நிவாரணக் கிராமங்களிலிருந்து மக்களை மீளக் குடியமர்த்தப்படும் பகுதிகளிலுள்ள கிராமசேவகர்கள் உட்பட அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் உடனடியாக தத்தம் பகுதிகளுக்கு கடமைக்கு திரும்ப வேண்டும் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை விடுத்துள்ளார்.
மக்களை மீளக் குடியமர்த்துவதை துரிதப்படுத்துவதற்கும், குடியமர்த்தப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூரணப்படுத்திக் கொடுப்பதற்கும் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றங்கள், குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்கென விசேட கூட்டமொன்று நேற்று திருமலையில் நடைபெற்றது.