யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் போட்டி

epdp.jpgஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை நாடாளுமன்றத் தோ்தலில் தமது கட்சி வீணைச்சின்னத்திலேயே போட்டியிடும் எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வெற்றிலைச் சின்னத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

20 Comments

 • rohan
  rohan

  டக்ளஸ் தோழருக்கு வந்த காலம்!

  Reply
 • rasaththi
  rasaththi

  டக்ளஸ் தோழருக்கு வசந்த காலம்!

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  கடலில் கம்பளி மூட்டையென்று நினைத்து, கரடியைப் பிடித்த கதை தான் ஞாபகம் வருகின்றது. தோழர் விட நினைத்தாலும் கரடி விடாது.

  Reply
 • Appu hammy
  Appu hammy

  Oh! Mr D.D, are you learning the taste of Srilanka politics in a hard way? This is Democracy in paradise!!! Get used to it?

  Reply
 • பல்லி
  பல்லி

  தோழர் எதிர்பார்த்தது தவறி அரசு எதிர்பார்க்காதது நடக்குது, தோழர் இந்த தேர்தலில் தோற்றால் தோழர் டக்கிளஸாய் சுகந்திர கட்ச்சியில் சுகந்திரம் இல்லாமல் இனைய வேண்டி வரலாம்;

  Reply
 • மேளம்
  மேளம்

  இரண்டு கிழமைக்குமுன் மேளம் சொன்னது தோழர் வீணையை கொண்டு மகிந்தாவின் கொட்டிலுக்குள்ள ஒளிப்பார் எண்டு…. நடந்திருக்கிறது…. தற்போதய சங்கதி எலக்சன் முடிந்தாப்போல எல்லாத்தயும் விட்டுவிட்டு … “டக்ளசானந்தாஜி மாராஜாஜி” ஆகப்போறாராம்.. முடிவளருதாம் முற்றும் துறப்பதற்காக… .

  மேளம்

  Reply
 • rohan
  rohan

  பல்லி //தோழர் இந்த தேர்தலில் தோற்றால் தோழர் டக்கிளஸாய் சுகந்திர கட்ச்சியில் சுகந்திரம் இல்லாமல் இனைய வேண்டி வரலாம்//

  தோத்துப் போன தோழரை வச்சு ராஜபக்ச என்ன தான் செய்யப் போறார்?

  Reply
 • NANTHA
  NANTHA

  பொன்சேகாவின் “அன்னத்துக்கு” வாக்கு கேட்டவர்களும் போட்டவர்களும் இப்போது “அன்னக் காவடிகளாகியுள்ள” நிலையில் டக்லஸ் ஒன்றும் இழக்கப் போவதில்லை. தவிர “புலிகளால்” நியமிக்கப்பட்டவர்களை சம்பந்தர் துரத்தி இருக்கிறார். புலி என்றால் வாக்கு கிடைக்காது என்ற பயம் பெருகியுள்ளது.

  டக்லஸ் பாராளுமன்றம் போவதை தடுக்க யாரும் இல்லை. வெற்றிலைக்கு வாக்கு போடாமல் விட்டதையும் அதன் பலனையும் தமிழர்கள் உணர்ந்துள்ளனர்.

  Reply
 • santhanam
  santhanam

  அண்மையில் தோழரின் நண்பர் யாழ் சென்றுவந்தார் அவருடன் கதைத்தபோது தோழர் சரியாக குழம்பிவிட்டாராம் ஏன் என்றால் மக்கள் எல்லாம் தன்னிடம் எல்லா உதவியும் பெற்றுவிட்டு வோட்டுபோடாமல் ஏமாற்றிவிட்டார்களாம் ஏன் என்றால் தோழர் தன்ரை சொத்தைதானே பிரித்துமக்களிற்கு கொடுத்தவர் மக்கள் என்ன ஏமாளிகளா.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //ஏன் என்றால் தோழர் தன்ரை சொத்தைதானே பிரித்துமக்களிற்கு கொடுத்தவர் மக்கள் என்ன ஏமாளிகளா. //

  ஆமா மற்றவர்களெல்லாம் தமது சொத்துகளை மக்களுக்கு அர்ப்பணித்து விட்டுத் தானே அரசியல் செய்தார்கள். கூத்தமைப்பு; தொகுதிகளுக்கு அரசு ஒதுக்கிய நிதியை புலிகளுக்கு ஒரு பகுதியை படி அளந்து விட்டு மிகுதியை தாமே சுவாகா பண்ணினார்கள். தோழர் அப்படிச் செய்யாமல் முடிந்தவரை மக்களுக்கு உதவியுள்ளார்.

  Reply
 • santhanam
  santhanam

  பார்த்தீபன் ஆயுதம் எடுத்தவர்கள் அனைவரும் மக்களிடம் பறித்துதான் சாப்பிட்டவர்கள் ஆனால் மிதாதிகள் தங்கள் சொத்தைவிற்றுதான் அரசியலிற்கு வந்தவர்கள் அவர்களிற்கு கொடுத்ததை புலிகள் பறித்தது உண்மை சாதாரண ஏழையும் பறிகொடுத்தது

  Reply
 • பல்லி
  பல்லி

  // டக்லஸ் ஒன்றும் இழக்கப் போவதில்லை.//
  இதை முடிந்தால் உங்கள் திறமையை காட்டி தோழரை ஒரு அறிக்கை விட சொல்லுங்கள்;

  Reply
 • Jeyarajah
  Jeyarajah

  புலிக்கும் கூட்டமைப்புக்கும் முதல் எதிரி டக்ளஸ்தான். அதன்பின்புதான் இலங்கை இந்தியா. பாராளுமன்றத்தில் இவ்வளவு காலமும் கூட்டமைப்பு 22 பேரும் இருந்து செய்ததென்ன? அந்த தொகுதிப் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த மக்களுக்கு ஒரு துரும்பைக் கூடச் செய்யாதவர்கள். இவர்களைவிட விமர்சனங்கள் இருந்தாலும் டக்ளஸ் தனிமனிதனாக கொஞ்சமாவது செய்ததை யாரும் மறுக்க முடியாது. இவர் அரசாங்கத்துடன் சேர்ந்து அவர்கள் தருவதைத்தான் செய்கின்றார் என்றால் கூட்டமைப்பு தமது சுய தேவைக்காக பசிலுக்கு போன் போடுவதை என்னென்று சொல்வது.

  தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று குடும்ப உறவுகளுடன் களியாட்ட வாழ்க்கை. இதிலும் பார்க்க டக்ளஸ் செய்வது பரவாயில்லை. டக்ளஸ் இவர் இருந்துவந்த இடமும் நல்ல இடம்

  Reply
 • NANTHA
  NANTHA

  //தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று குடும்ப உறவுகளுடன் களியாட்ட வாழ்க்கை. இதிலும் பார்க்க டக்ளஸ் செய்வது பரவாயில்லை. டக்ளஸ் இவர் இருந்துவந்த இடமும் நல்ல இடம்//

  டக்லஸ் நாட்டிலிருந்து பாட்டா செருப்போடு அலைந்து இந்தியாவில் கடை கண்ணி வீடு வாசல் வாங்கவில்லை. ஆனால் கூத்தமைப்பு அரச செலவில் இந்தியாவில் சுற்றுலாவும் வெங்காய ரோஸ்டும் அடித்து பிள்ளை குட்டிகளை இந்தியாவில் செட்டில் ஆக்கியிருக்கிறார்கள்.

  டக்லஸ் தன்னால் முடிந்தவற்றை செய்திருக்கிறார். புலிகளின் “பிள்ளை பிடி” இலிருந்து பலரைக் காப்பாற்றியுள்ள பெருமையும் அவருக்கு உண்டு. பல தமிழர்களுக்கு தொழில் வாய்ப்பையும் உண்டாக்கியுள்ளார். தேர்தல் டக்ளசுக்கு சாதகமாகவே உள்ளது. தேர்தலில் டக்லஸ் வென்று பாராளுமன்றம் போகப் போகிறார்.

  Reply
 • rohan
  rohan

  நந்தா //தேர்தல் டக்ளசுக்கு சாதகமாகவே உள்ளது. தேர்தலில் டக்லஸ் வென்று பாராளுமன்றம் போகப் போகிறார்.//

  தேர்தல் தோழருக்குச் சாதகமாக இல்லை என்றே ஊர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பசில் ராஜபக்ச செங்கை ஆழியான் குணராசாவைக் களம் இறக்கிய கதை குடாநாட்டில் குழந்தைகளுக்கும் தெரிந்த இரகசியம். தோழர் போன்றவர்கள் இனி ஒரு spent force என்பது சால்வைக்காரர்களுக்குத் தெளிவாகியிருக்கிறது. ஏஜிஏ குடாநாட்டில் அதிகம் பிரபலம் இல்லாத ஆள் என்பதால் அவர் பெயரில் பலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டதும் தெரிந்த கதையே. அவருக்கு வென்றால் அமைச்சர் தவறினால் தூதுவர் என்று சில உறுதிமொழிகளும் தரப்பட்டதாகவும் சங்கதி.

  ஆனால், இந்த பிபிசி பரமேஸ்வரன் தடுப்பு விடயத்தில் செங்கையின் கை இருப்பதாக செய்திகள் கசிந்தமை அவரது பெயருக்கு மாசு ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்.

  யாரோ கட்டி விட்ட இடங்களையெல்லம் (உதாரணம் – தெல்லி மகாஜனா) தோழர் ஓடி ஓடித் திறந்து வைப்பதும் ஊர் அறிந்த விடயம் தான். ஆனாலும், தோழரிடம் நேரடியாக உதவிகள் பெற்ற பலர் அவருக்கே புள்ளடி போடுவர் என்பதால் தோழர் வெல்லக் கூடும்.

  Reply
 • Roman
  Roman

  என்ன இருந்தாலும் டக்லஸ் வெல்வது தான் யாழ்ப்பாணம் முன்னேறுவதற்கு வழி வகுக்கும். பொன் விளையும் பூமியாக யாழ்ப்பாணம் மாறுவதற்கு டக்ளசினால் மட்டும் தான் முடியும்.

  Reply
 • NANTHA
  NANTHA

  தமிழர்களிடையே தப்பிப் பிழைத்த “புத்திஜீவிகளில்” செங்கை ஆழியான் குணராசாவும் ஒருவர். அவர் கூட டக்ளசின் ஆதரவாளர் என்பதும் இன்னொரு உண்மை. குணராசா இன்று நேற்றல்ல எழுபதுகளில் இருந்தே தமிழர்களுக்கு நன்கு தெரிந்தமுகம். அவரை மட்டுமல்ல அவருடைய சகோதரர் புதுமை லோலனையும் அனைவருக்கும் தெரியும்.

  அவர் பாராளுமன்றம் வருவது மகிழ்வானதும் வரவேற்கக் கூடியதுமான தகவலே ஆகும்!

  பசில் ராஜபக்ஷ குணராசாவை அறிமுகப்படுத்தியது குடாநாட்டில் “குழந்தைகளுக்கும்” தெரிந்தது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் குணராசாவை பசிலுக்கு அறிமுகம் செய்தவர் டக்லஸ் என்பது பலருக்கும் தெரியும்!

  Reply
 • thaya
  thaya

  தோழரை கொண்டு பல்லி என்ன அறிக்கை விடச்சொல்கிறார்?…

  யாழ் குடாநாட்டில் ஈ.பி.டி.பி க்கு என்று ஒரு வாக்கு வங்கி உண்டு. அது தோழரின் கடின உழைப்பினால் உருவாக்கப்பட்டது. அதை தடுக்க யாராலும் முடியாது!

  இருந்து பாருங்கள் தோழரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

  இம்முறை அவர் இன்னும் சில ஈ.பி.டி.பி உறுப்பினர்களோடு பாராளுமன்றம் செல்லப்போகின்றார்.

  வீணையில் போட்டியிட்டிருந்தால் இன்னும் நிலை வேறாக மாறியிருக்கும். ஆனாலும் ஈ.பி.டி.பி க்கு வெற்றிலையிலும் வெற்றி கிடைக்கத்தான் போகிறது.

  தமிழ் மக்களுக்கான அரசியல் திருவை அவரால்தான் பெற்றுக்கொடுக்க முடியும். அவரது முயற்சி காரணமாகவே கிழக்கில் இன்று மாகாணசபை உருவாகி அது மக்களுக்கு ஓரளவிற்கு நிம்மதியை கொடுத்திருக்கின்றது.

  இதை யாரும் மறுக்க முடியுமா?…..

  இதை விடுத்து தரகு முதலாளித்துவ> தரகு பாசிச சக்திகளான தமிழ் கூட்டமைப்பையை நாம் ஆதரிக்க முடியும்?…

  விமர்சனங்களுக்கு அப்பாலும் தோழரின் வழிமுறையை ஆதரிப்பதே விமோசனம்.

  Reply
 • பல்லி
  பல்லி

  தயா, தோழர் வருத்தத்துடன் இருக்கிறார்; இப்போ வந்த புலிகளுக்கு உள்ள மதிப்பு (கருனா) தனக்கு இல்லை என்பது அவருக்கும் தெரியும்; அவர் இறுதி வரை வீணையைதான் நம்பி இருந்தாராம்; ஆனால் கடசிவரை அதுக்கு பசில் மறுத்து விட்டாராம்; தோழரின் உழைப்பை நான் குறை கூறவில்லை, ஆனால் வீணையை விட்டு வெற்றிலையை எடுத்தது அவரது அனுபவத்துக்கு தேவையோ எனதான் வருத்தம்; மற்றபடி தோழர் தேர்தல் முடிவுகளுடன் ஒரு முடிவு எடுப்பார் என அவரது நண்பர்கள் கருதுகிறார்கள். கருனாபோல் தோழரையும் சுகந்திரத்தில் ஜக்கியப்படும்படி பசில் நிற்ப்பந்தம் தொடர்கிறது, இப்போதெல்லாம் மகிந்தா தோழரின் விடயத்தில் பசிலையே கையாள விடுகிறார்; இது முன்பு சங்கரியருக்கு நடந்தது குறிப்பிடதக்கது, வேறு எந்த நோக்கமும் பல்லிக்கு இல்லை தயா,,

  Reply
 • thaya
  thaya

  பல்லி!
  எனக்கும் அவர்கள் வீணையில் நிற்கவில்லை என்று வருத்தம்தான். ஆனாலும் ஒன்றை யோசிக்கும்போது தோழர் எடுத்த முடிவு காலச்சூழலுக்கு சரி என்று தோன்றுகிறது.

  மகிந்த நிச்சயம் 113 ஆசனங்களக்கு மேல் எடுப்பார்கள். அவர்களின் கணக்கு 150. அது இருக்கட்டும்.

  113 எடுத்தால் மகிந்தவிற்கு யாருடைய தயவும் ஆட்சிக்கு தேவையில்லை. இந்நிலையில் வீணையில் நின்று வெற்றிலையோடு முரண்பட்டு பகைப்பட்டு அதிக ஆசனங்களை எடுத்து அலரிமாளிகை வாசலில் இரண்டாமவர்கள் போல் காத்திருப்பது நல்லதல்ல. அதை விட சற்று ஆசனங்கள் குறைந்தாலும் வெற்றிலையில் நிற்பது மேல் என்று கருதலாம்.

  இன்று அரசுடன் பேச்சுக்கான கதவுகள் எல்லாம் மூடப்பட்டு விட்டது. தோழரும் பகைத்து தன் கதவுகளையும் மூடிவிட முடியாது. அரசுடன்தான் பேச வேண்டும். பேசித்தான் பெற வேண்டும்.

  கருணா சுதந்திரக்கட்சியில் இணைந்து விட்டதால் தோழரை விட கருணாவிற்கு மதிப்பு இருக்கலாம். தோழர் சுதந்திரக்கட்சியில் இணைய மறுத்ததால் அவருக்கு மதிப்பு குறைவாக இருக்கலாம். அதை விட தோழர் கவலையில் இருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடிந்தது அல்ல.

  எனக்கு டக்ளஸ் தேவானந்தா பத்மநாபா சிறி சபாரத்தினம் ஆகியோரின் குணாம்சங்கள் நன்கு தெரியும்.

  தோழர் எதற்கும் கலங்காதவர்> தோல்விகளை கண்டு துவளாதவர். எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர். இந்த சூழலுக்குள் இருந்துதான் நகர வேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும். எதற்கும் ஈ.பி.டி.பி யின் அறிக்கை வெளிவரவேண்டும். அதற்காகவே நானும் காத்திருக்கின்றேன்.

  தோழர் என்ன சொல்லப்போகின்றார்?… யாழில் வெற்றிலை! வன்னியில் வீணை! கிழக்கில் தேர்தல் விலகல். இது குறித்து அவர் மக்களுக்கு என்ன சொல்லப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்பம்.

  தோழர் ஐரோப்பா வந்த போது நானும் சந்திக்க கிடைத்தது.

  சுதந்திர கட்சியின் அரசியல் தீர்வு மாவட்ட சபை. ஆனாலும் மாவட்ட சபையில் இருந்து மாகாண அலகாக மாற்றியது டக்ளஸ் என்ற ஒரே ஒரு ஆசனம்தான்.

  22 எமது மக்களுக்கு கிடைத்ததையும் இல்லாமல் செய்தது தான் செய்து முடித்த காரியம்.

  தோழர் தெய்வம் அல்ல. நாங்கள் சும்மா இருந்துவரம் கேட்க அவர் கொடுப்பதற்கு. அவரையும் விமர்சிக்க வேண்டும். இதையே நானும் விரும்புகின்றேன். அதே வேளையில் விமர்சிக்கின்றவர்கள். தமிழ் மக்களுக்கு வேறு மாற்று வழியையும் காட்ட வேண்டும். காட்டவில்லை என்றால் தோழரின் வழியை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

  Reply