Sunday, January 23, 2022

தமிழர்கள் ஜனநாயகத்திற்கான தகுதி பெற வேண்டும். : வ அழகலிங்கம்

TULF Leader Anandasangaree Vயாழ்பாணம் வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்களை  ஒத்தி வைக்கும்படி ஆனந்தசங்கரி, சித்தாத்தன், சிறிதரன் என்ற கூட்டு ஜனனாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்:-

“தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்து சொல்லொணா அவலத்திற்கு முகம்கொடுத்து முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய, ஆசுவாசப்படுத்த வேண்டிய இன பந்துக்களில் கணிசமானோர் தேர்தல் அறிவிக்கப்பட்ட மாநகரசபைப் பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவற்றை மனங்கொண்டு சிறிதுகாலத்திற்கேனும் தேர்தலை ஒத்திவைப்பது அவசியமானதெனக் கருதுகின்றோம். யுத்தம் முடிந்த கையோடு தேர்தல் நடைபெறுவது பொருத்தமற்றது எனக் கருதுகின்றோம். தேர்தலைச் சிறிது காலத்திற்கேனும் ஒத்தி வைக்கும்படி அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.”

யாழ்ப்பாண மாநகர தேர்தலில் வாக்களிப்பதற்காக 67 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் புத்தளம், வவுனியா, அனுராதபுரம் கொழும்பு  ஆகிய இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் வாக்களிக்கு முகமாகக் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைத்துக் கொடுக்கப் படுமென்றும் யாழ்-வவுனியா மாவட்டங்களுக்கான உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆனந்த சங்கரியும் அவரது ஆயுதம் ஏந்தி அட்டகாசம் செய்யும் புளொட் மற்றும் ஈபிஆர்எல்.எப் சகபாடிகளும் கிழக்கிலே தேர்தல் அறிவித்த போதும் அதை ஒத்தி வைக்கும்படி கேட்டார்கள்.

தமிழரசுக் கட்சி தமிழர்விடுதலைக் கூட்டணி புளொட்  ஈபிஆர் எஈ;எப் ஈறோஸ் என்ற தமிழ் இனவாதக் கட்சிகள் இனவாதமில்லாத அரசியலைப் பேச முடியுமா? இவர்களே இலங்கை தழுவிய அரசியலைப் பேசப் பிரதான தடையாக இருப்பார்கள். கடந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் முன்னைநாள் ஆயுதக் குழக்களின் தோல்வியும் இலங்கை தழுவிய தேசியக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளும் எதைக் காட்டுகின்றன. ஈபிடிபி கருணா பிள்ளையான் போன்றவர்கள் தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியலுக்குப் போன படியாற்தான் தப்பிப் பிழைத்தார்கள். புலிப்பாசிஸ்டுகள் கள்ள வோட்டுப் போட்டு தேர்தலில் வென்றது மாதிரி இனி வெல்ல முடியாது. தமிழரசு முதல் ஆனந்த சங்கரி புளொட் ஈறாக தமிழ் மக்களை  இலங்கையின் ஏனைய மக்களுடன் சேரவிடாத தனித்தீவு அரசியலுக்கே முயற்சிக்கிறார்கள்.

தேர்தலே ஜனனாயகத்தை மீளக் கொணரும் ஒரு முக்கிய காரணியாகும். தேர்தற் காலங்களில் பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சதந்திரம் கூட்டம் கூடும் சதந்திரம் நடமாடும் சுதந்திரம் என்பன  எந்தவித தடையுமின்றி சமூகநடைமுறையில் இருக்க வேண்டும் என்பதே ஜனனாயக மரபாகும். அப்படி மனித செயற்பாடுகளுக்கான சுதந்திரம் இல்லாத பொழுது நடாத்தும் தேர்தல்களை ஜனனாயகத் தேர்தலென்று ஜனனாயகத்தில் வாழ்ந்து பழகிய  மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவற்றில் ஒன்றேனும் தடைப்பட்டு நடந்த தேர்தலை எவரும் ஜனனாயகத் தேர்தல்; என்று கருதமாட்டார்கள்.

ஆதலால் தேர்தலைக் காரணங்காட்டி நாம் அரசாங்கத்திடம் அவசரகாலச் சட்டத்தை எடுக்கும்படியும் பயங்கரவாதத்; தடைச் சட்டத்தை எடுக்கும்படியும்  கோரலாம்.

ஆனால் புலிப்பாசிசம் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் அகதிகளோடு அகதிகளாகப் புலிப்பாசிசவாதிகள் ஒளித்திருக்கிறார்கள் என்றும் புலியின் தலைமைக் குற்றவாழிகள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கினால் புலிப் பாசிசவாதிகள் இலகுவாகத் தப்பி விடுவார்கள் என்றும் அரசதரப்பு கூறுகிறது. புலிக்குச் சாதகமான வாரலாறு ஒரு காலத்தில் இருந்தது. இன்று புலியை வரலாறே தனது நிர்ப்பந்தத்தின் மூலம் அரசியல்வானை விட்டு அகற்றியது. அது மீண்டும் தோன்றவே மாட்டாது. அது மாத்திரமல்ல அதே போன்று மற்றய தனிமனித பயங்கரவாத  இயக்கங்களும் தோன்றாது.  மற்றய அட்டகாச இயக்கங்களும் உயிர்தப்பக்கூடிய வாரலாற்றுச் சூழல் இல்லை.

ஆனால் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதச் தடைச் சட்டம் என்ற இணர்டும் சோஷலிச இயக்க்களுக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், சோலிச இயக்கங்கள,; மக்களின் பொதுவான நாடுதழுவிய ஜனனாயக இயக்கங்கள் அனைத்துக்கும் எதிராக உள்ளன. ஏகாதிபத்தியங்களின் நேரடிக் கூலியான புலியும் புலியின் பினாமிகளும் இலங்கையின்  சகலபரப்பிலிருந்தும் துடைத்தெறியப்பட வேண்டியது முதல் நிபந்தனையாகும்.

அவசரகாலச் சட்டத்தை எடுப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எடுப்பதற்கு தொழிலாளவர்க்க ஸ்தாபனங்களிடமிருந்தும்; சிங்கள மக்களிடமிருந்தும் முழு உலக மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கும் என்பது திண்ணம்.

தேர்தல் நடந்து சிவில் நிர்வாகமேற்பட்டால் மாநகரசபைக்கு அதிகாரங்கள் வந்து விடும். அவர்களே அவர்களது பிரதேசத்தை நிர்வகிப்பவர்கள் ஆகி விடுவர். இராணுவ அதிகாரம் முற்றாக இல்லாமற் போய்விடும். போலீஸ் சிவில் சட்டத்திற்கு உட்பட்டே இயங்கும். புலிப் functionaries  (கும்பலில் கோவிந்தாவென்று அள்ளுப்பட்டவர்கள்) சிவில் சட்டங்களின் கீழ் அரசியல் குற்றவாளிகளாவும் கிறிமினல் குற்றவாளிகள் இல்லாமலும் விசாரணை செய்யப் பட்டுப் பொது மன்னிப்பு அளிக்கப் படும் சூழல் தோன்றும்.

அடுத்து இதைக் காரணங்காட்டி அவசரகாலச் சட்டத்தை எடுப்பித்தால் இராணுவத்திற்குரிய அதிகாரங்கள் இல்லாமற்போய் இராணுவம் பாசறைகளில் சட்டப்படி ஒதுங்க வேண்டிவரும். அதனோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் எடுக்க வழி செய்தால் அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள  சகல அரசியற் கைதிகளும் விடுவிக்கப்படுவர். மற்றும் தடுப்பு முகாங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பழைய கும்பலிற்கோவிந்தாப் புலிகள் functionaries மற்றும் குழந்தைப் போரளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப் படுவதும் தலைமைப் புலிப் பாசிசவாதிகளைச் சிவில் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படும் நிலமைகளும் உண்டாகும்.

தேர்தல் நடந்து இலங்கை தழுவிய சிவில் வாழ்வாழ்க்கைக்குத் திரும்பும் முயற்சியானது இராணுவ ஒடுக்கு முறையைப் பாரிய அளவிற் குறைக்கும். தேர்தல் நடவாது விட்டால் இதைக் கோரமுடியாது.

ஆனந்தசசங்கரியும் அவரது கூட்டுக்களும் தாம் தேர்தலில் வெல்வதைமட்டும்  கருத்தாகக் கொள்கிறார்களேயொழிய  33 வருடமாக நிலவி வரும் அவசரகாலத் தடைச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்குவதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதோடு அதை எடுக்கப் பாடுபடுபவர்களுக்குக் குறுக்கே நிற்கின்றனர். அதை எடுக்கம்படி அவர்கள் ஒரு நாளும் கேட்டதில்லை.

இதை அகற்றும்படி இவர்கள் கேட்காமைக்குக் காரணம் சோஷலிச சக்திகளையும் தொழிலாளர் இயக்கங்களையும் வளரவிடாது கட்டுப்பாடினுள் வைத்திருப்பதற்கும், இந்தத் தமிழ் பிரிவனைவாதக் குழுக்களை ஆதரிக்கும் இந்தியாவின் தொழிற்சாலைகள் மூலதனமிடல் போன்றவைகளைப் பாதுகாப்பதற்குமாகும்.

யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் வன்னி அகதிகளிலே உண்மையான அக்கறையுள்ள ஒருவர் உள்ளூராட்சி சபைத் தலைவர்களாக வந்தால் அவர்களின் வழி நடத்தலின் பிரகாரமே மீள் குடியேற்றம் புதிய புனர்நிர்மாண வேலைகள் நடைபெறும். ஆனால் தமிழ்  மக்களுக்கு சீவில் வாழ்வு மீளவிடாமல் தடுக்கும்   வரலாற்றால் துரோகம் செய்த இந்தக் இவர்கள் மீண்டும் பிடி பந்தயம் துரோகம் செய்கின்றோம் என்கின்றது.

இந்த ஆனந்தசங்கரியே சந்திரிகா ஆட்சிக்கு வந்த காலத்தில் நீலன் திருச்செல்வத்தால் எழுதப்பட்ட அதிகாரப்பரவாலாக்க அரசியற் சாசனத்தை யூ.என்.பியோடு சேர்ந்து கிழித்தெறிந்து பாராளுமன்றத்திலேயே எரிக்க வழிசமைத்தார். இவர் புலியோடு ஐக்கியப்பட்டு அன்னியோன்னியம் கொண்டாடிய காலத்திலேயே புலி தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாகியது. இன்று மீண்டும் ஜனனாயகம் வர விடாமற் தடுப்பதற்காக அகதிகளைக் காரணம் காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கின்றார். தன் கடைசிக்காலத்தில் ஆனந்தசங்கரி புலிகளைப் பலவீனப் படுத்துவதற்குச் செய்த ஜனனாயகக் கடமைகளுக்கு அப்பால்  வேறு எதையும் சாதித்துவிடவில்லை. அதைக்கூட உறுதியற்றுச் சகடபுத்தித்தனத்தோடேயே செய்தார்.

இன்று வன்னிப் பிரதேசங்களில் பொலீஸ் நிலயங்கள் அமைக்கபடவுள்ளதாகவும் அந்தப் பொலீஸ் நிலையங்களுக்கு அருகில் 50 ஏக்கர் காணிகளில் போலீஸ் அதிகாரிகளுக்கான விடுதிகளை அமைப்பதற்கும் பொலீஸ் மா அதிபர் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இராணுவத்தளபதி மேலும் 100 000 இராணுவத்தினரைச் சேர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். யுத்தம் முடிந்து புலிப்பாசிசம் தூசாகத் துகளாகி இருக்கும் வேளையில் ஏன் இந்த எதிர்ப் புரட்சித் தயாரிப்பு?

யுத்தம் முடிந்த கையோடு சீன இந்திய ஜப்பானிய முதலிடல்கள் இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பொருளாதாரச்  செயற்பாடுகளைக் காப்பதற்காகவே இவை நடைபெறுகிறது. மேலும் சமுதாய மாற்றமொன்றுக்குத் தயாராகும் முழு இலங்கை மக்களையும் கட்டுப் படுத்துவது இதன் ஒரு கூறாக இருக்கும்.

இலங்கையிலே வெகு சீக்கிரத்தில் வெகுசன இயக்கங்கள் கிளர்ந்தெழுந்து றோட்டுக்கு இறங்குவது திண்ணம். இலங்கை அரசால் எப்பாடு பட்டென்றாலும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியாது. அதற்குரிய ஒரேகாரணம் உலக பொருளாதராம் அதலபாதளத்தில் அமிழ்ந்தி ஓர் மாபெரும்பெறிவை நோக்கி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சந்தைகள் மிகை உற்பத்தியால் திணறுகின்றன. எந்தப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் லாபமீட்டலாமென்று தெரியாத இந்தச் சூழலில் உள்ளுர் நுகர்வுக்கான உற்பத்தி கூட பாதுகாப்புவாதம் என்ற நச்சுச் சுழலிற் சிக்கிவிடும்.

நடப்பு 2009  ஆம் ஆண்டில் இதுவரையிலான காலத்தில் (சுமார் 5 மாதங்களில்) அமெரிக்காவில் 36 வங்கிகள்  திவால் ஆகியுள்ளன. சென்ற 2008 கலண்டர் ஆண்டில் 24 வங்கிகள் திவால் ஆகி இருந்தன.  அவை  பொருளாதாரத்தில் ஏற்பட்ட சீர்குலைவிலிருந்து அமெரிக்கா இன்றும் மீளவில்லை என்பதை இது காட்டுகிறது.

சென்ற 2008 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான காலத்தில்  அமெரிக்காவில் மொத்தம் 50 அமெரிக்க வங்கிகள் திவாலாகி உள்ளன. போன மே மாதத்தில் மட்டும் அமெரிக்க வெஸ்ட் பாங்க், சிட்டிசன் கொம்யூனிட்டி பாங்க், சில்வஸ்ரேண் பாங்க் உட்பட்ட 6 வங்கிகள் திவாலாகி உள்ளன. நடப்பு 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க உற்பத்தி 6.1 வீதத்தால் சரிவடைந்துள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடன் வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டது என்று சீனாவே மீண்டும் எச்சரித்துள்ளது.  கடன் பாரத்தில் அமிழ்ந்தியுள்ள அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் கோதாகி உற்பத்தித்திறன் அற்றுவிட்டன. அமெரிக்காவில் தற்பொழுது 65000 தொழிற்சாலைகள் வங்குறோட்டு அடைந்து விட்டன. நேற்று 100 வருடவரலாற்றையுடைய ஜெனரல் மோட்டோர் கார்க் கொம்பனி வங்குறோட்டை உத்தியோக ப+ர்வமாக அறிவித்துவிட்டது.

அமெரிக்காவே இன்று உலகத்துக்கு முதலாவது பிரச்சனை கொடுக்கும் நாடாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் நிதி ஊழல்கள் தாண்டவம் ஆடுகின்றது.

ஐ.நா வின் குழந்தைகள் நலன்பேண் அமைப்பான யூனிசெப் தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “எண்ணெய் விலை உயர்வு, பொருளாதாரப் பொறிவு போன்றவற்றால் தெற்காசிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் விலைக்கு வாங்கும் சக்தியை இழந்துள்ளார்கள். கல்வித்தகைமைக்கும் தொழிற்கல்வி மற்றும் தொழில் அனுபவங்களுக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை.  வீட்டிற்கு வரும் வருமானம் குறைந்துவிட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்காசிய நாடுகளில் 10 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 40 கோடி பேருக்குச் சில நேரங்களில் உணவு கிடைப்பதில்லை. பெற்றோர்கள் வருமானம் இல்லாததால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி வேலைக்கு அனுப்புகிறார்கள். வருமானங்கள்  உணவுத்தேவைக்கே போதுவதில்லை. எனவே மற்றத்தேவைகளுக்கு அவர்களிடம் பணம் மிஞ்சுவதில்லை. இந்தியாவில் வேலை இழப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் தெற்காசிய நாடுகளில் 120 கோடி மக்களுக்கு தினம் இந்திய ரூபா100 க்கும் குறைந்த வருமானமே கிடைக்கிறது.”

இந்தியாவிலே 200000 விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்துள்ளார்கள். சத்தியம் கொம்பனியின் ஊழலால் கணணித்தொழில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுவிட்டது.

உலகமயமாதலின் தவிர்க்க முடியாத விதியாலும் இந்தியத் தொழிற்துறையானது பழைய உற்பத்தி முறையிலிருந்து விடுபடவேண்டிய நிர்ப்பந்தத்தின் விழைவாலும் இம்மாற்றங்கள் நடைபெறுகின்றன. மறுபக்கத்தில் இந்தியர்கள் வெளி நாடுகளில் வைத்திருக்கும் கறுப்புப் பணங்கள் 1150 பில்லியன் டொலர்கள் என்று அம்பலப் பட்டுள்ளது.  ஒவ்வொரு வருடமும் அது 1000 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இன்றய சகாப்தம் பண முதலைகளதும் வங்கிகளதும் ஒட்டுண்ணித்தனத்தின் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
   
ஜப்பானில் மட்டும் 2008 இல் மாத்திரம் 32249 பேர்  தற்கொலை செய்துள்ளனர். இதில் 6490 பேர் தாம் பொருhதார காரணங்களால் தற்கொலை செய்கின்றோம் என்று கடிதம் எழுதி விட்டுத் தற்கொலை செய்துள்ளனர். 2009 இல் முதல் 3 மாதங்களிலும் ஜப்பான் உற்பத்தியானது 15 வீதத்தால் வீழ்ந்துள்ளது.  ஜப்பானின் மொத்த ஏற்றுமதியும் 70 வீதத்தால் விழுந்துள்ளது.  மேற்குலகில் ஆரம்பமான பொருளாதார மற்றும் வங்கி நெருக்கடிகள் விளைவாக  13 ஆபிரிக்க நாடுகள் வங்குறோட்டு அடைந்து விட்டன.

135 வளர்முக நாடுகளின் கடன் சுமையானது 3357 பில்லின் டொலர்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது. மேற்கு நாடுகள் தாம் முன்பு தருகிறோம் என்று ஒத்துக் கொண்ட நிதியைக் கூட இந்த ஏழை நாடுகளுக்குக் கொடுக்கத் திராணி அற்று இருக்கின்றன.

உலகவங்கியும் சர்வதேச நாணய வங்கியும் சீனா மற்றும் அரபுநாடுகளிடம் நிதி தரும்படி பிச்சைபாத்திரம் ஏந்துகின்றன.

31.05.09 இங்கிலாந்து பிரான்சு நோர்வே போன்ற நாடுகள் இலங்கைக்கு நிதி வழங்குவதைத் தடைசெய்யும்படி கேட்டுள்ளன. இலங்கை மேன்மேலும் சீன இந்திய தென்கொரியா ஈரான் றைசியா போன்ற மேற்குலக எதிர்ப்பு நாடுகளின் அணிக்குள் தீவிரமாக வருகிறது.

இலங்கை அரசாங்கம் மத்திய வங்கியை மீட்பதற்கு கடன் தந்துதவும்படி வெளிநாடுகளை மன்றாடுகிறது. மத்திய வங்கி வெளிநாட்டுசெலவாணி இருப்பின்றித் தவிக்கிறது. அகதிகளைப் பராமரிக்க மட்டும் 155 மில்லியன் டொலர்  தேவை என்று கூறியுள்ளது. வவுனியா நலன்புரி முகாங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த அகதிகளைப் பராமரிப்பதற்கு உணவு மற்றும் குடி நீருக்கு மாத்திரம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் டொலர் தேவையென்று அரசாங்கம் கூறியுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி உதவிகள் முன்னரே திட்டமிட்ட செலவுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டதால் தற்போது நிவாரண உதவிகளை வழங்க முடியாத நெருக்கடி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் புலிப்பாசிசத்தினூடாக இலங்கைக்கு ஏற்படுத்திய பொருளாதார சமூக நெருக்கடி இது.

வடமாகாணத்திற்கு தெருக்களையும்  றெயிற் பாதைகளையும்  அமைப்பதற்கு 15 பில்லியன் டொலர்  உடனடியாகத்தேவைப் படுகிறது என்று அரச செய்திகள் கூறுகின்றன. தனி றோடுகளுக்கு மட்டும் 3.5 பில்லியன் டொலர் தேவைப் படுகிறது. இலங்கையின்  2008 க்கான வெளி நாட்டுக் கடன் 13520 மில்லியன் டொலர்களாகும்.

இலங்கயிலே  ஜனனாயகத்தை மீட்பதற்கு உரிய முதலாவது நிபந்தனை உண்மையாகப் பொருளாதார மற்றும் கடன் பழு நிலமை தெரிந்து கொள்ளப் பட்டு அதன் அடிப்படையில் விவாதங்களும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப் பட வேண்டும். பொருளாதர நெருக்கடி நிலவும் பொழுது வழக்கமான பொருளாதார விதிகளைப் பிரயோகிக்க முடியாமற் போய்விடும். இப்படியான பெரு நெருக்கடிக் காலத்தில் நற்;குணங்கள் நலியத்தொடங்கும். “பசியோடு இருக்கும் ஒரு மனிதன் குற்றம் புரியாமல் இருந்தால்தான் நான் வியப்படைவேன்” என்று தீர்க்கதரிசி முகமதுவின் தோழர் ஒருவர் கூறியிருக்கிறார்.

எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் பகைமையைத் தோற்றுவிக்கும்.

இன்றய உலகமயமாக்கற் சகாப்தத்தில்  தமிழரசு தமிழர் விடுதலைக் கூட்டணி புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈரோஸ் போன்ற தமிழினவாத இயக்கங்கள் தமிழனக்கு மட்டும் உரிமை எடுத்துக் கொடுக்க நிற்கிறார்கள். இவர்கள் காலப் பொருத்த மற்றவர்களாக உலகமயமாக்கல் கோரும் அரசியலைச் செய்ய முடியாதவர்களாக உள்ளனர் என்பதை எதிர்காலம் காட்டும்.

ஆனந்த சங்கரி அடிக்கடி சொல்லும் தமிழ் நாட்டில் அமுலில் .இருக்கும் இந்தியமொடல் பற்றி சிறிது கூர்ந்து நோக்குதல் நலன்பயக்கும்.

இந்தியாவில் மாநிலசுயாட்சி அதிகார பரவலாக்கங்கள் மத்தியிலும் மாநிலங்ளிலும் தேசம் தழுவிய தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்ததன்விளைவாகும். அதாவது நேருவின் மூன்றுமுறை ஆட்சியிலும்  தமிழ் நாட்டில் பக்தவத்சலம் காமராயர் ஆட்சிக் காலத்திலும் தான். தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் குழப்பங்ள் தொடங்கியது எப்பவெனில் அண்ணாத்துரை கருணாநிதி பிரிவினைவாதத்தைத் தொடக்கியதாற்தான். இதே காலகட்டத்தில்  இலங்கயிலும் செல்வனாயகம் அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்குவாதிகள் பிரிவினைவாதத்தை முடுக்கிவிட்டனர்.  இன்றும் தமிழ்  சிங்கள முஸ்லீம் மக்கள் இலங்கை தழுவிய தேசியக் கட்சியில் இணையாத வரை நாட்டில் தேசிய உரசல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.  அதுவே தேசம் தழுவிய தொழிலாளர்வர்க்கக் கட்சியின் வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாகும்.

உலக பொருளாதார நெருக்கடியானது எவராலும் கட்டுப்படுத்த முடியாத இந்தத் தருணத்தில் யுத்தமானது நாட்டின்  பெருவாரியான வளங்களைக் களுவிக் கொண்டு சென்றுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட அழிவானது 200 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் 10 வருடத்திற்கான மொத்த சமூக உற்பத்தியளவாகும்.

இப்படியான இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை நெருக்கடியோ சொல்லும் தரமன்று. ஆதலால் தமிழர் அரசியலானது  எரியும் பிரச்சனையான மீள் குடியேற்றத்தை மாத்திரம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதுவே தமிழர் மறுமலர்ச்சிக்கான முதற்தேவையாகும்.

In the modern world a nation´s development success is judged by its ability to improve the material living standards of its citizens on a sustained basis with equity in an atmosphere of freedom and within.

03.06.2009

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

20 Comments

 • Vasu Mahadeva
  Vasu Mahadeva

  The facts in this article is not true. Siththarthan, Sangari & co contest in the elections.

  Lingam is known for making empty noises.

  Long Live Lingam TELO

  Reply
 • Pirayan
  Pirayan

  Yes finally we found out the big secret that is the Tamils are not qualified for democracy.

  Ananthasangaree and Siththarthan must take part in the elections to teach democracy to Tamils. What a great idea.

  Lingam keep on. Everyone is making noise why not you?

  Reply
 • kannan
  kannan

  கட்டுரையாளர் இங்கு கூற வருவது என்னவெனில் தமிழ்கட்சிகள் தேர்தலில் பங்குபற்ற வேண்டும். தனியாக தமிழ்க்கட்சிகளாக இருப்பதைவிட பெரிய சிங்கள தேசியக்கட்சிகளுடன் இணையவேண்டும். இதனால் நாட்டில் ஜனநாயகம் மலரும். இது சோசலிசப்புரட்சிக்கு இட்டுச்செல்லும் என்பதுதான். அதற்கு அவர் சோசலிசம் உலகமயமாக்கல் புரட்சி என்னும் சிவப்பு சொற்களை பயன்படுத்தியுள்ளார். அவருக்கு லெனின் கூறிய சில வரிகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளிவர்க்கம் பங்குபெறவேண்டும் பெரும்பான்மை பெறவேண்டும். அதன்பின்தான் அது அதிகாரத்தைப் பெறவேண்டும் என்று முட்டாள்கள் அல்லது கயவர்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப்போராட்டம் பாட்டாளிவர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளிவர்க்கம் அதன் பக்கத்து மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்து விட்டு அரசு அதிகாரத்தை முதலில் கைப்பற்ற வேண்டும். ” இந்த அடிப்படையில் இலங்கையில் தேர்தல்களை பகிஸ்கரித்த தோழர் சண்முகதாசன் அவர்களின் கூற்றையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக்கட்சியும் அல்லது எந்தக் கூட்டனிகளும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல்நாயாக செயற்படும். அடக்குமுறையான பூர்சுவா வர்க்க இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையும் தீர்க்கமுடியாது.”

  தமிழ்க்கட்சிகள் அரசாங்கக்கட்சியுடன் சேரவேண்டும் என்ற கருணாவின் விருப்பத்தை கட்டுரையாளர் கொண்டிருப்பதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அதை கருணாபோல் வெளிப்படையாக சொல்வதை விடுத்து தயவு செய்து மார்க்சிய சொற்களைப் பயன்படுத்தி மக்களையும் மார்க்சியத்தையும் ஏமாற்ற முயல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

  Reply
 • thevi
  thevi

  இலங்கையில் பெரிய கல்விப் பின்னணி உயர் மட்டங்களுடனான தொடர்பகள் உள்ளவர்களுக்கு தமிழன் சிங்களவன் என்ற இனப்பாகுபாட்டு பிரச்சனை இல்லை. ஒரு அரச அலுவகத்திற்கு சென்று சாதாரண தமிழனால் தனது தேவையை நிறைவேற்ற முடியாது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவருக்கு அவரது உத்தியோக நியமனக் கடிதம் சிங்களத்தில் சென்றது. அதை அவர் அங்குள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு போய் தான் என்ன ஏதென்று அறிய முடிந்தது. அதற்காக நீங்கள் அவர் சிங்களம் படிக்காதது தான் குற்றம் என சொல்லுவீர்கள். யாருமே தங்கள் மொழியை அவ்வளவு லேசில் விட்டுக் கொடுக்க முடியாது.மொழி, பிரதேசம் என்பவற்றை பற்றி கவலைப்பட தேவையில்லை என சொல்லவும் யாருக்கும் உரிமையில்லை. உலகின் மற்றைய பகுதிகளில் தங்கள் பிரதேசம், மொழியுரிமைகளை சட்டப்படி உத்தரவாதப்படுத்திக் கொண்டு வாழும் இனங்கள் இல்லையா? இலங்கைத் தமிழர்களின் மொழி, பிரதேச உரிமைகளை அரசியல் யாப்பின் ஊடாக பாதுகாத்து விட்டு தான் ஐக்கிய இலங்கை பற்றி பேச முடியும். இது நாள் வரை இருக்கிற இரண்டு இனங்களுக்கிடையேயான சந்தேகங்கள், பகைமைகளை வெற்று வார்த்தைகளால் நிவர்த்தி செய்ய முடியாது.

  இலங்கை ஒரு பெளத்த, சிங்கள நாடு. அதன் வளங்கள் பெளத்தத்தையும் சிங்களத்தையும் வளர்க்கவே பயன்டுத்தப்பட வேண்டும் என்றுதான் இலங்கை அரசியல் யாப்பு இருக்கிறது.

  Reply
 • rohan
  rohan

  //ஈபிடிபி கருணா பிள்ளையான் போன்றவர்கள் தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியலுக்குப் போன படியாற்தான் தப்பிப் பிழைத்தார்கள். புலிப்பாசிஸ்டுகள் கள்ள வோட்டுப் போட்டு தேர்தலில் வென்றது மாதிரி இனி வெல்ல முடியாது. தமிழரசு முதல் ஆனந்த சங்கரி புளொட் ஈறாக தமிழ் மக்களை இலங்கையின் ஏனைய மக்களுடன் சேரவிடாத தனித்தீவு அரசியலுக்கே முயற்சிக்கிறார்கள்.//

  ஈபிடிபி எப்போது தமிழ் சிங்கள முஸ்லீம் தேசிய அரசியல் என்ற பின்புலத்தில் வாக்குப் பெற்று வென்றது? தீவுப் பகுதிக் கள்ள வாக்குகள் இல்லாது அவர்கள் வென்றிருக்க முடியாது. ஆனாலும், டக்ளஸ் செய்த சில சேவைகளுக்காக (வேலை வாய்ப்பு போன்றன) சில விசுவாசமான் உண்மை வாக்குகளும் அவருக்கு விழுந்திருந்தன.

  இனவாத குறுகிய வாத கட்சிகளைக் கலைக்க வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளைக் கலைக்க சொல்லும் கோத்தபாய சிங்கள உறுமயவையோ அவ்வாறான மற்றவர்களையோ குற்றம் காணமாட்டார்.

  சொல்ல வரும் விடயங்களைச் சாதாரண தமிழில் சொல்லுங்கள். பூர்ஷுவாவும் மண்ணாங்கட்டியும்!

  Reply
 • kamal
  kamal

  தமிழ்க்கட்சிகள் சிங்கள தேசியக்கட்சிகளுடன் குறிப்பாக அரசாங்க கட்சியுடன் சேரவேண்டும் என்று சொல்வதால் கருணாவுக்கு மந்திரிப்பதவி கிடைத்தது. அதே கருத்தை வலியுறுத்தும் இந்த கட்டுரையாளருக்கு தனிப்பட்ட முறையில் என்ன நலன் கிடைத்தது என்று தெரியவில்லை ஆனால் தமிழ்மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பது உண்மை. அன்று துரையப்பா சொன்னதை இன்று இவர் சிவப்பு வசனங்கள் கலந்து சொல்லியிருக்கிறார். இந்த “துரையப்பாயிசம்” காலத்திற்கு காலம் வெவ்வேறு நபர்களால் உச்சரிக்கப்படுவதை நாம் கண்டுவருகிறோம். ஆனால் அந்த சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் நலன்களை பெற்றுக்கொண்டார்களேயொழிய தமிழ்மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதை கண்டுகொண்டோம். ஆனால் “துரைய்யப்பாயிசத்தை” மார்க்சியத்தின் பேரால் ஒருவர் சொல்வதை இப்போதுதான் முதல் முறையாக காண்கிறோம். மார்க்சியத்தை நேரிடையாக எதிர்க்கமுடியாத முதலாளித்துவாதிகளின் கைக்கூலிகள் சிலர் மார்க்சியத்தின் பேரால் எதிர்ப்புரட்கர கருத்துக்களை “ரொட்சியத்தில்”நாம் கண்டோம். அது உண்மை என்பதை மீண்டும் ஒரு முறை இந்த கட்டுரைமூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

  Reply
 • kuna
  kuna

  முதலில் புலிகளின் ஆயுதப்பேராட்டம் தவறு என்றும் அதனாலே தமிழருக்கு தீர்வு பெறமுடியாது உள்ளது என்றனர். பின் இப்போது தமிழ்க்கட்சிகள் தனியாக இருப்பது தவறு என்றும் அவர்கள் அரசாங்க கட்சியுடன் இணையவேண்டும் என்று கூறுகின்றனர். இனி நாளைக்கு தமிழர்கள் தமிழ் பேசுவது தவறு. இனி அவர்கள் சிங்களம் பேசி புத்த மதத்தை பின்பற்றினால் நல்லது என்றும் சொல்வார்கள். அதற்கும் நியாயப்படுத்த ஏதும் மார்க்சிய வசனங்களை அள்ளி வீசுவார்கள்………

  Reply
 • Kumukai
  Kumukai

  Need not to be in panic. If you know Lingam you will take this easy. He has a history of meddling up in politics and cook his soup. It always has a bad taste of rotten nationalism. Not only Long Live TELO But also Long Live ENNAM

  Reply
 • kural
  kural

  புலிகள் அமெரிக்காவை நம்பினார்கள். பிரிட்டன் நோர்வேயை நம்பினார்கள். இந்தியாவை நம்பினார்கள்.கடைசியாக கனிமொழி கஸ்பார் கூட்டத்தின் மூலம் ராஜபக்சவை நம்பினார்கள். ஆனால் புலிகள் ஒருபோதும் கூட இருந்த மக்களை நம்பவில்லை.

  புலிகள் நவீன துப்பாக்கிகள் வாங்கினார்கள். விமானம் வாங்கினார்கள். கப்பல் வாங்கினார்கள். அதி பயங்கர வெடிகுண்டுகள் வாங்கினார்கள். ஆனால் புலிகள் தமிழ்மக்களின் மனங்களை வெல்ல ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.

  மக்களுடன் கலந்திருந்து கொரில்லா போராட்டம் செய்தபோது புலிகளை இலங்கை இந்திய ராணுவங்களால் அழிக்கமுடியவில்லை. பலம் பொருந்திய எதிரிக்கு எதிராக மரபுவழிப் போராட்டம் என்னும் முட்டாள்தன முறைக்கு மாறியதால் இலகுவாக அழிக்கப்பட்டனர்.

  புலிகளின் தோல்வி தமிழ் மக்களின் தோல்வி அல்ல. மாறாக தமிழ் மக்களின் போராட்டத்திற்கு இந்தியா நண்பன் அல்ல என்பது நிருபனமாகியுள்ளது. தமிழ்மக்கள் கொல்லப்பட்டால் ஜ.நா சபை உட்பட எந்த ஏகாதிபத்தியமும் குரல் கொடுக்காது என்பது தெரிந்துள்ளது. மாறாக தமிழ் மக்களை கொல்வதற்கு ஆயுதம் கொடுத்து உதவும் என்பது தெரிந்தது.

  “தமிழீழம்” சிறந்த தீர்வு இல்லை என்பது உணர்ந்து கொள்ள கூடிதாக உள்ளது.இது தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு பதிலாக ஏகாதிபத்தியங்களின் ஊடுருவலுக்கு வழி சமைத்ததை கண்டோம்.

  புலிகளின் தோல்வி ஆயுதப்போராட்டத்தின் தோல்வி அல்ல என்பதையும் மாறாக சரியான ஜக்கிய முன்னனி தந்திரோபாயத்தை பிரயோகிக்க தவறிய ஒரு குட்டி புர்சுவா தலைமையின் தோல்லி எனக் கண்டோம்.

  எனவே தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மக்களுக்கு சரியான பாதையைக் காட்டுவதோடு உறுதியான தலைமையினைக் கொடுக்க முயலவேண்டும். அதை விடுத்து பாராளுமன்ற பாதை மூலம் உரிமை பெறலாம். அரசாங்க கட்சியுடன் சேர்வதன் மூலம் விடுதலை பெறலாம் போன்ற எதிர் புரட்சிகர துரோகங்களை அம்பலப்படுத்தி பரந்து பட்ட மக்களுக்கான புரட்சியை முன்னெடுக்கவேண்டும். இதுவே மக்களை நேசிப்பவர்களின் கடமையாகும்.

  Reply
 • Leo
  Leo

  When one look at the comments it appears Lingam has landed in a absolutly proper place of people with similar outlook. All sort of specialists and experts and Lingam will certainly feel comfortable here.

  Whole of his life Lingam is searching for a political home. (like religious people search for god) This is a great place for him but the problem is has a habit of getting nervous and go underground.

  Hope someone will from here bring him back again. Let us pray that he will stay here for a while

  Reply
 • palli.
  palli.

  ஜயாவுக்கு சாமத்து பல்லியே பின்னோடம் விடவேண்டும் போல் உள்ளது;

  Reply
 • அறிவாணன்
  அறிவாணன்

  What have we done? Asks my friend :
  We are tired of living with the war for three decades
  We see the scorched Tamil land and blood stained fields
  We have nothing to show but scattered families and friends around the globe
  We do not have any Tamil political leadership that can negotiate equity let along dignity
  We are at the mercy of the Srilankan state and foreign governments
  We are left with little choice than to wipe our tears and move on

  What should we do? Asks my friend – I tell him:
  I aspire for freedom and dignity for Tamils in my homeland
  I pray that my suffering brethren would soon return to their homes and begin a new life
  I will strive to defend by brethren rights and bring justice for all victims of crime
  I would endeavour to see there is no such thing as IDPs in my homeland
  I will strive for peace and progress for my brethren in my homeland
  I will not advocate militancy no support anything related to militancy
  I will not impose my military or political ideas on my Tamil brethren in my homeland
  I will let my brethren back home choose their political destiny with dignity
  I will support my brethren to achieve economic freedom and higher quality of life

  I do this selfishly of cause – I tell my friend:
  I yearn for the times I will take my children to my village and share my childhood memories
  I yearn for the day I can walk around the Nallur Kovil sandy paths eating ‘kachchan’
  I yearn for the day I will visit my alma-mater and listen to the ‘school bell’
  I yearn for the day I will stay at my grandparents’ home and take my kids to the ‘Kireemalai’ beach
  I yearn for the day I shall travel in the 788 bus route from Jaffna to my village
  I yearn for peace and dignity in my homeland.

  Reply
 • ganesan
  ganesan

  அழகலிங்கம் அவர்களே தொடரந்தும் எழுதுங்கள் இதன் மூலம் மட்டுமே பலரும் தொடரச்சியாக தமது சிந்தனைப் போக்கை விருத்தி செய்ய முடியும் – தவறகள் திரத்தப்பட்டும் புதிய பாதைகள் திறக்கப்பட்டும் சமூக மாற்றங்கள் அடையப்பட வேண்டும்.

  Reply
 • indiani
  indiani

  இலங்கையில் தமிழர்கள் ஒரு இந்திய சார்பு கட்சி ஒன்றினை ஆரம்பிபபதற்கான முயற்ச்சிகள் தொடரப்பட்டுள்ளது இது மிக விரைவில் வெளிவரும் இதன் மூலம் மட்டுமே பிராந்திய எதிர்ப்பு அதிகார மீறல்களை குறைக்க முடியும்

  Reply
 • kanakaratnam
  kanakaratnam

  இலங்கைத்தமிழர்கள் தமது உரிமைகளை இனவாதிகளிடமிருந்து வென்றெடுக்க இந்திய உதவி கட்டாயமாக தேவைப்படுகிறதை உணர வேண்டும். இதன் மூலம் மாகாண சுயாட்ச்சி பெற்று பின்னரே முழு இலங்கைக்குமான தொழிலாழர்களின் நலனில் கவனம் எடுக்க முடியும்.

  நாம் இன்று எதை செய்ய மடியுமோ அதையே செய்துவிடவேண்டும் இனிமேல் வருங்கால சந்ததியினர் தமது அடுத்த கட்டத்தை பார்த்துக் கொள்வார்கள்.

  Reply
 • Balambikai
  Balambikai

  ஆயுதப்போராட்டம்; இதன் மூலம் தமிழர் இனப்போராட்டம் என்றெல்லாம் பேச்சுக்கள் மட்டும் விடும் ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டியுள்ளீர்கள் – கற்பனாவாதத்தில் மிதக்கும் இலங்கை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் என்ன செய்வதென்று தெரியாது திகைத்துப் போயுள்ளனர் அதுவும் ரஸ்யாவில் முதலாளித்துவம் ஆரம்பிக்கப்பட்டதும் சோசலிசத்திலிருந்து முதலாளித்துவமா? என்று திகைத்துப் போயுள்ள ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கு இன்னும் தெளிவு பெறும்படி விளக்கமாக பதிவிடுங்கள்.

  Reply
 • Udumpu
  Udumpu

  Balambikai
  …….if Mr V.Alagalingam differ from Stalin what is he doing here? The whole political history of V.Alagalingam is playing his drums in every weddings and funerals. WHAT WAS HIS POLITICAL HISTORY? Is he ready to write about what he did with Ennam paper in the eighties in Germany. Is he ready to write about his relationship with LTTE in the same period. Is he ready to say something about his relationship with TELO. Is he read to give some informations about his mini affairs with PLOT.

  Mr V.Alagalingam believes that he can open his shop among Tamils when ever he likes but it looks difficult. In politics times changes.

  Reply
 • Heinrich aus Herrenberg
  Heinrich aus Herrenberg

  Balambikai on June 11, 2009 10:03 am
  ///ஆயுதப்போராட்டம்; இதன் மூலம் தமிழர் இனப்போராட்டம் என்றெல்லாம் பேச்சுக்கள் மட்டும் விடும் ஸ்ராலினிஸ்ட்டுக்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டியுள்ளீர்கள்///

  Lingam was the political adviser of TELO during the time of Sri Sabaratnam. Was TELO a non-violent group or Lingam intended to transform TELO into a national party through his tricks?
  Is it posible except TELO all the other groups only had the idea of arms struggle and Stalin ideas?. Did Lingam gave his blessings to free TELO from Stalin?

  Reply
 • மாயா
  மாயா

  // indiani on June 11, 2009 9:52 am இலங்கையில் தமிழர்கள் ஒரு இந்திய சார்பு கட்சி ஒன்றினை ஆரம்பிபபதற்கான முயற்ச்சிகள் தொடரப்பட்டுள்ளது இது மிக விரைவில் வெளிவரும் இதன் மூலம் மட்டுமே பிராந்திய எதிர்ப்பு அதிகார மீறல்களை குறைக்க முடியும் //

  இது இன்னொரு அழிவுக்கான ஆரம்பம் என்பதாக கருதலாம். இன்னும் இவர்கள் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. சிறீலங்கா அரசு இந்தியாவின் உதவிகளோடு தம்மை செழுமைப்படுத்திக் கொண்டார்களே தவிர இந்திய அரசியல் தன்மைகளை உள் வாங்கவில்லை. அவர்கள் சர்வதேச அரசியலில் தமது தேசத்துக்கான மாற்றத்தையும் இணைத்துள்ளனர்.அதுவே அவர்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

  தமிழர்கள் அன்று தொட்டு இந்திய அரசியலை முன் மாதிரியாகக் கொண்டதனாலேயே அவர்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் போனது. தமிழ் மொழி வெறி மற்றும் தனிநாடு ஆகிய சிந்தனைகள் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து பிறந்தவை. அவை அனைத்தும் தமிழரை சரித்திரம் பேச மட்டுமே வைத்ததே தவிர , ஒரு அடி கூட நகர்த்த உதவவில்லை. இப்படியான அரசியல்வாதிகளோடு இணைவதை விட மகிந்தவின் கட்சியோடு இணைந்து தமிழருக்கு சம உரிமை கேட்டு அவர் காலைப் பிடிப்பது பிரயோஜனமானது.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  வாசு மகாதேவா! நீங்கள் தானே 84-85 காலப்பகுதிகளில் சுற்காட்- பொப்லிங்கனில் தோழர் சிறீ சபாரத்தினம் வந்திருந்த போது பேட்டிகண்டு “எண்ணம்” இதழில் வெளியிட்டவர்கள்.
  லிங்கம் ரொலோ வாழ்துச்செய்தி எமக்கு சந்தேகத்தை வரவழைக்கின்றன. இது அழகலிங்கத்துடன் இருக்கும் அரசியல் கோபமா? தனிப்பட்ட கோபமா? இதை தாங்கள் புரியவைக்கும் போது தான் நாம் தெளிவடைவோம். தங்கள் இருவருடைய கடந்த கால அர்பணிப்புகளை நாம் வெகுவாக மதிப்பளிப்பவர்கள் நாங்கள்.

  Reply