அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் மத்திய குடிவரவுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது
முதல் அரையாண்டு காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியவர்களில் இலங்கையர்கள் இரண்டாம் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது இரண்டாவது அதிகபடியான புகலிடம் கோரல் விண்ணப்பங்கள் இலங்கையர்களிடம் கிடைக்கப் பெற்றுள்ளதாக மத்திய குடிவரவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
2009ம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் 8400 பேர் புகலிடம் கோரியுள்ளனர் கடந்த வருடத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 40வீத உயர்வைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது எரித்திரியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான புகலிடம் கோரியோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை. நைஜீரியா. ஈராக். மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் முறையாக இரண்டாம் மூன்றாம் நான்காம். மற்றும் ஜந்தாம். இடங்களை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது
நைஜீரியர்களினால் விண்ணப்பிக்கப்பட்ட புகலிடம் கோரல் மனுக்களில் 73 வீதமானவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது
agent
மனச்சாட்சியில் கை வைத்து கூறுங்கள் இவர்கள் எல்லாம் உண்மையில் அகதிகள்தானா? ஆளனுப்பும் முதளைகளின் பசப்பு வார்த்தைகளினால் ஏமார்ந்து வெளிநாடுகளில் வெந்து நொந்து வாடும் உறவுகளின் முதுகில் சவாரிவந்தவர்கள் அகதிகளா. இத்தாலிக்கு தோட்ட வேலைக்கு இருபத்தைந்து லட்சங்கள் ஏஜன்சிகளுக்கு தாரைவார்த்து வந்து, அருகிலுள்ள நாடுகளில் அரசியல் அடைக்கலம் கேட்பவர்கள் அகதிகளாக முடியுமா. இருபத்தைந்து லட்சங்கள் உழைக்க எவ்வளவு காலமாகும்? பாவம் அப்பாவி உறவுகள். அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்பதற்காக, அக்கறையில்லாமல் இருக்கமுடியுமா கடன் சுமையுடன்.
Waco
many of them are LTTE leftovers.