சர்வதேச இந்திய திரைப்பட விழா 3ம் திகதி ஆரம்பம்: 97 வீத இந்திய கலைஞர்களின் வருகை உறுதி

iifa-awards-logo.jpgஎத்தகைய எச்சரிக்கைகள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும், அந்திய திரையுலகைச் சேர்ந்த 97 சதவீதத்தினர் தமது வருகையை உறுதி செய்துள்ளனர் என்று பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் இம் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழா தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு, நேற்று கொழும்பில் உள்ள உல்லாசப் பயணத்துறை சபையில் இடம் பெற்றது.  இதன் போதே அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வுக்காக, சுகததாஸ உள்ளக அரங்கை 400 மில்லியன் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்கின்றோம்.

அதே போல இத்திரைப் பட விழாவுக்காக இலங்கையைத் தயார்ப்படுத்த 4650 மில்லியன் ரூபாவை நாங்கள் செலவிடுகின்றோம். ஆனால் இத்திரைப்படவிழாவை ஸ்டார் தொலைக் காட்சியில் ஜுலை மாதம் 11 ஆம் திகதி 110 நாடுகளைச் சேர்ந்த 600 மில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் பார்த்து ரசிக்கவுள்ளனர்.

இதன் போது எமது நாட்டுக்கு உலகம் பூராவும் கிடைக்கவுள்ள அங்கீகாரமும் பிரபலமும் பல நூறு மடங்கு நன்மையை எமது நாட்டுக்கு தரவுள்ளது என்றார். இந் நிகழ்வில் உரையாற்றிய விஸ்கிராப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபாஷ் ஜோசப், கடந்த முறை நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் மூலம் கிடைத்த 56 மில்லியன் அமெரிக்க டொலரிலும் பார்க்கக் கூடுதலான வருமானம். இம்முறை இலங்கையில் நடைபெறும் விழாவின் மூலம் கிடைக்கும் எனத் தான் நம்புவதாகக் கூறினார். 11 ஆவது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடாத்தும் 9 ஆவது நாடு என்ற பெருமையை இலங்கை, கொரியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டுப் பெற்றிருக்கின்றது என்று கூறினார்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் முதல் நாளான 3 ஆம் திகதியன்று இது தொடர்பான சர்வதேச பத்திரிகையாளர் மாநாடு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இரவு இந்திய திரையுலக நட்சத்திரங்களான தியா மிர்ஸா, விவேக் ஒபரோய் ஆகியோர் தொகுத்து வழங்கும் ஃபாஷன்ஷோ இடம்பெறவிருக்கின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் இதில் பங்கு கொள்கின்றனர். இரண்டாம் நாளான ஜுன் 4 ஆம் திகதி, சர்வதேச வர்த்தக சங்க மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மதியம் இந்திய நட்சத்திரங்களும், இலங்கை கிரிக்கெட் வீரர்களும் பங்கு கொள்ளும் அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி எஸ். எஸ். சி. மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.

சுனில் செட்டி மற்றும் ஹிர்திக் ரோஷன் தலைமையிலான இந்திய நட்சத்திர அணிகள் ஒன்றுடன் போட்டியிடவுள்ளன. வெற்றி பெறும் அணி சங்கக்கார தலைமையிலான இலங்கை அணியுடன் மோதும் திரைப்படக் காட்சிகளும் இத் திரைப்பட விழாக் காலத்தில் இடம்பெறவுள்ளன.

இறுதி நாளான ஜுன் 5 ஆம் திகதி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது. விருது வழங்கும் நிகழ்வு இடம் பெறும் சுகததாஸ உள்ளக அரங்கு, மற்றும் ஏனைய நிகழ்வுகள் இடம் பெறும் இடங்களில் ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால், விருது வழங்கும் விழா கிரிக்கெட் போட்டி, திரைப்படக் காட்சிகள் எல்லாவற்றுக்கும் உல்லாசப் பயண சபை, இலங்கை கிரிக்கெட் சபை என்பனவற்றில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    //…எத்தகைய எச்சரிக்கைகள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும், அந்திய திரையுலகைச் சேர்ந்த 97 சதவீதத்தினர் தமது வருகையை உறுதி செய்துள்ளனர் …//
    இது ஸ்ரீலங்கா அரசு தமிழர்களின் 90% பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன ஒரு 10% தான் இருக்கு எனச் சொல்வதை நினைவுக்கு கொண்டு வருகிறது!

    //…அதே போல இத்திரைப் பட விழாவுக்காக இலங்கையைத் தயார்ப்படுத்த 4650 மில்லியன் ரூபாவை நாங்கள் செலவிடுகின்றோம்….//
    கட்டுரையாளரே மொழிபெயர்ப்பை சரியாக செய்யவும்! அவர் சொன்னது 400 மில்லியனைச் செலவு செய்து இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம் இதனால் கிடைக்கும் விளம்பரத்தை வேறுவழிகளில் பெற வேண்டுமாயின் சாதாரணமாக 4600 மில்லியன் செலவழிக்க வேண்டி இருக்கும் என. அதாவது மக்கள் பணம் 400 மில்லியனை ஊதாரித்தனமாக செலவழித்ததற்கு விளக்கம்.

    Minister Abeywardana said the government is spending 400 million rupees …….
    “If we were to get this publicity commercially it would cost us 4,600 million rupees.”

    //…இந் நிகழ்வில் உரையாற்றிய விஸ்கிராப்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் சபாஷ் ஜோசப், கடந்த முறை நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் மூலம் கிடைத்த 56 மில்லியன் அமெரிக்க டொலரிலும் பார்க்கக் கூடுதலான வருமானம். இம்முறை இலங்கையில் நடைபெறும் விழாவின் மூலம் கிடைக்கும் எனத் தான் நம்புவதாகக் கூறினார்…//
    அவர் உரையாற்றும் போது அவரின் முகமே காட்டிக்கொடுத்தது அவர்கள் என்ன சிக்கலில் இருக்கிறார்கள் என. மிகவும் சங்கடப்பட்டார்.

    //…மற்றும் ஏனைய நிகழ்வுகள் இடம் பெறும் இடங்களில் ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால், விருது வழங்கும் விழா கிரிக்கெட் போட்டி, திரைப்படக் காட்சிகள் எல்லாவற்றுக்கும் உல்லாசப் பயண சபை, இலங்கை கிரிக்கெட் சபை என்பனவற்றில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது….//
    அமைச்சர் ஸ்ரீலங்கா ஆக்களுக்கு 100 ரிக்கற்தான் விற்பனைக்கு இருக்கு என்கிறார். செய்தியைப் பார்த்தால் ஏதோ ஆயிரக்கனக்கில் இருக்கிரது மாதிரி விற்பனை செய்யப்படுகிறது என சொல்கிறீர்கள்.

    Reply
  • sumi
    sumi

    இப்பெரும் தொகைப்பணத்தை அல்லல்படும் மக்களின் மீழ்குடியேற்றத்திற்காக செலவிட்டால் பிரயோசனமாக இருக்கும் அல்லவா? பூனைக்கு மணி கட்டுவது யார்?

    Reply
  • BC
    BC

    சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவுக்கு இலங்கையைத் தயார்ப்படுத்த செலவு 4650 மில்லியன் ரூபா, 41 மில்லியன் டொலர்.
    புலி ஒருவருடத்திற்கு புலம்பெயர்ந்தவர்களிடம் சுருட்டியது மட்டும் வருடத்திற்க்கு 200 மில்லியன் டொலர்.இப்பெரும் தொகை பணம் மக்களை அழிக்கவும் நாட்டை சுடுகாடாக மாற்றி மக்களை முகாமில் கொண்டுவந்துவிட பயன்பட்டதுடன் மிகுதி பணம் சுருட்டிய புலிகளின் தனிபட்ட பணமாக உள்ளது.

    Reply
  • NANTHA
    NANTHA

    இலங்கை அரசு ஒரு முதலீட்டையே செய்கிறது. புலிகள் தமிழர்களிடம் சுருட்டியதை இப்போது வட்டிக்கு விட்டு வசதிகள் பெருக்குவதில் இறங்கியுள்ளனர்.

    அதிலும் ஒரு கோஷ்டியை மற்றக் கோஷ்டி மிரட்டி “புடுங்க” வெளிக்கிட்டு அதுவும் சிக்கலில் உள்ளது.

    கனடாவில் பல புலிப்பினாமிகள் “தலைவர்” சொல்லட்டும், நாங்கள் கொடுக்கிறோம் என்று சவால் வேற விட்டுள்ளனர்.

    அரசின் செலவுகள் பற்றி அக்கறைப்படுபவர்கள் புலிகளினால் அரசின் செலவினங்கள் பல பில்லியன் ரூபாக்களைக் கடந்து போன பொழுது “மக்கள்” பற்றி யாரும் அக்கறப்படவில்லை.

    Reply
  • Ajith
    Ajith

    Nantha,
    You are talking nonsense without any substance and relevance. You are happy that Rajapakse family to fill their pockets at the suffering of ordinary sinhala and tamil people. You aim is destroy all tamils.

    Reply
  • NANTHA
    NANTHA

    Ajith:
    You are a useless hypocrite and still you think “ENGLISH” is your better choice to “solve” Tamil problem.

    Dont respond to my comments in English!

    Reply
  • பல்லி
    பல்லி

    //இது ஸ்ரீலங்கா அரசு தமிழர்களின் 90% பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன ஒரு 10% தான் இருக்கு எனச் சொல்வதை நினைவுக்கு கொண்டு வருகிறது!//
    எனது கருத்தும் இதுதான்;

    Reply
  • Rohan
    Rohan

    எத்தகைய எச்சரிக்கைகள், அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும், அந்திய திரையுலகைச் சேர்ந்த 97 சதவீதத்தினர் தமது வருகையை உறுதி செய்துள்ளனர் என்று பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார் என்று செய்தி சொல்கிறது!

    பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் யாப்பாவுக்கு ஒன்றில் எண் கணிதமே தெரியாததாக இருக்க வேண்டும் அல்லது இலங்கைக்கு 6600 இந்திய நட்சத்திரங்கள் வருவதாக இருந்திருக்க வேண்டும்.

    இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகைச் செய்தி ஒன்றின்படி, உல்லாச விடுதிகளில் பதிவு செய்து வைத்திருந்த 200க்கு மேற்பட்ட அறைகளை இந்திய நட்சத்திரங்கள் வேண்டாம் அன்று விட்டிருப்பதாகத் தெரியவருகிறது. மூன்று வீதம் 200 என்றால் மொத்தம் என்னவென்று எண் கணிதம் தெரிந்தோர் கணித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

    வேடிக்கை என்னவென்றால், அமிதாப் பச்சனுக்கு வைத்திருந்த அறையை ஒடிப் போய்ப் பிடித்துக் கொண்டவர் சாட்சாத் லஷ்மன் யாப்பா அபேவர்தன தான்!! –lankanewsweb.com/news/EN_2010_06_03_006.html

    Reply