பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம்: மாணவர் 67 இரத்மலானை இந்துவுக்கு அனுப்பி வைப்பு

011109.jpgவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்து மேலும் 67 மாணவ, மாணவிகள் நேற்றும் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாடசாலைக் கல்வியை தொடர்ந்து கொண்டிருந்த போது புலிகளால் பலாத்காரமாக படைக்குச் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு மீண்டும் தங்களது கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் பூந்தோட்டம் முகாமிலிருந்து 211 பேர் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 81 மாணவர்களும், 63 மாணவிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்றுக் காலை 7.30 மணிக்கு பூந்தோட்டம் முகாமிலிருந்து 23 மாணவிகளும் 44 மாணவர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • gobi
    gobi

    நல்லதொரு முயற்சி. நான் இந்த செய்தியை வாசிக்கும்போது தேசத்தில் வாசித்த ஒரு பின்னூட்டம் ஞாபகம் வந்தது. பிரபாகரனை வெளிநாடுகளுக்கு கொலிடேய்க்கு அப்பப்ப அனுப்பியிருந்தால் போரோட்டத்தை கைவிட்டிருப்பார் என்று. உண்மைதான் அது. இந்தப் பிள்ளைகள் வேறு இடங்களில் வைத்து படிப்பிப்பது அவர்கள் மனதில் ஒரு நல்ல மாற்றத்தை தரும்.

    Reply
  • TULF Member
    TULF Member

    ஒரே வன்னியைப் பார்த்துக்கொண்டிருந்த இந்த இளம்வயதினர் இரத்மலானையை பாத்தாவது புதிய சிந்தனையை துண்டும் படியாக அமையட்டும் காரணம் தொடரந்து ஓரே கொலைக் கலாச்சாரத்தையே பார்த்து வந்தவர்களுக்கு புதிய சிந்தனைக்குரிய சூழல் தேவையானதே.

    Reply
  • மகுடி
    மகுடி

    இலங்கையில் அப்படி. புலத்தில் வன்னி மக்களும், புலம் பெயர் தமிழரும் எனும் தலைப்பில் , மாவீரர் தினத்தில் புலிகள் பேச்சுப் போட்டி நடத்தப் போகிறார்கள்.

    பேசப் போகும் குழந்தைகள் என்ன பேசும் தெரியும்தானே? தற்கொலை கலாச்சாரத்தை புலத்திலும் ஊட்டி, எங்காவது 4 குண்டுகளை வெடிக்க வைத்து காசு பார்க்க முயலுங்கள்.

    Reply