ஜனநாயக நீரோட்டத்தில் இணையப்போவதாக புலிகள் அறிவிப்பு : கோத்தபாய நிராகரிப்பு

gotabaya1.jpgஜனநாயக நீரோட்டத்தில் இணையப்போவதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிப்பை பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார். “பலவருட காலங்களாக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலை புலிகள் இயக்கம் ஜனநாயக நீரோட்டத்தில் இணைவார்கள் என நான் நினைக்கவில்லை” என பி.பி.சி. செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளைத் தான் விரும்பவில்லை என தொலைபேசி நேர்காணலின் போது பி.பிசிக்குத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  பிபிசி தமிழோசைக்கு செல்வராசா பத்மநாதன் வழங்கிய நேர்காணலில், இராணுவ ரீதியில் விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதால், தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக ரீதியில், அகிம்சா வழியில் இணையப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • மாயா
    மாயா

    “பலவருட காலங்களாக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலை புலிகள் இயக்கம் ஜனநாயக நீரோட்டத்தில் இணைவார்கள் என நான் நினைக்கவில்லை” என்பது இணைய விட மாட்டேன் என்பதை ஊன்றிச் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இவ்வளவு காலமும் ஜனநாயகம், நீரோட்டம், கடல் , கப்பல் என கதைத்தவர்களுக்கு இப்போ என்ன வந்தது? ஜே.வி.பி இணையலாம் என்றால், கருணா /பிள்ளையான் இணையலாம் என்றால், புளொட், ஈபிஆரெலெஃப், இபிடிபி போன்றன் இணையலாம் ஆனால் புலிமட்டும் கூடாது!
    ஏன் என்பது தமிழர் அறிந்த விடயம் தானே !
    உள்ளங்கை நெல்லிக்கனியாக இருந்ததை உணராமல் அடம்பிடித்து ஆடியவர்களை உங்கள் வாயாலேயே இக்கருத்தைச் சொல்லி அடையாளம் காட்டியதற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

    Reply
  • பஷீர்
    பஷீர்

    இந்த நிராகரிப்பைவிட, இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒரு சொல்லே இல்லை என்று இலங்கை ஜனாதிபதி தன் வெற்றி உரையில் அறிவித்தாலும், தோல் தடித்த, …. கூட்டம், வசதிகளுக்காக (துறைமுகம்)நக்குவதற்கு தயாராகவே உள்ளது. இலங்கை “பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை”,”…. ..” கைக்குள் சென்று விட்டது. இது சரத் பொன் சேகாவின் எழுத்தாணியாக செயல்பட்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தலையில் மிளகாய் அரைத்து, “இலங்கைத் தமிழர்களின்” இறுதி அத்தியாத்தை சில சலுகைகளுக்காக “இவர்கள்தான்” எழுதப் போகிறார்கள்.ஆய் புவன்!.

    Reply
  • rohan
    rohan

    இப்படி கோத்தபாய சொல்வதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.

    இலங்கையில் இப்போது நடைபெறுவது ஜனனாயக ஆட்சி என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் அறிவிலிகள்.

    சரத் பொன்சேக இராணுவத்தில் இன்னமும் 200,000 பேரைச் சேர்க்கப் போகிறாராம். வரும் சில ஆண்டுகளில் தப்பினாலும் இலங்கை ஒரு இராணுவக் கலக ஆட்சிக்கு தப்பாது என்பது எனது எதிர்வு கூறல்.

    ஆனால் கோத்தபாய சொன்னதை எதிர்த்துக் கேள்வி கேட்கத் தான் யாருக்கும் ட்கைரியம் இல்லாதிருக்கிறது. உயிர் மீது யாருக்குத் தான் ஆசை இல்லை?

    Reply
  • thevi
    thevi

    உயிர் மீது யாருக்குத் தான் ஆசை இல்லை”

    அதுதானே! சயனைட்டை கொடுத்தும் தலைவர் விழுங்க மறுத்து விட்டாராம்!

    தமிழ் மக்களை பொறிக்குள் தள்ளி விட்டு பின்னோட்டம் விடுகிறார்களாம் பின்னோட்டம்!

    Reply
  • msri
    msri

    இலஙகையில் அரசபயங்கரவாதத்தின் உச்சகட்டம்> இன்னொரு பர்மா நாடாகப் போகின்றது! இந்த லடசனத்தில்> கோத்தபாயாவின் நீரோட்டமறுப்பு!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    புலிகள் நீரோட்டத்திலும், இரத்த ஓட்டமே தொடரும்.
    போதும் தமிழீழத்தில் ஓடிய இரத்த ஆறு.
    அவர்களின் ஓய்வுக்கான காலம் இது.

    Reply
  • rohan
    rohan

    //உயிர் மீது யாருக்குத் தான் ஆசை இல்லை”
    அதுதானே! சயனைட்டை கொடுத்தும் தலைவர் விழுங்க மறுத்து விட்டாராம்!
    தமிழ் மக்களை பொறிக்குள் தள்ளி விட்டு பின்னோட்டம் விடுகிறார்களாம் பின்னோட்டம்!//

    கருத்தாடல் என்பதில எல்லோருக்கும் வல்லமை இருக்க வேண்டும் எனபதில்லை. மேலுள்ள வரிகள் மூலம் தேவி சொல்ல வருவதை விளக்கமாகச் சொல்லல் நலம்.

    உங்கள் தலைவர் சயனைட் சாப்பிடவில்லை என்ற வருத்தம் உங்கள் வரிகளில் தெரிகிறது தேவி .

    ஆனால், பின்னோட்டம் விடுபவர்களையும் (பொறிக்குள் தள்ளி விட்டு யார் பின்னோட்டம் விடுகிறார்கள் என்று விளக்குவதும் நலம்) கருத்தாளர்களையும் விரட்டுவதற்கு நீங்கள் யார்? இது என்ன பிரபாகரன் ஆட்சியா (ரஜனி திரணகம) – டக்ளஸ் ஆட்சியா (நிர்மலராஜன்) – கருணா ஆட்சியா (தராகி) – மகிந்த ஆட்சியா (லசந்த) அல்லது பிரேமதாச ஆட்சியா (றிச்சட் சொய்சா)?

    Reply
  • thevi
    thevi

    தமிழ்ஈழப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போட்ட புலித்தலைவர்- மற்றவர்களை குண்டு கட்டி அனுப்பிய, தலைவர் சயனைட்டை கொடுத்து அனுப்பிய தலைவர், கடைசியில் தற்கொலை செய்யாமலோ அவர்கள் கொடுத்த சயனைட்டை விழுங்காமலோ எதிரியிடம் சரணடைந்து கடைசி வரை உயிர் மேல் ஆசை கொண்டு கல்லுப்பிள்ளையார் மாதிரி அசையாமல் நின்றார்.

    புலி தவிர்ந்த ஏனைய அமைப்பினர் மாற்று வழிகள் குறிததும் தீர்வுகள், குறித்தும், எழுதியும் -பேசியும்- செயல்பட்டும் வந்த போது அவர்களை துரோகிகள் என்று கொலை செய்தும் நாட்டை விட்டு துரத்தியும் தமிழ் மக்களுக்கு கிடைக்க இருந்த சந்தர்ப்பங்களை அழித்து பேரினவாதிகளுக்கு உதவி செய்து விட்டு இன்று றோகன் போன்றோர் சிங்கள அரசியல்வாதிகளின் கருத்தை விமர்சிப்பதில் ஒரு பலனுமில்லை. இந்த இடத்தில் தான் பிரபாகரனின் போராட்டம் முடியும் என்பது பலராலும் சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று. சிங்கள அரசியல்வாதிகள் அப்படித்தன் இருக்கப் போகின்றார்கள். தந்திரோபாயமற்று போராடிய உங்கள் தரப்பின் குற்றங்களை முதலில் ஒப்புக் கொள்ளாமல் சரத் பொன்சேகாவில் கவனம் செலுத்துவதில் என்ன பலன்?

    “உங்கள் தலைவர் சயனைட் சாப்பிடவில்லை என்ற வருத்தம் உங்கள் வரிகளில் தெரிகிறது தேவி”//
    பிரபாகரன் எனது தலைவனில்லை றோகன்!

    Reply