எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஐ.சி.ஆர்.சிக்கு பாதுகாப்பு வழங்கப்படும். விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிப்பு

lttelogo.jpgசெஞ்சிலுவைச் சர்வதேச குழு தனக்குரிய பணிகளை எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் மேற்கொள்வதற்கு  நாம் சகல பாதுகாப்பையும் அளிப்போம்  என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர் என இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலுள்ள  செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் தலைமையலுவலகத்திற்கு  விடுதலைப் புலிகள் எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என இணையத் தள தகவல் தெரிவித்தன. எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் செயற்பாடுகளுக்கு நாம் பூரண பாதுகாப்பளிப்போம். அதற்கு நாம் உத்தரவாதம் அளிக்கிறோம். செஞ்சிலுவைக் குழுவின் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை நாம் வழங்குவோம்  என்று அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • நண்பன்
    நண்பன்

    ஓம் ஓம்….போறவங்களை பிணயக் கைதிகளாக வைக்கப் போவதாக தகவல் கசிந்ததும் செஞ்சிலுவை சங்கமும் பின் வாங்கிட்டுது. புலிகளும் பூனையானது இப்பதான்?

    தன் வினை தன்னைச் சுடும் என்பதெல்லாம் யாரோ …… சொன்னவை அல்ல.

    Reply
  • padamman
    padamman

    முதலில் மக்களுக்கு பாதுகாப்பை கொடுங்கள்

    Reply
  • நண்பன்
    நண்பன்

    padamman,
    அதைத்தானே புலிகள் செய்யினம். முன்னால விட்டு பின்னால வெடி வைக்கினம். அதோட புலிகளென்றால் தமிழர்கள். தமிழர்கள் என்றால் புலிகள் என்று எல்லாருக்கும் பாதுகாப்பு வாக்கியம் ஒன்று சொல்லிட்டினம். புலி புடிக்கிறதை விட இதுதான் கிலி புடிக்கிறது என்கிறது.

    Reply
  • SUDA
    SUDA

    என்னது எமது கட்டுப்பாட்டுப் பிரதேசமா???… சொல்லவேயில்ல.
    அது உங்க கட்டுப்பாட்டுப் பிரதேசமில்ல. தப்பியோடி ஒளிஞ்சிருக்கிற பிரதேசம். இதெல்லாம் (புலம்?)பெயர்ந்து போன கனவான்கள குசிப்படுத்துறதுக்காக விடுற ரீல்.

    Reply
  • மாயா
    மாயா

    சுதா
    அது புலிகளை, படைகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற பிரதேசம் .

    Reply