இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவர் கொழும்பில் கைது!

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் பணியாற்றிய மருத்துவர் கைலைநாதன் சுதர்சன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களாக  தன்னை ஒரு மருத்தவர் என வெளிக்காட்டாது நிவாரண முகாமிலிருந்து வெளியேறி தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து இந்தியா சென்றிருந்தார்.

அங்கு தனது மேற்படிப்பு தொடர்பான விடயங்களை கவனித்திருந்த வேளை, ‘கியூ’ பிரிவினருக்கு இவர் ஒரு மருத்துவர் என்றும், இறுதி யுத்தம் வரை மருத்துவராக பணியாற்றியவர் எனவும் தகவல் கிடைத்தது.  இதனையடுத்து இவரிடம் சென்று பல தடவைகள் விசாரணை நடத்திய ‘கியூ’பிரிவுப் பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர். 

இந்நிலையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் சிங்கப்பூர் சென்றிருந்த அவர் மீண்டும் தமிழகத்திலிருந்து குடும்பத்துடன்  சிங்கப்பூர் சென்றார். எனினும், ‘கியூ’ பிரிவு பொலிஸார் சிங்கப்பூர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விமான நிலையத்தில் வைத்தே அவரையும் அவரது குடும்பத்தினரையும் சிங்கப்பூர் பொலிஸார் இலங்கைக்கு நாடு கடத்தினர். பின்னர் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு சிங்கப்பூர் புலனாய்வுப்பிரிவினர் வழங்கிய தகவலையடுத்து  கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப்பிரிவின் இரண்டாம் மாடியில் விசாரணகளுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

16 Comments

 • rohan
  rohan

  வெல் டண் கியூ! வெல் டண் சிங்கப்பூர்!!

  இறுதி யுத்தத்தின் போது இலங்கை ஒரு தமிழனையும் கொல்லவில்லை. அங்கு தலையிடிக்கு மருந்து கொடுத்தவருக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மருந்து கொடுக்கப்படுகிறது.

  Reply
 • வதனி
  வதனி

  //அங்கு தலையிடிக்கு மருந்து கொடுத்தவருக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மருந்து கொடுக்கப்படுகிறது// rohan

  தலையிடிக்குத்தான் மருந்து கொடுத்தவர் என்டால் ஏன் முள்ளிவாய்க்காலில் தன்னை ஒரு மருத்துவர் என வெளிக்காட்டாது நிவாரனமுகாமில் இருந்து வெளியேறினார்?

  வதனி

  Reply
 • rohan
  rohan

  “தலையிடிக்குத்தான் மருந்து கொடுத்தவர் என்டால் ஏன் முள்ளிவாய்க்காலில் தன்னை ஒரு மருத்துவர் என வெளிக்காட்டாது நிவாரனமுகாமில் இருந்து வெளியேறினார்?” /வதனி
  அப்படியென்றால், அந்த மருத்துவர் ஏதோ புலி சொன்னது போல ஆயிரம் ஆயிரமாய்க் காயம்பட்ட மற்றும் செத்துப் போன தமிழர்களுக்கு மருத்துவம் செய்தார் என்றா சொல்ல வருகிறீர்கள்? இப்படி ஒரு புலிப் பிரசாரம் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வருகிறது?

  Reply
 • Ajith
  Ajith

  தலையிடிக்குத்தான் மருந்து கொடுத்தவர் என்டால் ஏன் முள்ளிவாய்க்காலில் தன்னை ஒரு மருத்துவர் என வெளிக்காட்டாது நிவாரனமுகாமில் இருந்து வெளியேறினார்?

  If he would have said that he is a doctor served in Vanni, Rajapkase would have offered to contest under his leadership in the election or sent him immediately to the place he sent hundreds of tamils.

  Reply
 • suagathy arumugam
  suagathy arumugam

  Diasporas are very cynical

  Reply
 • charli
  charli

  மற்றும் “…செத்துப் போன தமிழர்களுக்கு” மருத்துவம் செய்தார் ……???./rohan
  What type of மருத்துவம்…..

  Reply
 • rohan
  rohan

  மற்றும் “…செத்துப் போன தமிழர்களுக்கு” மருத்துவம் செய்தார் ……???./rohan
  What type of மருத்துவம்…..

  ‘உண்மையாகவே’ சாக முன்னர் உள்ளத்து உணர்வுகளிலும் இழப்புகளின் பாதிப்பிலும் பல உடல் இயக்கங்களிலும் செத்துப் போய் கடைசி ஒரு மாத காலம் முள்ளிவாய்க்கால் பக்கம் ‘வாழ்ந்த’ நம்மவர்களை நீங்கள் பார்க்கவில்லை என்றால் யார் என்ன செய்ய?

  “விடை கொடு எங்கள் நாடே – கடல் வாசல் தெளிக்கும் வீடே – பறவையின் கூடே – பனை மரக் காடே – மறு முறை ஒரு முறை பார்ப்போமா …” என்று ஆரம்பித்து “உதட்டில் புன்னகை தொலைத்தோம் – உயிரை உடலுக்குள் புதைத்தோம் – இன்று கூடுகள் போலே ஊர்வலம் போகின்றோம் ..” என்று தொடர்கின்ற போது நம்மவர்களை எண்ணி விதிர்த்துப் போகிற உணர்வு உஙளுக்கு இல்லாதிருக்கலாம் – மன்னித்துக் கொள்ளுங்கள் – அதிகம் எதிர்பார்த்து விட்டேனோ என்னவோ.

  Reply
 • NANTHA
  NANTHA

  அந்த மருத்துவர் ஒளித்து ஓடியதே அவர் “புலி” டாக்டர் என்பதினை எடுத்துக் காட்டுகிறது.

  Reply
 • accu
  accu

  றோகன் இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மற்றும் அங்கவீனர்களாக்கப்பட்ட மக்களுக்கு அந்த நிலையை ஏற்ப்படுத்தியவர்களில் ஒரு பங்கு பொறுப்பானவர்களான அரசை சாடும் நீங்கள் அம் மக்களை தம் உயிரை பாதுகப்பதற்க்காக வலிந்து இழுத்துச்சென்று கேடயமாக்கிப் பலிகொடுத்தபின் வெள்ளைக்கொடியுடன் தம் உயிரை பாதுகாக்க அரசிடம் சரணடைந்து கொல்லப்பட்ட மற்றும் இன்னும் சிறையில் இருக்கும் முழுப்பொறுப்பான கேவலங்கெட்ட புலித்தலைமையை பற்றி ஏன் ஒரு வார்த்தையும் எழுத்துவதில்லை?

  Reply
 • BC
  BC

  அவர் ஒரு புலி டொக்டர் என்பது தெளிவாகிறது.
  விடை கொடு எங்கள் நாடே என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் பாடலை இங்கே பார்த்ததால் ஞாபகத்துக்கு வருவது புலிகளை பற்றி ஒரு வசனம் படத்தில் வருகிறது. ஆயுதவியாபாரிகளின் சுயலாபத்திற்காகவே இப்படியான போர்கள் தொடரப்படுகின்றன என்று. உண்மையில் புலிகள் தங்கள் லாபத்திற்காக யுத்தம் செய்கிறார்கள். ஆயுதவியாபாரிகளும் அதனால் லாபம் அடைகிறார்கள். மக்கள் அழிகிறார்கள்.

  Reply
 • Rohan
  Rohan

  ‘அந்த மருத்துவர் ஒளித்து ஓடியதே அவர் “புலி” டாக்டர் என்பதினை எடுத்துக் காட்டுகிறது’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் military truckஐக் கண்டு ஓடுபவன் எல்லாம் புலி என்று இலங்கை இந்தியப் படையினர் சின்னஞ்சிறிசுகளையும் சுட்டுத் தள்ளினர் என்ற உண்மை அடியேனின் சிற்றறிவுக்குத் தெரியாது இத்தனை நாள் இருந்து விட்டேன். அவர்களை சபித்த குற்றத்துக்காக மானசீக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். கூடவே என் கண்களைத் திறந்து விட்ட நந்தாவுக்கும் நன்றிகள்.

  Reply
 • Rohan
  Rohan

  “இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மற்றும் அங்கவீனர்களாக்கப்பட்ட மக்களுக்கு அந்த நிலையை ஏற்ப்படுத்தியவர்களில் ஒரு பங்கு பொறுப்பானவர்களான அரசை சாடும் நீங்கள் கேவலங்கெட்ட புலித்தலைமையை பற்றி ஏன் ஒரு வார்த்தையும் எழுத்துவதில்லை?” என்பது நியாயமான கேள்வி தான்.

  போரில் தர்ம நியாயங்கள் இல்லை என்பது உண்மையே. புலி கொண்டு போனவர்கள் மட்டுமன்றி வழமை போல அரச படைகள் கிட்ட வரை சென்றுவிட்டு பின்வாங்கும் அல்லது தள்ளப்படும் என்ற நம்பிக்கையில் – better o fthe two evils என – அரசை நம்புவதை விட புலியை நம்பலாம் என்று நினைத்த புலி ஆதரவாளர்கள் அல்லாத பலரும் முள்ளிவாய்க்கால் வரை புலியுடன் போனதை நான் அறிவேன். புலி தனது பாவங்களுக்கு விலை கொடுத்து விட்டது. செத்த புலி அடிப்பதிலேயே பலர் முனைப்பாக இருப்பது குறித்து இங்கு பல முறை நான் எழுதியிருக்கிறேன்.

  அரச படைகள் வகை தொகையாக அப்பாவி மக்களைக் கொன்றதை மறுக்கவும் மறைக்கவும் முயலும் தமிழ் பேசும் மாற்றுக்கருத்தாளர்கள் என்னை வெறுப்பேற்றுகிறார்கள். இந்த அரசு இப்படிச் செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்தப் பாவங்களுக்கு அவர்கள் இன்னமும் சரியான விலை கொடுக்கவில்லை.

  Reply
 • NANTHA
  NANTHA

  மிலிட்டரி ட்ரக் வருவதைக் கண்டு ஓடிய சிறுவர்களைச் சுட்டதாக இதுவரயில் கதை இல்லை. ஆனால் அந்த வண்டிகளின் மீது குண்டு வீசிய “பொடியங்கள்”பற்றி வாசித்திருக்கிறோம்!

  Reply
 • Rohan
  Rohan

  “மிலிட்டரி ட்ரக் வருவதைக் கண்டு ஓடிய சிறுவர்களைச் சுட்டதாக இதுவரயில் கதை இல்லை.” என்ற வாசகம், ஜே ஆர் பெயருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் உட்பட எத்தனையோ உள்விடயங்கள் தெரிந்த ஒருவரிடமிருந்து வந்திருப்பது வேடிக்கை.

  வண்டிகளின் மீது “பொடியங்கள்” குண்டு வீசியது உண்மையாக இருக்கலாம். ஆனால், பெருமளவு ட்ரக் தாக்குதல்கள் கண்ணிவெடிகளாகவே இருந்திருக்கின்றன. துரத்திச் சுட்ட சின்னஞ்சிறுசுகளுக்குக் குண்டு வீசிய கதை கட்டப்பட்டது எனக்குத் தெரிந்த மூன்று சூட்டுக் கொலைகளின் பின் நடந்தது. “அந்த வண்டிகளின் மீது குண்டு வீசிய “பொடியங்கள்”பற்றி வாசித்திருக்கிறோம்” என்று சொல்லப்படும் வாசகத்தின் உண்மைத் தன்மை தெரிகிறதா?

  Reply
 • NANTHA
  NANTHA

  ஜே ஆருக்கு மாத்திரமல்ல வேறு பலருக்கும் எழுதப்பட்ட கடிதங்களை படிக்கும் வாய்ப்பு நந்தாவுக்கு இருந்திருக்கிறது. அது பற்றி அங்கலாய்த்து பயன் கிடைக்காது.

  ரோகனுக்கு புலிகள் எதுவுமே செய்யாத “சாதுவான” பிராணிகள். என்வே நம்பகத்தன்மை பற்றி இவரின் கதைகள் இவரே படித்துச் சந்தோஷப்படலாம்!

  Reply
 • Ajith
  Ajith

  “மிலிட்டரி ட்ரக் வருவதைக் கண்டு ஓடிய சிறுவர்களைச் சுட்டதாக இதுவரயில் கதை இல்லை.”/ Nantha,
  As you say he above is not a story. It is real. I personally watched with my eays Sinhala military suiting the children. This is not story. I am sure you can still remember in 1983, 19 school children who were running from school in a bus at Manipay was asked to stay in line and shot dead by your Sinhala blood thirsty army.

  Reply