Tuesday, October 26, 2021

நூலக ஒழுங்கு விதிகள் மீறப்பட்ட ஒரு நிகழ்வை சிங்கள – தமிழ் உரிமை சிக்கலாக சித்தரிப்பது சின்னத்தனம்! : யாழ் ஆய்வறிவாளர் அணியம்

Welcome_to_Jaffnaகடந்த சனி மாலை (October 25, 2010) தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் யாழ் பொது நூலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து நிகழ்ந்த ஒரு நூலக ஒழுங்கு விதி மீறல் பிரச்சினை, யாழ் பிரதேச பத்திரிகைகளாலும், இவைகளது ஊடக அனுசரணையுடன் – தமிழ் இனவாத  அரசியல்வாதிகளாலும், இணையங்களாலும், ஒரு சிங்கள – தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரிக்கப்பட்டு இன விரிசல் ஏற்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.

சிங்கள சகோதர மக்களின் யாழ் வருகைகளுக்கு எதிராக கடந்த ஒரு வருட காலமாக செய்யப்பட்டுவரும் இன விரிசலை ஏற்படுத்தும் பிரச்சாரங்களின் இன்னொரு அங்கமாகவே இச் சம்பவமும்  சித்தரிக்கப்பட்டு வருவதை சுய சிந்தனையுள்ள எவரும் இலகுவில் இனங்கண்டு கொள்வர்.

யாழ் பொது நூலகத்தினரின் நிர்வாகத் தவறுகள் நிமித்தமும், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நூலக ஊழியர்கள்மேல் அதிகரித்த வேலைப்பழுவின் விளைவாகவும், நூலக ஊழியர்களுக்கும் உல்லாசப் பயணிகளுக்கும் இடையில் இருந்த மொழிப் பிரச்சினை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின்மை பாற்பட்டும் எழுந்த இந்தப் பிணக்கு நூலக ஒழுங்கு விதிகள் சம்பந்தமானதொன்று என்பதே சரியான பார்வையாகும். இந் நிலையில், இச் சம்பவமன்றி, இதனை ஒரு சிங்கள-தமிழ் இன உறவுச் சிக்கலாக சித்தரித்து, 1981 யாழ் நூலக எரிப்புச் சம்பவத்துடன் இணைத்து –எழுதி – அறிக்கைகள்விட்டு, தமிழ் இனவெறியை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம்பெற முயல்வதே மிக இழிவான இன வெறிச் செயல் என இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இச் சம்பவம்பற்றி விரிவாக விசாரித்து உறுதியாகத் தெரியவரும் விடயங்களின்படி, மேற்படி சம்பவம் நடைபெற்ற தினத்திற்கு முந்தைய தினம் தென்னிலங்கை உல்லாச பயணிகள் பலர் பொது நூலகத்தை பார்வையிட வந்திருந்ததாகவும்,  துரதிருஸ்டவசமாக அன்று போயா விடுமுறை தினமாகையால் அவர்களால் நூலகத்தை பார்வையிட முடியாதிருந்ததாகவும், இந்நிலையில், நூலக வாசலில் கடமையிலிருந்த காவலாளி அவர்களை மறுநாள் மாலை வருமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும், இதன்படி அவர்கள் சம்பவம் நடந்த தினமான மறுநாள் மாலை நூலகத்தை பார்வையிட வந்தபோது நூலகத்தின் உள்ளே இலங்கை மருத்துவர் சங்க மாநாடு நடப்பதை காரணம்காட்டி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் நூலக காவலாளியின் வேண்டுகோளின்பேரிலேயே தாம் வந்திருந்தபடியினால் தம்மை உள்ளேவிட அனுமதிக்க வேண்டுமெனக்கோரி சுற்றுலாப் பயணிகள் சிலர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவர் தான் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் புரிபவராகையால் தம்மை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டுமென வற்புறுத்தியதாகவும், இவருடன் இன்னும் பலரும் இணைந்து தம்மையும் உள்ளே நுழையவிடுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இதனால் மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் யாழ் மாநகர முதல்வரின் உத்தரவின் பேரிலேயே உல்லாசப் பயணிகள் அனைவரும் நூலகத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து நூலகத்தினுள் நுழைந்த இவ் உல்லாசப் பயணிகளில் ஒரு சிலர் மட்டும் அசாதாரணமாக நடந்துகொண்டதாகவும் அறியப்படுகிறது.

இவை தவிர, தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அடாவடியில் ஈடுபட்டதாகவும், முறைகேடாக நடந்ததாகவும், அனுமதியின்றி நுழைந்ததாகவும், நூலகத்தை முற்றுகையிட்டதாகவும் வெளிவந்த செய்திகளும், கண்டனக் குரல்களும், கடிதங்களும், அறிக்கைகளும், இனவெறியூட்டி அரசியல் ஆதாயம்பெற எழுதப்பட்ட வெறும் அவதூறுகளாகவே நாம் அறிந்து கொள்கிறோம்.

உண்மை நிலைமைகள் இப்படியிருக்க, தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் பலர் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக எவ்வித பாரிய பிரச்சினையுமின்றி பொது நூலகத்தை பார்வையிட்டுத் திரும்பிவருகின்றதொரு பின்னணியில்,  சம்பவத்திற்கு முந்தையதினம் நூலகத்தை பார்வையிட வந்த உல்லாசப் பயணிகள் நூலக காவலாளியின் கட்டளையை ஏற்று அமைதியாகத் திரும்பிச் சென்றதை கவனத்தில் கொள்ளத் தவறி, வெகு தொலைவிலிருந்து வந்து தரம் குறைந்த தங்குமிட சூழ்நிலையில், தெருவிலும் – திண்ணையிலும் – யாழ் திறந்தவெளியிலும், தங்கி திரும்பும் உல்லாசப் பயணிகளை சம்பவம் நடைபெற்ற அன்று நூலகத்தை பார்வையிட வருமாறு அழைத்து பின்னர் அவர்கள் நுழைய அனுமதி மறுத்தது நூலக நிர்வாகத்தின் பெரும் தவறு என்பதையும் எண்ணிப்பார்க்க மறந்து, தற்செயலான இந்தச் சம்பவத்தை புனைந்து பூதாகரமாக்கி முழுச் சிங்கள மக்களுக்கு எதிராகவும் சேறு பூசி, தமிழ் உணர்வாளர்களை உருவேற்றி அரசியல் ஆதாயம்பெறும் அற்பத்தனமான ஆசையில் ’81 நூலக எரிப்புச் சம்பவத்துடன் இதனை இணைத்து செய்திகளும், அறிக்கைகளும், கடிதங்களுமாக ‘நேர்முக வர்ணணைகள்’ செய்துவரும் யாழ் ஊடகங்களையும், இணையங்களின் ஒன்றியங்களையும், அரசியல் பிரகிருதிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றோம்.

அத்துடன் தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் வாசலில் தரித்து நின்ற வேளையில், நூலகத்தைப் பயன்படுத்த வந்திருந்த சில தமிழ் மக்களும், மருத்துவர்சங்க மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் மருத்துவ மாணவர்களும் நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட விடயம்; இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு தவறான சமிக்ஞைகளை தந்திருக்கும் சாத்தியமுண்டு என்பதையும் இந்தப் பத்திரிகைகளும், கண்டன அறிக்கைகள்விடும் கனவான்களும் கவனத்தில் கொள்ள தவறியுள்ளனர் என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மேலும், முதல் நாள் நூலக காவலாளியின் முடிவை ஏற்று நூலகத்தை பார்வையிடும் ஒரே காரணத்திற்காக மட்டும் மறுநாள்வரை தமது பயண ஏற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எவரும் பின்போட்டிருப்பின், மறுநாளும் அவர்கள் நூலகத்தை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது எவ்வாறு அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து ஆத்திரத்தை ஊட்டியிருக்கும் என்பதையும் இவைகளும் இவர்களும் எண்ணிப் பார்த்திருக்காதது கவலைக்குரியது. இது தவிர, நூலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டும் அசாதாரண நடத்தையில் ஈடுபட்டிருந்த நிலையிலும், அதுவும் நூலகத்திற்கு எதுவித சேதத்தையும் இவர்கள் எவரும் ஏற்படுத்தியிருக்காதபோதும், உல்லாசப் பயணிகள் அனைவரும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டதாக செய்திகளை பத்திரிகைகள் திட்டமிட்டு திரித்து வெளியிட்டுவரும் தர்மத்தையும் நாம் இங்கு கேள்விக்குட்படுத்த விரும்புகின்றோம்.

இலங்கையிலுள்ள இனங்களுக்கு இடையிலான அரசியல் உரிமைப் பிரச்சினைகள் ஆக்கபூர்வமாகத் தீர்க்கப்பட  சகல இனங்களுக்கு இடையிலான உறவும் மிக ஆரோக்கியமாக பேணப்பட வேண்டியது அத்தியாவசியமானதொரு தேவையாகவுள்ள நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக இன வெறியை எண்ணை ஊற்றி எரிய வைக்கும் வேலை முறைகளை தவிர்க்க வேண்டுமென நாம் சகல தரப்பினரையும் வற்புறுத்துகின்றோம்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பொது நூலகத்தை வந்து பார்வையிட இயலுமான சகல ஏற்பாடுகளையும் நூலக நிர்வாகம் உடன் செய்யவேண்டுமென நாம் வேண்டுகிறோம்.

மேலும், நூலகத்தை பார்வையிடவரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பினால் நூலக ஊழியர்களின் மேல் வரும் வேலைப்பளுவை ஈடுசெய்யும் நடவடிக்கைகளையும் நூலக நிர்வாகம் உடன் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

30 ஒக்டோபர் 2010 
YARL ANALYTICAL RESEARCHERS’ LEAGUE
 P O Box 165, Jaffna
._._._._._.

October 29, 2010

தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் வருகையும் யாழ் நகர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் : விஸ்வா

Jaffna_Libraryபோரிற்குப் பின் முற்றிலும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் யாழ் வருகை யாழ் மாவட்டத்தில் நிர்வாக நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது.  யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் சிலர் யாழ் நூலகத்தில் நடந்துகொண்ட முறை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ் – சிங்கள இனங்களிடையே உள்ள நம்பிக்கையின்மையை மேலும் மோசமாக்குவதுடன் இவ்வாறான சம்பவங்கள் இன உறவுகளை மேலும் கீழ்நிலைக்கே இட்டுச் செல்கின்றது.

யாழ். பொது நூலகத்திற்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சிக்கல்களை ஏற்படுத்திய தென்னிலங்கையில் இருந்து வந்த சில சுற்றுலாப் பயணிகள் யாழ் பொது நூலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததும் இல்லாமல் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டமையும் தெரிந்ததே. ஒக்ரோபர் 23ல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக இன்று (ஒக்ரோபர் 29 2010) வெள்ளிக்கிழமை யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறுகின்றது. கடந்த 23ஆம் திகதி யாழ். நூலகத்தைப் பார்வையிட வந்த தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் சிலரின் நடவடிக்கைகளால் நூலகப் பணியாளர்கள் மற்றும், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நெருடலான மனஉணர்வுகள் குறித்தும் மற்றும், தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து யாழ். மாநகர சபை உறுப்பினர் அ பரஞ்சோதி ஒக்ரோபர் 27, 2010 பிரேரணை ஒன்றை முன்மொழிந்தும் இருந்தார். அன்று குறிப்பிட்ட சுற்றலாப் பயணிகள் நடந்து கொண்ட விதம் குறித்து தமது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் பற்றி அ பரஞ்சோதி வருமாறு கூறுகின்றார், ”பொது நூலக கேட்போர் கூடத்தில் மருத்துவச் சங்க மாநாடு ஒக்ரோபர் 22 முதல் ஒக்ரோபர் 24 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இது நடைபெற்ற மூன்று நாட்களும் மாலை 5.30 மணியின் பின்னரே நூலகத்திற்குள் பார்வையாளருக்கான நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தெற்கு சுற்றுலாப் பயணிகள் சுமார் 300 பேர் வரையிலானோர் நூலக வாசலில் குவிந்தனர். உள்ளே விடுமாறு கலவரத்தில் ஈடுபட்டனர். வாயில் காவலாளி தடுத்த வேளையில் கதவின் பூட்டை உடைத்துக் கொண்டு அவர்கள் உள்ளே நுழைய முற்பட்ட போது நிலமை எல்லை மீறவே, மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டது. முதல்வர் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸார் அவ்வடத்திற்கு வந்து சமரசம் செய்வதில் ஈடுபட்டனர். உடனே குறித்த சுற்றுலாப் பயணிகள் இராணுவத்தினருக்கு அறிவித்தனர். அவர்களால் கதவு திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளே விடப்பட்டனர். உள்ளே சென்றவர்கள் புத்தக அடுக்கிலிருந்த புத்தகங்களை எடுத்து சிதறியடித்து அருவருக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர். இக்குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், வாசகர்கள் பலர் அச்சத்தினால் நூலகத்தை விட்டு பின் கதவினூடாக வெளியேறிவிட்டனர். நடைபெற்றுள்ள சம்பவம் நாகரீகமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனவு அங்கிருந்த வாசகர்கள் தெரிவித்தனர்.

நூலகம் என்பது அமைதி வழியில் பயன்படுத்தப்படும் ஒரு இடமாகும். இது சுற்றுலாப் பயணிகளுக்கான உல்லாசபுரியல்ல என்பதை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ளவேண்டும்’’ இவ்வாறு அ பரஞ்சோதி தெரிவித்திருந்தார்.

மேலும் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளினால் யாழ். குடாநாட்டு நிர்வாக ஒழுங்குகளில் பல சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வருகின்ற நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் தங்குவதற்கு கிடைத்த இடங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். தற்போது நாவற்குழியிலுள்ள அரச களஞ்சியமும் அவர்களிடம் தங்குமிடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படை அதிகாரிகளின் குடும்பங்கள், அவர்களின் நண்பர்களின் குடும்பங்கள் தங்குவதற்கு நாவற்குழி அரச களஞ்சியம் பயனபடுத்தப்படுவதாக களஞ்சிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமும் நூற்றுக் கணக்கில் இவர்கள் சுற்றுலா வருவதால் இவர்களுக்கான தங்குமிடங்களாக பாடசாலைகளும் அரசாங்க கட்டடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இரவில் இவர்கள் பாடசாலைகளில் தங்கிவிட்டுச் செல்லும் போது, காலையில் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பல சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்கும் நிலையும் தோன்றி வருகின்றது.

தென்பகதி சுற்றலாப் பயணிகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பொது இடங்களில் தங்கிவருவதால் எற்பட்டுள்ள இச்சிக்கல்களை தவிர்க்கும் முகமாக இவர்கள் யாழப்பாணத்தில் தங்கும் பொது இடங்கள் குறித்த விபரங்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தால் திரட்டப்பட்டு வருகின்றன. பிரதேசச் செயலர்கள், கிராம அலுவலர்கள், மூலமாக இத்தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இத்தகவல்கள் குறித்த அறிக்கை அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும்.

தென்பகுதியிலிருந்து வரும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளுக்குப் போதுமான இடவசதிகளை மேற்கொள்ள முடியதாத நிலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கக்கூடிய பொது இடங்களை அடையாளம் கண்டு அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

37 Comments

 • தாமிரா மீனாஷி
  தாமிரா மீனாஷி

  அரசாங்கமே பணம் கொடுத்து அனுப்புபவர்களை சுற்றுலா பயணிகள் என அழைப்பதை நாம் முதலில் நிறுத்த வேண்டும். மஹிந்தவின் புலி வெற்றியை அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான வெற்றியாக மாற்றவே முனைகிறது. இதற்கு அநுசரணையாக பாதுகாப்புப் படைகளும் பயன்படுத்தப் படுகின்றன. உண்மையில் இலங்கைத் தேசிய வாதத்தைக் கட்டியமைக்க விரும்புபவர்கள் சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுடைய மனப் புண்களை ஆற்றும் விதமாக நடந்து கொண்டாலே அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுக்க முடியும்.. இல்லையெனில் அவர்கள் தொடர்ந்து தேசிய நீரோட்டத்தில் இருந்து அந்நியப் படுத்தப்பட்டோராகவே உணர்வார்கள்.

  பொது நூலகம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பார்வைக்கான இடமெனில் அதை திருத்தியமைக்காமல் எரியுண்ட நிலையிலேயே விட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.. தமது அரசியல்வாதிகளின் கைங்கரியத்தை சிங்கள மக்களும் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்..

  Reply
 • மாயா
  மாயா

  இது மிகவும் அருவருக்கத் தக்க விடயம். இது தொடர்பாக அரசு தரப்பு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  Reply
 • மாயா
  மாயா

  கொழும்பிலிருந்து சென்ற ஒரு அறிவுறுத்தலின் பிரகாரம் ; யாழ் நுhலகத்தை பார்வையிடுவது தற்காலீகமாக தடை செய்யப்பட்டுள்ளதோடு ; நுhலகத்தை சுற்றி இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து சென்ற ஒரு குழுவினர் தாம் அதிபர் காரியாலயத்திலிருந்து வந்தவர்கள் எனச் சொல்லியே நுhலகத்தினுள் நுழைந்துள்ளனர்.

  Reply
 • thurai
  thurai

  இன ஒற்றுமையையும் சமாதானத்தையும் விரும்பும் தமிழ்,சிங்கள மக்களிற்கு சவாலாக இந்தச் சம்பவமுள்ளது. இதேபோல மேலும் பல சம்பவங்கள் இடம்பெறவாய்ப்புகள் உண்டு. காரணம் தமிழர் சிங்களவரிடையே இன்னமும் அணையாமல் உள்ளதும் , அரசியல்வாதிகளால் வளர்த்துவிடப்பட்ட இனத்துவேசமேயாகும். ஆயுதத்திற்கு வேலை கொடுக்கமால் அறிவிற்கு வேலை கொடுக்கின்ற காலமிது.– துரை

  Reply
 • Rohan
  Rohan

  மகிந்த சிந்தனை வாழ்க வாழ்க.

  இதுவல்லவோ இனங்களுக்கிடையிலான பரஸ்பர சந்தேகங்களையும் குழப்பங்களையும் தீர்ப்பதற்கான முதற்படி.

  வடக்கிலுள்ள கடைகளிலுள்ள பொருட்களெல்லாம் எங்கள் சிங்களச் சகோதர்கள் பணம் தராது நுகர்வதற்கே திரட்டி வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தங்குமிடங்களெல்லாம் நமது சகோதர்கள் ‘சும்மா இருக்க’ மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

  இத்ற்கெல்லாம் இடம் கொடுத்த புலி ஒழிக.

  Reply
 • thurai
  thurai

  //வடக்கிலுள்ள கடைகளிலுள்ள பொருட்களெல்லாம் எங்கள் சிங்களச் சகோதர்கள் பணம் தராது நுகர்வதற்கே திரட்டி வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தங்குமிடங்களெல்லாம் நமது சகோதர்கள் ‘சும்மா இருக்க’ மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.//றோகன்

  உலகிலுள்ள புலம்பெயர் தமிழர் உழைப்பினை ஈழத்தமிழர் பெயரால் மிரட்டி பறித்து, உல்லாச வாழ்வு வாழும் எங்கள் தமிழ் சகோதரர்கள்.
  தமிழினத்தை சிங்கள ராணுவத்த்திற்கு பலிகொடுத்தே விடுதலைப் போராட்டம் நடத்திய தலைவ்ரகள். இவர்களை விட இவ்வாறான சம்பவங்கள்
  பெரிதானவையா? ஒரு நாளிற்கு குறைந்தது 10 தமிழரை பலிகொடுத்தும், ஆயிரக்கணக்கானோரை வீதியில் தூங்கவைத்தும், இவரைரையெல்லாம் திரைப்படமாக்குவதன் மூலம் நாளொன்றுக்கு பல லட்சங்களை வருமானமாகப் பெற்ர புலிகள் வாழ்க.– துரை

  Reply
 • மாயா
  மாயா

  Entering Jaffna library temporarily stopped for visitors because Sinhalese from South turn violent inside library
  (Lanka-e-News, Oct.31, 2010, 12.50PM)

  Permission to enter the Jaffna Library for visitors had been temporarily suspended from the 30th. This decision had been taken specially because a group of Sinhala visitors from the South had forcibly entered the Library and turned violent breaking the shelves and throwing away the books.

  During the elections and development, it was a group of Sinhalese from the south who set fire to the Jaffna library and created a black mark for the country.

  Former Jaffna district M P M K Sivajilingam speaking to Lanka e news said, on the 23rd the Govt. doctors association jointly with the Jaffna doctors Association has had a conference at the Jaffna library auditorium. Owing to this conference the visitors were precluded from entering the Library from 9.00 a.m. to 6.00 p.m. on the days of the conference, and a notice in all three languages had been fixed near the entrance door. The Doctors Association had paid the necessary fees duly and reserved the auditorium for holding the conference and Police security too was detailed at the premises.

  Last 23rd, a group from the South who had gone on a Jaffna tour in 36 buses have asked permission to enter the Jaffna library. The officers of the Library had told them as there is a conference going on no visitors are allowed inside. Moreover they have pointed out at the notice to that effect displayed. At about 3.00 p.m,. the visitors have tried to enter the library by force. They have told that they are from the Presidential office and forced themselves into the Library. They have then run amok breaking down the shelves and throwing away some of the books. They have also harassed the ladies working in the Library, according to Sivajilingam.
  The statue of the senior respected political leader of the Tamils and a former leader of the Federal Party S J V Chelvanayagam is situated near the Library. The group had broken down the trees and plants near this statue and strewn them about before going, Sivajilingam further added.
  Now, army had been deployed around the Library and visitors to the library had been barred on an order received from Colombo.

  Meanwhile EPDP leader and Minister Douglas Devananda at a meeting held at the Jaffna library premises on the 29th has tendered an apology on behalf of the Govt. over the incident.

  Reply
 • சுகுணகுமார்
  சுகுணகுமார்

  சனம் சும்மா விடுப்பு பாக்க போகுதுகள் ஆனால் போற சனம் ஒண்டும் திரும்பி அங்கை போகாதுகள்! இன்னும் ஒரு ஒரு வரியத்திலை உதெல்லாம் ஓய்ஞ்சு போகும்! யாழ் நூலகம் நல்ல சந்தர்ப்பத்தை இழக்கினம்! நூலகத்திலை ஒரு பக்கத்தை ஒதுக்கி எரிஞ்ச நூலக படங்களை வைச்சு ஒரு ஆளையும் விளக்க வைச்சு ஆழுக்கு நூறு ரூபா கறந்தால் எல்லாம் ஓய்ஞ்சு போகும்! யாழ் மாநகரசபைக்கு ஒரு அறிவும் இல்லை!

  Reply
 • Ajith
  Ajith

  துரை அவர்களே,
  நன்றாக வாசியுங்கள் நீங்கள் எழுதிய வாசகங்களை
  “இன ஒற்றுமையையும் சமாதானத்தையும் விரும்பும் தமிழ்,சிங்கள மக்களிற்கு சவாலாக இந்தச் சம்பவமுள்ளது”.
  “இவ்வாறான சம்பவங்கள் பெரிதானவையா? ”
  என்ன இப்படியான சிறிய சம்பவங்களை பெரிது படுதுகிறீர்க்ளே. சின்ஹல மக்கள் இந்த நாடை ஆள்பவர்கள் தானே. அவாகளை அனுப்பியதே இந்த நாட்டின் மூன்றில் இரண்டு மகளின் ஆசீர்வாதம் பெற்ற ஜனாதிபதி தானே
  அவர்களுக்கு இல்லாத உருமையா தமிழர்களுக்கு தேவை. நீங்கள் தானே சொன்னீர்கள் தமிழர்களுக்கு என்ன தகுதி உண்டு சிங்களவர்களிடம் நீதி கேட்பதற்கு? இன ஒற்றுமையை விரும்புகின்ற தமிழர்கள் நீங்களும் நந்தாவும் தானே?
  “இதேபோல மேலும் பல சம்பவங்கள் இடம்பெறவாய்ப்புகள் உண்டு. காரணம் தமிழர் சிங்களவரிடையே இன்னமும் அணையாமல் உள்ளதும் , அரசியல்வாதிகளால் வளர்த்துவிடப்பட்ட இனத்துவேசமேயாகும்”.
  ஏன் இன்னும் இன்னமும் இனவாதம் அணையால் உள்ளது. புலிகளை தானே ராஜபக்சே அழித்துவிட்டார் என்று அவருக்கு நன்றியும் வாழ்த்தும் தேரிவிதேர்களே. இனி யார் உங்களுக்கு எதிராக உள்ளார்கள் இனத்துவேசம் கதைபதற்கு. ராஜபக்சே இற்கு எதிராக எந்த அரசியல்வாதியும் அங்கு தலையாட்ட முடியாதே. அடுத்த பதினைந்து வருடங்களுக்கு அவரை அசைக்க முடியாதே. அவர் ஐக்கிய நாட்டிலேய தமிழில் பேசி இனவாதத்தை ஒலித்து விட்டாரே. எல்லாரும் ஒரு இனம் என்றுதானே சொன்னவர். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட சின்ஹல இராணுவ வீரர்களை தமிழர்களின் இனவாதத்தை தடுபதற்கு தானே நிர்பாடியுள்ளார்.

  Reply
 • thuai
  thuai

  அஜீத் அவர்களே, சிங்கள் இனவாதம் தமிழர்களை சிங்கள பகுதிகளிலேயே அடித்து தமிழர் பகுதிகளிற்கு அனுப்பியது. காங்கேசந்துறை கடலில் சிங்களவர் தமிழரைத் தள்ளிவிடவில்லை. இது புலிகளிற்கு முன்பு இருந்த நிலைமை. இப்போ நடப்பது புலிகளிற்குப் பின்.

  தமிழரில் தமிழரை ஆள நினைப்பவர்கள் தென்னிலங்கையிலும் புலம்நாடுகளிலும் பாதுகாப்பாகவும் செல்வச்சிறப்புடனும் வாழ்கின்றனர். பாதிக்கப்படுவது யார்? ஏழை எளியவர்களேயகும். அவர்களே சிங்கள்வர்கழுடன் எவ்வாறு நடக்கவேண்டும், என புரிந்து செயற்படுவார்கள். பரம்பரை அரசியல் உருமையை வடபகுதி மக்கள் யாரிடமும் கையளிக்கமாட்டார்கள். சிங்களவர்க்ழுடன் சேர்ந்தே வாழ்வார்கள் வாழ்ந்து காட்டுவார்கள். இன ஒற்ருமைக்கு உலகினிற்கே முன்னோடியாக மாறுவார்கள்.– துரை

  Reply
 • மாயா
  மாயா

  //Ajith- “இன ஒற்றுமையையும் சமாதானத்தையும் விரும்பும் தமிழ்,சிங்கள மக்களிற்கு சவாலாக இந்தச் சம்பவமுள்ளது”.//

  புலிகள் தென் இலங்கையில் எத்தனை அடாவடித் தனங்களை செய்தார்கள்? தமிழர்களது போராட்டம் சரியல்ல என்பதல்ல எனது வாதம். அது யார் கைகளுக்கு போனது? எப்படி போராட்டத்தை நடத்தினார்கள் என்பதனாலேயே நாங்கள் இந்த தமிழீழம் வேண்டாம் என்கிறோம். எமக்கும் ஆசையாக இருந்தது. நாங்களும் களத்தில் நின்றோம். போராடினோம். ஏதோ புலிகள் மட்டும்தான் போரார்கள் என்பது மடமை. அனைத்து தமிழரும் இணைந்து போரட வேண்டியதை ; நாங்கள் மட்டும் என குத்தகைக்கு எடுத்துக் கொண்டு அடாவடித்தனம் செய்தவர்கள் புலிகள். தென் இலங்கையில் கிடைத்த அனைத்து இடங்களிலும் குண்டு வைத்து தகர்த்தவர்கள்.

  மேற்படி சம்பவம் துரை சொல்வது போல் பெரிய விடயமேயில்லை. யாழ்பாணம் போன சிங்களவர்கள் யாழ் வாசிகசாலையை பார்க்க எண்ணியிருந்திருக்கிறார்கள். அது அவர்களது ஒரு திட்டமாக இருந்திருக்கிறது. தாமிரா சொல்வது போல இது ஒன்றும் ஒன்று சேர்ந்து மீட்டிங் வைக்கும் இடமல்ல. அங்கே அது நடந்துள்ளது. வந்தவர்கள் வாசிகசாலைக்கு போக முடியாது என்ற போது ஆத்திரமடைந்துள்ளார்கள். அதனால் ஏற்பட்ட பிரச்சனை சற்று உத்வேகம் அடைந்து முடிந்துள்ளது. இங்கே எவரும் கொலை செய்யப்படவும் இல்லை. சாகவும் இல்லை. அதற்கு நெருப்பு வைக்கவும் இல்லை. சிலருக்கு சுர்ரென்று வருகிறது கோபம்.

  பொதுவான நாங்களே ஐரோப்பாவில் சில சின்னத்தனமான பிரச்சனைகளுக்கு கோபப்படுகிறொம். எவனோ ஒருவனுக்கு சொந்தமான நாட்டில் அச்சமில்லாமல் வாழ விட்டுள்ளான். அவனையே திட்டி தீர்க்கிறோம். அவன் பேசாமல் போகிறான். நாம் கத்துகிறோம். இவை யதார்த்தம். அதுபோல எதையோ எதிர்பார்த்து போனவர்களுக்கு அது கிடைக்காமல் போக ; இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. சுகுணகுமார் சொல்வது போல இதெல்லாம் இன்னும் சில காலத்துக்குத்தான். எல்லாம் பழகிப் போக எவரும் போக மாட்டார்கள்.

  உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்க அனைத்து நாடுகளும் முனைகின்றன. அவர்களுக்கான தேவையை நிறைவு செய்தால் அதில் உழைக்கலாம். இது இந்த தமிழருக்கு தெரியாதென்பதல்ல. மோட்டுத் தனத்தால் தன் தலையிலே மண் அள்ளிக் கொட்டிக் கொள்வது. வருவோருக்கு விடுதிகளை வாடகைக்கு விட்டு ; அங்குள்ள விளை பொருட்களை ஒரு நல்ல விளம்பர உத்தியோடு விற்றால் வருவாயும் கிடைக்கும் வழியும் பிறக்கும். வருவோரை அழைத்து சென்று நல்ல இடங்களை காட்டுவது போல ; யுத்த அனர்த்தங்களையும் காட்டலாம். அதுவே ஒரு நல்ல உத்தி. அதைவிட்டு இன்னும் காட்டான்கள் போல் சிந்திப்பது பிற்போக்குத் தனம்.

  வெளிநாட்டிலிருந்து போவோரை விசாரித்தாலே நமக்கு கோபம் வருகிறது? அவன் கடமையைத் தானே செய்கிறான் என நினைக்க மனம் வரவில்லை. இல்லை ; அவன் துவேசத்தால் அப்படிச் செய்கிறான் என கடிந்து கொள்கிறோம். பிரச்சனையே வராத வீடிருக்கா? ஆட்கள் போகுமிடமெல்லாம் மகிந்த பின்னால் போவதா? புலத்து புலிகள் வீதிகளில் கோசம் போட்டு ; உண்ணாவிரதம் இருந்து மேற்குலகத்தை எப்படி நாறடித்தார்கள். தாங்கள் செய்வது தவறாக தெரிந்ததா? அதற்காக தமிழர்களையே அனைத்து மேற்குலகத்தினரும் வெறுத்தார்களா? டேக் இட் ஈசி .

  Ajith இதைப் பாருங்கள். இதை ஆமோதிக்கிறீர்களா?
  -http://www.youtube.com/watch?v=-mhgie14CqA

  Reply
 • Ajith
  Ajith

  “சிங்கள இனவாதம் தமிழர்களை சிங்கள பகுதிகளிலேயே அடித்து தமிழர் பகுதிகளிற்கு அனுப்பியது. காங்கேசந்துறை கடலில் சிங்களவர் தமிழரைத் தள்ளிவிடவில்லை.” – Thurai
  நன்றி துரை அவர்களே, சிங்கள இனவாதம் தான் தமிழர்களை அடித்து , கொழுத்தி பிணமாக தமிழர் பகுதிக்கு அனுப்பியது என்ற உண்மை உங்கள்கு புரிந்ததிற்கு. காங்கேசன்துறை கடலில் சிங்களவரை தமிழர் தள்ளி விடவில்லை என்ற உண்மையும் ஏற்று கொண்டதற்கு. சிங்கள இனவாதம் தான் அன்றும் இன்றும் யாழ் நூலகத்தை எரித்ததும், அழித்ததும். எனவே தமிழர் பகுதிகளிலும் சிங்களவர் பகுதிகளிலும் சிங்கள இனவாதம் தான் இருந்ததே ஒழிய தமிழர் இனவாதம் அல்ல. இந்த இனவாதத்திற்கு பதிகப்படவர்கள் தமிழர்களே ஒழிய சிங்களவர் அல்ல.

  சிங்களவருடன் ஒன்றாக வாழ முடியாது என்று தமிழர்கள் தெளிவாக பலமுறை சொல்லி விடர்கள். கடந்த தேர்தலிலும் தெளிவா சொன்னார்கள். பரம்பரை அரசியல் உரிமையை அவர்கள் யாரிடமும் தாரை வார்க்க மாட்டார்கள் என்பதை தான் நாமும் சொல்கிறோம். தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளுடன் வாழ வேண்டும். சிங்களவருடன் சேர்ந்து வாழ்வது என்பதை விட தமிழருடன் சிங்களவர் சடதையும் நீதியையும் மதித்து வாழ்வதுதான் சிறந்தது. தமிழினம் என்றுமே சிங்கள இனத்தை ஆழ நினைத்ததில்லை. ஆனால் சிங்கள இனம் தான் தமிழ் இனத்தை அழிக்க முனைகிறது.

  Reply
 • BC
  BC

  //வடக்கிலுள்ள கடைகளிலுள்ள பொருட்களெல்லாம் எங்கள் சிங்களச் சகோதர்கள் பணம் தராது நுகர்வதற்கே திரட்டி வைக்கப்பட்டுள்ளன.//
  இப்படி ஒரு செய்தி புலிகளின் இணையதளங்களில் வந்துள்ளதா?
  வடக்கில் கடை வைத்திருந்து புலிகளினால் பரதேசியாக போன தமிழர் பலர். தமிழர்களின் உழைப்பு அவ்வளவும் தங்களுக்கு தான் சொந்தம். அவர்கள் பெறும் பிள்ளைகளும் தங்களுக்காக தான் அழியவேண்டும் இது தான் புலிகள்.

  Reply
 • மாயா
  மாயா

  //தமிழினம் என்றுமே சிங்கள இனத்தை ஆழ நினைத்ததில்லை. ஆனால் சிங்கள இனம் தான் தமிழ் இனத்தை அழிக்க முனைகிறது.//

  பழைய தமிழரிடம் கேளுங்கள். உண்மையை சொல்வார்கள். “எங்களுக்கு கீழ் இருந்த சிங்களவரிடம் நாங்கள் கீழ்படிவதா? ” என்றுதான் கேட்கிறார்கள். வெளிநாட்டில் தமிழன் வேலை செய்யிற இடத்தில் வேலைக்கு போகப்படாது என்கிறார்கள். இல்லையென்றால் தமிழனை வேலைக்கு வரவிடாமல் பண்ணுகிறார்கள். வெள்ளைகளோடு நெருங்கினாலும் ; எங்கட ஆட்களோடு தூர உறவாத்தான் இருக்கிறார்கள்.

  //வடக்கில் கடை வைத்திருந்து புலிகளினால் பரதேசியாக போன தமிழர் பலர். தமிழர்களின் உழைப்பு அவ்வளவும் தங்களுக்கு தான் சொந்தம். //
  சுவிசிலிருந்த கடைகளை முரளி காலத்தில் தாங்களே எடுத்து நடத்த ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். அது முடியாமல் போன போது மக்கள் கடைகள் வந்தன. கடைசியில் அதை நடத்திய புலி மக்களுக்கே சொந்தமானது. இப்ப அதைப் பற்றி பெரிதாக கதையே இல்லை. சாப்பாட்டு கடைகளும் தொடங்கினார்கள். கடைசியில் அதுவும் காஞ்சு போச்சு. இப்ப பள்ளிகளும் ; கோவில்களும்தான் புலிகளது சுவிசின் சொத்து. மற்றவை வைத்திருந்தோருக்கு உரியதாகிவிட்டது.

  Reply
 • thurai
  thurai

  //சிங்களவருடன் ஒன்றாக வாழ முடியாது என்று தமிழர்கள் தெளிவாக பலமுறை சொல்லி விடர்கள்//அஜீத்

  வடபகுதியில் புலிகலின் ஆதிக்கத்தின்போது தெற்கில் முன்பிலும்பார்க்க அதிகமான தமிழர் குடியேறி காட்டியுள்ளார்கள். 30 வருடமாக இனக்கலவரமில்லை. புலிகள் அழிக்கப்பட்ட பின்னர்தான் வடக்கில் தமிழர் தம் வீடுகளிற்குத் திரும்பச் சென்றார்கள்.– துரை

  Reply
 • Rohan
  Rohan

  //வடக்கிலுள்ள கடைகளிலுள்ள பொருட்களெல்லாம் எங்கள் சிங்களச் சகோதர்கள் பணம் தராது நுகர்வதற்கே திரட்டி வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள தங்குமிடங்களெல்லாம் நமது சகோதர்கள் ‘சும்மா இருக்க’ மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.//றோகன்

  //உலகிலுள்ள புலம்பெயர் தமிழர் உழைப்பினை ஈழத்தமிழர் பெயரால் மிரட்டி பறித்து, உல்லாச வாழ்வு வாழும் எங்கள் தமிழ் சகோதரர்கள்.
  தமிழினத்தை சிங்கள ராணுவத்த்திற்கு பலிகொடுத்தே விடுதலைப் போராட்டம் நடத்திய தலைவ்ரகள். இவர்களை விட இவ்வாறான சம்பவங்கள் பெரிதானவையா?// துரை

  ஆகவே, புலி தமிழரை மொட்டை அடித்ததால் சிங்களப் பயணிகளும் மொட்டை அடிப்பது சரி என்று சொல்கிறீர்கள்.

  Reply
 • Rohan
  Rohan

  //வடக்கிலுள்ள கடைகளிலுள்ள பொருட்களெல்லாம் எங்கள் சிங்களச் சகோதர்கள் பணம் தராது நுகர்வதற்கே திரட்டி வைக்கப்பட்டுள்ளன.//
  /இப்படி ஒரு செய்தி புலிகளின் இணையதளங்களில் வந்துள்ளதா?/

  எனக்குத் தெரியாது – எனது தகவல்கள் ஊரிலிருந்து வந்தவை.

  Reply
 • thurai
  thurai

  //ஆகவே, புலி தமிழரை மொட்டை அடித்ததால் சிங்களப் பயணிகளும் மொட்டை அடிப்பது சரி என்று சொல்கிறீர்கள்.//ரோகன்

  புலிகள் தமிழரிற்கு மொட்டை அடித்ததை ஏற்று, இனவாதம் பேசும் சிங்களவர்கள் போல் தான் தமிழரிற்குப் புலிகள் என்பதை ஏற்பீர்களேயானால் அதுவே எனக்குப் போதும். –துரை

  Reply
 • நந்தா
  நந்தா

  சிங்களவன் “மொட்டை” அடிப்பான் என்று தமிழர்களுக்கு தமிழர்களே மொட்டை அடித்தார்கள். சுருட்டிக்கொண்டு உல்லாசமாக வாழ இன்னமும் அந்த மொட்டையடிப்புக்கள் தேவை என்றுதான் புலிவால்கள் எதிர்பார்க்கிறார்கள். வெளினாடுகளில் வசூல் குறைந்து போய் பல புலி உண்டியல் கும்பல்கள் இப்பொளுதுதான் முதல் முறையாக வேலைக்குப் போகிறார்கள்.

  நூலகத்துப் பிரச்சனை சட்டம் ஒழுங்கு பற்றியது. புலிகள் வசாவிழான் மத்திய மகா வித்தியாலயம், வீரசிங்கம் மண்டபம் என்பனவற்றை கொழுத்தி குண்டு வைத்து தகர்த்து சாதித்தது என்ன?

  சிங்கள காவாலிகள் தமிழ் காவலிகளைப் போலவே நடந்து கொள்ளுகிறார்கள். தற்போது அது இனிமேல்நடை பெறாத வண்ணம் இராணுவம் காவல் செய்கிறது.

  சிலவேளைகளில் தமிழர்களினதும் விசேடமாக சம்பந்தன், புலி ஆகிய கோஷ்டிகளின் உயிர்நண்பர்களான யு என் பி குண்டர்கள் முன்னர் நூலகத்தைக் கொழுத்தியது போல இந்த முறையும் செய்து தமிழ் அரசியலுக்கு ஒரு “மோதிரம்” போட முனந்துள்ளார்களா என்பதுதான் ஆராயப்பட வேண்டியது.

  தமிழன் செத்தால் காசு பிடுங்கலாம், வெளினாடுகளில் அகதியாகலாம் என்ற பல பிஸ்னெஸ் ஐடியாக்கள் உள்ள தமிழர்களுக்கு அவல் கிடைத்த சந்தோஷத்தையும் அது நிறுத்தப்பட்டதனால் படும் கவலையையும் காண முடிகிறது.

  Reply
 • ashroffali
  ashroffali

  யாழ் நூலகம் தாக்கப்படவில்லை அது அப்பட்டமான பொய் என்கிறது ஜனாதிபதி செயலகம்.

  அவர்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் யாழ் நூலகம் தாக்கப்படவில்லை என்றும் அப்படியான தாக்குதல் சம்பவத்தில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பங்குபற்றவில்லை என்பதுடன் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றதற்கான எந்தவொரு முறைப்பாடும் பொலிசில் பதியப்பட்டிருக்கவில்லை என்றும் ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.

  அதன் காரணமாக ஊடகங்களில் அடிபடும் குறித்த விடயம் அப்பட்டமான பொய் என்கிறது.

  இவை போன்ற சம்பவங்கள் தான் நான் அதிருப்தியுறக் காரணம். தவறு செய்தவர்களை தண்டிப்பதை விட தட்டிக் கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  Reply
 • மாயா
  மாயா

  //சிலவேளைகளில் தமிழர்களினதும் விசேடமாக சம்பந்தன்இ புலி ஆகிய கோஷ்டிகளின் உயிர்நண்பர்களான யு என் பி குண்டர்கள் முன்னர் நூலகத்தைக் கொழுத்தியது போல இந்த முறையும் செய்து தமிழ் அரசியலுக்கு ஒரு “மோதிரம்” போட முனந்துள்ளார்களா என்பதுதான் ஆராயப்பட வேண்டியது. – நந்தா//

  இப்படியான ஒரு அசம்பாவிதம் நடைபெற வேண்டி தவம் இருப்போர் சில சுயநல தமிழர்களே அன்றி ; சிங்களவர்கள் அல்ல. தமிழ் ஆராச்சி மாநாட்டு குழப்பம் தொடக்கம் அத்தனைக்கும் அத்திவாரம் இந்த தமிழ் நாயகர்கள்தான். இவர்கள் குறித்த தகவல்களை பாதுகாப்பு தரப்புக்கு மக்கள் அறிவிக்க வேண்டும்.

  மகிந்தவை யாராவது ஒருவன் போட மாட்டானா? என ஒரு புலி கேட்டார். நான் சிரித்தேன். சிங்களவர்கள் அடிபடுகிறார்கள். மகிந்த சீனாவுக்கு சார்பானதால் இந்தியா திரும்ப எங்களுக்கு உதவும் நிலை தெரியுது. சீனாவுடன் மகிந்த நெருங்குவது ; இந்தியாவுக்கும் ; அமெரிக்காவுக்கும் கடுப்பாக இருக்கிறது. இவர்கள் யாருக்காவது காசு குடுத்து மகிந்தவை போடுவார்கள். பாருங்கள் என்றார்.

  அமெரிக்காவிடம் காசு வாங்கிக் கொண்டா ராசீவ் காந்தியை போட்டீர்கள்? என்று கேட்டேன். பேசவேயில்லை. நீங்கள் செய்த பெரிய முட்டாள்தனம் அது. ஒரு ராசீவ் காந்திக்காக எத்தனை பேர் செத்தார்கள் . பார்த்தீர்களா? மகிந்த சாகடிக்கப்பட்டால் ; 1983ல் நடந்ததை விட நிலமை மோசமாகும். அதற்கு காரணம் கோட்டபயவின் கைகளில் இராணுவம் இருப்பதேயாகும். அது நிச்சயம் மோசமாகன விளைவுகளை தரும். என்றேன். புலிகள் மக்களின் மேல் நேசம் கொண்டவர்களாக இருந்தால் ஆயுதங்களை மறந்து சனநாயக நடைமுறையில் உள்ளவர்களை பலப்படுத்தலாம்.

  Reply
 • நந்தா
  நந்தா

  இராஜிவ் காந்தியை “போட்டுத் தள்ள” அமெரிக்கப் பணம் கிடைத்தது என்பது உண்மையான தகவல் என்றே பலர் நம்புகிறார்கள் . இந்திய எதிர்ப்பு புலிகளால் முன்னெடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அமெரிக்கப் பணம் என்பதும் அரசியல் ரீதியாக புலிகள் யு என் பி யின் கார்பன் கொப்பிகளாகவே இயங்கியதற்கும் காரணம் அதே பணம்தான்! .

  Reply
 • BC
  BC

  //புலி உண்டியல் கும்பல்கள் இப்பொளுதுதான் முதல் முறையாக வேலைக்குப் போகிறார்கள்.//
  இப்போ அது தானே நந்தா அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.
  இந்த யாழ் நூலகத்தில் நடந்த விடயம் பற்றி சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தது “இடம் பெற்ற சம்பவம் படித்த நாகரிகம் தெரிந்த மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது”..இது சிங்கள அடாவடி சண்டியர் களால் நடத்தப்பட்டது.ஆனால் மாயா தந்த youtube காட்சியில் புலி தலைமையை காப்பாற்ற தமிழ் யங் லேடி உட்பட ஆயிரகணக்கானோர் வெறி பிடித்து உருஆடுவது தான் மிகவும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயமாகும்.

  //மகிந்த சீனாவுக்கு சார்பானதால் இந்தியா திரும்ப எங்களுக்கு உதவும் நிலை தெரியுது. //
  மாயா, இந்தியா இராணுவம் இலங்கையில் நிற்ற போது சொன்னவர்கள் ரஷ்சிய கூட்டான இந்தியா இலங்கையில் நிற்பது அமெரிக்காவுக்கு கடுப்பாக இருக்கிறது அதனால் இனி அமெரிக்கா தான் ஆயுதம் தங்களுக்கு தரும் என்று.

  Reply
 • jeyarajah
  jeyarajah

  பொது நூலகத்தில் அண்மையில் சிங்கள சுற்றுலா பயணிகள் அசம்பாவிதத்தில் ஈடுபட்ட சம்பவத்தின்போது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டில் யாழ் சிவில் நிர்வாக அலுவலகர் மேயர் பண்டாரா கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிலமை இவ்வாறு இருக்க பத்திரிகைகளுக்கு செய்தியே இல்லாதது போல சரவணபவன் இதனை பெரிய பூகம்பமாக்கி பக்கம் பக்கமாக அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். அவர்களின் இடத்துக்கு போனால் அறிக்கை மட்டும்தானே விடமுடியம். இராணுவ வீரர்களே இரத்தம் கொடுக்கும் நிலமையில் இருக்க இவர்களும் அப்படி நல்ல விடயங்கள் செய்யலாம். சட்டம் ஒழுங்கு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இன துவேசம் கலக்காமல் இருப்பது நல்லது இமல்டா மீது மாவை கண்டனம், யாழ்நூலகம் சம்பந்தமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் சரவணபவன் கண்டனம். நல்ல தலைவர்களை தெரிவு செய்துள்ளோம்.

  Reply
 • vanavil
  vanavil

  //சட்டம் ஒழுங்கு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இன துவேசம் கலக்காமல் இருப்பது நல்லது இமல்டா மீது மாவை கண்டனம்இ யாழ்நூலகம் சம்பந்தமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் சரவணபவன் கண்டனம். நல்ல தலைவர்களை தெரிவு செய்துள்ளோம்.//

  நல்ல தலைவர்கள் பிரச்சனையை பேயாக்க மாட்டார்கள். பேசித் தீர்த்து வைப்பார்கள். இவர்கள் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதற்கு சமன். இவர்களை யார் தலைவர்கள் என்பது. பைத்தியகாரர்கள். தோழர் பரவாயில்லை. இறங்கி வந்து தானாகவே யாருக்காகவோ மன்னிப்பு கேட்டு நிலமையை சுமுகமாக்கியுள்ளார். தோழர் மன்னிப்புக் கேட்டதற்காக சிங்களவர்களே வெட்கப்படுவதாக அறிய முடிந்தது. இந்த வகையில் தோழர் கிரேட்.

  Reply
 • நந்தா
  நந்தா

  இருக்கும் சட்டம்இ ஒழுங்கு முறைகளைநடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறைப்படாத சமூகமாக தமிழர்கள் அவலப்படுகிறார்கள். வெறும் “உணர்ச்சி” வசப்பட்டு வாக்கு வங்கிகளைநிரப்ப அலைபவர்கள் கண்டிப்பாக “தலைவர்கள்” அல்ல.

  இந்த சுரேஷ் பிறெமஷந்திரன் போன்றவர்கள் “சட்டம்” வரைபவர்கள் என்று பாராளுமன்றத்தில் இருப்பது தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம்!

  Reply
 • chandran .raja
  chandran .raja

  இலங்கையில் பிறந்த எந்த ஒரு மகனும் இலங்கையில் எந்த மூலையிலும் அவர் விருப்பத்தின் பெயரில் வாழ்வதற்கு உரிமையிருக்கிறது. இதேயே மகிந்தா அரசு பிரகடனப் படுத்தியிருக்கிறது. தனது வல்லமை சக்திக்கு உட்பட்டவரை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
  எமக்கு-அதாவது இலங்கை தொழிலாளர் கட்சிக்கு மகிந்தாஅரசில் பலவிமர்சனங்கள் இருக்கலாம். அல்லது அவர்களிடமும் தம்மை அறியாத பல குறைபாடுகள் இருக்கலாம். வரும் காலத்தில் இதுவெல்லாம் களைந்தெறிக் கூடியதே. ஆனால்.. ஐக்கியதேசியகட்சியும் கடந்தகாலத்தில் தமிழ்-தலைமைகளாக இருந்தவர்கள் முள்ளிவாய்கால் தாண்டிவந்தும் ருசிகண்டபூனை மாதிரி பழையகாலத்தை கொண்டு வர துடியாத் துடிக்கிறார்கள். இது எந்த விதத்திலும் இலங்கை பாட்டாளிமக்களுக்கு உகந்தது தல்ல.
  முழுமையாக இல்லாவிட்டாலும் இதில் பெரும்பகுதி அதாவது யாழ்பாணத்து புகையிரதத்தில் தங்கியிருக்கிற சிங்களகுடும்பங்கள். சில பத்து பஸ்வண்டிகளில் தென்யிலங்கை உல்லாச பிரயாணிகளின் அடாவடித்தனம் எல்லாமே ஐக்கியதேசிய கட்சி சிகப்பு வர்ணம்பூசிய சோமவம்சா அதற்கு முதலிட்டநாடுகளுக்கு நீண்ட தொடர்புகள் உண்டு. தமிழ்மக்களின் பிற்போக்குதனத்தின் கடைசி எச்சமாக தோன்றியிருக்கிற மாவை சேனாதிராஜா சுரேஸ் பிரேமச்சந்திரன் சரவணபவன் போன்றோர் தமிழ்மக்களின் மனச்சாட்சி கழுமரத்தில் ஏற்ற வேண்டியநாட்கள் அன்மித்து விட்டதையே அறுவுறுத்துகின்றன்.

  Reply
 • Ajith
  Ajith

  “நல்ல தலைவர்கள் பிரச்சனையை பேயாக்க மாட்டார்கள். பேசித் தீர்த்து வைப்பார்கள்”. நந்தா

  நீங்கள் சொல்வது மிகச் சரிதான். இலங்கையில் தமிழர் சின்ஹலவர் சோனகர் எலோரும் சரி நிகராக சகல உரிமைகளையும் பெற்று தாம் வாழும் பிரதேசங்களில் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும். நல்ல தலைவர்கள் இதனை தான் செய்திருக்க வேண்டும். இலங்கையில் அந்நிய ஆட்சியிலும் அதற்கு முன்னும் மக்கள் அந்த சுதந்திரத்தை அனுபவித்தார்கள். ஆனால் சுதந்திரம் என்ற மாயவலையை தமக்கு சாதகமாக்கிய சின்ஹல தலைவர்கள் நீங்கள் சொல்வதற்கு மாறாக சிறிய பிரச்சனைகளை பெரிதாக்கி இனத் துவேசத்தை கக்கி தமிழர்கள் சின்ஹலவரின் எதிரிகள் எனவும் தமிழ் இனம் இலங்கையில் அழிக்கப்படவேண்டிய இனம் என அன்றுதொட்டு இன்றுவரை சட்டத்தை ஒரு இனத்துக்கு சாதகமாக்கி மற்ற இனங்களை அழிபதற்கே பாவித்தார்கள். உதாரணமாக யாழ் நூல் நிலையம் 1981 இல் சின்ஹல காடையர்கழலும், சின்ஹல தலைவர்களாலும், சின்ஹல காவல் துறையாலும் எரிக்கப்படாது. இதுவரை ஒரு குற்றவளியவது சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. ஏன் என்ற கேள்விக்கு மிக தெளிவான விடை உங்களிடம் உண்டு. இது UNP குண்டர்கள் என்று SLFP இக்கு ஆதரவளிக்கும் சிலரும் UNP இக்கு ஆதரவளிக்கும் சிலரும் தமிழர் தமிழ் தலைவரகளை சட்டி சின்ஹல இனத்திற்காக வக்காலத்து வாங்குவார்கள். மாறிமாறி சின்ஹல அரசுகள் தான் சட்டம் நீதி நாட்டின் ஆட்சியில் உள்ளார்களே ஒழிய தமிழர்கள் அல்ல என்பது தெரியும். அந்த தலிவர்களை கேட்க தையிரியம் இல்லை யாரை பேசி தீர்க்க சொல்கிறார்கள் என்று புரியவில்லை

  Reply
 • நந்தா
  நந்தா

  அஜித்:
  வானவில்லின் கருத்தை என்னுடையது என்றுநீங்கள் பதில் எழுதியிருந்தாலும் அந்தக் கருத்துடன் உடன்படுபவன் என்ற முறையில் பதில் எழுதுகிறேன்.

  வெள்ளையர் காலத்தில் “சம” உரிமையுடன் வாழ்ந்தார்கள் என்று எதை வைத்துச் சொல்லுகிறீர்கள்?

  10% கிறிஸ்தவர்கள் 95% பாடசாலைகளை வைத்திருந்தது சரியென்று சொல்ல வருகிறீர்களா?

  1956 முதல் தமிழை பாடசாலை மொழியாக்கியதை தப்பு எஙிறீர்களா?

  1956இலிருந்து அரச செலவில் இந்துக்களுக்கு இந்து மதம் போதிக்கப்படுவதை எதிர்க்கிறீர்களா?

  தற்போதைய அரசியல் அமைப்பு செல்வனாயகத்தின் மருமகன் ஏ.ஜே.வில்சனின் தயாரிப்பு என்பது இன்னமும் தெரியாமல் இருக்கிறீர்களா?

  சட்டப்படிநீதி கேட்டு இதுவரையில் தமிழ் வீரர்கள் நீதிமன்றம் ஏறி வாதிடத் தயக்கம் காட்டுவது ஏன்?

  அரசியல் யாப்பில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ் மொழிப் பாவனை அமுலாக்கப்படவில்லை என்று எந்த தமிழனாவது இலங்கை நீதிமன்றத்தில் இதுவரை வழக்கிட்டதாக சரித்திரம் இல்லை.

  காடையர்கள், குண்டர்கள் பற்றி குறிப்பிடும் போது அதே யு என் பி யுடன் புலிகள் சேர்ந்து கொட்டம் அடித்த நாள்கள் மறந்து போய்விட்டதோ?

  புலிகள் ஒழிக்கப்பட்டபின் கூட அதே யு என் பி நிறுத்திய சரத் பொன்சேகாவுக்கு தமிழர்கள் வாக்களித்தது எப்படி?

  “இனக்கலவரம்” என்பது தமிழ் கட்சிகளினாலும், யு என் பி கட்சியாலும் நடத்தப்படும் ஒரு கூட்டுத் தயாரிப்பு!

  நூலகத்தை எரித்த யு என் பி கட்சியுடன் எப்பொழுதும் “காதல்” பண்ணும் தமிழ் அரசியல் கனவான் களிடம் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்!

  Reply
 • thurai
  thurai

  //இலங்கையில் அந்நிய ஆட்சியிலும் அதற்கு முன்னும் மக்கள் அந்த சுதந்திரத்தை அனுபவித்தார்கள்//அஜீத்

  தமிழர்களிடையே தமிழரின் சுதந்திரத்தைப் பறிப்பவர்கள் அன்றும், இன்றும், என்றும் வாழ்கின்றார்கள் வாழ்வார்கள். இதற்காக ஒவ்வொரு சமூகமும் தனக்கென தனிநாடும், அரசுமா கேட்டார்கள்?

  அஜீத் அவர்க்ளே முஸ்லிம்கள் இலங்கையிலும், சிறுபான்மை, யாழ்ப்பாணத்திலும் சிறுபான்மை.உங்கள் மதிப்புக்குரிய புலிகழும் அதன் தலைவர்க்ழும் முஸ்லிம்களிற்கு என்ன செய்தார்கள்? முஸ்லிகள் யாரிடம் பாதுகாப்பு கேட்பது? சிங்கள்வ்ரிடமா? அல்ல்து தமிழரிடமா?

  யாழ்ப்பாண்த்தில் எத்தனை பேர் அன்று இராணுவத்தில் சேர முற்பட்டார்கள்? இழிவான சாதிதொழில் போல்தான் பொலிஸ்இராணுவமும் தமிழரால் கருதப்பட்டது. தமிழர் சிங்கலவ்ரிடம் உருமை கேட்டு போராடு முன் தாங்கள் தங்களிற்குள்ளே செய்யும் உருமை மீறல்களை நிறுத்த வேண்டும். உள்ள உருமைகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

  எல்லோரும் படித்து அரச சேவை செய்ய வேண்டும். வன்னியில் போய் குடியேறினால் வெய்யில், நுளம்புக்கடி. பாம்புத்தொல்லை. சிங்களவர்களை குடியேற்ரினால் அதுவும் பிடிக்காது. செய்யும் தொழில்கள் எல்லாவற்ரையும் சாதியாக்கின்னீர்கள். தொழிலாளர்களை அந்த்ஸ்த்தில் குறைவாக்கி படித்தவ்ர்களிற்கும் அரச உத்தியோகம் செய்பவர்களிற்கும் மதிப்பு கொடுத்தீர்கள். இந்த நிலமை இப்போ தமிழரிடத்தில் மாறிவிட்டதா?
  இன்றும் ஆதி மனிதனின் காட்டு மிராண்டித்தன்ங்கள் தமிழரிடமிருந்து முழுதாக் மாறவில்லை. நாட்டில் வாழ்க்கைதளத்தின் கீழ்மட்டத்தில்
  வாழ்பவ்ர்கள் கேட்டு போராடுவது தான் உருமைப்போராட்டம். உங்களைப் போன்ற படித்தவ்ர்களால் உலகமெங்கும் உல்லாசமாக் வாழ்ந்து கொண்டு கேட்பதற்கு பெயர் உருமைப்போராட்டமல்ல. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டம். –துரை

  Reply
 • Kumaran
  Kumaran

  யாழ்ப்பாண நூலகம் 1981 ஜுன் மாதம் எரிக்கப்பட்டதையடுத்து அந்தப் பிரச்சினை அரசியலாக்கப்பட்டது. அதன் பின்னர் யாழ்ப்பாண நூலகத்தினை மீள்கட்டுமானத்துக்கு உட்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் அரசியலும் அரசியல்வாதிகளுமே முன்நின்றார்கள். புத்திஜீவிகள் படிப்படியாக ஒதுங்கிக்கொண்டார்கள். இன்று யாழ்ப்பாண நூலகம் மாநகரசபையால் நிர்வகிக்கப்பட்டபோதிலும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகவே நடைபெறுகின்றது.போதிய ஊழியர்கள் இல்லை. அவர்களுக்கு பொதிய அதிகாரமில்லை. இராணுவம் கூட்டம் நடத்தவும்> சிவில் நிர்வாகக் கூட்டங்களை நடத்தவும் நூலகக் கன்டீனை இராணுவத்துக்கும்> சிங்களப்பயணிகளுக்கும் உணவு வழங்கும் விடுதிகளாகவும் மாறிய நிலையே இன்று காணப்படுகின்றன.
  நூலகத்தை தீவிரமாகப் பயன்படுத்தும் ஒரு ஆய்வாளனுக்குதமிழ்ப்பிரதேசத்தின் பிரதான கவனஈர்ப்பைப்பெற்ற உலகளாவியரீதியில் அறியப்பெற்ற யாழ்ப்பாண நூலகம் எதையுமே செய்யவில்லை. ஒரு சாதாரண வாசகனுக்கு சுதந்திரமான அமைதியான வாசிப்புக்கான சூழலை வழங்குவதே பெரும்பாடாக உள்ளது. எந்நேரமும் பார்வையாளர்களின் தொல்லை.

  இந்நிலையில் யாழ்ப்பாண நூலகத்தின் அறிவியல் வளங்களை அந்தப்பிரசித்திபெற்ற கட்டிடத்திலிருந்து அப்புறப்படுத்தி தனியானதொர நூலகக்கட்டடத்துக்கு மாற்றிவிட்டு இப்பொதைய கட்டடத்தை மாநகரசபையின் பொறுப்பில் கூட்டங்களை நடத்தவும்> உல்லாசப்பயணிகளையும் உல்லாசமில்லாத பயணிகளையும் கவரும் மியுசியமாக மாற்றி காசுக்கு ரிக்கற் விற்று வருமானத்துக்கு வழியைப்பார்க்கவேண்டியதுதான்.

  புதிய கட்டத்தையும் நூலக சேவையையும் மாநகரசபையின் தலையீடின்றி ஒரு தனி நிறுவனமாக நடத்தினால் சர்வதேசரீதியில் தரமான நூலகசேவையை பலரது உதவியுடன் பெற்றுக்கொண்டு உலகின் நவின நூலகங்கள் வழங்கும் சேவையை வட கிழக்கு மக்களுக்கு வழங்கலாம்.

  இதைத்தவிர யாழ்ப்பாண நூலகம் மீளப் பழையபடி மபறும் என்று நினைப்பது குளம்வற்றிமீன்பிடிக்கக் காத்திருக்கும் கொக்கின் நிலையாகிவிடும்.

  Reply
 • முடியப்பு
  முடியப்பு

  அறிவு மிகு ஆய்வாளர்களின் அறிக்கை!

  ……..தென்னிலங்கை உல்லாச பயணிகள் பலர் பொது நூலகத்தை பார்வையிட வந்திருந்ததாகவும், துரதிருஸ்டவசமாக அன்று போயா விடுமுறை தினமாகையால்……..
  ……..நூலக வாசலில் கடமையிலிருந்த காவலாளி அவர்களை மறுநாள் மாலை வருமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும் ……..

  ……..நூலக காவலாளியின் வேண்டுகோளின்பேரிலேயே தாம் வந்திருந்தபடியினால் ……..

  …….. சம்பவத்திற்கு முந்தையதினம் நூலகத்தை பார்வையிட வந்த உல்லாசப் பயணிகள் நூலக காவலாளியின் கட்டளையை ஏற்று ……..

  சம்பவம் நடைபெற்ற அன்று நூலகத்தை பார்வையிட வருமாறு அழைத்து பின்னர் அவர்கள் நுழைய அனுமதி மறுத்தது நூலக நிர்வாகத்தின் பெரும் தவறு என்பதையும் எண்ணிப்பார்க்க மறந்து ……..

  இந்தக் காவலாளியின் தவறுகள்.
  1.போயா தினம் விடுமுறை நாள் என தென்னிலங்கை உல்லாச பயணிகளுக்கே அறிவுறுத்தியது.
  2.உல்லாசப்பயணிகளிடம்’அறிவுறுத்தல்,வேண்டுகோள்,கட்டளை’ என முப்பரிமாணத் தாக்குதல் நிகழ்த்தியது.
  3.தன்னை ‘நிர்வாகமாக’ காட்டிக் கொண்டது.

  உடனடியாக காவலாளியை விடுப்பில் அனுப்பவும்.

  Reply
 • Ajith
  Ajith

  வெள்ளையர் காலத்தில் “சம” உரிமையுடன் வாழ்ந்தார்கள் என்று எதை வைத்துச் சொல்லுகிறீர்கள்?/
  வெள்ளையர் காலத்தில் சட்டம் நீதி சின்ஹலம் தமிழ் என்று வேறுபடுத்தவில்லை. சின்ஹலம் மட்டும் சட்டம் கொண்டு வரப்படவில்லை. தமிழ் மாணவனுக்கும் சின்ஹல மாணவனுக்கும் பல்கலை கழக அனுமதியில் தரப்படுத்தல் இருக்கவில்லை. யாழ் நூலகத்தை சின்ஹல்வன் எரித்ததால் அவனை சடத்தின் முன் வேறாக பார்கவில்லை.

  10% கிறிஸ்தவர்கள் 95% பாடசாலைகளை வைத்திருந்தது சரியென்று சொல்ல வருகிறீர்களா?/
  அவர்கள் பாடசாலைகளை குண்டு வீசி மாணவர்களை கொள்ளவில்லை.100 % சின்ஹல மொழிமூலம் Adminstrative ஆபீசர்ஸ் தெரிவு சரி என்கிறீர்களா?

  1956 முதல் தமிழை பாடசாலை மொழியாக்கியதை தப்பு எஙிறீர்களா?
  இது தமிழருக்க கொண்டுவந்தததா. சின்ஹலவருகாக கொண்டுவத சட்டம். அப்படியனால சின்ஹலம் மட்டும் அரசகரும மொளியக்கபடது ஏன்?

  1956இலிருந்து அரச செலவில் இந்துக்களுக்கு இந்து மதம் போதிக்கப்படுவதை எதிர்க்கிறீர்களா?
  இது இந்துகளுக்க மட்டுமா. அரச செலவு என்பது தமிழர்களினதும் வரிப் பணம். சின்ஹலவர்கள் மட்டுமா வரி செலுத்துகிறார்கள். ஏதோ தமிழர்களுக்கு சிறப்பு சலுகை என்பது போல் அல்லவா இருக்கிறது உங்கள் கதை. ஏன்

  பௌதமததுக்கு அரச சாசனத்தில் விசேட இடம். இந்து முஸ்லிம் சமயங்களுக்கும் ஏன் விசேட அந்தஸ்து கொடுக்கவில்லை.

  தற்போதைய அரசியல் அமைப்பு செல்வனாயகத்தின் மருமகன் ஏ.ஜே.வில்சனின் தயாரிப்பு என்பது இன்னமும் தெரியாமல் இருக்கிறீர்களா?/அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.

  சட்டப்படிநீதி கேட்டு இதுவரையில் தமிழ் வீரர்கள் நீதிமன்றம் ஏறி வாதிடத் தயக்கம் காட்டுவது ஏன்?/
  இங்கு சட்டம் , நீதி என்பது சின்ஹலவருக்கு சர்பனதால். சட்டம் , நீதி ஒழுங்காக இருந்திருந்தால் யாழ் நூலகம் எரித்தவர்களை போலீஸ் காரர்கள் கைது செதல்லவா இருக்க வேண்டும். ஏன் என்று நீங்கள் பதில் சொல்லுங்களேன். சிறைசாலையில் 53 கைதிகளை கண்களை தோண்டி, வெட்டி கொலை செய்தவர்களையவது தண்டிக்க முடியாமல் போய்விடாதே. நூறு கணக்கான ஒன்றுமே அறியா மக்கள் எதுவித குற்ற சாடும் இல்லாமல் சிறையில் வடுகிரர்களே ஏன்?

  அரசியல் யாப்பில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ் மொழிப் பாவனை அமுலாக்கப்படவில்லை என்று எந்த தமிழனாவது இலங்கை நீதிமன்றத்தில் இதுவரை வழக்கிட்டதாக சரித்திரம் இல்லை/
  வழக்கு பொட்டல் மாத்திரம் நீதி கிடைதுவிடுமாக்கும்.

  காடையர்கள், குண்டர்கள் பற்றி குறிப்பிடும் போது அதே யு என் பி யுடன் புலிகள் சேர்ந்து கொட்டம் அடித்த நாள்கள் மறந்து போய்விட்டதோ?/
  இங்கு ஏன் புலிகளை இழுகிறீர்கள். என்னை யார் உங்களுக்கு புலி என்றது. நீதி கேட்பவன் எல்லாம் புலி என்பது சின்ஹல வாதம். இது ஒன்றே சொல்கிறது நீங்கள் புலிகளும் நீதி கேட்பவர்களும் ஒன்று என்பதை ஏற்று கொள்கிறீர்கள் என்று. உங்கள் நோக்கம் புலிகளுக்கு எதிரானது ஒழிய மக்களுக்க அல்ல.

  புலிகள் ஒழிக்கப்பட்டபின் கூட அதே யு என் பி நிறுத்திய சரத் பொன்சேகாவுக்கு தமிழர்கள் வாக்களித்தது எப்படி?/
  மக்கள் கொலைகாரன் ராஜபசே ஆட்சிக்கு வரகூடதே என்பதிற்காக. நூறுகனக்கான அப்பாவி தமிழ் மக்களை நச்சு ஆயுதங்களை பாவித்தும், பட்டினியால் வட்டியும் கொன்றவருக்கு ஏன் வாக்களிக்க வில்லையென கேட்க நீங்கள் கேட்பது அநியாயமாக படவில்லைய?

  “இனக்கலவரம்” என்பது தமிழ் கட்சிகளினாலும், யு என் பி கட்சியாலும் நடத்தப்படும் ஒரு கூட்டுத் தயாரிப்பு!/
  இங்கு நடந்தது இனக்கலவரம் அல்ல. இன ஒழிப்பு. இனகலவரம் என்பது இரு பகுதியனரும் சண்டை பிடிப்பது. அனால் இங்கு சின்ஹல அரசுகள், சிங்கள மக்கள், சின்ஹல குண்டர்கள் தமிழர்களை அளித்தது. இதற்கு பெயர் இனப் படுகொலை. சின்ஹல UNP SLFP JVP இடதுசாரிகள் என்ற கொலைகும்பல்களின் திட்டமிட்ட இன அழிப்பு.

  நூலகத்தை எரித்த யு என் பி கட்சியுடன் எப்பொழுதும் “காதல்” பண்ணும் தமிழ் அரசியல் கனவான் களிடம் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்!/
  என்னை பொறுத்த வரை மேலே சொன்னவர்கள் எல்லாம் சின்ஹல இனவாதிகள் . நீங்கள் தான் இனப் படுகொளையளிகாக வக்காலத்து வந்க்பவர்கள். எனவே நீங்கள் கூறுபவர்க்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்

  Reply
 • நந்தா
  நந்தா

  அஜித்:
  “சிங்களம்” என்ற கார்ப்பெட்டுக்குக் கீழ் எல்லாவற்றையும் தள்ளி மூட முயற்சிகிறீர்கள்.

  யு என் பி சிங்கள கும்பல்கள் தமிழர்களுக்கெதிரான அக்கிரமங்கள் பட்டவர்த்தனமாக தெரிந்துள்ள பின்னரும் அதே கட்சி சிங்களவருடன் “கை கோர்த்து” சல்லாபம் செய்யும் தமிழர்களுக்கு அல்லது கட்சிகளுக்கு “தமிழ் பிரச்சனை” கொழுந்து விட்டெரிய வேண்டும் என்பதுதான் பேரவா! அது உங்கள் எழுத்தில் வெளிப்படும் விடயம்.

  இந்திய தமிழர்களுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து கட்சி தொடங்கிய செல்வனாயகம் அந்த தமிழர்களுக்காக எதுவும் செய்தது கிடையாது. ஆனால் 1965ஆம் ஆண்டு அதே யு என் பியு டன் “தேசிய”அரசு அமைத்து தமிழர்களுக்குப் பிரச்சனையே இல்லை என்றவர்கள். இந்த தமிழ் தலைமைகள்தான் “ஈழம்” வேண்டும் என்று தமிழ் பகுதிகளை சுடுகாடாக்கியவர்கள்.

  ஈழம் கேட்டவர்கள் என்ன குறச்சலா? பிரபாகரனுக்கும் தமிழ் பிரச்சனை இந்திய இராணுவத்தை கண்டதும் மறந்து போய் பிரேமதாசவுடன் தேன்நிலவு கொண்டாடியது எப்படி?

  இராணுவத் தளபதியாகவிருந்து புலிகளை அழித்த பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி கோரி தமிழர்கள் வாக்களித்தார்கள். ஏன்? பொன்சேகா தமிழர்களை “வந்தேறு குடிகள்” என்று பகிரங்கமாக அறிவித்த பின்னரும் தமிழர்கள் அவருக்கு வாக்களித்தது எப்படி?

  மொத்தத்தில் இலங்கைத் தமிழ் தலைமைகள் அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் கூலிகள் என்பதுதான் உண்மை.

  அதுதான் 95% பாடசாலைகளை 10% கிறிச்தவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும், இந்துக்களுக்கும், மற்றையவர்களுக்கும் மத உரிமை கிடையாது வைத்திருந்த பிரிட்டிஷ் காரன்களை போற்றுவதும் அந்த எசமான வழிபாட்டின் வெளிப்பாடே ஒழிய தமிழ் பிரச்சனை அல்ல!

  உங்களது வாதம் தமிழரின் நன்மை பற்றியது அல்ல. தமிழின் பெயரால் அன்னியர்களுக்கு சேவகம் செய்யும் கோஷ்டிகளுக்கு வக்காலத்து வாங்குவது மாத்திரம் செய்யும் உங்களைப் போன்றவர்கள் தமிழர்களின் சாவில் மகிழ்ச்சி காணுகிறீர்கள்.

  Reply
 • karu
  karu

  வெளிநாட்டிலுள்ள புலி ஆதரவாளர்கள் எமது பிரச்சினைகளின் ஆழம் விளங்குபவர்களாக இல்லை. இங்கு எமக்கு யாழ் நூலகத்தில் யாரும் வந்து சத்தம் பொட்டு விட்டு போகட்டும் அடுத்த நாள் அவர்களே தமது கேவலத்தை நினைத்து வருந்துவார்கள் இதன் ஒரு படியே தான் அந்த எரித்த இனத்தை சேர்ந்தவர்கள் பாவ மன்னிப்புக்காக வந்து போகிறார்கள் என்றே நாம் கருதுகிறோம். ஆனால் கேவலம் வெளிநாடுகளில் இருந்து எழுதுபவர்கள் இதை இனதுவேச வியாபாரமாக்குகிறார்கள் இதைவிட ஜரோப்பாவில் நடைபெறும் உங்களுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டு வெள்ளை இன வெறிக்கெதிராகவும் குரல் கொடுங்கள். -karu jaffna-

  Reply
 • மாயா
  மாயா

  // இராணுவத் தளபதியாகவிருந்து புலிகளை அழித்த பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி கோரி தமிழர்கள் வாக்களித்தார்கள். ஏன்? பொன்சேகா தமிழர்களை “வந்தேறு குடிகள்” என்று பகிரங்கமாக அறிவித்த பின்னரும் தமிழர்கள் அவருக்கு வாக்களித்தது எப்படி? – நந்தா//

  மகிந்தவுக்கு பிரபாகரனை கொல்லும் நோக்கம் இல்லை. எங்காவது போகட்டும் > அதோடு பிரச்சனை தீர்ந்துவிடும் என்று பாதுகாப்பு குழு சந்தித்த போது தெரிவித்தார். பிரபாகரன் செத்தால் உலக நாடுகளில் சில பிரச்சனைகள் வரும். வெகு காலத்துக்கு பிரபாகரன் உயிர் வாழப் போவதில்லை. நீரழிவு நோய் > மன அழுத்தம் என பல நோய்கள். பங்கருக்குள்ளேயே இருந்தவனால் > வெளியே நடமாட முடியாது. போக விட்டால் > அவர்களே > ஆளைப் பொட்டுத் தள்ளுவார்கள் என்று கருத்துச் சொன்ன போது > சரத் பொண்சேகா > மகிந்தவை தாறு மாறாக திட்டி > பிரபாகரனின் உடலை நான் பார்க்காமல் இந்த யுத்தம் நிற்காது. கடைசி புலி சாகிற வரைக்கும் > எத்தனை இராணுவம் செத்தாலும் புலிகளை அழிப்பேன் என பேசிய அதே சரத்தை ஆதரித்த புலிகளின் சாணக்கியத்தை எப்படி மெச்சுவது?

  இறுதி யுத்தத்தில் இராணுவம் குறும் தூர கன்களோடு முன்னேறியது. விமான தாக்குதல் செய்யலாம். பெரிதாக மக்களுக்கு இழப்பு வராது. புலிகள் ஒரு இடத்தில் குழுமி நிற்கிறார்கள் என்ற போதும் > நோ …..பிரபாகரனின் பொடியை நான் பார்க்க வேண்டும். விமான தாக்குதலால் அதை உறுதிப்படுத்த முடியாது என்று கடுமையாக கத்தினார் என மகிந்தவின் நெருங்கிய சாகா ஒருவர் என்னிடம் > யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே சொன்னார். அதன் பின்னரே பிரபாகரன் கொல்லப்பட்டார். இவ்வளவு நடந்தும் > புலிகள் ஏன் சரத்தை ஆதரிக்கச் சொன்னார்கள்? புலிகளில் யாருக்காவது தெரியுமா?

  Reply
 • vanavil
  vanavil

  // இராணுவத் தளபதியாகவிருந்து புலிகளை அழித்த பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி கோரி தமிழர்கள் வாக்களித்தார்கள். ஏன்?//

  புலிகள் ஏதோ ஒரு நாட்டின் சொல் கேட்டு நடந்தவர்களாக தெரிகிறது? ஒன்று அது அமெரிக்கா அல்லது இந்தியா. சிறீலங்கா முன்னேற எதையாவது தடையாக செய்ய இவர்களில் எவராவது புலிகளை பயன்படுத்தினார்கள். எனவே புலிகளை காப்பாற்ற இவர்களில் யாராவது வருவார்கள் என கடைசி வரை நம்பினார்கள். இல்லாவிட்டால் பிரபாகரன் எல்லோரையும் தள்ளிக் கொண்டு கடல்கரை வரை செல்ல மாட்டார்.

  Reply