கட்டுநாயக்க விமான நிலையம்

Wednesday, December 8, 2021

கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலைய திறப்பு பிற்போடப்பட்டது – ஜயனாத் கொலம்பகே

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கை காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .

முன்னதாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . எனினும் தற்போது நம்முடைய நாட்டிலும் , சர்வதேச ரீதியாகவும் கொரோனா ரைவஸ் பரவும் அபாயம் தீவிரம் அடைந்துள்ளதால் விமான நிலையத்திதை திறக்கும் நடவடிக்கை காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக , ஜனாதிபதி மேலதிக செயலார் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார் . எனினும் விமான நிலையத்தை திறப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .