அமைச்சரவையின் எண்ணிக்கை 42ஆக அதிகரிக்கப்படலாம்- புன்னியாமீன்

sl-par.bmpஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது புதிய அமைச்சரவையை மேலும் சில உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம் விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 23ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 37 பேரும், பிரதியமைச்சர்கள் 39 பேரும் நியமிக்கப்பட்டனர்.பாதுகாப்பு, நிதி, துறைமுகங்கள், நெடுஞ்சாலை அமைச்சுப் பொறுப்புகள் ஜனாதிபதி வசமுள்ளன. கடந்த அரசில் அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என 109 பேர் இடம்பெற்றிருந்தனர். கடந்த ஆட்சிக் கால அமைச்சரவையை நோக்குமிடத்து இவ்வெண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும்கூட,  இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இவ்வெண்ணிக்கையும் அதிகமானதே என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி தனது ஆட்சிக்காலத்தில் ஆட்சிப்பலத்தை தக்கவைத்துக் கொள்ள அமைச்சரவை எண்ணிக்கையை எல்லையில்லாது அதிகரித்துச் சென்றது. கடந்த அரசாங்கத்தில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் அமைச்சர்களே என்ற நிலை காணப்பட்டிருந்தது. தற்போது அமைச்சரவை எண்ணிக்கை ஓரளவு குறைக்கப்பட்டாலும்கூட,  ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் பிரதியமைச்சர்களாக இருந்தவர்கள் அந்த பதவிகளையும்,  வசதி வாய்ப்புக்களையும் எதிர்பார்த்து அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவும் இடமுண்டு. இருப்பினும்,  இந்நெருக்கடிகள் அரசாங்க அறுதிப் பெரும்பான்மையை குறைப்பதாக அமைந்துவிடக்கூடியதாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது.

இருப்பினும்,  கடந்த அரசாங்கத்தில் முக்கியமான பங்களிப்பு வழங்கிய ஒரு சிலர் விடுபட்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக புதிய அரசியலமைப்பொன்றை முன்வைக்க வேண்டுமென்பதில் மற்றும் இலங்கையில் இனப்பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வந்த பேராசிரியர் திஸ்ஸவிதாரணவை குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புமிடத்து இவரை அமைச்சராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தமொன்று ஜனாதிபதிக்கு ஏற்படலாம்.

மேலும். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு. ஜயரத்ன பிரதமராக நியமிக்கப்பட்டட போதும்கூட,  கண்டி மாவட்டத்தில் பிரதான 1 இலட்சம் விருப்பு வாக்குகளுக்கு மேல் பெற்ற கெஹலிய ரம்புக்வெல்ல,  மஹிந்தானந்த அலுத்கமகே,  எஸ்.பி. திசாயநாயக்க ஆகியோருக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தில் முக்கிய செயற்பாட்டு உறுப்பினராக காணப்பட்ட சரத் அமுனுகமவுக்கு இதுவரை அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற மீள் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுக்காற்று நடவடிக்கை முடிவடையும் வரை கண்டி மாவட்டத்தில் அமைச்சரவை பதவிகள் வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், இவ்விசாரனை முடிவடைந்த பின்பு கண்டி மாவட்டத்துக்கு சில அமைச்சரவை பொறுப்புக்களை ஜனாதிபதி வழங்க வேண்டியேற்படும்.

அதேபோல மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏதாவொரு வகையில் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டே வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த கால்நடை அபிவிருத்தி அமைச்சுப் பதவியை அவர் ஏற்றுக் கொள்ளாமையினால் ஆறுமுகம் தொண்டமானும் அமைச்சுப் பதவிக்கு இன்னும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் இவருக்கும் அமைச்சுப் பொறுப்பு எதிர்வரும் நாட்களில் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே,  அமைச்சரவையின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை இருப்பது ஜனாதிபதிக்கு தவிர்க்க முடியாதவொரு விடயமாகவே காணப்படும்.

மறுபுறமாக ஆளும்.ஐ.ம.சு.முன்னணி 144 உறுப்பினர்களை தற்போது தன்வசம் வைத்துள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள இன்னும் 6 உறுப்பினர்கள் ஐ.ம.சு.முன்னணிக்கு தேவை. எதிர்வரும் வாரங்களில் எதிர்க்கட்சிகளிலிருந்து இந்த உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அறுதிப் பெரும்பான்மை பலத்திற்கோ மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கோ இடையில பாரிய வித்தியாசம் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் சேரக்கூடிய உறுப்பினர்களுக்கும் கௌரவத்திற்காக சில அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனவும் ஊகங்கள் கூறுகின்றன.

எவ்வாராயினும் இ.தொ.கா.வைச் சேர்ந்தவர் ஆறுமுகம் தொண்டமான், கலாநிதி சரத் அமுனுகம, கெஹலிய ரம்புக்வல, மகிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி.திஸாநாயக்க, பேராசிரியர் திஸ்ஸவிதாரண ஆகியவர்களில் 5 பேர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இவர்களில் ஒருவர் பிரதியமைச்சராகலாம் என்றும் அனுமானிக்கப்படுகிறது. எனவே, எதிர்வரும் காலங்களில் அமைச்சரவை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படக்கூடிய நிகழ்தகவே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பல்லி
    பல்லி

    ஜயா பெரியவர்களே அப்படியே இந்த ஆள் கடத்தல் கப்பம் வாங்கல் அதை அமுக்கி வாசித்தலுக்கும் ஒரு அமைச்சரை நியமித்தால் நல்லாய் இருக்கும்; ஆண்டவரே ஆளபோகிறவரே உங்கள் ஆட்ச்சியில் பயங்கரவாதம் ஒழிக்கபட்டது மகிழ்ச்சிதான் ஆனால் அதுக்கு பதிலாக இப்போ பணம் பறிக்கும்வாதம் தொடங்கி அதுக்காய் பல அப்பாவி பிள்ளகள் கடத்தபடுவது தொடர்கிறது; இதை பொலிஸார் பிடித்தும் அவர்கள் மீது நடவடிக்கை இல்லாதது ஏனோ; புலி அட்டகாசமாய் செய்த ஆள்கடத்தல் பணம் பறித்தல்; இப்போ அமைதியாய் நடக்கிறது என்பதை பலர் தெரிந்தும் ஏன் அம்பலபடுத்த மறுக்கிறார்கள். புலி கடும் புலியாக்க பிள்ளைகளை பிடித்தார்கள்; அதை தடுத்து இப்போ பணம் பறிக்க பிள்ளைகளை பிடிக்கிறார்கள். இந்த விடயத்தில் தோழர் கவனம் செலுத்த தவறினால் மீண்டும் இதையே கரு பொறுளாய் வைத்து சிலர் புலி வளர்க்க ஆசைபடுவார்கள். ஆகவே இது உடனடியாக அரசின் கவனத்துக்கு போவது அவசியம்;

    Reply
  • Ajith
    Ajith

    அதை தடுத்து இப்போ பணம் பறிக்க பிள்ளைகளை பிடிக்கிறார்கள். இந்த விடயத்தில் தோழர் கவனம் செலுத்த தவறினால் மீண்டும் இதையே கரு பொறுளாய் வைத்து சிலர் புலி வளர்க்க ஆசைபடுவார்கள். ஆகவே இது உடனடியாக அரசின் கவனத்துக்கு போவது அவசியம்;
    It is nothing new for the comrade. He is the man behind this now. We will not forget How EPRLF (EPDP) and ENDLF not only involved in abductions, murders along with Indian army but also supplied with women. It sad that Palli assumes that it is happening witout the knowledge of government and Sinhala forces. You are only worried about Tigers coming back but you are not worried about poor innocent people suffering under the hands of criminals like Douglas and Rajapakse.

    Another great mission by extending his cabinet to give ministerial posts to criminals. The latest list of secretary of states couldn’t find any one from minorities including those parties hanging on the tails of Rajapakse.

    Reply
  • செல்வன்
    செல்வன்

    ஆட்கடத்தலை தடுப்பதற்காக விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய நுழைவாயில் தளங்களில் செயலணி மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலகு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    உத்தேசிக்கப்பட்டுள்ள செயலணி அடுத்த சில மாதங்களுக்குள் செயற்படும் எனத் தெரிய வருகிறது. நீதி அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், சட்ட அமுலாக்க அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, மற்றும் குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பு ஆகிய அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த செயலணிப்படை செயற்படும். அதேவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் எல்லைப் பாதுகாப்பு அலகுகள் அமைக்கப்படவுள்ளன.

    இந்த நுழைவாயில்களுக்கூடாக வருவோர் மற்றும் வெளிச் செல்வோரில் ஆட்கடத்தலினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளோரை இனங்காண்பதற்கு இந்த அலகு பயன்படுத்தப்படும்.

    அதேவேளை ஆட்கடத்தில் தொடர்பாக தற்போது அமுலில் உள்ள சட்டங்களுக்கு வலு சேர்க்கவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் செயலணி அமைப்பது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

    இந்நிலையில் இலங்கை நீதிமன்றமொன்றில் முதல் முறையாக ஆட்கடத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இலங்கை குற்றவியல் கோவையில் கடந்த 2006 ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டத்தையடுத்து ஆட்கடத்தல் குற்றங்களுக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இந்த தண்டனை ஏனைய பாரிய குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஒப்பானதாகும்.

    ஆட்கடத்தல் தொடர்பாக அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் நாடுகள் மூன்று வெவ்வேறு வரிசைகளில் அவற்றின் பாதிப்பு இனங்காணப்படும் அளவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் இலங்கை இரண்டாவது வரிசையில் இருப்பதையடுத்தே மேற்கூறிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

    அந்த அறிக்கையில் ஆண்கள் மற்றும் பெண்களை பணத்துக்காக வெளிநாடுகளுக்கு கடத்த உதவுதல் மற்றும் வர்த்தக ரீதியிலான பாலியல் நடவடிக்கை வியாபாரம் ஆகியவை இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை இனங்காணப்பட் டுள்ளது. இவ்வாறு ஆட்கடத்தல் இடம் பெறுவதற்கு பின்வரும் சாத்தியக்கூறுகளே காரணம். தொழில்களுக்காக குடியேறுவோர், வெவ்வேறு நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்த பின்னர் விசா வழங்கும் நடைமுறைக் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் போக்குவரத்து மையமாக அது அமைந்துள்ளமை என்பனவாகும்.

    Reply
  • thurai
    thurai

    டக்ளசையும், இராஜபக்சவையும் கொடூரமானவர்களென்போர் சந்தோசமாக இருக்கலாம். ஏனெனில் இலங்கையில் இவர்களிருவருமே இலங்கையில் குற்ரவாளிகள். இப்படியாக இரு குற்ரவாளிகளை மட்டும் கொண்ட நாடு இலங்கை மட்டும்தான்.

    பெயரிற்கு மட்டும்தான் புலியும்,மற்ர இயக்கங்கழும் வெவ்வேறு.குற்ரமென்னும் போது யார் தவறுசெய்தாலும் குற்ரம் குற்ரமே. புலிகள் தமிழர்களிற்கு மேலானவர்களென்றால் தமிழர்களின் அழிவிற்கும், உலகில் தமிழர்களின் பிரச்சினைகள் பயங்கரவாதிகளின் பிரச்சினைகளாக்கப்பட்டதற்கும் புலிகளே காரண்மென்பதை அஜீத் இதுவரையில் உணராமல் இருப்பாரேயனால் அவரின் நிலமை பரிதாபத்திற்குரியதேயாகும்.

    துரை

    Reply