மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பதில் இரு வேறு நிலைப்பாடு இருக்கக்கூடாது

கிழக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஆணையையும் அங்கீகரிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுபற்றி கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுரேஷ் பிரமேச்சந்திரன்;

வடக்கு, கிழக்கில் தமிழ்மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தலைமைக் கட்சியாகவும் பிரதிநிதியாகவும் ஏற்று தெரிவு செய்துள்ளனர். வடக்கு, கிழக்கில் ஜனநாயக முறையில் தமிழ் மக்கள் வழங்கிய இந்தத் தீர்ப்பை அரசாங்கமும் ஏனையவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமொன்றைத் தெரிவு செய்துள்ளனர். இந்த மக்கள் ஆணையை சர்வதேச சமூகம் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வலியுறுத்தியுள்ளது. அதே அடிப்படையில் வடக்கு, கிழக்கு மக்கள் வழங்கிய ஆணையை இந்த அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம். அதுவே ஜனநாயக கோட்பாடாக அமையும். அதைவிடுத்து சிங்கள மக்களுக்கு என்று ஒன்றும் தமிழ் மக்களுக்கு பிரிதொன்றுமாக ஜனநாயகக் கோட்பாடுகள் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இதேநேரம் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுக்கும் ஆளும் கட்சி அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், தமிழ் மக்களின் இன நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமா என்று வினவிய போது அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேச முன்வருமென்றால் நாம் அதற்குத் தயாராகவே இருக்கிறோம். எனினும், அழைப்பு என்பது ஊடகவியலாளர் சந்திப்புகள் மூலம் விடுக்கப்படுவதாகவன்றி உத்தியோகபூர்வமான அழைப்புகளாக இருக்கவேண்டும்.

நாம் மிகப் பெரிய விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளோம். தனி நாட்டுக் கோரிக்கையை விட்டுக்கொடுத்து ஒன்றுபட்ட நாட்டுக்குள் வடக்கு, கிழக்கு இணைந்த பிரதேசத்தில் சமஷ்டி அரசியலமைப்பு முறையின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே குறிப்பிட்டிருக்கிறோம்.

தனி நாட்டுக் கோரிக்கையைக் கொண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் விமர்சித்து வந்தது. இப்போது அது விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கை அரசாங்கமும் இனிமேலும் ஒற்றையாட்சி என்று பிடிவாதமும் பிடித்துக் கடுமையான நிலைப்பாட்டில் இருக்காமல் விட்டுக்கொடுத்து பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.
நாம் உலகத்தில் இல்லாத புதுமையானதொன்றைக் கேட்டுவிடவில்லை. உலகத்தில் நடைமுறையில் இருப்பதையே நாம் கேட்கிறோம்%27 என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் பதிலளித்தார். 

பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதிக்க வேண்டுமென சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியிருக்கும் அரசாங்கம் அதேபோல் வடக்கு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் வழங்கியிருக்கும் ஆணையை சர்வதேச சமூகம் மதிக்க வேண்டுமென்றும் ஆட்சி நடவடிக்கைகளைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடக் கூடாதெனவும் தேர்தல் வெற்றியின் பின்னர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளும் கட்சி தெரிவித்திருந்தது. வட, கிழக்கின் தீர்ப்பை அங்கீகரிப்பது அவசியம் ஆளும் கட்சிக்கு கூறுகிறது தமிழ்க் கூட்டமைப்பு

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *