தமிழ்தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் செல்கிறது புலம் பெயர் தமிழர்கள் முழுமையான ஆதரவு நல்க வேண்டும்! : ஐ.தி சம்பந்தன் (லண்டன்)

Sampanthar_I_T(தமிழ் தேசிய கூட்டணியும் முன்னணியின் தலைவர் திரு சம்பந்தனை ஆதரித்தும், தமிழ்தேசிய முன்னணிக்கான பிரசாரங்களில் ஈடுபடவும் கலந்தாலோசனைக் கூட்டம் ஒன்று ஈஸ்ற்காம் லண்டனில் நேற்று மாலை திரு சீனிவாசம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்களும் முன்னாள் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். – இக்கூட்டத்தை திரு ஜதி சம்பந்தனே ஒழுங்கு செய்திருந்தார் என்றும் அறியப்பட்டுள்ளது.)

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வட கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் தாயகத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

வன்னியில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அதாவது சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, அவர்களின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு நல்கி தமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த மே மாதம் 18ம் திகதியுடன் ஆயதப் போரராட்டம் மௌனமாகியது அதன்பின்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் அரசியலை ஜனநாயக வழிகளில் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் போராட்ட வீழ்ச்சியின் பின் இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழர் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஹிட்லர் போன்ற சர்வாதிகார மகிந்த ராஜபக்ஸ ஒரு ராணுவ ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அரசுக் கெதிராகக் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல், காணாமற்போதல், வெள்ளை வான் கடத்தல், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரச படைகளின் துணையுடன் ஆயதக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்டமை, பயரங்கரவாத் தடைச்சட்டத்தையும், அவசரகால சட்டத்தையும் பயன்படுத்தி தமிழ்மக்களை அடக்கியொடுக்கும் அரசியல் நிலையை புலம்பெயர் தமிழர்கள் நன்கு அறிவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது தொகுதிக்கு செல்ல முடியாதளவு உயிர் அச்சறுத்தலும். பாதுகாப்பின்மையும் இருந்து வந்ததை யாவரும் அறிவர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரன் செல்வராசா, திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு ஜெயானந்த மூர்த்தி, திரு.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அங்கு வாழ முடியாது என்று நீண்டகாலம் வெளிநாடுகளில் தங்கியிருந்தனர். ஆனால் தலைவர் திரு. சம்பந்தன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்கடியையும் பொருட்படுத்தாது நாட்டிலிருந்து தம்மால் செய்யக்கூடிய கடமைகளை ஆற்றிவந்தனர். வன்னிப்போராட்டம் முடிவடையும் வரை விடுலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவு நல்கி அவ்வியக்கத் தலைமையின் வழிகாட்டலுக்கு உட்பட்டு நடந்துவந்ததையும் அணைவரும் அறிவர்.

மக்களால்தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்ப விடுதலைப் புலிகளின் ஊதுகுழல் என்று மகிந்த அரசாங்கம் பலவழிகளில் அவர்களைப் பழிவாங்கி வந்ததை அனைவரும் அறிவர். இந்தச் சூழலில் முள்ளிவாய்கால் வீழ்ச்சியின் பின் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்தேசியக் கூட்மைப்பின் மீது சுமத்தப்பட்டது இந்தப் பொறுப்பை நன்கு உணர்ந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சூழ் நிலையைக் கருத்தில்கொண்டு ராஜந்திரமாக அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

25 வருட ஆயுதப்போராட்டம் வீழ்ச்சியடைந்ததால் அதிலிருந்து தமிழர்களை மீட்சிபெற வைத்து தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையிலுள்ள த.தே.கூட்டமைப்பு தமிழர்களின் வலுவான கட்சியாக வளரவேண்டுமென்பதில் புலம்பெயர் தமிழர்களிடையே மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இலங்கையிலுள்ள பயங்கரமான சூழ்நிலையில் தமிழர்தாயகத்தில் வாழும் மக்களின் அவலநிலை, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், உயர்பாதுகாப்பு வலயத்திருந்து இராணுவத்தை அகற்றல், வன்னிப்பிரதேசத்தில் ராணுவ ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தல், போன்ற அதிமுக்கியமான பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. இவற்றை எவ்வாறு அணுகுவது என்பதைத் தமிழ்த்தேசிய கூட்டடைமப்பு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இந்தியா இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி வருவதனால் இந்தியாவின் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டிய அவசியமும் த.தே. கூட்டமைப்புக்கு உண்டு. அதையும் அவர்கள் ராஜதந்திரமாக மேற்கொள்வார்கள் என தமிழ்மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல் ஒரு அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும் இந்தியாவின் உதவி அவசியமாக இருக்கிறது. அதே வேளை சர்வதேச நாடுகளின் ஆதரவும் தேவை. முதலில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணவேண்டியது அவசியம். அதற்காக இந்தியாவிடம் சரணடையக் கூடாது, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் சரணடைந்து விட்டதாகக் குரல் எழுப்பப்படுகிறது. அதைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை தெளிவுபடுத்த வேண்டும்.

அந்தவகையில் இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் நல்லுறவைப்பேணி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடனான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு ராஜதந்திரமாக த.தே. கூட்டமைப்பு செயற்பட வேண்டும் இதைப்புரிந்து கொள்ளாத புலம்பெயர் தமிழர்கள் சிலர் திரு. இரா. சம்பந்தன், திரு.பிரேமச்சந்திரன் ஆகியோர் சோனியா காந்தியின் வலையில் சிக்கிவிட்டதாக கோசம் எழுப்புகின்றார்கள். இலங்கையின் களநிலைமைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் கோசத்தை எழுப்பி குழப்பி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டணியன் தலைவர் திரு. இரா சம்பந்தன் அவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது மிகக் கசப்பான விடயம்.

ஈழத்தமிழர்கள் அரசியல் ரீதியாக தலைநிமிர்ந்து ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையிலுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு விட்டதாகக் கூறுபவர்கள் இந்தப்பிளவு எத்தகையது என்பதை ஆராயவோ, யதார்த்தமாக சிந்திக்கவோ மறுக்கின்றனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு பலகட்சிகளை உள்ளடக்கிய ஒரு கட்டுப்பாடான அமைப்பு. பல கருத்துக்களைக்கொண்ட கட்சிகள் இங்கு அங்கம் வகுக்கின்றனர். முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாது. வன்னித் தலைமை இருக்கும் வரை கட்டுப்பாடாக விருந்தவர்கள் முள்ளிவாய்க்கால் வீழ்சியின் பின் தன்னிச்சையாக கருத்துக் கூற முற்பட்டுள்ளனர். தலைமைக்கு மதிப்புக்கொடுக்கும் நிலை குறைந்து விட்டதாகத் தெரிகிறது. இன்றைய சூழ்நிலையில் நல்ல அரசியல் அனுபமிக்க ஒருவர் கிடைத்தது பாராட்டத்தக்கது. அன்று இந்திரா காந்தியைச் சந்தித்த முத்தலைவர்களில் ஒருவராக இருப்பவர் திரு சம்பந்தன் அவர்களாகும்.

1952ல் திருகோணமலைத் தொகுதியின் பிரதிநிதியாக தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படவர் திரு.இராசவரோதயம் அவர்கள். திரு சம்பந்தன் தமிழர் தாயத்தின் தலைநகரான திருமலையை சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருபவர்கள். தமிழர்தாயக உணர்வுமிக்க அரசியல் பரம்பரையில் வந்தவர் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை திரு சம்பந்தன். இவரைப் புலம்யெயர் தமிழர் சிலர் மிக மோசமாக விமர்சிப்பதுதான் வேதனைக்குரியது.

எனினும் எந்தக் குறைபாடுகளையும், கண்டனங்களையும் பொருட்படுத்தாது த.தே. கூட்டணித் தலைமை அரசியல் நகர்வுகளைச் சாதுரியமாக மேற்கொண்டு வருகிறது. பிரபாகரன் அவர்களினால் நியமிக்கப்பட இரு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தா அரசிடம் சரணாகதி அடைந்துள்ளனர். தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு மகிந்தாவின் சிந்தனையை ஏற்றுக்கொண்ட இவர்கள் பற்றி புலம்பெயர் தமிழர்களோ, ஊடகங்களோ பெரிதாக கூறுவதில்லை.

ஐனாதிபதி தேர்தலின்போது திரு சிறீகாந்தா, திரு சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டைமீறி தனிவழி மேற்கொண்டனர். இவர்கள் பற்றி புலம்பெயர் ஊடகங்கள் அவ்வளவாக எழுதுவதில்லை.
இப்படியானவர்களை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சேர்த்துக் கொள்ளமுடியுமா? அவர்கள் பிளவு தலைமையால் ஏற்பட்டது என்ற பிரசாரம் செய்பவர்களும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள்.

திரு கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு கஜேந்திரன் செல்வராசா ஆகியோரை தமிழத்தேசிய கூட்டமைப்பு வெளியேற விட்டிருக்கக்கூடாது. அரசியல் விவேகமுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் மூவரையும் த.தே கூட்டணி வேட்பாளர் பட்டியில் கட்டாயம் சேர்த்திருக்க வேணடும். அவ்வாறு செய்யாததற்கான காரணங்களை எம்மால் அறிந்துகொள்ள முடியவில்லை. அதற்கான விளக்கத்தை தலைமை வெளியீடும் என எதிர்பார்க்கின்றோம். என்ன விளக்கத்தை கொடுத்தாலும் எமது பார்வையில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளாதது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எது எப்படியென்றாலும் த.தே. கூட்டமைப்பு என்ற ஒரு தமிழ் அரசியல்கட்சிதான் தமிழர் தாயகத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அவர்களில் பெரும்பான்மையானவர்களின் வெற்றியிலேயே தமிழர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே புலம்பெயர் தமிழர்கள் அவர்களது பூரண ஆதரவை நல்க வேண்டியது அவசியமாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • ramu
    ramu

    ஜதி சம்பந்தனுக்கு நீங்கள் எல்லோரும் தமிழரசுக்கட்சி .பின்னர் சுயாட்சிக்கட்சி பின்னர் த.வி கூட்டணி என்று எம்மை எல்லாம் சித்திரவதை செய்து விட்டுபின்பு புலிகளினால் சித்திரவதை செய்ய எம்மை புலிகளின் கைகளில் விட்டுவிட்டும் இப்போ என்ன புலிகளின் தலைமை பற்றியும் சம்பந்தனின் தலைமை பற்றியும் எழுதுகிறீர்கள் உங்களால் ஏதும் செய்ய முடியாமல் இருந்தது இனிமெலும் எதுவம் செய்ய முடியாது என்பதை இன்னமும் நீங்களும் புலிகளைப்போல உணரமாட்டேன் என்கிறீர்கள் நீங்களும் ஒரு முள்ளிவாய்ககால் ஒன்றை சந்திக்கும் வரையில் திருந்தமாட்டீர்கள்

    Reply
  • Thanga
    Thanga

    சம்பந்தர் தோற்கடிக்கப் படவேண்டும் அதே நேரம் தமிழர் பிரதிநிதித்துவமும் காப்பாற்றப்பட வேண்டுமாம்!

    குரு – சீடன்

    குரு – சிலர் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குப் போய் வேலையில்லை என்று சொல்கிறார்களே?

    சீடன் – நீங்கள் இன்று (வியாழக்கிழமை) வணக்கம் கனடாவில் தெய்வீகன் சொன்னதைக் கேட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்?

    குரு – சரி அப்படியே வைத்துக் கொள். ஆனால் நான் கேட்டதற்கு என்ன பதில்?

    சீடன் – தேர்தலில் நின்று சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு செல்வதால் பலன் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால் தேசியத்தை நேசிப்பவர்கள் நாடாளுமன்றம் போகாவிட்டால் டக்லஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றோர் தேர்தலில் வெற்றிபெற்று தாங்கள்தான் தமிழர்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு நாடாளுமன்றம் போய்விடுவார்கள். அது மட்டுமல்ல. மேற்குலக இராசதந்திரிகளோடு பேசவேண்டும் என்றாலும் இந்த நாடாளுமன்ற நாற்காலிகள் தேவைப்படுகிறது.

    குரு – ஆமாம் 1994 இல் நடந்த பொதுத்தேர்தலை வி.புலிகள் புறக்கணித்த போது டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி கட்சி யாழ்ப்பாணத்தில் 10,744 வாக்குகளைப் பெற்று 9 இருக்கைகளைக் கைப்பற்றியது. 2,098 வாக்குகளைப் பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 இடத்தைப் பிடித்தது.

    சீடன் – நீங்கள் சொல்வது முற்றிலும் சரி குருவே! 1994 இல் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மொத்த வாக்காளர் தொகை 596,366. இபிடிபி பெற்ற வாக்கு விழுக்காடு 1.8 மட்டுமே. ஆனால் கிடைத்த இருக்கைகளின் விழுக்காடு 79.71!

    குரு – மேற்குலக நாடுகளுக்குத் தேர்தல் நடந்தால் போதும். உடனே சிறிலங்கா மக்களாட்சி முறைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காடு என்றெல்லாம் புகழாரம் சூட்டத் தொடங்கி விடுவார்கள் என்று சொல்?

    சீடன் – அதேதான். கிழக்கு மாகாண சபைக்கு துப்பாக்கி முனையில் தேர்தல் நடத்தி பிள்ளையான் முதலமைச்சர் ஆகிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்துக்கு அடியெடுத்தே வைக்க முடியவில்லை. சரி அவை போகட்டும். நாற்காலி அரசியலுக்கு ஆசைப்படக் கூடாது என்று உபதேசம் செய்பவர்களே நாற்காலிகளுக்கு ஆசைப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து விட்டார்களே? இப்படக் கூட்டமைப்பை உடைததவர்களைப் புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாராரும் சிரிஆர் வானொலியும் மும்மரமாக ஆதரிக்கிறார்கள்!

    குரு – இல்லையாம் சம்பந்தர்தான் தம்பி கசேந்திரனுக்கும் அக்கா பத்மினிக்கும் நாற்காலி கொடுக்காது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்துவிட்டாராம். அவர்களுக்கு மட்டும் இந்த நாற்காலிகளைக் கொடுத்திருந்தால் சம்பந்தன் ‘துரோகி’ பட்டத்திற்குப் பதில் தேசியவாதி என்ற பட்டத்தை வாங்கியிருப்பார் என நினைக்கிறேன்?

    சீடன் – நீங்கள் நினைப்பது சரி. ஒற்றுமை வேண்டும் தேசியத்தில் உறுதியாக இருக்க வேண்டும் அப்படிப் பட்டவர்களை இனங்கண்டு நாடாளுமன்ற நாற்காலிகளை நிரப்ப வேண்டும் என்று சொல்லிக் கொண்டு ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதை ஒரு கலையாக சிலர் வளர்த்துள்ளார்கள்!

    குரு – ஒற்றுமை, கொள்கையில் உறுதி என எங்கேயோ படித்த மாதரி இருக்கிறதே?

    சீடன் – இணைய தளங்களில் படித்திருப்பீர்கள். “வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ்த் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக் காக்க வேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது. இன்று நாம் ஒரு பொதுத்தேர்தலை சந்தித்துள்ளோம். இத்தேர்தலின் மூலம் வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். அதுவும் எமது அடிப்படை தேசியத்துடனான கொள்கையில் உறுதி கொண்டவர்களின் பிரதிநிதித்துவமே காப்பாற்றப்பட வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூத்திதான் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

    குரு – அதெப்படி? பாம்பும் சாக வேண்டும் தடியும் முறியக் கூடாது என்று சொன்னவன் கதை மாதிரி இருக்கிறதே?

    சீடன் – ஆமாம் குருவே! கேக்கும் சாப்பிட வேண்டும் அதை அப்படியே முழுசாக வைத்திருக்கவும் வேண்டும் என்கிறார் ஜெயானந்தமூர்த்தி. அதாவது திருமலையில் சம்பந்தர் தோற்கடிக்கப் படவேண்டும் அதே நேரம் தமிழர் பிரதிநிதித்துவமும் காப்பாற்றப்பட வேண்டுமாம். தமிழ்த் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக் காக்க வேண்டிய கட்டாயத் தேவையும் இருக்கிறதாம்! சம்பந்தருக்கு எதிராக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் நான் முன்னர் சொன்னமாதிரி சிங்கள – பவுத்த இனவெறியாரான மகிந்த இராசபக்சேயிடம் சரண் அடைந்து அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பணம் வாங்கிக் கொண்டு மானத்தை காற்றில் விட்டு சேர்ந்து கொண்டவர்கள்!

    குரு – சரி அது போகட்டும். தேசியத்தில் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்கிறாரே?

    சீடன் – அந்த அளவு கோலைப் பயன்படுத்தியிருந்தால் ஜெயானந்தமூர்த்தியே நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருக்கவே முடியாது!

    குரு – எப்படிச் சொல்கிறாய்?

    சீடன் – 2004 இல் கருணா தேசியத் தலைவருக்கும் அவர் கட்டிக்காத்த இயக்கத்துக்கும் துரோகம் செய்தது மட்டுமல்ல தேசியத் தலைவருக்கு எதிராக மட்டக்களப்பில் ஊர்வலங்கள், தலைவரது படத்துக்கு செருப்புமாலை, தீவைப்பு, கொடும்பாவி எரிப்பு என்று கருணா செய்த அட்டகாசங்களுக்கு அளவே இல்லை.

    குரு – ஆமாம் எனக்கும் நினைவிருக்கிறது. இப்போது ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்திருக்கும் தங்கேஸ்வரி கதிர்காமர் தேசியத் தலைவரின் படத்துக்கு செருப்பால் அடித்துக் கொண்டு ஊர்வலம் வந்தார்!

    சீடன் – அது பலருக்குத் தெரியும். தெரியாத சங்கதியும் உண்டு. கிரானில் தேசியத் தலைவரது கொடும்பாவி எரிப்பு ஜெயானந்தமூர்த்தியின் தலைமையில்தான் நடந்தது சிலருக்குத்தான் தெரியும்!

    குரு – அவற்றையெல்லாம் தேசியத் தலைவர் பெருந்தன்மையோடு மன்னித்து விட்டார் அல்லவா?

    சீடன் – ஆமாம் மன்னித்து விட்டார். ஆனால் அப்படிப்பட்டவர் “கொள்கையில் உறுதியாகவுள்ளோரை இனங்கண்டு மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென” சொல்வது நகைப்புக்கு இடமாக இருக்கிறது!

    குரு – ஆனால் தங்கேஸ்வரியை விட ஜெயானந்தமூர்த்தி எவ்வளவோ மேல்! மன்னிக்கப்பட்ட தங்கேஸ்வரி மீண்டும் துரோகம் செய்து விட்டார்!

    சீடன் – அதுதான் எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கிறது என்று யார் கண்டார்கள்? தேர்தல் வரும்போதுதான் தேசியம் பேசியோரின் சுய உருவம் தெரிகிறது! அவர்களுக்கு தேசியத்தைவிட நாற்காலி ஆசைதான் கூடுதலாக இருக்கிறது!

    Reply
  • thaya
    thaya

    எனது பிள்ளை சரியானதை செய்கிறது!

    திரும்ப திரும்ப அந்த தந்தை இப்படி சொன்ன போதுகேட்டவர்கள் புரிந்து கொண்டனர்.

    அவரது பிள்ளை தவறானதையே செய்கின்றது என்று…..

    அது சரி!.. சம்பந்தன் ஐயா!… உங்களிடம் ஒரு கேள்வி!

    தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டிருக்கின்றது. அதை வாசித்து முடிப்பதற்குள் தேர்தல் முடிந்து விடும்! முடிந்தால் சொல்லுங்கள் அவர்கள் வெளியிட்டிருக்கும் தீர்வுத்தட்டத்தை எப்படி நடை முறைப்படுத்துவது என்று?…

    Reply
  • Mohamed Nisthar
    Mohamed Nisthar

    Mr. Sampanthan,

    I heard Mr. Sampanthan giving an interview in the IBC radio some 10 days or so ago that Sri Lankan is a country of two ethinicities, The Singhalese and Tamils. In the meantime you say he is experiened politician.

    I don’t see he (or yourself) understand/s that Sri Lanka is a multi-ethnic country. This is the very basic and important issue in Sri Lankan politics.

    If he doesn’t understand the fact rightly or he deliberately ignores other enthic minorities in Sri Lanka, either way, he is not capable of uniting all minorities before he attmepts to handle India or international community diplometically(?) Therefore the voters should reject him in this general election.

    Other reason for rejecting him is that he has no commen sense, he has no mental power to rational thinking so that he has no ability to face even low level diplometic chllenges. There is nothing more we can say about him. Send him home.

    Reply
  • kunapathy
    kunapathy

    whoever contest even never mind.the voters are in srilanka, let them deside. if the people of north east knows very well they are not going fot money and arrack.if they think by their own they will vote for TNA.this is not the volleyball team with in tamils. this election will deside the srilankan tamils political future.. this no joke.. like LTTE, EPDP, EPRLF etc……. who ask them to raise the arms..nobody dont blame only LTTE.. is karuna,douglas and other movements take the arms foe to oppse the LTTE..?.. no.
    every movements take arms against the singala rulers.
    but according the mentality of former terrorist groups that when the LTTE is finished then the tamil problem is also finished..
    one must realise that how long Gajendrans father kumar ponnampalam try to get in to the pariment? because of TNA he came inside the parliment. and now he want to be a group leader..the tamis knows his father and his Great grand father.. so the tamils must vote for TNA. sampanthar iwill dead and gone,then with whom you are going to take the revenge? with the tamils..?
    kunapathy kandasamy

    Reply
  • Rohan
    Rohan

    யார் இந்த ஐதி சம்பந்தன்?

    முன்னர், இலங்கையின் முதலாவது மொழிவழித் தொழிற் சங்கமான அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தில் ஒரு ஐதி சம்பந்தன் இருந்த்ததாக நினைவு.

    அந்த சம்பந்தனுக்கு இப்போது 75 வயது மட்டில் இருக்கக்கூடும்.

    Reply
  • suthahar
    suthahar

    /முன்னர், இலங்கையின் முதலாவது மொழிவழித் தொழிற் சங்கமான அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தில் ஒரு ஐதி சம்பந்தன் இருந்த்ததாக நினைவு.//

    அவரே தான் இவர். பின்னாளில் மகேஸ்வரனின் பிரத்தியேக செயலாளராகவும் இருந்தவர். லண்டன் சுடரொளி என்ற சஞ்சிகையை நடத்தி வருகிறார். தீவிர தமிழரசுக்கட்சியின் பக்தர்.

    Reply
  • Thanga
    Thanga

    சிறீலங்காவில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் திருமலை மாவட்டங்களில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனி போட்டியிடுகின்றது.

    தேசியத்தை வலுவாக ஆதரித்ததற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், திரு. செல்வராஜா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரினால் உருவாக்கப்பட்ட இந்த முன்னனியில் போட்டியிடும் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜனுடன் ஈழம் இ நியூஸ் (www.eelamenews. com) தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக சிறப்பு நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அதனை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழச்சி அடைகின்றோம்.

    யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் திரு சி. வரதராஜன் தொடர்பாக சிறு குறிப்பு:

    திரு சி. வரதராஜன் அவர்கள் மிகச் சிறந்த தேசப்பற்றாளர் அவர் 1977 – 1983 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளனாகப் பணியாற்றியிருந்தார். பின்னர் தாய் மண்ணில் பணியாற்றவேண்டும் என்றநோக்கில் யாருக்கும் அடிபணியத்தேவையில்லாத தொழிலான தனியார் கல்வி நிறுவன ஆசிரியத் தொழிலைத் தெரிந்தெடுத்திருந்தார்.

    தமிழ்த் தேசியத்தை தீவிரமாக நேசித்ததன் காரணமாக 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், 1997 – 1998 ஆம் காலப்பகுதியில் 4ம் மாடி, 6ம் மாடி, மற்றும் களுத்துறைச் சிறைகளிலும் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருந்தார்.

    நாலாவது ஈழப்போர் காலத்தில் 2008 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஈழத்தமிழ் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்ற அவரின் கொள்கைப்பற்று தற்போது அவரை யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்நிறுத்தியுள்ளது.அவர் எமக்கு அளித்த நேர்காணல் வருமாறு:

    கேள்வி: தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னனியின் பிரதம வேட்பாளராகிய உங்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் மற்றும் மனிதாபிமான பிரச்சனைகள் இரண்டையும் முதன்மைப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. இது தொடர்பில் உங்களின் செயல் திட்டங்கள் எவ்வாறு உள்ளன?

    பதில்: ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகள் எமது விடுதலைப் போராட்டம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. மனிதாபிமானப் பிரச்சனைகள் என்பது இவ் விடுதலைப் பேராட்டத்தின் விளைவாகத் தோன்றியதாகும். மனிதாபிமானப் பிரச்சனைகளைத் தீர்ப்பதன்மூலம் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளத் தீர்த்துவிடமுடியாது.

    ஆனால் அரசியற் பிரச்சனைகளுக்குத்தீர்வு காண்பதன்மூலம் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கமுடியும். இதுதான் உண்மை. ஆனால் அரசியற் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் காலம் வரை தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கான தீர்வை ஒத்திவைக்க முடியாதவாறு அது இன்று பூதாகரமாக வளர்ந்துவிட்டது.

    எனவே நாம் இன்று இவ்விரண்டு பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் சமாந்தரமான முறையில் மேற்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம்.தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற பலமான மூன்று தூண்களே ஈழத் தமிழினத்தைத் தாங்கி நிற்கின்றன. இத் தூண்கள் தகர்க்கப்படுமாயின் இத் தீவில் எமது இனம் முற்றாகவே அழிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு.

    உதாரணமாக தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கவேண்டுமாயின் தமிழர் தாயகம் என்ற கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அண்மைக் காலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கொழும்பில் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர் என்றும் அதனை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அடிக்கடி கூறிவருகின்றார்.

    ஆனால் இது உண்மையல்ல. இறுதியாக எடுக்கப்பட்ட 2001ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி கொழும்பு மாவட்டத்தின் மொத்த சனத்தொகையான 22,51,274 பேரில் 17,24,459 பேர் சிங்களவர்களாகும். இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 76.6 சதவீதமாகும். இம் மாவட்டத்தில் தமிழர்களின் மொத்தத் தொகை 2,72.660 பேர் மட்டுமே. இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 12.1 சதவீதமாகும்.

    இவ்வாறு உண்மையில்லாத ஒன்றை அடிக்கடி கூறுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு அவர் கூறும் செய்தி என்னவென்றால், யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படப் போகின்றார்கள் நீங்கள் அதனை எதிர்க்காதீர்கள் என்பதேயாகும். இதனை முறியடிக்க வேண்டுமாயின் தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டில் சொல்லளவில் மட்டுமன்றி செயலளவிலும் உறுதியாக இருக்கவேண்டும்.

    ஒரு நாடு, இரு தேசங்கள் என்ற கோட்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதன் மூலமே எமது அரசியற் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காணமுடியும். அதைவிடுத்து இவையெல்லாம் வெறும் கோசங்கள், கனவுகள், யதார்த்தமற்றவை என்றெல்லாம் கூறி இவற்றைக் கைவிடுதல் எமது இனத்தை முற்றாக அழிப்பதற்குச் சமம். பாராளுமன்ற அரசியல் ஊடாக இவற்றை அடைவது சாத்தியமா என்ற வினாவும் எழுந்துள்ளது.

    1970கள் வரை இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வியடைந்த பின்னர் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக அவற்றை அடையமுற்பட்டு அதுவும் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் பாராளுமன்ற அரசியல் ஊடாக இவற்றை அடைவது சாத்தியமா என்ற சந்தேகம் எழுவது இயற்கையே. ஆனால் சுதந்திரத்திற்குப் பிந்திய 30 வருட அகிம்சைப் போராட்டம் தமிழ் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவர – சர்வதேசமயப்படுத்தப்படத் தவறிவிட்டது.

    குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியது போல ஒரு வட்டத்திற்குள் நாங்கள் இருந்து கொண்டோம். ஆனால் கடந்த 30 வருட ஆயுதப் போராட்டம் தமிழ் அரசியற் பிரச்சனைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு சென்று அதனை நியாயப்படுத்தி உள்ளது. எனவே இந்த இடத்திலிருந்து கொண்டு ஆரம்பித்து தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளுக்கு பாராளுமன்ற அரசியல் ஊடாக தீர்வுகாணமுற்படுவது சாத்தியமானது. ஆனால் இதனை மேற்கொள்வதற்கு விட்டுக்கொடுப்புக்கள், மற்றும் சமரசங்களுக்குச் செல்லாத ஒரு பலமான – உறுதியான அரசியற் தலைமை – ஓர் அரசியல் இயக்கம் இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகின்றது.

    இவ்வாறான ஒரு உறுதியான அரசியற் தலைமையின்கீழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளையும் தீர்க்கமுடியும் என நம்புகின்றோம். இடம்பெயர் முகாம்களிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்துதலும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் எம்முன்னுள்ள முக்கிய பிரச்சனைகளாகும். சர்வதேச சமூகத்தினதும் புலம்பெயர் தமிழ் மக்களினதும் ஒத்துழைப்புடன் இதனை மேற்கொள்ளமுடியும் என நாம் நம்புகின்றோம்.

    கேள்வி : தமிழ் தேசியக் கூட்மைப்பின் கொள்கைகளில் இருந்து நீங்கள் எந்த வகையில் வேறுபட்டு நிற்கின்றீர்கள்?

    பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டு செல்கின்றது. கேட்டு எதனையும் பெறமுடியாது – தருவதை வாங்கிக்கொண்டு திருப்திப்படுவோம் என்ற நிலைக்கு கூட்டமைப்பு வந்துவிட்டது.

    தமிழ் மக்களின் மனதில் ஓர் தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தி தமிழ் இனத்தை ஒரு தோல்வியடைந்த சமூகமாகக் காட்டி கிடைக்கின்றதை மட்டும் கொண்டு வாழப் பழகிக்கொள் என்ற நிலைக்கு எம்மக்களைக் கொண்டு செல்லமுற்படுகின்றது.ஆயுதப் போராட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து அடுத்த என்ன செய்வது? என்ற வேதனையில் இருந்த மக்களை ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்று கூட்டமைப்பு எடுத்தமுடிவு தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் அனாதையாக்கியது.

    நாட்டின் ஜனாதிபதி யார் என்பதைத் தமிழ் மக்கள் தான் தீர்மானிக்கப் போகின்றார்கள் என்று உசுப்பேத்தி இறுதியில் தமிழ் மக்கள் இரண்டு முறை வாக்களித்திருந்தால் கூட ஜனாதிபதியைத் தெரிந்தெடுத்திருக்க முடியாது என்ற நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள்.

    அரசியல்ரீதியாகவும் தமிழ் மக்கள் பலமற்றவர்கள் என்பது இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பது எனத் தமிழ்க் காங்கிரஸ் எடுத்த முடிவையொற்றி கூட்டமைப்பும் பகிஸ்கரிப்பது என்ற முடிவை எடுத்திருந்தால் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்சவை சிங்கள மக்கள் வெல்ல வைத்திருக்க மாட்டார்கள்.

    அப்போது தமிழ் மக்களின் வாக்குப்பலம் முக்கியத்துவம் வாய்ந்தாகப் பேசப்பட்டிருக்கும். கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தவறான முடிவினை மேற்கொண்டு தமிழ் மக்களைதோல்வி மனப்பான்மைக்குள் வீழ்த்தி, இனிமேல் எங்களால் ஒன்றுமே செய்யமுடியாது -இந்தியா சொல்வதைக் கேட்போம் என்ற நிலைக்குத் தமிழ் மக்களைக் கொண்டு வந்து விட்டு விட்டது. தற்போது கூட்டமைப்பு 30 வருடங்களுக்கும் முன்னால் உள்ள காலப்பகுதிக்கு எமது அரசியல் இலக்குகளைக் கொண்டு செல்ல முற்படுகின்றது.

    ஆறுகள் ஒருபோதும் பின்னோக்கிப் பாய்வதில்லை என்பது அவர்களுக்குத் தெரியவில்லைப்போலும். எமது கருத்தின்படி நாம் தோற்றுப்போன சமூகமல்ல. மாறிவரும் சர்வதேச ஒழுங்குகளுக்கேற்ப பாராளுமன்ற அரசியலின் ஊடாக எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

    கேள்வி : இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்ப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தாயகத்து அரசியல் பயணம் என்பது புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிதன் அவசியம் தொடர்பில் உங்களின் கருத்துக்கள் என்ன?

    பதில்: 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய கருத்து ‘புலம்பெயர் மக்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

    ” எமது மக்களின் அரசியற் பிரச்சனையைத் தீர்ப்பதில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் எம்மால் நிராகரிக்கப்பட்ட பாராளுமன்ற அரசியலிற்குள் தற்போது நாம் புகுந்து அதன்மூலம் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளுக்கு மட்டுமன்றி மனிதாபிமான மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கும்கூட தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கை கொள்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையே காரணம்.

    புலம்பெயர் தமிழர்கள் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தாயகத்திலுள்ள மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஜனநாயகமுறையில் பாராளுமன்ற அரசியலுக்குட்பட்டவகையில் தாயகத்தில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குச் சமாந்தரமாக புலம்பெயர் தமிழ் மக்களும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அரசியல் மற்றும் மனிதாபிமானப் பிரச்சனைகள் தொடர்பாக ஓர்; உறுதியான தீர்வினைப் பெறக்கூடியதாக இருக்கும்.

    கேள்வி : நீங்கள் யாழ் குடாநாட்டில் பிரதம வேட்பாளராக போட்டியிடுகிறீர்கள், உங்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களும், தேசியத்திற்கு ஆதரவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில் யாழ் மக்களின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன?

    பதில்: இவ்விடத்தில் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவேண்டிய நிலை உள்ளது. நான் ஒரு அரசியல்வாதியல்ல. அரசியல் எனது தொழிலும் அல்ல. நான் ஒரு பொருளியல் ஆசிரியன்.

    இதுவரைகாலமும் ஒரு அரசியல் நடவடிக்கையாளனாக மட்டுமே இருந்தவந்த நான், தற்போது நேரடி அரசியலில் ஈடுபடமுன்வந்ததற்குக் காரணம், தமிழர்களின் அரசியற் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றமேயாகும். கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 30 வருடங்களிற்கும் முன்னுள்ள நிலைக்கும் அப்பால் கொணடு செல்ல முற்படுகின்றது.

    “தடைகளையும் நெருக்கடிகளையும் கண்டு தனது இலட்சியங்களை மாற்றிக் கொள்பவன் எதனையும் அடைவதில்;லை” என்பது எனது நம்பிக்கை. தமிழர்களின் இலட்சியங்களை கூட்டமைப்பு வெறும் கோஷங்களாகவே இன்று பார்க்கின்றது. சலுகைகள் எல்லாம் தமிழ் மக்களின் உரிமைகளாக மாறக்கூடிய ஒரு அபாயம் இன்று நிலவுகின்றது.

    இந்நிலைமையை மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்பதற்கான ஒரு வழிமுறையாகவே எனது நேரடி அரசியற் பிரவேசத்தைப் பார்க்கின்றேன்.நான் 1977 – 1983 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்துறை விரிவுரையாளனாகப் பணியாற்றியுள்ளேன்.

    பின்னர் தாய் மண்ணில் பணியாற்றவேண்டும் என்றநோக்கில் யாருக்கும் அடிபணியத்தேவையில்லாத தொழிலான தனியார் கல்வி நிறுவன ஆசிரியத் தொழிலைத் தெரிந்தெடுத்தேன். தமிழ்த் தேசியத்தை தீவிரமாக நேசித்ததன் காரணமாக 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் சிறையிலிருந்தேன்.

    1997 – 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 4ம் மாடி, 6ம் மாடி, மற்றும் களுத்துறைச் சிறைகளில் இருந்தேன். 2008 ஆம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் விடுதலையானேன். தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசித்ததற்குக் கிடைத்த வெகுமதிகளாகவே நான் இவற்றைக் கருதுகின்றேன்.

    எமது அணியில் மூன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும் நேரடி அரசியலுக்குப் புதுமுகமான என்னை முதன்மை வேட்பாளராகத் தெரிவு செய்தமை தேசியத்தின் மீது நான் கொண்டுள்ள பற்றுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகின்றேன். கூட்டமைப்பில் போட்டியிடுகின்ற சில வேட்பாளர்கள் என்னுடைய மாணவர்கள்.

    நாங்கள் தமிழ்த் தேசியத்தை நேசித்தவர்கள் – நேசிக்கின்றவர்கள் என்பதை அவர்கள் அறிந்துள்ளர்கள்.அவர்களில் ஒருவர் தான் தோற்றாலும் பரவாயில்லை. சேர் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற தனது மனவிருப்பத்தை தனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதுதான் யாழ் மக்களின் ஒட்டுமொத்தமான கருத்தும் ஆகும். எனவே எமது வெற்றியை நாளைய சரித்திரம் கூறும்.

    கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நான்கு பிரிவுகளாக பிளவடைந்துள்ளது. இந்த நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் என்ன தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது?

    பதில்: ஆரம்ப கட்டத்தில் இப் பிளவுகள் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது என்பது உண்மைதான். குறிப்பாக தமிழ்க் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து விலகியமை மக்கள் மனதில் பெரும் குழப்பத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ஏனைய பிளவுகள் தனி மனிதர்களின் வெளியேற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரசின் வெளியேற்றம் ஒரு கட்சியின் வெளியேற்றமாகப் பார்க்கப்பட்டது.

    ஊடகங்களின் உதவியுடன் எம்மீது பல அவதூறுகளை கூட்டமைப்பு மேற்கொண்டது – மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தற்போது காங்கிரசின் வெளியேற்றத்தின் நியாயத்தன்மையை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனடிப்படையில் அவர்கள் ஒர் தீர்க்கமான முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

    கேள்வி : தற்போதைய பொதுத்தேர்தலில் உங்களின் கட்சி யாழ்மாவட்டத்திலும், திருமலையிலும் மட்டுமே போட்டியிடுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களில் போட்டியிடவில்லை, அதற்கு சிறப்பு காரணங்கள் ஏதும் உண்டா?

    பதில்: எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறான வழிநடத்தலுக்கு தலைமை வகிப்பவர்கள் மூன்றுபேர். அவர்களில் ஒருவர் திருகோணமலையில் போட்டியிடுகின்றார்.

    ஏனைய இருவரும் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றார்கள். இந்த மூவரும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படுவார்களேயானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது சரியான பாதைக்குத் திரும்பும் என நாம் நம்புகின்றோம். இங்கு சில தனி மனிதர்களைத் தோற்கடிப்பதற்காக நாம் களமிறங்கியுள்ளோம் எனக் கருதவேண்டாம். உண்மையில் தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்காகவே நாம் இவ்விரு மாவட்டங்களிலும் களமிறங்கியுள்ளோம்.

    கேள்வி : தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்களில் சிலர் வெற்றி பெற்ற பின்னர் உங்களுடன் இணைந்து செயற்பட விரும்பினால் அவர்களை ஒருங்கிணைத்து செயற்படும் திட்டங்கள் உண்டா?

    பதில்: நிச்சயமாக. எமது நீண்டகால செயற்திட்டங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று கூட்டமைப்பின் தவறான தலைமைகள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படும்போது தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிக்கின்றவர்களோடு ஒருங்கிணைந்து செயற்படுவதில் எதுவித தடைகளும் இல்லை. இதுவே எமது விருப்பமும்கூட.

    கேள்வி : திருமலையில் உங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் சிலர் முன்னர் அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என்ற குற்றச் சாட்டுக்களை சிலர் முன்வைப்பது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?பதில்: திருமலை நகரசபைத் தலைவர் திரு.கௌரி முகுந்தன் அவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தது தொடர்பாகவே இச் சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

    உள்ளுராட்சி சபைகள் தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி என்பவற்றில் மட்டுமே கவனம் செலுத்தமுடியும். எனவே இப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்றோரை சந்திப்பது தவிர்க்கமுடியாதது.

    இதனை மட்டும் வைத்துக்கொண்டு கொண்டு அரசுடன் இணைந்து செயற்படுகின்றார்கள் என்று குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது. இது ஒருபுறமிருக்க, கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் (இவர் தற்போது கூட்டமைப்பின் வேட்பாளரும் கூட) வட பகுதி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியதை அடிப்படையாகக் கொண்டு அவர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றார் என்று குற்றஞ்சாட்டமுடியுமா?

    கேள்வி : யார் வெற்றி பெற்றாலும் ஈழத்தமிழர் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியா அவர்களுடன் பேசியே தீரவேண்டும் என்பது தற்போது கட்டாயமாகி விட்டது. இந்த நிலையில் இந்தியாவுடன் உங்களின் அனுகுமுறைகள் எவ்வாறு அமையப் போகின்றது?

    பதில்: இந்தியத் தரப்போடு பேசவேண்டும் என்பதில் எமக்குக் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் – தோற்றுப் போய்விட்டோம் என்ற அடிப்படையில் இந்தியாவிடம் சராணாகதி அடையமாட்டோம். எமக்கு என்ன தேவை என்பது தொடர்பாக இந்தியாவோடு பேசுவோம்.

    மாறாக இந்தியாவின் மனதை நோகடிக்கக்கூடாது – இந்தியா எமக்குத் தர விரும்புவதையே நாம் அவர்களிடம் கேட்கவேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் நாம் இல்லை.

    கேள்வி : தமிழ் மக்களிடம் உங்கள் கட்சிக்கு உள்ள ஆதரவுகள் எவ்வாறு உள்ளன?பதில்: பெரும் வரவேற்பை பெற்றுக்கொண்டு வருகின்றோம். தமிழ்த் தேசியத்தை உண்மையாக நேசிப்பவர்கள் எம் பின்னால் அணிதிரண்டு வருகின்றனர்.

    எம்முடன் கலந்துரையாடுகின்ற மக்கள் எம்மிடம் விடுக்கின்ற ஓரேயொரு வேண்டுகோள் என்னவென்றால் கூட்டமைப்பின் தலைமைகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட – தற்போது மேற்கொண்டுவருகின்ற நயவஞ்சகமான நடவடிக்கைகளை மக்கள் முன் வெளிப்படுத்துங்கள் என்பதேயாகும்.

    கேள்வி : யாழ் மாவட்டத்தில் தற்போது ஏறத்தாள 324 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அங்கு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டிகள் எவ்வாறு இருக்கும் என எண்ணுகிறீர்கள்?

    பதில்: 16 அரசியற் கட்சிகளும் ஏறத்தாழ 11 சுயேச்சைக் குழுக்களும் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. இவற்றில் பல அரசியற் கட்சிகள் – சுயேச்சைக் குழுக்கள் என்பவற்றின் பெயர்கள், அவற்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், அவற்றின் சின்னங்கள் என்பன எதுவுமே மக்களுக்குத் தெரியாது.

    5 அரசியற் கட்சிகள் பற்றிய விபரங்களை மட்டுமே மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவாஜிலிங்கத்தின் தலைமையில் போட்டியிடும் இடதுசாரி முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஈ.பி.டி.பி), ஐக்கிய தேசியக் கட்சி என்பனவே அவையாகும். இவற்றுள் இறுதியாகக் கூறப்பட்ட இரண்டு கட்சிகளும் சிங்களக் கட்சிகள் என்றவகையில் மக்களின் ஆதரவைப் பெருமளவிற்கு இழந்தவையாகவே உள்ளன.

    குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் தனிப்பட்ட நபர்களுக்காக சில வாக்குகளைப் பெறமுடியும். அடுத்து சிவாஜிலிங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாவட்டத்தில் 3205 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.எனவே தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கும் (தமிழக் காங்கிரஸ்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான நேரடிப் போட்டியாகவே யாழ் தேர்தல் களம் அமைந்துள்ளது என மக்கள் கருதுகின்றனர்.

    இப் போட்டியில் நாம் முன்னிலை பெற்று வருகின்றோhம் என்பதே மக்களின் கருத்தாகும். நாம் மக்களுக்குள் இறங்கிக் கடுமையாக வேலை செய்தால் – எமது முன்னணியின் கொள்கைகளை மக்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்தினால் மாபெரும் வெற்றியை நாம் அடையமுடியும் என மக்கள் கருதுகின்றனர்.

    2004ம் ஆண்டுத் தேர்தலில் பெற்ற ஆசனங்களைப் போன்று இம்முறையும் பெறுவீர்களா என்று கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரிடம் கொழும்பு பத்திரிகையின் ஞாயிறு பதிப்பில் இடம்பெற்ற பேட்டியொன்றில் கேட்கப்பட்ட வினாவிற்கு அவர் கூறிய பதில் அதைவிட சில ஆசனங்கள் குறைவாகவே பெறுவோம் என்பதாகும்.

    அதற்கு அவர் கூறிய காரணம் கடந்த தேர்தலில் யுத்த நிறுத்தம் நிலவியது – மக்கள் சுந்திரமாக வாக்களிக்கக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் உண்மை என்னவென்றால் அன்று யுத்தநிறுத்தம் இருந்தது.

    இன்று யுத்தமே இல்லையல்லவா. இவ்வாறான சூழ்நிலையில் முன்னரிலும் கூடுதலான ஆனங்களையல்லவா பெறவேண்டும். எனவே எங்களைப் பற்றிய பயமே தாங்கள் குறைந்த ஆசனங்களையே பெறுவோம் என்று கூறியதற்குக் காரணமாகும்.

    கேள்வி : யாழ்குடாநாட்டில் உள்ள பிரபல ஊடகங்களில் ஒன்றான உதயன் பத்திரிகையின் உரிமையாளர், தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஆகியோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலும், வீரகேசரியின் ஊடகவியலாளர் ஐ.தே.கவிலும் போட்டியிடும் நிலையில் அங்கு ஒரு ஊடகப்பரப்புரை உங்களுக்கு எதிராக வலுப்பெறும் சாத்தியங்கள் உண்டா? அவ்வாறாயின் அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?

    பதில்: நீங்கள் குறிப்பிட்டது போன்று அப் பத்திரிகைகள் சார்ந்த ஊடகவியலாளர்கள் போட்டியிடுவதனால் அப் பத்திரிகைகள் நடுநிலையிலிருந்து தடம்புரண்டு பக்கச் சார்புடன் செயற்படுவதாக மக்கள் உணர்கின்றனர்.

    எமது செய்திகளை இருட்டடிப்புச் செய்வதும், சில அறிக்கைகளை – செய்திகளை மிகவும் காலம் தாழ்த்தி வெளியிடுவதுமான நடவடிக்கைகளில் பெரும்பாலான பத்திரிகைகள் ஈடுபட்டுள்ளன.

    நாம் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியற் கட்சியாகப் போட்டியிடுகின்றபோதிலும்கூட எம்மை ஒரு சுயேச்சைக் குழு என்றும், வரதர் அணி என்றும் கொச்சைப்படுத்துகின்ற தன்மையும் காணப்படுகின்றது.

    நாம் அன்றாடம் மக்களைச் சந்திப்பவர்களாக இருப்பதனால் செவி வழியாக எம்மைப் பற்றிய தகவல்கள் மக்களைச் சென்றடைகின்றன. குறிப்பாக என்னைப் பொறுத்தவரையில் நான் தினமும் மாணவர்களை வகுப்பறையில் நேரடியாகச் சந்திக்கின்றேன். இதன் மூலம் கருத்துப் பரிமாற்றங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றது.

    கேள்வி : நடைபெறப்போகும் பொதுத்தேர்தலில் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புக்கள் எவ்வாறு அமையவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

    பதில்: பெரும்பாலான புலம் பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது முழுமையான ஆதரவுகளை தொடர்ந்து எமக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனது பழைய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சர்வதேசமெங்கும் பரவியுள்ளனர்.

    நான் தேர்தலில் போட்டியிடுவததை அறிந்தவுடன் தமது மகிழ்ச்சியையும் ஆதரவுகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாம் பணபலம், ஊடகபலம் வாய்ந்த சக்திகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். மக்கள் பலத்தை மட்டும் நம்பியே இப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.

    இப் போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர்களின் பெரும் ஆதரவை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம். இணையத் தளங்களினூடாக தங்கள் ஆதரவுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்படவேண்டும். தாயகத்திலுள்ள தங்களின் உறவுகளுக்கு உண்மைகளை வெளிப்படுத்தி எமக்குப் பின்னால் அணி திரளச் செய்யவேண்டும். பொருளாதாரரீதியான ஆதரவையும் நாம் நாடி நிற்கின்றோம்.

    கேள்வி : வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தென்னிலங்கை மற்றும் மலையக பகுதிகளில் உள்ள தமிழ் பிரதிநிதிகளுடன் இணைந்து இயங்குவது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

    பதில்: வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளும் தென்னிலங்கை மற்றும் மலையகப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியற் பிரச்சனைகளும் வேறுபட்டவை.

    எனினும் இவ்விரண்டு பகுதி மக்களுக்கும் பொதுவான சில அரசியற் பிரச்சனைகளும் குறிப்பாகப் பொருளாதாரப் பிரச்சனைகளும் உள்ளன. இவற்றினடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதுவித தடைகளும் இல்லை.

    மறைந்த மலையகத் தலைவர் திரு. தொண்டைமான் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக இருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

    Reply
  • ABI
    ABI

    Mr.I.T.SAMPANTHAN is a roguh and prostitute politician because he was supported the ITAK referendum for seperate state in 1977 and now support for Federal solution. Next time he will support ITAK says Unity state. These type of activities should be stopped.

    Reply
  • uma mahalingam
    uma mahalingam

    Having defeated the Tamil aspirations by waging a war against LTTE under the banner of terrorism SLG has now determined to wipe out the political leaders among tamils who still raise their heads for political independece under the banner of Parlimentary election.This is a diplomatic move to break the unity among tamils as one block. It looks that the diplomacy of the SLG has succeeded half way and the final result will be known after April 8th. India has succeeded in its goal.But, she will realise the true colour of the SLG if there is an outbreak of war between India and China for whatever reason.It is not too late to unite as one voice to represent Tamil speaking people in Sri Lankan Parliment.

    Reply