இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதன்படி, தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 1 விக்கெட்டு இழப்பிற்கு 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து, இன்று தனது இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய பெத்தும் நிச்சங்க 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் வீரச்சாமி பெருமாள் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அவ்வணி சார்பாக கிரேக் பிரத்வைட் 22 ஓட்டங்களுடனும் என்க்ருமா பொன்னர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று மழை காரணமாக தாமதமாக ஆரம்பமாகிய போது இலங்கை அணி தொடர்ந்தும் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.
மதிய இடைவேளையில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் மேற்கிந்திய தீவுகள் அணி 135 ஓட்டங்கள் பின்னிலையில் 9 விக்கெட்கள் கைவசம் இருக்க 3 ஆம் நாள் ஆட்டத்தை நாளை தொடரவுள்ளது.