நாட்டின் மேற்கு, மத்திய, சபரகமுக பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை பெய்யக்கூடிய சீரற்ற கால நிலை காணப்படும் என வானிலை அவதான நிலைய பிரதி இயக்குநர் எஸ். ஆர். ஜயசேகர தெரிவித்தார்.
இப்பிரதேசங்களில் இன்னும் சில தினங்களுக்கு இதே கால நிலை தொடரும் எனவும் இடைக்கிடை பலத்த காற்று வீசும் எனவும் அவர் மேலும் கூறினார்