Sunday, October 24, 2021

…….. தங்கிய ஜனாதிபதி அவர்களே! : துரை நரையன்

President_and_the_Peopleஇலங்கைத் தமிழினத்தை இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக திணறடித்துக் கொண்டிருந்த கொடிய மிருகங்களான புலிகளை முற்றாக அடித்து நொருக்கியதற்காக நானும் ஒரு தமிழன் என்ற அடிப்படையில் தங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த நன்றி தெரிவிப்பானது தாங்கள் தமிழினத்தை காப்பதற்காக தாங்கள் உள்ளத்தளவில் உணர்ந்து செயற்பட்டீர்கள் என்ற உணர்விலே என்னுள் எழவில்லை என்பதுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.

மாறாக இலங்கைத் தீவிலே வடக்கு – கிழக்கு வாழ் தமிழினத்தை இனச்செறிவின் அடிப்படையிலே அடித்து நொருக்குவதற்காகவே நீங்கள் முதற் கட்டமாக புலிகளை ஒடுக்கியிருக்கிறீர்கள் என்பதுதான் எனதுணர்வின் சிந்தனையும் உண்மையுமாகும்.

நிற்க! ‘புலிகள் வேறு தமிழினம் வேறு. புலிகளின் விருப்பும் தேவையும் வேறு! தமிழினத்தின் விருப்பும் தேவையும் வேறு!’ – இதுதான் புலிகளை அழிப்பதற்கு முன்பு உங்களின் வாதம். இப்போது உங்களுடையவாதம் என்ன என்பது எனக்கு தெரியாது தேவையும் இல்லை!

ராஜபக்ச அவர்களே! இலங்கையில் தமிழினம் நீண்ட காலமாக வெவ்வேறு வழிகளில் போராடியது ஏன்? மனநோயினாலா? அவ்வப்போது வேறுபட்ட வடிவிலான தீர்வுகள் சிங்களத் தலைமைகளுக்கும் தமிழ் தலைமைகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு இருக்கின்றன ஏன்? இரு சாராருக்கும் இடையிலான மனநோயினாலா? 1987 ல் இலங்கை – இந்தியாவிற்கிடையில் கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்தம் ஏன் ஏற்பட்டது? வெறும் பொழுது போக்கு விடயமா? ஆனால் பொழுது போக்காகவே முடிந்து விட்ட வரலாற்றைத் தான் தமிழினம் கண்டது.

புலிகள் வேறு தமிழினம் வேறு என கூறிய சிங்களத் தலைமைகள் தமிழினத்திற்கான தீர்வை ஏன் முன்வைக்கிறார்கள் இல்லை? ஏன் முன்வைத்திருக்கவில்லை?  ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என கூறிய நீங்கள் தீர்வை வைப்பதற்கு ஏன் காலதாமதமாக்கினீர்கள்? ‘புலிகள் வேறு தமிழினம் வேறு’ என்றான போது தீர்வுக்கும் புலிகளுக்கும் சம்மந்தம் இல்லைத்தானே? எனவே ஏன் இன்னமும் தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் இன்னமும் கிடைக்கவில்லை. தமிழினத்திற்கான தீர்வு கிடைக்காதமைக்கு புலிகள் மட்டும் காரணமல்ல. அவர்களையே ஒத்த சிங்களமும் தான் அதாவது நீங்களும் தான் காரணம் என்பதே உண்மையானது.

உண்மையில் புலிகள் என்பவர்கள் கொடியவர்கள்தான் – அவர்களின் முழுதான பாசிச தவறுகள் தான் தமிழினம் விடுதலை அடைந்து விட முடியாததற்கான பிரதான காரணமாகும். ஆனால் புலிகள் ஏன் உருவானார்கள்? – எப்படி உருவாக்கப்பட்டார்கள்? – மேலும் புலிகளை தமிழ் மக்கள் ஓரளவுக்கு அவர்கள் செய்த கொடுமைகளையும் தாண்டி ஆதரித்து வந்தார்கள் என்ற உண்மை உலகறிந்தது. – நீங்களும் அறிவீர்கள். – இது ஏன் நடந்தது? – புரியவில்லையா? சிங்களப் பேரினம் அவ்வப்போது பெரிதாகவும் தொடர்ச்சியாக குறித்த இலக்குடனும் இலங்கையில் தமிழினத்தை அழித்தே தீருவது என்ற நிறுத்தப்படாத வேலைத் திட்டங்களுடன் செயற்படுவதுதான் தமிழினம் புலிகளையே ஆதரிக்க வேண்டியதற்கான பிரதான காரணமாயிருந்தது. சிங்களம் மீதும் சிங்களத் தலைமை மீதும் தமிழினத்திற்கு எவ்வாறான நம்பிக்கை ஏற்படவுமில்லை. சிங்களம் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளவுமில்லை என்பதே வெளிப்படையான உண்மை. இதற்கான ஆதாரங்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கை வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன.

இதனால் இலங்கைத் தமிழினம் ஒப்பீட்டளவில் புலிகளை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதாவது புலிகளை காட்டிலும் கொடியவர்களாக சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் இலங்கைத் தமிழினம் கருதுமளவிற்கு நீங்கள் கொடியவர்களாக மனிதாபிமானம் அற்றவர்களாக இனவெறியர்களாக சூழ்ச்சி புரிபவர்களாக இனஅழிப்பின் மீது தீராத தாகம் கொண்டவர்களாக இருந்தீர்கள் என்பதற்கான வெளிப்படையான சாட்சியமே தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தமையாகும். கடைந்தெடுத்த, ரௌடித்தனமான, தெருசண்டியன் போன்ற, பாசிச மிலேச்சதிகார, இன – ஜாதி –  மத வெறியையும்; தன்னுள் தீவிரமாக  கடைப்பிடித்த கேவலமான அமைப்பையே ஒரு மனிதக் கூட்டம் ஆதரித்ததற்கான காரணமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு கேடு கெட்டவர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!! – அவற்றை விவரணம் செய்வதற்கு எனக்கு வார்த்தைகள் போதாது.

இன்று பத்துலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வாழ்கிறார்கள். இவ்வளவு மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் போதும் தவறினை உணர்ந்து நிலைமையை சீர் செய்ய முடியாத சிங்களத்தையும் சிங்களத் தலைமைகளையும் தமிழினம் எப்படி நம்புவது?!!

இனக்கலவரங்களை தடுக்காத சிங்களம் அதை உருவாக்கும் சிங்களம் அதனால் உருவாகும் அகதிகளை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலேற்றினார்களே!

ஜனாதிபதி அவர்களே!

இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னம் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். – சிங்கள இனத்தின் நெருக்கடியினாலேயே தவிர மன நோயினால் அல்ல. என்ன காரணங்களுக்காக தமிழ் இளைஞர்கள் தமது இனிய இள வயதுகளை இழந்து தமது அரிய உயிர்களையே முதலீடாக வைத்து போராட்டத்தை கையிலெடுத்தார்களோ அதன் காரணங்கள் – இன நெருக்கடிகள் – ஏமாற்றங்கள் அவமதிப்புக்கள் எல்லாம் தெளிவாக எதுவும் குறைவின்றி அப்படியே இருகின்றன. அதாவது தமிழினம் தனது ஆயுதப் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழிநிலையை ஏற்படுத்துகின்ற  நம்பிக்கையை, அதற்கான சமிக்ஞையை இதுவரைகாலும் சிங்களம் தோற்றப்படுத்தவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மாறாக ஆயுதப் போராட்டத்தையே தனது தொழிலாக தாதாவிசமாக சுவீகரித்துக் கொண்ட பிரபாகனுடைய உலகின் உச்ச நிலைக்குரிய அடாவடித்தனங்களே, எஞ்சிய தமிழர்களை ஆயுதப் போராட்டத்தையே விட்டு ஓட்டமெடுக்கச் செய்தது – பெரும்பாலோர் புலிகளினாலேயே அழிக்கப்பட்ட பின்பு இன்று புலிகள் இல்லாத நிலையில், அன்று ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் அதனையே செய்வதற்கான சூழ்நிலைகள் மீண்டும் அப்படியே இருக்கின்றன எனும் போது என்ன நிகழப் போகின்றது என்பதை உங்ககளால் புரிந்து கொள்ள முடியாவிடில் யாராவது சாமானிய மக்களிடம் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.

பிரபாகரன் எவ்வாறான மிலேச்சதிகார பயமுறுத்தலை வைத்து தமிழினத்தையே அடிபணிய வைத்தாரோ அதே வழிமுறைகளையே நீங்களும் கடைப்பிடிப்பது போன்ற உணர்வே அதிகமாக தெரிகிறது. இந்த அதிகார வெறித் தோற்றப்பாடு நீண்ட காலத் தாக்குப் பிடித்தலுக்கு ஒரு போதும்; உதவப்  போவதில்லை. தமிழினத்திடம் இருந்து மட்டுமல்ல சிங்கள மக்களிடம் இருந்தே உங்கள் வெறியதிகாரத்திற்கெதிரான எழுச்சி எழுவதற்கான வாய்ப்புக்களும் மறுப்பதற்கில்லை. அதிகார வெறி உச்சத்தில் இருந்த போது பிரபாகரன் எப்படி கும்மாழமடித்தாரோ அவ்வாறே நீங்களும் கும்மாழமடிப்பது போல் தெரிகிறது – பிரபாகரனுக்கு நடந்தது உங்களுக்கு நடக்காது என ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா என்ன?

ஜனத்தின் அதிபதி அவர்களே!

புலிகள் மீதான இறுதித் தாக்குதலின் போது அகதிகளாக்கப்பட்ட சில லட்சம மக்களை  நீங்கள் நிர்வகிக்க முடியாமல் திண்டாடியதும், நிர்வாகக் கேடுகள் நிலைத்திருப்பதும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

இந்த மக்களை ஏன் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும மட்டும்; குடியேற்ற வேண்டும்? ஏன் சிங்கள பகுதிகளில் வைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் எண்ணம் ஏற்படவில்லை? முடியாது. ஜனாதிபதி அவர்களே!! இதுதான் இலங்கையின் நிலவரம்!! இலங்கை தமிழ் அகதி மக்கள் இலங்கைச் சிங்களப் பகுதிகளில் பாதுகாப்பு பெற முடியும் என்பது சாத்தியமற்ற நிலையிலேயே இலங்கை நிலவரம் இருக்கிறது. சிங்களச் சிறைச் சாலைகளில் குட்டிமணி தங்கத்துரை எப்படி கொல்லப்பட்டார்களோ 58, 83 கலவர அகதிகள் எப்படி யாழ்ப்பாணம் அனுப்பபட்டார்களோ அதே நிலவரம் தான் நீறு பூத்த நெருப்பாக இன்றும் உள்ளது. இவ்வாறான இன வேறுபாடுகளே இலங்கையில் அன்றும் இன்றும் இருந்தது. இனி என்றும் இருக்கும். இந்த உதாரணமே உங்களுக்கு புரியவைத்து விடும் இரண்டு இனங்களும் ஒன்றாக வாழ்தல் கடினம் என்பது. இந்த அடிப்படைதான் தமிழினம் தனது பாதுகாப்பை தானே நிலை நிறுத்த வேண்டும் என்பதும் தன்னைக் சூழ பாதுகாப்பு வேலி (எல்லை) இடவேண்டும் என்பதுமாகும். இவை நிதர்சனமானவை. கண் கூடானவை. காலத்தால் அழிக்கப்பட முடியாத காரணிகள். இவைதான் ஒவ்வொரு தமிழனின் உள்ளக்கிடக்கைகளிலும் ஓங்கி அடித்துக் கொண்டிருக்கின்றன – தமது தாயகம் தாயகமாகவே காப்பாற்றப்பட வேண்டுமென்பது.

ஆனால் ஜனாதிபதி அவர்களே!

உங்கள் எண்ணமோ தமிழர் தாயகத்தை சிதைத்து தமிழன் செறிவை தகர்த்து, தமிழினத்தையே நாதியற்ற இனமாக்கி இல்லாதொழிக்கச் செய்யும் முயற்சியே உங்கள் செயற்பாடுகளால் உணரப்பட முடிகிறது. இதனை எந்த தமிழனும் மட்டுமல்ல எந்த நியாயமுள்ள மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். மூன்று தசாப்தங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் தேவைகளின் காரணமாகவே எழுந்தது. சிங்களக் கொடுமை ஏற்படுத்திய சூழ்நிலையின் இயல்பு வளர்ச்சியே அது. அதிதீவிர அதிகார உச்ச வெறியின் காரணமாக பிரபாகரனால் தமிழின ஆயுத விடுதலைப் போராட்டம் சீரழிக்கப்பட்டதே தவிர – மேலும் சில சந்தர்ப்பங்களில் வெற்றி நிலையை அடைந்து விட்ட சூழ்நிலைகள் கூட பிரபாகரனால் உடைக்கப்பட்டு தமிழினம் தொடர்ந்து சீரழிய வேண்டிய நிலை ஏற்பட்டதே தவிர மாறாக சிங்கள இனத்தினதோ அன்றி சிங்களத் தலைமைகளோ எந்த நல்ல காரியங்களையும் செய்து விட்டதனால் அல்ல. இந்த நீண்ட நெடிய போராட்ட காலத்தில் பிரச்சனைக்கான காரணிகளை அப்புறப்படுத்தாத சிங்கள நிர்வாகங்களே புலிகளிலும் கொடியவர்கள் என்பது தான் உண்மை. இந்த சிங்களக் கொடுமை தான் புலி போன்ற பாசிச கும்பலும் ஆதரிக்கப்படக் கூடிய (தமிழ் மக்களாலேயே) அளவுக்கு காரணியாக இருந்தனர் என்பதிலிருந்து நிலைமையை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே சிங்களமே! நீங்கள் தான் பிரதான தவறாக இருந்தீர்கள் – இன்றும் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதனையே ராஜபக்ச அவர்களும் வீறாக செய்வதற்கு முயற்சிக்கிறீர்கள். இந்த நிலை தொடர்ந்தால் ஒரு அடக்கப்பட்ட இனம் – அடக்கப்படுகிற இனம் என்ன செய்ததோ என்ன செய்ய வேண்டுமோ அதனையே செய்யும் என்பது இயல்பானது. நிதர்சனமானது. அதனை எந்த நிர்ப்பந்தங்களாலும் தடுத்து விட முடியாது. புலி முடிந்தவுடன் எல்லாம் முடிந்து விட்டதென்ற இறுமாப்பு உங்களிடம் இருந்தால் அது உங்கள் அறிவீனமாகவே இருக்க முடியும். அதாவது வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் இலங்கையில் தமிழினம் மட்டுமல்ல சிங்கள இனமும் நிம்மதியாய் இருந்து விட முடியாது என்பதை சிங்களம் மட்டுமல்ல பின்னால் திரியும் தமிழர்களும் மறந்து விட வேண்டாம்.

மேலும் ஜனாதிபதி அவர்களே!

வெற்றிடமாக்கப்பட்ட தமிழர் பிரதேசமாகிய முல்லைத் தீவில் பொலிஸ் பயிற்சி நிலையம் தொடங்குவதாக அறிய முடிகின்றது – கிளிநொச்சியில் சுதந்திர வர்த்தக வலயம் அமைய இருப்பதாக அறிய முடிகின்றது. வன்னியின் சில பகுதிகள் விவசாய ஆராச்சிகளின் பரிசோதனைக் கூடமாக மாற இருப்பதாக தெரிய வருகிறது.

தமிழர் பிரதேசங்களில் உண்மையிலேயே உங்களுக்கு அன்பு இருந்தால் நன்றி! ஆனால் அவை ஒன்றும் இப்போது எமக்கு தேவையில்லை. தமிழர்களுக்கு தீர்வும் அதனூடான தமிழர் பிரதேசங்களில் தமிழர் நிர்வாகமும் தான் முதலில் தேவை.

தமிழர் பிரதேசங்களில் என்னத்தை தொடங்குவதென்பது அந்த தமிழர் நிர்வாகத்தினரின் அனுமதியுடன் தான் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற புரிந்துணர்வு உங்களுக்கு இல்லை என்றால் இலங்கையில் தமிழரும் சிங்களவரும் புரிந்துணர்வுடன் வாழலாம் என்பது வெறும் கற்பனையாகவே இருக்க முடியும். மாறாக தமிழினம் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியின்றி போய் விடும் என்பது தவிர்க்க முடியாததாகி விடும்.

ஜனாதிபதி அவர்களே!

நீங்கள் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றியடைந்திருக்கிறீர்கள்.  நல்லது! புலிகள் அடித்து அழிக்கப்பட்டதில் முழு உடன்பாடு உள்ளவன் நான். புலிகள் தமிழர்களின் வெற்றிகளையே தோல்விகளாக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத் தான் வேண்டும். இனி இருந்தாலும் தமிழினத்தை முன்னேற விடப் போவதில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த காரணத்தினால் தமிழினத்தையே அனாதைகள் ஆக்கியவர்கள். அடித்து அழிக்கப்படத்தான் வேண்டும்.

ஆனால்…

அவர்களை அடிப்பதற்கு நீங்கள் யார்? அவர்கள் உருவாவதற்கே நீங்கள் தான் காரண கர்த்தாக்கள். அவர்கள் தமிழர்களாலேயே ஆதரிக்கப்படுவதற்கும் உங்கள் கொடுமைகள் தான் காரணம். புலிகள் தமிழர் போராட்டத்தின் ஒரு பகுதியினர்தான். மறு பகுதியினர் புலிகளாலேயே விரட்டப்பட்டுத் தான் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார்களே தவிர சிங்களவர்களின் சீர்திருத்தங்களினால் அல்ல. புலிகள் சிங்கள நிர்வாகத்தினரால் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றால் புலிகளின் நெருக்கடிகளாலேயே ஆயுதங்களை கைவிட்டவர்களும் அடிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நீங்களோ அவர்களை மட்டும் நண்பர்களாக வைத்திருக்கிறீர்கள். ஆயுதப் போராட்டம் எழுந்ததற்கான காரணிகள் அப்படியே இருக்கின்றன. அதனடிப்படையில் நியாயமான ஆயுதப் போராட்டத்தை அந்தக் காரணிகளை அகற்ற முயற்சிக்காமல் அடித்து அழிப்பது எப்படி நியாயமாகும்.

மேலும் புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறப்புச் சிறைகளில் மறைத்து வைத்திருக்கிறீர்கள். தமிழன் போராட வேண்டிய சூழ்நிலைகளை வைத்துக் கொண்டு அதனைத் தீர்க்காமல் அதற்கெதிராக போராடியவர்களை தொடர்ந்து தண்டனை கொடுப்பது எப்படி நியாயமானது. மேலும் புலிகளின் நெருக்கடிகளால் மட்டும் போராட்டத்தைக் கைவிட்டவர்கள் சகஜமாய் வாழ முடிகிறது – ஏன் மந்திரியாகவும் இருக்க முடிகி;றது – மேலும் புலிகளிலேயே  சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தவர்கள் மந்திரிகளாகவும் கட்சியின் உப தலைமையாகவும் இருக்க முடியுமென்றால் சில வருடங்கள் மேலும் போராடியவர்கள் ஏன் சிறைகளில் வாட வேண்டும்.

எனவே சிங்களமே! மற்றும் அதன் ஜனாதிபதி அவர்களே! முதலில் பிரச்சனைக்கான தீர்வை இலங்கை – இந்திய ஒப்பந்தம் அல்லது அதற்கும் மேல் போய் தீர்வை செயற்படுத்துங்கள். அனைத்து போராட்டக் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள்.

இல்லையென்றால் இன்னொரு போராட்டம் தவிர்க்க முடியாததாகி விடும். அதை உருவாக்கியவர்களாக நீங்களே மறுபடி இருப்பீர்கள். நிம்மதியாய் இருந்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.

இலங்கைத் தமிழர்கள் தமது எதிர்கால வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பபடாத சூழ்நிலை தொடருமாயின் பல சிவகுமாரன்கள்; தோன்றுவது இயற்கையானதும் தவிர்க்க முடியாததுமாகும்! ஒடுக்கு முறைக்கெதிராக கிளர்ந்தெழுவது என்பது எந்த விதமான அடக்கு முறையாலும் அடக்கப்பட்டு விட முடியாது.

அடக்கப்படும்; இனம் அமைதி காப்பதில்லை.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்!!

பிற்சேர்க்கை – மேலும் இக்கருத்துக்களை எழுதும் நான் தமிழர்களுக்காக அடிமைத்தனமின்றி, அடங்கிப் போகும் குணமின்றி, நேர்மையாக தமிழருக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழின விடுதலை என்பது பலவழிகளினூடு வந்து சேர்கின்ற இலக்குத் தான். எனவே அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் தலைமை நோக்கமும் கட்சியும் இல்லாத காரணத்தால் இதை இலகுவாக என்னால் சொல்ல முடிகிறது.

மாறாக சமாதானம் – சுபீட்சம் – சகவாழ்வு என சொல்லிக் கொண்டும் தமது சொந்த சுபீட்சத்திற்காக கிளம்பியுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவர்களல்லர்.

தமிழ் தலைவர்கள் ஒரே தலைமையில் வருவதற்கு அவர்களது வர்க்க நலன் இடந்தராது என்பது ஒழுங்காக புரிந்து கொள்ளப்படும் காரணத்தினால் தமிழருக்கு சாதகமாக செயற்படுகிற அடிப்படையிலான அனைத்து தலைமைகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

18 Comments

 • KOPAN MAHADEVA
  KOPAN MAHADEVA

  ஒரு நல்ல பகிரங்கக் கடிதம். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஜனாதிபதி அவர்களுக்கு நேரில் அனுப்புவதே ஆசிரியரின் முதல் கடமை. முடியுமானால் சிங்களத்திலும் அனுப்புங்கள். உடனே அனுப்புங்கள்.

  மற்றும்: எத்தனை பிழைகளைச் செய்திருப்பினும் (பிழைகள் ஒன்றும் என்றுமே செய்யாத ஒருவரும் இல்லை. நான் அப்படி ஒருவரையும் இவ்வுலகில் காணவில்லை!) மறைந்த தியாகிகளை இந்த அளவில் பகிரங்கமாகவும் பச்சையாகவும் அதுவும் தமிழில் தாக்கியிருக்கத் தேவையில்லை. அது கண்ணியமுமல்ல.

  ஆசிரியர் ஏன் புனைபெயரில் எழுதவேண்டும்? அவரின் அடையாளம் தெரிந்தால் இக் கடிதம் கூடிய பலனைத் தரும் சாத்தியக்கூறுகள் உண்டு. என் வாழ்த்துக்களும் ஆசிகளும். PROFESSOR KOPAN MAHADEVA

  Reply
 • chandran.raja
  chandran.raja

  கடந்தகால அனுபவங்களை கற்றுக்கொண்டு அதை அந்த இனத்திற்கு உரைப்பவனே அந்த இனத்தின் சேவகன்னாகிறான். இது ஈழத்தில் வாழும் தமிழருக்காக எழுதப்பட்ட கட்டுரையல்ல மாறாக புலம்பெயர் தமிழருக்கு உசுப்பேற்றுவதற்காக எழுதப்பட்டிருக்கிறது. //மாறாக தமிழினம் பிரிந்து பிரிந்து செல்வதை தவிர வேறு வழியின்றி போய் விடும் என்பது தவிர்க முடியாதகிவிடும்-துரை நரையன்//

  முழத்திற்கு முழம் சோதனைச் சாவடிகள் கடந்த சம்பவங்களால் அச்சம் பயபீதியில் உள்ள மக்களின் மனநிலை இந்தநேரத்தில் இதில்லிருந்து வெளியேறுவதற்கு வழி வகை தேடாமல் பிரபாகரன் கேட்டதையே நரையனும் கேட்டால் செய்வேன் என உறுதியளித்தால் இருக்கிற சனத்தையும் கடலிலை தள்ளி கொல்லுவதற்கு சமன்ஆகாதா? ஐயா துரை நானும் லெனின் வாசகன் தான் அதற்கு இந்த நேரத்தில் இப்படியா? //அடக்கப்படும் இனம் அமைதிகாப்பதில்லை. நரையன்// போலித்தனமான இனப்பெருமையும் நாம்பேசும் மொழிதான் செம்மொழி மற்றமொழிகள் எல்லாம் பச்சை சிகப்பு நீலம் கறுப்பு அப்படியா? அடங்காத மாடு அடிமாடுடாக போகிறது தான் யதார்தம்.

  //பல சிவகுமாரன்கள் தோன்றுவது இயற்கையானதும் தவிர்கமுடியாததும்- நரையன்//திரு துரை நரையன் அவர்களே! சிவகுமாரன் கொலையைத் தவிர சயினட் வங்கிகொள்ளை குண்யெறிதல் என்ற சாகசசெயலில் விலத்தி நின்றவர் அல்ல இவையே இறுதியில் கொலைகளுக்கும் இட்டுசென்றிருக்கும். ஈழம்வாழ்மக்களுக்கு தேவையானது வீரசாகசமானசெல்கள் அல்ல மதிநுட்மான அரசியல். சிலவேளை புலம்பெயர் புண்ணாக்கு மூட்டைகளுக்கு பணமூட்டை கட்டுவதற்கு அவசியமாக இருக்கலாம்.

  Reply
 • vanthijathevan
  vanthijathevan

  “இனப்பிரச்சினைக்குத் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் திட்டத்தை ஜாதிக ஹெல உறுமய தாமதப்படுத்தக்கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆத்திரத்துடன் கூறியுள்ளார். 13வது திருத்தத்தை அமுல்படுத்த முற்பட்டால் அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் உறுப்பினரும் சுற்றாடல் வளத்துறை அமைச்சருமான பாட்டலே சம்பிக்க ரணவங்க நேற்று முன்தினம் கூறியிருந்தார். இதனைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் நடவடிக்கைகளையோ அல்லது அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளையோ அமைச்சர் சம்பிக்க ரணவங்க தாமதப்படுத்தக்கூடாது என எச்சரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 30 வருடங்களாகத் தொடர்ந்துவந்த மோதல்கள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யவேண்டிய தருணம் தோன்றியிருப்பதாக அலரிமாளிகையில் கூடியிருந்த அமைச்சர்கள் சிலரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “13வது திருத்தத்தை அமுல்படுத்துவது எனது கடமைய அதை நான் நிறைவேற்றுவேன். அதன் பின்னர் ஓய்வெடுக்கவும் எதிர்பார்க்கிறேன். என் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்” எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் புதுடில்லியிலுள்ள சிலரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து 13வது திருத்தத்தை அரசாங்கம் அமுல்படுத்த முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த சிறி வர்ணசிங்க கடந்த திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தார்”

  Reply
 • நண்பன்
  நண்பன்

  மகிந்த அவர்களின் போது தமிழருக்கான தீர்வொன்று கிடைக்காவிடில் , இனி தமிழருக்கு தீர்வே இருக்காது.

  Reply
 • vanthijathevan
  vanthijathevan

  அறுபது வருடமாக நிலவும் இனமுரண்பாட்டிற்கு இவ்வளவு இரத்தம் சிந்தப்பட்ட பின்பும் ஒரு தீர்வை வழங்க சிங்கள அதிகாரத் தரப்பில் இணக்கப்பாடு எதுவும் இது வரை எடுக்க முடியவில்லை.தமிழரின் சூழ்நிலை இருண்டதாகவே காணப்படுகின்றது. இந்த அச்சம் புறக்கணிக்கத்தக்கதா?

  நண்பன் அவர்களே தீர்வு தேவை என்பதன் ஊடாக தமிழருக்ககு பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டதாக கருதுகிறேன். அதற்கு நன்றி!

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  உண்மையில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் அரசியலை இன ரீதியாக வளர்த்து பிளவுகளை ஏற்படுத்தி வந்ததே, நாட்டின் இன்றைய இவ்வளவு சீரளிவுகளுக்கும் காரணம். அதே தவறுகளை தொடர்ந்தும் செய்வதைத் தவிர்த்து, இனங்களுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி எல்லா இன மக்களும் சமத்துவமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் சேர்ந்து வாழும் நிலையையும் அரசும் அனைத்து மக்களும் சேர்ந்து ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பாகுபாடுகள் ஒழிந்து, எல்லோரும் இலங்கை மக்கள் என்ற பொதுவான எண்ணமும் தாமாக உருவாகும்

  Reply
 • palli
  palli

  தமிழ் அரசியல் தாதாக்கள் எவராயினும் வட்டுகோட்டையில் கொட்டைபாக்க வித்து நஸ்ற்றபட்டதை சொல்லிக்கொண்டு இருக்கும்வரை தமிழரின் தலைவிதி இம்மட்டுதான்;

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  நாம் இலங்கையர் என்ற உணர்வை தமிழ் மக்கள் உணர்வதற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ய வேண்டியது இலங்கை அரசினுடைய பொறுப்பு. வன்னி முகாம்களில் மிகக் குறைந்த அடிப்படைத் தேவைகளுக்கே அந்த மக்கள் அல்லற்படும் போது நாம் இலங்கையர் என்று சொல்வதற்கே கூச்சமான நிலையில் அவர்கள் வைக்கப்பட்டு உள்ளனர்.

  ஆனால் கட்டுரையாளர் துரை நரையன் இலங்கை அரசையும் சிங்கள மக்களையும் ஒரே அளவுகோலில் அளக்கின்றார். தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு அரசினைப் போல் சிங்கள மக்களும் பொறுப்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது என்பதே எனது கருத்து. இது பற்றி கட்டுரையாளருடனும் விவாதித்து இருந்தேன் ஆனால் எம்மால் ஒரு உடன்பாட்டுக்கு வர முடியவில்லை.

  தமிழ் மக்களுடைய இன்றைய அவல நிலைக்கு இலங்கை அரசும் புலிகளுமே பிரதான காரணிகள். இதில் சிங்கள மக்களைக் குற்றம்சாட்டுவது என்பது

  1. புலிகள் முஸ்லீம் மக்களை துரத்தியடித்ததற்கு தமிழ் மக்கள் பொறுப்பு என்பது போலவும்
  2. ஈராக் மீது பிரித்தானிய படையெடுத்ததற்கு பிரித்தானியத் தமிழர்களும் பொறுப்பு என்பது போலவும் அமையும்.

  மக்கள் வேறு அரசு வேறு என்பதை துரை நரையன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  இலங்கையரசு பால்மாவின் விலையை ஏற்றினால் அதற்கு சிங்களத் தாயும் தந்தையும் எப்படிப் பொறுப்பாக முடியும்?

  துரை நரையன் இவ்விவாதத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வது ஆரோக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  அரச எதிர்ப்புணர்வு என்பது சிங்கள மக்களுக்கு எதிரான வன்மமாகவும் புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக ஐபிசி போன்ற புலி ஆதரவு ஊடகங்களினால் பரப்பப்டுகின்றது. அவ்வாறான ஒரு சூழலில் துரை நரையன் போன்றவர்கள் ‘சிங்களம்’ என விழப்பது இனவாதத்தின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகின்ற ஆபத்து உள்ளது.

  இவை தொடர்பாகவும் கருத்தாளர்கள் கருத்துக்களைப் பதிவு செய்வது ஆரோக்கியமானதாக அமையும்

  த ஜெயபாலன்.

  Reply
 • vadakkan aatham
  vadakkan aatham

  //”தமிழ் மக்களுடைய இன்றைய நிலைக்கு அரசினைப் போல் சிங்கள மக்களும் பொறுப்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது என்பதே எனது கருத்து.” //
  இதன் மறுதலையாக புலிகளின் பிழைக்கு புலமபெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் பொறுப்பில்லை என கூறுகின்றீர்களா ஜெயபாலன்?

  சிங்கள மக்கள் முற்று முழுதாக பொறுப்பானவர்கள் என கூறமுடியா விடினும் தனிச் சிங்கள சட்டத்தை ஆதரித்தல் அவ்வப்போது கொண்டு வரப்பட்ட தீர்வுத் திட்டங்களை கிழித்தெறிந்ததை ஆதரித்தமை (இவர்கள் வோட்டுப் போடுவார்கள் என்பதற்காகத் தான் தீர்வுத் திட்டங்களை கிழித்தெறிவதற்கு சிங்கள தலைவர்களால் நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தது. இப்போதும் நிர்ப்பந்திக்கப் படுகிறது.தமிழர்கள் 77 83 களில் இனவாத அரசுகளால் நடத்தப்பட்ட கலவரங்களை தொடர்ந்தும் யு என்பி யை சிங்கள மக்கள் ஆதரித்தனர். எனவே அவர்களுக்கும் நீங்கள் முழுவதையும் ஒப்புக் கொள்ளா விடினும் ஒரு பகுதிதன்னும் பங்குண்டு.

  //”புலிகள் முஸ்லீம் மக்களை துரத்தியடித்ததற்கு தமிழ் மக்கள் பொறுப்பு என்பது போலவும்”//
  ஜெயபாலன் வேறு சில அதிஜனநாயகப் பத்திரிகைகளிலும் சிலவேளை உங்கள் பத்திரிகைகளிலும் உச்ச ஜனநாயகவாதிகள் முஸ்லிம் மக்களை புலிகள் விரட்டியபோது தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை என குற்றம் சாட்டி இருந்தனர். ஆயுததாரிகளான புலிகளை எதிர்ப்பதை விட சிங்கள மக்கள் தமது சகோதர தமிழர்களுக்கு (உங்கள் கருத்துப்படி தமிழரும் சிங்களவர்களும் சகோதரர்களாம்?) இனவாதிகளால் அச்சுறுத்தல் வந்த போது தடுத்திருக்கலாம் தானே? அதற்காக அங்கொன்று நடந்தது இங்கொன்று நடந்தது என உதாரணங்களை சொல்ல வேண்டாம்.

  எங்களை எங்கே இயலபு வாழ்க்கைக்கு விட்டாலும் எங்களால் கடுமையாக உழைத்து முன்னேற முடியும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் நாம் கோருவது என்னவென்றால் நமது இருப்பிற்கான உத்தரவாத்தையே. நன்றாக குறித்து கொள்ளுங்கள நான்கு ஐந்து வருடங்களில் தமிழர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி காசு சேமித்து சிங்களப் பகுதிகளில் வாழும் போது …….. மீண்டும் லங்கா ராணியா?

  வடக்கான் ஆதாம்.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  // பார்த்திபன் on July 1, 2009 11:36 am உண்மையில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் அரசியலை இன ரீதியாக வளர்த்து பிளவுகளை ஏற்படுத்தி வந்ததே, நாட்டின் இன்றைய இவ்வளவு சீரளிவுகளுக்கும் காரணம். அதே தவறுகளை தொடர்ந்தும் செய்வதைத் தவிர்த்து, இனங்களுக்கிடையேயான ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி எல்லா இன மக்களும் சமத்துவமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் சேர்ந்து வாழும் நிலையையும் அரசும் அனைத்து மக்களும் சேர்ந்து ஏற்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பாகுபாடுகள் ஒழிந்து, எல்லோரும் இலங்கை மக்கள் என்ற பொதுவான எண்ணமும் தாமாக உருவாகும்//

  முழு உண்மை இதுதான். இதை ஒரு சிலராவது முன் மாதிரியாக செய்யலாம். நாடு உனக்கு என்ன செய்தது என்பதை விட, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் எனும் கெனடியின் வரிகளே நினைவுக்கு வந்தன.

  நன்றி பார்த்தீபன்

  Reply
 • indiran.raja
  indiran.raja

  “சிவகுமாரன் கொலையைத் தவிர சயினட் வங்கிகொள்ளை குண்யெறிதல் என்ற சாகசசெயலில் விலத்தி நின்றவர் அல்ல ”

  இதன் பின் தோன்றிய இயக்கங்களுக்கு……………………………. இப்போது அங்கு பிரச்சனையே இல்லை என கூறுவது அந்த இளைஞர்களின் ஆன்மாக்களை வேதனைப்படுத்துகிறது.

  கடந்தகால அனுபவங்களை கற்றுக்கொண்டு அதை அந்த இனத்திற்கு உரைப்பவனே அந்த இனத்தின் சேவகன்னாகிறான்.”

  இந்த அனுபவங்களில் இருந்துதான் பொருளாதார வளர்ச்சிகளற்ற மூன்றாம் உலக நாடுகளில் சமத்துவமு சகோதரத்துவம்……. போன்றவை உருவாகுவது கஸ்டமானது. இந்த உண்மையை மனவருத்தத்துடன் சொல்லியே ஆக வேண்டும். நாம் கனவுலகில் வாழவில்லை. ஆனால் ஏதாவது வழியைக் கண்டு பிடித்து சந்தோசமாக வாழ முயற்சி செய்வோம்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  சந்திரன் ராஜாவிடம் இருந்து இந்திரன் ராஜாவுக்கு ஒரு சிறு விளக்கம். அந்த இளைஞர்களின் ஆன்மாக்கள் வேதனைப்படுகிறது என்று கற்பிதம் பண்ணுகிறீர்கள். சயினட் துப்பாக்கி வங்கிகொள்ளை கொலைகள் தமிழ்மக்களுக்கே துரோகிப்பட்டம் கொடுத்து தொங்கவிட்டும் உலுக்கி எடுத்தும் தமிழ்மக்களின் உரிமையைப் பெறுவதில் ஒருபடியில்கூட கால்வைக்க முடியவில்லை என்ற உண்மை எம்கண்முன்னால் தெரியும் போது இந்த ஆன்மாக்காள் எதற்காக வேதனைப்படுகிறது?

  இந்த உள்நாட்டுயுத்தால் தமிழ்மூஸ்லீம்மக்கள் மட்டும் கூடியவிலை செலுத்தவில்லை இருபத்தையாயிரம் ஏழைச் சிங்கள இராணுவவீரர்களும் பலிஎடுக்கப் பட்டிருக்கிறார்கள் கோடானகோடிப் பணங்கள் மக்களின் வரிப்பணத்தில் விரையம் செய்யப்பட்டிருக்கிறது. இருபக்கத்திலும் தவறுகள் இருக்கின்றன. இந்தியாவால் நாம் தோல்வியைத் தழுவினோம் என்ற பெறுமதியில்லாத கதைகளை ஒதுக்கிவைத்து வைத்துவிட்டு கதைப்போம் எழுதுவோம் கலந்துரையாடுவோம் விவாதிப்போம் மக்கள் மகிழ்சியான வாழ்வைத்தேடும் அரசியலைத்தேடி பயணிப்போம்.

  Reply
 • vanthijathevan
  vanthijathevan

  இருபத்தையாயிரம் ஏழைச் சிங்கள இராணுவவீரர்களும் பலிஎடுக்கப் பட்டிருக்கிறார்கள் கோடானகோடிப் பணங்கள் மக்களின் வரிப்பணத்தில் விரையம் செய்யப்பட்டிருக்கிறது. இருபக்கத்திலும் தவறுகள் இருக்கின்றன.

  உண்மையே. ஆனால் தவறு செய்த ஒரு பக்கத்தின் கதை முடிந்து விட்டது. தண்டனையும் கொடுத்தாயிற்று. தவறு செய்த அடுத்த பக்கம் எப்படி எப்போது தன் தவறை திருத்திக் கொள்ளப போகின்றது? பாதிக்கப்பட்டவர்களுக்கு அது ஒரு நம்பிக்கையையும் அளிக்கவில்லையே. எல்லாம் வெறும் வாய்ப் பேச்சாகத்தான் இருக்கிறது என நான் கருதுகிறேன்.

  Reply
 • palli
  palli

  இத்தனை தோல்விக்கு பின்னும் புலியாக இயங்க அல்லது பிழைக்க சிலர் முற்படுவது போல் சர்வதிகார அரசாக வெற்றி கண்ட அரசு ஜனனாயக அரசாக மாற சில காலம் எடுக்கும் எனனினைக்கிறேன்; நம்புவோமே; இந்த 30வருடங்கள் புலிகளை நம்பவில்லையா? ஏமாறம் என்பது தமிழருக்கு காலம்காலமாய் இலவசமாக கிடைப்பது அனுபவம்தானே;

  Reply
 • palli
  palli

  இந்த கட்டுரையில் பல்லிக்கு உடன்பாடு இல்லை ;இதுவும் மறைமுகமான வட்டுகோட்டை கொட்டைபாக்கு சமாசாரமே; இதே கேள்வியை என்றாவது ஒரு நாள் புலியிடம் கேக்க முடிந்துதா? 1982 களில் சிலர் பிள்ளை பிடிக்க இப்படிதான் பேசுவார்கள்; இவர் புலியை ஆதரிக்கிறாரா? அல்லது அரசை விமர்சிக்கிறாரா? அல்லது அரசை ஆதரித்து புலியை விமர்சிக்கிறாரா? இடைஇடையே மிரட்டல்; சில இடங்களில் அடங்கல்;அமைதி; ஒரு இடத்தில் குளைகிறார்;உடனே பாய்கிறார்; ஆனாலும் எல்லாமே சிரிப்பாகதான் இருக்கிறது; தேவையானவை பலதை தேவை இல்லாத இடத்தில் கட்டாய புகுத்தல் செய்துள்ளார்;

  மகிந்தாவுக்கு எழுதிய கடிதமா அல்லது தேசத்தின் நாடிதுடிப்பு அறிய ஆவலா? மற்ற அமைப்புகளையும் கட்டுரையாளர் பெரிய மனதுடன் ஏற்று கொல்கிறார்; பல்லியை பொறுத்த மட்டில் இது ஏதோ ஆள் இல்லாத கடையில் ரீ ஆத்துவது போல்தான் உள்ளது; இருப்பினும் அவரது கட்டுரைகள் தொடர எனது வாழ்த்துக்கள்;

  Reply
 • indiran.raja
  indiran.raja

  பல்லி அவர்களே,
  இதை எழுதியவர் இலங்கையிலுள்ள சாதரண தமிழ மகனைப் பிரதிபலிக்கிறார். சிங்களவரோடு சமமாக வாழ்ந்து விட முடியாதா என்ற ஏக்கத்தில் குழைகிறார். சிங்கள இனவாதம் தமிழருக்கு செய்த கொடுமைகளை எண்ணியும் தமிழர்களை தற்போது நிர்கதியாக்கியதையும் நினைத்து பணிந்து பார்க்கிறார். சிங்கள நிர்வாகம் பிரச்சனையை இழுத்தடித்துக் கொண்டே இருப்பதால் மிரட்டுகிறார்.

  Reply
 • palan
  palan

  1.”இந்த மக்களை ஏன் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும மட்டும்; குடியேற்ற வேண்டும்? ஏன் சிங்கள பகுதிகளில் வைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் எண்ணம் ஏற்படவில்லை? முடியாது. ஜனாதிபதி அவர்களே!! இதுதான் இலங்கையின் நிலவரம்!! இலங்கை தமிழ் அகதி மக்கள் இலங்கைச் சிங்களப் பகுதிகளில் பாதுகாப்பு பெற முடியும் என்பது சாத்தியமற்ற நிலையிலேயே இலங்கை நிலவரம் இருக்கிறது”

  வூந குநnஉந ளை ழெவ pசழவநஉவபைெ வுயஅடைள கசழஅ ளுinhயடநளந வாரபள. ஐவள ளை கழச ளுரளிநஉவநன டுவுவுநு pநழிடந ழெவ வழ நளஉயிந கசழஅ வாந உயஅpள. வூநசந யசந அழசந வுயஅடைள டiஎந ழரவளனைந ழெசவா நுயளவநசn pசழஎinஉநள ழெற. வூநல யசந ழெவ pசழவநஉவநன டில கநnஉநள. வூந 1983 யனெ ழவாநச pழபசழஅள யபயளைெவ வுயஅடைள யசந ளவயவந ளிழளெழசநன ழநெ. ழேவ ளுpழவெயநெழரள ழநெள.

  2.”அதாவது வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற அடிப்படையில் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்றால் இலங்கையில் தமிழினம் மட்டுமல்ல சிங்கள இனமும் நிம்மதியாய் இருந்து விட முடியாது என்பதை சிங்களம் மட்டுமல்ல பின்னால் திரியும் தமிழர்களும் மறந்து விட வேண்டாம்.”

  Come on Thurai Naraiyan. Where did U get the idea that North east are Tamils Homeland? North and eastern provinces boundaries are drawn by British for their convenience. Nothing Is rigid and fixed. Of course in North There was a Tamil kingdom. But the east mainly Trincomalee was under the influence of Kandy kingdom even though many people lived there were Tamils and a sizable number of people in East were Sinhalese too. Puththalam was under the influence of Jaffna kingdom. But British put it into north western province. Many place names in Jaffna including the name Yalppaanam’s origin is sinhalese. we Tamils and Sri lankan state should be prepared to negotiate. Naraiyan U should read some more books . U should read a lot of books. Please do not recycle the ideas that are put into Ur mouth from the TULF times. A new approach is needed.

  Reply
 • vanthijathevan
  vanthijathevan

  பாலன் அவர்களே
  இலங்கைத் தீவில் இதுவரை எதற்காக இந்த யுத்தம் நடைபெற்றது? எதற்காக சிங்களத் தரப்பு பேச்சு மேசைகளுக்கு வந்தது? இரண்டு இனங்களுக்கும் முரண்பாடுகள் உண்டு என்பதால்தானே? இனம், தேசியம் என்பவற்றை நீங்கள் கைகழுவி விட்டிருக்கலாம். சமூகம் கைவிடவில்லை. சிங்கள பேரினவாதம் தனக்குள் தமிழ் என்ற இனத்ததை மூழ்கடித்து கரைத்து விட அடக்குமுறையையும் சூழ்ச்சிகளையும் கையாள முயன்று கொண்டே இருக்கிறது. அதுவே இந்த முறுகல்களுக்கு அடிப்படை. எந்த மாற்றங்களும் இயல்பானதாக அமைந்தால் நியாயமானது. அடித்து கனிய வைப்பது எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். உங்கள் எஜமானர்களிடம் சுமுகமாக இதை தீர்க்கும்படி சொல்லுங்கள்!

  Reply