான்மைப் பிரதிநிதிகளை தேசியக் கட்சிகளுக்குள் உள்வாங்குவது.
சட்டரிதியாக சிறுபான்மை இனங்களுக்குள்ள குறைந்தபட்ச உரிமைகளையும் வழங்க மறுப்பது. (மொழிப் பயன்பாடு)
பெளத்தம் தவிர்ந்த மதங்களின் நடைமுறைகளுக்கு தடைகளை அறிமுகப்படுத்தவது.
வடக்கு கிழக்கு தமிழர்கள் தென்பகுதிகளில் குடியேறுவதை ஊக்குவிப்பது.
குடிசன விகிதாசாரத்தை மாற்றி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைப்பது.
தமிழ் மக்கள் தேசியக் கட்சிகளினாலேயே பிரதிநிதித்தவப்படுத்த முடியும் என்ற நிலையை ஏற்படுத்தவது.
இவ்வாறு இன்னும் நுண் அரசியலைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் அடையாளத்தை பலவீனப்படுத்த அரசு முயற்சிக்கிறது. ஆனால் தமிழ் அரசியல் சக்திகளோ இன்னும் மே18க்கு அப்பால் வர இயலாமல் திணறுகின்றனர்.
ப்பிரசன்னா
சும்மா போட்டுக் கடையாதீர்!
1. “இந்திய உதவிகள் போகாமல் லிற்றில் எய்ட் உதவிகள் ‘போய்ச் சேர்ந்ததற்கு”
2. “த.தே.கூ, எதிர்க்கட்சியான யூ.என்.பி அனுமதிக்கப்படாமல் தமிழ்நாட்டு திமுக/காங்கிரஸ் எம்பிக்கள் அனுமதிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என நினைக்கிறீர்கள்? ”
1இல் கூறியதுக்கும் 2.இல் கூறியதுக்கும் உள்ள முரண்பாட்டை திரு. சாந்தன் தெளிவுபடுத்த முடியுமா? சும்மா மக்களைக் குளப்ப வேண்டாம்.
விசுவன் 1
கடந்த யுத்த நிகழ்வில் மக்கள் விதை நெல்லை அரிசியாக்கி உண்டதாக செய்திகள் வந்தன. அது மட்டுமல்ல புலிகளின் வரி மக்கள் விவசாயம் செய்வதை கைவிட்டதாக வேறு செய்திகள் வந்தன.
Jeyabalan T
நண்பர் பிரசன்னா என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் யாருக்கே பேச்சு விழுகின்றது என்று புரிகிறது. ஏன் பன்பது புரியவில்லை. விளக்கமாக எழுதவும்.
//தோழர் ஜெயபாலன் இதில் திடீரெனெ உங்களுக்கு ஞானோதயம் வந்து விட்டது ஆச்சரியமாக இருக்கிறது.//சாந்தன்
உண்மையிலேயே ‘தோழர்’ என்பதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. இது காரணமாக வரும் விழிப்பா அல்லது இடுகுறியான விழிப்பா என்பதும் புரியவில்லை. அதனால் நான் பொதுவாக நட்புடன் என்றே நிறுத்திக் கொள்கிறேன்.
சாந்தன் எனக்கு ஞானப்பல்லு முளைச்ச விசயத்தை உங்களுக்கும் யாரோ சொல்லிப் போட்டினம் போல இருக்கு. அது ஒன்றும் பெரிய விசயமில்லை. லேட்டாத்தான் முளைக்கிறது. அது கிடக்கட்டும்.
///ஐ.நா வணங்க்காமண் இந்திய உதவிகள் போகாமல் லிற்றில் எய்ட் உதவிகள் ‘போய்ச் சேர்ந்ததற்கு’ என்ன நியாயமான காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள்? மனித உரிமை ஆர்வலர்கள் அனுமதிக்கப்படாமல் ‘21 பேர் குழு’ அனுமதிக்கப்பட்டதற்கும் த.தே.கூ எதிர்க்கட்சியான யூ.என்.பி அனுமதிக்கப்படாமல் தமிழ்நாட்டு திமுக/காங்கிரஸ் எம்பிக்கள் அனுமதிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?// சாந்தன்
இது என்ன ரொக்கட் சயன்ஸ் கேள்வி மாதிரி நீட்டி முழக்கி கேட்கிறீர்கள். அரசியல் அரிவரி. இலங்கை அரசின் விதிமுறைகளுக்கு அமைய செயற்படும் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன். மற்றையவை அனுமதிக்கப்டவில்லை. என்ன கிடுக்குப்பிடி பிடித்தவிட்ட சிற்றின்பமா?
இலங்கை அரசு சொல்கிறது வன்னி மக்கள் தனது மக்கள். இலங்கை மக்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது தன்னுடைய பொறுப்பு என்கிறது.
லிற்றில் எய்ட் என்ன சொல்கிறது என்றால் அவலப்பட்ட மக்களுக்கு எங்களால் முடிந்ததைச் செய்து அந்த மக்களுக்கு துணையாக நிற்போம் என்கிறது.அரசாங்கத்தின் கைகளில் மட்டும் மக்களைத் தள்ளிவிட்டுவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது என்கிறது.
நீங்கள் கேள்விகளை மட்டுமே கேட்பவர்கள் ‘லிற்றில் எய்ட் ஏன் அனுமதிக்க்பட்டது என்று கேட்கிறீர்கள்.
வன்னி முகாமில் உள்ள மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் யார் குத்தியோ அல்லது மில்லில் அரைத்தோ அரசி வந்தால் சரி என்கிறார்கள்.
புலியின் மரணப் பிடியிலும் வன்னி முகாமிலும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால் அல்லது இருப்பவர்களுடன் பேசிப் பழகி இருந்தால் புலத்தில் பலருக்கு ஞானோதயம் வந்திருக்கும். அதனால் தான் மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.
மாயா
//சாந்தன் on October 23, 2009 4:47 pm தோழர் ஜெயபாலன், இதில் திடீரெனெ உங்களுக்கு ஞானோதயம் வந்து விட்டது ஆச்சரியமாக இருக்கிறது.
ஐ.நா, வணங்க்காமண், இந்திய உதவிகள் போகாமல் லிற்றில் எய்ட் உதவிகள் ‘போய்ச் சேர்ந்ததற்கு’ என்ன நியாயமான காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள்? //
அதிகமாக ´லிட்டில் எயிட்´ தனது உதவி பொருட்களை இலங்கையில் வாங்கி , இலங்கையில் விநியோகிக்கிறது. அதை சுவிஸ் கருத்தரங்கில் செய்தி படமாக காட்டும் போது பார்க்க முடிந்தது. பணம் கொண்டு சென்றால் போதும். இலங்கையில் இருந்து எதையும் வாங்கி அனுப்பலாம். குறைந்த பணத்தில் வாங்கி, பிரச்சனை இல்லாமல் அங்குள்ளவர்களுக்கு கொடுத்து உதவலாம்.
சில புலத்து படித்த மேதாவிகள் கப்பலில் ஏற்றி அனுப்பி , கப்பல் கட்டணம் மற்றும் வரி , வட்டி , லஞ்சம் என கயிறு இழுத்து , கடைசியில் குப்பையில் கொட்டவும் பணம் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. பல வேளைகளில் துறைமுகத்திலேயே உரமாகும் பொருட்கள் அதிகம். சற்று மேல் தட்டை பாவித்தால் இந்த பிரச்சனை வராது.
விசுவன் 1
வணங்கா மண் அரசியற் சாயம் பூசப்பட்ட மண் குதிரை! அதன் அரசியல் சாயமே அதன் தாமதத்திற்கு காரணம்! எப்படியோ இன்று அது போய் சேரந்துள்ளது. அது சரி இந்த ரீஎன் ஏ மற்றும் யூஎன்பி கட்சிகள் அங்கை போய் பார்க்க என்ன அது மிருக காட்சிசாலையே? பாரக்க விடாட்டி என்ன அந்த மக்களை விடுவிக்கவோ அல்லது உதவவோ பல வழிகள் உள்ளன. அதை ஏன் செய்யவில்லை? இந்திய குழுவை அனுமித்தது அரசியல் காரணம் தான் அதை மறுக்க முடியாது. ஆனால் பார்க்க விடவில்லை என்ற நொண்டி சாட்டை வைத்து அவர்களின் விடுதலைக்கு ஏதுவும் செய்யாதிருப்பது ஏன்?
ப்பிரசன்னா
விசுவன்
புலிகளின் யுத்தக் காலத்துக்கும், அடுத்த விதைப்புக் காலத்துக்குக்கும் எவ்வளவு தூரம் என்று சொல்லுங்கள் அதன் பின்னர் தொடர்கிறேன்.
சாந்தன்
பிரசன்னா,
‘..1இல் கூறியதுக்கும் 2.இல் கூறியதுக்கும் உள்ள முரண்பாட்டை திரு. சாந்தன் தெறிவுபடுத்த முடியுமா? …’
”உதவி”களுக்கும் ”எம்பி”களுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு தெரியாமல் போனது எனது குற்றமே!
ஜெயபாலன்,
‘..உண்மையிலேயே ‘தோழர்’ என்பதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ’
உங்களுக்கு உண்மையானபடி எடுத்துக்கொள்ளலாம். இல்லை நான் சார்ந்திருந்த இயக்கத்தின் ‘காச்சல்’ இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பதாலாகவும் இருக்கலாம்.
‘..இது என்ன ரொக்கட் சயன்ஸ் கேள்வி மாதிரி நீட்டி முழக்கி கேட்கிறீர்கள். அரசியல் அரிவரி. இலங்கை அரசின் விதிமுறைகளுக்கு அமைய செயற்படும் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. மற்றையவை அனுமதிக்கப்டவில்லை. என்ன கிடுக்குப்பிடி பிடித்தவிட்ட சிற்றின்பமா?..’’
அப்போ இந்த அரிவரிக்கு ஏன் அமெரிக்க அரசின் அறிக்கையை பெரிதாக இழுக்கவேண்டும்? இதே அறிக்கை அரிவரிக்கு தகுந்த மாதிரி நடந்திருந்தால் வெறு விதமாக ‘அனுமதிக்கப்பட்டிருக்கும்’ இல்லையா? இதில் ரொக்கற் சயன்ஸ் கேள்வி தேவையில்லை. நான் கேட்டது அரிவரிக் கேள்வி. நீங்கள் தான் அதை ரொக்கற் சயன்ஸ் லெவலுக்கு இழுக்கிறியள்.
”….நீங்கள் கேள்விகளை மட்டுமே கேட்பவர்கள் ‘லிற்றில் எய்ட் ஏன் அனுமதிக்க்பட்டது என்று கேட்கிறீர்கள். வன்னி முகாமில் உள்ள மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் யார் குத்தியோ அல்லது மில்லில் அரைத்தோ அரசி வந்தால் சரி என்கிறார்கள்…..’
அதே பதில்களையும் தான் விடுவிக்கப்பட்ட 5700 மக்களும் விடுதலையை எதிர்பார்த்திருக்கும் 40,000 பேரும் சொல்கிறார்கள். இன்றைய அல்ஜசீரா செய்தியில் ஒருவர் “மேன்மைதங்கிய ஜனதிபதி தங்களை வீடுகளுக்கு அனுப்பி வைப்பதையிட்டு மகிழ்ச்சி” என ஒருவர் சொல்வதைப் பாருங்கள். அவர்களுக்கு உங்களின் ’காலாவதி’, ‘மெளனம்’, ‘அடையாளம்’ எல்லாம் தேவையில்லை என எடுத்துக்கொள்ளலாமா? காலாவதியாக்கியாதல் விடுவித்தால் சரி என்பதே அவர்களின் கோரிக்கை!
”..புலியின் மரணப் பிடியிலும் வன்னி முகாமிலும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால் அல்லது இருப்பவர்களுடன் பேசிப் பழகி இருந்தால் புலத்தில் பலருக்கு ஞானோதயம் வந்திருக்கும். அதனால் தான் மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.”
மேலே சொன்ன பதில் தான் இதற்கும். ஆம் ‘மக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ காலாவதி ஆக்கல் கதை விட வேண்டாம் என்கிறார்கள்.
மாயா,
ஒரு விடயம் சொல்கிறேன் கேளுங்கள்.
ஒரு மருத்துவக்குழு வெளிநாடுகளில் சேகரித்த (நன்கொடையாக) மருத்துவ உபகரணங்கள், மருந்துப்பொருட்கள் என்பவற்ரை வினியோகிக்க ‘அனுமதி’ கேட்டனர். இதில் விமானச் செலவும் இலவசம். என்ன பதில் என நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைக்கும் ‘இல்லை’ தான்.
சரி எமது செலவாக இருந்துவிட்டு போகட்டுமெ. அதைப்பற்றி ஸ்ரீலங்காவுக்கு என்ன கவலை? மக்களில் அக்கறை எனின் யார் என்ன செலவழித்தால் என்ன? யாரும் ஸ்ரீலங்கா அரசை பணம் கேட்கவில்லையே? பணம் கொடுத்தவனுக்கு அக்கறை இல்லை ஆனால் ஸ்ரீலங்காவுக்கு லாப / நட்ட அக்கறை. ந்ல்ல ஜோக்குத்தான்! வெளிநாட்டு உதவிகளுக்கே வரி அறவிடும் நாடல்லவா ஸ்ரீலங்கா. வாழ்க!
‘..சற்று மேல் தட்டை பாவித்தால் இந்த பிரச்சனை வராது….’
உண்மைதான். அரசின் அரிவரி ’விதிமுறை’ எமது மேல்தட்டில் ஏறவில்லை. நாங்கள் ரொக்கற் சயன்ஸ் லெவலில் காலாவதி,அடையால அரசியல் அழிப்பு என சிந்தித்து விட்டோம். மன்னிக்கவும்.
இந்த விதிமுறைகள் என்ன எனக்கேட்டபோது நியூயோர்க்கில் ஸ்ரீலங்கா பிரதமர் சொன்னது அறிந்திருப்பீர்கள். இல்லை என்றால் சொல்லுங்கள் லிங்க் அனுப்பி வைக்கிறேன்.
விசுவன் 1 /’..அது சரி இந்த ரீஎன் ஏ மற்றும் யூஎன்பி கட்சிகள் அங்கை போய் பார்க்க என்ன அது மிருக காட்சிசாலையே?…’/
அப்ப போன தமிழ்நாடு எம்பிமார் எந்த மிருகக்காட்சி சாலைக்கு போனவையள்?
பார்த்திபன்
சாந்தன்,
உங்களிடம் ஒரு கேள்வி, தாங்கள் கட்டாயம் பதிலளிப்பீர்களென்ற நம்பிக்கையில். வணங்காமண் கப்பல் புறப்பட்ட போது அதில் 5-6 வைத்தியர்கள் கொண்ட குழுவொன்றும் சென்றது. ஆனால் இடையில் கப்பலில் இருந்து இறங்கி அவர்கள் பிரித்தானியா திரும்பி விட்டார்கள். மக்களுக்குச் சேவையாற்ற என்று வசனம் பேசி புறப்பட்ட அந்தக் குழு கப்பலில் இருந்து இடையிலேயே ஓடிவிட்ட காரணமென்ன என்பதை தங்களை விளக்கமாக கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
BC
வணங்கா மண்ணை பிரச்சனையில்லாமல் போகவிட்டிருந்தால் புலத்தில் மிக பெரிய பணசுருட்டல் தொடர்ந்து நடைபெற்றிருக்கும்.
பல்லி
காலபோக்கில் எமக்கு தலை வலி வந்தாலும் அமெரிக்கா சொன்னாதான் நம்புவோமா தெரியவில்லை; எமக்கு வன்னியில் நடப்பது அனைத்தும் தெரியும்; இருப்பினும் புலிமீது உள்ள வெறுப்பால் அதை ஏற்றுகொள்ள பலர் மறுப்பதால் சிலர் அவர்களுடன் கூடி அரசசபையில் சங்கீதம் பாடுகினம்; இதில் தேசமும் இடைக்கிடை அரசின் தவறை ஏற்க்க மறந்ததை பல்லி சுட்டி காட்டியுள்ளேன்; அரசு நாம் சொல்லி எதையும் கேக்க போவத்தில்லை;ஆனால் மக்களுக்கு புலம் பெயர் தேசத்தில் இருந்து வரும் குரல்கள் ஆதரவாக இல்லாவிட்டாலும் எதிராக இருக்கட்டும்; இது புலியின் கருத்தல்ல பல்லியின் ஆதங்கம்;
சோழன்
தோழர் ஜெயபாலன், மாற்றேயில்லாத மாற்றுக்கருத்து மாணிக்கங்களில் சில உண்மைகளையாவது ஒப்புக்கொள்ளும்/வெளிக்கொணரும் பத்திரிகையாளனாக நீங்கள் இருப்பதை மனதார பாரட்டுகிறேன்.
புலி அழிப்புடன் தமிழர்களின் பிரட்சனைகள் எல்லாம் முடிந்து விட்டதாக அலறும் இணைத்தளங்களின் மத்தியில் தேசம்நெற் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அடையாளங்கள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பதை வெளிக்கொணர்ந்திருக்கிறது. நன்றிகள் (இது உங்கள் நண்பர்கள் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும்)!!
நீங்கள் புலம்பெயர் தமிழர்கள், வன்னி முகாங்களில் இருக்கும் எம்மவர்களுக்கான உதவிகளை செய்யாததனால், அவர்கள் இலங்கை அரசே தம்மை மீட்பவர்களாக நினைக்க வேண்டிய சூழ்நிலை இருக்க வேண்டியதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
அண்மையில் நீண்ட சுற்றுளாவை முடித்து வந்த உங்கள் முன்னாள் நன்பர்களான சில மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் கூறியதிலிருந்து …. “வன்னி முட்கம்பி முகாமில் இருக்கும் மக்களை நீண்ட நாட்களுக்கு வைத்து இழுக்கவே சிறிலங்கா அரசு விரும்புகிறது. இங்கிருந்து யாரும் முட்கம்பி முகாம் மக்களுக்கு செய்வதிலும் பார்க்க மீள குடியேறிய பின் உதவுவதே நல்லது. ஏனெனில் மீள குடியேற்றப்படும் மக்களுக்கான எவ்வித வேலைத்திட்டங்களையும் சிறிலங்கா அரசு வைத்திருக்கவில்லை. அவர்கள் குடியேற்றப்படுவார்களேயாயின் தொழிலும் இல்லை, வருமானமும் இல்லை, பலர் தற்கொலை கூட செய்து கொள்ளக்கூடும்” …. என்கிறார்கள்!!
இங்கு சிலர் கூறலாம், சிறிலங்கா அரசு மீள்குடியேற்றாங்களை ஆரம்பித்து விட்டது என்று!! கொழும்புத் தகவல்களின்படி … இம்மீளக்குடியமர்வு ஆனது சிறிலங்கா அரசின் ஓர் திட்டமிட்ட நடவடிக்கை அல்ல, மாறாக அண்மையில் சர்வதேச அழுத்தங்களுக்கு உடணடி நிவாரண நடவடிக்கையாக இம்மீள்குடியேற்றம் தொடங்கப்பட்டதாம். மீள்குடியேற்றம் என்பது வவுனியா முட்கம்பி முகாம் மக்களை வானியில் உள்ள வேறோர் முட்கம்பி முகாங்களுக்கு இடம் மாற்றுவது மட்டுமே! வேறொன்றுமில்லை!!
… லிட்டிலெய்ட் … உந்த லிட்டிலாகத்தான் ஜேர்மனியில் இருந்து சிலர் தங்களுக்குள்ளேயே பணத்தை சேகரித்து வவுனியாவில் ஒருவருக்கு அனுப்பி முகாம் மக்களுக்கும், வெளியேறிய சில சிறார்களுக்கும் உதவினார்கள். சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவில் உதவியவரை சிறிலங்காவின் பாதுகாவலர்கள் தூக்கி சென்று சில நாட்கள் அர்ச்சனையின் பின் விட்டார்களாம். வீடு வந்தவர் தனக்கே நெருப்பு கொழுத்தி உயிரை விட்டிருக்கிறார். இது நடந்து ஓரிரு வாரங்கள் இல்லை!!
இன்று அங்கி கைதுகள், கடத்தல்கள், விடுதலைகள் எல்லாம் புலம்பெயர் பணத்துக்காகத்தானாம்! சில நாட்களின் முன்னும் கட்நாயக்காவில் பிரித்தானியாவுக்கு வர இருந்து பிடிபட்ட சில மாணவர்களிடமும் லட்சங்களை கறந்தார்களாம் … இதுவும் பசிலோ/கோத்தபாயவோ./மகிந்தவினதோ சிந்தனைதான்!!
இன்னும் எத்தனை நாட்களுக்கு புலி… புலி…புலி அரசியலை நடத்தப் போகிறீர்கள். அந்து முடிச்சுது! இனியாவது நிஜ உலகிற்கு வாருங்கள்!! இந்த அழைப்பு புலி பினாமிகளுக்கும், மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும்!!
குகபிரசாதம்
அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் கடந்த வருடம் பரவிய காட்டுத்தீயில் எழுநூறு ஆமாம் ஆக எழுநூறு குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர். இவர்களில் ஒரு சிலரை தவிர பெரும்பான்மையான குடும்பங்கள் இன்னமும் இடம்பெயந்தவர்களாகவே தற்காலிக இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவுஸ்திரேலிய அரசாலோ விக்டோரியா மாகாண அரசாலோ அல்லது காப்புறுதி நிறுவனங்காலேயோ இவர்களை இன்னமும் மீளக் குடியமர்த்த முடியவில்லை.
நாலு வருடத்திற்கு முன் கத்ரீனா என்ற புயல்காற்றில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநில மக்களில் இன்னமும் பல ஆயிரக்கணக்கானோர் இடம்பெயந்த தற்காலிக இடங்களிலேதான் வசித்து வருகின்றனர். இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு எப்போது திரும்பலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
உலக வரலாற்றிலேயே இவ்வளவு தொகையாக இடம்பெயந்த மக்களை உள்நாட்டில் வைத்து பராமரித்த சம்பவம் இலங்கையில்தான் நடந்துள்ளது. அத்துடன் இவ்வளவு விரைவாக இடம் பெயந்தவர்களை மீளக் குடியேற்றி வருவதும் இதுவரை உலகில் வேறு எங்கும் நடைபெறவில்லை.
மீளக் குடியேற்றுவதில் இலங்கை அரசு இன்னமும் துரிதமாக செய்ய முடியாமல் இருப்பதற்கு முக்கிய மூன்று காரணங்கள்
ஆயிரக்கணக்கான புலிகள் இடம்பெயந்த மக்கள் மத்தியில் ஒளிந்திருப்பது.
மீளக் குடியேறக்கூடிய இடங்களில் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் இன்னமும் புதைந்திருப்பது இன்னமும் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணைகள் தற்கொலை அங்கிகள் ஆயத்தங்கள் மீளக் குடியேற்ற வேண்டிய இடங்களில் இருந்து கண்டு பிடித்து எடுக்க வேண்டியிருப்பது
கடந்த ஐந்து மாதமாக குண்டு வெடித்தோ பதுங்கு குளிகளிலோ நூற்றுகணக்கானோர் தினசரி இறந்து போவது முற்றாக நின்றுவிட்டது.
அனைவரும் மீளக் குடியேற இன்னமும் நாலு மாதம் எடுக்கும்.
இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறிய பின் அத்தனை தமிழ்ஈழ ஊடகங்களும் தமிழக சினிமாவை நோக்கி நகர வேண்டியதுதான் ஏற்கனவே பல தமிழ்ஈழ ஊடகங்கள் கவர்ச்சி படங்களை இணைக்க ஆரம்பித்துவிட்டன
வாசு
விசுவன் 1 /’..அது சரி இந்த ரீஎன் ஏ மற்றும் யூஎன்பி கட்சிகள் அங்கை போய் பார்க்க என்ன அது மிருக காட்சிசாலையே?…’/
அப்ப போன தமிழ்நாடு எம்பிமார் எந்த மிருகக்காட்சி சாலைக்கு போனவையள்?
அவை போன பின் 500 மில்லியன் சுளையா போனது தெரியாதா? இவை போனால் என்ன பலன்
மாயா
//மாயா, ஒரு விடயம் சொல்கிறேன் கேளுங்கள். ஒரு மருத்துவக்குழு வெளிநாடுகளில் சேகரித்த (நன்கொடையாக) மருத்துவ உபகரணங்கள், மருந்துப்பொருட்கள் என்பவற்ரை வினியோகிக்க ‘அனுமதி’ கேட்டனர். இதில் விமானச் செலவும் இலவசம். என்ன பதில் என நினைக்கிறீர்கள்? நீங்கள் நினைக்கும் ‘இல்லை’ தான்.
சரி எமது செலவாக இருந்துவிட்டு போகட்டுமெ. அதைப்பற்றி ஸ்ரீலங்காவுக்கு என்ன கவலை? மக்களில் அக்கறை எனின் யார் என்ன செலவழித்தால் என்ன? யாரும் ஸ்ரீலங்கா அரசை பணம் கேட்கவில்லையே? பணம் கொடுத்தவனுக்கு அக்கறை இல்லை ஆனால் ஸ்ரீலங்காவுக்கு லாப / நட்ட அக்கறை. ந்ல்ல ஜோக்குத்தான்! வெளிநாட்டு உதவிகளுக்கே வரி அறவிடும் நாடல்லவா ஸ்ரீலங்கா. வாழ்க!- சாந்தன் on October 23, 2009 8:21 pm //
சாந்தன் , சுனாமி காலத்தில் ஐரோப்பிய உதவி நிறுவனங்களோடு சென்று 3 மாதம் பணிகளில் ஈடுபட்டவன். நாங்கள் அனர்த்தம் நடந்தவுடன் போன போது , நாங்கள் எவ்வளவு உதவி பொருட்கள் என்றாலும் கொண்டு செல்ல சிறீலங்கன் எயார்லைன்ஸ் இடம் தந்தது. அதையும் பல சுயநலவாதிகள் தவறாக பாவித்து தமது உடமைகளை கொண்டு சென்றார்கள். விமான நிலையத்தில் கூட பார்க்காமலே பொருட்களை கொண்டு செல்ல விட்டார்கள். பின்னர் கூட எமக்காக விமானத்தில் வந்த ஒரு தொகுதி பொருட்கள் சுங்க இலாகா வரி செலுத்தாமல் கொண்டு செல்ல அனுமதி தந்தது. அந்நேரம் புலிகளால் வந்தது வினை? புலிகள் இதை சாட்டாக வைத்து விமான உதிரிப் பாகங்களையும், சில ஆயுதங்களையும் கடத்தியது. அதன் பின்னர் வெளிநாடுகளில் இருந்து வந்த பொருட்கள் அனைத்தும் ஒரு இடத்தில் வைக்கப்பட்டு , அக்குவேறு ஆணிவேராக துருவிய பின்னரே கொடுக்கப்பட்டது. ஏகப்பட்டவை, காலம் தாமதித்து வீசப்பட்டது.
இவற்றுக்கு யார் காரணம்? எல்லாத்தையும் நாத்தியவர்கள் யார் என்று உணர்ந்தால், இந்த கேள்விகள் வராது?
இதை உணர்ந்த எமது குழு, ஐரோப்பிய உதவி நிறுவனங்களிடம் பணத்தை அனுப்பும்படி சொல்லி, அதை கொண்டு தேவையானவற்றை இலங்கையிலேயே வாங்கினோம். சில இலங்கை நிறுவனங்கள் வழி , இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு தரப்பட்டது. ஐரோப்பாவை விட இலங்கையில் மருந்து பொருட்களை மட்டுமல்ல , இலங்கை வாழ் மக்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கலாம்.அதற்காக போகும் செலவு மிகக் குறைவு. இங்கு வாங்கும் அதே தரத்திலான மருந்தையெல்லாம் , கால் விலையில் அங்கு பெற்றோம். அதனால் தேவையற்ற கால விரயம் மற்றும் அலைச்சல் மிகுதியானது.
அந்நேரத்தில் சுவிஸிலிருந்து பாடசாலைகளுக்கான சில தளபாடங்களை இலவசமாக அனுப்ப ஒரு நிறுவனம் முன் வந்தது. அது ஏற்கனவே பாடசாலை ஒன்றில் பாவிக்கப்பட்டவை.அதற்கான வழி முறைகளை கண்டபோது, அதை அனுப்ப கப்பலுக்கு செலுத்தும் பணத்துக்கு அதை விட இரு மடங்கு தளபாடங்களை இலங்கையில் எடுக்கலாம் என அறிந்து , உடனேயே அந்த நிறுவனத்துக்கு அதை அறிவித்தோம். நிலமையை உணர்ந்த அவர்கள் உடனடியாக கப்பலுக்கு கொடுக்கும் பணத்தை வங்கிக்கு அனுப்பினார்கள். அந்த பணத்தில் புதிய தளபாடங்கள், அதுவும் , அந்த பாடசாலைகளில் இருந்த அதே போன்ற தளபாடங்களை வாங்கிக் கொடுக்க முடிந்தது. இவை அனுபவம். பொருட்களுக்கு சுங்க வரி செலுத்தி, அங்கே லஞ்சம் கொடுத்து கால் கடுக்க காய்வதெல்லாம் தேவையற்ற வேலை.
புலத்தில் உள்ளவர்கள் ஏன் பொருட்களை வாங்கி அனுப்புகிறார்கள் தெரியுமா? இங்கும் அதை வைத்து சுரண்ட முடியும் என்பதால்தான். இங்கிருந்து ஒரு கப்பலில் பொருள் போனது என்பதுதான் செய்தி. அதில் எவ்வளவு தொகைக்கான பொருள் போகிறது என யாரும் கேட்பதில்லை. நாம் கொடுத்த பொருள்தான் போனது என ஆளாளுக்கு நினைத்துக் கொள்கிறார்கள்.இதுதான் கேம். வணங்கா மண்ணுக்கு செலவான தொகைக்கும் , அலைச்சலுக்கும் எத்தனை கப்பல் பொருட்களை இலங்கையில் வாங்கியிருக்கலாம்?
அது முள்ளிவாய்க்காலுக்கு அல்லவா போனது? கொழும்புக்கா அனுப்பினீர்கள்? இல்லையே? அது சரி புலிகளுக்கு கொடுத்த பணத்துக்கு கொடுத்தவர்களிடம் , எத்தனை பேர் கேள்வி கேட்டிருப்பார்கள்? உங்களைப் போன்றவர்கள் அந்த லிஸ்டில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அதுதான் உண்மை கசக்கிறது. இன்னுமா சுரண்ட நினைக்கிறீர்கள்? வேண்டாம். நிறுத்துங்கள். இனியாவது மக்கள் வாழட்டும்.
sivaji
//ஐ.நாஇ வணங்க்காமண்இ இந்திய உதவிகள் போகாமல் லிற்றில் எய்ட் உதவிகள் ‘போய்ச் சேர்ந்ததற்கு’ என்ன நியாயமான காரணம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
மனித உரிமை ஆர்வலர்கள் அனுமதிக்கப்படாமல் ‘21 பேர் குழு’ அனுமதிக்கப்பட்டதற்கும் இ த.தே.கூஇ எதிர்க்கட்சியான யூ.என்.பி அனுமதிக்கப்படாமல் தமிழ்நாட்டு திமுக/காங்கிரஸ் எம்பிக்கள் அனுமதிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என நினைக்கிறீர்கள்? //சாந்தன்
புலிகளைப்போல பயங்கரவாதிகளாக இல்லை அல்லத பயங்கரவாதிகளுக்கு உதவும் நோக்கம் அல்ல மக்களுக்கு செய்யும் சிறு உதவி மட்டுமே என்பதை உத்தரவாதப்படுத்தியதால் இந்த இரு பிரிவினரும் அனுமதிக்ப்பட்டனர்.
Jegan
ரிஎன்ஏ யும் யுஎன்பியும் என்னதான் செய்ய முடியும் இவர்கள் செய்வதற்கு இவர்களிடம் என்ன இருக்கிறது .சரி மக்களுக்காகத்தானே என்றால் அரசுடன் இணைந்து இந்த மக்களுக்கான உதவிகளை செய்ய உடன்பட்டிருக்கலாம் மக்கள் உதவி கிடைத்த பின்பு அரசியல் தீர்வில் உடன்பாடுகாணாத பட்சத்தில் மரியாதையாக வெளியேறி இருக்கலாம் இப்படி செய்தால் மக்களுக்காக செய்யும் இராஜதந்திரம் எனலாம் ஆனந்த விகடன் குமுதம் வாசிக்கும் ரிஎன்ஏ என்ன செய்ய முடியும்.
யுஎன்பி தமிழர்க்கு என்ன செய்தது. ஜே ஆர் தானே யுத்தம் என்றால் யுத்தம் என்று தமிழர் மீது யுத்தம் பிரகடனப்படுத்தியவர். இவர்கள் என்ன தமிழர்க்கு செய்வார்கள். கருணாவைப் பிரித்த கெட்டிக்காரர்கள் என தம்மை கூறுக் கொள்பவர்கள் என்ன புலியுடன் கூட்டு என்று இன்று பீலா விடுகிறார்கள்.
கெளதமன்
//புலத்தில் உள்ளவர்கள் ஏன் பொருட்களை வாங்கி அனுப்புகிறார்கள் தெரியுமா?………. இதுதான் கேம். வணங்கா மண்ணுக்கு செலவான தொகைக்கும் இ அலைச்சலுக்கும் எத்தனை கப்பல் பொருட்களை இலங்கையில் வாங்கியிருக்கலாம்?
அது முள்ளிவாய்க்காலுக்கு அல்லவா போனது? கொழும்புக்கா அனுப்பினீர்கள்? இல்லையே? அது சரி புலிகளுக்கு கொடுத்த பணத்துக்கு கொடுத்தவர்களிடம் இ எத்தனை பேர் கேள்வி கேட்டிருப்பார்கள்?..அதுதான் உண்மை கசக்கிறது. இன்னுமா சுரண்ட நினைக்கிறீர்கள்? வேண்டாம். நிறுத்துங்கள். இனியாவது மக்கள் வாழட்டும்// சரியாக சொன்னீர்கள் மாயா இவர்களது மண்டையை கழுவினாலும் எதுசரி என்று விளங்காது இவர்களுக்கு.
குகபிரசாதம்
இந்தியா இலங்கையை விட ஐம்பது மடங்கு பெரியது
கனடா இலங்கையை விட நூற்றினாற்பது மடங்கு பெரியது.
கனடா இந்தியா போன்ற நாடுகளுக்கு அதிகார பரவலாக்கம் தேவை
மிகச் சிறிய நாடான இலங்கைக்கு அதிகார பரவலாக்கம் உண்மையில் தேவையா?
இலங்கை அரசியலில் பலரும் புரிந்து கொள்ளத் தவறிய விடயம் என்னவென்றால் பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அதிகாரங்களை எந்தவொரு மாகாண சபைக்கும் பகிர்ந்தளிக்க இலங்கை பாராளுமன்ற அரசியலில் உள்ளவர்கள் தயாரில்லை
சாந்தன்
பார்த்திபன் நிச்சயம் பதிலளிப்பேன். ஆனால் விடயம் எனக்குத் தொடர்பானதாகவோ அன்றேல் நான் பொறுப்பானதாகவோ இருக்க வேண்டும் என்கின்ற குறைந்த பட்ச கோரிக்கையை ஆதல் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
வனங்கா மண்ணை நான் அனுப்பவில்லை. அது நான் வாழும் நாட்டில் இருந்தும் செல்லவில்லை. அவ்வாறிருக்க நான் எவ்வாறு இதற்கு பதிலிறுக்க முடியும்? நீங்கள் இதனை வணங்காமண் காரரிடமல்லவா கேட்கவேண்டும்? அத்துடன் தேசத்தில் இது சார்பாக விவாதம் நடந்தபோது 15 நாள் அவகாசம் விட்டவர்கள், வீட்டுக்குமுன்னால் கோஷம் போடுவோம் என சபதம் போட்டவர்க்ள், வழக்குப்போடுவோம் என சூழுரைத்தவர்கள் எங்கே? அவர்கள் கேட்கவில்லையா?
மாயா,
‘..அது சரி புலிகளுக்கு கொடுத்த பணத்துக்கு கொடுத்தவர்களிடம் , எத்தனை பேர் கேள்வி கேட்டிருப்பார்கள்? உங்களைப் போன்றவர்கள் அந்த லிஸ்டில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அதுதான் உண்மை கசக்கிறது. இன்னுமா சுரண்ட நினைக்கிறீர்கள்? …’
நான் எனது அனுபவத்தை எழுதினேன். நீங்கள் உங்கள் அனுபவத்தை எழுதியிருக்கிறீர்கள். உங்களை நான் சுரண்டல்காரன் என சொல்லவில்லை. ஆனால் என்னை இவ்வளவு பெரிய ஆள் என நீங்கள் பட்டம் கொடுப்பது சரியில்லை. அண்மையில் பல்லி அவர்கள் ‘குத்துமதிப்பாக தாக்குவார்களே’ என ஆதங்கப்பட்டது இதுதான் எனத்தெரிகிறது!
’…அக்குவேறு ஆணிவேராக துருவிய பின்னரே கொடுக்கப்பட்டது. ஏகப்பட்டவை, காலம் தாமதித்து வீசப்பட்டது.இவற்றுக்கு யார் காரணம்? எல்லாத்தையும் நாத்தியவர்கள் யார் என்று ….’
அனுப்பிய உதவிகளில் அரைவாசிக்குமேலும் உபகரணங்களில் எல்லாமும் தெற்கில் உள்ள ஒரு களஞ்சியசலையில் பதுக்கப்பட்டு அமெரிக்க செனட்டர் (திரு.போல் சாபெய்ன்ஸ்)தலையீட்டுக்குப் பின்னர் எம்பசிக்காரரின் வாகனத்தில் ஏற்றிவிட்ட கதை தெரியுமா? கொழும்பு துறைமுகத்தில் அரசாங்கமே இரண்டு ரிசீற் (ஒரே பொதிக்கு – ஒன்று வெளிநாட்டுக்கு மற்ரது லோக்கல்) வழங்கிய கதை தெரியுமா? நிலமையைப் பொறுத்து தற்போதைய அமெரிக்க அறிக்கை போல வெளிவந்தாலும் வெளிவரலாம்!!
‘…புலிகளைப்போல பயங்கரவாதிகளாக இல்லை அல்லத பயங்கரவாதிகளுக்கு உதவும் நோக்கம் அல்ல மக்களுக்கு செய்யும் சிறு உதவி மட்டுமே என்பதை உத்தரவாதப்படுத்தியதால் இந்த இரு பிரிவினரும் அனுமதிக்ப்பட்டனர்…’
மெல்லக்கசிந்த மினஞ்சல், திரு.கலாமோகனின் ஆங்கில பின்னூட்டங்கள் படிக்கவில்லை போலும்.
Jeyabalan T
//இந்த அரிவரிக்கு ஏன் அமெரிக்க அரசின் அறிக்கையை பெரிதாக இழுக்க வேண்டும்? இதே அறிக்கை அரிவரிக்கு தகுந்த மாதிரி நடந்திருந்தால் வெறு விதமாக ‘அனுமதிக்கப்பட்டிருக்கும்’ இல்லையா? இதில் ரொக்கற் சயன்ஸ் கேள்வி தேவையில்லை. நான் கேட்டது அரிவரிக் கேள்வி. நீங்கள் தான் அதை ரொக்கற் சயன்ஸ் லெவலுக்கு இழுக்கிறியள்.// சாந்தன்
நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்? நான் அரிவரி என்று குறிப்பிட்டது. இலங்கை அரசின் விதிமுறைக்கு அமைய செயற்பட்டால் அவ்வாறு செயற்படுபவர்களை முகாம்களுக்குள் அனுமதிக்கும் என்ற அரிவரிப் பாடத்தை. அமெரிக்க அரசு அறிக்கை அரிவரி அல்ல. அது முதலாம் வகுப்பு பாடம். தன்னுடைய அரசியலுக்கு மசியாதவர்களை மசிய வைக்கின்ற வித்தை பற்றிய பாடம். நாங்கள் கற்றப்பொல் வைத்திருக்கவே வழியில்லை. சாந்தன் நாங்கள் எப்படி ரொக்கற் சயன்ஸ் லெவலுக்கு… உங்களுக்கே இது ரூமச்சா தெரியவில்லையா?
//ஒருவர் “மேன்மைதங்கிய ஜனதிபதி தங்களை வீடுகளுக்கு அனுப்பி வைப்பதையிட்டு மகிழ்ச்சி” என ஒருவர் சொல்வதைப் பாருங்கள். அவர்களுக்கு உங்களின் ’காலாவதி’இ ‘மெளனம்’இ ‘அடையாளம்’ எல்லாம் தேவையில்லை என எடுத்துக்கொள்ளலாமா? காலாவதியாக்கியாதல் விடுவித்தால் சரி என்பதே அவர்களின் கோரிக்கை!//
அங்குள்ளவர்களுக்கு ஆடுற மாட்டை ஆடிக் கறக்கவும் பாடிற மாட்டை பாடிக்கறக்கவும் பக்குவம் இருக்கின்றது. அதனால் தான் புலிகளிட்டையும் தப்பி ஆமிக்காரரிட்டையும் தப்பி தங்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின்ர பெயரில பூச்சுத்திற வேலையலை நிறுத்திவிட்டு அவர்களைப் பலப்படுத்துகிற்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். //அவர்களுக்கு
உங்களின் ’காலாவதி’ ‘மெளனம்’ ‘அடையாளம்’ எல்லாம் தேவையில்லை என எடுத்துக்கொள்ளலாமா?// நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் ஒண்ணும் செய்யப் போவதில்லை. விதண்டாவதம் மட்டும் தான் மிஞ்சும்.
//காலாவதி ஆக்கல் கதை விட வேண்டாம் என்கிறார்கள்.// சாந்தன்.
தலைவரின்ர கதையே கனபேருக்கு சரியாத் தெரியேல்லை. இதுக்குள்ள என்ன காலாவதியாக்கல் கதை. முதலில் எழுதியதை நிதானமா வாசியுங்கள். இலங்கை அரசு வன்னி முகாம்களில் மக்களை மோசமான முறையில் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி 22 ஒக்ரோபரில் அறிக்கை வெளியிட்டது. அவ்வறிக்கை வெளியாகி சில மணிநேரங்களில் வன்னி முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதாக இலங்கை யரசு தெரிவித்ததுடன் 6000 பேர் வரை விடுவித்தும் உள்ளது. சர்வதேச ஊடகங்களில் பின்னைய செய்தியே பெரும்பாலும் பரவலாக வெளியாகியது.
எதிரிக்கு முகம் கொடுக்கும் போது அதனுடைய பலவினங்களை மட்டும் தெரிந்து கொண்டு சிற்றின்பம் காணக்ககூடாது. அப்படிச் செய்தால் அது நந்திக் கடலில் தான் முடியும். அதனால் எதிரியின் பலத்தை தெரிந்துகொண்டு அதற்கு முகம்கொடுக்கின்ற வகையில் திட்டங்கைள வகுக்க வேண்டும். ஆ ஊ என்றவுடன் தற்கொலை அங்கியை அணிந்து கொண்டு குதிப்பதை சாந்தன் தவிர்ப்பது நல்லது.
Jeyabalan T
எமக்கு வன்னியில் நடப்பது அனைத்தும் தெரியும்; இருப்பினும் புலிமீது உள்ள வெறுப்பால் அதை ஏற்றுகொள்ள பலர் மறுப்பதால் சிலர் அவர்களுடன் கூடி அரசசபையில் சங்கீதம் பாடுகினம்; இதில் தேசமும் இடைக்கிடை அரசின் தவறை ஏற்க்க மறந்ததை பல்லி சுட்டி காட்டியுள்ளேன்; அரசு நாம் சொல்லி எதையும் கேக்க போவத்தில்லை;ஆனால் மக்களுக்கு புலம் பெயர் தேசத்தில் இருந்து வரும் குரல்கள் ஆதரவாக இல்லாவிட்டாலும் எதிராக இருக்கட்டும்; இது புலியின் கருத்தல்ல பல்லியின் ஆதங்கம்;
//எமக்கு வன்னியில் நடப்பது அனைத்தும் தெரியும்; இருப்பினும் புலிமீது உள்ள வெறுப்பால் அதை ஏற்றுகொள்ள பலர் மறுப்பதால் சிலர் அவர்களுடன் கூடி அரசசபையில் சங்கீதம் பாடுகினம்//
சாட்சிக்காரனின் காலில் வீழ்வதிலும் சண்டைக்காரணின் காலில் வீழ்வதே மேல் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு அரசியல் என்பது பல்லாயிரம் மக்களின் உயிரிழப்பில் முடிந்துள்ளதால் அரசுடன் சேர்ந்து செயற்பட்டே விடயங்களைச் சாதிக்க முடியும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இவ்விடயத்தில் என்னால் அவர்களுடன் உடன்பட முடியவில்லை. இருந்தாலும் தங்களுடைய சுயநலத்துடன் நடந்துகொள்ளாமல் பொது நலன்கருதி ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்வார்களேயாயின் அதில் எவ்வித தவறும் கிடையாது. ஆனால் மக்கள் நலன்களுக்கு விரோதமாக அமையும் பட்சத்தில் அவர்களை அம்பலப்படுத்துவதும் தவிர்க்க முடியாதது.
//இதில் தேசமும் இடைக்கிடை அரசின் தவறை ஏற்க்க மறந்ததை பல்லி சுட்டி காட்டியுள்ளேன்.//
அரச தரப்பின் தவறுகளை பெரும்பாலும் தேசமே சுட்டிக் காட்டி உள்ளது.
//அரசு நாம் சொல்லி எதையும் கேக்க போவத்தில்லை.//
அதற்காக நாம் சொல்ல வேண்டியவற்றை சொல்லாமல் இருக்க முடியாது.
//ஆனால் மக்களுக்கு புலம் பெயர் தேசத்தில் இருந்து வரும் குரல்கள் ஆதரவாக இல்லாவிட்டாலும் எதிராக இருக்கட்டும்; இது புலியின் கருத்தல்ல பல்லியின் ஆதங்கம்;//
இது நிச்சயமாக பல்லியின் கருத்தல்ல. புலியின் கருத்துத்தான். ஆனால் புலம்பெயர் தேசத்தில் இருந்து வரும் குரல்கள் அரசுக்கு எதிராக இல்லாவிட்டாலும் மக்களுக்கு ஆதரவாக இருக்கட்டும் என்பது தான் பல்லியின் கருத்தாக இருக்க முடியும் என்பது எனது அபிப்பிராயம். மக்களுக்கு ஆதரவாக இல்லாத எந்தக் கருத்துக்கும் உரிய இடம் குப்பைக் கூடையெ.
ப்பிரசன்னா
உங்கள் நெற்றுக்கு:-
நன்றி :- சாந்தன் யெயபாலன் போன்றோருக்கு:-
இணையத் தளத்தை நேர்மையாக நடத்தவும் . இடைச் செருகல் பின்னூட்டம் போன்றவற்றில் புத்திசாலித்தனத்தைக் காட்டாதீர். கனணியில் ஆயிரம் வித்தைகள் உண்டு. மறக்க வேண்டாம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலும் உண்டு.
மக்களுக்கு கருதுக்கள் போய்ச் சேரவேண்டுமென்றால் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவும்.
நாங்கள் கருத்துக்காக மட்டும் போராடவில்லை. இன்றைய எலற்றோனிக்கல் உலகத்தையும் நாம் கற்றுத்தான் உள்ளோம்.அதனால் நிமிடங்கள் தொடக்கம் செக்கண்டுகள் வரையும் வலைப்பின்னனில் நாம் கவனமாக இருப்போம். முட்டாள் ஆக்காதீர்!
உங்களுடைய நெற் என்பதற்காக அதில் எந்தத் திருகுதாலத்தையும் நாம் செய்துவிடலாம் என்ற மமதை வேண்டாம்.
Jeyabalan T
நண்பர் சோழனுக்கு
”மாற்றுக் கருத்து மாணிக்கங்கள்” என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அனைவரையும் அடக்கிவிட முடியாது. அதற்குள் புலி எதிர்ப்பாளர்கள்> அரச ஆதரவாளர்கள் முள்ளிவாய்க்காலுக்குப் பின் மாற்றுக் கருத்துக்கு வந்தவர்கள் உண்மையான மார்க்ஸிஸட்டுக்கள் சொகுசு மார்க்ஸிஸ்டுக்கள் தலித்துக்கள் பின்னவீனத்துவங்கள் ஜனநாயகங்கள் இப்படிப் பல்வேறு தரப்பினரும் உள்ளதை நீங்கள் ஏற்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
//அண்மையில் நீண்ட சுற்றுளாவை முடித்து வந்த உங்கள் முன்னாள் நன்பர்களான சில மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் கூறியதிலிருந்து …. “வன்னி முட்கம்பி முகாமில் இருக்கும் மக்களை நீண்ட நாட்களுக்கு வைத்து இழுக்கவே சிறிலங்கா அரசு விரும்புகிறது. இங்கிருந்து யாரும் முட்கம்பி முகாம் மக்களுக்கு செய்வதிலும் பார்க்க மீள குடியேறிய பின் உதவுவதே நல்லது. ஏனெனில் மீள குடியேற்றப்படும் மக்களுக்கான எவ்வித வேலைத்திட்டங்களையும் சிறிலங்கா அரசு வைத்திருக்கவில்லை. அவர்கள் குடியேற்றப்படுவார்களேயாயின் தொழிலும் இல்லைஇ வருமானமும் இல்லைஇ பலர் தற்கொலை கூட செய்து கொள்ளக்கூடும்” …. என்கிறார்கள்!!//
சோழன் நீங்கள் சொல்ல வருவது என்ன? இலங்கை அரசை சந்திக்கச் சென்றவர்கள் ஜெயபாலனின் முன்னாள் நண்பர்கள். அது தவறு. அவர்கள் இன்றும் நண்பர்கள் என்பதே உண்மை. அது மட்டுமல்ல எனக்கு புலி நண்பர்கள் உள்ளனர். மார்க்ஸிஸட் நண்பர்கள் உள்ளனர். பேப்பர் மார்க்ஸிஸ்ட் நண்பர்கள் உள்ளனர். இப்படிப் பல் வகைப்பட்ட நண்பர்கள் உள்ளனர்.
ஆனால் யாருக்காகவும் என்னுடைய கருத்துக்களை நான் மாற்றிக் கொள்வது இல்லை. என்னுடைய கருத்துக்களுடன் உடன்படாதவர்களை துரோகிகள் கைக்கூலிகள் எனத் தூற்றுவதும் இல்லை. அவர்களுடைய நடவடிக்கைகள் மக்கள் விரோதமானதாக இருந்தால் விமர்சிக்கப் பின்நிற்பதும் இல்லை. எனக்கென்று குழுவெதுவும் கிடையாது. குறிப்பாக ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் நான் ஆசிரியராக உள்ள லண்டன் குரல் பத்திரிகைக்கான பதிப்புச் செலவை வழங்குபவர்களில் பிரதானமானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்.
//இங்கு சிலர் கூறலாம் சிறிலங்கா அரசு மீள்குடியேற்றாங்களை ஆரம்பித்து விட்டது என்று!! கொழும்புத் தகவல்களின்படி … // கொழும்புத் தகவல் டில்லித் தகவல் சிஐஏ தகவல் என்று சம்பவங்கள் நடந்த முடிந்தபின் கதையளக்கின்ற தகவல்களுக்கு எவ்வித பஞ்சமும் இல்லை. இதைத் தான் கடந்த 30 வருடமாக பார்க்கின்றோமே. 30 வருட அவலத்தில் நாங்கள் கற்றுக் கொண்ட ஒரே விடயம் நன்றாகக் கதையளப்பது அரசியல் ஆய்வு செய்வது, துரோகிப்பட்டம் கொடுப்பது.
//இனியாவது நிஜ உலகிற்கு வாருங்கள்!! இந்த அழைப்பு புலி பினாமிகளுக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும்!!//
இந்த அழைப்பில ஒரு செக்சனை விட்டுவிட்டிர்கள். பேப்பர் மார்க்ஸிட் குகிள் மார்க்ஸிஸட் சொகுமார்க்ஸிஸட்டு. இவையளை தமிழர் ஒருங்கிணைப்பு நடத்துகிற போராட்டங்கள் கூட்டங்களை ஒருதரம் போய் பார்க்க சொல்லுங்கள் எப்படி மக்களுடன் இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பதை கற்றுக்கொள்ள.
சாந்தன்
குகப்பிரசாதம்.
‘…இந்தியா இலங்கையை விட ஐம்பது மடங்கு பெரியது
கனடா இலங்கையை விட நூற்றினாற்பது மடங்கு பெரியது.
கனடா இந்தியா போன்ற நாடுகளுக்கு அதிகார பரவலாக்கம் தேவை
மிகச் சிறிய நாடான இலங்கைக்கு அதிகார பரவலாக்கம் உண்மையில் தேவையா?…
அமெரிக்க ராஜாங்க/காங்கிரஸ் அறிக்கை யுத்தவிதி மீறல்களை விவாதிக்கும் இடத்தில் அதிகாரப்பரவலாக்கலை விவாப்பது சரியில்லை. இதனை தேசத்திடம் கேட்டால் தனியாக ஒரு தலைப்பில் விவாதிக்க அனுமதிப்பார்கள் என நினைக்கிறேன்.
தயவு செய்து கேளுங்கள். உங்களுடன் விவாதிக்க மிகவும்…மிகவும்…மிகவும் ஆவலாயுள்ளேன்!
என்றாலும் அதிகாரப்பரவலாக்கல் என்பது ஒரு நாட்டின் பரப்பளவை வைத்துத்தீர்மானிக்கப்படுகிறது என்கின்ற சிந்தனையுடையவர் நீங்கள் என்ற உண்மை வெளிவர உதவியதற்கு நன்றி.
’….இலங்கை அரசியலில் பலரும் புரிந்து கொள்ளத் தவறிய விடயம் என்னவென்றால் பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அதிகாரங்களை எந்தவொரு மாகாண சபைக்கும் பகிர்ந்தளிக்க இலங்கை பாராளுமன்ற அரசியலில் உள்ளவர்கள் தயாரில்லை…’
சிக்கலே அங்குதான். தயாரில்லை என்பதற்காக கேட்கக்கூடாது/போராடக்கூடாது என்றில்லையே. தொழிலாளிக்கு சம்பளம் கூட்டிக்கொடுப்பதற்கு முதலாளி ஒருவருமே தயாரில்லை என்கின்ற உண்மை தெரியாமல் தொழிலாளிகள் போராடுகிறார்கள். பாவம் விட்டு விடுங்கள்!!!
சாந்தன்
‘…குடிசன விகிதாசாரத்தை மாற்றி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைப்பது…..’
இதனை சுவிஸில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சுனந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியபோது ”மனித நேயவாதியும்”, ”மாற்றுக்கருத்தாளரும்”, ”கவிஞரும்”, ”தலித்தியவாதியும்”, ”பெண்ணியவாதியும்”, ”இலக்கியவாதியும்”, ”சோசலிசவாதியும்”,அண்மையில் பிறழ்சாட்சியம் அளித்தவரும் மற்றும் இன்னோரன்ன முகங்களையும் (பன்முகத்தன்மை???) கொண்ட ஒருவர் கைகொட்டி வரவேற்றார்!
(என்னடா இது நம்மட ஆக்கள் போடுற மரண அறிவித்தல்/பிறந்தநாள் வாழ்த்து மாதிரி இருக்கு எண்டு நினைக்கிறியளோ)
சாந்தன்
‘…நாலு வருடத்திற்கு முன் கத்ரீனா என்ற புயல்காற்றில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநில மக்களில் இன்னமும் பல ஆயிரக்கணக்கானோர் இடம்பெயந்த தற்காலிக இடங்களிலேதான் வசித்து வருகின்றனர். இன்னமும் தமது சொந்த இடங்களுக்கு எப்போது திரும்பலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்….’
முதலாவது காட்டுத்தீயோ அன்றி புயல்காற்றோ இயற்கை அனர்த்தம். அதனையும் சொந்த மக்கள்மீது(அப்படித்தான் அரசு சொல்கிறது) விமானக்குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் செய்து, யுத்த சூனியப்பிரதேசத்தில் கூட குண்டு வீசி கொலை செய்வதையும் ஒப்பிடுதல் எவ்வளவு சாலச்சிறந்தது என்பது உங்களுக்கே வெளிச்சம்!
மற்றையது நியூஓர்லியன்ஸ்/லூசியானாவின் அணைத்தடுப்புச் சுவர்கள் ஒரு நவீனகால பொறியியல் சாதனை எனக் கூறப்பட்டது. ஆனால் பாவம் கற்றீனா எல்லாவற்றையும் காற்றில் அடித்துச் சென்றுவிட்டது. அதனை மீளமைக்க அமெரிக்க ராணுவப் பொறியியலாளர் குழு பல ஆய்வுகள் நடத்தியே செய்ய முடியும். அதேபோல வன்னிக்குண்டூ வீச்சுகள் ஸ்ரீலங்காவின் நவீன சாதனைகள் என நீங்கள் சொல்வீர்களாயின் நான் என்ன சொல்ல முடியும்? அதே வேளை நியூ ஓர்லியன்ஸில் வீடிழந்து அகதிகளானவர்களை யாருமே சென்று பார்க்கவோ, பேசவோ அன்றி அழைத்துச் செல்லவோ முடியுந்தது. அழைத்துச்செல்ல ஆறு அரச அலுவலர்கள் கையொப்பம் தேவைப்படவில்லை. வன்னிமுகாம்கள் போல முட்கம்பிச் சிறைக்குள் வைக்கவில்லை. அத்துடன் அவர்களுக்கு அவசரகால வீடுகள் (மோபைல் வீடுகள்) அளவுக்கதிகமாக வாங்கி அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும் அளவுக்கு அரசு வந்திருக்கிறது.இப்போது ஏலத்தில் விற்கிறார்களாம்.
இன்னொரு ஜோக் சொல்கிறேன் கேளுங்கள் இடம்பெயர்ந்தவ்ர்களுக்கு உடன் செலவுக்கு $5000 பெறுமதியான டெபிற் காட்டுகள் கொடுத்தார்கள் (மீளச்செலுத்த தேவையில்லை) ஆளாளுக்கு 10 காட்டுகளுக்கு மேல் வாங்கி விசயம் லீக் ஆக முன் காசையும் எடுத்து விட்டனர். அரசு வெளியில் சொன்னாலும் வெட்கம் விழுங்கவும் முடியாமல் திண்டாடியபோது அமெரிக்க மக்களே கொடுப்புக்குள்ளால் சிரித்து மன்னித்து விட்டனர். ஆனால் ஸ்ரீலங்காவில் நிலமை தலைகீழ். ஒரு கக்கூஸ் கட்ட ஐ.நாவிடம் கயேந்தல் ஆனால் காம்புகளுக்குள் ஏ.ரி.எம் மெசின் போட்டு 200கோடிக்கு உழைப்பு!!!
ஒப்பிடவேண்டும்தான் ஆனால் ஒரு நியாயம் வேண்டாமா குகப்பிரசாதம் அவர்களே?
’….உலக வரலாற்றிலேயே இவ்வளவு தொகையாக இடம்பெயந்த மக்களை உள்நாட்டில் வைத்து பராமரித்த சம்பவம் இலங்கையில்தான் நடந்துள்ளது….’
ஆமாம் ‘பராமரித்த’ ச்ம்பவம் இலங்கையில் தான் நடக்கமுடியும். அங்கேதானே குண்டு வீசி வீடுகளை தொலைத்தார்கள்.
’… அத்துடன் இவ்வளவு விரைவாக இடம் பெயந்தவர்களை மீளக் குடியேற்றி வருவதும் இதுவரை உலகில் வேறு எங்கும் நடைபெறவில்லை….’
இது நேற்று ஒரு அமைச்சர் பேசியது மாதிரி இருக்கிறது!
’…ஆயிரக்கணக்கான புலிகள் இடம்பெயந்த மக்கள் மத்தியில் ஒளிந்திருப்பது….’
இன்னும் அவங்களை பிடிக்கவில்லையா அரசு?
’…மீளக் குடியேறக்கூடிய இடங்களில் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் இன்னமும் புதைந்திருப்பது…’
கொஞ்ச நாளைக்குமுன்னர் ஏதோ மெசின் கொண்டுவந்து இறக்கி இருக்கிறம் கெதியில அலுவல் முடிஞ்சிடும் எண்டெல்லாம் சொன்னாங்கள்!
‘…இன்னமும் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணைகள் தற்கொலை அங்கிகள் ஆயத்தங்கள் மீளக் குடியேற்ற வேண்டிய இடங்களில் இருந்து கண்டு பிடித்து எடுக்க வேண்டியிருப்பது…’
பேசிக்கலி வன்னியெல்லாம் தோண்டப்போயினம் எண்டு சொல்லுங்கோ!
’..கடந்த ஐந்து மாதமாக குண்டு வெடித்தோ பதுங்கு குளிகளிலோ நூற்றுகணக்கானோர் தினசரி இறந்து போவது முற்றாக நின்றுவிட்டது….’
பதுங்குகுழிகளில் குண்டு போடாமல் விட்டதுக்கு நன்றி சொல்லத்தான் வேணும்!
விசுவன் 1
சாந்தன்! இந்திய குழுவின் முகாம் மற்றும் வடக்கு விஜயம் அவர்களின் நிதி கொடுப்பனவு மற்றும் இந்திய அரசின் அழுத்தம் சம்பந்தப்பட்டது. ஐரோப்பிய பிரதி நிதிகள் விஜயமும் அவ்வாறே! இந்த ரீஎன்ஏ மற்றும் யூஎன்பி கட்சிகள் தனியே அரசியல் காரணங்களை மட்டும் காட்டியே அங்கு விஜயம் செய்ய முனைந்தனர். இந்த முகாம் மக்களின் மறு வாழ்வு பற்றி செய்ய வேண்டிய வேலைகள் பல இவர்களால் செய்யலாம். மனிதாபிமான உவிகள் பலவற்றை பிரதேசவாரியாக செய்து அதை அங்கு கொண்டு செல்ல முனைந்திருக்கலாம். தொடர் போராட்டங்களை நாடளாவியா ரீதியில் செய்திருக்கலாம். குறிப்பாக யுஎன்பி. ஆனால் அதை விடுத்து தம்மை பாரக்க விட மட்டும் கூறுவது ஏன்?
//புலிகளின் யுத்தக் காலத்துக்கும்இ அடுத்த விதைப்புக் காலத்துக்குக்கும் எவ்வளவு தூரம் என்று சொல்லுங்கள் அதன் பின்னர் தொடர்கிறேன்.//
வன்னயில் நான் அறிந்தவரை விவசாயிகள் புலிகளின் கட்டுப்பாடு இருந்த காலங்களில் விவசாயத்தை மெல்ல மெல்ல கைவிட்டு விட்டனர். காரணம் புலிகளின் வரியின் கொடுமை! புலிவரி என்ப வெறும் கோடு அல்ல! நான் சொல்வது சுரண்டல் வரியை! வன்னியல் போர் உச்சமடைந்திருக்கையில் மக்கள் பட்டினியால் விதை நெல்லை அரிசியாக்கி உண்டார்கள். விதைப்பு காலம் பற்றி எனக்கு தெரியாது ஆனால் மகிந்தா அரசு விவசாயத்தை தனது நாட்டின் முக்கிய முயற்சியாக எடுத்துள்ளது தெரியும்.
Rohan
//ஒப்பிடவேண்டும்தான் ஆனால் ஒரு நியாயம் வேண்டாமா குகப்பிரசாதம் அவர்களே?//
மொத்தப் பதிலுக்கும் நன்றி சாந்தன்.
மாயா
சாந்தன், சிறீலங்கா அரசு சுனாமி காலத்தில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் , உதவ கதவை திறந்து விட்டது. அதைக் கூட மூடி , அந்த மக்களுக்கு தம்மை தவிர வேறு எவரும் உதவ உள்ளே வரக் கூடாது என தடுத்தவர்கள் புலிகள். உதவச் சென்றவர்கள் கொண்டு சென்ற உதவிப் பொருட்களை தாமே வாங்கிக் கொண்டு ஏப்பம் விட்டனர். இவர்களா மக்கள் குறித்து நினைத்தவர்கள்?
இதற்காக சிலர் அது புலிகளது பாதுகாப்புக்கு அப்படி நடந்திருப்பார்கள் என வாதிப்பார்கள். ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கே பாதுகாப்பு தேவைப்பட்டால் , ஒரு அரசு , தனது மக்களை காக்க பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதில் என்ன தவறு?
லஞ்சம்தான் , இலங்கையை இப்படியாக்கி விட்டது. இருந்தாலும் , இந்தியா போல லஞ்சம் எங்கும் காண முடியாது. அதை இலங்கை – இந்திய விமான நிலையத்தில் கால் பதித்தாலே உணர முடியும். இலங்கை எத்தனை வீதம்? இந்தியா எத்தனை வீதம் என்பதை……..? சிங்களவனை விட , லஞ்சம் கொடுத்து அடுத்தவனை உருவாக்குபவன் இலங்கை தமிழனாகத்தான் இருப்பான்.
நாம் முதலில் திருந்துவது இருக்கட்டும் , உண்மைகளையாவது உணர முயல வேண்டும். எனக்கு பிடித்த ஒருவர் செய்யும் தவறைக் கூட நியாயப்படுத்த வேண்டும் எனும் நிலையாவது மாற வேண்டும். அதுவரை தமிழன் தலை நிமிர முடியாது.
BC
//நாம் முதலில் திருந்துவது இருக்கட்டும் உண்மைகளையாவது உணர முயல வேண்டும். //
உணமைகள் கசப்பானவை மாயா.அதனால் தமிழீழ கனவில் மிதப்பதே சுகமானது.
பல்லி
////ஆனால் மக்களுக்கு புலம் பெயர் தேசத்தில் இருந்து வரும் குரல்கள் ஆதரவாக இல்லாவிட்டாலும் எதிராக இருக்கட்டும்; இது புலியின் கருத்தல்ல பல்லியின் ஆதங்கம்;//
மன்னிக்கவும் இந்த தவறுக்காக நண்பர்கள் பல்லியை மன்னிக்கவும்; நான் எழுதியது //மக்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருந்துவரும் குரல்கள் ஆதரவாக இல்லாவிட்டாலும் அரசுக்கு எதிராக இருக்கட்டும் என்பதுதான்;//
ஏதோ தடுமாற்றம் அரசு தவறிவிட்டது, இருப்பினும் பல்லியின் கருத்தாக அது இருக்க முடியாது என அதை ஜெயபாலன் திருத்தம் செய்ததுக்கு நட்புடன் நன்றி; இனிமேல் இப்படியான தவறுகள் வராமல் பார்த்து கொள்கிறேன்:
சாந்தன்
‘….இந்திய குழுவின் முகாம் மற்றும் வடக்கு விஜயம் அவர்களின் நிதி கொடுப்பனவு மற்றும் இந்திய அரசின் அழுத்தம் சம்பந்தப்பட்டது.ஐரோப்பிய பிரதி நிதிகள் விஜயமும் அவ்வாறே…’
கையில காசும் கடன் கொடுக்கிறநாடுகளின் கையில அதிகாரமும் இருந்தால் விடுவார்கள் என்கிறீர்கள். இந்த அரச அரிவரி எனக்குத் தெரியாமல் போச்சுது. மன்னிச்சுக்கொள்ளுங்கோ!
’…இந்த ரீஎன்ஏ மற்றும் யூஎன்பி கட்சிகள் தனியே அரசியல் காரணங்களை மட்டும் காட்டியே அங்கு விஜயம் செய்ய முனைந்தனர்….’
ஸ்ரீலங்கா அரசியல் யாப்பு உங்களுக்குத் தெரியுமா? எம்பி என்றவர் மக்கள் பிரதி. அவர் எங்கு வேண்டுமானாலும் போய்வர அனுமதி உண்டு. யூ.என்.பி பிரதான எதிர்க்கட்சி. அவர்களுக்கு உரிமை இல்லையாம் ஆனால் வெளிநாட்டவருக்கு உண்டாம். அரசியலாம், மனிதாபிமானமாம்… ..
’…. இந்த முகாம் மக்களின் மறு வாழ்வு பற்றி செய்ய வேண்டிய வேலைகள் பல இவர்களால் செய்யலாம். ….’
போய்ப்பார்த்தால் தானே என்ன செய்யவேண்டும் எனத்தெரியும், இல்லையா? 21 பேர் கொண்ட குழு போய்ப்பார்த்தும் ஒண்டும் செய்யேல்லை என நீங்கள் சொல்வதும் விளங்குதுதான்!
’….மனிதாபிமான உவிகள் பலவற்றை பிரதேசவாரியாக செய்து அதை அங்கு கொண்டு செல்ல முனைந்திருக்கலாம். தொடர் போராட்டங்களை நாடளாவியா ரீதியில் செய்திருக்கலாம். குறிப்பாக யுஎன்பி. ஆனால் அதை விடுத்து தம்மை பாரக்க விட மட்டும் கூறுவது ஏன்?….’
ஐயா ஆளைவிடுங்கோ. எனக்கும் வேற தொழில் இலாமல் இங்க வந்து குந்திக்கொண்டிருக்கிறன். ஒண்டு மட்டும் உண்மை விசுவன். நீங்கள் ஸ்ரீலங்கா எம்பி, மினிஸ்ரராக வர நல்ல ஸ்கோப் உண்டு!
பார்த்திபன்
//பார்த்திபன் நிச்சயம் பதிலளிப்பேன். ஆனால் விடயம் எனக்குத் தொடர்பானதாகவோ அன்றேல் நான் பொறுப்பானதாகவோ இருக்க வேண்டும் என்கின்ற குறைந்த பட்ச கோரிக்கையை ஆதல் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.வனங்கா மண்ணை நான் அனுப்பவில்லை.- சாந்தன் //
அப்ப இதுவரை நீங்க பதிலளித்த அத்தனை கருத்துகளும், அந்த விடயம் சம்பந்தமாக உங்களுக்கு தொடர்புகள் இருந்ததனால்த் தான் பதிலளித்தீர்களா?? சொல்லவேயில்லை…….
Jeeva
// சிறீலங்கா அரசு சுனாமி காலத்தில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் , உதவ கதவை திறந்து விட்டது. அதைக் கூட மூடி .//
சுனாமி காலத்தில் என்ன நடந்தது என இத்தாலிய அதிகாரி விலாவாரியாக எழுதி (கிளின்ரன்/ஜோஜ் புஷ் இன் கீழ் வேலை செய்தவர்)ஐ.நாவுக்கும் அமெரிக்க ராஜாங்கத்திணைக்களத்துக்கும் கொடுத்துள்ளார். வரவேண்டிய நேரத்தில் வெளி வரும். அண்மையில் வந்த அறிக்கை கூட UNCLASSIFIED தான். முதல் பக்கத்தில் அடியில் இருக்கிறது பாருங்கள். Classified version வெளிவரவில்லை.
/ மனிதாபிமான உவிகள் பலவற்றை பிரதேசவாரியாக செய்து அதை அங்கு கொண்டு செல்ல முனைந்திருக்கலாம்./
மனிதாபிமான உதவி எங்கு தேவையோ அவசரமோ அங்குதான் செய்ய முடியும். நீங்கள் சொல்வது போல பிரதேசவாரியாகவல்ல.
// தொடர் போராட்டங்களை நாடளாவியா ரீதியில் செய்திருக்கலாம். குறிப்பாக யுஎன்பி. ஆனால் அதை விடுத்து தம்மை பாரக்க விட மட்டும் கூறுவது ஏன்?//விசுவன்
ஏன் தெரியாமல் தான் கேட்கின்றேன். யூ.என்.பி எதிர்க்கட்சி அல்லவா? அவர்களுக்கு வாக்களித்த மக்களின் வரிப்பணத்திலும் தானே ஸ்ரீலங்கா அகதிமுகாம் நடத்துகிறது? ஏன் தொடர் போராட்டம் தேவை? அப்போ அங்கு அநியாயம் நடப்பதனை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்களா??.அதுதானா அவர்களைபோக விடவில்லை.
சாந்தன்
நீங்கள் கேட்ட கேள்விகள் கப்பலுக்குள் நடந்தவை. ஏன் போனவங்கள் இடையில இறங்கினவங்கள், கப்பலுக்கு ஒரு நாளைக்கு 1000லீற்றர் எண்ணை ஏன்? சாப்பாட்டுக்கு என்ன செய்தவை போன்ற கேள்விகள். அதற்கு நான் எப்படிப்பதிலளிக்க முடியும்?
கேள்வி/பதிலுக்கும் அபிப்பிராயத்துக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு பார்த்திபன்!
பார்த்திபன்
சாந்தன்,
நானும் கப்பலைப் பற்றிக் கேட்கவில்லை. கப்பலில் சென்றவர்கள் பற்றித் தான் கேட்டேன். வன்னி மக்களு்குதவவென வீராப்புப் பேசி கப்பலில் சென்ற வைத்தியர்களின் குழு, ஏன் இடைநடுவில்(மே 19 இல்) கப்பலால் வெளியேறி ஓடி வந்தார்கள் என்பது தான் என் கேள்வி. இதற்கு ஏன் கப்பலின் எண்ணெய் பற்றிப் பேசி நழுவுகின்றீர்கள்?? நிச்சயமாக அந்த வைத்தியர்களின் குழு இறங்கி ஓடியதற்கு கட்டாயம் ஒரு பதிலிருக்கும். அது அபிப்பிராயமல்ல. இங்குமா தங்களுக்கு குளப்பம்??
மாயா
//சாந்தன் on October 24, 2009 3:36 pm நீங்கள் கேட்ட கேள்விகள் கப்பலுக்குள் நடந்தவை. ஏன் போனவங்கள் இடையில இறங்கினவங்கள், கப்பலுக்கு ஒரு நாளைக்கு 1000லீற்றர் எண்ணை ஏன்? சாப்பாட்டுக்கு என்ன செய்தவை போன்ற கேள்விகள். அதற்கு நான் எப்படிப்பதிலளிக்க முடியும்? //
கப்பலை விட்டு அனைவரும் இறங்கவில்லையே? இறங்காமல் இருந்தவர்கள் இருந்தார்கள்தானே? கப்பல் எண்ணை இல்லாமல் நடுக்கடலில் எங்கும் நின்றதாக எந்த செய்தியும் வரவில்லை. கப்பலில் சென்ற வைத்தியர்கள் ஏன் நடுவில் இறங்கி திரும்பினார்கள் என்பதையே பார்த்திபன் கேள்வியாக வைத்திருந்தார்?
அவர்கள் உண்மையிலேயே தமிழ் மக்களுக்காக உதவ போயிருந்தால் , அவர்கள் நேரடியாக கொழும்பில் இறங்கி முகாமில் இருந்த மக்களுக்கு உதவச் செல்ல விரும்புவதாக சர்வதேசத்திடம் சொல்லியிருக்கலாம்.அவர்கள் யுத்தம் முடிவடைந்த பின் திரும்பியதிலிருந்து , அவர்கள் புலிகளுக்கு உதவவே சென்றார்கள் என்றுதான் உணர முடிகிறது.
பல்லி
பார்த்திபன் கப்பலில் போனவர்களை கூட புலி பாணியில் டாக்குத்தர் மூர்த்தி குழு கரும் புலிகளாகதான் அனுப்பினார்கள், காரனம் இவர்கள் கொழும்பில் மாட்டினால் அதை வைச்சு ஏதாவது ஒரு தொல்லைகாட்ச்சியில் பிரசாரம் செய்யலாம் பாருங்கோ; அதை அறிந்த சில டாக்குத்தர் இடையில் விவேக் பாணியில் ஸ்கேப்; உன்மையில் இந்த கப்பலில் சிவாஜி அண்ணனைதான் மூத்தியர் அனுப்ப பிளான் பண்ணினவர், ஆனால் அதுக்கிடையில் சிவாஜி அண்ணன் தலைமறைவு, இன்றுவரை ஆளை கானோம்;
சாந்தன்
பார்த்திபன்,
கப்பலை நான் அனுப்பவில்லை மேலும் கப்பலில் இருந்தவர்கள் யார் என்பது பற்றியும் எனக்குத் தெரியாது. என்னிடம் கேட்கிறீர்களே இது நியாயமா? இதைத்தான் பல்லி குத்துமதிப்பாக தாக்கிவது எனச் சொன்னாரா?
கப்பல் அனுப்பினால் புலி என்கிறியள், பிறகு ஏன் அவையள் அங்க போகேல்ல என்கிறியள், அவையள் போனால் படம் காட்டலாம் எண்டு பிளான் போட்டவை என்கிறியள், அதுகளைச்செய்யாமல் இங்க வந்து குத்துமதிப்பாக தாக்குறியளே!
இந்த கட்டுரை அமெரிக்க அறிக்கை பற்றியதல்லவா?
பார்த்திபன்
மாயா,
பாவம் சாந்தனுக்கு நீங்கள் எழுதிய உண்மைகள் தெரிய வருவதில்லை. அதனால்த் தான் அவர் எண்ணெயிலேயே வழுக்கியபடி நிற்கின்றார்.
பார்த்திபன்
பல்லி
மூர்த்தி குழுவினர் பிலிம் காட்டத் தான் வணங்காமண்ணை கையாண்டவை. அதை விட பெரிய பிலிமை மகிந்த குழுவினர் காட்டிவிட மூர்த்தியரும் கொஞ்சம் தடுமாறித்தான் போனார். ஆனாலும் வணங்காமண் ; தலைகுனிந்த மண்ணாக சென்னையில் நின்றபோது கப்பலால் இறங்கி பிரித்தானியா திரும்பிய ஒருவர் தீபம் தொலைக்காட்சியில் “சிவாஜி” படப் பாணியில் தன்ரை மொட்டைத்தலையை தடவியபடியே பொருட்கள் வன்னிக்கு போனாலும் வெற்றி, போகாவிட்டாலும் வெற்றி எனச் சொல்லிய போது கொஞ்சம் கொடுப்புக்குள்ளே சிரிச்சதாய்க் கேள்வி. சிரிப்பின் காரணம் மகிந்த குழுவினர் மூர்த்தி குழுவினருக்கு நாமம் போட்டதை நினைத்தோ அல்லது மூர்த்தி குழுவினர் ஐரோப்பிய மோட்டுத் தமிழருக்கு நாமம் போட்டதை நினைத்தோ என்பது தான் புரியவில்லை……