கண்டி, திருமலைகளுக்கான மீள் வாக்குப்பதிவு. கொழும்பிலிருந்து விசேட கண்காணிப்பு குழுவை அனுப்ப ஏற்பாடு

n2.jpgகண்டி, திருகோணமலை மாவட்டங்களி லுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றதனால் அப்பகுதிகளு க்கான மீள் வாக்களிப்பு எதிர்வரும் 20 ம் திகதி நடைபெறவுள்ளது. மீள் வாக்குப் பதிவை கண்காணிப்பதற்காக கொழும்பிலிருந்து விசேட குழுவொன்றை அனுப்புவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை மீள்வாக்குப் பதிவுக்கென வாக்காளர்களுக்கு புதிதாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 19ம் திகதிக்கு முன்னர் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு விடும் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியைச் சேர்ந்த 37 வாக்க ளிப்பு நிலையங்களுக்கும் திருமலை மாவ ட்டத்தின் கும்புறுபிட்டியிலுள்ள வாக்களிப்பு நிலையத்துக்குமே எதிர்வரும் 20 ம் திகதி மீள்வாக்குப் பதிவு நடத்தப்படவுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேற்படி வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவை நடத்த தேர்தல்கள் திணைக்களம், திட்டமிட்டுள்ளதுடன் எதிர்வரும் 20ம் திகதி தேர்தல் கடமையில் ஈடுபடுவதற்காக 380 உத்தியோகத்தர்களை நியமித்திருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *