தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா

Jaffna_Signயாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபட்டு வரும் நிலையிலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் சாவகச்சேரியில் கப்பம் கோரி 16 வயது இளைஞன் கடத்தப்பட்டார். பின்னர், படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞனது உடல் மீட்கப்பட்டது. அச்சம்பவம் குடாநாட்டு மக்களை பெரும் பீதியிலாழ்த்தியது. இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணகள் நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவத்தின் பின்னரும் சிலர் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டனர். சில பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களின் தங்கநகைகள் களவாடப்பட்டன. சில பெண்கள் பாலியல் வல்லுறவிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்மையில் நவாலியில் வைத்து 13 வயது சிறுவன் ஒருவனை சிலர் வாகனம் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டு பின்னர் அவன் கூக்குரலிட்டதால் அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளான். அச்சிறுவன் கூறிய தகவல்கள் அச்சமூட்டுவதாகவுள்ளன.

தன்னைக் கடத்தியவர்கள் தனக்கு ஏதோ மருந்தை பருக்க முற்பட்டதாகவும், ஊசியேற்ற முற்பட்டதாகவும் அவன் தெரிவித்ததோடு. அவ்வாகனத்தில் இன்னொரு சிறுவன் மயக்க நிலையில் இருந்நதாகவும் அவன் தெரிவித்துள்ளான். கடந்த 11ம் திகதி ஓட்டுமடம் பகுதியில் கணனி வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாவணவன் ஒருவனை கடத்த முற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அதே நாள் அராலியில் வைத்து 5ம் தரம் கல்வி பயிலும் மாணவியொருத்தியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முற்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. இவை பொதுமக்களால் முறியடிக்கப்பட்டு சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதனைத்தொடாந்து மூளாய் பகுதியில் வைத்து சிறுவன் ஒருவன் மீது மயக்க மருந்தை தெளித்து கடத்த முயன்ற சம்பவமும். சங்கனையில் சிறுமியொருத்தியை கடத்த முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளன. இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் குறித்த செய்திகள் யாழ். குடாநாட்டு செய்திப் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்த வண்ணமுள்ளன. இக்கடத்தல்களோடு தொடர்புடைய சிலர் பிடிபட்டுள்ள போதும் கடத்தல்கள் தொடர்ந்தவாறேயுள்ளன.

கடந்த 25ம் திகதி வடமராட்சி நெல்லிலடியைச் சோந்த 24 வயதுடைய யுவதியொருவர் வெள்ளைவானில் வந்தவர்களால் கடத்தப்பட்டார். பின்னர் இவரது நகைகள் யாவும் கடத்தயவர்களால் பறிக்கப்பட்டு அவரைக் கொலை செய்யும் நோக்கில் அவரின் கழுத்தை நெரித்துள்ளனர். அவர் மயக்கமடைந்ததும,; துன்னாலைப் பகுதியிலுள்ள பற்றையொன்றிற்குள் அவரை தள்ளியெறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் பொதுமக்களின் உதவியுடன் மீட்க்கபட்ட இப்பெண் மந்திகை மருத்துவமனையில் சோக்கப்பட்டார். இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வீடொன்றிலிருந்து அந்த யுவதியின் சைக்கிள். நகைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கடத்தல்கள் குடாநாட்டில் தொடர்ந்த வண்ணமுள்ளதால் மக்கள் பிதியுடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களின் பெற்றோர் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அவர்களுடனேயே தினமும் பாடசாலைகளுக்கு வந்து செல்லும் நிலை எற்பட்டுள்ளது.

இக்கடத்தல் சம்பவங்கள், பாலியல் வல்லுறவுகள், கொலைகளுக்குப் பின்னால் தமிழர்களே இருந்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் தமிழர்களாகவே இருக்கின்றனர். இச்சம்பவங்கள் திட்;டமிடப்பட்ட அரசியல் பின்னணியுடன் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் பாதாள உலகக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கைகள் பார்க்கப்படுகிற்னது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கடத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் சில கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதணை நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக யாழில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்நடவடிக்கை மீண்டும் யாழ்பாணம் இராணுவ பொலிஸ் கெடுபிடிகளுக்கு உள்ளாகும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வீடுகளில் களவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க குடாநாட்டில் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும், கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் தமக்கு வரவில்லை எனவும், யாழ். படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

நன்றி – விஸ்வா, யாழ்ப்பாணம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

30 Comments

 • செல்வன்
  செல்வன்

  யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமையும் நேற்றுமுன்தினம் புதன்கிழமையும் பாடசாலைச் சிறுவர்களைக் கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை.மாணவர்களை இலக்குவைத்து கடத்தல்களை மேற்கொள்ள முயல்வோரால் குடாநாட்டில் பெற்றோரும் மாணவர்களும் கல்விச் சமூகமும் பெரும் பீதியடைந்துள்ளது.

  கடந்த வாரமும் இதுபோன்ற ஓரிரு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தென்மராட்சியில் மீசாலை மற்றும் மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினமும் சுன்னாகத்தில் நேற்றுக் காலையும் பாடசாலை சிறுவர்களைக் கடத்தும் முயற்சிகள் இடம்பெற்றும் அவை கைகூடவில்லை.சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தரம் 7 இல் கல்விகற்கும் மீசாலை மேற்கைச் சேர்ந்த இரு மாணவிகள் பாடசாலைக்குப் புதன்கிழமை காலை நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளொன்றில் வேகமாக வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் நிறுத்திவிட்டு அவ்விரு மாணவிகளையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முற்பட்டபோது அவர்களிருவரும் அவர்களிடமிருந்து தப்பி அருகிலுள்ள வீட்டிற்குள் புகுந்து விட்டனர்.

  இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவ்விடத்திலிருந்து வேகமாகச் சென்று மறைந்து விட்டனர்.அன்று மாலை 4.30 மணியளவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மட்டுவிலைச் சேர்ந்த மாணவர்கள், பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் மட்டுவில் மத்தியில் வைத்து இவர்களை வெள்ளை வானொன்றில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

  கடத்தல்காரர்களுடன் மல்லுக்கட்டிய மாணவர்கள் அவலக்குரலெழுப்பவே அயலவர்கள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.இவர்களைக் கடத்த முயன்ற வானின் இலக்கத் தகடுகள் துணியொன்றால் மறைக்கப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

  இதேநேரம், நேற்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் சுன்னாகத்தில் தனியார் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனொருவனை வானொன்றில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.மாணவனின் அருகில் வான் வந்து நின்ற போது அவனின் கழுத்தைப்பிடித்து வானுக்குள் தள்ள முயற்சித்துள்ளனர். எனினும் அந்த மாணவச் சிறுவன் அவர்களை உதறித் தள்ளிவிட்டு தப்பியோடவே கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

  பெருந்தொகை பணத்தைக் கோரி ஆட்களைக் கடத்தும் சம்பவங்கள் சில இடம்பெற்ற அதேநேரம், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி வதந்திகளும் காட்டுத் தீ போலப் பரவுவதால் குடாநாட்டு மக்கள் கலங்கிப் போயுள்ளனர்.கடந்த காலங்களில் யுத்தம் தீவிரமாக நடைபெற்ற நேரத்தில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவங்கள் மக்கள் மனங்களில் நிழலாடுவதால் குடாநாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள அதேநேரம், இவ்வாறான சம்பவங்கள் குறித்து தாங்கள் மிகவும் விழிப்புடனிருப்பதாக படைத்தரப்பும் தெரிவித்துள்ளது.

  வவுனியாமக்கள்மத்தியில்பெரும்பீதி; தடுத்துநிறுத்துமாறுசம்பந்தப்பட்டவர்களிடம்கோரிக்கை

  வவுனியாவில் நடைபெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் கப்பம் கோருவதைத் தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;

  தேர்தல் நடந்து முடிந்த கையுடன் வவுனியாவில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் பொதுமக்களைப் பெரிதும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளன.கடந்த 20 ஆம் திகதி வவுனியா திருநாவற்குளத்திலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்விபயிலும் தனுஷா என்னும் 9 வயதுச் சிறுமி ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தச் சிறுமியின் தாயாரும் மகா இறம்பைக்குளம் அ.த.க.பாடசாலை ஆசிரியையுமான திருமதி கௌரியாம்பிகை நெஞ்சிலும் வயிற்றிலும் கத்துக்குத்துக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வவுனியா ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

  இந்தச் சம்பவமானது மாணவர் சமுதாயத்தினரையும் ஆசிரிய சமூகத்தினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற அடுத்த சில தினங்களில் (22.04.2010) வவுனியா தனியார் பஸ்தரிப்பிடத்தில் பேரூந்திற்காக நின்றுகொண்டிருந்த பெண் பயணியிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறிப்பதற்கான முயற்சியும் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் கள்வனைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

  வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த 28 வயதுடைய ஒருவர் 24 ஆம் திகதி வவுனியா பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த வேளையில் பத்து இலட்சம் ரூபா கப்பம் கேட்டு கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் பொலிஸாரின் நடவடிக்கையினால் கடத்தப்பட்டவர் வவுனியா பூவரசங்குளம் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

  இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அரசிற்கு ஆதரவு வழங்கும் கட்சியின் உறுப்பினர்களாகவும் உள்ளனர் என்பது பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவருகின்றது. இவற்றுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது பொதுமக்களுக்கும் நன்கு தெரியும். பல்வேறு அனர்த்தங்களினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள எமது மக்கள் சொல்லொணாத் துன்பங்களிலிருந்து தம்மை விடுவிப்பதற்கு யாராவது முன்வரமாட்டார்களா என்று ஏங்கித்தவிக்கும் இச்சூழலில் இத்தகைய சம்பவங்கள் எமது மக்களை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளியுள்ளன.

  இதுவரை நடந்துள்ள கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கப்பம் தொடர்பான சம்பவங்களில் வர்த்தகர்கள், மருத்துவர், அதிபர், கிராமசேவகர், தனியார் பேரூந்து உரிமையாளர், முச்சக்கரவண்டி உரிமையாளர் எனப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பல இலட்சம் ரூபாய்களைக் கொடுத்து இன்று பெரும் கடனாளிகளாகவும் தொழிலைத் தொடர முடியாதவர்களாகவும் உள்ளனர்.

  சிலர் இவர்கள் கேட்ட தொகையைக் கொடுக்க முடியாமல் தொழில், வர்த்தகம், வீடுவாசல்களைக் கைவிட்டு நாட்டை விட்டே ஓடிப்போய்விட்டனர். இவற்றுக்கு ஒரு முடிவுகிட்டாதா, இவற்றை யாரிடம் சொல்லி முறையிடுவது, “மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிவிட்டதே’ என்று மக்கள் தங்களைத் தாங்களே நொந்துகொண்டுள்ளனர்.

  நாம் எமது உரிமைகளை ஜனநாயக வழிமுறைகளில் பெற்றுக்கொள்வதற்காகப் பெரிதும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இத்தருணத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  இனியாவது இச்சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட தலைமைகள், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் தமது தொண்டர்களை வெளியேற்றிவிட்டோமென்றும் அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்றும் அவர்கள் எம்மிடம் கேட்டுள்ளனர். தொடர்ந்தும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எமது மக்களின் சார்பாகக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

  Reply
 • Ajith
  Ajith

  Every one knows who is responsible for White van. Some people here still justify white van abductions, rapings and murders. They keep silent about people’s suffering in the hands of these criminals. It is unfortunate these criminals are backed by the President, ministers and military.

  Reply
 • NANTHA
  NANTHA

  ஆட்கடத்தல் செய்து பணம் சேகரிக்கும் தேவை யாருக்கு உள்ளது? சரணடைந்த பல புலிகள் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர். இவர்களில் பலர் “சீவிக்க” வழியில்லாது கடத்தல் கொலை என்று அலைகிறார்கள்.

  சாவகச்சேரி மாணவன் கொலை தொடர்பாக கதைத்தவர்கள், தேடப்படும் சந்தேக நபர் புலிகளின் உளவுப்படையை சேர்ந்த கேடி என்பது தெரிந்தவுடன் “மவுன” மாகிவிட்டனர்.

  தேசம் நெட் அந்த மாணவன் கடத்தல் பற்றிய விசாரணைகளின் தொடர்ச்சியை பிரசுரிக்காமல் உள்ளதன் நோக்கம் என்ன?

  Reply
 • sen
  sen

  சாவகச்சேரி மாணவன் கொலை பற்றி விசாரிக்கும் நீதிவானின் வாசஸ்தலப் பகுதியில் ஆயுதத்துடன் ஈ.பி.டி.பியினர் நடமாட்டம் என முறைப்பாடு

  சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் திருச்செல்வம் கபிலநாத் படுகொலை தொடர்பாக விசாரித்துவரும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானின் யாழ்ப்பாணத்தில் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் வாசஸ்தலம் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று தினங்களாக ஆயுதம் தாங்கிய இருவர் நடமாடுகின்றனர் என அப்பகுதி மக்கள் நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளமையை அடுத்து நேற்று இவ்விவகாரம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

  ஈ.பி.டி.பியைச் சேர்ந்த யாழ். மாநகர சபை பிரதி மேயர் றேகன் என்பவரும் சாள்ஸ் என்பவருமே மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் அங்கு நடமாடித் திரிகின்றனர் என்று கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்த இருவரிடமும் உடனடியாக விசாரணை செய்து வாக்குமூலம் பெறுமாறு சாவகச்சேரி பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியையும், யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகரையும் நீதிமன்றம் பணித்தது.

  இந்த விடயம் தொடர்பாக இலங்கை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறும் அத்துடன் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (வடக்கு) ஆகியோருக்கு உரிய நடவடிக்கைக்கும், பாதுகாப்புக்குமாக தொலைபேசியில் அறிவிக்குமாறும் நீதிமன றப் பதிவாளரை நீதிமன்றம் பணித்தது. இதேவேளை, குறித்த சாள்ஸ் என்பவர் மாணவன் கபில்நாத் படுகொலை தொடர்பான வாக்குமூலம் அளித்தவர் என்றும் ஈ.பி.டி.பியின் நுணாவில் முகாம் பொறுப்பாளராக உள்ளவர் என்றும் அங்கு சுட்டிக் காட்டப்பட்டது.

  குறித்த நபர் தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தாவுக்கு தகவல் தெரிவிக்கும் கடிதம் அனுப்புமாறும் பதிவாளருக்கு நீதிவான் உத்தரவிட்டார். மேற்படி மாணவன் படுகொலை தொடர் பாக ஈ.பி.டி.பியின் நுணாவில் முகாமில் செயற்பட்ட ஜீவன் என்பவரைக் கைது செய்யுமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தமையை அடுத்து, அது தொடர்பான செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையிலேயே சாவகச்சேரி நீதிவானின் வாசஸ்தலப் பகுதியில் ஈ.பி. டி.பியினர் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆயுதங்களுடன் நடமாடினர் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. uthayan.com

  Reply
 • chandran.raja
  chandran.raja

  புண்ணாக்கு மூட்டைகள் பல ரகம். புலம் பெயர் மூட்டைகளை பற்றி ஏற்கனவே நாம் அறியப்பட்டதே! நாளை நடக்கவிருக்கும் “மலரப்போகும் தமிழ்ஈழம்” பற்றி. இதை பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய தேவையில்லை. ஆனால் யாழ்பாணத்து புண்ணாக்கு மூட்டையைகளைப் பற்றி அறியவேண்டியது இன்றைய கடமை.

  புண்ணாக்குமூட்டையின் தரம் உதயன் பத்திரிக்கை ஊடாக வெளிவந்த கொண்டிருக்கிறது. இதை நம்பி சவாரி செய்வீர்களேயானால் இந்த சவாரி இன்னொமெரு முள்ளிவாய்காலை அடைவதற்கே வழிதிறந்துவிடும். டக்கிளஸ் தேவானந்தாவிலும் ஈ.பி.டி.பியுலும் எமக்கும் விமர்சனம் உண்டு. அதை உரிய முறையிலேயே சந்திக்கவேண்டும்.

  தமிரசுக்கட்சி தமிழர்கூட்டணி அதன் பிறகு வந்த புலிகள்-புலம்பெயர்ந்த சருகு புலிகள் உட்பட ஈ.பி.டி.பி தமிழ்மக்களுக்கு எந்த பாதக நிலையையும் ஏற்படுத்தவில்லை. அதை சரிவரப் புரிகொள்ள முடியாததே கவலைக்குரிய அரசியல் நிலை. சம்பந்தனைப் பாருங்கள். மாவை சேனாதிராஜாவைப் பாருங்கள். சுரேஸ் பிரேம்மச்சந்திரனைப் பாருங்கள். அடைக்கலம் செல்வத்தைப் பாருங்கள். தமிழ்மக்கள் துன்பப்பட்ட நேரம் இவர்கள் எங்கிருந்தார்கள்? திருச்சியும் டில்லியுமாக குடும்ப விஷயமாக ஓடித்திரியவில்லையா? இவர்களால் இனம் காணப்பட்டதே யாழ்பாணத்து புண்ணாக்குமூட்டை சரவணபவனனும் உதயன் பத்திரிக்கையும். இவர்கள் தான் புலம்பெயர் புண்ணாக்கு மூட்டைகளுக்கு செய்தி வழங்கிக் கொண்டிருக்கிறரர்கள். தவறாக.

  இந்த சரணபவன் அதாவது உதயன் பத்திரிக்கையின் ஆசிரியர் அல்லது உரிமையாளர் யாழ்பாண மத்தியதர வர்கத்தின் அறுபதுகோடி ரூபாயை ஏப்பம் விட்டவர். ஈ.பி.டி.பி அப்படி வந்தவர்கள் அல்ல. அவர்களில் பல தவறுக்கள் உள்ளடிக்கியிருக்கிற போதும் இவர்கள் அறிந்து செய்கிற தவறுகளை அறியாமல் செய்தவர்களே அவர்கள். இவர்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. புலம்பெயர்நாடுகளில் தீபம் ஜி.ரி.வி உட்பட்டவர்களுக்கு செய்தி வழங்கி வருபவர்கள் சரணவபவன் உதயன் பத்திரிக்கையே!. இதில் எனக்கு சந்தேகமில்லை. இன்னொருபடி மேலதிகமாக சிந்திக்கப் புறப்பட்டால் இதன் நுhல்நுனி ஐரோப்பிய அமெரிக்கா புலித்தாதாக்களிடமே இருக்கிறது. சென் போன்றவர்களின் செய்திகள் புண்ணாக்கு மூட்டைகளுக்கே சொந்தமானவை.

  Reply
 • பல்லி
  பல்லி

  இந்த பிரச்சனை பற்றி தோழருடன் நேரடியாகவே பலர் பேசியுள்ளனர்; அவரும் தான் இதுபற்றி கவனம் எடுப்பதாக சொல்லியும் உள்ளார், அது சரி வராவிட்டால் அரசதரப்பு எந்த அமைப்பானாலும் தாம் நடவெடிக்கை எடுக்க தயார் என சொல்லியுள்ளனர்; இதில் எமது கடமை திரும்ப திரும்ப குற்றவாளிகளை இனம் காட்டுவதே, தவறானவர்கள் யாராயினும் தண்டனை கிடைக்கும் வரை எழுதுவோம்; யாராவது ஒரு மனிதனேயம் உள்ள அதிகாரியின் காதில் விழும் வரை,

  Reply
 • sen
  sen

  திரு. சந்திரன் ராசா
  இங்கே இருக்கும் பிரச்சினை நீதிமன்றத்தின் முடிவுகள் பற்றியது. உதயன் பத்திரிகையின் கட்டுரையில் வந்த தரவுகள் சரியா அல்லது இல்லையா என்பது பற்றியது. நீதிமன்ற நடப்புக்கள் தொடர்பான தகவல்கள் இந்த கட்டுரையில் எழுதப்படிருப்பது போல் இல்லை என்றால் அதனை நிறுவிக்காட்ட வேண்டிய தேவை இருக்கின்றது.

  அடுத்தது உதயன் பத்திரிகை அதன் ஆசிரியரின் அரசியல் தொடர்பானது. இவர்களது அரசியல் EPDP , SLFP இன் அரசியலுக்கு போட்டியானது அந்த அடித்தளத்தில் இந்த செய்தி பிழை என்று நிறுவ முடியாது. அரசியல் பிரச்சாரம் வேறை தரவுகள் நிறுவப்படக் கூடியவை. திரு. சந்திரன்ராசா பிரசாரத்தினை விட்டு தரவுகளை நிறுவிக்காட்ட வேண்டும்.

  சரவணபவன் அவரது TNA தமிழ் முதலாளித்துவத்தின் ஒரு கன்னை, EPDP இன்னுமொரு கன்னை. இந்த இரண்டு கன்னைகளும் அரசியல் அதிகாரதிற்காக என்னவும் செய்ய துணிந்தவை. இவர்களுக்கிடையே கொலைகள் தொடர்பாக மட்டுமல்ல மண் வியாபாரம் தொடர்பாகவும் முரண்பாடுகள் இருக்கின்றது. இறுதியில் இவர்கள் இருவரது கைகளிலும் தமிழ், சிங்கள மக்களின் இரத்தம் ஒடடுகின்றது.

  சரவனபவனின் திருட்டு மட்டுமல்ல, டக்ளசும் அவரது சகோதரர் உட்பட்ட அவரது அடியாள்களின் திருட்டும் திருட்டுத்தான். இந்த இரண்டு இரத்தம் தோய்ந்த திருடர்களுள் ஒருவர் பக்கமும் எடுக்க நான் தயாரில்லை. திரு. சந்திரன்ராசா விற்கு பூரண உரிமை இருக்கின்றது டக்ளசின் கொலைகளையும், திருட்டுக்களையும் புண்ணாக்கு, தவிட்டு வியாபாரம் என்ற பெயரில் உயரத்தில் தூக்கி பிடிப்பதற்கு.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //… டக்ளசின் கொலைகளையும், திருட்டுக்களையும் புண்ணாக்கு, தவிட்டு வியாபாரம் என்ற பெயரில் உயரத்தில் தூக்கி பிடிப்பதற்கு….//

  சொல்லப்போனால் இது மணல் வியாபாரம் சம்பந்தப்பட்டது, மணியாக கதையை தவிடு புண்ணாக்கு என மாற்றிக்கதை விடுகிறார்!

  கீழே மகேஸ்வரி நிதியம் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி….

  ”…..மண் விநியோகத்தில் பொறுப்புடையவர்களாக மகேஸ்வரி நிதியம், புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம், யாழ், மாவட்ட பாரவூர்திகள் சங்கம், வடமராட்சி மணல் ஏற்றும் பாரவூர்தி உரிமையாளர் சங்கம், வடமராட்சி கிழக்கு மணல் ஏற்றும் உழவு இயந்திர சங்கம், மணல் ஏற்றும் ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை இராணுவம் போன்ற பல தரப்புகள் பங்காளிகளாக உள்ள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்…”

  thenee.com/html/290410.html

  Reply
 • chandran.raja
  chandran.raja

  வடபகுதியில் நீதிமன்றங்கள் ஏற்படுதற்கும் சுமூகவாழ்வை மக்கள் மேற்கொள்ளுவதற்கும் போக்குவரத்து கல்வி ஓர்ரளவுக்காவது மருத்துவ மனைகள் இயங்குதல் இலங்கை அரசாங்கத்துடன் பகைமையை வளர்காமல் சீரான வாழ்வை கொண்டுவந்ததிற்கு டக்கிளஸ் தேவானந்தாவிற்கு கணிசமான பங்கு உண்டு.

  தொழில்சங்கங்களோ விவசாயகழகங்களோ இல்லாவிட்டால் முதாலித்துவத்ற்கு ஏதாவது கோரிக்கையாவது வைக்கமுடியுமா? சென்!. இந்த நிலையை வடபகுதிக்கு மீளக்கொண்டுவந்தவர்கள் யார் என்றாவது சொல்வீர்களா? இல்லை சுயமாய் தோன்றிற்றுதா? என்ன தரவுகளை கேட்கிறீர்கள்? மூன்றுலட்சம் மக்களை முள்ளிகம்பிவேலிக்குள் சிறைவைப்பதற்கு யார் காரணமாவர்கள்? இதன் பிண்னணியில் இருந்து எவர் செயல்பட்டவர்கள். வங்காலையைச் சேர்ந்த தச்சுதொழிலாளி மாட்டின் மூர்த்தியின் குடும்பத்தை சித்திரவதைசெய்து கொலைசெய்தவர்கள் யார்? அக்சன்பாம் தொண்டுநி றுவன ஊழியர்களை கொலை செய்தவர்கள் யார்? தமிழ்மக்களுக்கு ஒருவழி பாதையாக சாக்காட்டுக்கு வழிகாட்டி விட்டவர்களும் கொழும்பில்லிருந்து கொண்டு சென்ற பிளாஸ்ரிக் இடியப்பதட்டிற்கு வரிபோட்டு- கப்பம் வாங்கியவர்கள் இறந்து போனார்கள். ஆனால் அவர்களுக்கு மறைமுகமாக இருந்து செயல் பட்டவர்களும் உருகொடுத்தவர்களும் இன்னும் மக்கள்மத்தியில் உயிரோடு இருக்கிறார்கள். இவர்களாலேயே கடத்தல்கொலைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இவர்களின் நோக்கம் நாட்டின் சீரழிவிலேயே ஆதாயம் பெறமுடியும் என்பது மக்களின் வாழ்வு பற்றிய தல்ல.இந்த தரவுகளை நீங்கள்தான் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும். மண்வியாபாரத்துடன் கொலைகடத்தலை சேர்த்து விடுவது குறுகியபுத்தியே!

  சென் நீங்கள் நல்லவற்றை கண்டுகொள்ளவேண்டாம். பாராட்டவேண்டாம் சேறடிக்காமல்லாகுதல் இருக்க பழகிக்கொள்ளுங்கள். மக்களின் எதிரிகள் உங்களைப் போல்தான் கதைக்கிறார்கள். கடத்தலும் கொலைகளும் புலிகள் விட்டுப்போன முதிசம். மற்றவர்களில் பழிபோடுவதே அவர்கள் பாணி. எவன் தன்னினத்தைப் பற்றி அளவுக்குமீறி பீத்திக்கொள்ளுகிறானோ!எவன் பிரிக்கமுடியாததை பிரிக்க முயல்கிறானோ, அவர்களுக்கு இப்படியான கடத்தல்கொலைகளை செய்வதை விட வேறு வழியில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். சென்! நீங்கள் நல்லவற்றை கண்டுகொள்ள வேண்டாம். பராட்ட வேண்டாம் சேறடிக்காமல் ஆகுதல் இருக்க பழகிக்கொள்ளுங்கள். அது எமது இனத்தை கடந்த அழிவுகளில் போல் அல்லாது பாதுகாக்கும்.

  Reply
 • sen
  sen

  திரு சந்திரன்ராசா
  நான் என்ன சிந்திப்பது என்பதை புலிவால் மட்டுமல்ல EPDP கொம்பும் தீர்மானிக்க முடியாது. டக்லஸ் இல்லாவிடில் யாழ்ப்பாணத்தில் சூரியன் உதித்திருக்க முடியாது என்று சொல்வதற்கும் உரிமை இருக்கின்றது. புலியும் இதுமாதிரி நிறைய சொன்னது. ஆனால் கேட்பதோ இல்லையோ என்பதை தீர்மானிப்பது எந்த நிலைமைகளிலும் கேட்பவருக்கு மட்டுமே சொந்தமானது.

  உதயன் இணையதளத்தில் EPDP அங்கத்தவர்கள் அதுவும் யாழ்ப்பாண மாநகரசபை உதவி மேயர் உட்பட ஆயுதங்களுடன் சாவகச்சேரியில் உலவியது தொடர்பாக நீதிமன்ற விசாரணை தொடர்பான கட்டுரையின் தரவுகள் சரியா அல்லது உண்மைக்கு புறம்பானவையா? இதற்கான விடை உதயன் பத்திரிகையில் வந்தபடியால் சரவணபவன், டக்லஸ் குத்துவெட்டின் அடிப்பையில் உண்மைக்கு புறம்பானது என்று நிராகரிக்க முடியாது. நீதிமன்றத்தில் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை என்ற தரவுகள் மட்டும் தான் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை நிருபிக்கும்.

  திரு சந்திரன்ராசா சொல்வது புலியின் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில் புலியின் முகவர்கள் சொன்னதை நினைவுபடுத்துகின்றது. இது புற நிலையாக இனிமேல் எடுபடப்போவதில்லை.

  புலி முன்னர் நாங்கள் தான் போராடுகின்றோம் [[ நல்லவற்றை கண்டுகொள்ள வேண்டாம். பராட்ட வேண்டாம் சேறடிக்காமல் ஆகுதல் இருக்க பழகிக்கொள்ளுங்கள்]] என்று வெருட்டி வாய் அடைக்க பண்ணிய மாதிரி டக்லஸ் இல்லாவிடில் யாழ்ப்பாணம் இல்லை என்று வெருட்ட முடியாது.

  டக்லஸ் யாழ்ப்பாணத்தில் சூரியனை உதிக்க பண்ணியிருக்கின்றார் என்பது வேறை ஆதலால் வெய்யிலுக்கு குடை பிடிபத்ட்கு அவரிடம் அனுமதி பெறவேண்டும் என்பது வேறை. குடை பிடிப்பதோ இல்லையோ என்பதை தீர்மானிக்கும் உரிமை உங்கள் ஒருவரிடமும் இல்லை.

  Reply
 • Ajith
  Ajith

  Mr. Chandran
  It is true that Douglas contributed more to his pocket than what was available to people under normal cicumstances. It is true the Douglas company joined with Rajapakse company responsible for abductions, ransom, murders. It is true that today all transport companies belongs to Rajapakse family and Douglas Company. We should appreciate his services.
  It is surprise that the Douglas comapany which joined in hand in hand to defeat LTTE unable to control abductions, rapes and murders happening in front of them. Why? Because they are the criminals and the law and justice system in their hands. It is not only in tamil homeland but also in Sinhala homeland. People are aware that there are few criminals working on behalf of Rajapakse company in foregin lands try to put everything in LTTE and do all the nasty work back home. It is time for true sinhalese and tamils in the diaspora work together against these criminals and bring them under international law.

  Reply
 • NANTHA
  NANTHA

  புலிகளின் பிரச்சனை என்னவென்றால் டக்லஸ் எப்படி உயிரோடு இருக்க முடியும் என்பதே. நோர்வேகாரம் யுஎன்பி சிங்களவரோடும் சேர்ந்து “சமாதானம்” என்ற பெயரில் புலிகள் வன்னியை பெற்று காட்டாட்ட்சி நடத்தியபோது “புலிகள்” மாத்திரம் ஆயுதம் வைத்திருக்கலாம் மற்றைய குழுக்கள் ஆயுதம் வைத்திருக்க முடியாது என்ற அடிப்படையில் மற்றைய குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டன.

  புலிகள் “அரசியல் வேலை” செய்ய எந்தப்பகுதிக்கும் போய் வரலாம் என்பதும் அந்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்து. புலிகளின் அரசியல் என்ன என்று இதுவரை தெரியவில்லை.

  புலிகளின் கொலைகள், கப்பம் வாங்குதல், எ-9 பாதையில் கொள்ளை, தமிழருக்கு விசா, என்பன ஒப்பந்தத்தில் இல்லாதவை. ஆனால் புலிகள் செய்தவை. இவற்றை எல்லாம் அப்போதும் இப்போதும் ஆமோதிக்கும் கூட்டங்கள் டக்லஸ் பற்றி கதைப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

  வடக்கிலும் கிழக்கிலும் டக்லஸ் தேவானந்தாவின் கட்சியை சேர்ந்தவர்களான 591 பேர் இந்த “நோர்வே” சமாதான காலத்தில் புலிகளால் கொல்லப்பட்டனர். அதில் கேவலம் என்னவென்றால் “கண்காணிப்பு குழு” என்று இருந்த நோர்வேகாரர் புலிகளால் செய்யப்பட்ட கொலை பற்றிய முறைப்பாடுகளைக் கூட ஏற்கமுடியாது என்று புலிக்கு ஆதரவாக செயல்பட்டதுதான்.

  ஈ பி டி பி அலுவலகங்களை அடித்து மூட புலிகளின் “அரசியல்” பிரிவு பல முயற்சிகள் செய்து தோல்வி கண்டனர். டக்லஸ் கட்சி அலுவலகங்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

  வவுனியாவில் புலிகளின் அலுவலகங்களை மக்கள் ஆக்கிரமித்து புலிகளால் “விசாரணைக்கு” கடத்திச் செல்லப்பட்டவர்களை மீட்டுச் சென்றனர். பின்னர் புலிகளின் “அரசியல்” வேலை காணாமல் போய்விட்டது.

  புலிகளின் அராஜகங்களுக்கு துணை போனவர்கள் இன்னமும் யாழ் மண்ணில் உள்ளனர். அவர்களுக்கு இப்போதுள்ள பயம் யாதெனில் “அடையாளம்” காணப்பட்டு உதை விழுமா அல்லது பனாகொட போக வேண்டி வருமா என்பதுதான். அதற்கு முன்னர் “தப்பி” ஓட வேண்டும் என்பதும் புலி இல்லாததால் அவர்களுக்கு “வருமானம்” இல்லை என்பதும் உண்மை.

  அவர்கள் இப்போது “ஆட்கடத்தல்” கொலை என்பனவற்றைத் தவிர “பணம்” சேர்க்க வேறு மார்க்கம் இல்லாது தவிக்கின்றனர்.

  புலிகள் முள்ளி வாய்க்காலில் முத்தி அடைந்ததை அடுத்து “வெள்ளை” வான் கதை நின்று போனது. ஏனென்றால் இந்த வெள்ளை வான் கதை புலிகும்பலால் திரிக்கப்பட்ட கதை. தவிர இந்த வான் விளையாட்டு புலிக் கிரிமினல்களுக்கு அத்துப்படியான சமாச்சாரம். எல்லா இயக்கங்களும் இருந்த காலத்திலேயே புலிகள் மற்றைய இயக்கங்கள் பாவித்த வாகனங்களை ஒத்த வாகனங்களில் சென்று வீடுகளில் கொள்ளையடித்தவர்கள்.

  யாழ்ப்பாணத்து பத்திரிகை நடத்தும் வித்யாதரன் கோஷ்டி புலிகளின் ஆஸ்தான வித்வான்கள் மாத்திரமின்றி யாழ்ப்பாணத்து பத்திரிகையாளர்களின் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள். இவர்கள் என்ன எழுதுவார்கள் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்குப் புரியும்

  டக்ளசுக்கு இன்னமும் யாழ் மக்களின் மீது நம்பிக்கை உள்ளது மாத்திரமின்றி வாக்குப் பலத்தில் நிற்க வேண்டும் என்ற கொள்கையும் உள்ளதாகவே புலப்படுகிறது. யாழ்பாணிகளின் “பாரம்பரிய” பெட்டிச கலாச்சாரத்தில் ஊறியவர்களுக்கும், புலி என்று வயிறு வளர்த்தவர்களுக்கும் டக்ளசின் இருப்பு ஒரு பிரச்சனையாகவே உள்ளது.

  Reply
 • thurai
  thurai

  அஜீத் டக்ளசையும் ராசபக்சவையும் குற்ரம் காணுமுன், உங்களிற்கு புலிகளின் காலத்தில் புலிகள்விட்ட தவறுகழும் குற்ரங்கழும் தெரியவில்லையா? தெரிந்தும் தெரியாமலா இருந்தீர்கள்? எப்போதாவது தட்டிக் கேட்டுள்ளீரா?

  புலிகளை குற்ரம் காணும் எங்களிற்கு டக்ளசும், இராசபக்சவும் விடும் தவ்றுகள் தெரியாமலில்லை. ஆனால் புலிக்ழுடன் ஒப்பிடும்போது புலத்திலாவது தமிழர் நிம்மதியாக வாழக்கூடியதா உள்ளதல்லவா.- துரை

  Reply
 • BC
  BC

  கூட்டமைப்பை சேர்ந்த சரணபவனும், GTV யும் கூறுவது எப்படி நம்பக தன்மையுடையதாக இருக்கும்? புலிகளின் ஆககூடிய கோபத்தை பெற்றவர் டக்கிளஸ் தான்.கல்மடுக்குளத்தை தகர்த்தகையோடு டக்கிளஸ்சை போடடு தள்ளியதிற்கு அவர்கள் வைத்த பார்ட்டியும் வீணாகிவிட்டது. புலி ஆதரவாளர்களை சந்தேசபடுத்த வேண்டும் என்றால் டக்கிளஸ் தூற்றி இரண்டு வரியாவது எழுத வேண்டும்.

  Reply
 • Ajith
  Ajith

  அஜீத் டக்ளசையும் ராசபக்சவையும் குற்ரம் காணுமுன், உங்களிற்கு புலிகளின் காலத்தில் புலிகள்விட்ட தவறுகழும் குற்ரங்கழும் தெரியவில்லையா?

  I am asking the same question to you. Didn’t you know the crimes of Sinhala nation and other militant groups and Indian government against before, during and after LTTE. How long you all are going to say LTTE did that and this and so whats wrong with we do. Why you all get angry when people raise their voice against crminals. According to you all LTTE is a terrorist group and Rajapakse and Douglas are elected members of a democratically elected government and responsible for law and order. Unfortunately, the reality is that Rajapakse and Douglas company are worst than Al-queda terrorist group or Hitler. I lived longer than you all with people under the rule of both LTTE and the rule of Sinhala military in tamil homeland and Sinhala homeland. I know what LTTE and what Sinhala military did. We cannot forget the the burnt bodies in 1958, 1977, 1983. We cannot forget the burning of Jaffna library. We cannot forget about the Welikade massacre. We cannot forget the bombing of Navali church or hospitals in Vanni. We cannot forget the herding of 300,000 inside the warbed wire concentration camp to rape our sisters and mothers, we cannot forget the barriers to bring food, soap and necessities. I still can remember washing our clothes in ashes and palmyrah fruit. I cannot forget the life inside bunkers along with snakes and and night. I am not a politician or belong to any militant movements. I am a civilian and was a civil servant served in all areas of Sri Lanka. I myself suffered under Sinhala military for no reason other than my identity is tamil.

  I know why you all doing this. You all want take revenge against the innocent tamils who still support for independence from Sinhala oppression. You wants to take a revenge because they didn’t give a welcome to King Rajapakse when he visited Jaffna after massacring a 100,000 tamils in the Vanni and suffercating 300,000 in the concentration camps. I know you have the freedom to talk about LTTE but no freedom to talk about Rajapakse or Douglas.

  On the name of our people, On the name of God, On the name of humanity, I can only make a huble request: Please leave the remaining tamils to live peacefully in their lands with their love ones and homes at least to give a breath of free air.

  Reply
 • thurai
  thurai

  ஜேர்மன் நாட்டினை குண்டுகள் போட்டு அமெரிக்காவும், இங்கிலாந்தும் அழித்தன. அழித்த படைகள் இன்ன்மும் ஜேர்மனியில் 60 ஆண்டுகளிற்குப் பின்னும் இருக்கின்றன்ர். இதை விட உலக நாடுகளிலிருந்து பல்வேறு இனத்தவ்ர்கள் குடியேறியுள்ளனர்.

  ஈழத் தமிழர்களிற்கு மட்டும் சிங்களவ்ர் செய்தவ்ற்ரை மறக்கமுடியாது. நூல்நிலயம் எரித்ததை 100 தட்வை சொல்லலாம் ஆனால் அரசாங்கம் திருத்தி அமைத்தையும் அதற்கு நன்றி சொல்லவும் தமிழில் ஒர் வார்த்தையும் வராது. இதுதான் தமிழ் தேசியத்தின், ஈழத் தமிழரின் பண்பா?

  தூங்கிய சிங்கத்தை தூக்கத்தில் வைத்தே பிடிக்க விரும்புபவன் பிடிக்க வேண்டும். அதற்கு சினமூட்டி சீற வைத்து மனித்ர்களைப் பலியாக்கியவர்கள் தான் விடுதலைப்புலிகழும் புலம்பெயர் ஆதரவாளர்க்ழும். இன்னமும் இது தொடர்கின்றது. இதனைப் புரியாதவ்ர்கள் புலிகளிற்கு தேசபக்த்தர்கள். இந்த உண்மையை ஏற்று மாற்ருக் கருத்துக் கொண்டவர்கள் துரோகிகள்.

  தமிழர்களால் அடக்கப்பட்ட தமிழர்க்ழும், முஸ்லிம் மக்கழும் வாய்மூடிக் கொண்டு தமிழ்தேசியத்தை ஏற்கவேண்டும், ஆனால் தமிழனை ஆழத்துடிக்கும் தமிழரால் மட்டும் சிங்களவ்ர் செய்தவற்ரைப் பொறுக்க் முடியாது. இவர்களிற்கு மனிதர்களை விட மண்ணிலும், மொழியிலுமே
  உயிர். திருந்த வேண்டியவர்கள் தமிழர்கள். அதன் பின்பே விடுதலை என்றால் என்ன் என்பதை உண்ர்வார்கள்.

  தன்னைத்தானே தமிழினம் திருத்தாதவரை என்றும் அடிமைகக்ளே. இதுநாடு கிடைத்தாலும் தொடரும்.

  துரை

  Reply
 • Ajith
  Ajith

  Mr Thurai,
  நூல்நிலயம் எரித்ததை 100 தட்வை சொல்லலாம் ஆனால் அரசாங்கம் திருத்தி அமைத்தையும் அதற்கு நன்றி சொல்லவும் தமிழில் ஒர் வார்த்தையும் வராது.
  Wonderful philosophy. Sinhalas are equivalent to God because he can all the functions (destruction, creation again destruction) only in tamil areas. In Sinhala areas his function is only creation. How many libraries were bombed in Sinhala areas, How many hospitals were bombed in Sinhala areas? How many business were burnt and destryoed in Sinhala areas? Why it happened all in tamil areas before, during and after LTTE. Remember it is the same Sinhala state did the destruction completely and repaired partially. What gurantee is there that destruction will not happen again? Who decides the destruction and repairs? It is the Sinhala ministers, Sinhala police and Sinhala military.

  Mr. Thurai, you must understand it is one-cided act always. The power remains with one community and decides whenever they wants. It is not for the tigers justice. Justice should be done for tamils. Why should Sinhala need power in the tamil homeland? Why they should decide what tamils can eat and drink? Why should the state wants to build Buddhist temples in tamil areas?

  I am not a racist. Tamils need justice and the Sinhala state is not prepared to accept it. Tamil needs security and Sinhala states are not prepared to accept it. Tamils need a say in their development of their area but Sinhala states are not prepared to accept it. Let forget about LTTE for a moment and tell frankly whether justice have been done to tamils in this land by Sinhala states in the past, present and what probabilities are there in the future?

  Reply
 • chandran.raja
  chandran.raja

  திரு.சென் அவர்களே! சிந்திப்பதை யாரும் தடுக்க முடியாது. உங்களை மட்டுமல்ல ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் தான். தொடர்ந்து சிந்தியுங்கள். ஆனால்… ஆகக்குறைந்தது இருபத்தைந்தது வருடங்கள் இலங்கை வரலாற்றை பற்றியோ அதுவும் வடகிழக்கு தமிழர்கள் வாழ்வு பற்றியோ சரியான தரவுகளை செய்திகளை கொண்டிருப்பவனால் ஒருகாலும் சரியாக சிந்திக்க முடியாது. நீங்கள் கொடுக்கிற தரவுகள் உங்கள் சிந்தனைகள் அம்பலப்படுத்தி விடுகின்றன. தொடர்ந்து சிந்தியுங்கள். சிந்திக்கும் போது புலிகள் காட்டிலும் பங்கரிலும் அரசாங்கம் நடத்தியபோது ஈ.பி.டி.பி. டக்கிஸ் தேவானந்தா போன்றவர்கள் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதை உங்கள் இடைவெளியில்லாத சிந்தனைக்கு ஞபாகமூட்ட விரும்புகிறேன்.
  இங்கு பிரச்சனை கட்சியோ கட்சி தலைவர்களோ பிரச்சனையல்ல. தமிழ்மக்கள் சரியான வழியில் வழிநடத்தப் படுகிறார்கள் என்பதே!. உங்கள் சிந்தனை அதை நோக்கி நகரட்டும். அதில் மகிழ்சியடைவதில் முதல் மனிதனாக நானும்-நாமும் இருப்பேன்-இருப்போம.

  Reply
 • thurai
  thurai

  அஜீத் தமிழர்களிற்கு சம உருமை பாதுகாப்பு வேண்டுமென்பதை எந்தத்தமிழனும் ம்றுக்கமாட்டான். தமிழ் பகுதிகளில் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த்போது மக்கள் சிங்களவ்ர்களால் செய்யப்பட்ட கொடுமையிலும் மேலாக அனுபவித்ததாலேயே இன்று சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதே மேல் என்னும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன்ர்.

  அதுமட்டுமல்ல போரினாலோ, அரசியலாலோ சிங்களவ்ர்களை ஈழத்தில் வெல்ல முடியாத அள்விற்கு புலிகள் தமிழர்களை தள்ளிவிட்டு அவர்கழும் ஓடித்தப்பி விட்டார்கள். இப்போ தமிழினம் அனுபவிப்பது தண்டனை. புலிகளை வளரவிட்டத்தற்கு தாமே அனுபவிக்கின்றார்கள். இதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் அனுபவித்தவ்ர்களே இப்போ காலம் கடந்தாவது காட்டிக் கொடுக்கத்தொடங்கி விட்டார்கள்.

  ஓர் இனம் விடுதலைக்கும் போராட்டத்திற்கும் தம்மை தயார்படுத்தியுள்ளதா என்பதை முதலில் அறியவேண்டும். 1958 ம் ஆண்டு கலவரத்தின் போது வவுனியாவை தாக்கவந்த சிங்களவ்ர்களை சுடுவத்ற்கு முஸ்லிம் வியாபாரி ஒருவரே தோட்டாக்கழும் துவக்குகழும் தமிழர்களிர்கு வழங்கி
  உதவினார். இதனைப் பற்ரி உங்கள் தேசியத்தலவ்னிற்கோ அவ்ரினால் பலிகொடுக்கப்பட்ட 30 ஆயிரம் போரளிகளிற்கோ தெரிந்திருக்கும்மென நான் நம்பவில்லை.

  இப்படியான முஸ்லிம்களை துரத்தும் போது வாய்மூடிய்ருந்தது யாழ் தமிழர் சமுதாயம். புலிக்கு பயத்திலா அல்லது இவர்களின் அசட்டுத்தனமா அல்ல்து கொடூர மனங்களா? தமிழினம் விட்ட தவறிற்கு தண்டனை அனுபவித்தே தீரவேண்டும். அதன் பின்பே விடுதலை. விட்ட தவறிற்கு தண்டனையுமில்லை, மன்னிப்புக் கேட்கும் பழக்கமுமில்லையென்றால் அது புலிக்கும் புலிகளின் தலைவரின் இராட்சியத்திலேயே மட்டும்தான்.

  துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…ஈழத் தமிழர்களிற்கு மட்டும் சிங்களவ்ர் செய்தவ்ற்ரை மறக்கமுடியாது. நூல்நிலயம் எரித்ததை 100 தட்வை சொல்லலாம் ஆனால் அரசாங்கம் திருத்தி அமைத்தையும் அதற்கு நன்றி சொல்லவும் தமிழில் ஒர் வார்த்தையும் வராது. இதுதான் தமிழ் தேசியத்தின், ஈழத் தமிழரின் பண்பா?….//

  உங்களைப் பொறுத்தவரை நூல் நிலையம் என்பது ஒரு சீமெந்து கட்டடம் என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் அதற்குள் அரிய ஓலைச்சுவடிகள் உட்பட 90,000க்கும் அதிகமாம புத்தகங்கள் இருந்தனவே?

  Reply
 • thurai
  thurai

  //உங்களைப் பொறுத்தவரை நூல் நிலையம் என்பது ஒரு சீமெந்து கட்டடம் என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது ஆனால் அதற்குள் அரிய ஓலைச்சுவடிகள் உட்பட 90,000க்கும் அதிகமாம புத்தகங்கள் இருந்தனவே//சாந்தன்

  அது ஒரு கலாச்சார படுகொலையென்பது எல்லோரிற்கும் தெரியும். இதனால்தான் விடுதலை இயக்கஙகள் தமிழரிடம் வளர்வற்கு முடிந்தன. நூல் நிலய அழிவிலும் பார்க்க மேலான அழிவை விடுதலைப் போராட்டம் தமிழர்களிற்கு விட்டுச்சென்றுள்ளதை இன்னமும் உணராதவர்கள் தமிழரிமல்ல சாதாரண மனிதருமல்ல.

  துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //..அது ஒரு கலாச்சார படுகொலையென்பது எல்லோரிற்கும் தெரியும். ….. ..//

  //….இதுதான் தமிழ் தேசியத்தின், ஈழத் தமிழரின் பண்பா?…//

  கலாச்சாரப்படுகொலையை கட்டிடம் கட்டி வெள்ளையடிப்பதன் மூலம் மூடிமறைக்க முடியாது. இதற்கு உலகில் இன்னும் பல உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் பல நூலக எரிப்புக்கு மிக மிக முன்னரே நடந்தவை. சில அரசுகள் அவற்றுக்கு விசாரணைநடாத்தி, மன்னிப்புக்கோரி,தண்டனை வழங்கியும் இன்றும் அவை சுட்டிக்காட்டப்படுவது உண்டு. அவை சுட்டிகாட்டப்படுவது ஒரு போதும் அம்மக்கள் ‘பண்பாடு’ அற்ற செயல் என சொல்வதில்லை!

  Reply
 • thurai
  thurai

  //சில அரசுகள் அவற்றுக்கு விசாரணைநடாத்தி, மன்னிப்புக்கோரி,தண்டனை வழங்கியும் இன்றும் அவை சுட்டிக்காட்டப்படுவது உண்டு. அவை சுட்டிகாட்டப்படுவது ஒரு போதும் அம்மக்கள் ‘பண்பாடு’ அற்ற செயல் என சொல்வதில்லை!//சாந்தன்

  இப்படியான கருத்துக்களை நான் ஏற்கின்றேன் ஆனல் புலிகளிற்கும் புலியின் ஆதரவாளர்கழும் விசாரணை, மன்னிப்பு, தண்டணை என்பன பிறரிற்கு மட்டுமே. புலிகழும் புலிகளின் ஆதரவாளர்கழும் தலைவரும் கூட எதனையும் செய்யலாம். இவர்களின் வ்ழி வந்தவர்கழும் நடப்பவடர்களிற்கும் யாரையாவது குற்ரம் சுமத்த என்ன அருகதையுண்டு?

  துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //… புலிகழும் புலிகளின் ஆதரவாளர்கழும் தலைவரும் கூட எதனையும் செய்யலாம். இவர்களின் வ்ழி வந்தவர்கழும் நடப்பவடர்களிற்கும் யாரையாவது குற்ரம் சுமத்த என்ன அருகதையுண்டு?…//

  நீங்கள் எப்போதும் சொல்வது புலிகள் அரசல்ல மாறாக ஒரு ‘பயங்கரவாத’ இயக்கம் என்று்ம், புலிகளையும் ஒரு ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட’ அரசையும் சமனாகப் பார்க்க முடியாது என்றுமே. அது உங்கள் மனதாரச் சொல்லப்பட்டதாயின் ஸ்ரீலங்கா அரசு தவறு செய்யும்போது அதை புலியுடன் ‘தராசில்’ வைக்கக்கூடாது. உலகில் நடக்கும் குற்றச்செயல்களுக்கு பதிலாக பொலிஸ் குற்றச்செயல் புரிந்துவிட்டு ‘அவையள் என்ன திறமோ’ பாணியில் கேள்வி கேட்டால், நாம் எல்லோரும் இந்தியா, ஸ்ரீலங்காவில் நடப்பது போலவே நடத்தப்பட்டிருப்போம்.

  //….இதுதான் தமிழ் தேசியத்தின், ஈழத் தமிழரின் பண்பா?…//
  குற்றச்செயலை செய்யவில்லை என மறுப்பதிலும் விட அதை மறைத்து ‘வெள்ளையடிப்பது’ம் அவற்றைத் தட்டிக்கேட்பவர்களை அவர்களின் வாழ்க்கை முறை பொருளாதார நிலை, கல்வித்தகைமை, பண்பாட்டு நிகழ்வுகளை கீழ்த்தரப்படுத்தி குற்றத்தை மறைக்க முயல்தல் மிகப்பாரதூரமான குற்றமாகவே புலம்பெயர் நாட்டில் சொல்லப்படுகிறது மட்டுமல்ல நடைமுறையும் அதுவே!

  Reply
 • thurai
  thurai

  //அது உங்கள் மனதாரச் சொல்லப்பட்டதாயின் ஸ்ரீலங்கா அரசு தவறு செய்யும்போது அதை புலியுடன் ‘தராசில்’ வைக்கக்கூடாது//சாந்தன்
  புலிகள் உலகின் பயங்கரவாதிகள். இராஜபக்ச, டக்ளஸ் அரசியல் வாதிகள். இவர்களின் குற்ரங்கள் நிரூபிக்கப்பட்டால் மக்களே இவர்களை
  தூக்கியெறிவார்கள்.

  இவர்கள் ஆட்களை வைத்து கொலைகள் செய்வதாக குற்ரம் சாட்டப்படலாம். அதனை சிலர் உறுதிப்படுத்தலாம். ஆனால் தற்கொலை போராளியை தயார்படுதிவிட்டு, கொலைகள் முடிய தற்கொலை படைக்காரரிற்கு மாவீரர் பட்டம் சூட்டி, அவர்களிற்கு உலகமுழுவதும் பூசை செய்து வணங்கும் குழுவொன்றை தமிழரின் விடுதலை உருமையோடு எப்படி சம்பந்தப்படுத்த முடியும்? இவர்கள் சாதரண மனிதர்களேயில்லை.

  சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளில் குற்ரவாளிகள் இருக்கலாம் அதற்கா புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் சாதரண அரசியல்வாதிகழுடன் சமனாகப் பார்க்கமுடியாது.

  துரை

  Reply
 • Ajith
  Ajith

  அஜீத் தமிழர்களிற்கு சம உருமை பாதுகாப்பு வேண்டுமென்பதை எந்தத்தமிழனும் மறுக்கமாட்டான். தமிழ் பகுதிகளில் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த்போது மக்கள் சிங்களவ்ர்களால் செய்யப்பட்ட கொடுமையிலும் மேலாக அனுபவித்ததாலேயே இன்று சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதே மேல் என்னும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன்ர்.
  Mr. Thurai.
  When did they say or decide that சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதே மேல் என்னும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன்ர். Do you mean your word is tamils voice. If they would have decided to live together with Sinhala Rajapakse would have won these elections in the North-East with all these irregularities and violence.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளில் குற்ரவாளிகள் இருக்கலாம் அதற்கா புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் சாதரண அரசியல்வாதிகழுடன் சமனாகப் பார்க்கமுடியாது…../
  அவ்வாறு ’பார்க்காத’ நீங்கள் ஏன் அரசுமீது குற்றம் என வரும்போது புலிகளை இழுக்கிறீர்கள். ஒரு வேளை சமனாக பார்க்க முடியாது அவர்களை ‘மேல்த்தட்டில்’ வைத்துப் பார்க்கவேண்டும் என சொல்கிரீர்களோ தெரியவில்லை. உலக அரசியலில் அரசு ஒன்றுக்கிருக்கும் கடமையையும் ஆயுதக்குழுவுக்கு இருக்கும் கடமையையும் பற்றிச் சொல்லப்பட்டிருப்பவை பற்றி அறிந்து கொள்ள முயலுங்கள்.

  Reply
 • BC
  BC

  புலி கொடுமை தாங்காமல் மக்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ சிங்கள பகுதிக்கு சென்றனர். ஆனால் வெளிநாட்டில் உள்ள தீவிர புலி ஆதரவாளர்கள் தங்கள் உறவினரை கொண்டு சிங்கள பகுதிகளில் வீடு Flat வாங்க வைத்து அவர்களை அங்கே குடியமர்த்தினார்களே, அதைதான் சிறந்த தொலை நோக்கு பார்வை என்பது.

  Reply
 • thurai
  thurai

  அஜீத் புலிகளின் ஆதிக்கம் வடக்கில் இருக்கும்போது தெற்கு நோக்கியே தமிழர் குடியேறினார்கள். இப்போ புலிகளை அரசாங்கம் அழித்த பின்னரே திரும்பியுள்ளனர். புலிகளின் அதிகராம் உலகில் எங்கு இருந்தாலும் அது தமிழர்களிற்கும் முழு இலங்கைக்கும் ஆபத்தானது. இதன் காரணமாகவே தமிழரின் இன்றைய நிலைமை. புலிகள் எப்போ உலகினில் இல்லாமல் போகின்றார்களோ, அன்றுதான் தமிழரின் குரலினை உலகம் கேட்கும்.

  இலங்கையில் தமிழர்க்ளிற்கு பிரசிசினை இல்லையென்பதில்லை. பிரச்சினையை தீர்க்க புறப்பட்ட புலிகளே உலகமுழுவதும் பிரச்சினைக்குரிய தமிழர்களாக மாறிவிட்டார்கள்.

  துரை

  Reply
 • varathan
  varathan

  கிளிநொச்சியை வென்றது போன்று மக்கள் மனங்களை வெல்வதும் எமது பாரிய பொறுப்பாகும். முப்படையினரின் பங்களிப்புடன் வடபகுதி மக்களின் நலன்களை பேண பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
  இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய பாதுகாப்பு பத்திரிக்கையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் கூட்டம் கூட்டமாக தெருக்களில் இருந்த ராணுவ பாதுகாப்பு தற்போது அகற்றப்பட்டு யாருக்கும் புலப்படாத வகைகளில் திடமான தொழில்நுட்பம் மற்றும் மதிநுட்பத்துடன் எங்கள் வீரர்கள் தற்போது செயலாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

  அரசாங்கமே இவ்வாறு திட்டமிட்டு செயலாற்றுவதாக பொதுமக்கள் ஆழமான கருத்தை தொடர்ச்சியாக தெரிவிக்கின்றனர். கோத்தபயாவின் மேற்குறிப்பிடப்படும் கருத்தும் உள்ளர்த்தங்கள் நிறைந்ததே. நடக்கும் கடத்தல்களைப் பார்த்தால் அதை இராணுவம் செய்யவில்லை என்றால் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எல்லோரும் திருடர்கள் கடத்தல்காரர்களாக மாறி விட்டார்கள் என்றே பொருள்படும். சந்திரிகாவும் ரணிலும் இந்த சகோதரர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். என்னே கிரிமினல் புத்தி!

  Reply