தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையும் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென் மாகாணத்தில் உள்ள காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்ட செயலகங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
2008 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பில் உள்ள வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தென் மாகாணத்தில் 17 இலட்சத்து 61 ஆயிரத்து 843 வாக்காளர்கள் உள்ளனர். இதில் காலி மாவட்டத்தில்
7 இலட்சத்து 68 ஆயிரத்து 801 வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 856 வாக்காளர்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 இலட்சத்து 21 ஆயிரத்து 156 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
இதேவேளை, தென் மாகாண சபையில் போட்டியிடும் அரச தரப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் தமது பிரசார வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.