‘இயக்கத்தின் பின்னடைவிற்கு சர்வதேச செயற்பாட்டாளர்களே காரணகர்த்தாக்கள்!’ தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கைகள்

LTTE_PressReleaseதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவைத் தொடர்ந்து அவ்வமைப்பு தன்னை தக்க வைத்துக் கொள்வதில் பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து உள்ளது. இந்த நெருக்கடிகள் பெரும்பாலும் வெளி அழுத்தங்களால் ஏற்பட்டது என்பதிலும் பார்க்க உள்ளிருந்து கிளம்பிய சுயநலன் சார்ந்த முரண்பாடுகளே பிரதான காரணமாக அமைந்தது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தாயகத்தில் உள்ள தளபதி ராம் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேசப் பொறுப்பாளர் நெடியவன், ரிஆர்ஓ தலைவர் ரெஜி, பிரிஎப் யை பின்னிருந்து இயக்கும் ரூட் ரவி மற்றும் தனம் போன்றவர்களின் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளின் தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டுகின்றது.

இந்த யுத்தத்தால் எவ்வித பாதிப்புக்கும் முகம்கொடுக்காத தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு தங்கள் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் அமைப்பின் தலைவர் வே பிரபாகரன் மறைந்ததையே மூடிமறைத்தனர். இதுவே விடுதலைப் புலிகளின் சர்வதேச முகாமில் பிளவை ஏற்படுத்தியது. புலம்பெயர் நாடுகளில் பொருளாதாரக் கட்டமைப்புகளைத் தங்கள் கைவசம் வைத்துள்ள கடும்போக்கான புலிகள் தலைவர் வே பிரபாகரன் மறைந்ததை மூடிமறைத்து தங்கள் இருப்பையும் பொருளாதாரக் கட்டமைப்பையும் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனால் பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார் போன்ற அறிக்கைகளையும் செய்திகளையும் ஊடகங்கள் ஊடாக கசியவிட்டனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கெ பத்மநாதன் வே பிரபாகரன் உயிரிழந்த செய்தியை அறிவித்த போது அவரை துரோகி என புலம்பெயர் புலிகள் அறிவித்தனர். அச்சமயத்தில் இலங்கையில் உள்ள போராளிகளோடு தொடர்பைக் கொண்டிருந்த கெ பத்மநாதன் அங்குள்ள போராளிகளை தன்பக்கம் வென்றெடுத்திருந்தார். இதுவரை பத்மநாதனைத் துரோகி என அறிவித்த புலம்பெயர்ந்த புலி ஆதரவு முகாம் தற்போது மிஞ்சியிருந்த தளபதி ராமும் அங்குள்ள போராளிகளும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து விட்டதாகவும் அவர்களும் துரோகிகள் என்றும் செய்திகளைக் கசியவிட்டுள்ளனர்.

மாவீரர் நாளையடுத்து மாவீரர் உரையை வழங்கவுள்ள ராம் தங்கள் காலம்சென்ற தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதை அடுத்தே இந்த துரோகி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இவை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி ராம் வெளியிட்டுள்ள அறிக்கை:

LTTE_PressRelease

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி ராம் வெளியிட்டுள்ள அறிக்கை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • விசுவன்
    விசுவன்

    புலிகளின் தலைமை ஒரு யாழ்தலைமையாகவும் இருக்க வேண்டும் என்பதே புலம் பெயர் மக்களின் அவா! அதனால் மட்டு புலி ராம் துரோகியானார் பின்னர் யாழை சேர்ந்த நகுலன் புலம் பெயர் மக்களை தொடர்பு கொண்டு ராம் பற்றிய உண்மை நிலையை விளக்க முயன்றதும் நகுலா நீயுமா என்று லண்டன் புலிகள் கொதித்து எழுந்தனர். ஆக இனி கிழக்கான் எல்லாரும் துரோகிகள். இதற்கு ஒரு புலம் பெயர் புலி கூறும் விளக்கம். கருணா கிழக்கு அவங்கள் எல்லாம் துரோகிகளாம். இதில் வேதனை என்னவென்றால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் இவர்களின் இந்த செயற்பாட்டை வக்காலத்து வாங்குவது! என்ன கொடுமையாடா சாமி….

    Reply
  • Kalai
    Kalai

    விசுவன்,
    பிரச்சனை வடக்கான் கிழக்கான் என்பது இல்லை. பணம் தான் முக்கிய பிரச்சனை

    Reply
  • விசுவன்
    விசுவன்

    கலை நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தாலும் என்னுடன் பேசிய ஒரு பெரியவர் கூறிய வசனம் இது. உந்த மட்டக்களப்பான்களை நம்பேலாது! கருணாவை பாக்கேல்லையே! எல்லாம் ஒரே கூட்டு! இன்னுமெரு நண்பர் இப்படி கூறுகிறார் தம்பி நாங்கள் இனி கிழக்கை நம்பேலாது அவை தங்கட அலுவலை பாக்கினம் நாங்கள் தான் இனி எங்கடை அலுவலை பாரக்கவேணும். இங்கே இன்னுமொரு விடயமும் மெதுவாக கசிந்தது புலம் பெயர் புலிகள் ராமிடம் எங்காவது ஒரு தாக்குதலை நடாத்துமாறு வற்புறுத்தினராம் குறைந்த பட்சம் ஒரு 50 சிங்களவரையாவது போட்டுத்தள்ளும் படி கோரிக்கை விடுத்தார்களாரம். இதனை மறுத்த ராம் மக்களின் மீள குடியமர்வு மற்றும் கைது செய்யப்பட்டிருக்கும் 12 ஆயிரம் புலி உறுப்பினர்களின் பாதுகாப்பை முன்னிட்டு தாம் அதை செய்ய முடியாது என்று கூறவே புலம் பெயர் புலிகள் தற்போது புலிகளின் தலைமையை சுவீகரித்துள்ளனராம்.

    Reply
  • Kusumpo
    Kusumpo

    இந்தக் கிழக்காருக்கு எப்பபாத்தாலும் வடக்காரை இழுக்காட்டில் பொச்சம் தீராதோ. இப்படியானவர்களை வைத்துக்கொண்டா பிரபாகரன் தமிழீழம் காணமுயன்றார்

    கிழக்கார் தான் யாழ்அகற்றுச்சங்கம் வைத்திருந்தார்கள் துவேசம் வளர்த்தார்கள். யாழ்பாணத்தார் என்றும் கிழக்குஅககற்றுச்சங்கம் வைத்திருக்கவில்லை. எம்மிடையே துவேசத்தை வைத்துக் கொண்ட சிங்களவன் துவேசி என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமைகிடையது. கிழக்காருடன் ஒப்பிடும் போது சிங்களவர் எவ்வளவோ மேல்

    Reply
  • BC
    BC

    //அமெரிக்காவிலிருந்து பிரபல மனிதஉரிமைவாதியான திருமதி கரன் பாக்கர் நேரில் ஆஜராகி 22 பேர் சார்பிலும் சாட்சியமளித்திருந்தார்.//

    மனித உரிமைவாதி திருமதி கரன் பாக்கரின் மனிதஉரிமை மீதுள்ள அக்கறையை நினைத்து புல்லரிக்குது.

    Reply
  • nallurkantha
    nallurkantha

    It is not the question of east or north.Those who followed the facist policy of the LTTE leadership irrespective of their birth place are anti people elment.That is why the wanni people and the SL security forces annihilated the facists.
    One thing about anti jaffna feeling in the East.I was a public servant and transferred to Ampara in January 1978.You would not believe 99 percentage of the public servants were from the north.They were very selfish.Eastern people were very good.I still have excellent relationship with my Tamil and Muslim friends in the east.

    Reply