Wednesday, December 8, 2021

‘என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள், அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்!’ எம் கெ சிவாஜிலிங்கம் – நேர்காணல் : த ஜெயபாலன்

Sivajilingam M K_TNA MP._._._._._.
கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.
தொடர்பு : த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354, ரி சோதிலிங்கம் 07846 322 369, ரி கொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452
._._._._._.

‘என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள் அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்!’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் இன்று (மே 18 2009) தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு 60வது ஆண்டை நினைவுகூருமுகமாக அதன் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்திற்கு மாலை அணிவித்துவிட்டு யாழில் தங்கியிருந்த எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். ரெலோ அமைப்பில் இருந்து எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விலகியதாக வெளிவந்த செய்திகளிலும் உண்மையில்லை எனவும்  தான் சுயேட்சை வேட்பாளராக நிற்பது தொடர்பாக கட்சிக்குள் எவ்வித முரண்பாடும் இல்லை எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். அவருடைய நேர்காணல்…..

தேசம்நெற்: அண்மைக்காலம் வரை புலியாதரவு ஊடகங்களின் கௌரவிப்புக்களைப் பெற்ற நீங்கள் தற்போது அதே ஊடகங்களினால் துரோகியாக காட்டப்படுகின்றீர்கள் அது பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?’

எம் கெ சிவாஜிலிங்கம்: என்னைத் துரோகி என்று இன்று அழைப்பவர்கள் அரசியல் யதார்த்தம் தெரியாதவர்கள்! பெப்ரவரி மாதத்தில் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டியில் ( ”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன் ) தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பிடம் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்று கேட்டிருந்தேன். அன்று அதைச் செய்திருந்தால் இன்று இவ்வளவு மோசமான அழிவு ஏற்பட்டு இருக்க மாட்டாது. அப்போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது வந்து என்னைத் துரோகி என்கிறார்கள். இவர்கள் அரசியலைக் கொஞ்சம் படிக்க வேண்டும்.

தேசம்நெற்: ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் வெளிக் கொணர்வதற்கான சந்தர்ப்பம் என்று தெரிவித்துள்ளீரகள். ஆனால் நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடுவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தி உள்ளீர்கள்.

எம் கெ சிவாஜிலிங்கம்: தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட்டிய போது அனைவரும் ஒரே முடிவை எடுக்கவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலை பகிஸ்கரிகலாம் என்ற அபிப்பிராயமும் சிலரால் முன்வைக்கப்பட்டது. சிவசக்தி ஆனந்தன் மட்டும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம் எனத் தெரிவித்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்னும் சிலர் பொறுத்திருந்து முடிவெடுக்கலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வருபவர்களை ஆதரித்த பழக்கத்தை விடும்படி கேட்டேன். குறைந்தபட்சம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவையோ சரத்பொன்சேகாவையோ ஆதரிக்க மாட்டாது என்று அறிக்கைவிடும்படியும் கேட்டேன் அவர்கள் உடன்படவில்லை. இவ்வாறு எவ்வித முடிவில்லாமல் கூட்டம் முடிவடைந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடைசி வரை தமிழ் மக்களை காக்க வைக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைப் பொறுத்தவரை அவர்கள் யாருடையதோ சமிஞசைக்காக காத்திருப்பதாகவே நான் நினைக்கின்றேன். இந்தத் தலைவர்களுடன் சர்வதேச அமைப்புகளும் இந்தியாவும் பேசிக்கொண்டுள்ளன. ஆனால் இதுவரை எவ்வித சமிஞ்சையும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் என்ஜிஓ ஒன்றின் அழைப்பில் ஜெனிவா சென்றுள்ளார். அது பற்றிய விபரம் எனக்குத் தெரியாது.

ஆனால் அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பன்னிருவரில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். நால்வர் ரெலோ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இவர்களுடன் தங்கேஸ்வரி சந்திரநேரு மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.

தேசம்நெற்: நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடுவதால் உங்களுடைய ரெலோ அமைப்பிற்குள் பிளவை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளதே?

எம் கெ சிவாஜிலிங்கம்: இது ஊடகங்களினால் திரிபுபடுத்தப்பட்ட செய்தி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்வராததால் நான் சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்தேன். ஆனால் இந்த முடிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக உள்ள ரெலோவினைப் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். அதனால் தான் நான் ரெலோ சார்பாக இல்லாமல் சுயேட்சையாகப் போட்டியிடுவது என்று கூடித் திர்மானித்தோம். அது மட்டுமல்ல அதற்காக எனது பதவியையும் உறுப்புரிமையையும் விட்டுச் செல்லவும் தயாராக இருந்தேன். இந்த விடயங்களே ஊடகங்கள் ரெலோவிற்குள் பிளவு ஏற்பட்டு விட்டது என்று தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டன. நான் இப்போதும் ரெலோ உறுப்பினன். எங்களுக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.

தேசம்நெற்: நீங்கள் தமிழ் மக்களுக்கு என்ன உரிமைகளைக் கோருகின்றீர்களோ அவ்வுரிமைகளுக்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருபவர்கள் சிறிதுங்க ஜெயசூரியவும் விக்கிரமபாகு கருணரட்ணாவும். அப்படி இருக்கையில் நீங்களும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி அவ்வாறான முற்போக்கு சக்திகளை ஆதரிக்க முன்வரவில்லை. ஏன்?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்குச் செல்வதற்கு முன்பாகவும் விக்கிரமபாகு கருணரட்ணவுடன் பேசிவிட்டுத்தான் சென்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துமாறும் இல்லையேல் விக்கிரமபாகு கருணாரத்னவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும் என்று நான் கருத்தை முன் வைத்தேன். விக்கிரமபாகு கருணாரட்னாவை ஆதரிப்பதற்கு கஜேந்திரகுமார் மட்டுமே விருப்பம் தெரிவித்தார். ஏனையவர்கள் கொள்கையளவில் அதனை ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் விக்கிரமபாகு கருணாரட்ன வெல்வதற்கான வாய்ப்பில்லை என்பதன் அடிப்படையில் அவரை ஆதரிக்க முன்வரவில்லை.

நான் விக்கிரமபாகு கருணாரட்னவுடன் தொடர்ந்தும் பேசி வருகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் இருவரும் இணைந்தே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளோம். தமிழ் வாக்காளர்கள் மத்தியில் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கும்படி இருவரும் மக்களைக் கோருவோம். அதே போல் சிங்கள வாக்காளர் மத்தியில் விக்கிரமபாகு கருணரட்னாவை ஆதரிக்கும்படி இருவரும் கோருவோம்.

தேசம்நெற்: இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஏன் இரு வேட்பாளராக தேர்தலில் நிற்கிறீர்கள்?

எம் கெ சிவாஜிலிங்கம்: கடந்த தேர்தல்களில் விக்கிரமபாகு கருணாரட்ன பெற்ற வாக்குகள் குறைவானது. இதுவொரு தந்திரோபாய நடவடிக்கையே. எமது நோக்கம் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் விழும் வாக்குகளைச் சிதறடிப்பதே. இதன் மூலம் இவர்களுக்கு 50 வீதமான வாக்குகளைக் கிடைக்காமல் செய்வதில் தான் எமது வெற்றி தங்கியுள்ளது. 50 வீதமான வாக்குகள் கிடைக்காத நிலையில் 2வது தெரிவை கணிக்க வேண்டிய நிலையேற்படும். இன்று என்னைத் துரோகி என்பவர்கள் நான் இந்நிலையை ஏற்படுத்தினால் என்ன சொல்வார்கள்.

தேசம்நெற்: நீங்கள் சுயேட்சையாக நிற்பதற்கு பின்னாலுள்ள அரசியல் பற்றிய சந்தேகங்கள் உள்ளது. நீங்கள் மகிந்த ராஜபக்சவின் உந்துதலால் அல்லது இந்தியாவின் உந்துதலால் தமிழ் வாக்குகளை பொன்சேகாவுக்குச் செல்ல விடாமல் தடுப்பதற்காகவே தேர்தலில் களம் இறங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எம் கெ சிவாஜிலிங்கம்: இப்படி பல ஊகங்கள் வெளிவரும். இவர்கள் ஒரு விசயத்தை மறக்கிறார்கள் இன்று யாழ்ப்பாணத்தில், வவுனியாவில் புளொட், கிழக்கில் ரிஎம்விபி கருணா, ஈபிஆர்எல்எப் என இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பார்கள். இதற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்யாவிட்டால் பெருமளவு தமிழ் வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது. அதனையும் தடுப்பதற்காகவே நான் தேர்தலில் நிற்கின்றேன்.

இன்று இலங்கையில் உள்ள எந்தப் பாராளுமன்ற உறுப்பினர் யுத்தக் குற்றங்கள் தமிழ் மக்களின் படுகொலைகள் பற்றிக் கதைக்கிறார்கள். அப்படிக் கதைக்கும் ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பியைக் கூறுங்கள். நான் இன்றைக்கும் இலங்கையில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக் குரல் கொடுக்கின்றேன். சுயாட்சி ஒன்றே தமிழ் மக்களுக்கு தீர்வு என்கின்றேன்.

மஞ்சள் கண்ணாடியைப் போட்டுப் பார்த்துக் கொண்டு மஞ்சளாக இருக்கிறது என்றால் என்ன செய்ய. தமிழீழ விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவன். இன்று ஆயுதப் போராட்;டம் முடிவுக்கு வந்துவிட்டது. புலிகள் அழிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை கொலை செய்தவனுக்கு அல்லது கொலை செய்யச் சொன்னவனுக்கு வாக்குப் போடு என்று தமிழ் மக்களிடம் போய்க் கேட்க முடியாது.

ஒருசிலர் திட்டமிட்ட பிரச்சாரங்களை என்மீது நடத்துகின்றனர். நான் இலங்கை அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டுவிட்டேன் என்றும் குற்றம்சாட்டுகின்றனர். அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நான் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதால் மட்டும் இலங்கை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதாகி விடாது.

தேசம்நெற்: நீங்கள் டிசம்பர் 20ல் மீண்டும் ஐரோப்பா வரவுள்ளீர்கள். இதன் நோக்கம் என்ன? ஐரோப்பாவில் உங்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவைத் தேடும் நோக்கம் உண்டா?

எம் கெ சிவாஜிலிங்கம்: என்மீதும் நான் சுயேட்சையாகப் போட்டியிடுவது தொடர்பாகவும் சிலர் விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஊடகங்களையும் அதற்குத் தூண்டிவிட்டுள்ளனர். இதுவொரு சிறு குழுவினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரம். அதனால் லண்டனுக்கும் தமிழகத்திற்கும் சென்று என்னுடைய அரசியல் நடவடிக்கைகளைத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்த அவசர பயணம். லண்டனில் மூன்று நாட்களும் தமிழகத்தில் நான்கு தினங்களும் தங்கி இதனைச் செய்ய உள்ளேன்.

நிச்சயமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதும் எனது பயணத்தின் நோகம்.

அரைமணி நேரம் நீடித்த நேர்காணலின் முடிவில் லண்டன் தமிழர்களின் தேசம்நெற் வாசகர்களின் கேள்விகளுக்கு பொது மேடையில் பதிலளிப்பதற்கு நீங்கள் தயார எனக் கேட்டேன். சற்றும் தயக்கமின்றி ‘பொதுக்கூட்டத்தை கூட்டுங்கள் எல்லாவிதமான கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்’ என ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் உறுதிபடத் தெரிவித்தார். அவரது உறுதிமொழிக்கமைய எம் கெ சிவாஜிலிங்கத்துடனான கேள்வி நேரம் ஒன்றுக்கு தேசம்நெற் ஏற்பாடு செய்துள்ளது. டிசம்பர் 21 2009 மாலை 5:30 முதல் 9:00 மணிவரை இக்கேள்வி நேரம் இடம்பெறும்.

நிகழ்வு விபரம்:
கேள்வி நேரம் : ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துடன் சந்திப்பு
காலம் : மாலை 5:30 டிசம்பர் 21 2009 திங்கட்கிழமை
இடம்: Quakers Meeting House, Bush Road, Wanstead, London, E11 3AU.
தொடர்பு :
த ஜெயபாலன்: 07800 596 786 அல்லது 0208 279 0354
ரி சோதிலிங்கம் 07846 322 369
ரி கொன்ஸ்ரன்ரைன்: 0208 905 0452

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

29 Comments

 • Siva
  Siva

  ஒரு தமிழனைக் காண்கிறேன். புலிகளின் வால்கள் தலைகள் எல்லாமே இன்று சரத் யுஎன்பி என்கிற வெட்கம் கெட்டவர்கள். ஜிவாஜியின் தன்மான உணர்வுக்கு ஆதரவு உண்டு .புலி ரெலோ அல்ல பிரச்சினை. எமது மக்கள்களுக்காகவே இயக்கங்கள் வந்தன. நன்றி ஜிவாஜி எங்களின் மானத்தை காப்பாற்றியதற்கு
  / தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை கொலை செய்தவனுக்கு அல்லது கொலை செய்யச் சொன்னவனுக்கு வாக்குப் போடு என்று தமிழ் மக்களிடம் போய்க் கேட்க முடியாது./
  மிகச் சரியான கூற்று

  Reply
 • பல்லி
  பல்லி

  //கொலை செய்தவனுக்கு அல்லது கொலை செய்யச் சொன்னவனுக்கு வாக்குப் போடு என்று தமிழ் மக்களிடம் போய்க் கேட்க முடியாது//
  இது இரண்டுக்குமே உடந்தயாய் புலிவால் பிடித்த எனக்கு வோட்டு போட சொன்னால் இவரது குடும்ப வோட்டே கிடைக்காது அல்லவா??

  //ஒரு தமிழனைக் காண்கிறேன். //siva
  இந்த தமிழனின் கூ குரலால்தான் பல தமிழரின் உதவியான வணங்கா மண் கப்பல் மகிந்தாவிடம் பல மாதமாக வணங்கியதை சிவா பாற்க்கவோ அல்லது கேக்கவோ மறந்தது ஏனோ?

  Reply
 • Siva
  Siva

  பல்லி நீங்கள் சரத்தை ஆதரிக்கறீர்கள் என்பது எனக்கு தெரியும் சிவாஜி புலிகளை ஆதரிக்கும்போத நான எதிர்த்தேன் காரணம் புலிகள் தவறானவர்கள்

  இன்று ஜிவாஜி யாருக்குப் பின்னால் நிற்கிறார். இவர் ஜனாதிபதியாக வருவார் என்றோ எதிர்பார்த்து அல்ல. சரத்தையும் மகிந்தாவையும் ஆதரிக்க முடியாது அதைவிட எல்லோரும் தமிழரின் அரசியல் தீர்வு பற்றி பேசாமல் இருக்கும்போத ஜிவாஜி ஊடாக தீர்வு பற்றிய கருத்தை மேல் எழுப்புவதே சரியான விடயமாகும்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  சிவா,
  உங்கள் கருத்தில் தெளிவில்லை. ஏற்கனவே ஒரு இஸ்லாமியத் தமிழர் களத்தில் இறங்கியிருக்கின்றார். தமிழர்களின் ஆதரவை அவரை நோக்கியாவது திருப்பியிருக்கலாம். அதைவிடுத்து சிவாஜி தேர்தல் களத்தில் குதித்துத் தான் தமிழர்களுக்குரிய தீர்வை எழுப்ப வேண்டுமென்பது தலையைச் சுற்றி மூக்கைப் பிடிக்கும் செயல். இன்று மகிந்தவையோ அல்லது சரத்தையோ ஆதரிக்க முடியாதென்பவர், தேர்தல் முடிவில் ஒரு வேட்பாளருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காத நிலை தோன்றும் போது, மறு வாக்குப் பதிவிற்காக பேரம் பேசலாமென்கின்றார். அப்போது மட்டுமென்ன மகிந்தவோ அல்லது சரத்தோ புனிதர்கள் ஆகிவிடுவார்களா?? யாரை ஏமாற்ற கதை விடுகின்றார். நாளை அதிபர் தேர்தலில் மகிந்தவோ அல்லது சரத்தோ தான் வென்று வரப் போகின்றார்கள். அதன் பின் தமிழர்களின் தீர்வு பற்றி இவர்களுடன் தானே பேச்சு நடாத்தப் போகின்றார்கள். தொடர்ந்தும் சிவாஜி போன்றவர்கள் தமிழர்களின் தலைகளில் மிளகாய் அரைக்கவே நினைக்கின்றார்களே ஒழிய தீர்வைப் பெறவல்ல…

  Reply
 • sinnadurai
  sinnadurai

  நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதென்றால் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய வேண்டும். அரசியலமைப்பில் திருத்தம் செய்யும் பிரேரணை பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தையும் பெற்ற பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க முடியும்.

  பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற தடையைத் தாண்டுவது இலகுவான காரியமல்ல. இன்றைய பாராளுமன்றத்தில் எதிரணியினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது. அரசாங்க தரப்பிலிருந்து கணிசமான எண்ணிக்கையினர் எதிரணிக்கு மாறினால் மாத்திரமே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எதிரணி பெறமுடியும். இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை.

  பொதுத் தேர்தலின்பின் அமையும் புதிய பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்பது அடுத்த கேள்வி. ஜனாதிபதித் தேர்தலுக்காக எதிரணியில் ஏற்பட்டிருக்கும் ஐக்கியம் பொதுத் தேர்தலில் இருக்காது. விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பொதுத் தேர்தலில் எதிரெதிராகவே போட்டியிடப் போகின்றன.

  ஆட்சி அமைக்கக் கூடிய அளவு ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி பெறுமா என்பது சந்தேகத்துக்கு இடமானது. ஆட்சி அமைப்பதற்குப் போதுமான அளவு ஆசனங்களைப் பெற்றாலும் இன்றைய தேர்தல் முறையின் கீழ் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நினைத்துப் பார்க்கவும் முடியாது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை சாத்தியமில்லை. மக்கள் விடுதலை முன்னணி அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டியிடவிருப்பதால் அதனால் மிக குறைவான இடங்களையே பெறமுடியும். ஆகவே எதிரணி வேட்பாளரான பொன்சேகாவினால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க முடியாது. அவர் தெரிவு செய்யப்பட்டால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகவே இருப்பார். இதுதான் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான வளர்ச்சிப் போக்குக்கு வழிவகுக்கும் விடயம்.

  ஜனாதிபதி ஆட்சிமுறை கட்சி அரசியலுடன் சம்பந்தப்பட்டது. ஜனாதிபதி தனது அமைச்சர்களைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிருந்தே நியமிக்க வேண்டும். பாராளுமன்றத்துக்கு வெளியிலிருந்து நியமிக்க முடியாது. எனவே அரசியல் கட்சிக்கு அல்லது கட்சிகளுக்கு முற்றிலும் புறம்பானவராக ஜனாதிபதி செயற்படுவது சாத்தியமில்லை.

  ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்பட்டாலும் ஏப்ரல் மாதத்துக்கு முன் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகின்றது. பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெறும் என்பதாகவே இன்றைய களநிலைமை உள்ளது. இந்த நிலையில் பொன்சேகா ஜனாதிபதியாக இருப்பாரேயானால் குழப்பகரமான நிலை உருவாகுவதைத் தவிர்க்க முடியாது.

  மறுபுறத்தில் பொன்சேகாவை இப்போது ஆதரிக்கும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் பெரும்பான்மை பெறுவதாக வைத்துக்கொண்டாலும் கூட குழப்ப நிலையைத் தவிர்க்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதைத் தவிர மற்றைய எல்லா விடயங்களிலும் எதிரும் புதிருமானவை. இவ்விரு கட்சிகளிலுமிருந்து அமைச்சர்களை நியமித்தால் அந்த அமைச்சரவையின் செயற்பாடு இழுபறி நிலையிலேயே இருக்கும்.

  ஒரு கட்சியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மற்றைய கட்சி தடையாகவே இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டாலும் நிம்மதியான ஆட்சி அமையாது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத் திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது அதன் வழமையான பாணியில் குழப்பகரமான நிலையைத் தோற்றுவிக்கும்.

  பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவாரேயானால் பாராளுமன்றத்தில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெற்றாலும் நிம்மதியான ஆட்சிக்கு இடமில்லை. பொது வேலைத்திட்டமொன்றின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கிடையிலான உடன்பாட்டுக்கூடாகப் போட்டியிடாமல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குதல் என்ற ஒற்றைவரிக் கொள்கையின் அடிப்படையில் போட்டியிடுவதே இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணம்.

  இந்தநிலையில் இவர் என்ன செய்வார் என்ற கேள்வி எழுகின்றது. இவர் ஒரு இராணுவ அதிகாரி. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இராணுவ ரீதியாகவே சிந்தித்துப்பழக்கப்பட்டவர். நெருக்கடி ஏற்படும் போது இராணுவத்தையே நாடுவார். அது இராணுவ ஆட்சியாகவும் இருக்கலாம். இராணுவத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஆட்சியாகவும் இருக்கலாம்.சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக்கைப்பற்ற நினைத்திருந்தால் இலகுவில் செய்திருப்பேன் என்று இவர் கூறியது சாதாரணமாகக் கருதப்படக்கூடிய கூற்றல்ல

  Reply
 • sinna
  sinna

  இந்த இருவர்pல் ஒருவர்தான் வருவார் என்றால் மிச்சம் 20 பேரும் ஏன் பார்த்திபன் போட்டடியிடுகினம்

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  /The villains today are companies with deep pockets, people in white collar jobs controlling people in army fatigues to get them what they want by force simply because they can./-/சேது போன்றவர்களை இலகுவில் அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கலாம். ஆனால் மற்றையவர்களை அவ்வளவு இலகுவாக அடையாளம் காணவும் முடியாது சிகிச்சை அளிக்கவும் முடியாது. இவர்களே சமூகத்திற்கு மிக ஆபத்தானவர்கள். மிகமோசமான சமூகக்கொல்லிகள்./-/சரத்தையும் மகிந்தாவையும் ஆதரிக்க முடியாது அதைவிட எல்லோரும் தமிழரின் அரசியல் தீர்வு பற்றி பேசாமல் இருக்கும்போத ஜிவாஜி ஊடாக தீர்வு பற்றிய கருத்தை மேல் எழுப்புவதே சரியான விடயமாகும்./–தமிழர் அரசியல் தீர்வைப் பற்றி யாரும் பேசவில்லை என்பதல்ல, இது மிகவும் ஆழமானது!. குண்டுசட்டிக்குள் இன்னும் ஆழமாக போய்விடுவது. “இதுதான் தானும் தன்பாடும் என்பது”, இது அமைதி வழி, காந்திய வழியல்ல.

  “தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்கொரு குணமுண்டு” என்பதற்கமைய, இப்பிராந்தியத்தின் பிரத்தியேக “புதைக்குழி”. இதன் மூலம் என்ன?. “ஆப்கானிஸ்தான் பிரச்சனை சம்பந்தமாக”, சென்றவாரம், பராக் ஓபாமாவும், மன்மோகன் சிங்கும், நேரில் பேசியுள்ளனர் குழப்பமான வகையில் இராணுவ நடவடிக்கைகளை அதிகப் படுத்துவதாக. வழவழ,குழகுழ இந்தியா சரியான முடிவெடுக்க வேண்டும், அதை விடுத்து,”ஜெர்மனியின் இருபத்தியோராம் நூற்றாண்டு ஆசியாவுக்காண இராணுவ கொள்கையை” அணுசரித்து போவதென்பது-19 ஆம் நூற்றாண்டு, “அமெரிக்க ஜெர்மன்” வங்கிகள் மட்டும், தற்போதைய “பொருளாதார சிக்கலில்” ஏன் சிக்கவில்லை என்ற கேள்வியில் தொக்கி நிற்கிறது(பிரிதொரு சமயத்தில் விளக்கம்). “யார் குத்தி அரிசியானால் என்ன” என்பது இலங்கைத் தமிழரது கொள்கை. அதனால் “சொகுசு போர்க்கப்பலில்” ஏறி அமர்ந்துள்ளனர்- அதை புதைக்குழி (தமிழர் படுகொலை)நோக்கி செலுத்தும் போது, “தானும் தன்பாடும்” என்று இருக்கின்றனர்- உதவியும் செய்கின்றனர். மே 18-2009 திற்குப் பிறகு இந்த புதைக்குழி மேலும் ஆழமாகியுள்ளது உணர காலம் பிடிக்கும்.

  இந்தநிலையில்,திரு.சிவாஜிலிங்கமும் அதே வட்டத்திலிருந்து வெளிவராவிட்டாலும்,- பாசிட்டிவான நகர்வு. புதைக் குழியில் மாட்டாமலிருக்க சரத்தைவிட ராஜபக்ஷே பரவாயில்லை. ஆனால், உமாமகேஸ்வரனுக்கும், பிரபாகரனுக்குமிருந்த கருத்து வேறுபாட்டின்படி, “சிங்களவருடனான உறவு என்பது வேளைக்கு ஆகாது” என்பது .அப்படி உறவுகொள்ள முனைந்தவர்களை தங்களுடைய வழிமுறைக்காக தட்டிவிட்டது சிங்களதலைமைகள் (விக்கிரமபாகு கருணாரட்ன விளக்குக)?என்பது. தற்போது புலன்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், ஒன்று(பழையப்படி)மகிந்தா காலடி மண்னெடுத்து நெற்றியிலே பொட்டு வைப்போம் என்கிறார்கள், அல்லது புதைக்குழிக்குள் ஆழமாகப் போய் “நாடுகடந்த தமிழீழம்” என்று யதார்த்தத்திலிருந்தும், தங்கள் சூழலிலிர்ருந்தும், எல்லாவற்றிலிலிருந்தும் தங்களை “நாடுகடத்தி கொண்டு” கற்பனை உலகில் வாழுகிறார்கள். எதுவுமே சரியாகப் படவில்லை!.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  “சொகுசுப் போர்க்கப்பல்” என்பதை சரியாகப் புரியவேண்டுமென்றால் ,”தானும் தன்ட பாடும் என்பதும், தவளை தன் வாயால் கெடும் என்பதும் ஒன்றுதான்”. தங்களை அறியாமலேயே, இந்த சொகுசு போர்க்கப்பலின் மாலுமிகளாக நியமனம் பெருகிறார்கள் (ஒரு வேளை புதைக் குழியினால் இலாபமும் இருக்கலாம்).அவர்கள், வரும் ஜூன் 2010ஆம் அண்டு “உலக தமிழ் செம்மொழி மாநாட்டை” நடத்தவிருக்கும், கலைஞர் கருணாநிதியும், திரு.கார்த்திகேசு சிவதம்பியும் ஆகும். இம் மாநாட்டில் பழைய திராவிட இயக்க “டமாரங்கள்” தட்டப்படுமானால், அதுவே “தவளைகளின் காட்டுக் கத்தலாக இருக்கும்”.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //இந்த இருவரில் ஒருவர்தான் வருவார் என்றால் மிச்சம் 20 பேரும் ஏன் பார்த்திபன் போட்டடியிடுகினம். – சின்னா //

  தாங்களும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனாங்கள் என்று பிலிம் காட்டவென்றும் எடுத்துக் கொள்ளலாம். இதில் எத்தனை பேர் கட்டுப்பணம் திருப்பி எடுப்பினம் என்பதும் கேள்விக்குறி??

  Reply
 • பல்லி
  பல்லி

  /இந்த இருவரில் ஒருவர்தான் வருவார் என்றால் மிச்சம் 20 பேரும் ஏன் பார்த்திபன் போட்டடியிடுகினம். – சின்னா //

  உலகத்துக்கு மட்டுமல்ல அந்த இருபதுக்கும் தெரியும் கனவில்கூட தாம் ஜனாதிபதியாக மாட்டோம் என, ஆனால் சின்னா மட்டும் ஒருவர் தரையில் நீச்சலடிப்பதை பார்த்து ரசிக்கிறார், ஒரு உன்மை என்ன தெரியுமா. சிவாஜிலிங்கத்துக்கு எதிரி அவரது வாய்தான்? மிக விரைவில் பிரபாகரன் பொறுக்கி என இவரது வாய் சொல்லும் அதுவரை சின்னா அவரை பாராட்டுங்கள்;
  //பல்லி நீங்கள் சரத்தை ஆதரிக்கறீர்கள் என்பது எனக்கு தெரியும்:://
  எங்கேயாவது பல்லி சொன்னேனா? எனது வோட்டு சரத்துக்கு அம்முட்டுதான்; அவரை ஆதரிக்கிறேன் என்பது அர்த்தம் இல்லை; எனது வோட்டு மகிந்தாவுக்கு எதிரானதே தவிர சரத்துக்கு ஆதரவானதல்ல்; அப்படியாயின் 20ல் ஒன்றுக்கு போடலாமே என கேக்கலாம்; எனது வோட்டை செல்லா வோட்டாக போட எனக்கு விருப்பம் இல்லை; மகிந்தாவுக்கு எதிராக சின்னா நின்றால் கூட எனது வோட்டு சின்னாவுக்குதான், ஆனால் மகிந்தாவை எதிர்க்கும் பலம் சிறிதேனும் இருந்தால்;

  Reply
 • சிறீ
  சிறீ

  ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரம் ஆரம்பித்து விட்டது. கடந்த சில காலமாகத் தேர்தல்களின் போது வன்முறைகள் தலைதூக்குவதும் முறைகேடான செயற்பாடுகள் இடம்பெறுவதும் வழமையாக இருந்து வந்துள்ளன. இந்த விரும்பத்தகாத போக்கு தேர்தலுக்குப்பின் பொலிஸாருக்கு இரண்டு வார விடுமுறை வழங்கப்போவதாக ஜே.ஆர். ஜயவர்த்தன கூறிய காலகட்டத்துடன் ஆரம்பமாகியது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையாளர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். தாமதமின்றித் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டுமானால் வன்முறைகளையும் குழப்பங்களையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியது காலோசிதமானது.

  வன்முறையையும் ஆரோக்கியமற்ற பிரசாரங்களையும் வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் இத்தேர்தலுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் அமைதியாகவும் எல்லா வாக்காளர்களும் பங்களிப்புச் செய்யக் கூடியதாகவும் வாக்களிப்பு நடைபெறுவதற்குச் சம்பந்தப்பட்ட சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

  உரிய காலத்துக்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் தேர்தலை நடத்துவதற்கான காரணத்தை ஜனாதிபதி கூறியிருக்கின்றார். கடந்த தேர்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பிலிருந்து புலிகளால் தடுக்கப்பட்டனர். நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் வடமாகாண மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இரண்டு வருடங்கள் முன்னதாகத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார்.இப்போது வடமாகாண மக்கள் வாக்களிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. புலிகளின் அச்சுறுத்தல் இப்போது இல்லை. இடம்பெயர்ந்தவர்களும் தாங்கள் தங்கியுள்ள இடங்களில் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  வடமாகாண மக்களைப் பொறுத்த வரையில் இரண்டு பிரதான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். ஒன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றது அபிவிருத்தி. வட மாகாணம் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற ஆயுதப் போராட்டம் மாத்திரம் அதற்குக் காரணமல்ல. அக்கால கட்டத்துக்கு முந்திய தமிழ்த் தலைவர்களும் அபிவிருத்தியில் அக்கறை செலுத்தவில்லை. இப்போது தான் வடமாகாணத்துக்கான அபிவிருத்தித் திட்டங்கள் செய ற்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

  இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி மிகவும் சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்குப் பொறுப்பாளிகள் யாராக இருந்தாலும் தீர்வுக்கான முயற்சியை இந்த நிலையிலிருந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் உண்டு. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையை ஆரம்பமாகக் கொண்டு படிப்படியாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியும்.

  ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் போது அபிவிருத் திக்கும் சமாதானத்துக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தைச் சகல மக்களும் உணர்ந்து கொள்ள.வேண்டும்

  Reply
 • Kusumpu
  Kusumpu

  /தவளை தன் வாயால் கெடும் என்பதும் ஒன்றுதான்/ டெமோகிரசி- நுணலும் தன்வாயால் கெடும் என்பதுதான் பழமொழி. தவளை அல்ல. நுணல் தன்பாட்டில் கிடக்கும் எதிரியைக் கண்டவுடன் கத்துமாம். தான் எங்கு உள்ளேன் என்பதை தானே காட்டிக் கொடுத்து விடுமாம்.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  /[TamilNet, Friday, 18 December 2009, 23:04 GMT]
  Tamil Nadu political leaders Pazha Nedumaran, Ko’laththoor Mani, Aruna Bharathi and Thamizharuvi Maniyan in their statements Friday wished well for the democratic move of Canadian Tamils in conducting a referendum on Tamil Eelam Saturday and urged all Canadian Tamils to make it a grand success./–இதுதான் “டெமொகராசி என்பது”. திரு.பழ.நெடுமாறன் என்னுடைய தந்தைப் போன்றவர். “கனடாவில்தான்” இலங்கைத் தமிழரின் அதிகப்பட்ச மக்கள் வசிக்கிறார்கள் (டெமொகராசி). இலங்கையிலிருந்து,ஐரோப்பாவைவிட இரண்டு மடங்கு தூரம், ஐஸ்காடு வேறு, பொருளாதாரத்தில் அமெரிக்காவை தங்கியிருக்கும் நிலை!. ஈ.வி.கே.சம்பத்தும் (வசதியானவர்), பழ.நெடுமாறனும், கவிஞர் கண்ணதாசனும், தி.மு.கா.விலிருந்து பிரிந்தபோது, கண்ணதாசன் கலைஞரை பிரிய தயங்கினார், கடைசியில், “தமிழ் தேசியத்திற்கு” ஆதரவாக முடிவெடுத்து, ஈ.வி.கே சம்பத் அவர்களுக்கு ஒரு கடிதத்தை என்…… கொடுத்தார். இத்தகைய தமிழ் தேசிய உருவாக்கதின் தற்போது உயிரோடிருகும் ஒரே தலைவர் பழ.நெடுமாறன் மட்டுமே!. “இந்த தேசியம்”, மையப்புள்ளி கலைஞருக்கு எதிர்ப்பானது. அதனால்தான், தமிழ்தேசியம் என்றால், கலைஞருக்கு “எட்டிக்காய்”. ஈழத்தமிழரின் பெரும்பான்மைக்கு (டெமகராசி) எதிராக, பழ.நெடுமாறனாலோ, தமிழருவி மணியனாலோ பேச இயலாது, ஆனால் தமிழரின் டெமகராசிக்கு எதிராக?… எது சரி, எது பிழை?…ஒன்னுமே புரியலே உலகத்திலே….

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  நுணல் என்பதுதான் “தவளை”.பாம்புக்கு கண்தெரியாது என்பதும் “பாம்புக்காது” என்பதும்? சொல் வழக்கம்,தவளை கத்துவதால் தன் இருப்பிடத்தை தெரியப் படுத்துவதால் பாம்பு தன் உணவான,தவளையை பிடிப்பது இலகுவாகிறது.இப்படிதான் பெரிய வல்லரசுகளின் சிலநடைமுறை சிக்கல்களை(விரிவாக ஆராயப்பட வேண்டியது),கத்துவதன் மூலம்(டமிலர்) எளிதாக்குகிறார்கள் என்பதாகும்.

  Reply
 • sinna
  sinna

  /ஏற்கனவே ஒரு இஸ்லாமியத் தமிழர் களத்தில் இறங்கியிருக்கின்றார். தமிழர்களின் ஆதரவை அவரை நோக்கியாவது திருப்பியிருக்கலாம். //பார்த்திபன்

  (சரத் மகிந்தா தவிர மிச்சம் 20 பேரும்) /தாங்களும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனாங்கள் என்று பிலிம் காட்டவென்றும் எடுத்துக் கொள்ளலாம். இதில் எத்தனை பேர் கட்டுப்பணம் திருப்பி எடுப்பினம் என்பதும் கேள்விக்குறி??/ பார்த்திபன்.

  இப்ப தெரிகின்றது தெளிவாக.ஏன் போட்டியிடுகின்றார்கள் என்பதல்ல பிரச்சினை. யார் போட்டியிடுவது என்பதுதான் உங்கள் பிரச்சினை.

  /பிரபாகரன் பொறுக்கி என இவரது வாய் சொல்லும் அதுவரை சின்னா அவரை பாராட்டுங்கள்/பல்லி
  நான் எங்கே பாராட்டினேன்? நான் எங்கே பல்லியிடம் சரத் பற்றிக் கேட்டேன்? ஏன் என் தலையில் மிளகாய் அரைக்க வருகிறீர்கள்.

  சிவாஜிக்கு ஆதரவாக கதைப்பவர்களை ஒன்றில் புலியாக அல்லது டெலொவாகப் பார்த்து பின்னோட்டக்காரர்கள் தாக்குவதையே நான் காண்கின்றேன்.

  Reply
 • பல்லி
  பல்லி

  மன்னிக்கவும் சின்னா.
  சிவா என்பதற்கு சின்னா என எழுதியதற்கு;

  Reply
 • gobi
  gobi

  ஒருகாலத்தில் கூட்டணி தமது தேர்தல் பலத்தை காட்டியது பொன்று ரெலோ தனது பலத்தை நிறுவும் காலம் வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது எத எப்படியோ 4 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறது ரெலோ இது தனியாக ரெலோவின் பலமாக ஏன் பார்க்கமுடியாது சிலவேலை சிலர் தாம் முன்னர்சார்ந்த அமைப்பு என்றால் இதை எல்லாம் புரட்சி வடிவம் என்றுவிடுவார்கள் புலிகளுடன் ஒரு இணக்கத்தை ஏற்ப்படுத்தி தம்மை புலிகளிடமிருந்து பாதுகாத்துக்கொண்டுள்ளதும் இன்றும் புலிகளின் பினாமிகள் புலிகளின் ஆதரவாளர்கள் மகிந்தாவை வீழ்த்துவது என்ற முட்டாள்தனமான எண்ணத்தால் தமிழர்களின் அரசியலை மறந்துள்னர் ஆனால் ரெலோ அரசியல்தீர்வு என்ற கோட்பாட்டை முன்வைக்கிறது எதிர்காலம் சரி எது பிழை என்ற தீர்ப்பை வழங்கும் வரை பொறுத்திருப்போம்.

  இன்று சரத்தை ஆதரிக்கும் புலிப்பினாமிகள் புலி தலைவர்கள் சரத் தனது கொள்கைப் பிரகடனத்தில் ஏதும் தமிழர் அரசியல் தீர்வு என்று சொல்லாமலே சரத்தை ஆதரிக்கும் முட்டாள்களே!

  Reply
 • reporter
  reporter

  I’m contesting to force a second count- M K Sivajilingam
  By Jayashika Padmasiri

  Tamil National Alliance (TNA) Parliamentarian M.K. Sivajilingam handed in his nomination papers to contest the Presidential elelctions along with 22 other candidates, last week.
  MP Sivajilingam is contesting the polls as an independent candidate, though he is yet a member of the TNA. LAKBIMAnEWS spoke with Sivajilingam on the key issues of the imminent election.

  Q: What made you want to contest the Presidential Election?

  A: Our problem is not with the executive presidency. We do not believe that either of the main candidates, who are runningthis time, will succeed to solve the ethnic issue, just as it was never tackled by many other presidents who came to power and ruled this country. We want a confederal system for the whole nation, where the people in the North and East will be under an internally autonomous state, and the people in the south will be ruled according to their own wishes in whatever way they prefer.

  Q: Are you running with the intention of splitting the votes of President Mahinda Rajapaksa or of General Sarath Fonseka?

  A: That is absurd. If we criticize President Mahinda Rajapaka, then we will be accused of trying to split his votes. If we criticize General Sarath Fonseka, then we will be accused of trying to split his votes. There is no doubt about the fact that it is either of these two candidates who will win the election. It will either be X or Y. But our main intention is to make them get less than 50% votes, where the power of the minority will be showcased to the international community ….leading to a second count.

  Q: Who in your opinion will win this election; will it be President Mahinda Rajapaksa or General Sarath Fonseka?

  A: I do not want to answer that question; whoever will get the most count of votes will win.

  Q: You are campaigning with the Left Front Leader Dr. Vickremabahu Karunaratne who is also a candidate in the forthcoming election. Can you adduce any reasoning behind this decision?

  A: The simplest answer would be the fact that he understands us and agrees with what we are saying, which is the need for Tamil autonomy, equality, a homeland and self-determination. Both of us agree on the fact that we want the main candidates to achieve less than 50% votes. That is our only aim.

  Q: How many votes do you estimate you will gain?

  A: I think I will get at least 100,000 votes as an independent candidate. However, if I will get the support of the Tamil National Alliance (TNA), then I do believe that I will be able to gain at least 300,000 votes.

  Q: You are still a member of the TNA. So do you believe that you will get the support of the TNA?

  A: I do not know, because our party was divided on this matter.. Seven MPs including me, Selvam Adaikalanathan, Nallathamby Srikantha, S Vino Noharathalingam and three others were of the opinion that the TNA should contest the presidential election. While one stated that the TNA should support General Sarath Fonseka, five others said that we should let time decide and wait and see what happens. However 12 members entertained the view that the TNA should neither support Sarath Fonseka nor Mahinda Rajapaksa. So I do not know whether I will get the support of the TNA though I’m still a member of that party.

  Q: What kind of position do you think the MP R. Sambanthan entertains when it comes to the presidential polls; who is he planning to support in your view?

  A: He has spoken with both Mahinda Rajapaksa and Sarath Fonseka. However I do believe that he is also adopting the ‘wait and see’ attitude. But I also believe that he is maintaining this attitude because, he listens to what India and other western countries ask him to do. So he will wait and see, and finally, decide to act, when he is given the instructions by those countries.

  Q: Did either President Rajapaksa or General Fonseka try to contact you after you stated that you will be contesting the presidential election?

  A: No.

  Q: You had a strong pro India bias at one time. Is there any connection with that factor, and your contesting the election?

  A: No. I stayed in India, but I was not allowed to stay there for more than a month. And I do not have such a strong relationship with the members of the Congress party, which is the ruling party there.

  Q: What are your thoughts on the executive presidency?

  A: As per the executive presidency all the powers are at the centre and given to one person. This creates problems, so we do believe it is good, if this system can be abolished. But the question is how are they going to abolish the executive presidency? They will need a two third majority and will have to make amendments to the constitution. However, if they do bring in a new constitution, then we would most willingly support that. But today unfortunately, what is happening here is that both President Mahinda Rajapaksa and General Sarath Fonseka are more concerned about who is a true Sinhalese war hero, rather than evolving solutions to any of our problems.

  Q: What are your views on the allegations leveled against the opposition candidate, General Sarath Fonseka and the Hi-Corp Company?

  A: I do believe that there is no point in making allegations without any proof. So what the government should do is to create a presidential commission of inquiry and make free and fair investigations into the allegations, without being partial to any party. Then everyone will get an opportunity to know the truth.

  Q: There is much talk going on about the last phase of the war these days. Some claim that the LTTE leaders were killed after they surrendered. As a Jaffna MP how true do you think this view is and what are your own personal views on this matter?

  A: According to the knowledge we gathered from international journalists, Nadesan, Ramesh and many other LTTE leaders including families and injured LTTE cadres have approached the SL army with white flags and surrendered. But they were killed. Also 50,000 people have died in the Wanni war, which is why we are demanding an international inquiry.

  Q: As you mentioned just now, you have demanded an international inquiry about the war saying at least 50,000 people died. So in your opinion what’s ultimate justice for the Tamil people?

  A: To have an international inquiry regarding the deaths which took place due to the war, to resettle the people who are now living without homes either in IDP camps or in some relative’s house, to pay compensation, to punish the people who did wrong, and committed crimes — and also to find and enter into a political solution.

  Q: How do you feel about the IDP situation prevailing in the North today?

  A: Of the 300,000 IDPs now 200,000 have been released, but they are still not resettled. The talk about resettling these victims of war is a lie, and we will not believe it at all. The government is putting forward the issue of landmines to the international community and this is just an excuse. They are trying to hoodwink the international community with this story.. The truth is that the government does not wish to resettle these people. I know for a fact that on the Eastern side of the A-9 road the Indian de-mining teams are not allowed, while they claim that the SL army de-mining teams are working in that area.
  But we do not know how true that is, and still no one is allowed to go there, not even the Indian de-mining team.

  http://www.lakbimanews.lk/special/spe5.htm

  Reply
 • kamal
  kamal

  கொலை செய்தவனுக்கும் கொலை செய்ய சொன்னவனுக்கும் வாக்களிக்கும் படி எமது மக்களை கேட்கிறார்கள் இவர்களால் செய்யப்பட்ட கொலை இரத்தம் இன்னும் ஆறவில்லை தமிழர்களில் இவர்களின் பக்குவம்தான் என்ன?

  சரி இந்த அரசியல்வாதிகளில் யார் தமிழரின் அரசியல் தீர்வு பற்றி கருத்து வைத்துள்ளார்கள் ரிஎன்ஏ சரத்தை ஆதரிப்பதன் நோக்கம்தான் என்னவோ சுயநலத்தைவிட வேற எனன?

  Reply
 • anwar
  anwar

  கட்சி கட்டுப்பாடு , அது இது எல்லாம் ஒன்றும் இல்லையோ ! உங்களுக்கு ரொம்பத்தான் இனஉணர்வு. ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு காண வேண்டுமென்று உங்கட சிறிகாந்தா சொன்ன பொது பேசாமல் இருந்தீர்களே சிவாஜி. அவர்தானே உங்களுக்கு கட்டுப்பணம் கட்டியவர். தோழர் விக்கிரபாகுவின் வாக்கைப் பிரிப்பதக்கா நீங்கள் களத்தில் குதித்தீர்கள்? பேசாமல் அவரிட்கே ஆதரவு அளித்திருக்கலாமே. ஒரு சிங்களவன் ‘சுயநிர்ணய உரிமை’ பற்றி பேசக்கூடாதா? அவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால், நாம் இனவாதிகள் அல்ல என்றாவது உலகம் நினைக்குமே. அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்கள். நடக்காத காரியத்தை, நிபந்தனையாக வைப்பது அரசியல் சாணக்கியம். சிவாஜி…… நீங்கள் தமிழ்நாட்டு அரசியலில் இருக்க வேண்டியவர்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  சிவாஜிலிங்கத்திற்கு பெப்ரவரி மாதகாலத்தில் தான் புலிகள் தோற்றுப்போவார்கள கண்டுகொண்டாரா?. டொலே ஈ.பி.ஆர்.எல். எவ் போன்ற இயக்கங்களை கொடுர முறையில் அழித்தொழிக்கும் போது அது தமிழ்மக்களுக்கு மேல் புலிகள் புலித்தலைமைகள் தொடுக்கப்பட்ட போர் என்பதை ஏன் இந்த அரசியல் ஞானிக்கு புரிந்துகொள்ள முடியாமல் போனது?.
  நிறக்கண்ணாடி அணியாத இந்த அரசியல்வாதி லண்டனில் புலிப்பினாமிகள் நடத்திய ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் அணிவகுத்துச் சென்ற போது இவரும் தானே முன் வருசையில் தலைமை தாங்கிச் சென்றார். நேர்மையுள்ள மனிததர்கள் யாராவது சொல்வார்களா? தமிழ்மக்களை காப்பாற்றுவதற்காக சென்றார்களா? புலிகளை காப்பாற்றுவதற்காக சென்றார்களா? என்பதை. இவர்கள் போட்ட கோஷங்கள் தான் என்னே?

  வன்னியில் லட்சகணக்கான மக்களை புலிகள் பயணக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த போது சிவாஜிலிங்கமோ கூத்தமைப்போ மக்களை விடுவிக்கச் சொல்ல எங்கேயாவது கோரிக்கை வைத்திருக்கிறார்களா? ஊர்வலம் நடத்தியிருக்கிறார்களா?. அவுஸ்ரேலியாவில் வன்னிமக்களை விடுவிக்க சொல்லி ஆண்களும் பெண்களுமாக சிங்களமக்கள் அல்லவா? வன்னிமக்களுக்காக குரல் கொடுத்தார்கள். இதற்கு சிவாஜிலிங்கம் என்ன பதில் சொல்லப் போகிறார்?

  பரிசோதனைக்கூடத்தில் உருவாக்கிய குழந்தைபோல புலிகளால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பும் இந்த சிவாஜிலிங்கமும். இவர்கள் தமிழரசுக் கட்சியில் இருந்து இறுதியாக எஞ்சியிருக்கிற கூத்தைமைப்பு வரை தமது வாழ்கையை பிரதிப்படுத்துவோர்களே ஒழிய தமிழ்மக்களை அல்ல. தமிழ்மக்கள் யார்? என்று கேட்டால் அப்த்தமானா பதிலே! இவர்கள் வாயில்லிருந்து வரும். சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனை தீர தமது சமஉரிமையை பெற்றுக் கொடுக்க முயன்றதும் இல்லை. முயற்சித்ததும் இல்லை. மலையகமக்கள் இவர்களுக்கு ஒரு விலக்கப்பட்ட கனி.கடைசியாக கிடைத்த உதாரணம்தான் எமக்கு வன்னிமக்கள்.

  இவர்கள் முயற்சிப்பது எல்லாம்…!!!! இறுதியில் இவர்களை மேற்குலகத்தில் கொண்டுபோய் நிறுத்தி வைப்பதுமல்லாமல் மிகுதியாக இருக்கிற தமிழ்சனத்திற்கும் அழிவுகோலுகிற சுயஅரசியலே வளர்ப்பவர்களாகும்.

  Reply
 • சிறீ
  சிறீ

  பிரிவினைக்கு ஆதரவானவர்களையும் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுக்கு ஆதரவானவர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துவதற்கான நிலைப்பாடு இரு சாராரையும் ஒரே நேரத்தில் ஏமாற்றுவதாகவே முடியும்.

  Reply
 • BC
  BC

  //வன்னியில் லட்சகணக்கான மக்களை புலிகள் பயணக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த போது சிவாஜிலிங்கமோ கூத்தமைப்போ மக்களை விடுவிக்கச் சொல்ல எங்கேயாவது கோரிக்கை வைத்திருக்கிறார்களா?//
  சந்திரன், மக்கள் தாங்களாகவே விரும்பி தான் புலிகளுடன் இருக்கிறார்கள் என்று கதை விட்டவர் தான் இந்த சிவாஜிலிங்கம்.

  Reply
 • sr
  sr

  ‘எனது வோட்டு மகிந்தாவுக்கு எதிரானதே தவிர சரத்துக்கு ஆதரவானதல்ல்; அப்படியாயின் 20ல் ஒன்றுக்கு போடலாமே என கேக்கலாம்; எனது வோட்டை செல்லா வோட்டாக போட எனக்கு விருப்பம் இல்லை;’ -பல்லி

  பல்லியின் வாதம் சரியாகத் தெரியவில்லை. சரி> பல்லியின் விருப்பப்படி இந்த தேர்தலில் இரவணுவத்தளபதி சரத் வென்றால் நாடு இப்ப இருப்பதை விட சுபீட்சமாக இருக்கும் என்று நம்புகிறாரா?இல்லை என்னும் பிரச்சினைகூடும். அப்ப புரட்சிவெடிக்கும் என்று ஆசைப்படுகிறாரா

  இல்லை மோசமான நிலைக்கு சென்றால் அடுத்ததேர்தலில் பல்லியின் ஆதரவு மகிந்த குடுப்பத்திற்கு.. ஏனென்னறால் மூன்றாவது நபருக்கானது செல்லா வோட்டு. பல்லி உங்கள் மனவிருப்பத்தை வெளிப்படையாக சொல்ல ஏனோ தயங்குகிறீர்கள்..

  Reply
 • london boy
  london boy

  வெட்கம் கெட்ட புலிப் பினாமிகள் தமது தலைவர்களை அழித்த சரத்தக்கு வாக்கு பொடச் சொல்வது எவ்வளவு காட்டிக் கொடுப்பு புலிகள் வாழும்போதே தமிழர்பளின் போராட்த்தை காட்டிக் கொடுத்தார்கள் என்பது போய் புலிகள் அழிந்த பின்பும் காட்டிக்கொடுக்கிறார்கள். இந்த புலிப் பினாமிகளுக்கு வெட்கமா இல்லை சிறையிலிருக்கும் புலிகள் வெளியே வரும் போது இவர்கள் மீது காறி உமிழ்வார்கள். புலியே மகிந்தாவை கொண்டு வந்தது இதனால்’ தனது தலையில் தானே தனக்கு சுட்டுக் கொன்றது இன்று அவனுக்கே வாக்கு பொடச் சொல்லுது?? புலிகள் அழிந்தது எவ்வளவோ தேன் மாதிரி இருக்கிறதே!

  Reply
 • பல்லி
  பல்லி

  //பல்லியின் வாதம் சரியாகத் தெரியவில்லை. சரி> பல்லியின் விருப்பப்படி இந்த தேர்தலில் இரவணுவத்தளபதி சரத் வென்றால் நாடு இப்ப இருப்பதை விட சுபீட்சமாக இருக்கும் என்று நம்புகிறாரா?//.

  பல்லி ஏன் சரத்துக்கு வொட்டு என பலதடவை சொல்லிவிட்டேன், மகிந்தாவுக்கு பலமான ஒரு எதிரி இருக்க வேண்டும், அப்போதுதான் தான் என்ற ஆணவம் தாண்டவம் ஆடாது(தற்போது போல்) ஒரு திருடன் திருடுவதை விட நல்லவன் திருடுவதே மிகபெரிய கொடுமை; கருனாவை விட பிள்ளையான் நிதானமாக செயல்படுவதாக கிழக்கின் அறிவுஜீவிகள் சொல்லுகிறார்கள், அந்த குழந்தைக்கு எப்படி இந்த திறமை வந்தது, தன்னால் முடியாவிட்டாலும் மற்றவர் யோசனைகளை கேட்டு செயல்படுவதால் நிர்வாகம் சரியாகதானே போகிறது, அதுவும் கருனாவின் கெடுபிடி இல்லாவிட்டால்?? என்னடா இது மகிந்தா சேகரா பற்றி கேட்டால் கருனா பிள்ளையான் பற்றி பல்லி பாடுகுது என சிரிப்பது புரிகிறது; சிரித்த பின் சிந்தியுங்கள் ஏதாவது புரியும்; மகிந்தா எனக்கு எதிரியல்ல ஏன் அடுத்த தேர்தலில் நான் மகிந்தாவை ஆதரிக்க கூடாது? எனக்கு எது சரியென படுகிறதோ அதை நான் செய்வேன், மற்றவர்களுக்காக எதுவும் செய்ய மாட்டேன்;

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பல்லி,
  உங்கள் வாதத்திலிருந்து சற்று நான் வேறுபடுகின்றேன். மகிந்தவிற்கு உள்ள ஆணவம் குறைய வேண்டுமென்பதில் எவருக்கும் எள்ளளவும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. தன்னை எவரும் அசைக்க முடியாது என நம்பியிருந்த மகிந்தவிற்கு, தேர்தலில் சரியான போட்டியாக சரத் வந்ததே அவரைச் சிந்திக்க வைத்திருக்கும். வல்லவனுக்கு வல்லவன் என்றுமிருப்பானென்பதை மகிந்த நிச்சயம் தற்போது உணர்ந்திருப்பார். எனவே அவர் தனது நிலையிலிருந்து தன்னை மாற்றியே ஆக வேண்டும். இல்லையேல் அவர் முற்றாக சந்திரிகா போல் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய நிலையே எதிர்காலத்தில் தோன்றும்.

  அதுபோல் சரத்திற்கு வாக்களித்து அவர் வெற்றி பெற்று வந்தால், என்ன நடக்கும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். சரத்தைப் பொறுத்தவரை அவர் என்றும் சிறுபான்மை மக்ககளைப் பற்றிச் சிந்தித்தது கிடையாது. இப்போது தேர்தலுக்காக ஒப்புக்கு சப்பாணியாக ஏதோ இடைக்கிடை உச்சரிக்கின்றார். அது கூட உளப்பூர்வமாக அல்ல. இன்று யு.என்.பியோ அல்லலது ஜே.வி.பியோ சரத்தை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி தமது விருப்பங்களை நிறைவேற்றலாமென்கின்ற கனவுகளிலேயே இருக்கின்றன. ஆனால் தேர்தல் வரை மெளனம் காக்கும் சரத் வெற்றி பெற்று வந்தால், தனது நிஜ முகத்தைக் காட்ட முயல்வார். அப்போது யு.என்.பி மற்றும் ஜே.வி.பியினருடன் சரத்திற்கு முரண்பாடு தோன்றும். அதனால் அரசியல் அறிவு எள்ளளவுமிலலலாத சரத், இவர்களையும் இவர்களது ஆதரவாளர்களை அடக்கவும் இராணுவ நடைமுறையைத் தான் கையில் எடுப்பார். அதன் பின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரை சரத்தை எவருமே ஒன்றும் செய்து விட முடியாது. இன்னும் சில நம்மவர்கள் சிங்களவர்கள் தமக்குள் மோதிக் கொள்வது தமிழருக்கு சாதகம் தானே என்று கனவு காணுகின்றார்கள். அதுவும் தவறு. காரணம் சக சிங்களவர்களுடன் மோதலை சரத் நடத்தும் போது சிங்கள மக்களின் எதிர்ப்பைக் குறைக்க அவர் கையிலெடுக்கும் மற்றைய ஆயுதமாக தமிழர் மீதான வன்முறைகளை நடாத்தி சிங்களள மக்களை திசை திரும்பும் முயற்சியையே மேற்கொள்வார். இதற்கு நல்லதொரு உதாரணம் முன்பு ஜே.ஆர் ஆட்சிக்கு வந்ததும், சிறிமாவின் பிரஜா உரிமையை இரத்து செய்து சுதந்திரக் கட்சிக்கு மேலும் மேலும் அழுத்தம் கொடுத்து அக்கட்சியை நிர்மூலமாக்கும் நடவடிக்கைகளை மேற் கொண்டார். இதன் மூலம் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களான சிங்கள மக்களின் வெறுப்பை சம்பாதித்ததால், அவர்களைச் சமாளிக்க தமிழர்கள் மீதான வனன்முறைகளையே அவர் கட்டவிழ்த்து விட்டார். இதன் மூலம் மீண்டும் சகல தரப்பு சிங்கள மக்களின் ஆதரவையும் பெற்று, தனது இரணண்டாவது பதவிக் காலத்தை தேர்தலே நடத்தாது வெறும் சர்வசன வாக்கெடுப்பு என்ற போர்வையில் நீடிக்க வைத்தார். இதே நிலை தான் எனி சரத் வென்று வந்தாலும் வரும். கடந்த காலங்களை மறந்து, இப்போதும் நம்மவர்கள் கனவுலகில் வாழ்வது தான் வேதனையிலும் வேதனை.

  Reply
 • nallurkantha
  nallurkantha

  It is very sad that people like Sivaji still speaks about many think people are sick of it. In his interview he says we have supported that party or this party in the past.This is a lie as the Tamil leaders. They have brought the Tamil people to this level thro their mud slinging lies on their political rivals. Tamil leaders supported only UNP not SLFP. This is the history. Tamil peole are now free.They are happy. Jaffna is very active. Dont damage. Let President Rajapakse complete the economic development.

  Reply
 • Sampanthan
  Sampanthan

  Anti-Fonseka Group within the TNA prevails

  SMS leadership (Left to Right) R. Sampanthan, Mavai S. Senathirajah, and Suresh PremachandranAttempts made by the Tamil National Alliance’s SMS leadership (R. Sampanthan, Mavai S. Senathirajah, and Suresh Premachandran) – a subtle move to thrust a decision on the rest of the TNA Parliamentary Group MPs to back General (retd.) Sarath Fonseka, the decimator of Tamils’ resistance, has again come to a cropper yesterday, with the majority of the parliamentarians present stiffly resisting the move.

  The yesterday’s meeting of the TNA Parliamentary group was attended by 12 out of the 22 Members of Parliament, which was presided over by the group leader R. Sampanthan.

  It is understood that questions were raised by some concerned MPs for not extending the invitation to attend to three of its MPs, namely – the Presidential candidate M.K.Sivajilingham, his proposer N.Srikantha and also Sivananthn Kisshor – the Vanni electoral district Parliamentarian who has publicly anounced of his support to President Mahinda Rajapaksa.

  Asian Tribune learnt that the explanation was given by one of the members of the SMS leadership that the conduct of those three MPs needed to be discussed by the parliamentary group and hence they were not invited.

  This abrasive explanation failed to find favor with most of those parliamentarians. Finding that there was opposition in this regard, the SMS leadership shifted the focus to the discussion they had with Former Army Commander Sarath Fonseka and company.

  It became evident that 7 TNA MPs were quiet clear with their stance that TNA should not support either Sarath Fonseka or President Mahinda Rajapaksa.

  Though the meeting lasted for three and a half to four hours, even skipping the lunch, there was no signs of any positive inclination on the part of the majority of the MPs to accept the proposal of the SMS leadership, that subtly and ingeniously introduced the agenda with vested interest, other than taking the interest of the Tamils in particular, according to a Parliamentarian who attended yesterday’s group meeting.

  It is learnt that TNA parliamentarians Gajendrakumar Ponnampalam, Solomon Cyril, Vino Noharathalingham, Packiyaselvam Ariyanethiran, Selvarajah Kajendran, Pathmini Sithamparanathan and Kathirgamathamby Thurairetnasingham showed their opposition to back Sarath Fonseka.

  The trio forming the SMS leadership, R. Sampanthan, Mavai Senathirajah, Suresh Premachandran and the other EPRLF MP from Vanni Sivasakthi Anananthan spoke in favor of supporting Sarath Fonseka.

  Furthermore, the National list MP from Jaffna Raseen Mohammed Imam was not supportive and remain evasive.

  The notable absentees for the parliamentary group meetings were Selvam Adaikalanathan – President of the TELO, Dr. Thomas Thangathurai William, and the other nominated MP from the East Chandra Nehru Chandrakanthan.

  It is also learnt that those 3 MPs are also opposed to supporting either of the two main Presidential candidates.

  In this scenario with Senathirajah Jeyananthamoorthy has already expressed his opposition to TNA extending its support to any of the two main contenders in the Presidential election, it is now very clear that despite SMS leadership trying their best to outsmart the TNA MPs, a failed ploy similar to those ploys adopted in the earlier days by the Ilankai Thamil Arasu Kadchchi leadership in the sixties and in the beginning of the seventies, the SMS leadership remains isolated and vanquished.

  To this report, it is also important to add that M. K. Sivajilingham – the TELO Leader and his proposer N. Srikantha, Jaffna district MP have already defied the hegemony of the SMS leadership, with the former entering the Presidential fray.

  Also mentioned should be made about Thangeswary Kathiraman, MP from Batticaloa, who has already expressed her frustration over the manipulation of the SMS leadership.

  As it is, it is clear that the SMS leadership remains isolated, the stance of other Batticaloa MP Thanmanpillai Kanagasabai, who is now in India, is yet to be made known. As all the other 3 Batticaloa district TNA parliamentarians going against Fonseka, it is expected that he too would join the rest of the parliamentarians from the district.

  The only exception in the whole scenario is Sathasivam Kanagaratnam MP. He is being held at the 4th Floor of the Police Secretariat since 19 May 2009, just after the conclusion of the bloody conflict.

  The SMS leadership so far has not taken any concrete measures for his release, except Asian Tribune which continues to highlight his case and plight and urges for his release.

  Asian Tribune learnt that only two TNA parliamentarians – Vanni District MP Sivananthan Kisshor and N. Srikantha were the two who have visited him in the 4th floor.

  Furthermore, at the conclusion of the group meeting, announcement for the next group meeting was made as it will be held in the first week of January 2010, most probably when the next parliamentary sitting is scheduled on 5th January 2010.

  The SMS leadership also anounced that, they might be visting New Delhi. They said that they expect an invitation from New Delhi soon for talks about the political development in Sri Lanka and the position of the Tamils at the present context.

  In the meantime Asian Tribune also learnt that Sivajilingham, the Presidential candidate, who is presently in the United Kingdom, is expected to return to Sri Lanka on the eve of Christmas.

  Reply