உதிரத்தை உறைய வைத்த கானாவின் தோல்வி

gana.jpgஉலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் வெற்றி பெறும் வாய்ப்பை கானா அணி நூலிழையில் பறிகொடுத்தது.

உலகக் கோப்பை வரலாற்றில் காலிறுதியில் நுழைந்த மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்ற கானா அணி, நேற்றைய முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. பிற்பாதியில் உருகுவே அணியில்ன ஃபோர்லன் கோலடிக்க சமநிலையானது.

90 நிமிடங்களில் வேறு கோல் அடிக்கப்படாததால், கூடுதல் நேரம் தரப்பட்டது. கடைசி நிமிடத்தில் கானா அணி வீரர்கள் உருகுவே கோலை ஆக்கிரமித்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஒரு நிமிடம் பந்து உருகுவேயின் கோலைச் சுற்றிச் சுற்றியே வந்தது. இதனால் கோலுக்கு அருகே உருகுவே வீரர் லூயிஸ் சுவாரேஸ் நின்று கொண்டார். கோலுக்குள் பந்து வந்த போது தனது புறங் கையால் அவர் பந்தைத் தடுத்தார். இதை நடுவர் கவனிக்கத் தவறிவிட்டார். அடுத்த முறை பந்து கோலுக்குள் சென்றபோது பந்தைக் இரு கைகளாலும் தடுத்துவிட்டார். அவர் தடுக்காமல் இருந்திருந்தால் அந்த நிமிடமே கானா வெற்றி பெற்றிருக்கும்.

கையால் பந்தைத் தடுத்தால், சுவாரேஸுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதுடன், கானாவுக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. ஆனால் பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியதால், அதன் பிறகு பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது.

அந்த வாய்ப்பிலும் கானா வீரர்கள் இருமுறை கோலுக்குள் பந்தை அடிக்கத் தவறினர். இதனால், 4-2 என்கிற முறையில் உருகுவே வெற்றி பெற்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • மாயா
    மாயா

    கானாவின் தோல்விக்கு எதிர்பாராததாக இருந்தது. பெனல்டியை தவற விட்டது, கெப்டன் கோல் போடாதது எல்லாமே நேரம்மதான். ஆபிரிக்காவின் ஒரு கனவு சிதைந்தது.

    Reply
  • BC
    BC

    சுலபமா எடுங்கோ மாயா! இங்கே யாரும் இறப்பதும் இல்லை யாரும் அழிவதும் இல்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    இதெல்லாம் விளையாட்டில் சகசமப்பா?
    ஒருவர் தோல்வி கண்டால்தான் மற்றவர் வெற்றி பெறமுடியும்; புலி சிங்கம் விளையாட்டை போல்!!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    உடல்பயிற்றி விளையாட்டு ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. இது மனத்தையும் நல்வழியில் வைத்திருப்பதற்கு உதவுவது. இதற்கு ஊக்கம் கொடுத்து வளர்தெடுக்கப்பட வேண்டும்.
    இன்றையநிலை கவலையளிக்கிறதாகவே இருக்கிறது. ஒரு பக்கத்தில் பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்க மறுபக்கத்தில் அங்கும் இங்குமாக கோடிக்கணக்கான பணம் புரண்டு விளையாடுகிறது. ஆபிரிக்காகாரர் ஐரோப்பியருக்காக விளையாடலாம் ஐரோப்பியர் ஆபிரிக்கருக்காக விளையாடலாம். இதில் எங்கே நாட்டின் பெருமையை விளங்கிக் கொள்வது?. இதில் பார்வையாளரும் பந்தாக உதைபட்டுக் கொள்வதுண்டு. இது ஒருவகை சூதாட்டமாகப் போய்விட்டதுமல்லாமல் உழைப்பாளிமக்களின் அரசியல்தேவையைvமறைப்பதற்கு மூளைச்சலவை செய்கிற கருவியாகவும் மாறிவிட்டது இந்த விளையாட்டுத்துறை. புத்துணர்வு பெறவேண்டிய சமூகம் புத்துணர்வை அடைவுவைத்த கதையாக மாறிவருகிறது. இந்த நிலை மாறவேண்டும்?.

    Reply
  • Anpan
    Anpan

    கடைசியில் கையால் தட்டிய பந்தை கோல்ஆக கொடுத்திருக்கவேண்டும். இது கிரிக்கெற்றில் எல்பிடபிள்யூ ஐ ஒத்தது. உதைபந்hதாட்டத்திலும் சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். விளையாட்டில் வெற்றி தோல்வி மட்டும்தான் சகஜம். நடுவரின் தவறுகள் கண்டிக்கப்பட வேண்டிவை. உதைபந்தாட்டம் கிறிக்கெற் போட்டிகளில் இரசிகர்களிடம் இருக்கும் அதீதவெறி கவலையானதுதான். அந்தக் கவலைக்கு பின்னாலும் ஒரு வாழ்வு இருக்கிறது. அந்த மனிதர்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிடமுடியாது.

    Reply
  • பல்லி
    பல்லி

    அன்பு நீதிபதிகள் என்றாலே இப்படிதான் மற்றவர்கள் நீதி சொல்லும்படி நடக்கிறார்கள்.

    Reply