அத்திவாரம் போட்டு கோட்டைகட்டிய பின்னரே கோபுரம் வைப்பார்கள். அத்திவாரங்கள் சரியாக இல்லாமல் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையால் எட்டித்தட்டியவுடனேயே அத்திவாரமே ஆடி கொட்டுப்பட்டுப் போனது புலிக்கோட்டை. அத்திவாரமாக நின்று கோட்டையைத் தாங்கிக்கொள்ள வேண்டிய மக்கள் சரிவரகட்டி எழுப்பப்படாது போனதாலும், நிலத்தின் பண்பு புரியாமல் சூழல் அறியாமல் சரியான அரசியல் ஆய்வின்றி, ஆயுதத்தில் மட்டும் மனநோய் கொண்டு அவசர அவசரமாகக் கட்டப்பட்டதால்தான் புலிக்கோட்டை அழிந்தது என்பதை இன்னும் உணராமல், இன்றும் புலம்பெயர் தமிழர்கள் சிலர் வட்டுக்கோட்டையையும், தட்டுப்பட்ட புலிக் கோட்டையையும் கொண்டு நாடுகடந்த நாடுகடக்கா தமிழ்ஈழம் எனத்தடி கொடுத்து ஓடுகிறார்கள். செம்மறியாட்டுக் கூட்டம் போல் முன்னுக்குப் போகும் செம்மறி கத்திக் கொண்டு ஓட பின்னால் கத்திக் கொண்டோடி துப்பாக்கிகளால் மந்தைகளாக்கப்பட்ட எம்மக்கள் புலிக்கோட்டை அழிந்த பின்பாவது சுயமூளையில் சிந்திப்பார்களா?
1976ல் வட்டுக்கோட்டையில் அத்திவாரம் போட்டு மகாநாடாய் சுழிபுரத்தில் கோட்டை அமைத்து கூட்டணி கோபுரமானது. அன்று கலசங்களாக இருந்த கூட்டணித் தலைவர்கள் ஒலித்தார்கள். இன்று எம்மக்களை ஒழித்தார்கள். இக்கூட்டணி தொடர்ந்து தானே கோபுரக் கலசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொன்னபடி எதையும் செய்யாமல் இருக்க கோட் டையைப் பிடிக்க இளைஞர்கள் படையெடுத்து, ஒன்றை ஒன்று கொன்று தின்று, வட்டுக் கோட்டை புலிக் கோட்டையானது. ஆனால் அது மக்கள் கோட்டையாக அமையவில்லை. இக் கோட்டைக்குக் கொத்தளமாகவும் அத்திவாரமாகவும் அமிழ்ந்து போய் இருந்தவர்கள் அப்பாவி எம்தமிழ்மக்களே.
கடும் காற்றுக்கு கதைசொல்ல முடியாத பிரபாகரன் எனும் தலைமைக் கலசத்துக்கு மட்டும் புலம்பெயர் மக்களால் ஆராதனைகள், அபிசேகங்கள், தோத்திரங்கள். அன்று மண்மீட்பு, என்று மக்களின் மனமீட்பு இன்றிப் புறப்பட்ட போர்வீரர்களும் அடிமண்ணாய் கிடந்த மக்களை கருத்தில் கொள்ளவில்லை, சிரத்தை எடுக்கவில்லை. அப்படி கரிசனைப்பட்டவர்கள் கூடச் சுடுகோல்களால் சுட்டுக் கருக்கப்பட்டார்கள். கருவே அழிந்தபின்பு எப்படிப் பிள்ளைப்பேறு என்பதுதானே முள்ளிவாய்கால் முடிவு. தலைபோனபின்பு அந்த வெற்றிடத்தை நிரப்ப தலைபோனவர்கள் ஓடித்திரிகிறார்கள். இன்னும் மண்ணாயும், மனிதராயும், கோட்டை, கோபுரங்களைத் தாங்கி நின்ற ஈழமக்கள் கருத்தை கவனத்தில் கொள்ளாது கடல்கடந்த கடக்கா ஈழம் என்று உடைந்து போன வட்டுக்கோட்டை எனும் கோட்டையைக் கட்டித் தட்டி எழுப்புவதை விட காலத்துக்கேற்றால்போல் கட்டக்கூடிய ஒரு சிறுகுடிசை ஒன்றையாவது சரியாகக் கட்ட முன்வருவார்களா? சரியாகத்தான் சிந்திப்பார்களா?
ஐரோப்பாவில் நாட்டுக்கு நாடு வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து அவைகள், பேரவைகள் உருவாகின்றன. இப்பேரவைகள் (பேயவைகள்) அந்நாட்டிலுள்ள மக்களை பிரதிநிதித்துவப் படுத்துமாம், ஜனநாயகமுறையில் தேர்தல் வைப்பார்களாம், எல்லோரும் போய் வோட்டுப் போட வேண்டுமாம். எது ஜனநாயகம்? வோட்டுப் போடுவதுதான் ஜனநாயகமா? இப்படி ஒருதேர்தலை நடத்த நீங்கள் யார்? நாட்டில் அவதியுறும் மக்களைக் கருத்தில் கொள்ளாத இவர்கள் எமது மக்களை எப்படிப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். எம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு நீங்கள் யார்? இவர்களின் கொள்கை வட்டுக்கோட்டைத் தமிழீழம் தானாம். அப்படியென்றால் நாடுகடந்த தமிழீழம்? இது நாடு கடத்தப்பட்டதா? இது நாடுகடக்காத் தமிழ் ஈழமா?
புலிகள் இருந்தபோது அங்கிருந்தபடியே இங்குள்ள தமிழர்களைக் கட்டுப்படுத்தினார்களாம். இப்போ புலிபோனதும் புலம்பெயர் தமிழர்களுக்குக் கிலிபோய்விட்டதாம். இவர்களைக் கட்டுப்படுத்த ஒரு அமைப்புத் தேவையாம். இதனால்தான் அவைகள் பேரவைகள் கட்டுகிறார்களாம். இது உள்நாட்டு தமிழர்களையும், அரசியலையும் பிரதிநிதிப்படுத்துமாம். இது நாசனல் மற்றையது இன்ரநாசனலாம். இது ஒரு ஜனநாயக அமைப்பு என்று கட்டுபவர்கள் இப்படி ஒரு அமைப்பைக் கட்டுவதா? இல்லையா? என்று எந்தவாக்கெடுப்பும் நடத்தவில்லை. ஐரோப்பிய நாடுகளைப் பற்றியோ அரசியல் அமைப்புகள் சட்டங்கள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் ஊரிலிருந்தபடி புலம்பெயர் தமிழர்களை புலிகள் கட்டுப்படுத்தினார்கள் என்றால் புலம்பெயர்ந்தவர்கள் புலன் பெயர்ந்தவர்கள் தான். இதை உணர்ந்துதான் தமக்குத்தாமே மகுடம் சூடிக்கொண்டு புதிய அவைகள் துவையல்கள் வெளிவருகின்றன. இனிமேல் நாலுபேர் சேர்ந்து தேர்தல் நடத்தி 3வோட்டு விழுந்தால் 75சதவீத வெற்றி. நாமும் ஒரு அவைதிறந்து புதிய தேர்தல் நடத்துவோமா?
இந்த இருபகுதியினருக்கும் சில தில்லு முல்லுகள் உண்டு. யாரின் கீழ் யார் இயங்குவது என்று பிரச்சனையும் உண்டு. பேரவைகள் (பேராசைகள்) கடைசிகாலங்களில் பிரபாகரன் உயிருடன் இருக்கும் போது அவர்பின்னால் இருந்து சேர்ந்து குழிபறித்து புலம்பெயர் தமிழர்களின் பணங்களை தமதாக்கிய பெருவள்ளல்கள் எனலாம். இதை சிவசேகரமவர்கள் மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். சுருங்கச் சொல்லின் புலம்பெயர் புண்ணாக்குகளின் புத்திகளைக் கழுவி பணருசிகண்ட பூனைகள் எனலாமே. இது உள்நாடுகளில் தமிழீழ அமைப்பாகவும் (லோக்கல்). மற்றையது நாடுகடந்த தமிழ்ஈழம் உலகரீதியான தமிழீழ அமைப்பாகவும் (இன்ரர்நாசனல்) இயங்குமாம். ஒன்று பிரபாகரனுடையது மற்றையது கேபியினுடையது என்று கூறுவது பொருந்துமோ? ஒன்று புலம்பெயர் தமிழர்களிடன் நேரடடியாகப் பணம் பிடுங்கியவர்கள், நாடுகடந்த தமிழீழத்தார் பிடுங்கியவர்களிடம் பிடுங்கியவர்கள்.
இவர்கள் தனித்தனியே கூட்டங்களை ஒழுங்கு செய்திருந்தார்கள். கூடுதலாக நாடுகடந்த தமிழீழத்தார் பிரபாகரன் உயிருடன் இருந்தபோது அமைப்பு மீறிய செயல்களில் ஈடுபட்டதால் பிரபாகரனால் அமைப்பை விட்டு விரட்டப்பட்டவர்கள் அல்லது நாட்டுக்கு அழைக்க ஒடி ஒழித்தவர்கள் என்கிறார்கள் நோர்வே தமிழர்கள். எது எப்படியோ எல்லோரும் தமிழர்களைத் திண்டவர்கள் தான். நோர்வே சென்றபோது இவர்களின் பின்புலங்களை அறிந்தபோது நோர்வே தமிழர்கள் பல சொன்னது நியாமாகவே தோன்றியது.
எதிர்வரும் 15ம்திகதி (நவம்பர் 15) நோர்வேயில் ஒரு குழு ஜனநாயகம் எனச்சொல்லிக் கொண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை எனப்பெயரிட்டுக் கொண்ட அமைப்பு நோர்வே தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த குழுஜனநாயகத் தேர்தல் ஒன்றை நடத்துகிறதாம். இதற்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டார்களாம். தமிழ்மக்கள் செறிந்து வாழும் நகரங்களில், மாநகரங்களில் தமிழர்களின் தொகைக்கேற்ப வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்களாம். தலைநகர் ஒஸ்லோவில் தேர்தலுக்கு நிற்பவர்கள் உங்கள் வோட்டுக்கள் எனக்கே, நானுன் ஊரவன் உன்வோட்டு எனக்குத்தான் என்று தொடங்கி விட்டார்களாம். இதன் பிரதிபலன்களாக ஊர்வாதம், குழுவாதம், சாதி, குலம் கோத்திரம் என்று ஒன்றாய் இருக்கும் மக்கள் சிதறிச் சின்னா பின்னமாகிப் போகப்போகிறார்கள். வோட்டுப்போடுவதும் பெரும்பான்மையும்தான் ஜனநாயகம் எனக்கருதினால் இலங்கை அரசாங்கம் சிறு ஆயுதம்தாங்கிய குழுக்களும் தாய்நாட்டில் செய்வது எந்தவிதத்திலும் பிழையாகாது. பெரும்பான்மைச் சிங்களவரின் பிரதிநிதியாக இருப்பவன் தன்னை தலைவனாக்கிய சமூகத்துக்கு நன்மை செய்வதும் தன்னை எதிர்த்தவர்களைப் பழிவாங்குவதும் நியாயமாகிறது. எம்சமூகங்களில் பழிவாங்கல் என்பது உதிரத்தில் ஊறிவிட்ட ஒன்றாக அமைந்ததால் தான் சகோதரப்படுகொலைகள் வகை தொகையின்றி நடந்தன.
இன்றும் கூட தமிழ் தலைவர்கள் இராஜபக்சவுக்கு அவர் மொழியிலேயே உணர்த்த வேண்டியது ஒன்று உள்ளது. இன்று அவர்வகிக்கும் பதவி தமிழ் மக்களாலேயே தரப்பட்டது என்பதையும், அந்த மக்கள்தான் இன்று வன்னியில் கம்பிவேலிக்குள் கன்னம் உரசுகிறார்கள் என்பதையும் சரியான முறையில் எடுத்துச் சொல்ல வேண்டிய நிலையும் நிலைப்பாடும் உள்ளது. கோட்டைக்கு ஆசைப்பட்டு குடிசையே இல்லாது போன நிலையைக் கண்ணால் கண்டும் திருந்த மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள் ஈழத்திலுள்ள கடைசித் தமிழனையும் கொன்று விட்டுத்தான் மீதி என்று எண்ணுகிறார்களோ என்னவோ?
ஐனநாயகம் என்பது தன்னை எதிர்த்து வோட்டுப் போட்டவர்களையும், சமூகத்தையும் பிரதிநிதிப்படுத்துபவனே சரியான ஜனநாயகவாதி. இது எம்நாடுகளில் எங்கே நடக்கிறது. இதையே வெளிநாடுகளில் ஜனநாயம் என்று தேர்தல் நடத்த முன்வருகிறார்கள் புலன்பெயர்ந்த தமிழர்கள். என் கணிப்பீட்டில் கீழத்தேய நாடுகளில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மைச் சர்வாதிகாரமே. திறமையான பொய் பித்தலாட்டங்களின் கூட்டமே.
நோர்வே ஈழத்தமிழர் அவையால் நடத்தப்படும் தேர்தல் பற்றி என் காதைக் கடித்த செய்திகள்
• தொடங்கிட்டாங்கப்பா தொடங்கிட்டாங்க குடுத்த காசுக்கே கணக்கு காட்டேல்லை வெளிக்கிட்டுட்டாங்கடா காசு சேர்க்க.
• குடுத்த காசை உடன் எடுக்கேலாது. பிடித்து விடுவார்கள் எல்லோ. வியாபாரத்தைத் தொடங்கினால் கணக்குக் காட்டலாம் தானே.
• தலைவர் உயிரோடை இருக்கேக்கை இவை எப்படி தேர்தல் நடத்த முடியும். தலைவர் ஆபிரிக்காவில் இருக்கிறார். வரும்போது வருவார். அப்பதெரியும் இவையின்ரை ஆட்டங்கள்.
• யாரிந்த நாடு கடந்த தமிழ் ஈழத்தார்? பதில் – முந்தி புலியிலை இருந்து கலைச்சு விடப்பட்டவையள், காசடித்துக் கொண்டு ஓடி ஒதுங்கியவை, ஊருக்குக் கூப்பிட்ட போது ஓடி ஒழிச்சவையும், உள்ளுக்கிருதே காட்டிக் கொடுத்தவையும் சேர்ந்து தான் நாடுகடந்த தமிழ்ஈழம் தொடங்கியிருக்கினம். உருத்திரகுமார் இவர்களுடன் தொலைக்காட்சியில் நேரடியாகப் பேசினவராம் கேள்விப்பட்டீர்களோ?
• அப்ப நீங்கள் எதுக்கு சப்போட்? அண்டைக்கும் குளப்பினாங்கப்பா, இப்பவும் குளப்புகிறானுகளப்பா? கண்டறியாத தமிழ்ஈழமும் நீங்களும். இங்சை வந்தனீங்கள் வாழ்ந்து போட்டுப் போங்கோவன்.
• ஊரிலை எல்லாம் வெறுமையாப் போச்சு இஞ்சை இருந்தாவது போராடவேணும் தானே.
• முகிலமும் நெடியவனும் பிரச்சனையோடை ஒழிச்சிட்டாங்கள். இருக்கிற சனத்தைக் கொண்டிழுக்க யாராவது வேணும் தானே எண்டுதான் பேரவை துவங்கியிருக்கினம்.
• அங்கை மக்களாலை போராட ஏலாது நாங்கள் தான் இஞ்சை இருந்து ஏதாவது செய்ய வேணும். (ஏன் தமிழீழம் வாங்கி அனுப்பப் போறியளோ?)
• வெளிநாட்டிலை இருக்கிற தமிழர்களுக்குத் தான் அரசாங்கம் பயப்படுது. நாங்கள் ஒன்று சேருவது முக்கியமெல்லே (இரண்டாய் பிரிந்து நிற்கிறீர்கள் எப்படி ஒன்றாகிறதைப் பற்றிக் கதைக்கிறீர்கள்).
• இரண்டு பகுதியும் வட்டுக்கோட்டையைத்தான் கொண்டு திரியினம். அதை வைச்சு எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறாங்களோ? இதுக்கிள்ளை யார் யாருக்குள்ளை வேலை செய்யுறது எண்டதுதான் பிரச்சனை.
• திரும்பவும் அடிபடப்போறாங்கடா சாமி.
• நாளைக்கு எல்லாத் தமிழர்களும் எங்களுக்குத்தான் வோட்டுப் போட்டவை எண்டு நோர்வே அரசாங்கத்திடம் சுத்தப் போறாங்கடா டோய்.
• புலியின்ர காலத்திலேயே தமிழீழத்தில வீடு வாங்காமல் கொழும்பில வீடு வாங்கினாங்கள். தமிழீழம் கிடைக்காதெண்டு அப்பவே உவங்களுக்குத் தெரியும்தானே? இப்ப புலி செத்தபிறகு நாடுகடந்த தமிழீழம் எண்டுசொல்லி இனி எந்தநாட்டில வீடுவாங்கப் போறாங்களோ தெரியாது.
• தலைவர் போனதாலை எல்லாரும் தாங்கள் தாங்கள் தலைவரா நிக்கிறாங்கள்.
• தலைவர் போனதாலைதான் இந்தத் தலையிடியள் தொடங்கியிருக்கிறாங்கள்.
• அன்னை பூபதி பள்ளிகூடம் என்னமாதிரி அண்ணை? எல்லாரிட்டையும் காசுவாங்கித் தானே கட்டிடம் வாங்கினவங்கள். படிப்பறிவில்லாதவையும் படிப்பிக்கினம். நடிப்பு மட்டும் ஏதோ கிராயுவேட் பண்ணின மாதிரி. கோடிக்க ணக்கிலை வாங்கின வங்கள். உது ஆற்றை பேரிலை கிடக்குது, நடக்குது? வேதாளம் பார்த்த வெங்காயங்கள் யார் கேக்கப் போகிறாங்கள்.
• மற்றவங்களின்ரை காசிலை தின்னப் பழகிட்டாங்கள் விடுவாங்களோ.
இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ…….!!!!!!!
thurai
மேலாதிக்க வர்க்கத் தமிழரின் அவலக்குரலே நாடு கடந்த தமிழீழம். இலங்கைத் தமிழரின் இன்றைய நிலைமைக்கு அன்றும் இன்றும் மூலகர்த்தாக்கள் இவர்களே.
நாடு கடந்த தமிழீழம்,நாட்டிற்கொரு தலைமைப் பீடம்.
ஆண்ட தலைமுறை தாழ்த்தப்பட்ட தமிழரை புலத்தில் மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை.
துரை
Kusumpu
ஆண்ட தமிழன் மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை? என்று பேசிப்பேசியே பேய்த் தமிழனாக்கியது போதாதா? நாடுகடந்த தமிழீழம் என்பது ஒன்று நாட்டுக் கொரு தமிழீழம் என்பது இன்னொன்று.
குகபிரசாதம்
தேசத்தில் குமரன் என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன் எழுதினார்
குமரன் on March 3, 2008 10:53 am
தோழர்களே! நாங்கள் அதிகமான சக்தியை தனிநபர்கள் குறித்த அக்கறையில் செலவிடுகிறோமோ என்று தோன்றுகிறது. நமக்கு இன்று மிச்சமாகியிருக்கிற அரசியலில் இவ்வளவுதானோ என்று அடிக்கடி உறைக்கிறது. மாற்று அரசியலுக்கான வேலையினை இங்கிருந்தா தொடங்கப் போகிறோம் என்கிற பயம் உறுத்துகிறது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக புலத்தில் ஒன்றையுமே கட்டியெழுப்பவில்லையே என்கிற விரக்தியுடனும் புலம்பல்களுடனும் தான் எஞ்சிய காலத்தையும் கடத்தப்போகிறோமோ?
மரணம் வரைக்கும் தற்காலிக சந்தோசங்களையும் அவ்வப்போதைய மனமகிழ்வூட்டுகின்ற சலிப்பு நிறைந்த சண்டைகளிலும் தான் செலவிடப் போகிறோமோ என்று வேதனையாக இருக்கிறது
santhanam
நாடுகடந்த தமிழீழம் அமெரிக்கா உற்புகுந்துள்ளது
தமிழ் அவை இந்தியாவின் உற்புகல் இது விளங்காத புண்ணாக்குகள் இதை ஊர்வலமாக புலம்பெயர் புண்ணாக்குகளிற்கு விற்பனை செய்கிறார்கள்.
சாந்தன்
santhanam புண்ணாக்குகளுக்கு கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோவன். ஏன் வச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணுறியள்? குத்துமதிப்பாச் சொல்லக்கூடாது விளக்கமாச் சொல்லுங்கோ!!
குலன்,
நீங்கள் உங்கட ஸ்ரைலில பொயின்ற் ஃபோமில (நீட்டி முழங்காமல்) ஏதாவது எழுதி இருப்பியள் எண்டு பார்த்தால் நம்பிக்கை வீண்போகேல்ல.
ஆனால் வழக்கமாக பின்னூட்டம் விடுவோர் எழுதும் நக்கல்களை ‘..என் காதைக் கடித்த செய்திகள்…’ என நீங்கள் சொல்லிபோட்டியள்!!
santhanam
மே 18ல் மண்ணில் எவ்வாறு அழிக்கபட்டதோ அதேபோல புலத்தில் இந்தியாவும். அமெரிக்காவும் சேர்ந்து நுட்பமாக இவர்களது கட்டமைப்பை நொறுக்கியுள்ளனர். இதற்கு மூலம் நெடுமாறன் வைகோ.
palli
நாடு கடந்த ரமில் ஈலம் செய்யவோ அல்லது சரிகட்டவோ ஏன் விலைக்கு வாங்கவோ நினைப்பவர்களின் இருப்பிட விசாக்கள் (புலம்பெயர் தேசத்தில்) பறிமுதல் செய்யபடும் என அந்தந்த நாட்டு அரசுகள் அறிவித்தால், இதில் பலபேர் மாற்று கருத்தாளராய் போவார்கள், பிரபாகரன் இறந்து விட்டார் என அறிவித்ததால் GTV தொலைகாட்ச்சி துரோக ஊடகம் என புலம்பிய ஈல பிரமுகர்கள் இன்று தமிழருக்கான தேசிய ஊடகம் ஒன்று வேண்டும்தானே நாம் புலம்ப என சொல்லுவதும், புலியே தேருக்கு அடித்த தேங்காய் போல் பலசில்லியாய் உருவானாலும் தலமை யார் என சொல்ல முடியாது இருக்கும்போது; உருத்திரகுமார் தனது விசுவாசத்தை அமெரிக்காவுக்கு காட்ட இது ஒரு சந்தர்ப்பம்; விரைவில் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க என்னால் தொடங்கபட்ட நாடு கடத்திய ரமில் ஈலம் காலவரையற்று பின்போடபட்டது; இதை புலி சார்ந்த அனைவர்க்கும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன், இன்று KP அரச சபை சாட்ச்சியாய் மாறியதுபோல் உருத்திரா வல்லரசின் சாட்ச்சியாய் மாற காலம் பல பொறுக்க தேவையில்லை; மக்களுக்காய் ஈழம் போய் ஈலத்துக்காய் மக்கள் என்னும் நிலை வந்ததை எண்ணி தமிழன் என்பதால் மிடுக்குடன் எனது வாழ்க்கையை தொலைக்கிறேன்; அடங்கவே மாட்டாங்க போலகிடக்கு குலன்;
சாந்தன்
‘…அமெரிக்காவும் சேர்ந்து நுட்பமாக இவர்களது கட்டமைப்பை நொறுக்கியுள்ளனர். இதற்கு மூலம் நெடுமாறன் வைகோ…’
அந்த நுட்பம் தான் என்ன எண்டு சொல்லுங்கோ? குத்துமதிப்பு வேண்டாம்.
‘…இதில் பலபேர் மாற்று கருத்தாளராய் போவார்கள், …’
மாற்ருக்கருத்து பேசுவோரின் வதிவிட/பிரஜா உரிமை பறிகப்படும் எனச்சொன்னால் அவர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதைப் பார்த்தேன் என அடித்துச் சத்தியம் பண்ணுவதும் நடக்கும்.
‘..நாடு கடந்த ரமில் ஈலம் செய்யவோ அல்லது சரிகட்டவோ ஏன் விலைக்கு வாங்கவோ நினைப்பவர்களின் இருப்பிட விசாக்கள் (புலம்பெயர் தேசத்தில்) பறிமுதல் செய்யபடும் என அந்தந்த நாட்டு அரசுகள் அறிவித்தால்,…’
பல்லி எவ்வளவு சரியாக மாற்றுக்கருத்துகாரரின் கனவுகளைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். இவ்வாறே கடந்த 10 நாட்களின் முன்னர் ஒரு ‘மாற்றுக்கருத்தாளர்’ உடன் பேசிக்கொண்டிருந்தபோது உவங்களின்ர பேப்பரை பறிக்கிற சட்டம் கொண்டு வரவேணும் அப்பதான் திருந்துவாங்கள் எனச் சொன்னார். இதில ஜோக் என்ன எண்டால் ஆறு மாதத்துக்கு முன்னர்தான் அவரின் மனைவியின் சிற்றிசன்ஷிப் பரீட்சைக்கு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில இருக்கிற கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல், அரசுக்கெதிரான கோரிக்கை வைக்கும் உரிமைகளை விளங்கப்படுத்தி இருந்தேன். ஆவெண்டு கேட்டுக்கொண்டிருந்தவர் இப்ப இப்படிக் கதைக்கிறார்,
Kulan
குகப்பிரகாசம்! குமரன் கூறியது உண்மை. கவலைப்படுவதை விடுத்துக் கவலைதான். இதற்கான மாற்று வழிகள் என்ன? புலம்பெயர்ந்த ஈழவர்கள் இரண்டு தோணியில் கால்வைத்தவர்கள் போல் ஆனார்கள். ஈழம் கிடைக்கிறது என்று கனவுகண்டு அதுவும் போச்சு ஏமாந்தவர்களை மேலும் ஏமாற்ற நாடுகடந்த: நாடுகடக்கா தமிழ்ஈழம் என்று தொடங்கி விட்டார்கள். எமது பிள்ளைகள் தான் இதில் அடிபட்டுப்போகிறார்கள். அவர்களையும் கனவுலகத்திலேயே வளர்க்க முயற்சிக்கிறார்கள் சினிமாப்பார்த்து வளர்ந்த கூட்டம் போல். தயவு செய்து நாம் எம்பிள்ளைகளின் உண்மையான யதார்த்தமான எதிர்காலங்களைக் கருத்தில் கொண்டு சரியான முறையில் எம்மினத்தை புலத்தில் கட்டிஎழுப்ப வேண்டிய பொறுப்பு எம்கைகளுக்கு வந்துள்ளது. கடந்த, கடக்கா தமிழ் ஈழத்தை கடவுங்கள். புலிகளுக்கு புலத்தில் வேலை செய்தவர்கள்: குத்தி முறிந்தவர்கள் அனேகமானோர் கொழுப்பில் வீடுவாங்கியிருந்தார்கள். பெயர்களைக்கூட துல்லிதமாக கொழும்பு விலாசத்தைக் கூடச் சொன்னார்கள். புலிகளுக்கே தெரிந்திருக்கிறது தமிழீழம் கிடைக்காது என்று. பின்பு ஏன் முதுகு முறிய உழைக்கும் மக்களின் பணங்களை வாங்கி பாவங்களைச் சம்பாதிக்கிறீர்கள். இதை இவர்களே பிரபாகரனுக்கு விளங்கப்படுத்தியிருக்கலாம் தானே.
palli
//மாற்ருக்கருத்து பேசுவோரின் வதிவிட/பிரஜா உரிமை பறிகப்படும் எனச்சொன்னால் அவர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதைப் பார்த்தேன் என அடித்துச் சத்தியம் பண்ணுவதும் நடக்கும்.//சாந்தன்
ஜயோ ஜயோ மாற்று கருதாளர் பல பேருக்கு பல்லிபோல் விசாவே இல்லை என்பதுகூட சாந்தனுக்கு தெரியவில்லையா? இருந்தாலும் பயங்கரவாதிகள் மீதுதானே அரசுகள் கவனம் எடுக்கும்; இதில் மாற்று கருத்தாளர் அடிவாங்கி பளக்க பட்டவர்களே தவிர அடித்து பளக புலி விடுமா என்ன;
Kusumpu
இன்றும் தமிழீழம் தலைபோன ஈழம் என்று வரும் தேர்தல்களுக்கு போய் வேட்டுப்போடத் தமிழர்கள் இன்னும் தயாராகத்தான் இருக்கிறார்களா?
london boy
லண்டன் தேர்தலும் நோர்வேத் தேர்தலும் வித்தியாசமாயிருக்குதே? இங்கு வேட்பாளர் தெரிவு என்று நான் கேள்விப்படவில்லை. ஆனால் தமிழருக்குத் தமிழீழம் தேவையா இல்லையா என்றுதான் வாக்கெடுப்பு நடத்தப் போறாங்களாம்.
Kulan
//குலன், நீங்கள் உங்கட ஸ்ரைலில பொயின்ற் ஃபோமில (நீட்டி முழங்காமல்) ஏதாவது எழுதி இருப்பியள் எண்டு பார்த்தால் நம்பிக்கை வீண்போகேல்ல. ஆனால் வழக்கமாக பின்னூட்டம் விடுவோர் எழுதும் நக்கல்களை ‘..என் காதைக் கடித்த செய்திகள்…’ என நீங்கள் சொல்லிபோட்டியள்!!//
சாந்தன் நான் இந்தவடிவத்தைத் தெரிவு செய்வதற்குக் காரணம் கட்டுரையின் நீளத்தைக் குறைப்பதற்கே. எனது கருத்தைவிட நான் கேள்விப்பட்ட: பரந்து பட்ட கருத்துக்கள் தான் முக்கியம் என்று கருதுகிறேன். அதிலும் உங்களைப் போன்றோரின் பின்நோட்டங்கள் தானே மக்களின் கருத்தாக முடியும். ஆகவே உங்கள் கருந்துக்களைத் தொடர்ந்த எழுதுங்கள் சாந்தன்
Kusumbo
சந்தானம்!
//மே 18ல் மண்ணில் எவ்வாறு அழிக்கபட்டதோ அதேபோல புலத்தில் இந்தியாவும். அமெரிக்காவும் சேர்ந்து நுட்பமாக இவர்களது கட்டமைப்பை நொறுக்கியுள்ளனர்// எப்பபார்த்தாலும் அமெரிக்கா இந்தியா ரஸ்சியா சீனா. தமிழர்கள் யாருக்கும் சொந்த மூளையில்லையா? ஏன் மற்றவர்களின் மூளையில் வாழ வெளிக்கிடுகிறீர்கள். சுயபுத்தி இல்லாதவன் தான் மற்றவனின் மூளையில் தங்கியிருக்கிறான். மற்றவர்கள் செய்கிறார்கள் செய்கிறார்கள் என்று எம்மக்களை குறைத்துக் கணக்குப் போட்டு மந்தையாக்கியது போதும். ஊரில் வாழும் மக்களுக்கு என்ன வேணுமோ அது அவர்களுக்குத் தெரியும். தேவை என்றால் கேட்பார்கள் நாம் உதவி செய்யத்தயாராக இருந்தால் போதும். மக்களை மடையர்களாக்கி மந்தைகளாக்கி புலியும் பிரபாகரனும் செய்தது போதும். நாம் எமது காலில் நின்றுதான் போராடுகிறோம் என்று அங்குள்ள மக்களையும் புலம்பெயர் புண்ணாக்குகளையும் ஏமாற்றி அமெரிக்காவை நம்பி தம்பி நாசமறுந்தது போதும். மக்கள் தம்பசிக்கு தாமேதான் சாடப்பிட வேண்டும். நாமல்ல. மக்கள் நாடுவேண்டாம் என்றால் கூட அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் அல்லது நீங்கள் யார்? இன்று நாடுகடந்த தமிழ்ஈழம் என்றும் நாட்டுக் கொரு தமிழீழம் என்றும் திரிபவர்கள் நீர் கூறும் இந்திய அமெரிக்கரை விட எந்தவிதத்திலும் சிறந்தவர்கள் அல்லர். அங்குள்ள மக்களையும் இங்குள்ள மக்களையும் சுயமாகச் சிந்திக்க விடுங்கள்.
santhanam
நோர்வே தேர்தலின் முக்கிய நோக்கமே பழிவாங்கல் ஏன் என்றால் கேபியின் செல்வாக்கு இங்கு அதிகம் அவர்களை வெளியே துரோகியாக சித்தரித்துகொண்டு இங்கு பதவிக்கு ஆசைப்பட்டவர்களை கஷ்ரோ குறுப் வழைத்துபோட்டு அவர்களை முன்னிறுத்தி அதுவும் நவம்பர் 27க்கு முன் நடத்த வேண்டும் என்று சொல்லி இல்லாவிட்டால் இவர்களது முகம் கிளிக்கபட்டுவிடும் என்ற பயத்தினால் தங்களது கட்டமைப்பை நிலைநிறுத்த. இவற்களிற்கு தமிழ்மக்களை பற்றி கவலையில்லை தாம் நான் ஆக வாழ்ந்தால் கானும்
chandran.raja
//அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க நாங்கள்யார்? நீங்கள்யார்?// குசும்பு.
இதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். உங்கள் கருத்துகள் எல்லாம் உங்கள் வாழ்வோடு ஒட்டிய பித்தலாட்ட கருத்துக்களே! முடிந்தால் கல்வியைக் கொடுங்கள் மருந்தைக் கொடுங்கள். பணத்தை கொடுங்கள். பயன்யுள்ளதாக இருக்கும் நன்றியுடையவராக இருப்பார்கள். அமைதியான வாழ்வை அவர்களே தேடியாகவேண்டும். போராடவேண்டும் மென்றால் எப்படி? போராடவேண்டுமென்றும் புரிந்து கொள்வார்கள். அவர்கள் முட்டாள்களாக இருந்து விடப்போவதில்லை.
Kusumpo
//ஆனால் தமிழருக்குத் தமிழீழம் தேவையா இல்லையா என்றுதான் வாக்கெடுப்பு நடத்தப் போறாங்களாம்// அப்படி ஒரு தேர்தலை கி.பி அரவிந்தன் நோர்வேயில் நடத்தியதாக தேசத்தில்தான் வாசித்தேன். அது உங்களுக்குத் தெரியாதா லண்டன் போய்.லண்டன் என்றும் பின்னுக்குத்தான்
santhanam
//தமிழர்கள் யாருக்கும் சொந்த மூளையில்லையா? ஏன் மற்றவர்களின் மூளையில் வாழ வெளிக்கிடுகிறீர்கள்//
அது தான் தமிழன் பரதேசியாக நாடு நாடாக நடுக்கடலில் திரிகிறான் குசும்பு தமிழனிற்கு சுயபுத்தியிருக்கெண்டு எனக்கு தெரியாது தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் கற்பனையில் எமது மண்னை பற்றியும் விடுதலைபற்றியும் பேசும் போது ஆ என்று கேட்டிருக்கமாட்டோம் ஆனால் ஓன்று தெரியும் உலகநாட்டு ராஐதந்திரிகள் சொல்கிறார்கள் அமெரிக்கா; இந்தியாவிடம் தான் தமிழ்ழம் கேக்கட்டாம்.;
Kulan
சந்தானம்//நோர்வே தேர்தலின் முக்கிய நோக்கமே பழிவாங்கல் ஏன் என்றால் கேபியின் செல்வாக்கு இங்கு அதிகம் அவர்களை வெளியே துரோகியாக சித்தரித்துகொண்டு இங்கு பதவிக்கு ஆசைப்பட்டவர்களை கஷ்ரோ குறுப் வழைத்துபோட்டு அவர்களை முன்னிறுத்தி அதுவும் நவம்பர் 27க்கு முன் நடத்த வேண்டும் என்று சொல்லி இல்லாவிட்டால் இவர்களது முகம் கிளிக்கபட்டுவிடும் என்ற பயத்தினால் தங்களது கட்டமைப்பை நிலைநிறுத்த. இவற்களிற்கு தமிழ்மக்களை பற்றி கவலையில்லை தாம் நான் ஆக வாழ்ந்தால் கானும்// புலிகளின் அன்னை பூபதி பள்ளிக்கூடம் தற்போது கே.பியின் கையிலா? கஸ்ரொவின் கையிலா? தலைமை கேபியின் கையிலும் உள்தலைமைகள் கஸ்ரொவின் குழுவிடமும் என்றல்லவா நான் கேள்விப்பட்டேன். நாட்டுக்குள் தமிழீழம் குழுத்தான் இன்று கஸ்ரொவில் கையில் இருப்பதா? முகிலன் நெடியவன் எங்கே? இலங்கை அரசின் வெருட்டலுடன் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து விட்டார்களா? மாவீரர் தினத்தைக் கொண்டாடுவது யார்?
குகபிரசாதம்
கடந்த எழுபது வருடங்களாக இலங்கையில் அரசியல் வாதிகளுக்கு தங்களுடைய தனிப்பட்ட முன்னேற்றம்தான் எல்லாமும். தேசிய நோக்கம் என்பதெல்லாம் வெறும் கடைச் சரக்கு அவ்வளவுதான் எங்கெங்கு போனாலும் தாங்களே எப்போதும் புகழின் ஒளியில் இருக்கும் விதமாய் காரியங்களை ஏற்பாடு செய்யவும், பம்மாத்தில் தேர்ந்தவர்களாகவும் தம்மை வளர்த்தார்கள். கொலைகார முகங்களுக்கு வீரமுலாம் பூசினார்கள் . பாசிசச் சிந்தனையை புரட்சிகரமாக்கினார்கள் இத்தகைய அவர்களது ஏமாற்று வித்தைகள் ஊடகங்களால் பலப்படுத்தப்பட்டன தங்களைப் பின்பற்றுவோரின் பாதிப்பேரை முட்டாள்களாகவும், பாதிப்பேரை வேடதாரிகளாகவும் மாற்றி விட்டனர். தங்களது உச்ச நிலையை நிறுவுவதற்காக, பெரும் முதலைகளின் உதவியைப் பெற்றுக் கொண்டனர்.
மக்கள் இழந்தது ஒன்றும் ஒருநேரச் சோறும் ஒட்டுத்துணியுமல்ல. இழந்தது வாழ்வு. உங்களால் ஒருபோதும் திருப்பிக் கொடுக்க முடியாது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இனி இலங்கையில் ஒரு கொலை நடக்காமல் இருக்க வழி செய்வதே.
விடுதலைப்புலிகளது பாசிசச் செயற்பாடுகள் குறித்து எதிர்குரலை வெளிப்படுத்துவர்கள் தமது கைகள் இரத்தக் கறை படியாதவை என்று சொல்லி எங்கும் கொண்டோடிப் புதைக்க முடியாது.
யாழ்ப்பாணத்து அசோகா ஹோடேலும் இந்தியச் சவுக்கந்தோப்புக்களும், சுழிபுரம் சுடுமணலும் நாம் மறந்து விடமுடியாதவையாகத்தானே இன்னும் இருக்கிறது. நீங்கள் கடந்தகால கறைபடிந்த கைகளைக் களுவாது மக்களிடத்தில் எந்த முகத்துடன் போய் நிற்க முடியும் ?
santhanam
இதில் குலன் நீண்டபிரச்சனைகள் கனகாலமாக இருக்கிறது இவர்களிற்குள் குலுநிலைவாதம் பிரதேசவாதம் சாதித்துவவாதம் என்ற நிலையிலிருந்துதான் புலிகளிற்கு வேலைசெய்கிறார்கள் தாயகத்திலிருந்து எவ்வளவு ஆமிசாகிறர்கள் தாம் சார்ந்த தளபதிகள் என்ன சொல்கிறார்கள் அதைமட்டும் செய்துவந்தார்கள் இப்போது தலைமைத்துவத்தின் அழிவுக்கு பிறகு அடுத்தது என்ன என்று தெரியாது ஒருவர் மீது ஒருவரிற்குள் பெரியமுரண்பாடுகள் அதில் இப்போது தாங்கள் ஏதாவது ஒன்றை மண்சார்ந்து கையில்வைத்திருக்கவேண்டியநிர்ப்பந்தம் அதனால் தான் வட்டுக்கோட்டை மக்கள்அவை என்றுஊர்வலமாகதிரிகிறார்கள் அன்னை பூபதி யில் இருதரப்புமுள்ளனர் ஆனால் கேபிதரப்பு பலமாகவுள்ளது.முகிலன் நெடியவன் இவர்கள் மறைந்திருந்து இயக்குகிறார்கள் இப்போ தமிழ்நெற்குழுமம்தான் முன்னனி.
Kulan
குகப்பிரகாசம்! //நீங்கள் கடந்தகால கறைபடிந்த கைகளைக் களுவாது மக்களிடத்தில் எந்த முகத்துடன் போய் நிற்க முடியும் ?// இது ஒரு அருமையான கேள்வி.இதனால்தானே என்னவோ புலிகள் சரி என்றும் வட்டுக்கோட்டை முடிவே முடிவென்றும் ஓடித்திரிகிறார்களோ?
சந்தானம்! //குசும்பு தமிழனிற்கு சுயபுத்தியிருக்கெண்டு எனக்கு தெரியாது// இப்படிச் சொல்வது சரியல்ல. படித்தவர்கள் புத்திசாலிகள் இருக்கிறார்கள் இவர்களின் கருந்துக்களை வெளிவராமல் துப்பாக்கி கொண்டல்லவா முட்டாள் கூட்டங்கள் தடுத்துவிட்டன. அன்றைய தமிழ் அரசில்வாதிகள் குகப்பிரகாசம் சொன்னதுபோல் சுயநலத்திலும் குடும்ப அரசியலிலும் தான் கவனமாக இருந்தார்கள். பக்திவாதத்தின் உச்சக்கட்டம் மக்கள் நேயர்களைக் மக்களாலேயே இனங்காணப்படாது மறைக்கப்பட்டார்கள். இதன் விளைவைத்தானே மக்கள் இன்று சந்தித்திருக்கிறார்கள்.
palli
அரோகரா ஆண்டவுனுக்கல்ல அடங்கபிடாரிதனமாய் வாழ்ந்த மக்களை வாழ விடாத இயக்கமென்னும் ஜமனுகளுக்கு,
சரி முகுந்தன் எப்படி இறந்தார்? ஏன் கொல்லபட்டார்? இதில் யார் யார் பங்கு கொண்டார்கள்? முகுந்தனை கொலை செய்த மனிதர்கள் உத்தமரா? இவர்கள் தொடர்ந்தும் தமிழர் வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறார்களா? அல்லது ஏதோ ஒரு நாட்டில் குடியுரிமை எடுத்து கொண்டு பிள்ளைகளுக்கு மக்டோனாசில் சாப்பாடு தேடி திரிகிறார்களா? இதை ஏன் பல்லி கேக்கிறேன் எனில் தண்டனை கொடுக்கவும் தகுதிவேண்டும் என பல்லி நினைப்பது தப்பா? முகுந்தன் நல்லவரோ கெட்டவரோ எனக்கு தெரியாது; ஆனால் அவரை கொன்றவர்கள் அந்த அமைப்பை சரியான வழியில் கொண்டு செல்வது தானே நியாயம், ஆக தண்டனை கொடுக்கும் உத்தமர் கூட தமது நலன் சார்ந்துதான் சதிராடுகிறார்கள் என்பது தெளிவாகவில்லையா?
Chinnavan
தண்டனை கொடுப்பதால் மட்டும் சமூகம் திருந்திவிடுமா? இந்த உரிமையை யார் கொடுத்தது. பல்லி சொல்வதுதை ஏற்கிறேன். குற்றங்களுக்கெல்லாம் மரணதண்டனை தான் தீர்வு என்றால் தமிழர் இலங்கையில் இருக்க இயலாது. இதை ஏறக்குறைய நிறைவேற்றியவர் வேகாத பிரபாகரன். கிட்டத்தட்ட 50000 தமிழரைக் கொன்றிருக்கிறாரே. மீன்தலைகள் வெட்டினமாதிரி மனிதத்தலைகள் வெட்டப்பட்டன.
குகபிரசாதம்
நம்பிக்கை துரோக பிழைப்புவாத அரசியற் கட்சிகளான தமிழ் காங்கிரஸில் இருந்து தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு வரை தமது நாற்காலி கனவுகளுக்காக தமிழ் மக்களுக்கு வீராவேசம் ஏற்றிவிட்டு பின்னர் தமிழ் மக்களின் உரிமைகளை விற்று பிழைத்தனர் .
புலிகள் மற்ற இயங்கங்களை துப்பாக்கியால் ஒடுக்கி தமிழ் மக்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தி தொடர்ச்சியான தவறான ஏகபோக, ஜனநாய மறுப்பு, பாசிச செயற்பாடுகளால் போராட்டசக்திகளை அழித்தொழித்தனர். பிணக்கணக்குகள் தானே பிரபாகரனை தரித்திர நாயகனாக்கியது நாங்கள் இப்போ எதுவுமே இல்லாதவர்களாக நிர்க்கதியாக இருக்கிறோம்
நம்பி வந்த சகதமிழனின் முதுகில் சவாரி செய்தே நம்பிக்கை துரோகம் செய்வதில் வல்லவர் நாங்கள்.
நாடு கடந்த, நாடு கடக்காத, நாட்டுக்குள், ஈழம் என்று சொன்னால்தான் சவாரி தொடர முடியும்
மேளம்
//நாமும் ஒரு அவைதிறந்து புதிய தேர்தல் நடத்துவோமா?// குலன்.
நல்லவிசயம் குலன் மேளத்தின் வோட்டு தங்களுக்குத்தான்.அதுலதான் ஒரு சிக்கல்… மேளத்துக்கு இலங்கைப் பிரசாஉரிமை இல்லை…. அப்ப வோட்டுப் போடலாமோ? இந்த விசயத்துக்கு கொஞ்சம் விளக்கம் தந்தா மேளத்துக்கு மட்டுமில்லை புலம்பெயர் வாக்காளப் பெருமக்களுக்கும் கொஞ்சம் உதவியாய் இருக்கும். இண்டைக்குத்தான் தெரியும் நம்ம >பல்லி> வேட்டுப் போடலாம் எண்டு.
மேளம்.
santhanam
தமிழ்மக்களின் பகிடிவதை.
நோர்வேவாழ் ஈழத்தமிழர்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட நோர்வே ஈழத்தமிழ் மக்களவை, வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின்படி சுதந்திரமும் இறைமையும் மிக்க தமிழீழ அரசினை அமைப்பதற்காக நோர்வே நாடளாவிய ரீதியில் தொடர்ந்தியங்கும் நோர்வேத் தமிழ் நிறுவனங்களால் தெரிவு செய்யப்படும் நோர்வே தமிழீழ அமைப்புக்கள் தெரிவவை என இருபிரதிநிதிகள் குழுவைக் கொண்ட ஒரு ஜனநாயக அமைப்பே நோர்வே ஈழத்தமிழர் அவையாகும். இவ்வவையானது நோர்வே நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள தேர்தல்களின் மூலமாகத் தெரிவு செய்ய முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் தோற்றம் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் அமைந்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே தங்களது மாதிரியாப்பானது வரையப்பட்டுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட சகல வழிகளிலுமான தாயக மீட்புப் போராட்டமானது, தோல்வியைச் சந்தித்துள்ள இந்நேரத்தில் வேறு கோரிக்கைகளை முன்வைப்பதற்கு ஏன் நீங்கள் முயற்சிக்கக்கூடாது?
தாயகமீட்புப் போரானது அதன் நோக்கினை நோக்கித் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கின்றது. அதன் வேகத்தில் தளர்நிலைகள் ஏற்படுவதும் அந்நேரத்தில் எமைச் சூழ்ந்துள்ள அக, புறச் சூழ்நிலைகளை உள்வாங்கி அவற்றுக்கேற்ப ராஜதந்திர ரீதியில் காய்களை நகர்த்தி வேகமாகத் தொடர்வதும் எமது கடந்தகாலப் போராட்ட வரலாற்றை உற்று நோக்கியவர்களுக்குத் தெளிவாகப் புரியும். எனவே தாயக மீட்புப் போரானது தோற்றுவிட்டது என்ற தங்கள் கருத்தை ஏற்கமுடியாது. அத்துடன் நோர்வேவாழ் ஈழத்தமிழர்களில் 99 வீதமான மக்களால் மீளுறுதிப்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தவிர வேறுதீர்வினை அடிப்படையாகக் கொண்டு யாப்பினை உருவாக்கும் அதிகாரமும் எம்மிடம் இருக்கவில்லை. எனினும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற நோர்வே ஈழத்தமிழர் அவையின் மூன்றில் இரண்டு பிரதிநிதிகள் விரும்பும் பட்சத்தில் புதிய யாப்பினை உருவாக்கிக் கொள்வதில் தடைகளேதும் இல்லை.
jimmy
/மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற நோர்வே ஈழத்தமிழர் அவையின் மூன்றில் இரண்டு பிரதிநிதிகள் விரும்பும் பட்சத்தில் புதிய யாப்பினை உருவாக்கிக் கொள்வதில் தடைகளேதும் இல்லை.//பகிடிவதை
/இனிமேல் நாலுபேர் சேர்ந்து தேர்தல் நடத்தி 3வோட்டு விழுந்தால் 75சதவீத வெற்றி.// குலன்
Kulan
//அதுலதான் ஒரு சிக்கல்… மேளத்துக்கு இலங்கைப் பிரசாஉரிமை இல்லை…. அப்ப வோட்டுப் போடலாமோ? //
மேளம்!!நிச்சயம் போடலாமாம். அடிப்படையில் நீங்கள் இலங்கைத் தமிழராகவோ அல்லது இலங்கைத் தமிழருக்குப் பிறந்தவாராகவோ இருந்தால் உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டாம். கோட்டுப் போட்டவர்களுக்கெல்லாம் வேட்டுப்போட்டே நாட்டைக் கோட்டை விட்டு கூட்டமையா நாங்கள்.
Kulan
குகப்பிரகாசம்! //நாடு கடந்த நாடு, கடக்காத, நாட்டுக்குள், ஈழம் என்று சொன்னால்தான் சவாரி தொடர முடியும்// அருமை இதுதான் உண்மை. நீங்கள் கூறியதுபோல் பிரபாகரன் சரித்திரநாயகன் அல்ல தரித்திர நாயகனே.
Kusumpu
சந்தானம்…//கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட சகல வழிகளிலுமான தாயக மீட்புப் போராட்டமானதுஇ தோல்வியைச் சந்தித்துள்ள இந்நேரத்தில் வேறு கோரிக்கைகளை முன்வைப்பதற்கு ஏன் நீங்கள் முயற்சிக்கக்கூடாது?// பானையிலை இருந்தால் தானே அகப்பபையிலை வரும்:
//ராஜதந்திர ரீதியில் காய்களை நகர்த்தி வேகமாகத் தொடர்வதும் எமது கடந்தகாலப் போராட்ட வரலாற்றை உற்று நோக்கியவர்களுக்குத் தெளிவாகப் புரியும்.// இது உண்மையான வரவேற்கப்பட்டக் கூடிய கருத்தே. போராட்டம் என்றும் இருந்து கொண்டுதான் இருக்கும். தமிழீழப்போராட்டமும் பயங்கரவாதமும் தோல்வி கண்டதே ஒழிய போராட்டம் தொடரும் தொடரவேண்டம். ஆயுதம் தூக்கிப் போராடுவதுதான் போராட்டம் எனும் மாயையை புலிகள் ஏற்படுத்தியிருந்தார்கள். சாதாரண தம் உரிமைகளை வலியுறுத்தி நடத்தும் ஊர்வலங்கள் கூடப் போராட்டம் தான்.
Chinnavan
அரியாலை வாசிகளும் யாழ்பாணக் கரையூர் வாசிகளும் சாவகச்சேரி வாசிகளும்தான் நோர்வேயில் வட்டுக்கோட்டையை வாசிக்கிறார்களாமே. பெரும்பான்மை அவர்கள்தானாமே. இப்படி நோர்வே தொலைபேசி ஒன்று தொண தொண தொணத்தது. சந்தானம் நீங்கள் துல்லிதமாக தேர்தல் விஷயங்களைச் சொல்கிறீர்களே. நீங்கள் என்ன வாசியே தெரியாது. நான் சிங்கராசி நான் புலிராசியில்லை.
santhanam
நீங்கள் என்ன வாசியே தெரியாது// விடுதலைக்குவித்திட்ட பரம்மரை
ஈழத்திலும் இங்கும் நாளும் நம்மவர்
வாழத்தகுந்தவை வகுத்திட ஈழத்தமிழரவை
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 16 வயதுக்கு மேற்பட்ட நோர்வேவாழ் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் அல்லது மேற்குறிப்பிடப்பட்டவர்களை சட்டரீதியான வாழ்க்கைத் துணைவர்களாகக் கொண்டவர்கள் வாக்களிக்கும் தகுதி பெறுவார்கள். இவ்வமைப்புக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலைப் பக்கசார்பற்ற விதத்தில் நடத்தும்படி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மீள்வாக்களிப்பின் தேர்தற்குழுவாகப் பணியாற்றிய தேர்தற்குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பாளர்களாகத் தமிழர்கள் அல்லாத தேர்தல்கள் நடத்துவதில் அனுபவம் பெற்ற. நிபுணர்கள் குழுவொன்று பணிபுரியும். தேர்தலில் பங்குபெறும் வேட்பாளர்களின் பெயர்களடங்கிய வாக்குச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு வாக்களிப்பானது, இரகசியமான முறையில் நடைபெறும்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளுடன் இணைந்து செயற்படல் என்ற விடயத்தையும் எமது யாப்பிலேயே நாம் கொண்டிருக்கின்றோம் என்பதனை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விழைகின்றோம். மேலும் உலகத் தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம், நோர்வே ஈழத்தமிழர் அவை முதலான அமைப்புகளின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே தாம் தமக்குள் எவ்வடிப்படையில் இணைந்து செயற்படுவதென்பதனை முடிவு செய்வார்கள். ஜனநாயக ரீதியில் தேர்தல்கள் மூலம் உருவாக்கப்படும் புதிய நாடளாவிய கட்டமைப்புக்களை தாமும் வரவேற்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளரான திரு வி. உருத்திரகுமாரன் அவர்கள், பத்திரிகை அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
ஆம் ஒருவர் விரும்பினால் இரண்டு அவைக்கான தேர்தலிலும் போட்டியிடலாம்.
ஆனால் நோர்வே ஈழத்தமிழ் மக்களவையில் போட்டியிடும் ஒருவர் தேசியரிதீ (யேளதழயெடவ) அல்லது பிராந்தியரீதி (சுநபழையெடவ) ஆகிய ஏதாவது ஒன்றில் தான்
மிகவும் நல்ல கேள்வி மட்டுமல்ல, பலராலும் கேட்கப்படுகின்ற கேள்வியும் இதுதான். 1950களில் இருந்து பண்டா – செல்வா, டட்லி – செல்வா, சிறீமா – செல்வா புரிந்துணர்வு எனப்பலவகையான குறைந்த பட்சக் கோரிக்கைகள் கொண்ட தமிழருக்கான தீர்வுத்திட்டங்கள் தோல்வி கண்டதால்தான் தந்தை செல்வநாயகம் அவர்கள் இறுதியாகத் தமிழீழக் கோரிக்கைக்கு 1976இல் சென்றார். 1980களிலும் இப்படியான கேள்விகள் எழுந்திருந்தன. அதனால்தான் குறைந்த பட்சத் தீர்வுகள் அடங்கியிருந்த மாவட்ட சபையை 1981ஆம் ஆண்டிலும், மாகாண சபையை 1987ஆம் ஆண்டிலும் தமிழர் பிரதிநிதிகள் ஏற்றனர். ஆனால் மாவட்டசபைக்கும், மாகாண சபைக்கும் என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும். ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சரே தங்களிடம் எந்தவித அதிகாரமும் இல்லை எனக்கூறுவதும் தங்களைப் போன்றவர்கள் அறியாததல்ல. தமிழீழத்துக்குக் குறைவாக எதனைக் கேட்டாலும் அதனை உடனடியாக இலங்கை அரசானது தந்துவிடும் என்பது போன்ற ஒரு பிரமையைச் சிலர் அன்றும் தோற்றுவித்திருந்தனர். இன்றும் தோற்றுவிக்கின்றனர். தமிழீழக் கோரிக்கையானது நியாயமற்றது என்றால், தமிழர்களுக்குரிய தீர்வினை இலங்கை அரசு முன்வைக்கட்டும் அதனைப் பரிசீலனை செய்யத் தமிழர் பிரதிநிதிகள் தயாராகத் தான் இருக்கின்றார்கள்
palli
//தண்டனை கொடுப்பதால் மட்டும் சமூகம் திருந்திவிடுமா? இந்த உரிமையை யார் கொடுத்தது. //
தம்பி சின்னவா ஏதோ பல்லிதான் போய் உமாவை தூக்கி போட்டு மிதித்து கொண்ணது மாதிரி என்னை கலாய்க்கிறியள், எட அவரை
சுட்டனீங்களாவது அந்த அமைப்பை வழிநடத்தினீங்களா என்பது தானே எனது முறுகலும்;
அதுசரி இந்த வட்டுகோட்டை வட்டுகோட்டை என பயம்காட்டுகிறார்களே அப்படி என்னதான் வட்டுகோட்டையில் நடந்தது, வெறும் தீர்மானத்தை சொல்லிய வட்டுகோட்டையை தலைநகராய் உதயமாக நினைக்கும் டமில் ஈலம்: ஏன்…. திம்பி பேச்சு, டெல்லி பேச்சு, டெல்லி மேல் மட்ட பேச்சு, ஜெனிபா பேச்சு, நோர்வே பேச்சு, நெல்சன் மட்டலோவின் ஆலோசனை, ஆகாஸியின் அர்த்தமுள்ள சந்திப்புகள், தாயாலாந்தில் சிலநாள்கள்; ஜேர்மனிலும் பேசினார்கள், கனடாவில் சந்திக்கவில்லையா; கிளினொச்சியில் ஊடகவியாளர் ஏசினார்களே, எம்ஜிஆர் கூப்பிட்டு சொன்னாரே, அமைதிபடை ஆயுத ஒப்படைப்பு(புருடா) இலங்கை இந்தய ஒப்பந்தம் இப்படி எந்தனையோ விடயங்கள் எம் கண்முன்னே நடந்தும் எதுக்கும் அசையாத புலி தான் சம்பந்தபடாத வட்டுகோட்டையில் பாக்கு நல்லவிலை என்பது பல்லிபோல் பலர் இருப்பதை மறந்தா? அல்லது மறந்து விட்டோம் என்னும் கிறுக்குதனத்திலா?? சத்தியமாக சொல்லுகிறேன் வட்டுகோட்டையில் என்ன நடந்தது என எனக்கு தெரியாது, ஆனால் அதன்பின் நான் கூறிய அனைத்து பேச்சிலும் தமிழருக்கு ஒரு விடிவை ஏற்படுத்தி இருக்கலாம், தமது சுயநலம் இல்லாதிருந்தால்; இது அனைத்தும் எம் கண்முன்னே நடந்தது என்பதை பல்லி இங்கு சுட்டி காட்டுகிறேன்;
santhanam
அது சரி யார் பல்லி அந்த தலைமைசெயலகம் ஓரு தரப்பு அது பொய்யறிக்கையென்று யாழில் வம்பளக்கிறார்கள் பல்லி
மேளம்
//அல்லது மேற்குறிப்பிடப்பட்டவர்களை சட்டரீதியான வாழ்க்கைத் துணைவர்களாகக் கொண்டவர்கள் வாக்களிக்கும் தகுதி பெறுவார்கள்.// (நாடுகடத்திய “அசயில்” தமிழீழ யாப்பு.) அப்ப இந்த சரத்தப்பார்த்தா… இது புதுசா இந்த ரணிலோட தேன்னிலவு நடத்தின காலத்தில இந்தப்பக்கம் வந்து “ஐரோப்பா” இங்குள்ள பொம்பிளயள… பேச்சுத் திருமணம்.. பொறுப்பாளர் திருமணம்… அந்தத் திருமணம்… இந்தத் திருமணம் எண்டு செஞ்சி இருக்கிற… மிஞ்சியிருக்கிற…. மாவீரர்களுக்கான சரத்துப் போலல்லோ இருக்கு.
மேளம்
ravi
இணைய வானோலியில் இனியொரு பிரச்சனை வரும் என்ற பயத்தில > வன்னிக்கு போக விருப்பம் இல்ல எனச் சொல்லும் போது……
பறுவதம்பாட்டி
அட எங்களுக்கு தமிழீழம் வாங்கித்தரப் போகினமாம். இங்கையிருந்து உரிமைக்கு அடிபடுகிறதை விட்டுட்டு நோர்வேயிலை போயிருந்து கொண்டு வயோதிப இல்லங்களிலை நோர்வேயியன்களைப் பராமரித்தும் படிபடியாக ஏறியிறங்கி கக்கூசு களுவிறவர்ளும் அங்கு ஜனநாயகமாக வாழ்கின்றார்களாம். அவர்கள் அங்கு சுதந்திரத்திற்காகப் போராடிய மகாத்மாக்கள். இனி எங்களுக்கு தமிழீழம் பெற்றுத்தரப் போகிறார்களாம். மாத்தையா கருணா அம்மான் பிள்ளையான் தயா மாஸ்டர் ஜோர்ஜ்மாஸ்டர் பாப்பா அண்ணர் தமிழினி அக்கா கே.பி இவர்களெல்லாம் காட்டிக்கொடுத்து சோரம் போய்விட்டார்களாம். நெடியவனையும் முகிலவனையும் நம்பலாமாம் அவங்க வெள்ளைக் கொடி பிடிக்கமாட்டாங்களாம். முள்ளி வாய்க்காலிலை அப்பாவிகள் உயிர்கள் மேலே ராஜபக்சவும் கோத்தபாயாவும் இராடசதக் குண்டுகளை போட்டு கொன்று குவிக்கையில் மக்களுக்காக குரல் கொடுக்காமல் முருகக் கடவுள் அவர் காப்பாற்றப்பட வேண்டும் என்று எவரது கதையையும் கேளாது கத்தினீர்களே. கடைசியிலை முருகக்கடவுளே ஜயப்பா சரணம் சரண்டர் ஜயப்பா என சரணடைந்தாரே இதற்கு மேலுமா புத்திவரவில்லை.. சொறி அது இருந்தால்தானே வாறதற்கு. ஏதோ எதைச் சொல்லியும் பிரயோசனமில்லை. கிடைக்கிறதுகளிலை எங்களுக்கும் கொஞ்சத்தை அனுப்பி வைத்திங்களென்றால் கொஞச புண்ணியமாவது உங்கடை பிள்ளைகளுக்காவது சேரும். வாழ்க தமிழீழம் வளர்க நோர்வெ தமிழீழம். எட்டுத்திக்கும் உங்கள் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்.
palli
//அது சரி யார் பல்லி அந்த தலைமைசெயலகம் ஓரு தரப்பு அது பொய்யறிக்கையென்று யாழில் வம்பளக்கிறார்கள் பல்லி//
பல்லியின் பலனின்படி கண்டிப்பாக பல்லியோ சந்தானமோ இல்லை; இல்லை;
வடிவேலு
ஜயா வாங்க அம்மா வாங்க தம்பி தங்கைச்சி எல்லோரும் வாங்க, நாங்கதான் சிலோனிலை தமிழிழத்தை பெற்றுக் கொடுக்கப்போற ஆட்கள். உங்கடை வோர்ட்டுக்களை அள்ளித்தாங்கோ, நீங்கள் போட்டாலென்ன போடாவிட்டாலென்ன நாங்கள்தான் 99 வீதம் பெற்று தெரிவு செய்யப்படப்போறோம். யாரிடம் கோட்டு வாங்கிகொடுப்பது என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஜயா வாங்க அம்மா வாங்க நீங்கள் போட்டாலென்ன போடாவிட்டாலென்ன நாங்கள்தான் 99 வீதம்.
kusumbo
/இதற்கு மேலுமா புத்திவரவில்லை.. சொறி அது இருந்தால்தானே வாறதற்கு. ஏதோ எதைச் சொல்லியும் பிரயோசனமில்லை. கிடைக்கிறதுகளிலை எங்களுக்கும் கொஞ்சத்தை அனுப்பி வைத்திங்களென்றால் கொஞச புண்ணியமாவது உங்கடை பிள்ளைகளுக்காவது சேரும். வாழ்க தமிழீழம் வளர்க நோர்வெ தமிழீழம். எட்டுத்திக்கும் உங்கள் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்/- பறுவதப்பாட்டி:- பாட்டி எண்டானாம் பாட்டி. நச்சென்று சொன்னியள் பாட்டி. புலிக்குட்டிகளென்ன புலிப்பினாமிகளும் கிட்டவரோலாது பாருங்கே. என்ன சொகுசாக் காசுபிடுங்கப் பழக்ட்டாங்கள் பாட்டி. பெரிசு போகேக்ககை பழக்கி விட்டுப்போன விசயத்தை உடனடியாக மறக்க ஏலுமோ? தேசியத்தலைமை பாட்டி தேசம் கெட்டுத்திரியுது.
Chinnavan
சரியாச் சொன்னீர்கள் வடிவேலு.நாங்களும் சேர்ந்து ஒரு 10பேர் தேர்தல் நடத்திவிட்டு நாம் வாழும் நாடுகளின் நாம் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட தமிழர்களின் பிரதி நிதிகள் என்று அரசிடன் உதவிப்பணம் பெறலாம். உப்பிடித்தான் நோவேயிலை தமிழர்கள் எண்ணமுடியாத அளவு அமைப்புகளைக் வைத்துக் கொண்ட அப்பாவி நோவே அரசிடம் பணம் கறக்கிறார்கள் தெரியுமா? தமிழ்நெட் இயக்குணரும் தமிழ்நெட்டைச்சாட்டி நோர்வே அரசிடம் காசு பிடுங்கும் ஒருவர்தான் இதற்கு முன்னின்று ஒழுங்குகளைச் செய்கிறாராம். இவங்களுக்குத்தான் தெரியும் எங்கே காசு பிடுங்கிறது என்று
Kulan
நோர்வேயில் இன்று நாடுதழுவிய நாடுகடந்த நாட்டுக்குள் தமிழ்ஈழத்துக்கான தேர்தல் நடக்கிறதாம். அங்கே இருவகையான வேட்பாளர்கள் நிற்கிறார்களாம். பிராந்திய: தேசிய என இரண்டு பிரிவகள் உள்ளனவாம். மூளையறுந்த முட்டாளுகள் சில வேட்டுப்போடுகிறார்கள் என்று நோர்வே செய்திகள் வருகின்றன. கிளடுகட்டைகளையும் எழுப்பி இழுத்துக் கொண்டு போய் போடுகிறார்களாம். வெளிநாட்டுப் புலிப்புண்ணாக்குகள் என்றும் இலங்கையிலுள்ள தமிழனை வாழவிடமாட்டான். தமக்கு ஈழம் வேட்டுமா வேண்டாமா என்று தீர்மானிப்பவர்கள் அங்குள்ள மக்கள் மட்டும் தான். புலத்திலுள்ளவர்களுக்கு பெயர் கெளரவம் வேண்டும் அதற்காக அங்குள்ள மக்களின் தலைகளை உருட்டுகிறார்கள். என்ன செய்யலாம்.
palli
குலன் உங்கள் நிலமை எனக்கு புரிகிறது;
புலம்பெயர் தேசத்தில்:
கேக்குறார்கள் வோட்டு;
வேண்டுமா ஈழம்;
வேண்டாமா ஈழமென;
போடுவார்கள் வோட்டு;
புலியால் பிழைத்தவர்கள்;
வேண்டும் ஈழம் என;
வேண்டாத ஈழத்துக்காய்;
செல்லாத வோட்டுக்களாய்;
போடாத வோட்டுக்களை;
வியாபாரிகள் என்பதால்;
கணக்கினை முடிப்பார்கள்;
வன்னி முகாமிலே;
நடக்கட்டும் வோடொருநாள்;
கேடு கெட்ட பினாமிகளின்;
கேட்பார் அற்ற ஈழம் பற்றி;
ஈழம் வேண்டுமென
இன்பமாய் வோட்டழிப்போர்,
வன்னியை வாழ விடார்,
தாம் மட்டும் வாழ்ந்துடுவார்,
நாடு கடந்த ஈழமே
வாழ்க நீ பிழைப்புக்காய்;
இன்றய ஓட்டு பதிவில்
என்னோட்டு செல்லாதோ;
santhanam
நோர்வேயில் வேடிக்கை வினோதம் இன்று தேர்தல் அதில் நிற்பவரிற்கு தெரியாது தான் ஏன் நிற்கிறேன் என்று. வீடுகளிற்கு வாக்கு கேட்க சென்றவிடத்தில் கேக்கபட்ட கேள்விகளிற்கு பதிலில்லை. என்ன கொள்கையென்றால் மெளனம். திருமணம் பிறந்தநாள் அழைப்பிதழ்போல வாக்குக்கு அழைப்பிதல். அவர்கள் எந்தவிடத்திலிருந்து வந்தார்களோ அதேயிடத்தில்தான் நிற்கிறார்கள் ஓன்று அனைத்து வேட்பாளரும் பூர்வீகம் யாழ்ப்பாணம்.
மாயா
இனி இது தேவையா? அமிரோடு முடியும் என நினைத்தோம். தம்பியோடு முடியும் என நினைத்தோம். என்னவோ யாரோ ஆட்டுவிக்கிறார்கள். இவர்கள் போடுகிறார்கள். புலன் பெயர்ந்தாலும் புலன் அற்ற மனிதர்கள்.
chandran.raja
தேர்தல் நடக்கிறதோ இல்லையோ புள்ளடி போடுகிறர்களோ இல்லையோ வடிவேலு சொன்னமாதிரி தேர்தல் முடிவு 99 வீதமக்கள் தம் பக்கம் என்று முடிவு வரும். தேர்தலின் உண்மையான நோக்கம் புலத்தில் இருக்கிற அசையும் சொத்துக்கள் அசையா சொத்துகள் யார் அபகரிப்பது என்பது பற்றியதே. இது புலிப்பினாமிகளது ரகசிய உடன்படிக்கை. புலிகளுக்கு தேசம்நெற்றில் யாரும் எந்த நடவடிக்கும் பாராட்டு தெரிவிப்பதில்லை. இருந்தால் மிகமிகக் குறைவே!இந்த ரகசியஉடன்படிக்காக நடைபெறுகிற தேர்தலுக்கா ஜனநாயக வழியைத் தேர்ந்தெடுத்துக்காகவாயினும் பாராட்டுவோம். அது தமிழ்மக்களின் சொத்துத்தானே என்று நீங்கள் யாராவது கேள்வி கேட்டால் என்னிடம் அதற்கு பதில்இல்லை.
MBBS
இந்த தேர்தல் முடிவு நோர்வே புலிகளுக்கு ஒரு பதிலை சொல்லும் அதாவது 90 வீதமான நோர்வே மக்கள் இந்த நோர்வே புலிகளை புறக்கனிப்பதாக தமது வாக்குகளை புறக்கனித்துள்ளதாக அறியமுடிகிறது.
மாயா
//MBBS on November 15, 2009 7:38 pm இந்த தேர்தல் முடிவு நோர்வே புலிகளுக்கு ஒரு பதிலை சொல்லும் அதாவது 90 வீதமான நோர்வே மக்கள் இந்த நோர்வே புலிகளை புறக்கனிப்பதாக தமது வாக்குகளை புறக்கனித்துள்ளதாக அறியமுடிகிறது.//
நல்ல திருப்பம்.
Kusumpu
மாயா எம்பிபிஎஸ் சொன்னது சரியாக இருக்கிறதோ இல்லையே ஏதோ ஒரு கொஞ்சமாவது போய் போட்டிருக்கிறார்களே எனும் போது எந்தத் தமிழன் எப்போ திருந்துவான். இவ்வளவு நடந்தும் கூட… சீ… சீ… கேவலம்.
Kusumbu
சந்தானம் நேற்று எப்படி ஈழத்தேர்தல் நடந்து முடிந்தது நாடுகடந்த: நாட்டுக்குள் தமிழ்ஈழத்தேர்தல். ஆவலுடன் எதிர்பாத்திருக்கிறோம். பலர்போய் வாக்குப் போட்டதாகச் சொல்கிறார்கள். எல்லாருக்கும் வாக்கு மாறிப்போச்சு போலை கிடக்கு. வாக்கும் போய் நாக்கும் போய் இனி என்ன என்ன எல்லாம் போகப்போகிறதோ
Kulan
பல்லி! எனக்குக் உங்களைப்போல் கவிதை எழுதவராது. ஏன் இந்த விசப்பரீட்சை என்று எண்ணிக்கோண்டு என் போக்கிலேயே எழுதுகிறேன்.//வேண்டுமா ஈழம்; வேண்டாமா ஈழமென்// வேண்டுமா வேண்டாமா என்று கி பி கேட்டதுடன் போய்விட்டது. இப்போ கிபியே சொல்கிறாராம் தமிழீழம் சாத்தியம் இல்லை என்று. நோர்வேயில் நடக்கும் தேர்தல் நாட்டுக்குள் தமிழ்ஈழம் நாடுகடந்த தமிழஈழம் என்பதே ஆகும். இலங்கையில் தமிழீழம் கிடைக்காது போனதால் நாட்டுக்கு ஒவ்வோரு தமிழீழம் காணப்போகிறார்கள் போல் இருக்கிறது.
தேர்தல் பெரும் செலவில் நடந்திருக்கிறது. அதற்கான பணம் எப்படிக்கிடைத்தது என்பதை யாரும் கேட்கவில்லை. இதைக்காட்டி நேர்வே அரசாங்கத்தில் காசு பிடுங்கலாமாம். தமிழ்நெற் நடத்தும் ஜெயச்சந்திரன் எப்பவருக்கு எப்படி நோர்வே அரசிடம் காசு பிடுங்கலாம் என்பது அத்துபடியாம். கையில் ஒன்றும் இல்லாமலா இவ்வளவு காலமும் தமிழ் நெட் நடத்துகிறார். நான் வாழும் நாட்டில் இப்படியெல்லாம் காசு எடுக்க ஏராலாது. நோவேய் காரர்கள் சொன்ன போது எனக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை. இப்பகூட எனக்கு எப்படி உருட்டிப்பிரட்டி அரசிடம் பணம் பிடுங்குவது தெரியவில்லை சொன்னார்கள் நம்புகிறேன்.
santhanam
நோர்வே தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக ஈழத் தமிழரவை எனும் பெயரில்
செயற்படும் புலிகள் நோர்வேயில் தமிழீழத்தை அங்கீகரிக்கும் தேர்தல் நாடகம் ஒன்றை நடாத்தியிருந்தனர். இந் நாடகத்தின் நோக்கம் தமிழீழத்திற்கான நோர்வே நாட்டுப் பிரதிநிதிகளை தெரிவு செய்வது என கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு பல மாதங்களாக பூச்சாண்டி காட்டி நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தேர்தலை 83 சதவீத நோர்வே வாழ் மக்கள் நிராகரித்துள்ளனர். நோர்வேயில் 27000 தமிழ் மக்கள் வாழ்கின்றபோதிலும் தேர்தல் ஏற்பாட்டாளர்களின் விதிமுறைகளின் அடிப்படையில் இத்தேர்தலில் பங்கு கொள்ள சுமார் 20000 தமிழ் மக்கள் வக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இத்தேர்தலில் 2677 மக்களே வாக்களித்துள்ளனர். இதன் பொருட்டு சுமார் 17 வீத மக்கள் வாக்களித்துள்ளனர். அதாவது தமிழ் மக்கள் புலிகளின் நாடுகடந்த அரசியல் அல்லது செயற்பாடுகளை முற்று முழுதாக நோர்வே வாழ் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதை இத்தேர்தல் எடுத்துக்காட்டியிருக்கின்றது.
இதேநேரம் புலிகளின் ஒருதொகுதியினர் மக்களை மிரட்டிய காரணத்தினாலேயே மக்கள் வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை என தேர்லை நாடத்திய புலிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தத்தில் புலிகளின் உள்முரண்பாடுகள் நாடுகடந்த தமிழீழம் என்கின்ற விடயத்தை ஆதரிக்கும் மக்களுக்கு மிகுந்த தலையிடியை கொடுக்கும் என்பதுடன் இவ்விடயங்களில் பங்கெடுக்கும் தமிழர் ஏதோ ஒரு தரப்பினரால் இலக்கு வைக்கப்படலாம் என நம்பப்படுகின்றது
Kulan
இந்த 17சதவீதத்திலும் முகத்துக்கஞ்சி விபச்சாரம் செய்தவர்கள்தான் அதிகம் என்று அறிகிறேன். நான் தற்போது நோர்வேயில்தான் நிற்கிறேன். அவரை எனக்கு நன்றாகத் தெரியும் போடாவிட்டால் கோவிப்பார்… அவ உனக்கு உதவி செய்தவ… சரியில்லை அங்கை உள்ள மக்கள் கஸ்டப்படுகினம் எதாவது ஒரு முடிவு வேணும் தானே என்று கதைக்கிறார்கள். தேர்தல் எதற்காக நடந்தது எது என்ன என்ற ஒன்றும் வேட்டுப்போட்ட பலருக்குத் தெரியாது. தமிழர்கள் சுயமாகச் சிந்திக்கக் கூடாதவாறே புலிகள் மக்களை புலத்திலும் ஆக்கிவைத்திருக்கிறார்கள். வெகு விரையில் தேசம் இதுபற்றி தனித்தனியக் கிழிக்கிறமாதிரி தேசத்தில் ஒரு கட்டுரை ஏறும்
palli
//வெகு விரையில் தேசம் இதுபற்றி தனித்தனியக் கிழிக்கிறமாதிரி தேசத்தில் ஒரு கட்டுரை ஏறும்//
இதுக்கேன் தாமதம் எழுதுங்க குலன்;
BC
// Kulan -தமிழர்கள் சுயமாகச் சிந்திக்கக் கூடாதவாறே புலிகள் மக்களை புலத்திலும் ஆக்கிவைத்திருக்கிறார்கள்.//
அது தான் வறுகுவதற்கு வசதியான இரகசியம்.
santhanam
இதுக்கேன் தாமதம் எழுதுங்கட??/ பல்லி உங்களிற்குதான் உள்வீட்டு இரகசியம் தெரியும் மாபிய கும்பலைபற்றி.
palli
சந்தானம் உள்வீட்டு ரகசியம் தெரியும் அளவுக்கு துணிவு கிடையாது, அதுதான் பல்லியாய் ஊர்வதில் தெரியவில்லையா? ஆனாலும் உங்கள் ஆர்வம் ஏதோ தங்களிடம் மொத்தமாய் இருப்பதை காட்டுகிறது, விடுங்க தேசத்தில் ஆமா போட பல்லியும் வருகிறேன்;