”அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளோம்” வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை கூட்டமைப்பு கைவிட்டது.

TNAநேற்று திங்கள் (நவம்பர் 29) மாலை நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிப்பதைத் தவிர்த்து வாக்களிப்பில் கலந்து கொள்ளமல் விட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, அபிவிருத்தி ஆகிய விடயங்களில் அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமாக கலந்துரையாடி அதற்காக அரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு விரும்புவதால், அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே நேற்று வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்து கொண்டு அதனை எதிர்ப்பதை தவிர்த்துக் கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப்பு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

”நாடாளுமன்றில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு எவ்விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை. இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஒன்று எனக் கூறிவரும் ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீடுகளில் இது எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. இதற்கு மேலாகப் போர் முடிவுற்ற நிலையிலும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் மீள்குடியமர்வு. புனர்வாழ்வு. அபிவிருத்தி போன்ற விடயங்களில் அரசாங்கம் கூட்டமைப்புடன் அக்கபூர்வமான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கூட்டமைப்பின் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கும் முகமாகவே வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெகெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதிலிருந்து கூட்டமைப்பு விலகியிருந்தது.”  இவ்வாறு கூட்டமைப்பின் விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று மாலை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்களிப்பில் 150 வாக்குகள் ஆதரவாகவும், 46 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 104 மேலதிக வாக்குகளால் இது நிறைவேறியது.

ஏதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி ஆகியன எதிராக வாக்களித்தன. அரசுடன் தற்போது இணைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஆகியன ஆதரவாக வாக்களித்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

9 Comments

 • மாயா
  மாயா

  //”அரச எதிர்ப்பு அணுகுமுறையை கைவிட முடிவு செய்துள்ளோம்” வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை கூட்டமைப்பு கைவிட்டது.//

  புலி இல்லாததால்……….. வேற வழி. நொட்டி நொட்டி அரசியல் செய்த கும்பல் நொண்டி நொண்டி நடக்குதாம்.

  Reply
 • T Constantine
  T Constantine

  kann ketta pinn sooriya namaskaram

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  இன்னமும் சொந்தமாக சிந்திக்கத் தெரியாத,எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்போர் எப்படித் தலைகளாகத் திரிகிறார்களோ தெரியவில்லை.

  Reply
 • விஸ்வா
  விஸ்வா

  வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்காமல் விட்டதை கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளருமான எம்,கே சிவாஜிலிங்கம் கண்டித்துள்ளார்.

  தமிழ்தேசியக் கூட்டமைப்பு தனது நல்லெண்ணத்தை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்த வேண்டுமானால், அரசாங்கத்தை விமர்சிக்காமலிருக்கலாம். அதனை விடுத்து வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டமையானது அரசாங்கத்தை ஆதரிப்பதாகவே அமையும் என அவர் தெரிவித்துள்ளார். கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக பல தடவைகள் கூறியும் அரசாங்கம் அதனை இழுத்தடித்து வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அனைத்துலகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமானால் இறுதிக்கட்ட வாக்களிப்பில் கலந்து கொண்டு கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  இதேவேளை கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்காமல் விட்ட நிலைப்பாடு குறித்து பஸில் ராஜபக்ச மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பிரிட்டன் பயணம் முடிந்த பின்னர் கூட்டமைப்பை அவர் சந்தித்து கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Reply
 • மாயா
  மாயா

  //ஜனாதிபதியின் பிரிட்டன் பயணம் முடிந்த பின்னர் கூட்டமைப்பை அவர் சந்தித்து கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.//

  சபை குழப்பிகள் என்போர் தமிழரில் அதிகம். அவர்களை காய் வெட்டி விட்டுப் போனால் ; தமிழ் சமூகம் நிம்மதியாக வாழும். புலிகள் தமிழ் கட்சிகளை வெட்டிவிட்டுத்தானே பேச்சு வார்த்தைக்கு போனார்கள். எதுக்கு புலி வாலுகளை இழுத்துக் கொண்டு இன்னும் இவர்கள் திரிகிறார்கள்.

  அதையே திருப்பிச் செய்ய இவர்களுக்கு தில் இல்லையா?

  திம்பு பேச்சு வார்த்தையில் ; அரசியலும் ; சாணக்கியமும் ; நிர்வாகத் திறனும் கொண்டவராக அமிர்தலிங்கம் இருந்தார். அவர் என்னதான் சிறு தவறுகளை இழைத்தாலும் ; ஜே.ஆரே பாராளுமன்றத்தில் அமிரை எதிர்க்க அஞ்சினார். அவ்வளவு தெளிவான தர்க்கங்கள். இருந்தாலும் ஒரு சத்தியேந்திரா ; அனைத்து திம்பு பேச்சு வார்த்தைகளையும் குழப்பியது வரலாறு.

  வந்த சீதேவியை காலால் எட்டி உதைத்தவர்கள் ……..
  இன்னொருவர் ஏன் நல்ல விசயம் கதைக்கும் போது செத்த வீட்டுக்கு போவது போல கறுப்புடுத்தி வருகிறார்?

  Reply
 • thenupriyan
  thenupriyan

  அமிர்தலிங்கம் எப்போது தமிழ் மக்களுக்குத் தலைவராக இருந்தார்?
  தந்தை செல்வாவிற்குப் பின்னர் இராஜதுரையே கூட்டணியின் தலைவராக வந்திருக்கவேண்டும். அது நடந்திருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சார்ந்தவர் அனைத்துத் தமிழர்களுக்கும் தலைவராயிருப்பார்.ஒரு புதிய மாற்றத்திற்கு இது வழிகோலியிருக்கும். இதனைச் சதி செய்து தடுத்தது அமிர்தலிங்கமே. 1977ம் ஆண்டுத் தேர்தலில் இராஜதுரையைத் தோற்கடிப்பதற்காக மட்டக்களப்புத தொகுதியில் அவரையும் தமிழரசுக்கட்சி வேட்பாளராக காசி ஆனந்தனையும் போட்டியிட வைத்தது அமிர்தலிங்கமே. தமிழருக்கு ஒன்று முஸ்லீம்களுக்கு ஒன்று என ஒதுக்கப்பட்ட இரட்டை அங்கத்தவர் தொகுதியியான மட்டக்களப்பில் இரண்டு தமிழ வேட்பாளர்களை நியமித்ததன்முலம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்குமிடையில் பிளவுகளை ஏற்படுத்திவைத்ததும் அமிர்தலிங்கமே. எல்லாம் தனது சுயநலத்திற்காகவும் பதவிக்காவுமே இவ்வளவற்றையும் செய்தார். அமிர்தலிங்கம் அன்று ஓர் உண்மையான நேர்மையான தலைவராக செயற்பட்டிருந்தால் இன்றைய நிலை தோன்றியிருக்கமாட்டாது.

  Reply
 • மாயா
  மாயா

  //அமிர்தலிங்கம் எப்போது தமிழ் மக்களுக்குத் தலைவராக இருந்தார்?
  தந்தை செல்வாவிற்குப் பின்னர் இராஜதுரையே கூட்டணியின் தலைவராக வந்திருக்கவேண்டும். //

  கூட்டணியின் தலைவர் யார்? எதிர்கட்சித் தலைவர் யார்?

  //Amirthalingam became leader of the Tamil United Liberation Front//

  Appapillai Amirthalingam (August 26, 1927 – July 13, 1989) was a Sri Lankan politician who advocated separatism for the Tamil regions of the country. He was assassinated by the LTTE.

  Amirthalingam became leader of the Tamil United Liberation Front upon the death of S.J.V. Chelvanayakam in 1977. In the 1977 elections he led the TULF to one of its best showings ever, becoming the official Opposition in Parliament.

  Throughout his tenure as leader, Amirthalingam was under severe pressure from militant youth groups who believed his parliamentary actions were useless and only armed struggle could achieve justice for the Tamils. Sinhalese nationalists, in their turn, blamed Amirthalingam for terrorist attacks carried out by the militants.

  After the Black July pogroms of 1983, Civil war broke out between the government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Amirthalingam supported the Indian military intervention of 1987, and a negotiated end to the conflict. It is believed that for this reason the LTTE ordered his assassination.

  -http://en.wikipedia.org/wiki/Appapillai_Amirthalingam

  Reply
 • thenupriyan
  thenupriyan

  1970ல் சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டையில் தோல்வி. 1977ல் வட்டுக்கோட்டையில் நிற்கப் பயந்து காங்கேசன்துறைக்குச் சென்றார்.மரம் பழுத்தால் வெளவால் வரும் என்று தமிழ் இளைஞர்களை உசுப்பேத்திவிட்டு தோதலில் வென்று பின்னர் மறைமுகமாக அரசிற்கு ஆதரவு.

  இயக்கங்களுக்குப் போட்டியாக தனது மகன் பகீரதனின் தலைமையில் தமிழீழத் தேசிய இராணுவம் என்றவொரு குழுவை உருவாக்கினார். 1989ம் ஆண்டுத் தேர்தலில் யாழப்பாணத்தில் நின்றால் தோற்றவிடுவோம் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். அங்கும் தோல்வி. பின்னர் பின் கதவால் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றம் புகுந்தார். இதுதான் எங்கள் தமிழத் தலைவர் வரலாறு.

  Reply
 • மாயா
  மாயா

  அரசியலில் இதெல்லாம் சர்வ சாதாரணம். ……….. பிரபாகரன் ; எந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரானார்? எந்தத் தேர்தலில்; வெற்றி பெற்று தேசியத் தலைவரானார்? (ஏனைய இயக்கத் தலைமைகளும்தான்?)

  Reply