இரா சம்பந்தரின் அரசியல் ஆளுமைக்கு மற்றுமொரு நெருக்கடி. தமிழ் கொங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிக்க முடிவு!!!

gajendrakumar_ponnampalamதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக்கட்சியான தமிழ் கொங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பதாக முடிவெடுத்தள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுக் குழு யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 27ல் வெளியிட்டு இருந்தது. அக்கட்சியின் தலைவர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி அதனைத் தெரிவித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டு வந்த பிரேரணையை ஏற்று அக்கட்சி இம்முடிவுக்கு வந்துள்ளது.

டிசம்பர் முற்பகுதியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்னாவை ஆதரிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தால் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் முடிவை எடுப்பதாகவும் அங்கு தெரிவித்து இருந்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும் கட்சியினதும் முடிவு ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு சாதகமாகவே அமைந்து உள்ளது. எம்கெ சிவாஜிலிங்கம் வாக்குகளைப் போடுபவர்கள் தமக்கு வாக்களின்னாவிட்டாலும் பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத் பொன்சேகா பக்கம் சாய்கையில் தமிழ் கொங்கிரஸின் முடிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பிளவு இரா சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. அத்துடன் ஏற்கனவே திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா சம்பந்தனின் திருகோணமலை மாவட்ட நகரசபை உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் துப்பாக்கி முனையில் இணைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் சந்தர்ப்பவாதத்தினாலும் இரா சம்பந்தனின் அரசியல் ஆளுமையின் பலவீனத்தாலும் பிளவுபடுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • thurai
    thurai

    ஈழத் தமிழரின் உருமைகளையும், அபிலாசைகளையும் கருத்திற்கொண்டு செயற்படும் அரசியல் கட்சிகளும், தலைமையும் மிகவும் அரிதே. பதவி மோகம் கொண்ட யாழ் மேலாதிகத்தின் ஒற்றுமையின்மையே அன்றும் இன்றும் தமிழர் படும் துன்பங்களிற்கு காரணம்.

    துரை

    Reply
  • Raman
    Raman

    I am not a Pundit. But I am a Tamil who is a true well wisher.

    I want someone analyze the current situation neutrally ( and importantly- no emotions).

    Both main candidate are same ( in what ever towards Tamils ).

    If we vote any one of the main candidates, they will claim that majority of the Tamils are supporting their policy including the massacre they staged in first half of 2009.

    What we have to focus is what can we achieve in this election. It can be
    1. Unity of Tamils
    2. Show the world that we are united in the view of separate home land and it is Genuine. ( In this way we show the world that even in post Tiger era, we stick to this. I think this is important.
    3. I guess, if we elect to vote we should vote to some one who will said they advocate for some solution .
    4. Definitely there should not be ” We will teach you a lesson. I guess we made a big blunder NOT voting last time. ( again on the basis , we will teach you a lesson.
    Options are
    1. Vote to Bahu or Sivagi lingam or any Tamil candidate :
    2. Go to the election and void the ballet paper. This should be a good option as well. We use our democratic right to reject all candidates. In this way we make sure no fraud as well.

    3. Boycotting IS NOT A GOOD OPTION.

    We know any one of the main candidate is going to come. Even if the majority of the Tamils reject them they cant do MUCH against us. ( All damages are already done ).

    The best thing we can do is just show the world where we are and we are not emotional idiots BUT level headed people who can think

    Reply
  • Veera
    Veera

    Puli Padai (LTTE) no longer an asset to Tamils But a Liability!

    · Puli Padai (LTTE – Tigers) should be dismantled Completely, because they are no longer an asset to Tamils, but a liability and a new organisation should be formed, learning from the mistake of LTTE, in the event of Sri Lankan Government refusing to grant rights to Tamils.
    · Though Talaivar (Pirabaharan) and his boys made lot of blunders, Tamil people whole heartily supported them, as they were fighting and won several battle, specially Elephant Pass battle and Katunayaka Airport attack.
    · Tigers were having a de facto state and managing it in a Totalitarian Dictatorship manner and Tamil people tolerated this because Tamil people believed one day we will get Eelam and we can run a Democratic Government and if puligal (LTTE) refused to give Democracy after establishing Eelam, Tamil people would have revolt against them.
    · Pirabaharan is puligal (Tigers) and Puligal (Tigers) is Pirabaharan and he maintained a one-man rule during the existence of Puli Padai (LTTE)
    · He made several mistakes and led us to the present position. First mistake is killing individuals. First Killing as admitted by him is that of Duraiappa. Duraiappa was a Young Mayor of Jaffna, Lawyer and defeated GG Ponnambalam at Jaffna Electorate. He was very popular among the poor people of Jaffna electorate and helped Jaffna Town people a lot. During 1970 Parliamentary Election Amirthalingam, Sivasithamparam and GG Ponnampalam lost the election. GG Ponnampalam gave up politics and abandoned Tamils and look after his wealth accumulated by him.
    · Amirthalingam and Sivasithamparam wanted to win the next election at any cost. S.J.V Selvanayagam After telling the Tamils that he is the leader who could safeguard Tamils, at the end he said, only God has to save Tamils and he could not do any thing, Tamils wasted their time with him.
    · Yogeshwaran wanted to contest Jaffna seat, but Duraiappa was a stumbling block. The Trio Amir, Siva and Yogeshwaran spread slanders about Duraiappa and branded him as Police informant and instigated Young boys to kill him, Young and immature Prabahana and Amir’s eldest son plot to kill Duraiappa and Pirabaharan carried out the murder.
    · Amirthalingam became Leader of Opposition and told Tamil people that he will get Eelam, other wise his body will come to eelam, covered by Raising Son Flag of TULF. But he ended up getting DDC- District Development Council and cheated Tamils.Jaffna Library was burned by UNP during DDC election
    · Pirabaharn and Umamaheswaran had a gunfight in Chennai and were in Madras jail. They were released on bail pending the Criminal case hearing. Pirabaharan jumped the bail and came to Jaffna and organized the Thinnaveli attack.
    · JR and UNP organized 1983 riots and Promoted Pirabaharan as Tamil leader and Indra Gandhi gave Training and Arms.
    · After the unfortunate death of Indra Gandhi, Rajiv Gandhi came to power and Pirabaharan was about to lose Vadamarachi Operation and Rajiv Gandi Saved him by intervening and send Indian Army and signed the Indo Sri Lanka agreement.
    · After the Indian Army leaving Sri Lanka with the joined action of LTTE and Premadasa, Pirabhan Killed Arirthalingam, Premadasa and Rajiv Gandhi. These are major mistakes on the one-man ruler.
    · LTTE chased out Muslims from Jaffna and Karuna and Karikalam led this Muslim eviction because some Muslim thugs and home guards attacked Tamils in Batticaloa. Karuna and LTTE killed Muslims civilians in Mosque.
    · Puli Padai (LTTE) also forcibly evicted half a million Tamils from Jaffna Peninsula and herded them into Vanni after the defeat of LTTE in Jaffna during 1995.
    · LTTE killed Premadasa and helped Chandrika to come to power and Chandrika is equally bad as Premadasa. Chandrika captured Jaffna and started war against LTTE and ended up in lousing Vanni and Elaphatpass.
    · LTTE forced thirteen EROS MPs to resign at gunpoint after 1989 election and allowed Douglus Devananda to become a minister.
    · Instead of fighting one enemy at a time, Pirabaharan fought ten enemies at a time and he only wanted money and Children of Tamils and never seek or listen their advice
    · Whether we like it or not Mahinda will be the leader for very many years and he will be the next one-man ruler of whole of Sri Lanka. No more Democracy for Singhalese, Tamils and Muslims.
    · LTTE used Tamils as human shield during the 2009 Vanni War and prevented Tamils leaving war zone at gun point (Taliban did not do this in Swat Valley in 2009) and gave a chance to Singhalese Army to Killed several innocent Tamils and several are wounded and disabled. LTTE said that they are the sole representative of Tamil and sole protectors of Tamils and now say that only god can save Tamils. Tamils have wasted 30 years with LTTE for nothing
    · It will be a good tactics for Tamils to work with Mahinda to release 300,000 Tamils and Thousands of Tiger Boys and Girls trapped because of Pirabaharan’s and Puli Padai’s –(LTTE) mistakes.
    · Tamils should join Sri Lankan Army and Police in large numbers, the Diaspora Tamils Boys and Girls should join UK, USA, Australia, Canada, NATO, Indian and European Army. WITH OUT A TAMIL ARMY, TAMILS HAVE NOTHING.
    · Educated and Diaspora Tamils and Tamils living in Sri Lanka should get involved Sri Lankan National Political Parties, sixty years of experience shows regional parties getting involved in Parliamentary Politics are of no use and detrimental to Tamils other wise Karuna, Pillaiyan and Douglus will be our Tamil Leaders. Regional Parties may get involved in Local and Provincial Politics.

    Reply
  • சாமி
    சாமி

    தமிழ் மக்களுக்கு ஒரு புதிய முற்போக்கான அரசியல் இயக்கம் உருவாகவேண்டும். அனேகமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகி இருப்பார்கள் என்று கூறுகிறார்கள். ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்கள் இல்லாத சூழ்நிலை உருவாகவேண்டுமேன்பதையே மக்கள் எதிர்பார்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் கூட்டமைப்பு உடைந்துவிடும். சரத் வந்தால், கருணா, பிள்ளையான், டக்ளஸ் ,அவர்களின் பாடும் சரி.

    Reply
  • thurai
    thurai

    அன்பின் ராமன்,

    இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழர் வேண்டுவது அடிபடை உருமைகழும் அமைதியான வாழ்வுமே தவிர தமிழீழமல்ல. வடக்கு முதல் தெற்குவரை குடிகொண்டுள்ள தமிழரின் பாதுகாப்பை இலங்கையரசை விட வேறு எவராலும் கொடுக்க முடியாது.

    தமிழினம் எதிரிகளின் சதியின் வலையில் விழுந்து தவிக்கும் காலமிது. தன்னைத்தானே ஆழவேண்டுமானால், தமிழர் ஏற்ரத்தாழ்வு அற்ர சமூகமாக மாறவேண்டும். புலத்தில் வாழும் தமிழர் மேல்நாடுகளின் அரசியல் அமைப்பில் சமூக பொருளாதார ரீதியில் ஒன்றுபட்டு தமிழீழக் கோசம் போடுகின்றார்கள். இவர்களின் குரல் இலங்கைத் தமிழரின் குரலாக எடுப்பதைவிட, வடக்குத் தமிழரின் ஆதிக்க வெறி குரலாகவே கருதலாம்.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஆமா இவர்களின் பகிஸ்கரிப்பு அறிவிப்பை ஏற்றுச் செயற்பட, இவர்களின் பின்னால் எத்தனை தொண்டர்கள் உள்ளார்களென்பதாவது இவர்களுக்குத் தெரியுமா??

    Reply
  • jeeva
    jeeva

    காங்கிரசின் பகிஷ்கரிப்பை ஏற்றுச் செயற்பட தொண்டர்கள் தேவையில்லை, வாக்காளர்கள் போதும். மேலும் புலத்தில் 5பேரில் இருந்து 27பேர்வரை சேர்ந்து கடந்த 30 வருடங்களாக ”சந்திப்புகளும்”, ”இயக்கங்களும்” நடத்திகிறார்கள். அவர்களுடன் ஒப்ப்பிடும் போது தமிழ்க்காங்கிரஸ் பரவாயில்லைத்தானே?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    jeeva,
    ஒரு கட்சியின் கோரிக்கையை ஏற்று அதன்படி நடக்க வேண்டுமாயின், ஒன்று இந்தக் கட்சியின் தொண்டனாகவோ அல்லது விசுவாசியாக இருந்தால்த் தான் அதனை ஏற்றுக் கொள்வார்கள். இல்லாமல் இலங்கையிலுள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் ஆளாளுக்கு ஒரு அறிக்கை விட அதன்படி நடக்க மக்கள் ஒன்றும் மாக்களில்லையே. புலத்தில் கடந்த 30 வருடங்களாக அப்படி யார் சந்திப்புக்களும் கூட்டங்களும் நடாத்தினார்கள்?? கனவுலகிலிருந்து எழுதுகின்றீர்களா?? சுமார் 15 வருடங்களுக்குள் தான் இந்தச் சந்திப்புகளோ கூட்டங்களோ புலத்தில் இடம் பெறத் தொடங்கின. ஆனால் நீங்கள் குறிப்பிடும்படி 5 பேரோ 27 பேரோ சேர்ந்தல்ல அதற்கு மேலே கூடித்தான் சந்திப்புகளை நடாத்தினார்கள். அந்தச் சந்திப்புகளோ கூட்டங்களோ நடந்து விடக் கூடாதென்பதன் பயத்தினால்த் தான் சிலர் அக்கூட்டங்களுக்கோ சந்திப்புகளுக்கோ செல்ல வேண்டாமென பொதுமக்களை அச்சுறுத்தியும் மீறிச் சென்றால் தாக்குதலுக்குள்ளாவீர்கள் என்றும் மிரட்டியும் பார்த்தனர். அந்தக் கூட்டங்களை நடாத்தியோர் கூட பொதுமக்களை ஏமாற்றி எவ்வாறு தங்கள் பணச் சுருட்டல்களை நடாத்தலாமென்பதற்காக நடத்தாமல் மக்களைச் சுரண்டி வாழ்ந்த பல பினாமிகளின் முகத்திரைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரவே நடாத்தினார்கள். அதனால்த் தான் பினாமிகளும் அப்படியான சந்திப்பகளைத் தடுப்பதில் தீவிரம் காட்டினார்கள்.

    Reply
  • jeeva
    jeeva

    பார்த்திபன்
    நீங்கள் சொல்வது போல் ஒரு கட்சியின் தேர்தல் கோரிக்கைகளை ஏற்று அதன்படி நடக்க (வாக்களிக்க) வேண்டுமாயின் அதன் தொண்டனாக அல்லது விசுவாசியாக இருக்க வேண்டும் என்கிறீர்கள். அவ்வாறு பார்த்தால் நீங்கள் ‘விரும்புவது’ போல இம்முறை வாக்களிக்க மஹிந்தா விசுவாசியாக அல்லது ‘தொண்டனாக’ இருக்கவேண்டுமா?அப்போ மக்களை சுயமாக சிந்திக்க விட வேண்டும், கொள்கைகளை சீர்தூக்கிப்பார்க்க அனுமதிக்க வேண்டும் என சொன்னதெல்லாம் சும்மா கதை விடல்களா?
    மிக நல்லது, அவ்வாறே ஆகட்டும்!

    மேலும் நான் குறிப்பிட சந்திப்புகள்/இயக்கங்கள் எனக்குறிப்பிட்டதில் ஆரம்பத்தில் பரிசில் இருந்து இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எஃப் (1984 இல இருந்து இயங்கியது) முதல் 20 வருடங்களாக நடந்துவரும் பெண்கள்/இலக்கிய சந்திப்புகள் ஊடாக கடந்த 35 வருடங்களாக இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் வரை அடக்கம். நீங்கள் ஏதோ கடந்த 15 வருடங்கள் என சொல்கிறீர்கள். நான் புலம்பெயர்ந்து ஏறக்குறைய 25 வருடங்களாகிறது. நானே இவ்வாறான ’இயக்கங்களின்’ அங்கத்தினரை அறிந்து வைத்திருக்கிறேன். நீங்கள் பெண்கள்/இலக்கிய சந்திப்புகளை சொல்வீர்களாயின் அவை கடந்த 20 வருடங்களாக நடப்பதாக அதன் ஏற்பாட்டாளர்கள் சொல்லி இருக்கிறார்கள் (இலக்கியச்சந்திப்பு -1988 இல் ஆரம்பித்தது,பெண்கள் சந்திப்பு – அதேகாலப்பகுதியில் என நினைக்கிறேன்)

    மக்கள் மாக்களா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். நீங்கள் ஏன் தொண்டனா விசுவாசியா என்கிறீர்கள்? அவன் கட்சி அவனுக்கு எத்தனை தொண்டன் தோழன் என அவன் பார்த்துக்கொள்ளட்டுமே?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Jeeva,
    நீங்கள் நன்றாக மொட்டந்தலைக்கும் முழந்தாலுக்கும் முடிச்சுப் போடுகின்றீர்கள். தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகளை கேட்டு அதன்படி நடப்பது பற்றித் தான் நான் சொன்னேன். மகிந்தவிற்கு வாக்களிப்பதற்கு அவரின் விசுவாசியாகவோ தொண்டனாகவோ வாக்களிக்கும் தமிழர்களிருந்தால் தமிழ்க்கட்சிகள் அப்புறம் அறிக்கை விட வேண்டிய அவசியமே இல்லையே. சமீபத்தில் தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் நடந்த தேர்தல்களின் தமிழீழ தீவிர விசுவாசி ராமதாஸ் தனது கட்சித் தொண்டர்களை தேர்தலில் 49 ஓவிற்கு போடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இரு தொகுதிகளிலும் மொத்தமாக 49 ஓவிற்கு விழுந்த வாக்குகள் 38. இதனால் பல கட்சிகள் பா.ம.கவிற்கு இரு தொகுதிகளிலும் உள்ள தொண்டர்களின் எண்ணிக்கை 38 என எடுக்கலாமா எனக் கிண்டல் செய்தனர். இந்த நிலையில்த் தான் இன்று தமிழ் காங்கிரஸ் கட்சியும் உள்ளதென்பதையும் சுட்டிக் காட்டினேன்.

    அதுபோல் ஒரு அரசியல்க் கட்சி விடயத்திற்கு இப்போ தமிழ்ச்சங்கங்களையும் மாதர் சங்கங்களையும் துணைக்களைக்கின்றீர்கள். இவற்றிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் என்ன சம்பந்தம்?? நானும் 26 வருடங்களுக்கு மேலாக சுவிசில் இருக்கின்றேன். ஆரம்பத்தில் புளொட் இயக்கம் தான் பல நாடுகளில் செயற்பட்டன. அப்போது நீங்கள் குறிப்பிட்டது போல் பெரிதாகச் சந்திப்புகளோ இயக்கக் கூட்டங்களோ நடைபெற்றது கிடையாது. அவர்கள் அகதி முகாம்களுக்குச் சென்று ஆயுதக் கொள்வனவிற்கென்று பணம் சேகரிக்க மட்டுமே வந்து போனார்கள். அத்துடன் இலங்கை நிலவரங்களை அறிய தொலைபேசிச்சேவை ஒன்றை நடாத்தினார்கள். குறிப்பிட்ட சில இலக்கங்களுக்கு அழுத்தினால் அன்றைய இலங்கை நிலைவரம் பற்றிய செய்திகளைக் கேட்கலாம். அப்போது எந்தவொரு ஊடகங்களும் புலத்தில் இயங்காத காலகட்டமது.

    Reply