புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் ; அமைச்சர்கள் 37; பிரதி அமைச்சர்கள் 39

newcabinet.jpgபுதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர்.

“புதிய அமைச்சர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒருவரோடு ஒருவர் பகைத்துக்கொள்ளாது ஒற்றுமையாகச் செயற்பட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவேண்டும்”  என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.  ஜனாதிபதி ஆற்றிய உரையின்போதே இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

“மக்கள்  தமது தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். மக்களுக்கு சேவை செய்யவே அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை உணாந்து செயற்படுவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை அமைச்சர்கள் நிறைவேற்றவேண்டும். அமைச்சர்களின் நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை பொறுப்புக்கூறவேண்டும்” என்றும் ஜனாதிபதி கூறினார்.

புதிய அமைச்சரவையில் மூன்று முஸ்லிம்களும் ஒரு தமிழரும் இடம்பெற்றுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசியும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராக ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சராக ரிசாத் பதியுதீனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேசமயம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் பிரதியமைச்சர் பதவிகளில் இரண்டு தமிழரும் ஒரு முஸ்லிமும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் முத்துசிவலிங்கம், விநாயக மூர்த்தி முரளீதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ் புல்லாஹ் ஆகியோரே அவர்களாவர்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களின் பட்டியல்

1. பிரதமர் தி.மு. ஜயரத்ன – புத்தசாசனம், மதவிவகாரம்
2. ரட்ணசிறி விக்ரமநாயக்க – அரச முகாமைத்துவம், மறுசீரமைப்பு
3. நிமல் சிறிபால டி சில்வா – நீர்ப்பாசனம், நீர்வள முகாமைத்துவம்
4. ஏ.எச்.எம். பெளஸி – இடர் முகாமைத்துவம்
5. மைத்திரிபால சிறிசேன – சுகாதாரம்
6. சுசில் பிரேம ஜயந்த – எரிபொருள் தொழிற்துறை
7. தினேஷ் குணவர்தன – நீர்வழங்கல், வடிகாலமைப்பு
8. டக்ளஸ் தேவானந்தா – பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில்
9. ஏ.எல்.எம். அதாவுல்லா – உள்ளூராட்சி, மாகாண சபைகள்
10. டி.யூ. குணசேகர – புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு
11. ரிசாத் பதியுதீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தகம்
12. விமல் வீரவன்ச – நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு, பொது வசதிகள்
13. பஷில் ராஜபக்ஷ – பொருளாதார அபிவிருத்தி
14. பாட்டலி சம்பிக்க ரணவக்க – மின்சக்தி எரிசக்தி
15. பி. தயாரத்ன – அரசவளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி
16. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – வெளிவிவகாரம்
17. டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன – பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்
18. சுமேதா ஜீ. ஜயசேன – பாராளுமன்ற விவகாரம்
19. மில்றோய் பெர்னாண்டோ – மீள்குடியேற்றம்
20. ஜீவன் குமாரதுங்க – தபால் தொலைத் தொடர்புகள்
21. பவித்ரா வன்னியாரச்சி – தேசிய மரபுரிமைகள், கலாசாரம்
22. அநுர பிரியதர்ஷன யாப்பா – சுற்றாடல்
23. திஸ்ஸ கரலியத்த – சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம்
24. அதாவுட செனவிரத்ன – நீதி
25. காமினி லொக்குகே – தொழில் உறவுகள் திறன் அபிவிருத்தி
26. பந்துல குணவர்தன – கல்வி
27. மஹிந்த சமரசிங்க – பெருந்தோட்ட கைத்தொழில்
28. ராஜித சேனாரத்ன – கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி
29. பியசேன கமகே – சுதேச வைத்தியம்
30. எஸ். பி. நாவின்ன – தேசிய மொழி, சமூக ஒருங்கமைப்பு
31. ஜனக பண்டார தென்னக்கோன் – காணி, காணி அபிவிருத்தி
32. பீலிக்ஸ் பெரேரா – சமூக சேவைகள்
33. சி.பி. ரத்நாயக்க – விளையாட்டுத்துறை
34. மஹிந்த யாப்பா அபேவர்தன – விவசாயம்
35. குமார வெல்கம – போக்குவரத்து
36. டளஸ் அழகப்பெரும – இளைஞர் விவகாரம் வேலைவாய்ப்பு
37. ஜோன்சன் பெர்னாண்டோ – கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம்

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பிரதியமைச்சர்களின் பட்டியல்

1. சாலிந்த திசாநாயக்க – பெருந்தோட்ட கைத்தொழில்
2. டிலான் பெரேரா – பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்
3. சுசந்த புஞ்சி நிலமே – கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி
4. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன – பொருளாதார அபிவிருத்தி
5. சந்ரசிறி கஜதீர -நிதி, திட்டமிடல்
6. ஜகத் புஷ்பகுமார – விவசாயம்
7. டி. பி. ஏக்கநாயக்க – கல்வி
8. மஹிந்த அமரவீர – சுகாதாரம்
9. ரோஹித அபேகுணவர்தன – துறைமுகம், விமான சேவைகள்
10. எஸ். எம். சந்ரசேன – நீர்ப்பாசனம், நீர்வள முகாமைத்துவம்
11. குணரத்ன வீரக்கோன் – தேசிய மரபுரிமை, கலாசாரம்
12. மேர்வின் சில்வா – தகவல், ஊடகத்துறை
13. பண்டு பண்டாரநாயக்க – சுதேச வைத்தியத்துறை
14. ஜயரத்ன ஹேரத் – கைத்தொழி, வர்த்தகம்
15. தயாஸ்ரீ த திசேரா – துறைமுகம், விமான சேவைகள்
16. துமிந்த திசாநாயக்க – தபால், தொலைத் தொடர்புகள்
17. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – பொருளாதார அபிவிருத்தி
18. லசந்த அலகியவன்ன – நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள்
19. ரோஹண திசாநாயக்க – போக்குவரத்து
20. எச். ஆர். மித்ரபால – கால்நடை அபிவிருத்தி
21. நிர்மல கொத்தலாவல – பெருந்தெருக்கள்
22. பிரேமலால் ஜயசேகர – மின்சக்தி, மின்வலு
23. கீதாஞ்சன குணவர்தன – வெளிவிவகாரம்
24. விநாயகமூர்த்தி முரளிதரன் – மீள்குடியேற்றம்
25. இந்திக்க பண்டாரநாயக்க – உள்ளூராட்சி, மாகாண சபைகள்
26. முத்து சிவலிங்கம் – பொருளாதார அபிவிருத்தி
27. சிறிபால கம்லத் – காணி, காணி அபிவிருத்தி
28. டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க – இடர் முகாமைத்துவம்
29. சந்ரசிறி சூரியாரச்சி – சமூக சேவைகள்
30. நியோமல் பெரேரா – கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம்
31. சரத் குணரத்ன – அரச வளங்கள், தொழில் முயற்சி
32. நந்திமித்ர ஏக்கநாயக்க – உயர்கல்வி
33. நிருபமா ராஜபக்ஷ – நீர்வழங்கல், வடிகாலமைப்பு
34. லலித் திசாநாயக்க – தொழில்நுட்பம், ஆராய்ச்சி
35. சரண குணவர்தன – எரிபொருள் துறை
36. ரெஜினோல்ட் குரே – நீதி
37. விஜித் விஜயமுனி சொய்சா – புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
38. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா – சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகாரம்
39. வீரக்குமார திசாநாயக்க – பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில் அபிவிருத்தி

Following are the Ministers and their portfolios:
 
 Minister – Portfolio

 His Excellency the President Mahinda Rajapaksa
(1) Defence
(2) Finance & Planning
(3) Ports & Aviation
(4) Highways
D. M. Jayaratne –Buddhasasana & Religious Affairs
Ratnasiri Wickramanayake –Public Management & Reforms
Nimal Siripala de Silva – Irrigation & Water Resource Development
A. H. M. Fowzie – Disaster Management
Maithripala Sirisena – Health
Susil Premajayantha – Petroleum Industries
Dinesh Gunawardena – Water Supply & Drainage
Douglas Devananda – Traditional Industries & Small Enterprise Development
A. L. M. Athaullah – Local Government & Provincial Councils
D. E. W. Gunasekera – Rehabilitation & Prison Reforms
Rishad Bathiyutheen – Industry & Commerce
Wimal Weerawansa – Construction, Engineering Services,  Housing & Common Amenities
Champika Ranawaka – Power & Energy
Basil Rajapaksa – Economic Development
P. Dayaratne – State Resources & Enterprise Development
(Prof) G. L. Peiris – Foreign Affairs
John Seneviratne – Public Administration & Home Affairs
(Mrs.) Sumedha Jayasena – Parliamentary Affairs
Milroy Fernando – Resettlement
Jeewan Kumaratunga – Post & Telecommunication
Pavithra Wanniarachchi – National Heritage & Cultural Affairs
Anura Priyadarshana Yapa – Environment
Tissa Karaliyadde – Child Development & Women’s Affairs
Athauda Seneviratne – Justice
Gamini Lokuge – Labour Relations & Productivity Improvement
Bandula Gunawardena – Education
Mahinda Samarasinghe – Plantation
Rajitha Senaratne – Fisheries & Aquatic Resources
Piyasena Gamage – Indigenous Medicine 
S. B. Navinne – National Languages & Social Integration
Janaka Bandara Tennekoon – Lands & Land Development
Felix Perera – Social Services
C. B. Rathnayake – Sports
Mahinda Yapa Abeywardena – Agriculture
Kumara Welgama – Transport
Dullas Alahaperuma – Youth Affairs
Johnston Fernando – Co-operatives & Internal Trade
 
Following are the Deputy Ministers and their portfolios:

 Deputy Minister

Salinda Dissanayake – Plantation and Industries 
Dilan Perera – Public Administration and Home Affairs
Susantha Punchinilame – Fisheries and Aquatic Resources Development 
Lakshman Yapa Abeywardena – Economic Development
Chandrasiri Gajadeera – Finance and Planning
Jagath Pushpakumara – Agriculture
T. B. Ekanayake – Education
Mahinda Amaraweera – Health
Rohitha Abeygunawardena – Ports and Aviation
S. N. Chandrasena – Irrigation and Water Resources Management
Gunaratne Weerakoon – National Heritage and Cultural Affairs
Mervyn Silva – Mass Media and Information
Pandu Bandaranayake – Indigenous Medicine
Jayaratna Herath – Industry and Commerce
Dayashritha Tissera – Ports and Aviation
Duminda Dissanayaka – Posts and Telecommunication
Ranjith Siyambalapitiya – Economic Development
Lasantha Alagiyawanne – Construction, Engineering Services, Housing and Common Amenities
Rohana Dissanayake  – Transport
H. R. Mithrapala – Livestock Development
Nirmala Kothalawala – Highways
Premalal Jayasekera – Power and Energy
Geethanjana Gunawardena – External Affairs
Vinayagamoorthy Muralitharan – Resettlement 
Indika Bandaranayake – Local Government and Provincial Councils
Muthu Sivalingam – Economic Development
Siripala Gamlath – Lands and Land Development
W. B. Ekanayake – Disaster Management
Chandrasiri Suriyarachchi – Social Services
Neomal Perera – Co-operatives and Internal Trade 
 Sarath Gunaratne – State Resources and Enterprise Development
Nandimithra Ekanayake – Higher Education
Nirupama Rajapaksa – Water Supply and Drainage
Lalith Dissanayake – Technology and Research
Sarana Gunawardena – Petroleum Industries
Reginold Cooray – Justice
Vijithmuni Zoysa – Rehabilitation and Prison Reforms
N. L. A. M. Hisbullah – Child Development and Women’s Affairs
Weerakumara Dissanayake – Traditional Industries and Small Enterprise Development

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • செல்வன்
    செல்வன்

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு எந்த ஒரு அமைச்சு பதவியும் வழங்கப்படவில்லை. தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நிலை ஒன்று தரப்படவில்லை என்ற காரணமே அவர் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளாமைக்கான காரணம் எனக்கூறப்படுகிறது. எனினும் உரிய காரணம் தெரியவரவில்லை. ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சு பதவி வழங்கப்படும் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

    Reply
  • Ajith
    Ajith

    Ministers
    Just have a look at the list of the appointed ministers. This is a clear illustration of how government is going to treat tamils. Two muslims and one tamil out of 41 ministerial post. Two tamils and one muslim deputies. Key ministerial posts were given to Sinhalese.None for minorities from a President who said there is no minorities in this country. President Rajapkase implements what Sarath Fonseka said, “Satisfy yourself with whatever we give, otherwise get out”. Well done President!
    1. எச்.எம்.பௌசி – அனர்த்த முகாமைத்துவம்
    2. டக்ளஸ் தேவாநந்தா – மரபுரீதியான தொழில் அபிவிருத்தி மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி
    3. ரிஷாட் பதியூன் – கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை
    Deputy Ministers
    1. விநாயகமூர்த்தி முரளிதரன் – மீள் குடியேற்த்துறை
    2. Hon. Muthu Sivalingam Economic Development
    3. Hon. N. L. A. M. Hisbullah Child Development and Women’s Affairs

    Reply
  • நந்தவனம்
    நந்தவனம்

    அஜித் நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள். வடக்கு கிழக்கில் எத்தனை தமிழ் பிரதிநிதிகள் மகிந்தா கட்சியில் போட்டிபோட்டு வென்றார்கள்? அனைவரும் தமிழ் தேசிக்காய் கூத்தமைப்பை தெரிவு செய்து விட்டு இப்ப கணக்கு கேக்கிறியள்! மகிந்தாவுக்கு ஆதரவு கொடுத்து ஒரு 15 தமிழ் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தாலும் பறவாயில்லை! இருந்த கதிர்காமர் நீலன் ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை என்று பட்டியல் வரிசையில் போட்டுத்தள்ளிப்போட்டு தமிழர்களை அரசு எப்படி நடாத்துகிறது என்று இங்கிலிசிலை கதையளக்கிறியள்!

    Reply
  • pandithar
    pandithar

    டக்ளஸ் கில்லாடி என்பதை காட்டுவார் போல் இருக்கு….
    கிடைத்ததை எடுத்து நினைத்ததை சாதிக்க அவரைப்போல் யார்தான் உள்ளார்கள்?……

    வாழ்த்துக்கள்….

    Reply
  • kalaignar
    kalaignar

    அளிக்கப்பட்ட மொத்த 52 வீதமான வாக்குகளில், செல்லுபடியானவையும் நிராகரிக்கப்பட்டவையும் சரி சமமாகவே இருந்தன. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் நிராகரிக்கப்பட்டவை 596,972.

    அநுராதபுரம் மாவட்டம் அளிக்கப்பட்டவை 457,137 – நிராகரிக்கப்பட்டவை 37,236 0. பொலநறுவை மாவட்டம் அளிக்கப்பட்டவை 186,269 – நிராகரிக்கப்பட்டவை 14,798. நுவரெலியா மாவட்டம் அளிக்கப்பட்டவை 303,470 – நிராகரிக்கப்பட்டவை 37.236. யாழ்ப்பாணம் மாவட்டம் அளிக்கப்பட்டவை 168,277 – நிராகரிக்கப்பட்டவை 19,774.

    மட்டக்களப்பு மாவட்டம் அளிக்கப்பட்டவை 195,367 – நிராகரிக்கப்பட்டவை 14,749. வன்னி மாவட்டம் அளிக்கப்பட்டவை 117,185 – நிராகரிக்கப்பட்டவை 10,208. கேகாலை மாவட்டம் அளிக்கப்பட்டவை 388,420 – நிராகரிக்கப்பட்டவை 25,965. களுத்துறை மாவட்டம் அளிக்கப்பட்டவை 544,606 – நிராகரிக்கப்பட்டவை 51,751. பதுளை மாவட்டம் அளிக்கப்பட்டவை 387,847 – நிராகரிக்கப்பட்டவை 24,169. புத்தளம் மாவட்டம் அளிக்கப்பட்டவை 280,354 – நிராகரிக்கப்பட்டவை 21,562.

    அம்பாந்தோட்டை மாவட்டம் அளிக்கப்பட்டவை 289,294 – நிராகரிக்கப்பட்டவை 11,240. கம்பஹா மாவட்டம் அளிக்கப்பட்டவை 980,467 – நிராகரிக்கப்பட்டவை 50,234. குருநாகல் மாவட்டம் அளிக்கப்பட்டவை 725,566 – நிராகரிக்கப்பட்டவை 53,130. மாத்தறை மாவட்டம் அளிக்கப்பட்டவை 341,871 – நிராகரிக்கப்பட்டவை 14,289.

    மொனராகலை மாவட்டம் அளிக்கப்பட்டவை 169,640 – நிராகரிக்கப்பட்டவை 10,491. இரத்தினபுரி மாவட்டம் அளிக்கப்பட்டவை 480,395 நிராகரிக்கப்பட்டவை 37,022. திகாமடுல்லை மாவட்டம் அளிக்கப்பட்டவை – 272,462 நிராகரிக்கப்பட்டவை 15,516. கொழும்பு மாவட்டம் அளிக்கப்பட்டவை 989,729 – நிராகரிக்கப்பட்டவை 50,354. காலி மாவட்டம் அளிக்கப்பட்டவை 485,401- நிராகரிக்கப்பட்டவை 24,013.

    மாத்தளை மாவட்டம் அளிக்கப்பட்டவை 215,060 – நிராகரிக்கப்பட்டவை 19,310. கண்டி மாவட்டம் அளிக்கப்பட்டவை 599,226 – நிராகரிக்கப்பட்டவை 58,333. திருகோணமலை மாவட்டம் அளிக்கப்பட்டவை 43,454 – நிராகரிக்கப்பட்டவை 3,483.

    Reply
  • செல்வன்
    செல்வன்

    கண்டி மாவட்டத்திற்கு அமைச்சுப் பொறுப்புக்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்ற காரணத்தினால் அமைச்சுப் பொறுப்புக்களை தற்போதைக்கு வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். நாவலப்பிட்டி தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே, அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் காரணமாக கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய எவருக்கும் அமைச்சு அல்லது பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை.ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பின்னர் அமைச்சுப் பொறுப்புக்கள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

    கண்டி மாவட்டத்தில், கெஹலிய ரம்புக்வெல்ல, எஸ்.பி திஸாநாயக்க, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் சரத் அமுனுகம உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Reply
  • Ajith
    Ajith

    நந்தவனம்:
    அஜித் நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள். வடக்கு கிழக்கில் எத்தனை தமிழ் பிரதிநிதிகள் மகிந்தா கட்சியில் போட்டிபோட்டு வென்றார்கள்? அனைவரும் தமிழ் தேசிக்காய் கூத்தமைப்பை தெரிவு செய்து விட்டு இப்ப கணக்கு கேக்கிறியள்! மகிந்தாவுக்கு ஆதரவு கொடுத்து ஒரு 15 தமிழ் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தாலும் பறவாயில்லை! இருந்த கதிர்காமர் நீலன் ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை என்று பட்டியல் வரிசையில் போட்டுத்தள்ளிப்போட்டு தமிழர்களை அரசு எப்படி நடாத்துகிறது என்று இங்கிலிசிலை கதையளக்கிறியள்!
    Ajith:
    Mr. Nanthanm, I live in the same world as you. I am not talking to you in English, I am writing my comment in English because that is the option (Read the optopns(English, பாமினி,உச்சரிப்பு)I am fluent in to express my opinion. Its good that you understood what I wrote. It is not the language that I write, it is the subject and relevance is important. First you should respect the language and people. For example, see below your language “தமிழ் தேசிக்காய் கூத்தமைப்பை”. You wrote very good tamil in the start but here you lost your control intentionally to disgrace the tamil community. TNA is democratically elected by people, unlike using undemocratic and criminal ways used by Mahinda party in various parts during this election. Is it wrong tamil people TNA? Can you tell me how many tamils were elected from Sinhala people under Sinhala parties? Why couldn’t Sinhala people cannot elect tamil candidates under any party in Sri Lanka. How come he appoint unelected criminals as Ministers. You must understand why tamils still do not want to elect Mahinda party? Over 100,000 tamils were killed within last three years by Mahinda. It is shame that you expect that tamils should elected a war criminal.

    Reply
  • நந்தவனம்
    நந்தவனம்

    அஜித் அவர்களுக்கு! தமிழ் அமைச்சர்கள் நிறைய வேண்டும் என்றால் நாடுகடந்த சுடலைக்கு மன்னிக்கவும் தமிழீழத்திற்கான தேர்தல்இருக்கவே இருக்கிறது! அகதிகளாக மக்கள் ஒருவேளை உணவுக்கு அல்லல் பட்ட போதும் ஆயிரம் பவுண்கள் கட்டி நாடுகடந்த தமிழீழ தேர்தல் வைத்து அதில் உங்கள் விருப்பப்படியான தமிழ் அமைச்சர்களை தெரிவு செய்து விட்டு மாறி மாறி ஒவ்வொரு தமிழ் அமைச்சர்களும் மற்றவரின் தலையில் பேன் பார்க்கலாம். மண்டையில் முடி இல்லாது போனால் இருக்கும் முடியை எண்ணலாம்!

    Reply
  • thurai
    thurai

    ஈழத்தமிழரின் அரசியல் ஆளநினைப்பதும் அமைச்சராவதும். புலிகளின் தமிழீழ விடுதலையென்பது பணம் பறிப்பதும்
    பலி கொடுப்பதும். சிங்கள அரசியல் கட்சிகழுடன் சேர்ந்து அமைச்சராகி தமிழர்களிற்குச் சேவை செய்தால் அவர்கள் துரோகிகள் என்பதும், தமிழர் கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் போல் அவர்கள் தமிழர்களின் தேவைகளை அறிந்தவர்களென்றோ அல்லது பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வல்லமை கொண்டவர்களென்றோ அர்த்தமாகாது.

    தேர்தல் முடிந்தபின்னர் அனைத்து கட்சிகழும் ஒன்று சேர்ந்து இனரீதியான பாகுபடின்றி நாட்டின் முன்னேற்ரத்திற்கு செயற்பட வேண்டும். இதில் தமிழ் அரசியல்வாதிகளே அவதானமாக நடக்க வேண்டும். சிங்களவ்ர்களை குறை கூறுவதும் குற்ரம் காண்பதும் அர்த்தமற்ர செயலாகும்.
    துரை

    Reply
  • thurai
    thurai

    நாடுகடந்த அரசின் அங்கத்தவர்களிற்கு முக்கியமான தகைமைகளிலொன்று தமிழ் தேசியத்தை ஆதரிப்பவராக இருக்க வேண்டுமென்பதேயாகும். இவர்கள் வசிக்கும்நாட்டில் வாழும் தமிழர்களிற்கு இதுவரை காலமும் என்ன சேவைகள் செய்தவ்ர்களென்றோ, செய்யப் போகின்றார்களென்பதோ முக்கியமல்ல.

    இவர்களிற்குத்தான் மே 2 ம் திகதி வாக்குக் கேட்கின்றார்கள். ஆனால் தமிழீழப் பிரியர்கள் என்பதே இவர்களின் ஒரே தகுதியாகும். எனவே இலங்கை அரசியலை குற்ரம் காணுமுன் நாகரீக உலகில் நடக்கும் ஈழத்தமிழர்களின் தொலக்காட்சி அரசியலையும் அதன் கோமாளித்தனத்தையும் சிறிது சிந்தித்தால் மிகவும் நல்லது.

    துரை

    Reply
  • Ajith

    Mr Nanthavanam,

    Did any one asked for a ministerial post? It is people like you go behind Rajapakse expectinng ministerial posts to fill your pockets. It is people like you abduct the refugees and asking ransom or murdering their children and dump in the soil. For you all abduction of tamils or murdering them is a service to Rajapakse. Both ministers Douglas and Karuna were given ministerial posts becuase they are the owners of white van company serving to Sinhala Gang Leaders Mahinda, Gotapaya and Basil. MPs. Joseph Pararajasingham, Raviraj, Maheswaran, Sivaram, Nimalarajan, Lasatha all were murdered by these gangs. That is the fact and real.

    Reply
  • pandithar
    pandithar

    யாழ் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 19000 இதில் 75 வீதமானவை வெற்றிலைக்கு அளிக்கப்கட்டவை. சுமார் 14000 வாக்குககள் அவை. அனைத்’அனைத்தம் பாமர மக்கள் அளித்த வாக்குகள். ஆகவே யாழில் அமைச்சர் டக்ளஸ் பக்கமே மக்கள் இருப்பதாக தோன்றுகிறது.

    வாழ்த்துக்கள்./ ஆனாலும். உங்கள் மீது பழிகள் சுமத்தப்படுகின்றன. அவைகளை துடைக்க நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள்?

    Reply
  • rohan
    rohan

    //யாழ் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 19000 இதில் 75 வீதமானவை வெற்றிலைக்கு அளிக்கப்கட்டவை. சுமார் 14000 வாக்குககள் அவை.//

    இத் தகவல் எப்படி வெளி வந்தது?

    Reply