பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளுக்கும் எதிரான கண்டனப் போராட்டம் : த ஜெயபாலன்

Wanni_Warஊர்வலம் : சனி 07 / 03 / 2009 நேரம் மாலை 15:00
இடம் : Place Georges Pompidou
Métro : Rambuteau, Hôtel de Ville ou Les Halles

மார்ச் 7ல் பாரிஸில் இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாரிஸில் இடம்பெற்ற கண்டனப் போராட்டங்கள் அனைத்தும் புலி ஆதரவு அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் 7ல் நடைபெறவுள்ள கண்டனப் போராட்டம் Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் இந்தக் கண்டனப் போராட்டத்திற்கான தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உள்ளன. தமிழர்களல்லாதவர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்வகைப் போராட்டம் அண்மைக் காலத்தில் இப்போதே பாரிஸில் இடம்பெறுகிறது. இவ்வகையான போராட்டங்கள் லண்டனில் Committie for Workers International இனால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ள Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு பரிஸில் உள்ள மாற்றுக் கருத்து அரசியல் ஆர்வலர்களும் பிரான்ஸ் இடதுசாரி ஆர்வலர்களும் இணைந்து உருவாக்கிய அமைப்பு. இவர்கள் தொழிற்சங்கம் போன்றே தமது செயற்பாட்டைக் கொண்டு உள்ளனர். இவர்கள் உணவகத் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் வதிவிட உரிமைக்கான போராட்டங்களை தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்காக மேற்கொண்டு உள்ளனர்.

இக்கண்டனப் போராட்டம் தொடர்பாக  Comite’ De de’fence Social  – சமூகப் பாதுகாப்பு அமைப்பு வெளயிட்டுள்ள அறிக்கையில் எல்ரிரிஈ; என்ற சந்தேகத்தில் அல்லது தமிழர்கள் என்பதற்காக இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தல், எழுந்தமானமான கைதுகள், தடுத்து வைத்தல்கள், சித்திரவதைகள், கூட்டுப்படுகொலைகள் என்பனவற்றை மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

அதே அறிக்கையில் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுத தந்திரோபாயங்களால் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தி தாங்களே அம்மக்களின் ஏகபிரதிநிதிகளாக செய்றபடுவதாகவும் மற்றைய தமிழ் அரசியல் அமைப்புகளை இல்லாதொழித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இலங்கையில் உள்ள ஏனைய ஆயுதக் குழுக்களும் இந்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டு உள்ளது. EPDP, PLOTE, TELO, TMVP ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்டுவதாகவும் இவர்கள் கடத்தல் கப்பம் என்று வன்முறையில் ஈடுபடுவதாகவும் இது நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. (இந்த அறிக்கையைக் கீழே காணலாம்.)

Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்டனப் போராட்டத்தில் பின்வரும் கோசங்களை முன்வைப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

._._._._._.

Crisis in Sri Lanka

The Government of Sri Lanka launched a major military offensive in the month of September 2008 against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Since the separatist campaign launched by the LTTE against the government in 1972, the conflict has claimed tens of thousands of lives.

The government forces have long oppressed the Tamil population through massacre, raids, arbitrary detention and torture of thousands for mere suspicion of being a Tiger sympathiser or even for just being a Tamil.

The Tamils are safe nowhere in Sri Lanka. They are victims of segregation worthy of Apartheid. The slightest movement is controlled; all Tamils are obliged to get registered in police stations and military camps.

Meanwhile, the tigers with their strong arm tactics have kept the tamil population under their control claiming exclusive representation of the community working for their emancipation. They have eliminated all other representatives of the Tamil political organisation.

The “Tigers” forcibly recruit adults and children alike for their armed struggle. Since 1990, the Tigers have imposed a blockade on the populations of the areas under their control and those who have to crossover are obliged to leave their family members as hostage.

The situation has worsened for the civilians since the government launched its offensive in the month of September 2008.

The blockade has condemned civilians who are caught in the cross-fire Those who manage to escape are held in virtual concentration camps which could be termed the lawless areas where the military eliminates any individual who is a suspect.

To date, hundreds of refugees have disappeared. A safety zone has been created, too small to contain populations which is in the conflict are (approx. 500,000 people), which suffers from both the blockade of the “Tigers” and the artillery bombardment and those from air force.

The situation is further complicated by the fact that other Tamil paramilitary groups, including the EPDP, PLOTE, TELO, TMVP, (militia formed by former members of the Tigers)… are collaborating with the Sri Lankan army and bully the people through acts of extortion, of violence and abductions of children — all with the blessing of the Sri Lankan State.

We demand:

•End of massacre in Sri Lanka!
•Freedom for all oppressed peoples of Sri Lanka!

We call for the solidarity, support and relief from the entire French population, associations, trade unions and politicians.

We seek your participation at the rally to be held
On Saturday, 07 March 2009
This event will start at 15:00 Place Georges Pompidou, Paris.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • shan
    shan

    ஒரு பக்கம்
    அரச விசுவாசிகள்
    இன்னொரு பக்கம்
    புலி விசுவாசிகள்
    அரச விசுவாசிகளுக்குள் பல குழு
    கருணா குழு பிள்ளையான் குழு
    புளொட் குழு ஈ.பி.ஆர்.எல்.எவ் குழு
    ஆனந்த சங்கரி குழு (இதற்குள்ளும் இரண்டு உப குழு)
    ஈ.பிடி.பி
    இவர்கள் எல்லோருக்குள்ளும் அதகாரச் சண்டை. எசமான் மகிந்தாவே. அதில்தான் இவர்கள் ஒற்றுமை.பாசிச புலிகள் ஓடி ஒழிய பாசிச சருகுப்புலிகளான இந்த அமைப்புக்கள் புலிகளுக்கு மாற்றீடாக புலிகளின் கொடுமைகளை தமிழ் மக்களுக்கு செய்யத் துடிக்கிறார்கள் புலிகளின் இடத்திதை பிடித்து மக்களைக் கொடுமைப்படுத்த கொள்ளையடிக்க கப்பம் வாங்க பாசிச புலிகளை இவர்கள் மிஞ்சிவிடுவார்கள். புகலிட வானொலிகளை கேட்டால் இவர்களின் பச்சை வியாபாரம் தெரியும். நாட்டு மக்களின் துன்பங்களை இங்கு விற்பனையாக்கி இவர்களெல்லாம் பணம் பண்ணுகிறார்கள். இந்த நேரத்தில் இப்படியான இந்த ஊர்வலம் இவர்கள் வைக்கும் கோசம் எல்லா கொலைகளையும் கண்டிக்கும் நேர்மை எல்லா கொள்ளைக்காற அமைப்புக்களையும் கண்டிக்கும் துணிவு எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. பரிசில் இன்னும் இலங்கை அரசுக்கு விலைபோகாத உறுதியான நண்பர்கள் இருப்பது இன்னும் நம்பிக்கை தருகிறது.உங்கள் பணி தொடரட்டும். என்னைப்போன்றவர்களின் ஆதரவு உண்டு.

    Reply
  • palli
    palli

    எப்போதுமே பாரிஸ் நண்பர்கள் (தமிழர்) எந்த அடக்கு முறைக்கும் போராட தயங்க மாட்டார்கள். ஆனால் போராட்ட முடிவில் இரண்டாக பிரிந்து குடும்பபோர் புரிவதும் அங்குதான். ஆகவே இதிலாவது புலி புண்னாக்கு என குத்துபடாமல் வன்னி நிலையை உனர்ந்து செயல்பட அனைத்து தரப்பையும் பல்லி தேச மூலம் கேட்டு கொள்கிறது. பல்லிக்கு வினையே பாரிசில் தான். இருப்பினும் இந்த நிகழ்வுக்கு பல்லியின் பாராட்டுக்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கட்டுரைக்கும் தகவலுக்கும் நன்றி ஜெயபாலன் அவர்களே. இப்படியான முன்னெடுப்புகள் தான் இன்றைய காலகட்டத்தில் தேவை. இதைத் தான் என் போன்ற பலர் எதிர்பார்க்கின்றார்கள். இப்டபடியான செயற்பாடுகளினால்த் தான் ஏனைய நாடுகளின் கவனத்தையும் எம் பக்கம் திரும்ப வைக்கலாம்.

    ஆனால் நேற்றயதினம் பிரான்சிலிருந்து இயங்கும் புலி ஆதரவு வானொலியொன்று இந்த நிகழ்வுக்கெதிராகவும், இதைக் குளப்பவேண்டுமென்ற நோக்கத்திலும் நிகழ்ச்சியொன்றை நடாத்தியது. அதில் எப்படி எப்படியெல்லாம் இந்த நிகழ்வைக் குளப்பலாமென்று நேயர்களூடாக அறிவுறுத்தல்களையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் பங்குபற்றிய நேயர்கள் பலர் “சொல்லீட்டீங்களல்லோ எனி நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம்” என்று தெருச்சண்டியன் போல் சொல்லிச் சென்றார்கள். முதலில் இப்படியான வானொலிகளின் உள்நோக்கத்தை ஐரோப்பா வாழ் ஒவ்வொரு தமிழ் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் முகத்திரையைக் கிளிப்பதற்கு இப்படிப் பொதுவான ரீதியில் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டங்களுக்கு முக்கிய ஆதரவளித்துக் காட்ட வேண்டும். வன்னிமக்களின் அவலங்களை விற்று பணத்தை மட்டுமே குறியாக கொண்டு செயற்படுபவர்களுக்கு, அப்போதாவது மக்களை புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்.

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    கண்டன அறிக்கையில் “புலிகளே! கேடையமாக மக்களைப் பயன்படுத்துவதை நிறுத்து.
    போராட விருப்பமில்லாத போராளிகளைப் போக விடு.
    வெளியேற விரும்பும் மக்களைப் போக விடு” என்று எதுவும் இல்லையே?! இதுவும் பத்தோடு ஒன்று பதினொன்றுதான். இப்படியொன்று செய்வதைவிட பேசாமல் தங்கள் தங்கள் சுய வேலைகளைப் பாபர்க்கலாம். சும்மா பம்மாத்து விடத் தேவையில்லை.

    பாரீசைப் பொறுத்தவரை இங்குதான் எல்லாமே. தெருச்சண்டித்தனம்,……………. எதிர்வினை, சகவினை, ஊழ்வினை, கலகம், எல்லாமே…
    இத்தனை காலமும் மாற்றுக்கருத்து அரசியல் செய்தவர்களும் இந்த நிமிடம்வரை இந்தப் போர் பற்றியோ, மனித அவலங்கள் பற்றியோ இன்னமும் வாய் திறக்கவில்லை. இனியாவது திறப்பார்களா…?

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • jimmy
    jimmy

    Shan where is telo group? and sri telo group? u missed them.

    Reply
  • hg
    hg

    பிரான்சில் ‘சமூகப் பாதுகாப்பு அமைப்பு” என்ற பெயரில் மார்ச் 7ம் திகதி, நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ள போராட்டம், அதில் தமிழ்ப் பிரதிநிதிகளின் கோசம் தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றொரு கபடமுயற்சியாகும். ஆங்கிலம் பிரஞ்சில் ஒன்றையும், தமிழில் வேறு ஒன்றையும் முன்வைத்து, இதில் கலந்து கொள்ளும் பிரஞ்சு மக்களை ஏமாற்றும் சதி முயற்சியுடன் இது ஆரம்பமாகின்றது.

    இவர்கள் வைத்துள்ள கோசமோ வேடிக்கையானது. சமகாலத்துக்கு பொருத்தமற்ற வகையில், விடையத்தை திரித்து, சொந்த சந்தர்ப்பவாதத்துடன், இடதுசாரிய வேஷத்தைக் கலந்து அவிக்கின்றனர். அப்படி அவர்கள் வைத்த கோசங்கள் தான் இவை.
    1. இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
    2. இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுதந்திரம் வழங்கு!
    3. அராஐகம் படுகொலைகள் காணாமல் போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
    4. பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
    5. பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
    6. பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!” என்கின்றது.

    இன்று இலங்கையின் நிலைமையுடன், மக்களின் அன்றாட வாழ்வியலுடன் தொடர்பற்ற வகையில், கோசத்தை அள்ளித் தெளிக்கின்றனர். அரசையும் சமாளித்து, புலியையும் தடவி போராட அழைக்கின்றனர்.

    ‘இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!” என்றால், அங்கு ஒரு போராட்டமும், அதனடிப்படையிலான வன்முறையுமேயுள்ளது. இது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை முதல் ஜனநாயக உரிமை வரை இதற்குள் அடங்கும். இந்த அடிப்படையின் எல்லைக்குள் தான், அங்கு வன்முறையுள்ளது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மறுப்புத்தான், அங்கு மக்கள் விரோதமான வன்முறை வடிவில் உள்ளது. அந்த உரிமையைக் கோராமல் போடும் அரசியல் வேஷம், மறுபக்கத்தில் ‘பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!” என்று இங்கு உள்ள தமிழனை ஏமாற்ற கோசம். அங்குள்ள மக்களிள் சுயநிர்ணயத்தைக் கோராது, இடதுசாரிய மோசடி.

    அடுத்து ‘ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுதந்திரம் வழங்கு!” என்றால், இது என்ன மாங்காய்? அந்த சுதந்திரம் தான் என்ன? வாக்குப் போடுவதா? தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காத நிலையில், தமிழ்பேசும் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைவதும் ஐக்கியப்படுவதும் சாத்தியமில்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணயம் என்பது, அந்த மக்களின் ஜனநாயக உரிமை. அதை அங்கீகரிக்காத சிங்களத் தொழிலாளி, பிரஞ்சுத் தொழிலாளியும், எப்படி தமிழ்மக்களிடம் ஐக்கியத்தைக் கோரமுடியும்? நாங்கள் அதைக் கைவிட்டு கோருகின்றோம் என்றால், அதின் பின் இருப்பதோ சந்தர்ப்பவாதம் தான். அடிப்படையில் பேரினவாதம் தான்.

    Reply
  • nilavu
    nilavu

    இப்படியான நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் எல்லோரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டி வரும் நிலைப்பாட்டடை உருவாக்க சிலவேனை வன்னியிலிருக்கும் புலிக்கு விளங்கும் இது தேவை என ஆனால் ஜரோப்பிய காசு சேர்க்கும் புலிகளுக்கு கடைசிவரையிலும் விளங்க வராது- சிலவிடயம் கட்டையில வெந்தாலும் போகாது என்பார்கள்.

    Reply