அமெரிக்காவில் மாநில துணை ஆளுநராக தமிழர் நியமனம்?

raja.jpgஅமெரிக் காவில் இலினொய்ஸ் மாநிலத் துணை ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி பராக் ஒபாமா இந்நியமனத்தை வழங்கவுள்ளார். அமெரிக்காவில் வாழும் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கே இந் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியுள்ளார். இலினொய்ஸ் மாநிலத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.

துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்க மாநிலமொன்றில் இந்தப் பதவியை முதன் முதலில் பெற்ற தமிழர் என்ற பெருமை இவரையே சாரும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • sumi
    sumi

    அப்படியென்றால் நாடு கடந்த தமிழீழம் இனி இங்குதான் அமைப்பார்களா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    அருட்செல்வன்,
    இனித்தான் தேர்தல் என்கிறீர்கள் ஆனால் ஏதோ ஒபாமா துணை ஆளுனராக நியமிக்கவுள்ளார் என்கிறீர்கள்.

    அமெரிக்கத் தேர்தல் முறையைச் சரியாக விளங்காமல் ‘செய்தி’ போட்டு வாசகர்களைக் குழப்பாதீர்கள்.

    1) அமெரிக்காவில் ஒரு தேர்தலில் தெரிவுசெய்யப்பட வேண்டிய பதவிக்கு யாரும் ஒருவரையும் நியமிகக முடியாது.
    2) அவர் தான்சார்ந்துள்ள கட்சியின் உட்தேர்தலில் வென்றால் மட்டுமே பொதுத்தேர்தலில் நிற்க முடியும். இது மாநில ஆளுனர் என்றால் என்ன , 250 பேர்கொண்ட கிராம சபை என்றால் என்ன பொருந்தும்.
    3) அமெரிக்க ஜனாதிபதி எந்தஒரு மாநிலத்தின் விடயங்களிலும் தலையிட முடியாது. அமெரிக்க சமஷ்டி அரசு கேட்கும் நடவடிக்கைகள் மாநில சட்டத்துக்கு முரண் எனக்கருதும் பட்சத்தில் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் விடும் அதிகாரம் கூட மாநிலத்துக்கு உண்டு!
    4) அங்கே நிலவுவது உண்மையான ‘கூட்டாட்சி’ ஸ்ரீலங்கா போல கிடையாது!

    Reply