புலிகள் 45 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கம் – பிரிகேடியர் உதய நாணாயக்கார

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவில் 45 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகள் படையினரால் முடக்கப்பட்டுள்ளனர் எனவும் 500 க்கும் குறைவான புலிகளே இப்போது அங்கு எஞ்சியுள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசதம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. எனினும் புலிகள் அங்கு அம்பகாமம் மற்றும் பொக்கனை ஆகிய பிரதேசங்களில் ஊடுருவி அங்கிருந்து ஒட்டிசுட்டானில் உள்ள படையினர்மீது  130 மற்றும் 120 மில்லி மீற்றர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்துகின்றனர். இன்று காலையும் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

புலிகள் எங்கிருந்து தாக்குகினறனர் என்பதை படையினரில் ராடர் கருவி தெளிவாகக் காட்டியபோதும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படையினர் பதில் தாக்குதல் நடத்தவில்லை. ஜனவரி மாதம் முதல் இன்றுவரை புலிகளின் பிடியிலிருந்து 37589 பொது மக்கள்  தப்பிவந்து படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர், நேற்றும் 200 பேர் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக்கு வந்துள்ளனர். இவர்கள் மீது புலிகள் நடத்திய எறிகணை மற்றும் மோட்டார் தாக்குதலில் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் ஆறு போர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை ஆறு படகுகளில் தப்பி வந்த பொது மக்கள்மீது வேறு படகுகளில் பின்தொடந்து வந்த புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். பொது மக்கள் தப்பி வந்த ஆறு படகுகளில் 2 சுண்டிக்குளியில் கரை சேர்க்கப்பட்டன. ஏனைய 4 படகுகளையும் கடற்படையினர் முனைப் பிரதேசத்துக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • palli
    palli

    இவர் பல்லியை அடிகடி கடுப்பேதுகிறார். இவர் இதுக்கு முன்பு என்ன அறிவிப்பாளராக இருந்தவரோ??

    Reply
  • santhanam
    santhanam

    எங்கை இழந்திரையன் எதிராக இறக்கவேண்டியது தானே மதவாச்சியில் நிற்பன் என்றார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சந்தானம்
    இளந்திரையன் இராணுவம் மடுவிலை நின்றால் தான் மதவாச்சியில் நிற்பேன் என்றவர். இராணுவம் மடுவையும் தாண்டி இப்ப புதுக்குடியிருப்பிலை நிற்பதாலை தான், அவர் வெளிக்கிட முடியாமல் நிற்கின்றார். இது புரியாமல் நீங்கள்…….

    Reply
  • accu
    accu

    இளந்திரையனின் பெற்றோர் அவரின் இறுதிக்கிரியைகள் செய்ததாக கிழக்கு மாகாண நண்பர் ஒருவர் கூறினார். எந்தளவில் உண்மையென்பது தெரியாது.

    Reply
  • Kullan
    Kullan

    அப்படி என்றால் 7கிமீ நீளம் 6.5கிமீ அகலம் க்குள் சனமும் புலிகளும் நிக்கினம் எண்டு சொல்லுறாரோ? என்ன சனத்தை மூடைகட்டியா வைத்திருக்கிறாகள் புலிகள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு. மன்னிக்கவும் மேலுலகம் அனுப்புவதற்கு.

    புலிகள் ஊடுருவாது சுத்திவளைத்துள்ளோம் என்றார்கள் அப்ப எப்படி புலிகள் 120மிமீ 130மி.மீ பீரங்கிகளைக் கொண்டு வந்தார்கள். என்ன பொக்கற்றுக்கள் வைத்துக் கொண்டு போகும் சாமான்களா இந்தப்பீரங்கிகள். இராணுவஉடுப்புப் போட்ட மனிதனுக்கு ஆயுதங்கள் பற்றியும் தெரியவில்லை. ஒரு குழந்தைக்குத் தெரியும் பெருக்கல் வாய்பாடும் தெரியவில்லை.

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    இளந்திரையனின் பெற்றார் அவருக்கு இறுதிக் காரியம் பண்ணி விட்டார்கள் சரி… புலியின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு இளந்திரையன் இறுதிக் காரியம் பண்ணாமல் விட மாட்டார் என்று நாம் எதிர் பார்ப்போமாக!

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • palli
    palli

    தம்பியவை பல்லி கோடு போட்டா நீங்க வடக்குக்கு தண்சவாளமே போடுறியள். இதுவரை எமது உணர்வுகளை எவ்வளவு சிரமபட்டு அடக்கியிருப்போம் தெரியமா?

    Reply